Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விவிலியம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
விவிலியம்
Permalink  
 


விவிலியம்

விவிலியம் ( வேதாகமம், பைபிள்), யூதர் மற்றும் கிறித்தவர்களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு, உலகில் அதிகளவு மொழிகளுக்குபெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதரது மற்றும் கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும். கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. அதை எபிரேய விவிலியம் என்றும் கூறுவர். கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.

எபிரேயம் (עִבְרִית அல்லது עברית, இவ்ரித்) ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு செமிடிக் மொழியாகும். இது 7 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது. இது இசுரேல் நாட்டின் -அரபுடன் சேர்த்து- ஆட்சி மொழியாகும். இசுரேலின் பெரும்பான்மையான மக்களான யூதர்களால் பேசப்படுகிறது. ஏறத்தாழ கிபி 2ம் நூற்றாண்டளவில் வழக்கற்று இருந்த எபிரேய மொழி மீண்டும் கிபி 19ம் நூற்றாண்டில் ஹஸ்கலா விழிப்புணர்வு(Haskalah) இயக்கம் வழி, மொழியியல் அறிஞர் எலியேசர் பென்-யெஃகுடா (Eliezer Ben-Yehuda) வின் பெரு முயற்சியால் மீண்டும் வழக்குக்கு வந்துள்ளது.

 

யூதம் அல்லது யூத மதம் (Judaism, "יהודה", யெகூடா,) யாவே என்ற ஒரே கடவுளை வணங்கும் சமயமாகும். யூத மதத்தின் சமய நூல் டனாக் ஆகும். யூத மதத்தை பின்பற்றுபவர்கள் யூத மக்கள் அல்லது யூதர் என தமிழில் அழைக்கப்படுகின்றனர்.[1] இயேசு கிறிஸ்துவும் பிறப்பால் ஒரு யூதராவார். மேலும்கிறிஸ்தவ விவிலியம் எபிரேய விவிலியத்தையும் உள்ளடக்கியதாகும். ஆகையால் யூதம் கிறிஸ்தவத்தின் மூலமாகவும் நோக்கப்படுவதுண்டு.

 

யூதர் ஒரு இனமதக் குழுவாகும்.[2] இது யூதராக பிறந்தவரையும் யூத மதத்திற்கு மாறியவர்களையும் குறிக்கும். 2010 இல் உலக யூதர்களின் மக்கள் தொகை 13.4 மில்லியன் அல்லது உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர்கள் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.[3]

பழைய ஏற்பாடு (Old Testament) கிறிஸ்தவ விவிலியத்தின் முதலாவது பகுதியாகும். இது கிறித்தவர்களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானதாகும். 

ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்னும் பொருள் தரும். கடவுள் பண்டைக் காலத்தில் இஸ்ரயேல் மக்களோடு சீனாய் மலையில் செய்துகொண்ட உடன்படிக்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சமய நூல்கள் யாவற்றையும் பழைய உடன்படிக்கை (ஏற்பாடு) என்று கிறித்தவர் அழைக்கின்றார்கள். 

பழைய ஏற்பாட்டில் - 39/46 (முப்பத்து ஒன்பது/நாற்பத்து ஆறு) புத்தகங்கள் உள்ளன. பழைய ஏற்பாட்டை எபிரேய விவிலியம் (Hebrew Bible) எனவும் கூறுவர். யூத விவிலியமான பழைய ஏற்பாட்டை யூதர்கள் TaNaKh (தானாக்) என்னும் சுருக்கக் குறியீடு மூலம் கீழ்வருமாறு பிரிப்பர்:

1) தோரா(Torah) - சட்டங்கள் - (Ta)2) நெவீம்(Nevi'm) - தீர்க்கர்கள் - (Na)3) கெதுவிம்(Ketuvim) - எழுத்துக்கள் - (Kh)

தோரா 

தோரா என்னும் எபிரேயச் சொல் படிப்பினை, போதனை, திருச்சட்டம், நெறிமுறை என்னும் பொருள்களைத் தரும். இப்பிரிவில் ஐந்து நூல்கள் அடங்கும். அவை மோசே எழுதிய நூல்கள் எனவும் ஐந்நூல்கள் (Pentateuch) எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவ்வைந்து நூல்களும் சேர்ந்து ஒரு பெரும் தொகுதியாக உள்ளன. அவை ஒவ்வொன்றின் தொடக்கச் சொல்லே அவற்றின் பெயராக உள்ளன. கிறித்தவ வழக்கில் அந்நூல்களின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பெயர்கள் வழங்கப்படுகின்றன: 

1.ஆதியாகமம், 2.யாத்திராகமம், 3.லேவியராகமம், 4.எண்ணாகமம், 5.உப ஆகமம் இந்த 5 நூல்கள் பென்டாடச் என அதாவது முதலைந்து நூல்கள் என்று பெயர் படும். 

நெவீம் 

இச்சொல் நவி என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து பிறந்தது (נְבִיא - navi). அதன் பொருள் இறைவாக்கினர் (தீர்க்கதரிசி) என்பதாகும். கடவுள் வழங்கும் செய்தியை மக்களுக்கு அறிவிப்பது இறைவாக்கினரின் பணி. எபிரேய விவிலியத்தில் இறைவாக்கினர் நூல்கள் 31 உள்ளன. அவை முன்னைய தீர்க்கர்கள் (6 நூல்கள்), பின்னைய தீர்க்கர்கள் (15 நூல்கள்) கொண்டன. 

முன்னைய தீர்க்கர்கள் :

1.யோசுவா, 2.நீதிபதிகள், 3.1 சாமுவேல், 4.2 சாமுவேல், 5.1 அரசர், 6.2 அரசர் 

பின்னைய தீர்க்கர்கள் :

இப்பிரிவில் 3 பெரிய தீர்க்கர்கள் நூல்களும் 12 சிறிய தீர்க்கர்கள் நூல்களும் முறையே அடங்கும். அவை: 1.இசையாஸ், 2.எரேமியாஸ், 3.எசேக்கியேல், 4.ஓசே, 5. யோவேல், 6.ஆமோஸ், 7.அப்தியாஸ், 8.யோனாஸ், 9.மிக்கேயாஸ், 10.நாகும், 11.அபாக்கூக், 12.செப்போனியாஸ், 13.ஆகாய், 14.சக்கரியாஸ், 15.மலாக்கியாஸ் 

கெதுவிம் 

கெதுவிம் என்னும் எபிரேயச் சொல் எழுத்துப் படையல் நூல் தொகுப்பு என்னும் பொருள் தரும் (כְּתוּבִים, "Writings"). இத்தொகுப்பில் 13 நூல்கள் உள்ளன. 

1.1 நாள் ஆகமம், 2.2 நாள் ஆகமம், 3.எஸ்ரா, 4.நெகேமியா, 5.எஸ்தர், 6.யோபு, 7.தானியேல், 8.சங்கீதங்கள், 9.பழமொழி, 10.உன்னத சங்கீதம், 11.புலம்பல், 12.ரூத்து, 13.சங்கத்திருவுரை 

தள்ளுபடி புத்தகங்கள்

கத்தோலிக பழைய ஏற்பாட்டில் மேலும் 7 புத்தகங்கள் தரப்படுகின்றன. இவை எபிரேயர்களால் நிராகரிக்கப்பட்டதால் மறுப்பணி சர்ச்சுகள் இவற்றை தங்கள் பதிப்புகளில் சேர்ப்பதில்லை. அவை 1.தொபியாசு, 2.யூதித், 3.ஞானம், 4.சீராக், 5.பாரூக், 6.I மக்கபே, 7.II மக்கபே 

யூதர் (எபிரேயம்: יְהוּדִי, யெகுடி (ஒருமை) יהודים யெகுடிம் (பன்மை), ஆங்கிலம்JewJews or Jewish) எனப்படுவோர் இசுரவேலர் அல்லது எபிரேயர் என்ற இனமதக் குழு மக்களைக் குறிக்கும். இவர்கள் யூதம்என்ற மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

யூதர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் மத, இன ரீதியாக அடக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்று, உலகில் மொத்தம் 12 முதல் 14 மில்லியன்கள் வரையில் யூத இன மக்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[8][9] . இவர்களில் 42.5 வீதமானோர் (5.7 மில்லியன்) இஸ்ரேலிலும், 39.3 வீதமானோரும் (5.3 மில்லியன்) ஐக்கிய அமெரிக்காவிலும் (2010) வாழ்கிறார்கள். மீதமானோர் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

விவிலியக் குறிப்புப்படி, யூதரின் மூதாதையர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆபிரகாம்,ஈசாக்குயாக்கோபு ஆகிய முதுபெரும் தந்தை ஆவார். யூதா என்னுன் எபிரேயச் சொல்லில் இறை புகழ்என்னும் பொருள் அடங்கியுள்ளது (காண்க: தொடக்கநூல் [ஆதியாகமம்] 29:35).

சாலமோன் மன்னர் காலம் வரை யூத மக்களின் நாடு ஒரே நாடாக இருந்தது. பின்னர் வட பகுதி இசுரயேல்(இஸ்ராயேல், இசுரவேல்) என்றும் தென் பகுதி யூதா என்றும் அழைக்கப்பட்டன. யாக்கோபின் நான்காம் மகனாகிய யூதாவின் சிறப்புப் பெயரே இசுரயேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

யாவே (Yahweh) அல்லது யெகோவா (Jehovah) என்பது கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் தங்களது கடவுளின் எபிரேயப் பெயராக ஏற்றுக்கொள்கின்றார்கள். இது יהוה (யஹ்வே) என்ற எபிரேய மொழிப் பதத்தின் தமிழ் எழுத்துப் பெயர்ப்பாகும். எபிரேய மொழியில் உயிர் எழுத்துகள் கிடையாது. அது மெய்யெழுத்துகள் மட்டுமே கொண்டு எழுதப்படுகிறது, வாசிக்கும் போது தேவையான உயிரெழுத்துக்கள் சேர்த்து வாசிக்கப்படும். யெஹ்வே, யெகோவா என்பது இறைநாமம்/திருநாமம்[1].

இறைவனின் திருநாமமான "யாவே", எபிரேய மொழியில் "இருக்கிறவர்" (The Being) அல்லது "வாழ்கிறவர்" என்று பொருள்படும்[2]. (கடவுள் மோசேயைநோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார். மேலும் அவர், ″ நீ இஸ்ரவேல் மக்களிடம், இருக்கின்றவர் நானே என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்″ என்றார்.)

எபிரேய மொழியில் "எஹ்யே அஷெர் எஹ்யே" என்றால் "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" / "முன்பு இருந்த, இப்போது இருக்கின்ற, இன்னும் இருக்கப்போகின்றவர்" / முக்காலமும் கடந்தவர் என்று பொருள்படும்..

தமிழ்க் கிறிஸ்தவ விவிலியங்கள் இறைவனை கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடுகின்றன. இவ்வாறு கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடப்படும் சொல், மூல மொழியான எபிரேயத்தில் יְהֹוָה என்று இறைவனைக் குறிக்கும் நான்கெழுத்து வார்த்தையாகும். இதுவே ஆங்கிலத்தில் "YHWH" எனக் குறிக்கப்படுகிறது.

எபிரேய மொழிப்பிரதிகளில் இறைவனின் பெயர் நான்கு மெய்யெழுத்துக்களால் எழுதப்பட்டு அடோனை (ஆண்டவர்) என்று வாசிக்கப்படவேண்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சில எபிரேய மொழிப்பிரதிகளில் பிரதிகளில், 'அடோனை' என்பதற்குப் பதிலாக "ஹஷெம்" (திருநாமம்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் சில இடங்களில் திருநாமத்தின் நான்கெழுத்து வார்த்தையுடன் அடோனையும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களில் திருப்பெயர் "ஏலோஹிம்" என்று வாசிக்கப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்போல, திருப்பெயரின் நான்கு மெய்யெழுத்துக்களையும் ஏலோஹிமில் உள்ள உயிரெழுத்துக்களையும் இணைத்தால் கிடைப்பது "யெஹோவி".

யெருசலேம் தேவாலயத்தின் கருவறையில் பணியாற்றிய ஆசீர் அளிக்கும் குருக்களும், கோயில் தலைமை குருவும் (யோம் கிப்பூர் அல்லது கழுவாய் திருநாளின்போது) மட்டுமே திருநாமத்தை உச்சரிக்க அனுமதிக்கப்பட்டனர். தேவாலயம் இடிக்கப்பட்டபின் திருநாமம் உச்சரிக்கப்படவில்லை.

பைபிள்: ஒரே தேவனை/கடவுளைப் (யாவே) பற்றியும் அந்த தேவனின் பரிசுத்தத்தைப் பற்றியும் கூறுகிறது. "நான் பரிசுத்தமாக இருப்பதைப்போல நீங்களும் பரிசுத்தராக இருங்கள்" என்கிறது. யாவே பெயர், பைபிளில் 7000 தடவைகள் எழுதப்பட்டுள்ளது.

யெகோவாவின் சாட்சிகள் எனும் ஒரு சமயப்பிரிவு காலப்போக்கில் இப்பெயரில் உருவானது. பலரால் இச்சமயம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்த கொடிய உலகம் இறைவனால் மீண்டும் சொர்க்கமாக மாற்றப்படும் என்று இவர்கள் நம்புக்கின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஜெஹோவா என்னும் பெயர்வடிவம் எபிரேய மூலச் சொல்லான יהוה (YHWH) என்னும் "நாலெழுத்து" வடிவப் பெயரின் (Tetragrammaton) திபேரிய ஒலிப்பின் (יְהֹוָה) இலத்தீன் உருமாற்றுச் சொல் ஆகும். [1][2]

எபிரேய விவிலியத்தில் கடவுளைக் குறிக்கப் பயன்படும் ஜெஹோவா (யாவே - יְהֹוָה) என்னும் சொல்லானது, மரபுவழி வருகின்ற மசோரெத்திய பாடத்தில் (Masoretic Text) 6,518 முறை வருகின்றது. மேலதிகமாக ஜெஹோவி (Jehovih) (יֱהֹוִה) என்னும் வடிவத்தில் 305 தடவை வருகிறது.[3] ஜெஹோவா என்னும் ஒலிவடிவம் கொண்ட பெயரைப் பயன்படுத்தும் மிகப் பழமையான இலத்தீன் விவிலிய பாடம் 13ஆம் நூற்றாண்டைச் சாரும்.[4]



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

29 நவம்பர் 1947 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிரித்தானிய பாஸ்தீனத்தின பிரிப்பினை நடைமுறைப்படுத்த சிபார்சு செய்தது. 14 மே 1947 இல் உலக சீயொனிச அமைப்பின்[8]செயற்படுத்தல் தலைவர் மற்றும் இசுரேலுக்கான யூத முகவர் அமைப்பின் தலைவருமான டேவிட் பென்-குரியன் "இசுரேல் தேசத்தில் இசுரேலிய நாட்டின் உருவாக்கம், இசுரேல் நாடு எனப்படும்" எனபிரகடனப்படுத்தினார். இச் சுதந்திரப் பிரகடனம் 15 மே 1948 அன்று பிரித்தானிய பலஸ்தீன கட்டளையமைப்பை நீக்கியது.[9][10][11] அடுத்த நாள் அருகிலுள்ள அரபு நாடுகள் இசுரேல் மீதுபடையெடுக்க இசுரேலிய படைகள் அவற்றுடன் சண்டையிட்டன.[12] அதிலிருந்து இசுரேல் அருகிலுள்ள அரபு நாடுகளுடன் சில போர்கள் ஊடாக சண்டையிட்டு வருகின்றது.[13] இதனூடாக இசுரேல் மேற்குக்கரை, சீனாய் தீபகற்பம் (1967 முதல் 1982 வரையில்), தென் லெபனானின் பகுதிகள் (1982 முதல் 2000 வரையில்), காசா கரை கோலான் குன்றுகள் என்பவற்றைக் கைப்பற்றியது. இவற்றிலிருந்து சில பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

இசுரேல் தேசம்சீயோன்யூதேயா ஆகிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டன.[28] இசுரேலின் குடிமக்கள் இசுரேலியர் என அழைக்கப்படுவர் என வெளிவிவகால அமைச்சு அறிவித்தது.[29]

இசுரேல் தேசம்இசுரயேலின் பிள்ளைகள் ஆகிய பெயர்கள் விவிலிய இசுரயேல் அரசு பற்றியும் முழு யூத அரசு பற்றியும் குறிக்கப் பயன்பட்டது.[30] இசுரேல் எனும் பெயர் குலப்பிதாவாகிய யாக்கோபுவை (எபிரேயம்: யிஸ்ராஎல்இஸ்ராஇல்கிரேக்கம்:Ἰσραήλ இஸ்ராயல்; "கடவுளுடன் போரிட்டவர்"[31]) குறிக்கப் பயன்பட்டது. எபிரேய விவிலியத்தின்படி, அவர் கடவுளின் தூதனுடன் மல்யுத்தம் செய்து வென்ற பின் அப்பெயர் அவருக்கு கிடைத்தது.[32] யாக்கோபின் பனிரெண்டு மகன்களும்இசுரயேலரின் மூதாதையர்கள் ஆவர். இவர்கள் இசுரேலின் பனிரெண்டு குலங்கள் அல்லது இசுரயேலின் பிள்ளைகள் எனவும் அழைக்கப்படுவர். யாக்கோபும் அவர் மகன்களும் கானானில் வாழ்ந்தாலும் பஞ்சத்தின் நிமித்தம் எகிப்துக்கு செல்ல கட்டாயமாக்கப்பட்டு, அவர்களின் நான்காம் தலைமுறை மோசே வரை அங்கு வாழ்ந்தனர்.[33] மோசே தலைமையில் இசுரயேலர் கானானுக்குத் திரும்பினர். ஆரம்ப தொல்பொருளாய்வுப் பொருள் மெனெப்தா நடுகலில் "இசுரேல்" என்ற சொல்லைக் கொண்டுள்ளது. பண்டைய எகிப்தின் இந்நடுகல் கி.மு. 13ம் நூற்றாண்டைக்குரியது.[34]

இது யூதம், கிறித்தவம், இசுலாம், பகாய் ஆகிய ஆபிரகாமிய சமயங்களுக்கு புனிதமாக இருப்பதால் திருநாடு எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதி யூதேயா, சமாரியா, தென் சிரியா, சிரியா பாலத்தீனா, எருசலேம் பேரரசு, இதுமேயா மாகாணம், கோலே-சிரியா, ரெட்டேனு மற்றும் கானான் உட்பட்ட பல பெயர்களால் பல நூற்றாண்டுகளிலும் அழைக்கப்பட்டுள்ளது.

 

பழங்காலம்[தொகு]

 
இசுரயேல் அரசு, கி.மு. 11ம் நூற்றாண்டு

தொல்லியல் சான்றின்படி, எகிப்திய நினைவுச் சின்னமாகிய "மெனெப்தா நடுகல்" என்று குறிப்பிடப்படும் கல்லில் உள்ள ஒரு குறிப்பு முதன்முதலில் இசுரேலியல் என்ற சொல்லைக் குறிப்பிட்டது. இந்நினைவுக்கல் 10 அடி உயரம் கொண்டதாகும். இது கி.மு. 1211 ஆண்டினது என்று கணித்துள்ளனர்.[35]மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் 'இசுரேல்' என்னும் நிலத்தைத் தங்கள் தாயகமாக, புனித நிலமாக கருதி வந்துள்ளனர். தோராவின்படி, யூதர்களின் பிதாப்பிதாக்களான ஆபிரகாம்ஈசாக்குயாக்கோபு ஆகியவர்களுக்கு கடவுள்நாட்டை வாக்களித்ததாக நம்புகின்றனர்.[36][37] விவிலியத்தின் அடிப்படையில், அம்மூன்று பிதாப்பிதாக்களின் காலம் கி.மு 2ம் மில்லேனியத்தின் ஆரம்பம் என கருதப்படுகின்றது.[38] முதலாவது இசுரயேல் அரசு தோராயமாக கி.மு. 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இசுரேலிய முடியாட்சியும் அரசும் சிறிதும் பெரிதுமாய் இடைவெளி விட்டு நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர்.[39][40][41][42]

வட இசுரேலிய அரசு கி.மு 722 இல் வீழ்ச்சியுற்றது. தென் யூத அரசு அசிரிய ஆட்சி வரை நிலைத்தது. பபிலோனியாவருகையால் கி.மு. 586 இல் யூத அரசு வெற்றி கொள்ளப்பட்டது.

முற்காலம்[தொகு]

பின்னர் வந்த அசிரியபாபிலோனியபாரசீககிரேக்கரோமானியபைசாந்திய அரசுகளின் ஆட்சியில் சிறிதும் பெரிதுமாய் யூதர்கள் இசுரேலை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் யூதர்களின் எண்ணிக்கை அங்கே மிகவும் அருகிவிட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 யெரூசலம் அல்லது எருசலேம் (Jerusalem) என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது.

எருசலேம் என்பது எபிரேய மொழியில் יְרוּשָׁלַיִם (யெருசலையிம்) என்றும், அரபியில் அல்-குத்சு (القُدس) என்றும் அழைக்கப்படுகிறது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள்[1].

கிழக்கு எருசலேமையும் உள்ளடக்கிப் பார்த்தால் எருசலேம் நகரம் இசுரேல் நாட்டின் மிகப் பெரிய நகரம் என்பது மட்டுமன்றி, மிகப்பெரும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள நகரமும் ஆகும். இந்நகரில் 801,000 மக்கள் வாழ்கின்றார்கள். இதன் பரப்பளவு 125 சதுர கி.மீ (48.3 சதுர மைல்) ஆகும். பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரம் யூதேய மலைப்பகுதியில், மத்தியதரைக் கடலுக்கும் சாக்கடலின் வடக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது.[2][3] ஆபிரகாமிய சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற யூத சமயம்கிறித்தவ சமயம்இசுலாம்ஆகிய மூன்று மதங்களுக்கும் எருசலேம் ஒரு புனித நகராக உள்ளது.

எருசலேமின் நீண்டகால வரலாற்றின்போது அந்நகரம் இருமுறை அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது; 23 தடவை முற்றுகையிடப்பட்டது; 52 தடவை தாக்குதலுக்கு உள்ளானது; 44 தடவை கைப்பற்றப்பட்டது.[4]நகரத்தின் பழைய பகுதியில் கி.மு. 4ஆம் ஆயிரமாண்டிலிருந்தே மக்கள் குடியேற்றம் இருந்துவந்துள்ளது.[5]இவ்வாறு எருசலேம் உலகப் பழம் நகரங்களுள் ஒன்றாக எண்ணப்படுகிறது. மதில்சுவர்களைக் கொண்ட பழைய எருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்து (World Heritage) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.[6] இது நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது. அவை: அர்மீனியக் குடியிருப்புகிறித்தவக் குடியிருப்புயூத குடியிருப்பு,முஸ்லிம் குடியிருப்பு என்பனவாகும்.[7]

 

 

சொல் பொருள்[தொகு]

இந்நகர் உருசலிமம் (Rušalimum/Urušalimum) (சலீமின் அத்திவாரம்)[8] என அழைக்கப்பட்டதாக புராதன எகிப்தின் இரண்டு கி.மு. 19ம், 18ம் நூற்றாண்டு குறிப்புக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது[9][10]

வரலாறு[தொகு]

எருசலேம் 5000 வருட வரலாற்றைக் கொண்டது.[11][12] இது சீயோசிய மற்றும் பாலஸ்தீன தேசியவாதத்திற்கு காரணமுமாகும். உதாரணத்திற்கு: இசுரேலிய தேசியவாதிகளாக சீயோனியர்களுக்கு யூத கால வரலாறு முக்கியத்துவமிக்கது.[13][14] அதேவேளை இசுலாமியர் மற்றும் யூதரல்லாதவர்களுக்கு அந்நகரின் வரலாறு முக்கியத்துவமிக்கது. அவர்கள் தங்கள் முன்னோர் இவ்விடத்தில் வாழ்ந்ததாகக் கருதுகின்றனர்.[15][16]

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

எருசலேமின் வரலாற்றுக் காலங்களின் மேலோட்டம்[தொகு]

 
 
எகிப்திய புதிய பேரரசு
 
 
ஜெபுசேயர்
 
 
இசுரயேல் - யூதேயா (தாவீதின் குலம்)
 
 
புது அசீரியர்
 
 
புது பாபிலோனியர்
 
 
மசிடோனியர்கள்
 
 
சசனிட் பேரரசு
 
 
அயூபிட் பேரரசு
 
 
மம்லுக் சுல்தான்
 
 
இசுரேல் மற்றும் யோர்தான்
 
|
கி.மு. 2000
|
கி.மு. 1500
|
கி.மு. 1000
|
கி.மு. 500
|
கி.பி. 0
|
கி.பி. 500
|
கி.பி. 1000
|
கி.பி. 1500
|
கி.பி. 2000
|
கி.பி. 2500

     யூதர்      இசுலாமியர்      கிறித்தவர்      யோர்தான் ஆக்கிரமிப்பு      பிறர்

 

 

யூதர்களின் புனித நகரம்[தொகு]

 
எருசலேம்: அழுகைச் சுவர் (மேற்குச் சுவர்) விரிநோக்கு; பின்னணியில் பாறைக் குவிமாடமும் (இடப்புறம்), அல்-அக்சா மசூதியும் (வலப்புறம்).

பழைய ஏற்பாட்டின்படிஇசுரயேலின் மன்னர் தாவீது எருசலேம் நகரை இசுரயேல் ஐக்கிய இராச்சியத்தின் தலைநகராக சுமார் கி.மு. 1000 ஆண்டளவில் நிறுவினார். தாவீது மன்னரின் மகன் சாலமோன் எருசலேமில் புகழ்வாய்ந்த கோவிலைக் கட்டியெழுப்பினார். இவ்வாறு எருசலேம் யூதா நாடு மற்றும் இசுரயேல் நாடு இரண்டும் இணைந்த ஐக்கிய நாட்டுக்கு மாபெரும் புனித நகராக மாறியது.[17]

 
எருசலேம் - கோவில் மலைத்தோற்றம்: முன்பகுதியில்மேற்குச் சுவர், பின்னணியில்பாறைக் குவிமாடம்.

கிறித்தவர்களின் புனித நகரம்[தொகு]

புதிய ஏற்பாட்டின்படிஇயேசு கிறித்து சுமார் கி.பி. 30இல் எருசலேமுக்கு வெளியே சிலுவையில் அறையுண்டு இறந்தார். அவர் உயிர்நீத்த சிலுவையைகான்ஸ்டன்டைன் மன்னனின் தாய் புனித ஹெலென் என்பவர் கி.பி. 300 அளவில் எருசலேமில் கண்டெடுத்தார். இவ்வாறு கிறித்தவர்களுக்கு எருசலேம் புனித நகரமாயிற்று.

இசுலாமியரின் புனித நகரம்[தொகு]

 
எருசலேம்: கோவில் மலைமேல் அமைந்த பாறைக் குவிமுக மாடம்.

மெக்காமதீனா ஆகிய நகரங்களுக்கு அடுத்த நிலையில் இசுலாமியர் எருசலேமைத் தங்கள் புனித நகராகக் கருதுகின்றனர். கி.பி. 610ஆம் ஆண்டில் இசுலாமியர் எருசலேமை நோக்கித் தொழுகை நடத்தினார்கள். 620இல் முகம்மது நபி எருசலேமிலிருந்து விண்ணகப் பயணம் சென்று திரும்பினார் என்று இசுலாமியர் நம்புகின்றனர்.

இவ்வாறாக, எருசலேமின் பழைய நகர்ப்பகுதி உலகப் பெரும் சமயங்களுள் மூன்றினுக்குப் புனித நகராக விளங்குகிறது. அப்பகுதியின் பரப்பளவு 0.9 சதுர கி.மீ (0.35 சதுர மைல்) மட்டுமே ஆகும். அங்கே புனித இடங்களாக இருப்பவை:கோவில் மலை, "அழுகைச் சுவர்" என்று அழைக்கப்படுகின்ற மேற்குச் சுவர்திருக்கல்லறைத் தேவாலயம்பாறைக் குவிமாடம்அல்-அக்சா மசூதி.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 (செமிடிக் மொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

 
செமிட்டிக்
 
புவியியல்
பரம்பல்:
மத்திய கிழக்குவட ஆபிரிக்கா, மற்றும் கிழக்கு ஆபிரிக்கா
இன
வகைப்பாடு
:
ஆபிரிக்க-ஆசிய
 செமிட்டிக்
துணைக்
குழுக்கள்:
 
கிமு 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தஅமர்னா நிருபங்கள்

செமிட்டிக் மொழிகள் (Semitic languages) என்பது 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மொழிகளின் குடும்பமாகும். பெரும்பாலும் நடுகிழக்குவடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் கிழக்கு ஆபிரிக்காபகுதிகளில் பேசப்படுகிறது. செமிட்டிக் மொழிகள் ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் வடகிழக்கு துணைப்பிரிவில் அடங்குகின்றன. மேலும், இக்குடும்பத்தில் ஆசியாவில் பேசப்படும் ஒரே மொழிக் கிளையாக செமிட்டிக் மொழிகள் விளங்குகின்றன.

இன்று மிகக் கூடுதலாக பேசப்படும் செமிட்டிக் மொழி அரபு மொழியாகும். 270 மில்லியன் மக்கள் அரபு மொழியையும், 27 மில்லியன் மக்கள் அம்ஃகாரிக் மொழியையும் 7 மில்லியன் மக்கள் எபிரேய மொழியையும்பேசுகின்றனர். செமிடிக் மொழிகள் உலகின் முதலாவது எழுத்து வடிவை கொண்ட மொழிகளுள் ஒன்றாகும். அக்காத் மொழியின் எழுத்து முறைமை கிமு 3வது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. செமிடிக் என்ற பெயர்ஊழிவெள்ளத்திலிருந்து தப்பியதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள நோவாவின் மகனான சேம் என்பரை முதலாக கொண்டு இடப்பட்டதாகும்.

குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

விவிலிய வரலாறு[தொகு]

விவிலியத்திலுள்ள நூல்கள் வரலாற்றின் வெவ்வேறு கட்டங்கள் பற்றி எடுத்துக் கூறுகின்றன. விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்றைப் பின்வருமாறு சுருக்கலாம்:

  1. கடவுள் உலகையும் அதிலுள்ள சகலத்தையும் படைத்தார். மனிதனை அவர் தம் சாயலாக, ஆணும் பெண்ணுமாகப் படைதார். உலகம் பாவமற்றிருந்தது. மனிதர் கடவுளை விட்டு நீங்கி பாவம் செய்கிறார்கள்.
  2. மனிதரைப் பாவத்திலிருந்து மீட்க கடவுள் மனிதருக்கு விளங்கும் வகையில் தம்மையே அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
  3. கடவுள் ஆபிரகாமை அழைத்து அவருக்குப் புதியதொரு நாட்டைக் கொடுக்கிறார். அவருக்குப் பெரிய சந்ததியைக் கொடுப்பதாகவும் வாக்களிக்கிறார்.
  4. கடவுள் மோசே வழியாகச் சட்டங்களை கொடுக்கிறார்.
  5. இஸ்ரயேல் மக்கள் பாவம் செய்வதும் பின்னர் கடவுளிடம் திரும்புவதுமாக சிலகாலம் கழிகிறது. அவர்கள் கடவுளின் சட்டங்களை மென்மேலும் அறிந்துகொள்கின்றார்கள்.
  6. இயேசு இவ்வுலகில் பிறக்கிறார். மோயீசனின் சட்டங்களைத் தெளிவுபடுத்தி அன்பு என்னும் புதிய சட்டத்தை கொடுக்கிறார்.
  7. இயேசுவின் சிலுவை மரணமும் அவருடைய உயித்தெழுதலும்.
  8. இயேசுவின் சீடரும் தொடக்க காலக் கிறித்தவரும்.
 
அமெரிக்க காங்கிரஸ் நூலகத்திலுள்ள குட்டன்பெர்க் விவிலியம்

பழைய ஏற்பாடு[தொகு]

 
தமிழில் பெயர்க்கப்பட்டு 1715 இல்தரங்கம்பாடியில்அச்சிடப்பட்ட விவிலியத்தின் முதல் நூலாகியதொடக்க நூலின் முதல் பக்கம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1968விழா மலரில்
 
1723 இல்தரங்கம்பாடியில்வெளியிடப்பட்ட முதல் தமிழ் விவிலியம்

இது உலகம் படைக்கப்பட்டது வரலாறு தொடங்கி, இயேசு இவ்வுலகிற்கு வரும் வரையானா காலப்பகுதியில் கடவுள் மக்களுடன் தொடர்பு கொண்ட முறைகளையும், இஸ்ரயேலரின் வரலாற்றையும் கூறுகிறது. இதில் காணப்படும் இணைத்திருமுறை நூல்களைச் சில கிறித்தவப் பிரிவினர் அதிகாரப்பூர்வமாக ஏற்பதில்லை.

  • பொதுவான நூல்கள்: இவை எல்லா கிறிஸ்தவ பிரிவினரின் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டிலும் காணப்படும் நூல்களாகும். மொத்தம் 39 நூல்கள் இதில் அடங்கும். சீர்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை மட்டுமே தமது பழைய ஏற்பாட்டில் அதிகாரப்பூர்வமானவையாக ஏற்கின்றன.
    • திருச்சட்ட நூல்கள் 5
    • வரலாற்று நூல்கள் 12
    • இலக்கிய நூல்கள் 5
    • இறைவாக்கினர் நூல்கள் 17
  • கத்தோலிக்க விவிலியம்: பொதுவான நூல்களுக்கு மேலதிகமாக சில நூல்கள் கத்தோலிக்க விவிலியத்தில் காணப்படுகின்றன. இவை மொத்தம் 7 நூல்களாகும். இவை எருசலேமின் இரண்டாவது கோவில் கால நூல்களாகும். பொதுவான நூல்களையும் சேர்த்து மொத்தம் 46 நூல்கள் கத்தோலிக்க விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. மேலும் கத்தோலிக்க விவிலியத்தில், சீர்திருத்த திருச்சபைகளுடன் பொதுவாக கொண்டுள்ள 39 நூல்களில் சில மேலதிக அதிகாரங்களும் காணப்படுகின்றன.
  • மரபு வழி திருச்சபை விவிலியம் : இவை கத்தோலிக்க பழைய ஏற்பாட்டு நூல்களுக்கு மேலதிகமாக 5 நூல்களை ஏற்றுக்கொள்கின்றன. மொத்தம் 51 நூல்கள் மரபு வழி பழைய ஏற்பாட்டிலுண்டு.

புதிய ஏற்பாடு[தொகு]

புதிய ஏற்பாடு இயேசுவின் பிறப்புடன் ஆரம்பிக்கிறது. இவ்வேற்பாட்டில் 27 நூல்கள் காணப்படுகின்றன. இவையனைத்திலும் இயேசு மையகர்த்தாவாக இருக்கிறார். கிறிஸ்தவத்தின் எல்லா உட்பிரிவினரும் இவற்றை மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். புதிய ஏற்பாடு விவிலியத்திலுள்ள நூல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 பல்லாயிரம் ஆண்டுக்கால அளவில் எழுதப்பட்ட நூல் :

ஆம் ஓராண்டு,  ஈராண்டுகள் அல்ல..பல்லாயிரம் ஆண்டுகளாக எழுதப்பட்ட நூல்.
(Sa rédaction remonte à plusieurs milliers d'années 'Les Mystères de la Bible' par Vincent ALLARD & Guy LES BAUX  ed. De Vecchi).

இதற்கு 'பைபிள்' என்ற பெயர் எப்படி வந்தது தெரியமா? இதோ விளக்கம்.

Bible என்னும் சொல்லுக்கு மூலமாகிய கிரேக்கச் சொல் Biblion என்பதாகும். பிப்ளோசு (Biblos) என்பது இன்றைய இலெபனான் நாட்டிலுள்ள ஒரு துறைமுகப்பட்டினம். புத்தகம் எழுதப் பயன்படும் "பப்பைரசு" (papyrus) என்னும் ஒரு வகை நாணல் புல் விற்கப்பட்டது அந்த பிப்ளோசு நகரத்தில்தான். Papyrus என்னும் சொல்லிலிருந்தே paper என்னும் ஆங்கிலச் சொல் பிறந்தது என்பதும் கருதத்தக்கது.

பப்பைரசு விற்கப்பட்ட பிப்ளோசு நகரத்தின் பெயரால் Biblion என்னும் சொல் கிரேக்க மொழியில் நுழைந்து, புத்தகத்தை (Book) குறிப்பதாயிற்று. Biblion என்பது பன்மையில் Biblia என்றாகும். இந்தச் சொல் இலத்தீன் மொழியில் ஒருமையில் வழங்கி, The Book என்னும் பொருள் தருவதாயிற்று. கிறித்தவர்கள் தம் சமய நூலாகிய விவிலியத்தை ஒப்புயர்வற்ற ஒன்றாகக் கருதி, எந்த ஓர் அடைமொழியுமின்றி "நூல்" (The Book) என்றே அழைக்கலாயினர்.

கிறித்தவம் தமிழகத்தில் பரவியபோது, "பைபிள்" என ஆங்கிலத்தில் குறிப்பிடும் நூல் தொகுப்புக்கு இணையான தமிழ்ச் சொல்லை உருவாக்கும் தேவை எழுந்தது. பல கிறித்தவ சபையினர் இணைந்து உருவாக்கி 1995 இல் வெளியான தமிழ் பொது மொழிபெயர்ப்பின் தலைப்பு திருவிவிலியம் என அமைந்துள்ளது.[1]

ஆனால் மேலைநாட்டுக் கிறித்தவம் தமிழ்ப் பண்பாட்டைச் சந்தித்த 16ஆம் நூற்றாண்டில் இருந்தே தமிழ் விவிலியம் பல பெயர்களால் வழங்கப்பட்டது என வரலாற்றிலிருந்து தெரிகிறது. இதிலிருந்து மொழி வள்ர்ச்சியும் மொழி வழக்கு மாறுபாடுகளும் ஏற்பட்டதையும் வரலாறு கூறுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

காப்பியமும் விவிலியமும் 

தேம்பாவணிக் காப்பியத்தை ஆழ்ந்து கற்பவர்கள், இந்நூல் விவிலியத் திருமறைச் செய்திகளை, சூசையப்பர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, காப்பியப் போக்கில் உரைக்க எழுந்ததே என எளிதில் உணரலாம். அந்த அளவுக்குத் தேம்பாவணி, விவிலியத் திருமறையின் சாரமாக விளங்குகிறது. காப்பியம் முழுவதும் விவிலிய மறையின் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு எனும் இரு பிரிவுகளிலும் அமைந்துள்ள வரலாற்றுக் கதைகளும், உண்மைகளும் பல முறைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர், பல இடங்களில் விவிலியத் திருமறையை விதித்த நுண் அருநூல் வேதம் (கடவுள் வகுத்த நுட்பமான அரிய நூல்), திவ்வியநூல் (தெய்வீக நூல்), பரமன் அருளிய சுருதிநூல் (கடவுள் கொடுத்த திருமறை நூல்) என்றெல்லாம் பாராட்டுகிறார். திருமறைக் கருத்துகளை அம்மறையைப் பின்பற்றுபவர்கள் ஆழமாக உணர்ந்து கொள்ளவும் பிறசமயத்தினரும் தெரிந்து கொள்ளவுமே தேம்பாவணி படைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட திருமறை  விளக்கங்களே நூலில் நிறைந்து காணப்படுகின்றன. சில சான்றுகளைக் காண்போம்.

2.4.1 விவிலியக் கிளைக்கதைகள்

விவிலியத்தில் இடம்பெறும் வரலாற்றுக் கதைகள் தேம்பாவணிக் காப்பியத்தில் பல நிலைகளில் எடுத்துரைக்கப்படுகின்றன. விவிலியக் கதைகள், தக்க நேரத்தில் உண்மைகளை வெளிப்படுத்தி, காப்பிய மாந்தரை ஊக்குவிப்பதற்காகவே காப்பியத்தில் கிளைக்கதைகளாக எடுத்துரைக்கப் படுகின்றன. சான்றாக, ஏரோது அரசனுக்குப் பயந்து தெய்வக்குழந்தையை ஊர்விட்டு ஊர் எடுத்துச்செல்ல வேண்டியநிலை, சூசைக்கும் மரிக்கும் மனச்சோர்வைத் தருகிறது. அப்போது உடன் வரும் வானவர்கள் இறைவனின் பேராற்றலையும் இறைநீதியின் பெருவன்மையையும் விவிலியக் கதைகள் வழியாக அவர்களுக்கு எடுத்துரைக்கின்றனர்.

● மோயீசன் கதை 

எகித்து அரசன் பாரவோன் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இசுரவேலரைப் பலவாறு கொடுமை செய்தான். மக்கள் அல்லற்பட்டு அழுதனர். அப்போது இறைவன் அவர்கள் கூக்குரலைக் கேட்டு, மோயீசன் என்னும் ஒரு தலைவனை உருவாக்கினார். அவன் கையில் ஒரு கோலையும் தமது ஆற்றலையும் வழங்கினார். எனினும் பாரவோன் மன்னன் இசுரயேல் மக்களை நாட்டை விட்டு வெளியே விடவில்லை. அரசனைப் பணியவைக்க, இறைவன் அவர்களுக்கு வெப்பமிக்க இரத்தம், தவளை, உண்ணிகள், ஆலங்கட்டிமழை, செறிந்த இருள் முதலிய ஒன்பது துன்பங்களையும் இறுதியில் பத்தாவதாக எகித்தியரின் தலைப்பிள்ளைகளின் இறப்பையும் கட்டளையிட்டார். பிறகுதான் பாரவோன் மன்னன் அவர்களை விடுவித்தான். இந்த வரலாற்றை விரித்துரைத்து வானவர்கள், திருக்குடும்பத்தினருக்கு ஊக்கமூட்டுகின்றனர்.

● சேதையோன் கதை

மேலும் வானவர்கள், சேதையோன் என்ற மாவீரனின் வெற்றி வரலாற்றைச் சூசைக்கு விளக்கிக் கூறுகின்றனர். சேதையோன் ஓர்உழவன். மிக்க வீரம் படைத்தவன். இறைவன் தனது யூத மக்களைப் பகைவர்களிடமிருந்து மீட்க, சேதையோனைப் படைத்தளபதியாகத் தேர்ந்து கொண்டார். இதனை இறைத்தூதன் ஒருவன் மூலம் சொல்லி அனுப்பினார். முதலில் இறைத்தூதனின் அழைப்பை ஐயுற்ற சேதையோன், பின்னர் இறைக்கட்டளையை ஏற்றுக் கொண்டு, தன் யூத மக்களை ஒன்று திரட்டினான். பகையரசரும் ஒன்று திரண்டனர். அவர்களது படையின் பெருக்கமோ அளவிட முடியாதவை. எனினும் இறைவன் செய்த திருவிளையாடலால் சேதையோனுக்கும் அவன் பின்னின்ற யூதருக்குமே வெற்றி கிட்டியது. 32,000 வீரரைத் திரட்டினான். இதனைக் கண்ட இறைவன் 'யான் வெல்வதற்கு இவ்வளவு படை தேவையா?' என எண்ணினார். "போருக்கு அஞ்சுவோர் நீங்கிச் சினம்மிக்க வீரர் மட்டும் நிற்பாராக” எனக் கட்டளையிட்டார். அவருள் 10,000 பேர் நின்றனர். மீண்டும் இறைவன் "ஆற்றின் நீரை நாவால் நக்கி உண்போர் நீங்க, கையால் அள்ளிப் பருகுவோர் நிற்க" என்று கட்டளையிடவும், 3000 பேர் அணி வகுத்தனர். எதனையும் திருவிளையாடலாக நடத்தும் தேவன் போருக்குரிய வேல் எதுவும் இன்றி, ஒவ்வொருவருக்கும் ஓர் எக்காளம், ஒரு மண்பானை, ஒரு விளக்கு ஆகியவற்றைக் கொடுக்குமாறு கூறினார். மூன்று அணியாகப் பிரிந்து பகைவரின் இடத்திற்கு ஓசையின்றிச் சென்றனர். தீபத்தை மறைக்கப் பானையைப் பயன்படுத்தினர். பகைவரிடம் சென்று எக்காள ஒலி எழுப்பிப் பானைகளை உடைத்ததும், திடுக்கிட்டெழுந்த பகைவர் தடுமாறினர். தங்களைத் தாங்களே பகைவரெனக் கருதி, தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொண்டு, தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர்.

● யோசேப்பு கதை

இவ்வாறே, சித்திரக்கூடப் படலத்தில், சூசை முனிவர்களுக்கு விளக்கிக் கூறிய யோசேப்பு எனப்படும் ஆணன் என்பவனின் வரலாறு, நம் உள்ளத்தைக் கவரும் நல்ல கதையாகும். ஆணரன் தன் சொந்த சகோதரர்களாலேயே பகைக்கப்பட்டான்; துன்புறுத்தப்பட்டான். எனினும் அவனது உண்மை, நேர்மை, தூய்மை, இறைப்பற்று முதலியவற்றால் உயர்நிலையை அடைந்தான். இறுதியில் தன்னைப் பகைத்து அழிக்க முயன்ற சகோதரர்களையே காப்பாற்றும் இறைத் தொண்டன் ஆனான் அந்த ஆணன்.

இவ்வாறு பல்வேறு கிளைக்கதைகளாக, விவிலியக் கதைகள் காப்பியத்தில் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் இறைவனின் அளவிட முடியாத கருணையை எடுத்துக்காட்ட விளக்கப்பட்டன.

2.4.2 விவிலியக் கோட்பாடுகள்

விவிலியக் கதைகள் மட்டுமன்று, விவிலிய உண்மைகள்,  கொள்கைகள், கோட்பாடுகள் முதலியனவும் காப்பியத்தில் நன்கு விளக்கப் பெறுகின்றன. சான்றாக விவிலியத் திருமறையின் வழிநின்று, இறைவனின் இயல்புகளைக் காப்பிய ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். சூசையின் வாய்மொழியாக, இறைவனின் ஆறு பண்புகளை எடுத்தியம்பும் பாடல் இதோ:
 

தன்வயத்த னாதல், முதலில னாதல், 
     தகும்பொறி உருவில னாதல் 
மன்வயத் தெல்லா நலமுள னாதல், 
     வயின்தொறும் வியாபக னாதல் 
பின்வயத் தின்றி ஒருங்குடன் அனைத்தும்
     பிறப்பித்த காரண னாதல் 
பொன்வயத் தொளிர்வான் முதலெலா உலகும்
     போற்றுமெய் இறைமையின் நிலையே

(ஞாபகப் படலம், 157)

(தன்வயத்தனாதல் - தானே தனித்து இயங்குதல்; முதலிலனாதல் - தொடக்கம் இல்லாதவன் ஆதல்; பொறி உருவிலனாதல் - வடிவம் இல்லாதவன் ஆதல்; வயின் தொறும் - எல்லா இடத்திலும்; வியாபகன்ஆதல் - பரவிஇருத்தல்)

இதே செய்தியைத் தன்நேரில்லான் தன் வயனாகி என வரும் இன்னொரு பாடலிலும் மீண்டும் கூறி, கற்பார் நெஞ்சில் இந்த உண்மையைப் பதிய வைக்கிறார்.

● பத்துக்கட்டளைகள்

மேலும் விவிலிய மறையில் இறைவன் மனிதகுலம் அனைத்துக்கும் வழிகாட்டியாக, சட்ட விதிகளாக, மோயீசன் வழியாக வழங்கியருளிய பத்துக் கட்டளைகளை முனிவர் எடுத்துரைக்கிறார். இரு கல்லில் அமைந்த பத்துக் கட்டளைகளையும் கவிஞர் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:

மின்னல்லால் நிகர்ப்பரிதோர் 
     எழுத்துத் தீட்டி விதித்திருகல்
என்னல்லால் இறைமையுளார் 
     உமக்கில் லாவீர் எனைமெய்மை
தன்னல்லால் சாட்சிவையீர் 
     திருநாள் ஆடித் தவிர்கில்லீர்
மன்னல்லா ரணமிதென்று 
     ஒருகல் கொள்முவ் வாசகமே

தந்தையாயை வணங்குமின்நீர் 
     கொலையே செய்யீர் தவிர்காம
நிந்தையாய் ஊடுஇல்லீர் 
     கரவீர் பொய்யீர் நிலைப்பிறரில்
சிந்தையாய் இரீர்பிறர்கைப் 
     பொருளை வெஃகீர் தீங்கிதென்று
எந்தையாய்ந் திரண்டாங்கல் 
     தீட்டி வைத்த ஏழ்விதியே


          (சீனயிமா மலைகாண் படலம், 21,22)

(மின்னல்லால் - மின்னலைத் தவிர; திருநாள் - பரிசுத்தமான நாள்;ஒருகல் - முதல் கற்பலகை; மன்னல்லாரணம் - காமநிந்தை,  தீயஒழுக்கத்தால் வரும் பழி; கரவீர் - ஏமாற்ற வேண்டாம்; வெஃகீர் - விரும்பவேண்டாம்; இரண்டாங்கல் - இரண்டாம் கற்பலகை)

இவ்விரு பாடல்களிலும் குறிக்கப்பட்டுள்ள பத்துக் கட்டளைகள் பின்வருமாறு: 
 

1.என்னைத் தவிரத் தெய்வங்கள் ஒருவரும் உமக்கு இல்லை என்று கொள்ளக் கடவீர்.
2.உண்மைக்கே அன்றிப் பொய்மைக்கு ஆணையிட்டு என்னைச் சாட்சியாக வையாதீர்.
3.குறிக்கப்பட்ட திருநாட்களை முறைப்படி கொண்டாடத் தவறாதீர்.
4.தந்தையையும் தாயையும் வணங்குவீர்.
5.கொலையே செய்யாதீர்.
6.தவிர்க்கத்தக்க காமம் பழிப்புக்கு உரியதெனக் கொண்டு அதனோடு உறவாடாதீர்.
7.களவு செய்யாதீர்.
8.பொய் சொல்லாதீர்.
9.பிறர் மனைவி மீது சிந்தையே கொள்ளாதீர்.
10.பிறர் கைப்பொருளை விரும்பாதீர்.


● திருச்சிலுவையின் சிறப்பு

இயேசு பெருமான் மனிதகுலத்தின் உயர்வுக்காக உயிர் நீத்த திருச்சிலுவை, கிறித்தவ நம்பிக்கைக்கு ஆதாரமான அடிப்படையாக விளங்குகிறது. தாம் உயிர்விடப் போகும் சிலுவையைப் பற்றித் திருமகன் தாமே வருணித்துப் பாடும் பாடல் ஒன்றைக் கவிஞர் காப்பியத்தில் அமைக்கிறார்.

ஏரணியே! என்னன்பே! என்னன்பிற்கு இரதமிதே!
சீரணியே! உயர்வீட்டைத் திறக்கும் கோலிதே!இன்பத்து
ஆரணியே! எங்கணும்நான் ஆண்டு ஓச்சும் செங்கோலே!
பேரணியே! எனதுயிரின் பேருயிரே! வாழியவே!

(மீட்சிப்படலம், 30:119)

(ஆரணி - அருமையான ஆபரணமே, ஓச்சும் - ஆட்சி செலுத்தும்)

என்ற இப்பாடலில் வீரமாமுனிவரின் சிலுவைப் பற்றும் வெளிப்படுகிறது. எவ்வாறெல்லாம் இயேசு சிலுவையை நோக்குகிறார் என இப்பாடலில் தெளிவுபடுத்துகிறார். இவ்வாறு பல்வேறு விவிலியக் கோட்பாடுகளையும் உண்மைகளையும் காப்பியத்தில் அமைத்துள்ளார் கவிஞர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard