Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு- கர்த்தரின் குழப்பம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு- கர்த்தரின் குழப்பம்
Permalink  
 


images?q=tbn:ANd9GcTQBUlOI8Iw6F8LsbT2M8Omq5-yBaGK31XtUexXtcL1KlS3qGI&t=1&usg=__hw1o8NtnTaljjPyG2DOuWr_VI5k=

ஆதியாகமம்: 12

10.அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்றுதேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால்ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.11.அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோதுதன் மனைவி சாராயைப் பார்த்துநீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.12.எகிப்தியர் உன்னைக் காணும்போதுஇவள் அவனுடைய மனைவி என்று சொல்லி,என்னைக் கொன்றுபோட்டுஉன்னை உயிரோடேவைப்பார்கள்.13.ஆகையால்உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும்உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும்நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.14.ஆபிராம் எகிப்திலே வந்தபோதுஎகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள்.15.பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டுபார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக்கொண்டுபோகப்பட்டாள்.16.அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்அவனுக்கு ஆடுமாடுகளும்கழுதைகளும்,வேலைக்காரரும்வேலைக்காரிகளும்கோளிகைக் கழுதைகளும்ஒட்டகங்களும் கிடைத்தது.17.ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும்,அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.18.அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்துநீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன?19.இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன?இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனேஇதோ உன் மனைவிஇவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.20.பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்அவர்கள் அவனையும்அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: ஆபிர ஹாம் அல்லது கர்த்தரின் குழப்பம்
Permalink  
 



images?q=tbn:ANd9GcT4FlS2Z0NHtU1oIRfPrHQT4TvMSEwmozPfdXhwI0hYkKru6A8&t=1&usg=__UlgNg_eMSdFPTGvHuygj77Wk70U=

 

ஆதியாகமம்: 20

  1. ஆபிரகாம் அவ்விடம் விட்டுதென் தேசத்திற்குப் பிரயாணம்பண்ணிகாதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறிகேராரிலே தங்கினான்.2.அங்கே ஆபிரகாம் தன்மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலேகேராரின் ராஜாவாகியஅபிமெலேக்கு ஆளனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.3.தேவன் இரவிலேஅபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றிநீ அழைப்பித்த ஸ்திரீயின் நிமித்தம் நீசெத்தாய்அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.4.அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்ஆண்டவரேநீதியுள்ள ஜனங்களைஅழிப்பீரோ?5.இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையாஅவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளேஉத்தம இருதயத்தோடும் சுத்தமானகைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.6.அப்பொழுது தேவன்உத்தமஇருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்நீ எனக்குவிரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்ஆகையால்நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.

9.அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்துநீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய்நீ என்மேலும்என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.10.பின்னும் அபிமெலேக்குஆபிரகாமை நோக்கி,என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.11.அதற்கு ஆபிரகாம்,இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும்என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.12.அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்;அவள் என் தகப்பனுக்குக் குமாரத்திஎன் தாய்க்குக் குமாரத்தியல்லஅவள் எனக்குமனைவியானாள்.13.என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த் திரியும்படி செய்தபோதுநான் அவளை நோக்கிநாம் போகும் இடம் எங்கும்நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்14.அப்பொழுது அபிமெலேக்கு ஆடு மாடுகளையும்வேலைக்காரரையும்,வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்துஅவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு- கர்த்தரின் குழப்பம்
Permalink  
 


ஆதியாகமம் 26

அதிகாரம் 26

கெராரில் ஈசாக்கின் வாழ்க்கை
1 முன்பு ஆபிரகாமின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைத் தவிர, மேலும் ஒரு பஞ்சம் நாட்டில் உண்டாயிற்று. ஈசாக்கு பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கைக் காணக் கெராருக்குச் சென்றார்.2 அப்போது ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ″எகிப்து நாட்டிற்கு நீ போகாமல், நான் உனக்குக் காட்டும் நாட்டிலே தங்கியிரு.3 அந்நாட்டில் நீ அன்னியனாய் வாழ்வாய். நான் உன்னோடு இருந்து உனக்கு ஆசி வழங்குவேன். இந்த நிலங்கள் அனைத்தையும் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் தருவேன். உன் தந்தை ஆபிரகாமுக்கு நான் ஆணையிட்டுக் கூறிய வாக்கை உறுதிப்படுத்துவேன்.4 உன் வழிமரபை விண்மீன்களைப்போல் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர்க்கு இந்த நிலங்கள் அனைத்தையும் தருவேன். உலகின் அனைத்து இனத்தாரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்.5 ஏனெனில், ஆபிரகாம் என் குரலுக்குச் செவிசாய்த்து என் நியமங்களையும் கட்டளைகளையும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கடைப்பிடித்தான்″ என்றார்.6 எனவே ஈசாக்கு கெராரிலேயே தங்கிவிட்டார்.7 அங்குள்ளவர்கள் அவர் மனைவியைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது, 'அவள் என் சகோதரி' என்றார். ஏனெனில் ரெபேக்கா பார்வைக்கு அழகுள்ளவராய் இருந்ததால், அவ்விடத்து மனிதர் தம்மைக் கொல்வார்களென்று நினைத்து, அவள் 'என் மனைவி' என்று சொல்ல அஞ்சினார்.footnote.jpg8 பல நாள்கள் அவர் அங்கு வாழ்ந்த பின் ஒருநாள் பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கு சாளரம் வழியாகப் பார்க்க நேர்ந்தபோது, ஈசாக்கு தம் மனைவி ரெபேக்காவைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.9 உடனே அபிமெலக்கு ஈசாக்கை அழைத்து, ″அவள் உன் மனைவியென்று தெளிவாய்த் தெரிகிறதே! பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் சொன்னாய்?″ என்று கேட்டான். அதற்கு அவர், ″ஒரு வேளை அவளை முன்னிட்டு நான் சாக நேரிடலாம் என்று நினைத்ததே காரணம்″ என்று அவனுக்குப் பதில் அளித்தார்.10 அபிமெலக்கு, ″நீ ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? குடி மக்களுள் எவனாகிலும் உன் மனைவியோடு படுத்திருந்தால், பழி எங்கள் மீது அல்லவா விழச்செய்திருப்பாய்?″ என்றான்.11 மேலும், ″இந்த மனிதனையோ அவன் மனைவியையோ தொடுபவன் கொல்லப்படுவது உறுதி″ என்று அபிமெலக்கு தன் மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தான்.12 ஈசாக்கு அந்த நாட்டில் பயிரிட்டு அதே ஆண்டில் நூறுமடங்கு அறுவடை செய்தார். ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்கினார்.13 அவர் செல்வமுடையவர் ஆனார். செல்வத்திற்குமேல் செல்வம் பெற்று மாபெரும் செல்வரானார்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஆபிரகாம் வாழ்க்கயில் இரண்டு முறை-"உன் மனைவியென்று தெளிவாய்த் தெரிகிறதே! பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் சொன்னாய்?"

2ம் முறை மன்னன் அபிமெலக்கிடம்.

 

ஈசாக்கும் அதே அபிமெலக்குவிடம் அதே கதை.

 

கர்த்தரின் பரிசுத்த ஆவி குழம்பியதோ



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஈஸா குர்ஆன் உமருக்கு பதில்-கர்த்தரின் ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு குழப்பம்.

 
images?q=tbn:ANd9GcTkrsj0Bc_xNmw5jcW_zZ3nD9mCpb3XatrEHa6LWl-EPNRDfwTJ images?q=tbn:ANd9GcTMh080BHbwU6hRJSHUPgFXDp9lwxNQkRXwM_93bfzF9sLSrsjI images?q=tbn:ANd9GcTJeqHtSsnBj3_NNPtPXEjKJdVNJcXnuBOPBx4e8BD3m6LE1BE2


நம் கட்டுரையை வாசகர் ஒருவர் ஈஸா குர்-ஆன் இணையத்தில் பதிலிட அதை கருப்பையா எனும் நண்பர் சுட்டினார்.
http://isakoran.blogspot.in/2012/06/blog-post_09.html

திரு.உமர் பதிலாக ஒரு மழுப்பல் கட்டுரை தந்துள்ளார்.

http://isakoran.blogspot.in/2012/07/blog-post.html

வெற்று மழுப்பல்கள். 

இதன் சாரம்- //அப்பா பெயரில் மகன் பேரன் இருக்க முடியாதா என்னும் மழுப்பல்கள்//-
 ஏன் நீங்களக கதைகளை புனைந்து இருக்கலாம் என்று மழுப்புகிறீர்கள்.

மேலும் இக்கதைகளில் ஒரு அருமையான உண்மையும் உள்ளது, அடுத்தவன் மனைவியை யூதரல்லாத மக்கள் கடவுள் பக்தி கொண்டோர் ஒழுக்கத்தோடே இருந்தனர். ஆனால் தாவீது குறைந்தபட்சம் 3பெண்களை அடுத்தவன் மனைவியை அபகரித்தல் பைபிளில் உள்ளது.



முதலில் 50 ஆண்டுகளுக்கு முந்தைய பைபிளியல் கோட்பாடுகள், அகழ்வுகளை தவறாக மேல்நோகில் பைபிளுடன் இணைத்தல் போன்றவை- நவீன விஞ்ஞான கார்பன்-14 சோதனையில் முழுமையாய் பொய்த்ததை மறைத்து இன்னும் காலம் ஓட்டும் மழுப்பல்களை உமரும் தருகிறார்.


ஆபிரகாம் - இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது
Jewish Encyclopedia,
"From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity."

இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300௨00 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள்.
ஆய்வு நூல்-R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch”:

இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300-200 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள்.
இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.

இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8

images?q=tbn:ANd9GcTactyz8zQ_jD0c9CuLQjWiZn-VZXd4WaR2A1wsBe3OiINoRslFAw images?q=tbn:ANd9GcTEBUC40S8s6Ycu963Cqge2njvWFkCM6hquXPDJRYMv0uXSjwlH8g  images?q=tbn:ANd9GcRjlsgzcy1bVQ-KX0jiEM1-DYGuzwzoUCU94XirMdMmdLzElWmN
1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.
isa-koran.jpg

ஆபிரகாம் - இசாக் கதை பற்றி  யூதக் கலைகளஞ்சியம் சொல்வது 
//ஆபிரகாம் வாழ்வில் இரண்டுமுறை- மனைவி தங்கை என்பது வாய்ப்பில்லை. அதைவிட இதே சம்பவம் மகன் இசாக்-ரெபெக்கா காலத்திலும் என்பது இவை நம்புதலுக்கு உள்ளவை அல்ல என்பது தெளிவாக்கும். இக்கதைகள் பிதாக்கள் மனைவிகள் அழ்கானவர்கள்- இஸ்ரேலின் அருவருப்பான யாவே- சிறு தெய்வம் பாதுகாப்பு பெற்று இருந்தனர் எனக் காட்ட எழுந்த கதையே.//

மேலும் பைபிள் பற்றி, பைபிளியல் பற்றி இஸ்ரேலின் புதைபொருள் அகழ்வாரய்ச்சி பற்றி உண்மைகளை நாம் தருவோம்.


நாம் நடுநிலையாக பைபிளை, அதில் வரலாற்று பின்னணி உள்ளதா என ஆராய்ந்து எழுதுகிறோம்.

முழுமையாக பல பைபிளியல் பல்கலை கழகங்கள்- பேராசிரியர்கள் நூல்கள் அடிப்படையில் தருகிறோம்..

வரலாற்று பைபிளியல் அடிப்படையை நாம் தொடர்ந்து பகிர்வோம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஈஸா குர்ஆன் உமருக்கு பதில்-கர்த்தரின் ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு குழப்பம்.

 

கட்டுரை- 1 எதிர்ப்பு பதில்  எதிர்ப்பு - 2  மாற்று 2

//"சிலர் இந்த நிகழ்ச்சிகள் பற்றி கூறும்போது, ஒரே கதை மூன்று வித்தியாசமான பெயர்களில் கூறப்பட்டுள்ளது என்பார்கள் அல்லது இந்த மூன்று நிகழ்ச்சிகள் நமக்கு ஆதியாகமத்திற்கு மூன்று ஆசிரியர்கள் இருந்தார்கள் என்று காட்டுகிறது என்றும் கூறுவார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சிகளை நாம் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்தால், இவைகள் மூன்று தனித்தனியான நிகழ்ச்சிகள் என்று தெரியவரும். இவைகள் பற்றிய வசனங்கள்: ஆதியாகமம் 12:12-20, 20:1-8, மற்றும் 26:1-11 ஆகும்.//

விளக்கம் தருகிறேன் - பதில் தருகிறேன் என்பவர்கள்  என்று சொல்லிக் கொண்டு, இதற்குமுன் பைபிளியல் அறிஞர்கள் நியாய்ப் பிரமாணங்கள் புனையப்பட்டவிதம் என ஆராய்ச்சிகளின் பெரும்பான்மையோர் தீர்மானம், 4 வெவ்வேறு குழுக்கள், ய,எ,உ,பா முறையே "யவ" , "எல்ல்லொஹிம்" "உபாகம" மற்றும் யூதப் பாதிரிமார் (லேவியர் ஜாதி). ஒரே சம்பவத்தை 3 ஆசிரியர்கள் சற்று மற்றி எழுதியதில் வந்த சிறு குழப்பம் என மற்ற பைப்ளியல் அறிஞர்கள் சொன்னனராம்.
images?q=tbn:ANd9GcQDS5X_575wRunjpJSttmp0DlHXtsqSKUIoB4N48Aorip9fPzeV  images?q=tbn:ANd9GcTBEQT79vCwWaenq0ZNLQDm-dnQJDUbkFMyq-Y-Uwjk5e93X2O8 

இக்கட்டுரையின் மூல ஆங்கில அறிஞர்- இல்லை இது மூன்று முறை நடந்த வெவ்வேறு சம்பவம் என்றும்; தாத்தா-மகன் - பேரன் என அனைவருக்கும் ஒரே பெயர் இருக்க முடியாதா என ஒரு மழுப்பல் (Apology) வைக்கிறார், அதற்கு இங்கிலாந்து அரசர்களின் பட்டியலும் தருகிறார்.


முந்தைய நம்பியதற்கு காரணம் என்ன? - இவ்வாசிரியர் கூறும் புதுவிளக்கம் ஏன்? - பைபிளியல் அறிஞர்கள் இச்சம்பவம் மட்டும் பார்க்கவில்லை, முழுமையாக பைபிள் அமைப்பு புனையப்பட்டது எப்படு என பார்த்தனர்.


சிறு உதாரணம்- மோசே சட்டங்கள் என்னும் "முதலைந்து புத்தகங்கள் Pentateuch இவை வரலாற்று குறிப்பு அல்ல. அதிலும் மோசேக்கு முந்தையதான தலைமுறை பகுதி அனைத்தும் கதைப்படி- பயணத்தின் போது கர்த்தர் மோசேக்கு சொன்னதாகக் கதை. இஸ்ரேல் நாடு என்பதுமுரட்டு அராபியக் கூட்டம்இவர்கள் நாகரிகத்தில் மிகவும் பின்தங்கியிருந்தனர்பாபிலோனியகிரேக்கப் படையெடுப்புகளுக்குப் பின்பு தான்அவர்கள் நகரம்கட்டுமானம்தத்துவம் என அறிவு பெற்றனர்பொ..மு.300-200இடையே பெரும்பாலான பழைய ஏற்பாடு புனையப் பட்டதுஇதற்குஎஸ்ரா-நெகமியா போன்ற புத்தகங்களிலும் மிகத்தெளிவான ஆதாரங்கள்-அதை எவைக் குறிக்கின்றன என்பதில் பெரும் கருத்தொற்றுமை நடுநிலைபைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.


 நான் தெளிவாக பைபிளியல் நூல்களிலிருந்தே ஆதாரங்களை தருகிறேன்.

 “இஸ்ரயேலரின் வரலாறு- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996.( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில்  இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60

இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கில்லை. செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாயிருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக்  90- 91

ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49

 நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில் ; – கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் ஸ்.ஸ்.தெயோபிலஸ்
இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர்

தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு போன்ற புராண (mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்பை இப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது. -- பக்கம் 15

அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலியம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17


 இதைவிடவும் நியாயப் பிரமாணங்கள் உள்ளே பல கிரேக்க பாபிலோனிய அம்சங்கள் காணப்பட்டது. இவை நியாயப் பிரமாணங்கள் எப்ரிரேய- கிரேக்க மொழிகளில் ஒரே காலத்தில் - அதாவது பொ.மு 3ம் நூற்றாண்டில் தான் என நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர். 

சிறு உதாரணம்.New Catholic Encyclopedia Vol-5 page-745 “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus.The Hebrew term Yamsup signifies Reed sea. ” New Catholic Encyclopedia Vol-5 page-745

மோசஸ் எழுதியதான நியாயப் பிரமாணத்தில் செங்கடல் என வந்ததற்குகிரேக்கர்கள் தவறான மொழி பெயர்ப்பு காரணமாம்-அமெரிக்க கத்தோலிக்கபல்கலைக் கழகத்தின் கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றதுஇதுநியாயப்பிராமாணங்கள் அல்லது புனையப் பட்டதே பொ.மு. 300-200 வாக்கில்என்பதை நிருபிக்கும்.


ஒட்டகங்கள் முதலில் மனிதர்களால் பழக்கப்பட்டு பயன் படுத்தப் பட்டது BCE-1000 வாக்கிலேஆனால் ஆபிரஹாம் வீட்டில் ஒட்டகங்கள் இருந்ததாகக் கதைகட்டுகிறதுபரம்பரைப் பட்டியல்களில் பாபிலோனிய/கிரேக்க பின்பற்றுதல்கள்பைபிள் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


Sharjah’s 3,000-year-old clue to the first domesticated camels
http://newindian.activeboard.com/t36782212/semmozhi-tamil-ancient-archaeology-findings/?page=5
 கதைப்படியே எகிப்தில் வாழ்ந்த மோசேவிற்கு 400 அல்லது 430 ஆண்டுகள் முன்நடந்தவை தெரிய வாய்ப்பில்லை.


இதைப் படிக்கவும்-

யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே http://pagadhu.blogspot.in/2012/06/blog-post.html

பைபிள் கதையின் சாரம்.
ஆபிரகாம்- மனைவி சாராள், இவர்கள் நாட்டில் பஞ்சம் வர பக்கத்து நாடு சென்று வாழ்ந்தனர். தன் அழகான மனைவியைக் காப்பாற்ற மனைவியைத் தங்கை எனச் சொல்லிக் கொண்டர். ஆனல் விஷயம் அறிந்த பக்கத்து நாட்டு மன்னர் - ஏன் மனைவிஅயை தங்கை என பொய் சொன்னாய், நாங்கள் அடுத்தவர் மனைவியை தீண்டும் தப்பு ச்ய்திருப்போமே என வருந்தினர். 
இது போலே ஒரு சம்பவம் ஆபிரகாமின் வாழ்க்கையில் இரண்டு முறை, அதுவும் இரண்டாவது நிகழ்ச்சியில் அவர் எந்த நாடு, மன்னன் பெயர் சொன்னதோ, அதே நாடு மன்னரிடம் பைபிள் கதைப்படி ஆபிரகாம் மகன் ஈசாக்கும் மனைவியைத் தங்கை எனச் சொல்வதாகக் கதை.

எனவே தான் ஒரே சம்பவத்தை 3 கதைக் குழு ஆசிரியர்கள் வித்தியாசமாகஎழுதியதில் வந்தது என்றனர்ஆனால் அரசகுலத்தில் ஒரே பெயர் வைப்பதுண்டுஎன்பதால் இது மூன்றுமுறை நடந்திருக்கலாம் என புது சப்பைக்கட்டுஆனால்நடுநிலையாக வரலாற்று கண்கொண்டு உண்மையை தேடுபவர்கள் நேர்மையாகஆராய்ந்தால் வரும் முடிவை யூதக் கலைக்களஞ்சியம் தெளிவாக்குகிறது.
 ஆபிரகாம் - இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது

ஆபிரகாம் - இசாக் கதை பற்றி  யூதக் கலைகளஞ்சியம் சொல்வது 

//ஆபிரகாம் வாழ்வில்இரண்டுமுறை- மனைவியை தங்கை என்பது வாய்ப்பில்லை. அதைவிட இதே சம்பவம் மகன் இசாக்-ரெபெக்கா காலத்திலும் என்பது இவை நம்புதலுக்கு உள்ளவை அல்ல என்பது தெளிவாக்கும். இக்கதைகள் பிதாக்கள் மனைவிகள் அழ்கானவர்கள்- இஸ்ரேலின் யாவே- சிறு தெய்வம் பாதுகாப்பு பெற்று இருந்தனர் எனக் காட்ட எழுந்த கதையே.//
Jewish Encyclopedia,
"From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity."


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கர்த்தர் உளறல் ஆபிரகாம் - ஈசாக்கு கதைகள்

 

நாடோடியாய் அலைந்த ஆபிரகாம் வாழ்வில் இரண்டு முறை- தன் மனைவியை தங்கை என்கிறார், புத்தகமதமல்லா கடவுள் நம்பிக்கையாளரானோர் பைபிள் தாவீது போலில்லாமல் அடுத்தவர் மனைவியைத் தவிர்த்தனர் எனக் கதை.
இதே கதை ஆபிரகாமின் மகன் ஈசாக்கு வாழ்விலும், அதுவும் ஆபிரகாம் எந்த மன்னனிடம் நடந்ததோ அதே மன்னனிடம் என.
- இந்த் ஈசாக்கு அம்மன்னனின் மகன் பேரன் காலத்தில் அதெ பெயருடனான மன்னனிடம் இருக்க முடியாதோ எனும் பெரும் விவாதம் வைத்தார் உமர்.
அதர்கு இங்கு ஜால்ரா உளரல்கள்.

கட்டுரை- 1
 எதிர்ப்பு பதில்  எதிர்ப்பு - 2  
மாற்று 2 
  images?q=tbn:ANd9GcRjjLcNE0jrW7Y0ltUGBVvvDVLUh7--eo97AccUDjHVRF9Yztwq images?q=tbn:ANd9GcR5QI9p4SyVJ0B574mCR9YxkKXF08vWTFFX8xFQKhhDjX7vk4rNZH4vSgf9iw  images?q=tbn:ANd9GcTJeqHtSsnBj3_NNPtPXEjKJdVNJcXnuBOPBx4e8BD3m6LE1BE2
ஆதி 11:12-26
 12 அர்பகசாது முப்பத்தைந்து வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செலாகு பிறந்தான்.
14 செலாகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஏபேர் பிறந்தான்.
16 ஏபேர் முப்பத்து நான்கு வயதாக இருந்தபொழுது அவனுக்குப் பெலேகு பிறந்தான்.
 18 பெலேகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு இரயு பிறந்தான்.
20இரயு முப்பத்திரண்டு வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செரூகு பிறந்தான்.
 22 செரூகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு நாகோர் பிறந்தான்.
24 நாகோர் இருபத்தொன்பது வயதாக இருந்தபொழுது அவனுக்குத் தெராகு பிறந்தான்.
26 தெராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர்.
 29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான். 30 சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார்.

ஆதி 12:4 ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து. 5 ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரனின் மகன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர். 6 ஆபிரகாம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

சாராய்ஆபிராமைவிட 10 வயது சிறியவர். கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்த போது சாராய் வயது 65. (ஆதி :17:17ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, ″நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?″ என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்).

75 வயது ஆபிராம்- 65 வய்து சாராயுடன் வாழ்ந்த்போது பஞ்சம் வர எகிப்தில் முதல் சம்பவம்.
ஆதி :17:11 ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ″நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு.
17 ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, ″நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?″ என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். 18 ஆபிரகாம் கடவுளிடம், ″உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்″ என்றார். 19 கடவுள் அவரிடம், ″அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ 'ஈசாக்கு' எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப்பின் வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.


ஆதி :18: 9 பின்பு அவர்கள் அவரை நோக்கி, ″உன் மனைவி சாரா எங்கே?″ என்று கேட்க, அவர், ″அதோ கூடாரத்தில் இருக்கிறாள்″ என்று பதில் கூறினார். 10அப்பொழுது ஆண்டவர்; ″நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன. அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்″ என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

 11ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது. 12 எனவே, சாரா தமக்குள் சிரித்து, ″நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர்.    எனக்கா இன்பம்?″ என்றாள்.  

 13 அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, ″'நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா' என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்?
ஆதியாகமம் 20:1- 8, ஆபிராம்- சாரை- முறையே ஆபிரகாம் - சாராள் என மாறிய பின் 99 வயதில் இரண்டாவது சம்பவம்.

எனவே கிழவியைப் மன்னர்கள் பார்த்து மயங்கியதாகக் கதை.


பைபிளில் உள்ள சம்பவத்தை படிக்காமல் ஏதோ ஒரு வெற்று உளறலை மழுப்பி பெருமை கொள்வோரை என்ன செய்யலாம்.

கர்த்தர் உளறேலே பைபிள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard