Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதாமின் மரபணுவும் ஏசுவின் இரத்த வகையும் !


Guru

Status: Offline
Posts: 7474
Date:
ஆதாமின் மரபணுவும் ஏசுவின் இரத்த வகையும் !
Permalink  
 


ன்றைய அறிவியல் வளர்ச்சி மற்றும் மக்களின் சிந்திக்கும் மற்றும் கேள்வி கேட்கும் திறணை எதிர் கொள்ள மதங்கள் திணறியே வருகின்றன, இதற்கு எந்த ஒரு மதமும் விதி விலக்கு இல்லை. மரபணு பற்றி இன்றைக்கு மிகவும் பேசப்படுவதால் இவற்றை மதங்களின் கருத்துகள் எவ்வாறு முடிந்து கொள்கின்றன என்று பார்ப்போம்
******
ரபணு இல்லாமல் ஆதாம் ஏவாள் பிறந்திருக்க முடியுமா ? என்ற கேள்விக்கு ஒரு கிறிஸ்துவ இணைய தளம், ஆம் என்கிறது, களிமண்ணால் படைக்கப்பட்டதாக நம்பம்ப்படும் ஆதம் ஏவாளுக்கு தாய் வழி இயற்கையான பிறப்பு அமையாததால் கருவரையில் இருந்து பிறக்கும் அடையாளமாக தொப்புள் இருக்காது என்பதுடன் மரபணுவும் இருக்காது என்கிறார்கள், நான் பார்த்த வரையில் ஆதாம் ஏவாள் படங்களில் தொப்புளும் சேர்ந்தே வரையப்பட்டுள்ளது இதற்கு முரணாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை மரபணு இல்லாமல் படைக்கப்பட்ட ஒருவரின் வாரிசுகளுக்கு மரபணு எப்படி ஏற்படும் ? இன்றைய க்ளோனிங்க் போல் நகலெடுக்கும் உருவமாக ஆதமின் வார்சிகள் ஆதாமைப் போல் தான் இருந்திருப்பார்கள், இவர்களுக்குள் (வாரிசுக்குள்) அண்ணன் தங்கையை திருமணம் செய்வது தவிர்க்க முடியாது என்றாலும் மரபணு குறைபாடுகளுடன் குழந்தைப் பிறக்காதா என்கிற கேள்வியை அவர்களே கேட்டு பதிலும் சொல்லி உள்ளனர்.
கேள்வி: காயீனின் மனைவி யார்? காயீனின் மனைவி அவனது சகோதரியா?
பதில்: காயீனின் மனைவி யாரென்பதை வேதாகமம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அவனது சகோதரியோ, மருமகளோ அல்லது பேத்தியோ போன்றவர்தாம் காயீனின் மனைவியாக இருந்திருக்க முடியும் என்ற ஒரே பதில்தான் இங்கு சாத்தியம். காயின் ஆபேலைக் கொலை செய்தபோது (ஆதியாகமம் 4:8) அவனது வயது என்ன என்பதையும் வேதாகமம் நமக்குச் சொல்லவில்லை. இருவரும் விவசாயிகள் என்பதனால் இருவரும் வயது வந்தவர்கள் எனலாம். சொந்தக் குடும்பமும் இருந்திருக்கலாம். ஆபேல் கொலை செய்யப்பட்டபோது, காயீனையும் அபேலையும் தவிர ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வேறு குழந்தைகளும் இருந்தார்கள் என்பது தெளிவு. நிச்சயமாகவே பின்பு இன்னும் பல குழந்தைகளைப் பெற்றார்கள் (ஆதியாகமம் 5:4). ஆபேலைக் கொலை செய்தபின் காயீன் தன் உயிருக்குப் பயந்திருந்தான் (ஆதியாகமம் 4:14) என்னும் உண்மை அப்பொழுதே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மேலும் பல குழந்தைகள் இருந்திருப்பார்கள், சொல்லப்போனால் பேரக்குழந்தைகளும் இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. காயீனின் மனைவி (ஆதியாகமம் 4:17) ஆதாம் ஏவாளுடைய மகளோ அல்லது பேத்தியோதான்.
Adam.jpg
(அந்தரத்தில் தாடியோடு இருப்பவர் கடவுள், அவரைச் சுற்றி இருப்பவர்கள் தேவ தூதர்கள்)


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

"ஆதாமும் ஏவாளும் மட்டுமே முதலாவது படைக்கப்பட்ட மனிதர்கள் என்பதால் அவர்களது குழந்தைகளுக்கு குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. மக்கள்தொகை அதிகமாகி குடும்பத்திற்குள்ளேயே திருமண உறவு ஏற்படுத்திக்கொள்வது தேவையில்லை (லேவியராகமம் 18:6-18) என்ற காலம் வரும்வரை குடும்பத்திற்குள்ளேயே எற்படும் திருமண உறவை கர்த்தர் தடுக்கவில்லை. மிகவும் நெருங்கிய, முறையில்லாத உறவினர்களிடையில் நிகழும் சேர்க்கை இக்காலத்தில் அதிகமாக மரபியல் சீர்கேடுகளில் முடிகிறது எதனாலெனில், ஒரே மரபியற்குழுவைச் சேர்ந்த இரண்டுபேர் (எ.கா. ஒரு சகோதரனும் சகோதரியும்) சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, கோளாறான குணங்கள் ஆற்றலடையும் ஆபத்தான நிலை உருவாகிறது. வேறு வேறு குடும்பங்களைச் சேர்ந்தஅவர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்போது பெற்றோர்கள் இருவரும் ஒரே கோளாறு பண்புகளைக் கொண்டிருக்கும் நிலைமை மிகக்குறைவு. மனிதகுல மரபியல் குறியீடு “மாசுபடுதல்” அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆண்டுகள் நூற்றாண்டுகளாக மரபணு குறைவுகள் தலைமுறை தலைமுறைகளாக பல மடங்குகளாக உயர்ந்து, பூதாகரமாக மாறிவிட்டது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எந்த மரபணுக்குறைவும் இருக்கவில்லை. அதனால் அவர்களும், அவர்களது சந்ததியில் அடுத்து வந்த சில தலைமுறைகளும் நமக்கு இன்று இருப்பதைவிட நல்ல ஆரோக்கியமான உடல்நிலை இருந்தது. ஆதாம் ஏவாளின் குழந்தைகளுக்கு எந்த மரபணுக் குறையும் இருக்கவில்லை. அதன் பலனாக குடும்பத்திற்குள்ளே நெருங்கிய உறவினர்களுக்கிடையே திருமணம் செய்துகொள்வது பாதுகாப்பானதாக இருந்தது."
One idea that has surfaced comes from Genesis 4:15. After Cain killed Able the Bible says that Cain felt insecure about life and God said, “Therefore, whoever kills Cain, vengeance shall be taken on him sevenfold.” and “the Lord set a mark on Cain, lest anyone finding him should kill him.” Some have concluded that this “mark” was black skin. First of all, we don’t know what the mark was, but is it possible that the black gene was started with Cain and carried onto the ark in one of Noah’s sons or daughter-in-laws? Not very likely at all. That would be a very prejudiced viewpoint in our opinion, and a view that has no Scriptural evidence.
*****
இங்கே கேட்டிருக்கும் கேள்வி காயீனின் மனைவி பற்றி ஆனால் அவர்களாகவே மரபணு பற்றியெல்லாம் எழுதி இருக்கிறார்கள், கேள்விக்கும் பதிலுக்கும் முதல் பகுதியிலேயே பதிலை சமாளித்துச் சொல்லி இருந்தாலும் (அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாதது பற்றி அவர்கள் கவலைப் படவில்லை) கூடுதல் தகவலாக மரபணு பற்றி யாரும் கேட்டுவிட்டால் ? என்று முந்திக் கொண்டுள்ளனர். இவர்கள் சொல்வது படிப்பார்த்தால் ஆதாமின் வாரிசுகளுக்குள்ளேயே திருமணங்கள் ஒரு முடிவுக்கு வந்த பிறகு மரபணு என்ற ஒன்று மனித உடலில் புகுந்துள்ளது போல் நினைக்கத் தோன்றுகிறது. இருவரின் வாரிசுகளில் வரும் அனைவருமே கிளைத்து வரும் பொழுது பிற குடும்பத்து (வேற ஆதாம்களின் வாரிசுகள்?) திருமணம் ஏற்பட்டிருக்கும் புதிதாகத்தான் மரபணு உற்பத்தியானது, இரத்தவகை மாறியது என்பது எப்படி கூறுகளாகும் ? பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் படைப்புக் கொள்கை செத்துவிடும் என்று நினைப்போர், ஆதாம் கருப்பராக இருந்தாரா ? வெள்ளையராக இருந்தாரா ? அல்லது மஞ்சள் நிற மங்கோலிய இனமாக இருந்தாரா ? என்ற கேள்விகளுக்கு விடைச் சொல்வது இல்லை. உடலமைப்பு சூழலால் மாறும் என்று இவர்கள் ஒப்புக் கொண்டாலும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் வாழ்ந்த அதே மனித உருவங்கள் தான் இன்றும் கருப்பர்களுக்கு இருக்கிறது, ஒரு கருப்பினம் குளிர்நாடுகளுக்கு இடம் பெயர்ந்து ஆயிரம் ஆண்டுகளாக பெருகி வளர்ந்தால் அவர்கள் மஞ்சள் நிறத்தினராகவோ அல்லது வெள்ளை இனத்தினராகவோ ஆவார்களா ? சிந்திப்பவர்களுக்கு சாட்சி இருக்கிறது என்போர், ஆதாம் ஏவாளின் வாரிசுகள் எப்படி பல்வேறு நிறங்கள் முக அடையாளங்களுடன் மாறிப் போனார்கள் ? என்பதற்கு விடையாக ஆதாமின் வாரிசுகள் ஒருவேளை குரங்குக் கூட்டங்களுடன் கலந்து பல்கிப் பெருகி இருப்பார்கள் அல்லது பூனைகள் பல வண்ணங்களில் குட்டிப் போடுவது போல் எல்லா இனங்களின் குழந்தையை பெற்றெடுத்தார்கள் என்கிற எளிய ஊக விடையாவது சொல்லிவிட்டு பின்னர் பரிணாமக் கோட்பாடுகளை மறுக்கச் செல்லலாமே. ஒருவேளை ஆதாம் கருப்பு நிறம் என்று வைத்துக் கொண்டாலும் கூட வெள்ளையர்கள் தாங்கள் குரங்கில் இருந்து பிறந்தோம் என்பதை பெருமையாக நினைத்தாலும் கருப்பர்களிடம் இருந்து பிறந்தோம் என்பதை பெருமைக்குரிய ஒன்றாகக் கருதமாட்டார்கள், இன்னும் ஒரு கேள்வி ஆதாம் ஏவாளுக்கு பிறகு பல சந்ததிகள் பெருகி இருந்தாலும் நோவாவின் காலத்தில் நோவா கப்பலில் ஏற்றும் பொழுது இனத்துக்கு ஒன்றாக மனிதர்களை ஏற்றுவதாக குறிப்புகள் எதுவுமே இல்லையே, பிறகு எப்படி மனித இனங்கள் பலவாக பல நிறங்களாகப் பெருகி இருக்கும் ? 

படைப்புத் தொழிலின் ஆறாம் நாள் மற்ற மனித இனங்களைப் படைத்தார் என்று பழைய ஏற்பாடு சொல்கிறது, ஆதம் ஏவாள் ஆப்பிளைக் கடித்தார்கள் துன்பத்திற்கு ஆளானார்கள், மற்றவர்களையும் ஏன் துன்பத்திற்கு ஆளாக்க வேண்டும், தவிர ஆதாம் ஏவாளை மற்ற இனங்களின் மூததையர் என்று எப்படி ஏற்றுக் கொள்வது ?


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஏசுவின் மரபணுவும் இரத்த வகையும் தெரிந்துவிட்டதாக கிறித்துவ இணைய தளங்கள் கட்டுரைகள் எழுதிவருகிறார்கள், மேரி கன்னித்தாய் என்றால் ஏசுவின் இரத்த வகையும் மேரியின் இரத்த வகையும் ஒன்று என்றும், ஏசுவின் மரபனு கடவுளினால் பெறப்பட்டது என்றும் சொல்லுகிறார்கள். எதோ ஒரு பழைய துணியைக் காட்டி அது ஏசுவை அடக்கம் செய்யப்பட்ட போது போர்த்தப்பட்டதாகவும் அதில் படிந்திருந்து படிமங்களில் இரத்த வகை மாதிரியை கண்டுபிடித்துவிட்டனர் என்றும் AB வகையைச் சேர்ந்தது என்று சொல்கிறார்கள், இதையெல்லாம் அறிவியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்பது வேற, தொடர்ந்து அங்கங்கே ஏசு சிலைகளில் வடியும் இரத்தங்களும் சோதனை செய்யப்படுகிறது, அதில் சில இடங்களில் AB வகையும், O வகையும் இருப்பது முரண்
jesus.jpg
ஏசுவின் பரம்பரைப் பட்டியல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். ஏசுவில் இருந்து மேலே போனால் மோசஸ் அப்படியே மேலே சென்றால் ஆதாமில் முடியும், ஏசுவும் மோஸசும் யூதர்கள் இவர்கள் அந்தப் பட்டியலின் வாரிசுகள் என்றால் ஆதாமின் வாரிசுகள் அனைவருமே இஸ்ரேலியர்கள் அல்லது யூதர்கள் தான், ஏசு காலத்திலேயே யூதர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள், எகிப்தியர்கள் அது தவிர ஆசியர்கள், இந்தியர்கள் என்று பெருங்கூட்டமே இருந்தது, இஸ்ரேலியர்கள் தவிர மற்றவர்கள் யாருக்குப் பிறந்தார்கள், எப்படிப் பிறந்தார்கள். இதையெல்லாம் நம்புவர்கள் காந்தாரிக்கு 100 குழந்தைகள் என்றால் நம்ப மறுப்பதும் வேடிக்கைதான்.
ஆதாம் பிறந்த உருவாக்கிய தேதி அக்டோபர் மாதம் 23 தேதி கிமு 4004 ஆம் ஆண்டாம் (creation of Adam on October 23, 4004 BC at 9:00 am and lived until 3074 BC), 930 ஆண்டு வாழ்ந்தாரம்,  ஒப்பிட அதே காலகட்டத்தில் எகிப்திய நாகரகம் ப்ரமீடுகள் எழும்ப கொடிக்கட்டிப் பறந்ததாகத் எழுதப்பட்ட வரலாற்றில் தெரிகிறது

இதையெல்லாம் படிக்க படிக்க மூச்சு வாங்குது, இதில் மதவாத அன்பர்கள் மத நூலை சரியா உள்வாங்கினால் புரியும் என்கிறார்கள், ரொம்பவும் உள்வாங்கினால் பேராபத்து ... நான் கடல் உள்வாங்குவதையும் அதன் பிறகான சுனாமியையும் சொல்கிறேன்.
ஸ்ஸப்பா.......கண்ணைக் கட்டுதே !
 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

தருமி சொன்னது…

பழைய கதை ஒன்று. என் மாணவியிடமிருந்து எனக்கு ஒரு மடல். ஏசுவின் ரத்தத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும் அதனை தான் chromosomal testing எல்லாம் செய்து விட்டதாகவும் ஒருத்தர் அள்ளி விட்டிருக்கிறார். இது போல பல கதை அவர் சொல்லியிருக்கிறார். இதில் விசேஷம் என்னவென்றால், ஏசுவுக்கு 23 ஜோடி நிறமிகளுகுப் பதிலாக வெறும் 23 நிறமிகள் மட்டுமே இருந்ததாகச் சொல்லியுள்ளார். அதாவது மேரியன்னையின் குரோம் சோம்கள் மட்டும் இருந்தனவாம். மற்ற 23 -ம் பிதாவிடமிருந்து என்பதால் அது ஏசுவிடம் இல்லையாம்!!!

இதை பலரும் பல் காலம் நம்பி வந்திருக்கிறார்கள். அந்த ஆளும் செமையாகக் காசு பார்த்திருக்கிறார். பின்னால் அவரது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறியது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard