Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே


Guru

Status: Offline
Posts: 7474
Date:
யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே
Permalink  
 


ஆதியாகமம் 46:26 யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவியரைத் தவிர அவரது வழிமரபாக எகிப்தில் குடிபுகுந்தோர் மொத்தம் அறுபத்தாறுபேர்.footnote.jpg27 எகிப்து நாட்டில் யோசேப்பிற்குப் பிறந்த புதல்வர்களோ இருவர். ஆகவே எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லோரும் எழுபதுபேர் ஆவர்.

 

20 யோசேப்பிற்கு எகிப்து நாட்டில் புதல்வர் பிறந்தனர். ஓன் நகர் அர்ச்சகர் போற்றி பெராவின் மகளான அசினத்து அவர்களை அவருக்குப் பெற்றெடுத்தாள். அவர்கள் மனாசே, எப்ராயீம் ஆவர்.



-- Edited by devapriya solomon on Thursday 21st of June 2012 02:05:46 AM



-- Edited by devapriya solomon on Thursday 21st of June 2012 08:03:14 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஆதியாகமம் 46:6 கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும் சொத்துகளையும் சேகரித்துக் கொண்டனர். இவ்வாறு யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப் போனார். footnote.jpg7 தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும் தம் புதல்வியரையும் புதல்வரின் புதல்வியரையும் தம் வழிமரபினர் அனைவரையும் அவர் தம்மோடு எகிப்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்.8 எகிப்திற்கு வந்துசேர்ந்த யாக்கோபும் அவர் புதல்வர்களுமாகிய இஸ்ரயேலரின் பெயர்கள் பின்வருமாறு: யாக்கோபின் தலைமகன் ரூபன்.9 ரூபனின் புதல்வர்கள்: அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி.10 சிமியோனின் புதல்வர்: எமுவேல், யாமின், ஒகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல்.11 லேவியின் புதல்வர்: கெர்சோன், கோகாத்து, மெராரி.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

யாத்திராகமம் 1:4. இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பத்தோடுங்கூடப் போனார்கள்.

5. யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.

14. சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள். 15. அதுவுமன்றி, எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி: 16. நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில் பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.

19. அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள். 

20. இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள். 21. மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால்,  தேவன்  அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.









__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே
Permalink  
 


ஆதியாகமம் 50:22 யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.23 எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

யாத்திராகமம் 6:18கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல். கோகாத்து வாழ்ந்தது நூற்று முப்பத்துமூன்று ஆண்டுகள்.19 மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி. இவைகளே தலைமுறை வரிசைப்படி லேவியின் குடும்பங்கள்.20 அம்ராம் தன் தந்தையின் சகோதரியாகிய யோக்கபேது என்பவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். அவனுக்கு அவள் ஆரோன், மோசே என்பவர்களைப் பெற்றெடுத்தாள். அம்ராம் வாழ்ந்தது நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

யாத்திராகமம் 7:.7 பார்வோனிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது மோசேக்கு வயது எண்பது: ஆரோனுக்கு வயது எண்பத்து மூன்று.

எண்ணாகமம் 26:.59 அம்ராம் மனைவி பெயர் யோக்கபெத்து. இவள் லேவி மகள்: லேவிக்கு எகிப்தில் பிறந்தவள். அம்ராமுக்கு இவள் ஆரோன், மோசே, அவர்களின் சகோதரி மிரியாம் ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

யோசேப்பு -புதல்வர் மனாசே - புதல்வர் மாக்கிர் 

கோகாத்- புதல்வர் அம்ராம் - புதல்வர் மோசே



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

யாத்திராகமம் 23:.29ஆயினும், ஒரே ஆண்டில், உனக்கு முன்னின்று நான் அவர்களைத் துரத்திவிட மாட்டேன். துரத்தினால், நிலம் தரிசாகிவிடும். உன்னிலும் மிகுதியாக வயல்வெளி விலங்குகள் பலுகிப் பெருகிவிடும்.30 எனவே நீ பலுகிப்பெருகி நாட்டைக் கைப்பற்றும் வரை சிறிது சிறிதாக அவர்களை உனக்கு முன்னின்று துரத்திவிடுவேன்.31 உன் எல்லைகள், செங்கடல்முதல் பெலிஸ்தியர் கடல்வரைக்கும், பாலைநிலம் முதல் யூப்பிரத்தீசு நதிவரைக்கும், விரிந்து கிடக்கச் செய்வேன். ஏனெனில் அந்நாட்டின் குடிமக்களை நான் உன் கையில் ஒப்படைப்பேன். நீயும் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

யோசுவா 16:4 யோசேப்பின் மக்களான மனாசேயும் எப்ராயிமும் இதை உரிமைச்சொத்தாகப் பெற்றனர்.

யோசுவா 17:1 யோசேப்பின் முதல் மகனான மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதியின் விவரம்; மனாசேயின் முதல் மகனும் கிலயாதின் தந்தையுமான மாக்கிர் போர்வீரனாக இருந்ததால் அவனுக்குக் கிலயாதும் பாசானும் அளிக்கப்பட்டன.

2 மனாசேயின் ஏனைய மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அபியேசர், ஏலக்கு, அசிரியேல், செக்கேம், ஏபேர், செமிதா ஆகியோரின் புதல்வர்கள். இவர்கள் யோசேப்பின் மகனான மனாசேயின் ஆண்மக்களும் அவர்கள் குடும்பத்தாரும் ஆவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

எகிப்தில் எபிரேயர் குழந்தைகளைப் பிரசவம் எடுக்க 2பேர் மட்டும் தாதிகள். மோசே பிறப்பிற்கு முன்பே ஆண் குழந்தைகளை கொல்ல்ம்படி சொன்னார். மோசேயின் தாய் குழந்தையை ஆற்றில் விட்டு தான் காப்பாற்றினார். நாம் சரி பார்க்க வேறொரு சாதி கோத்திரம் என மனாசே கோத்திரத்தையும் பார்த்தோம்.

 

உள்ளே நுழைந்தபின் அடுத்த தலைமுறை தான் திரும்பி வந்தது எனக் கதை.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அப்போஸ்தலர் நடபடிகள்7:5 இங்குக் கடவுள் அவருக்கு ஓர் அடி நிலம்கூட உரிமையாகக் கொடுக்கவில்லை. அவருக்குப் பிள்ளையே இல்லாதிருந்தும் இந்த நாட்டை அவருக்கும் அவருக்குப் பின் வரும் அவர் வழி மரபினருக்கும் உடைமையாகக் கொடுக்கப்போகிறேன் என்று கடவுள் வாக்குறுதி கொடுத்தார்.6 மேலும், அவர்தம் வழிமரபினர் வேறொரு நாடடில் அன்னியராய்க் குடியிருப்பர். நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார்14 பின்பு யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும் தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர்.15 யாக்கோபு எகிப்து நாட்டுக்குச் சென்றார். அவரும் நம் மூதாதையரும் அங்கேயே காலமாயினர்.


எண்ணாகமம் 1:45 ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை:46 மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர்.
இது லேவியர் ஜாதி இல்லாமல், பின் மனைவிகள், குழந்தைகள், கிழவர்-கிழவிகள்.
70 பேர் இரண்டே தலைமுறையில் 30 லட்சம் ஆனர். அதுவும் எகிப்தினர் ஆண்குழந்தைகளை கொலை செய்த்தாக வேறு கதை. 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

70 பேர் ஒரு தலைமுறைக்குப்பின் 30 லட்சம் ஆனாதாம்

images?q=tbn:ANd9GcSD6i6yZutlw4RPZxFZZq4NLMb0LX-GOKNh8lt6L-CQrn8RC2mo images?q=tbn:ANd9GcSCt9V38EKL4DcYtDU2AInPCShUBNLO7wxMGtfOceL-8Idbapym

images?q=tbn:ANd9GcQrkWG1vqY7lDNPNUW_kUbrlOR-3DQQaAN0cWEX28Z4Y92biOAtxg images?q=tbn:ANd9GcSdd8XFP7FLL_0LwNeS1U5PuuIMfdUAQ9PWFQB5C2_dgv3O4anv



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

பைபிளின் அடிப்படை ஆணிவேர்  கதை- எபிரேயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் - கானான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனின் அன்னியரான ஆபிர ஹாம் கர்த்தரால் தேர்ந்தெடுத்து அவர் வாரிசுகளுக்கு மட்டும் அரசியல் ஆட்சியுரிமை. பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எகிப்தியர் வேகமாக வளர ஆண்குழந்தைகளை கொலை சுய்யுமாறு எகிப்து மன்னர் சொல்ல தாதிகள் செய்யவில்லை.  எபிரேயர்களால் ஆண் குழந்தைகளை வளர்க்க முடியாத சூழ்நிலையில் மோசேயின் தாய் குழந்தையை விடுடு, எகிப்து அரச குடும்பத்தில் வளரும்படி செய்கிறார். 

கர்த்தர் சொல்ல மோசே தலைமயில் 30 லட்சம் எபிரேயர்கள் எகிப்திலிருந்து வெளியேரி வந்ததாகக் கதை.

வழியில் இர்ந்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் அப்பக்கம் செல்ல துரத்தியவர்களை கடல் விழுங்கியதாம். பின்னர் சாக்கடலும் வழிவிட்டதாம். பின் கானான் நாட்டு மண்ணின் மைந்தர்களை கொலை செய்து அடிமைப்படுத்தி எபிரேயர்கள் தங்கள் பகுதியை கைப்பற்றியதாகக் கதை.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அப்போஸ்தலர் நடபடிகள்7:5 இங்குக் கடவுள் அவருக்கு ஓர் அடி நிலம்கூட உரிமையாகக் கொடுக்கவில்லை. அவருக்குப் பிள்ளையே இல்லாதிருந்தும் இந்த நாட்டை அவருக்கும் அவருக்குப் பின் வரும் அவர் வழி மரபினருக்கும் உடைமையாகக் கொடுக்கப்போகிறேன் என்று கடவுள் வாக்குறுதி கொடுத்தார்.6 மேலும், அவர்தம் வழிமரபினர் வேறொரு நாடடில் அன்னியராய்க் குடியிருப்பர்.நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார்14 பின்பு யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும் தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர்.15 யாக்கோபு எகிப்து நாட்டுக்குச் சென்றார். அவரும் நம் மூதாதையரும் அங்கேயே காலமாயினர்.

ஆதியாகமம்46:2726 யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவியரைத் தவிர அவரது வழிமரபாக எகிப்தில் குடிபுகுந்தோர் மொத்தம் அறுபத்தாறுபேர்.27எகிப்து நாட்டில் யோசேப்பிற்குப் பிறந்த புதல்வர்களோ இருவர். ஆகவே எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லோரும் எழுபதுபேர் ஆவர்.

போனது 70 பேர். திரும்பிவந்தது -

எண்ணாகமம் 1:45 ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை:46 மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர். 6,03550

எண்ணாகமம்26:51ஆக, இஸ்ரயேலின் ஆண் மக்கள் தொகை ஆறு லட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது-6,01,730

யாத்திராகமம்12:37இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர்.-6,00,000.

இது லேவியர் ஜாதி இல்லாமல், பின் மனைவிகள், குழந்தைகள், கிழவர்-கிழவிகள்.
70 பேர் இரண்டே தலைமுறையில் 30 லட்சம் ஆனர்.

யாத்திராகமம் 1:.8இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.9 அவன் தன் குடிமக்களை நோக்கி, ″ ″ இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.

15எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது:16 ″ ″ எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்: ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்: பெண்மகவு என்றால் வாழட்டும்″ ″ .17 ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.

-21இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்

யாத்திராகமம்2:லேவி குலப்பெண் ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்: அது அழகாயிருந்தது என்று கண்டாள்: மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.3 இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்: குழந்தையை அதனுள் வைத்து நைல்நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள்.4 அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.5 அப்போது பார்வோனின் மகள் நைல்நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்: அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்: அது அழுதுகொண்டிருந்தது.6 அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள்.

இந்த குழந்தை மோசேயின் 80வது யயதில் யாத்திரை எனக் கதை.

அப்போஸ்தலர் நடபடிகள்7:5,6,14 மேலே சொன்னவை. இங்கே 70 பேர் 400 வருடம் .

பவுலின் கலாத்தியர் கடிதம் 3:17 ல் 430 வருஷம்

மோசே இறக்க யோசுவா தலைமியில் வந்தவர்கள் 12 கோத்திரங்களும் இஸ்ரேலைப் பிரித்துக் கொண்டதாகக் கதை. அதில்

யோசுவா 17:1 யோசேப்பின் முதல் மகனான மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதியின் விவரம்: மனாசேயின் முதல் மகனும் கிலயாதின் தந்தையுமானமாக்கிர் போர்வீரனாக இருந்ததால் அவனுக்குக் கிலயாதும் பாசானும் அளிக்கப்பட்டன.

இந்த மாக்கீர் கதையைப் பார்ப்போம்.

ஆதியாகமம் 50:22 யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.23 எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.

 1.ஜோசப் தலைமுறை- மகன் - 2.மானசே-பேரன் - 3.மாக்கிரின் போது திரும்பி வந்தாயிற்று
ஜோசப் உயிரோடு இருக்கும்போதே "மாக்கீர் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்."
ஜோசப் உயிரோடு இருந்தபோது மாக்கீர் குழந்தை பெற்றாயிற்று; கதைப்படி 40 வருடம் பயணம்- பின் மாக்கீர் இஸ்ரேல்
சென்றதைப் பார்த்தோம். எகிப்தினர் ஆண்குழந்தைகளை கொலை செய்த்தாக வேறு கதை.

உண்மை என்ன?

இஸ்ரேல் தலை நகர்- டெல் அவிவ் பல்கலைகழக அகழ்வாராய்ச்சித் துறைத் தலைவர்.
பைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்? -நேர்மையான அகழ்வாராய்ச்சிகள் ஆபிரஹாம் முதல் சாலமன்
வரை அனைத்துமே தவறு. ஜெருசலேமில் சாலமன் காலத்திற்குப் பிறகு தான் மக்கள் குடியேற்றமே நடைபெற்றன. இவற்றை
சொல்லும் நூல் -

The Bible Unearthed :Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts எழுதியவர்Finkelstein, Israel, and Silberman, Neil Asher, Simon & Schuster 2002,

ISBN 0-684-86912-8

images?q=tbn:ANd9GcQKTd8J-ltk9SQS8WHiqk1z2vDmwD9x_x40BKHf6NbALej9zzWI

http://www.mediafire.com/view/?y177tc2oa3tegam
இந்நூல் சொல்வது எல்லாமே கட்டுக் கதை.


__________________


Member

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

இதுவரை இவ்வளவு ஆளமாக யாத்திரையை அலசியதில்லை.


ஆனால் இன்றும் 30 லட்சம் பேர் என்பதை ஆதரிக்கும் மூட நம்ப்பிக்க் சப்பைகட்டுக்கள்.

http://www.tektonics.org/af/exoduslogistics.html

//After the first generation, let’s assume that his children start intermarrying, so no one is added to the clan via that route.

Generation// Starting population + Births - Deaths = Population
  • 2// 24 + 108 - 0 = 132
  • 3 // 132 + 594 - 2 = 724

Now, if this rate continued, the population at the end of 430 years would be over 50 billion (if you don’t believe me, do the math). But, to save that Christmas money, let’s assume that the Mustrealites start getting conservative in the 4th generation, and only have 4 kids per family, or 1.15 per person. (The numbers are rounded, so they may not add up exactly.)

Generation Starting population + Births - Deaths = Population
  • 4 // 724 + 869 - 22 = 1,535
  • 5 // 1,535 + 1,765 -108 = 3,191
  • 6 // 3,191 + 3,670 - 594 = 6,267
  • 7 // 6,267 + 7,208 - 833 = 12,643
  • 8 // 12,642 + 14,539 - 1,765 = 25,417
  • 9 // 25,416 + 29,229 - 3,670 = 50,976
  • 10// 50,976 + 58,622 - 7,208 = 102,390
  • 11// 102,390 + 117,748 - 14,539 = 205,599
  • 12// 205,599 + 236,439 - 29,229 = 412,809
  • 13// 412,809 + 474,731 - 58,622 = 828,918
  • 14// 828,918 + 953,256 - 117,748 = 1,664,426
  • 15// 1,664,426 + 1,914,090 - 236,439 = 3,342,077

At the end of 15 generations, which would not even take the full 430 years needed, the total population is well over the 3 million most commentators suggest as the total population, and without any strain to credulity, or even any miraculous intervention. Skeptical objections to the growth of the Israelite population are simply unreasonable.

Objection: By this logic, if Joseph's clan can grow from 70 to 2.5 million in 430 years then surely there is nothing to stop every other man's clan from doing the same.//

பார்த்தால் ஜோசப் நபி காலத்தில் வாழ்ந்த மாக்கிர் பயணத்தில்.


குழந்தைக் கொலை; 30 லட்சம் பேர்- எத்தனை எத்தனை பொய்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அப்போஸ்தலர் பணி13:16 அப்போது பவுல் எழுந்து கையால் சைகைகாட்டிவிட்டுக் கூறியது: இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள்.17 இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாயரைத் தேர்ந்தெடுத்தார்: அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்:18 நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலை நிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார்.19 அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்:20 அதன் பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம்வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார்.21 பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.22 பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்: அவரைக் குறித்து ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்: என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான் என்று சான்று பகர்ந்தார்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அப்போஸ்தலர் பணி7:2 அதற்கு ஸ்தேவான் கூறியது: சகோதரரே, தந்தையரே, கேளுங்கள். நம் தந்தையாகிய ஆபிரகாம் காரான் நகரில் குடியேறுமுன்பு மெசப்பொத்தாமியாவில் வாழ்ந்து வந்தபோது மாட்சி மிகு கடவுள் அவருக்கு தோன்றி,3 நீ உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தாரிடமிருந்தும் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல் என்று கூறினார்.4 அதன்பின் அவர் கல்தேயருடைய நாட்டைவிட்டு வெளியேறிக் காரான் நகரில் வந்து அங்கே குடியிருந்தார். அவருடைய தந்தை இறந்தபின்பு, நீங்கள் இப்போது குடியிருக்கும் இந்நாட்டுக்குக் கூட்டி வந்து இங்குக் குடிபெயரச் செய்தார்.5 இங்குக் கடவுள் அவருக்கு ஓர் அடி நிலம்கூட உரிமையாகக் கொடுக்கவில்லை. அவருக்குப் பிள்ளையே இல்லாதிருந்தும் இந்த நாட்டை அவருக்கும் அவருக்குப் பின் வரும் அவர் வழி மரபினருக்கும் உடைமையாகக் கொடுக்கப்போகிறேன் என்று கடவுள் வாக்குறுதி கொடுத்தார்.6 மேலும், அவர்தம் வழிமரபினர் வேறொரு நாடடில் அன்னியராய்க் குடியிருப்பர். நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார்.7 'அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். அதற்குப்பின் அவர்கள் அங்கிருந்து வெளியேறி இவ்விடத்துக்கு வந்து என்னை வழிபடுவார்கள்' என்றும் அவர் உரைத்துள்ளார்.8பின் அவர் விருத்தசேதனத்தை அடையாளமாகக் கொண்ட உடன்படிக்கையை ஆபிரகாமுக்கு கொடுத்தார். அதன்படியே ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்து, எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார். அவ்வாறே ஈசாக்கு யாக்கோபுக்கும், யாக்கோபு பன்னிரு குலமுதல்வருக்கும் செய்தனர்.9 பின் நம் குலமுதல்வர்கள் பொறாமை கொண்டு யோசேப்பை எகிப்தியருக்கு விற்றுவிட்டனர். ஆனால், கடவுள் அவரோடு இருந்தார்.10அவருக்கு வந்த அனைத்து இன்னல்களினின்றும் அவர் அவரை விடுவித்தார்: அத்துடன் எகிப்திய அரசரான பார்வோன் பார்வையில் யோசேப்புக்கு அருளையும் ஞானத்தையம் வழங்கினார். அரசர் அவரை எகிப்து நாட்டுக்கும் தன் உடைமை அனைத்துக்கும் ஆளநராக நியமித்தார்.11 பின் எகிப்து, கானான் ஆகிய நாடுகள் அனைத்திலும் பஞ்சமும் அதனால் மிகுந்த இன்னலும் எற்பட்டன. நம் மூதாதையருக்கும் உணவு கிடைக்கவில்லை.12 அப்போது யாக்கோபு எகிப்து நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைப்பதாகக் கேள்விப்பட்டு, முதன்முறையாக நம் மூதாதையரை அங்கு அனுப்பி வைத்தார்.13 இரண்டாம் முறை அவர்களை அனுப்பியபோது, யோசேப்பு தம் சகோதரர்களுக்குத் தாம் யார் என்று தெரியப்படுத்தினார். பார்வோனுக்கும் யோசேப்பின் இனத்தார் யார் என்பது தெளிவாயிற்று.14 பின்பு யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும் தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர்.15 யாக்கோபு எகிப்து நாட்டுக்குச் சென்றார். அவரும் நம் மூதாதையரும் அங்கேயே காலமாயினர்.16 அவர்களுடைய உடல்கள் செக்கேமுக்குக் கொண்டு செல்லப்பட்டன: அங்கு, ஆபிரகாம் அமோரின் மைந்தர்களிடம் வெள்ளிக் காசுகளை விலையாக கொடுத்து வாங்கிய கல்லறையில் வைக்கப்பட்டன.17 ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் நேரம் நெருங்கியபோது மக்கள் எகிப்து நாட்டில் மிகுதியாகப் பல்கிப் பெருகியிருந்தனர்.18 இறுதியில் எகிப்து நாட்டில் யோசேப்பை அறியாத வேறோர் அரசன் தோன்றினான்.19 அவன் நம் இனத்தவரை வஞ்சகத்துடன் கொடுமையாக நடத்தி, நம் மூதாதையர் தங்கள் குழந்தைகளை வெளியே எறிந்து சாகடிக்கச் செய்தான்.20அக்காலத்தில்தான் மோசே பிறந்தார். கடவுளுக்கு உகந்தவரான அவர் மூன்று மாதம் தந்தை வீட்டில் பேணி வளர்க்கப்பட்டார்.21 பின்பு வெளியே எறியப்பட்ட அவரை பார்வோனின் மகள் தத்தெடுத்துத் தன் சொந்த மகனைப் போல் பேணி வளர்த்தார்.22 மோசே எகிப்து நாட்டின் கலைகள் அனைத்தையம் பயின்று சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார்.23 அவருக்கு நாற்பது வயதானபோது, தம் சகோதரர்களாகிய இஸ்ரயேல் மக்களின் நிலைமையைச் சென்று கவனிக்க வேண்டும் என்ற ஆவல் அவர் உள்ளத்தில் எழுந்தது.24 அப்போது அவர்களுள் ஒருவருக்கு ஓர் எகிப்தியன் தீங்கு விளைவித்ததைக் கண்டு, அவருக்குத் துணை நின்று, ஊறு விளைவித்தவனை வெட்டி வீழ்த்திப் பழி வாங்கினார்.25 தம் கையால் கடவுள் தம் சகோதரர்களுக்கு விடுதலை கொடுப்பார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை.26 மறுநாள் சிலர் சண்டையிடுவதைக் கண்டு, நீங்கள் சகோதரர்கள் அல்லவா? ஏன் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்? என்று கூறி அவர்களிடையே அமைதியும் நல்லுறவும் ஏற்படுத்த முயன்றார்.27 ஆனால் தீங்கிழைத்தவன், எங்களுக்கு உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவர் யார்?28 நேற்று எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா எண்ணுகிறாய்? என்று கூறி அவரைப் பிடித்து அப்பால் தள்ளினான்.29 இதைக் கேட்ட மோசே அங்கிருந்து தப்பி, மிதியான் நாட்டுக்குச் சென்று அன்னியராக வாழ்ந்து வந்தார். அங்கு அவருக்கு மைந்தர் இருவர் பிறந்தனர்.30 நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டவரின் தூதர் சீனாய் மலை அருகே உள்ள பாலைநிலத்தில் ஒரு முட்புதர் நடுவே தீப்பிழம்பில் தோன்றினார்.31 மோசே இந்தக் காட்சியைக் கண்டு வியப்புற்றார். அதைக் கூர்ந்து கவனிக்கும்படி அவர் நெருங்கிச் சென்றபோது,32 உன்னுடைய மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுள் நானே என்று ஆண்டவரின் குரல் ஒலித்தது. மோசே நடுநடுங்கி இக்காட்சியைக் கூர்ந்து கவனிக்கத் துணியவில்லை.33 கடவுள் அவரிடம், உன் கால்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு. ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்.34 எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அவர்களது ஏக்கக் குரலைக் கேட்டேன். அவர்களை விடுவிக்கும்படி இறங்கி வந்துள்ளேன். உன்னை எகிப்துக்கு அனுப்பப்போகிறேன். இப்போதே வா என்றார்.35 முன்பு, உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவர் யார்? என்று கூறி மக்கள் மோசேயை ஏற்க மறுத்தார்கள். ஆனால் அதே மோசேயையே கடவுள் முட்புதரில் தோன்றிய தம் தூதர் வழியாய்த் தலைவராகவும் மீட்பராகவும் அனுப்பினார்.36 அவர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார்: அங்கும் செங்கடலிலும் நாற்பது ஆண்டுகளாகப் பாலைநிலத்திலும் அருஞ்செயல்களையும் அடையாளச் செயல்களையும் புரிந்தார்.37 கடவுள் என்னைப்போன்ற இறைவாக்கினர் ஒருவரைச் சகோதரர்களாகிய உங்கள் நடுவிலிருந்து தோன்றச் செய்வார் என்று இஸ்ரயேல் மக்களிடம் கூறியதும் இதே மோசேதான்.38 பாலை நிலத்தில் மக்கள் சபையாகக் கூடியபோது சீனாய் மலையில் தம்மோடு பேசிய தூதருக்கும் நம் மூதாதையருக்கும் இடையே நின்றவர் இவரே. வாழ்வளிக்கும் வார்த்தைகளை நமக்குப் பெற்றுத் தந்தவரும் இவரே.39 ஆனால் நம் மூதாதையர் அவருக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரை உதறித் தள்ளினர்: எகிப்துக்குத் திரும்பிச் செல்ல உளம் கொண்டனர்.40 அவர்கள் ஆரோனை நோக்கி, எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி வந்த அந்தஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. எங்களை வழி நடத்தும் தெய்வங்களை நீர் எங்களுக்கு உருவாக்கிக் கொடும் என்று கேட்டார்கள்.41அக்காலத்தில் அவர்கள் ஒரு கன்றுக்குட்டிச் சிலையைச் செய்து அதற்குப் பலி செலுத்தினார்கள். தாங்களே செய்துகொண்ட சிலைக்குமுன் மகிழ்ந்து கொண்டாடினார்கள்.42ஆகவே கடவுள் அவர்களிடமிருந்து விலகி, வான்வெளிக் கோள்களை வணங்குமாறு அவர்களை விட்டுவிட்டார். இதைக் குறித்து இறைவாக்கினர் நூலில், இஸ்ரயேல் வீட்டாரே, பாலைநிலத்தில் இருந்த அந்த நாற்பது ஆண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் எனக்குக் கொடுத்தீர்களோ?43 நீங்கள் மோளோக்குடைய கூடாரத்தையும், உங்கள் தெய்மாகிய இரேப்பானுடைய விண்மீனையும் தூக்கிக் கொண்டு சென்றீர்கள். நீங்கள் இந்தச் சிலைகளை வணங்குவதற்கென்றே செய்தீர்கள். எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கும் அப்பால் குடி பெயரச் செய்வேன் என்று எழுதப்பட்டுள்ளது.44 பாலை நிலத்தில் நம் மூதாதையருக்குச் சந்திப்புக் கூடாரம் இருந்தது. கடவுள் மோசேயோடு பேசியபோது அவருக்குக் காண்பித்த மாதிரியின்படி அதனை அமைக்கப்பணித்திருந்தார்.45 பின்பு நம் மூதாதையர் தங்கள் முன்பாகக் கடவுள் விரட்டியடித்த வேற்றினத்தாரின் நாடுகளை யோசுவாவின் தலைமையில் கைப்பற்றியபோது அவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து பெற்றிருந்த அந்தக் கூடாரத்தையும் கொண்டு வந்தனர். தாவீது காலம் வரை அக்கூடாரம் அங்கேயே இருந்தது.46 தாவீது கடவுளின் அருளைப் பெற்றிருந்தார். எனவே அவர் யாக்கோபின் வீட்டார் வழிபடக் கடவளுக்கு ஓர் உறைவிடம் அமைக்க விரும்பி அவரை வேண்டிக் கொண்டார்.47 ஆனால் கடவுளுக்குக் கோவில் கட்டியெழுப்பியவர் சாலமோனே.48 உன்னத கடவுளோ மனிதர் கையால் கட்டிய இல்லங்களில் குடியிருப்பதில்லை என்று இறைவாக்கினர் கூறியது போல,49விண்ணகம் என் அரியணை: மண்ணகம் என் கால்மணை: அவ்வாறியிருக்க, எத்தகைய கோயிலை நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்? எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப்பேன்?50 இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின என்கிறார் ஆண்டவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஆதியாகமம்14:14 தம் உறவினர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றதும், ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்றார். 15அவரும் அவர் ஆள்களும் அணிஅணியாகப் பிரிந்து இரவில் அவர்களைத் தாக்கித் தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத் துரத்திச் சென்றனர்.16 அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். 

18 அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் 'உன்னத கடவுளின்' அர்ச்சகராக இருந்தார். 19அவர் ஆபிராமை வாழ்த்தி, ″விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! 20 உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!″ என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார். 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஆதியாகமம்1512 கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. footnote.jpg13 ஆண்டவர் ஆபிராமிடம், ″நீ உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது: உன் வழிமரபினர் வேறொரு நாட்டிற்குப் பிழைக்கச் செல்வர். அங்கே அவர்கள் நானூறு ஆண்டுகள் அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவர். footnote.jpg14 அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டிற்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். அதற்குப்பின் மிகுந்த செல்வங்களுடன் அந்நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறுவர். 15 நீ மிகவும் முதிர்ந்த வயதில் அமைதியாக உன் மூதாதையரிடம் சென்றபின், நல்லடக்கம் செய்யப்படுவாய். 16 நான்காம் தலைமுறையில் அவர்கள் இங்கே திரும்பி வருவர். ஏனெனில் எமோரியர் இழைக்கும் தீமை இன்னும் முழுமை அடையவில்லை″ என்றார். 17 கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. 18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள footnote.jpg19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்″ என்றார். 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஆதியாகமம்461 பின்பு இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார். அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார்.2 அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, 'யாக்கோபு! யாக்கோபு!' என்று அழைத்தார். அவர், 'இதோ அடியேன்' என்றார்.3 கடவுள், ″உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே, எகிப்திற்குச் செல்ல நீ அஞ்ச வேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன்.

26 யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவியரைத் தவிர அவரது வழிமரபாக எகிப்தில் குடிபுகுந்தோர் மொத்தம் அறுபத்தாறுபேர்.footnote.jpg27 எகிப்து நாட்டில் யோசேப்பிற்குப் பிறந்த புதல்வர்களோ இருவர். ஆகவே எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லோரும் எழுபதுபேர் ஆவர்.

ஆதியாகமம்478 பார்வோன் யாக்கோபை நோக்கி, 'உமது வயதென்ன?' என்று வினவினான். 9 அதற்கு யாக்கோபு பார்வோனை நோக்கி, ″என் வாழ்க்கைப் பயண நாள்கள் நூற்றுமுப்பது ஆண்டுகள். அவை எண்ணிக்கையில் குறைந்தவை; துன்பத்தில் மிகுந்தவை. ஆனால் அவை என் மூதாதையரின் நாள்களுக்குக் குறைந்தவையே″ என்றார். 10 யாக்கோபு பார்வோனுக்கு வாழ்த்து மொழி கூறியபின் அவனிடம் விடைபெற்றுச் சென்றார். 11 பார்வோன் கட்டளையிட்டிருந்தபடி, யோசேப்பு தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் எகிப்து நாட்டின் மிகவும் வளமான இராம்சேசு நிலப்பகுதியை உரிமையாகக் கொடுத்து, அங்கு அவர்களைக் குடியேற்றினார்.

28 யாக்கோபு பதினேழு ஆண்டுகள் எகிப்து நாட்டில் இருந்தார். அவரது வாழ்நாள் மொத்தம் நூற்றுநாற்பத்தேழு ஆண்டுகள். 

ஆதியாகமம்481 இந்நிகழ்ச்சிகளுக்குப்பின், 'உம் தந்தை உடல் நலமின்றி இருக்கிறார்' என்று யோசேப்புக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், தம் இரு மைந்தர்களாகிய மனாசேயையும் எப்ராயிமையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

ஆதியாகமம்501 அப்பொழுது யோசேப்பு, தம் தந்தையின் முகத்தின் மீது விழுந்து அழுது அவரை முத்தமிட்டார்.2 பின்பு, தம் தந்தையின் உடலை மருத்துவ முறையில் பாதுகாப்புச் செய்யும்படி தம் பணியாளர்களான மருத்துவர்களுக்கு யோசேப்பு கட்டளையிட்டார். அவர்களும் அப்படியே செய்தனர்.3 இதற்கு நாற்பது நாள்கள் தேவைப்பட்டன. ஏனெனில் ஒரு சடலத்திற்கு முறையான பாதுகாப்புச் செய்ய நாற்பது நாள்கள் தேவைப்படும். எகிப்தியர் அவருக்காக எழுபது நாள்கள் துக்கம் கொண்டாடினர்.

11 அங்கே, கானான் நாட்டில் வாழ்ந்த மக்கள் கோரேன் அத்தத்தில் நடந்த புலம்பல் சடங்கைக் கண்டு, ″இது எகிப்தியரது பெருந்துயர்ப் புலம்பல் சடங்கு″ என்றனர். ஆகவேதான் யோர்தானுக்கு அப்பால் இருந்த அந்த இடத்திற்கு 'ஆபேல் மிஸ்ராயிம்' என்ற பெயர் வழங்கலாயிற்று.1

யோசேப்பின் இறப்பு

22 யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.23 எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

யாத்திராகமம்11 யாக்கோபோடும் தங்கள் குடும்பங்களோடும் எகிப்திற்குச் சென்ற இஸ்ரயேல் புதல்வர்களின் பெயர்கள் இவை: 2 ரூபன், சிமியோன், லேவி, யூதா:3 இசக்கார், செபுலோன், பென்யமின்:4 தாண், நப்தலி, காத்து, ஆசேர்.5 யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும் மொத்தம் எழுபது பேர். யோசேப்பு ஏற்கனவே எகிப்தில் இருந்தார்.footnote.jpg6 பின்னர் யோசேப்பும் அவருடைய எல்லாச் சகோதரரும் அந்தத் தலைமுறையினர் அனைவருமே இறந்துபோயினர்.7இஸ்ரயேல் மக்களோ குழந்தைவளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர்: ஆள்பலத்தில் மேன்மேலும் வளர்ந்தனர்: இதனால் அந்நாடே அவர்களால் நிறைந்துவிட்டது.8இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்..11 எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.12 ஆயினும் எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்: பெருகிப் பரவினர். இதனால் எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர்

15எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது:16 ″ ″ எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்: ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்: பெண்மகவு என்றால் வாழட்டும்″ ″ .17 ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.18 எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி, ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்? என்று கேட்டான்.19 அதற்கு மருத்துவப் பெண்கள் பார்வோனை நோக்கி, ″ ″ எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள்: ஏனெனில், அவர்கள் வலிமை கொண்டவர்கள்: மருத்துவப்பெண் வருமுன்னரே அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது″ ″ என்று காரணம் கூறினர்.20 இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார். இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார். அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர்.21 இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்.22 பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, ″ ″ பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழவிடுங்கள்″ ″ என்று அறிவித்தான்.

யாத்திராகமம்21 இவ்வாறிருக்க, லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப்பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டார்.2 அவள் கருவுற்று ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்: அது அழகாயிருந்தது என்று கண்டாள்: மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.3 இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்: குழந்தையை அதனுள் வைத்து நைல்நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள்.4 அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.5 அப்போது பார்வோனின் மகள் நைல்நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்: அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்: அது அழுதுகொண்டிருந்தது.6 அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். ″ ″ இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று″ ″ என்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி,7 ″ ″ உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?″ ″ என்று கேட்டாள்.8பார்வோனின் மகள் அவளை நோக்கி, ″ ″ சரி. சென்று வா″ ″ என்றாள். அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.9 பார்வோனின் மகள் அவளை நோக்கி, ″ ″ இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்″ ″ என்றாள். எனவே குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண்.10 குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக்கொண்டாள். 'நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்' என்று கூறி அவள் அவனுக்கு 'மோசே' என்று பெயரிட்டாள்.

15 இச்செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது மோசேயைக் கொல்லத் தேடினான். எனவே மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று.16 அவர் ஒரு கிணற்றருகில் அமர்ந்திருக்க, மிதியானின் அர்ச்சகருடைய ஏழு புதல்வியரும் வந்து, தம் தந்தையின் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்ட நீர் மொண்டு தொட்டிகளை நிரப்பினர்.17 அங்கு வந்த இடையர்கள் அவர்களை விரட்டினர். உடனே மோசே எழுந்து அவர்களுக்குப் பாதுகாப்பளித்தார். அவர்கள் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்டவும் செய்தார்.18 அவர்கள் தம் தந்தையான இரகுவேலிடம் சென்றபோது அவர், ″ ″ என்ன, இன்று விரைவாக வந்துவிட்டீர்களே?″ ″ என்றார்.19 அவர்கள், ″ ″ எகிப்தியன் ஒருவன் இடையர்களின் தொல்லையிலிருந்து எங்களை விடுவித்ததோடு, எங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் இறைத்தான்: ஆட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்டினான்″ ″ என்றார்கள்.20 அவர் தம் புதல்வியரிடம், ″ ″ எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்? சாப்பிட அவனை அழைத்து வாருங்கள்″ ″ என்று கூறினார்.21 அவரோடு குடியிருக்க மோசே சம்மதிக்க, அவரும் மோசேக்குத் தம்மகள் சிப்போராவை மணமுடித்துக் கொடுத்தார்.22 அவள் ஒரு மகனை ஈன்றெடுத்தாள். 'நான் வேற்று நாட்டில் அன்னியனாய் உள்ளேன்' என்று கூறி மோசே அவனைக் 'கேர்சோம்' என்று பெயரிட்டழைத்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

உபாகமம்717 இந்த மக்களினங்கள் எல்லாம் எங்களைவிடத் திரளானவர்களாய் உள்ளதால், அவர்களை விரட்டியடிக்க எங்களால் எப்படி முடியும் என்று உங்கள் உள்ளத்தில் நீங்கள் உரையாடும்போது,18 அவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். மாறாக, பார்வோனுக்கும் எகிப்தியர் அனைவருக்கும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் செய்ததை நினைவில் நிறுத்துங்கள்.19

 

யாத்திராகமம்23

.27 என் பேரச்சத்தை உனக்கு முன்னர் அனுப்பி, உன்னை எதிர்ப்படும் எல்லா மக்களையும் நான் கதிகலங்கச் செய்வேன். உன் பகைவர் அனைவரும் உனக்குப் புறம்காட்டச் செய்வேன்.28 உனக்கு முன் நான் குளவிகளை அனுப்பி வைப்பேன். அவை இவ்வியரையும் கானானியரையும் இத்தியரையும் உனக்கு முன்னின்று துரத்திவிடும்.29ஆயினும், ஒரே ஆண்டில், உனக்கு முன்னின்று நான் அவர்களைத் துரத்திவிட மாட்டேன். துரத்தினால், நிலம் தரிசாகிவிடும். உன்னிலும் மிகுதியாக வயல்வெளி விலங்குகள் பலுகிப் பெருகிவிடும்.30 எனவே நீ பலுகிப்பெருகி நாட்டைக் கைப்பற்றும் வரை சிறிது சிறிதாக அவர்களை உனக்கு முன்னின்று துரத்திவிடுவேன்.31 உன் எல்லைகள், செங்கடல்முதல் பெலிஸ்தியர் கடல்வரைக்கும், பாலைநிலம் முதல் யூப்பிரத்தீசு நதிவரைக்கும், விரிந்து கிடக்கச் செய்வேன். ஏனெனில் அந்நாட்டின் குடிமக்களை நான் உன் கையில் ஒப்படைப்பேன். நீயும் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard