பழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்
போர்ச்சுகீசியர் மதவெறிபிடித்த மனிதர்கள். அதனால்தான், இந்தியர்களை அவர்களைப் பரங்கியர் என்று சொல்லி வெறுத்தனர். கோவாவில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொண்று, ஆயிரக் கணக்கான கோவில்கள், மடங்கள் முதலியவற்றை இடித்துத் தள்ளினர். இன்றுகூட கோவாவிற்குச் செல்லும் போது, துளசிமாடத்தில், துளசிச்செடிக்குப் பதிலாக, சிலுவை சொருகப்பட்டிருக்கும். அத்தகைவர், சாந்தோமைப் பிடித்துக் கொண்டனர். அங்கேயிருந்த கபாலீசுசவரக் கோவிலை இடிக்க ஆரம்பித்தனர். இதனால், இந்துக்கள், விக்கிரங்கள், முக்கியமான சிற்பங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு போய், இப்பொழுதூள்ள இடத்தில் கோவிலைக் கட்டிக் கொண்டனர்.
மேலேயுள்ளது சாந்தோம் கோட்டையின் வரைப்படம். அப்படியென்றால், அவ்விடத்தை ஆக்கிரமித்து, அங்கிருந்த கோவிலை 1523லிருந்து இடிக்க ஆரம்பித்துள்ளார்கள். இல்லையென்றால், அந்த முழுப்பகுதியும் அவர்கள் கையில் வராது. அவ்வாறு ஆக்கிரமித்துள்ள இடத்தில் தான் பிஷப் இல்லம், பள்ளி, செமினரி என்று கட்டியிருக்கிறார்கள் என்று தெரிகிறது..
1899ல் இடிக்கப்பட்டது என்று மேற்கண்ட படத்தைக் காட்டுகின்றனர். இது உள்ளகட்டிடத்தை மாற்றியமைக்கப் பட்ட கட்டிடம் என்று நன்றாகத் தெரிகிறது.
பின்பக்க கட்டிட அமைப்பு ஒரு கோவில் போன்றேக் காணப்படுகிறது. அதாவது, கோவிலை இடித்தப் பிறகு, சுவர்கள், சில கட்டிடப்பகுதிகளை வசதிற்காக அப்படியே விட்டு வைத்திருக்கலாம். அதனால் தான் அத்தகைய பழைய கட்டுமானங்கள் தெரிகின்றன. 1987வரைக்கூட படிகட்டுகளின் இருபக்க்கங்களிலும் தாமரைப்பூ சிற்பங்கள் முதலிய இருந்தன. பிறகு எடுக்கப்பட்டுவிட்டன. முன்பே குறிப்பிடப்பட்டூள்ளபடி, பல கல்வெட்டுகளும் இருந்தன. ஆனால், அவற்றை சிதைத்துவிட்டனர். அதாவது, உண்மையினை காட்டிவிடும் என்று அவ்வாறு செய்துள்ளனர்.
மேலேயுள்ளது, தாமசின் கல்லறை எனக்குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதில் எலும்புக்கூடு ஒன்றும் இல்லை. கல்லறை திறந்தநிலையிலேயே, பார்க்கும்நிலையில் இருப்பதைக் காணலாம். ஏற்கெனெவே, ஓர்டோனா என்ற இடத்தில் தாமஸ் இறந்த கல்லறை இருக்கின்றதால், இங்கு இன்னொரு கல்லறை வராது. இருப்பினும், பொய்ப்பிரச்சாரத்திற்காக, குறிப்பாக, கிருத்துவர்கள் தாங்கள் இந்நாட்டு மதத்தவரே, வெளிநாட்டவர் அல்ல என்று காட்டிக் கொள்ள இத்தகையான மோசடியில் ஈடுப்பட்டனர்.
விளைவு, போலிகளை உருவாக்க வேண்டியது தான். இதோ, இந்த சிற்பத்தை, தாமஸின் சிலை என்கிறார்கள். ஆனால், உண்மையில் தாமஸ் எப்படி இருப்பான் என்று யாருக்கும் தெரியாது. ஆக, கோவிலில் கிடைத்த ஒரு சிற்பத்தை வைத்துக் கொண்டு, அதனை “தாமஸ்” என்பது வேடிக்கைத்தான். ஓர்டோனாவில் இருக்கும் தாமஸ் சிலை வேறு மாதிரி உள்ளது. வெள்ளியால் செய்யப்பட்டு, ஓர்டோனா (இத்தாலி)வில் உள்ள சிலை.
இது சைதாப்பேட்டையில், சின்னமலையில் இருந்த ஒரு இந்து கோவில். இதனையும் இடித்து மாற்றியுள்ளார்கள். அதிசயமான ஊற்று வரும் இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இது கோவிலின் பகுதியாக இருந்தது.
இக்கல்வெட்டுகள் மூலம், 12, 13ம் நூற்றாண்டுகளில் பலர் மயிலை கபாலீசுவரர் கோவிலுக்கு பல தானங்கள் அளித்துள்ளனர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது. படிக்கட்டுகளில் கல்வெட்டுகள் ஒரே ஒரு கல்வெட்டில் மட்டும், திருக்கபாலீசுரமுடைய நாயனார் என, கபாலீசுவரர் குறிப்பிடப்படுகிறார். பிற கல்வெட்டுகளில், திருவான்மியூர், திரிசூலம் போன்ற கோவில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கடந்த, 1910ல் துவக்கப்பட்டு, 1925 வரை நடந்த தெப்பக் குள படிக்கட்டு திருப்பணியில் ஈடுபட்டோர், தங்கள் பெயர்களை முறையாக கல்லில் செதுக்கி, குளக்கரையில் பதித்தும் வைத்துள்ளனர். இன்றும், அந்த கல்வெட்டுகளை குளக்கரையில் காணலாம். இப்படி முடித்துள்ளது தினமலர்.
கோவில் இடிக்கப்பட்டு சர்ச் கட்டப்பட்டதற்கான அத்தாட்சிகள்: 17ம் நூற்றாண்டிலிருந்து கோவில் வளாகத்தைச் சிறிது சிறிதாக இடித்து சர்ச், பிஷப் இல்லம், பள்ளி முதலியன கட்டப்பட்டன. 18ம் நூற்றாண்டில் இவை கட்டி முடிக்கப் பட்டன. சர்ச் உண்மையில் சிறிதாக இருந்து பிறகு பலதடவை இடித்து-இடித்துக் கட்டப் பட்டதாகும். அந்நிலையில் தான் கோவில் அத்தாட்சிகள், ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. .
மேலேயுள்ளது, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரமசோழனின் கல்வெட்டாகும். இரவில் நடராஜருக்கு விளக்கெரிக்க வரியிலா நிலமான்னியம் கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. இது சர்ச்சின் வராண்டாவில் கிடந்தது. பிறகு தொல்துறைத்துறையினர் கண்டுபிடிதார்களாம். உண்மையில் ஹூஸ்டன் இதனைப் பார்த்து பிற்காகத்தில் தமக்கு சாதகமாக இருக்குமே என்று பக்கங்களை சிதைத்து விட்டான். அப்பொழுதே “மெயிலில்” இந்த ஆளுடைய “அத்தாட்சிகளை அழிப்புத்தன்மையினை” எடுத்துக் காட்டி எழுதப்பட்டது. அத்ற்கும் இந்த ஆள் காட்டமாக பதில் சொல்லியுள்ளான்.
சர்ச்சில் கிடைத்த இன்னொரு தமிழ் கல்வெட்டு. இதுவும் இறையிலியைக் குறிக்கிறது. ஆனால், சிதைந்த நிலையில் காணப்பட்டது.
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழி கல்வெட்டு, சர்ச்சின் மேற்குப் பகுதியில் கிடந்தது / கிடைததது.
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு, சாந்தோம் செமினரியின் பிரதானக் கதவிற்கு செல்லும் கடைசி படிகட்டின் வலதுபுறத்தில் காணப்பட்ட கல்வெட்டு. இப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள் ()அதாவது இருந்தது, பிறகு காணவில்லை. இதிலிருந்து, பழைய கபாலீசுவரக் கோவில் ஒரு பெரிய வளகத்தில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. மிலேச்சர்கள் / போர்ச்சுகீசியர் அதனை ஆக்கிரமித்துக் கொண்டு இடித்து, உடைக்க ஆரம்பித்த போது, கிடைத்தப் பகுதிகளை, குறிப்பாக விக்கிரங்களை எடுத்து வந்து கோவிலைக் கட்டிக் கொண்டனர்.