JESUS? CHRIST?- Gospels are Legends

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச்


Guru

Status: Offline
Posts: 1203
Date:
குத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச்
Permalink  
 


 குத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்!

April 22, 2012

குத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்!

கிருத்துவத்தில் உள்ள விசித்திரமான மதநம்பிக்கைகள் இங்கு ஆராய்ச்சி செய்யப்படுகின்றன.

இடைக்காலத்திற்குப் பிறகு, குறிப்பாக இஸ்லாம்-கிருத்துவ மோதல்களுக்குப் பிறகு, இரண்டு மதங்களும் அடிப்படைவாதம், பழமைவாதம், என்ற பிடிவாதங்களினால் தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற மனித-விரோத சித்தாந்தங்களை உருவாக்கியுள்ளார்கள்.

அவற்றைப் பரப்ப மக்களைக் கொல்வதிலும் தயங்குவதில்லை.

காலம் மாறியுள்ளதால், கொல்ல உபயோகிக்கப்படும் ஆயுதங்கள் மாறியுள்ளன.

ஆனால், மனப்பாங்கு, கொலைவெறி மாறவில்லை. மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்;

ரத்தம் கொட்டிக்கொண்டுதான் உள்ளது;

உடல்கள் சிதறிக்கொண்டுதான் இருக்கின்றன;

இப்பொழுது எலும்புகளை அள்ளமுடியாது;

மண்டையோடுகளை எண்ண முடியாது;

மில்லியன் மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச்[1]: செக் நாட்டில், குத்னா ஹோரா என்ற இடம் பிரேக்கின் வெளிப்பகுதியில் உள்ளது [The Ossuary (Bone Church) in Kutna Hora][2]. செட்லெக் என்ற இடத்தில் இருக்கும் இது எல்லா சாமியார்களின் (கப்லே வெஸ்க் ஸவட்யாச் – kaple všech svatých), சர்ச்சிற்குக் கீழேயுள்ளது.  எலும்பு-சர்ச் என்றே அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த சர்ச்சின் உட்புறம் முழுவதும் எலும்புகள்-மண்டையோடுகள் தாம் காணப்படுகின்றன[3]. சுமார் 70,000ற்கும் மேற்பட்ட மண்டையோடுகள், லட்சத்திற்கும் மேலான எலும்புகள், எலும்புப் பகுதிகளை வைத்து, இச்சர்ச்சின் உட்புறம் அலங்கரிக்கப் பட்டுள்ளது[4]. வருடத்தில் இரண்டு லட்சம் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
RE: குத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச்
Permalink  
 


படம். இந்த சர்ச்சின் நுழைவாயில். மேலே எலும்புகள்-மண்டையோடுகளினால் அலங்கரிக்கப் பட்டுள்ள சிலுவை முதலியவற்றைக் காணலாம்.

புனிதமான பயங்கரமான சர்ச்: ஹென்றி என்ற கத்தோலிக்கப் பாதிரி 1278ல் புனித பூமியிலிருந்து ஒருப்பிடி மண்ணைக் கொண்டு வந்து, இங்குள்ள சமாதிகள், கல்லறைகளின் மீது தூவியதும், இவ்விடமும் புனிதமாகி விட்டாதாம்[5]. இந்த பழக்கம் பிறகு ஐரோப்பா முழுவதும் பரவி விட்டதாம்.

கீழேயுள்ள எலும்பு-சர்ச்



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

மண்டையோடுகள், எலும்புகள் கிடைத்தவிதம்: 14ம் நூற்றாண்டில் பரவிய நோய்கள் மற்றும் 15ம் நூற்றாண்டில் ஹுஸைட் போர்களினால் இறந்தவர்கள் அதிகமாகியவுடன், அவர்கள் புதைப்பதற்கு இடம் இல்லாமல் போக, பழைய இடத்தில் உள்ள எலும்புகளை அப்புறப்படுத்து, இங்கு கொண்டு சேர்த்தார்கள்[6]. இதனால் புதியதாக செத்த்வர்களுக்கு கல்லறைகள் கிடைத்தன. பழையதாக செத்தவர்களின் மிச்சக்களுக்கு / எலும்புகளுக்கு இந்த சர்ச்சில் இடம் கிடைத்தது.

சர்ச் கட்டப் பட்ட விதம்: உள்ளூர் கற்பனைக்கதையின் படி, ஒரு கிருத்துவ சந்நியாசி பைத்தியம் பிடித்ததால், எலும்புகளனாலேயே சிற்பங்களை செய்து, இந்த சர்ச்சில் வைத்தார் என்பதாகும். கண்தெரியாத பாதிரி எலும்புகளை பிரமிடு மாதிரி செய்து வைத்தார் என்று இன்னொரு கதை கூறுகிறது[7]. ஆனால் உண்மையில் பிரான்டிசெக் ரின்ட் (František Rint) என்ற மரவேலை வல்லுனர் தான் 1870ல் இந்த சர்ச்சை இப்படி, எலும்புகள், மண்டையோடுகள் வைத்து அழகுபடுத்தினார்[8]. பல ஆட்களை வைத்துக் கொண்டு எலும்புகளை சுத்தப்படுத்தி, ஓட்டிகள் போட்டு, இணைத்து இவ்வாறு அலங்கரப்படுத்திக் கட்டியுள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

படம். பிரான்டிசெக் ரின்ட் (František Rint) தன்னுடைய பெயரைக்கூட இப்படி, எலும்புப்பகுதிகளினாலேயே பிரான்டிசெக் ரின்ட் (František Rint)  பொறித்து வைத்துள்ளார்.

எல்லாமே மண்டையோடுதான், எலும்புகள் தாம்: அதுமட்டுமல்லாது ஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை மற்றும் தொங்கும் தீபங்கள் முதலியவற்றை மனித எலும்புகளினாலேயே செய்தார். ஐரோப்பாவில் ஒன்றும் இத்தகைய எலும்புக்கூடு சர்ச்சுகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றில் எல்லாவற்ரையும்விட, அதிக அளவில் மிகவும் அழகான, வேலைப்பாடு மிகுந்த, மக்கள் விரும்பி புகைப்படங்கள் எடுக்கும் சர்ச் இதுதான். அதனால்தான் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வருகிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

 

குழந்தை, தேவதை என்றும் யாரையும் விட்டுவைக்கவில்லை. ஆமாம், எக்காளம் ஊதும் அந்த தேவதையின் மறு கையில் ஒரு மண்டையோட்டை வைத்துவிட்டார் ரின்ட்.

ஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை. பின்பக்கம், ஏதோ கடையில் / சூப்பர்மார்க்கெட்டில் சாமான்களை அடுக்கி வைத்துள்ளது போல, எலும்புகள், எலும்பு பாகங்கள், மண்டையோடுகள் பிரித்துவைக்கப்பட்டுள்ளன.



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

தொங்கும் தீபங்கள் – எல்லாமே மண்டையோடுகள் தாம், எலும்புகள் தாம்!

இவற்றிற்கும் மக்கள் காசுகளைப் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். தட்சிணையா, வேண்டுதலா, என்று அவர்களைத் தான் கேட்கவேண்டும்.

பூமியிலிருந்து 



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

பூமியிலிருந்து வெள்ளி வந்து பணக்காரனாகிய கிருத்துவ பாதிரி: இங்கிருக்கும் கிருத்துவ சாமியார்கள் சரியான சோம்பேரிகளாம், எப்பொழுதும் நன்றாக தூங்கிக் கொண்டிருப்பார்களாம். உள்ளூர் கதையின்படி, ஒருமுறை ஆன்டன் என்ற சோம்பேரி கிருத்துவர் சாமியார் சர்ச்சின் தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மூன்று வெள்ளிகள் பூமியிலிருந்து வெளிவந்து,  அவனது முகத்திற்கு அருகில் நீண்டுக் கொண்டிருந்தனவாம். அந்த இடத்தை நினைவுகொள்ள தனது தொப்பியை அடையாளமாக வைத்தானாம். குத்னா என்றல் தொப்பி, அதனால் இவ்விடம் குத்னா ஹோரா என்றழைக்கப்படுகிறது[9]. ஆனால், சர்ச்சிற்குள் சென்று பார்த்தப் பிறகு, தமிழில் ஒருவேளை கிண்டலாக “குத்தினால் அரோகரா” என்றும் நம்மக்கள் சொல்லக்கூடும். இருப்பினும் கிருத்துவர்களுக்கு ஏனெப்படி மண்டையோடுகள்-எலும்புகள் மீது விபரீதமான, பயங்கரமான ஆசை, காதல், மோகம்?

kunta-hora-a-momento-made-of-skull-and-bones.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 1203
Date:
Permalink  
 

© வேதபிரகாஷ்

21-04-2012


[3] Skull Chapel in Czermna is a chapel situated in Kudowa-ZdrójLower Silesian VoivodeshipPoland. This unusual chapel was built in 1776 by the local parish priest Wacław Tomaszek. It is the mass grave of people who died during the Thirty Years’ War (1618–1648), three Silesian Wars (1740–1763), as well as of people who died because of cholera epidemics and hunger. Together with J. Schmidt and J. Langer, Tomaszek collected the casualties’ bones and put them in the chapel. Walls of this small, baroque church are filled with three thousand skulls, and there are also bones of another 21 thousand people hidden in the basement of it. Every bone in this place is authentic. Skulls of people who created the chapel are put in the centre of it and placed on the altar. It is the only such monument in Poland, and one of three in Europe.[citation needed] It is situated in one of the oldest villages in Kłodzko County, near Kudowa Zdrój, in the Lower Silesia, Poland.



__________________


Member

Status: Offline
Posts: 9
Date:
Permalink  
 

Why such Churches are maintained?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard