Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
Permalink  
 


http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)

 

சிவப்பிரகாசர் என்பவர் "கற்பனைக் களஞ்சியம்" என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்சிற்றிலக்கியப் புலவர். இவர், "கவி சார்வ பெளமா", "நன்னெறி சிவப்பிரகாசர்", "துறைமங்கலம்" சிவப்பிரகாசர் என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்பந்தர்அப்பர்சுந்தரர்மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார்.

 

சிவப்பிரகாச அடிகளார் இன்னும், திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ், திருக்கூவப் புராணம், பழமலையந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, கொச்சகக் கலிப்பா, பெரியநாயகியம்மை ஆசிரிய விருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை, நன்னெறி ஆகிய நூல்களை இயற்றினார். அப்பொழுது, சதுரகராதி தொகுத்த வீரமாமுனிவர் வாதுசெய்ய அடிகளை அழைத்தார். அவர்தம் கொள்கையை மறுத்து, ஏசுமத நிராகரணம் என்னும் நூலை இயற்றினார்.

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சிவபிரகாசர் நூல்கள் எரித்த பெஸ்கியின் 330வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

ss

ஜோஸப் கான்ஸ்டேன்ஸோ / கான்ஸ்டேனியஸ் பெஸ்கி [Joseph Constanzo (Constantius) Beschi (1680-1742)] என்ற கிருத்துவ பாதிரியார், இத்தாலி நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு மதம் பரப்ப வந்தார்.

தூத்துக்குடிக்கு 1710ம் ஆண்டு வந்து பண்டிதர் சுப்ரதீப கவிராயரிடம் மதுரையில் தமிழ் கற்றார். அதாவது தமிழ் கற்றது, கிருத்துவ மதம் பரப்பவேயன்றி தமிழ்மீதான பற்று, காதலால் அல்ல. அவர் பெயரில் புxஅங்கும் பல நூல்கள் அவரால் எழுதப்பட்டதல்ல என்று கிருத்துவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். அக்காலத்தில் வருமையில் வாடிய தமிழ் புலவர்களை வைத்து எழுதபட்டவைதாம். கருணாநிதி எப்படி ஒரு தமிழ்பள்ளி ஆசிரியரை வைத்து “கபாலீசஸ்வரர் போற்றியில்” தம்மையும் சேர்த்து “போற்றிக் கொண்டாரோ” அந்த மாதிரி சமாசர்ரம் தான் அது!

1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார்!

1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார்.

மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு ச்ய்த கொடுமைகள் அநேகம்! உடனே டேனிஸ் (Denmark) மிஷினரிகளுடன் தன்னுடைய இறையியல் சண்டயை ஆரம்பித்துவிட்டார்.

1728ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதம் பாதிரி மாட்ரியா என்பவரின் ஆணைப்படி, இவர் அந்த ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்களை எதிர்த்து, மறுத்து வேலை செய்யுமாறு பணித்ததாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நிறைய அளவில் புத்தகங்களை வெளியிடும்போது, கத்தோலிக்கர்களால் முடியவில்லையே என்று வருத்தப் படுகிறார்.

இந்த பெஸ்கி பாதிரியார் முழுக்க-முழுக்க பிரச்சினைகள்-சர்ச்சைகளுக்குட்பட்ட மதவெறி பிடித்தவராகத் தெரிகிறது. துரைமங்களம் சிவப்பிரகாசர் கிருத்துவர்களின் அடாத செயல்கள் பொறுக்கமாட்டாமல், “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” என்ற நூல்களை எழுதியதாக உள்ளது. ஆனால், அந்த பெஸ்கி அதையறிந்து தாளாமல், அந்நூல்களைத் திருடி எரித்திவிட்டதாகத் தெரிகிறது. இன்று நான்கைந்து பாடல்கள்தாம் சிக்கியுள்ளன. அவையே கிருத்துவர்களின் அட்டூழியங்களை எடுத்துக் காட்டுகிறது!

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஏசுமத நிராகரணம் என்னும் நூல், சதுரகராதி யயற்றிய "வீரமாமுனிவரரெ"ன்னும்
கிருஸ்துவன், கவிச்சக்கரவர்த்தியாகிய ஸ்ரீ சிவப்பிரகாட சுவாமிகள்
கண்டித்தெழுயதாகுமென்பர். ஆனால், அப்பாதிரி அந்நூலை மற்றநூல்களோட
சேர்த்தெரித்துவிட்டமையால், அது கிடைதில. இருப்பினும் கிடைதுள்ள சில
பாடல்கள் இதோ:

அறிகிலை நரர்க்காய் வேண்டி யளித்தனன் மிருகமாறி
யுஇறைவ னென்றோ யோரீ யீன்றிட மலமீ தூருஞ்
சிறுபுழு விரையு றாதென் செல்குவை யதனை நோக்க
வறிவரு நுணிய தேகி யனந்தநீ யவையென் செய்வாய்

வாய்திறந் தலறும் வேங்கை வல்விட முமிழ்பாம் பாதி
நேயமற் றெவர்கூற் றாய நிகழ்வதெ னுலகத் தந்தாட்
டூயவ னாதிக் கோதுஞ் சொன்னெறி யடங்கா தென்னி
குயகோ வாதி மாந்தர்க் கூங்கிய விதமென் கொல்லோ

சொல்லியன னவர்க்க சாதி யடங்கவுந் துயரஞ் செய்தே
கொல்லமற்று றையவு மீச னென்றிடிற் கொடுநா காதி
நல்லவா வோரோர் காலத் தடங்கலா னவிலச் சாதி
யெல்லல்செய் திடலாற் ரீயோ யறைந்தசொற் பழுதே யாகும்

நன்றி: பாடல்களைக் கொடுத்துதவிய ஆராய்ச்சியாளர் திரு கே. வி. ராமகிருஷ்ண
ராவ்.

* மற்ற பாடல்கள் கிடைக்குமா?

* மற்ற பாடல்கள் இருந்தால், கிடைத்தால் கொடுத்துதவுங்கள்.
* அக்காலத்தில் முதலில், ஓலையில் புலவரே எழுதுவர் அல்லது அவர் சொல்ல
மாணவன் அல்லது சுவடியெழுதுபவன் எழுதுவான்.

* பிறகு புலவர் / கவிஞர் ஏற்றுக் கொண்டவுடன், அரங்கேறியப் பிறகு அல்லது
மற்றவர் ஏற்றுக் கொண்டவுடன், பிரதிகள் எடுக்கப் படும்.

* அவைதாம் குருக்குலங்கள், மடாலயங்கள் முதலிய இடங்களில்
விநியோகிக்கப்பட்டு இருக்கும்.

* ஆகவே, ஒருவேளை ஏதாவது பிரதி இருந்தால், ஒருவேளை ஐரோப்பிய, வாடிகன்
நூலகங்களில், ஆவணக்காப்பகங்களில் இருந்தால், ஒருபிரதியை இந்தியர்கள்
வாங்கிக் கொள்ளவேண்டும்.

* கிருத்துவ மிஷனரிகள், அவ்வாறு பல்லாயிர / லட்சகணக்கான ஓலைச்சுவடிகளை
எடுத்துச் சென்றுள்ளனர். இன்றும் அச்செயல்கள் நடக்கின்றன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard