Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 'நற்செய்தி பரப்பும் ' கருவியாக இனவாதம் அரவிந்தன் நீலகண்டன்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
'நற்செய்தி பரப்பும் ' கருவியாக இனவாதம் அரவிந்தன் நீலகண்டன்
Permalink  
 


 

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20208251&format=html&edition_id=20020825

'நற்செய்தி பரப்பும் ' கருவியாக இனவாதம்

அரவிந்தன் நீலகண்டன்

 

 

'தெற்காசிய கலாச்சார வரலாற்றின் மீது தொடர்ந்து திணிக்கப்பட்டு வரும் எளிமையான பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றியல் கருத்துக்களை மிக வன்மையாக மறுதலிக்கிறோம். இன்றும் நிலவி வரும் இத்தகைய விளக்கங்கள் ஐரோப்பிய இனமுதன்மை, காலனியாதிக்கம், இனவாதம் மற்றும் செமிடிக் வெறுப்பு போன்ற அம்சங்களால் குறுகிய தன்மை பெற்று விளங்குகின்றன. தெற்காசிய பண்பாட்டு வரலாறு குறித்து வெளிவந்துள்ள அகழ்வாராய்வுத் தகவல்களை புறக்கணித்து பாரபட்சமாக பழைய ஊகங்களையேப் பற்றித் திரியும் போக்கு வரும் நூற்றாண்டிலாவது மாற வேண்டும் ' 1 -ஜேம்ஸ் ஷாஃபர்

 

மனித வரலாற்றில் ஆதாரமற்ற ஊகங்களின் அடிப்படையில் எழுந்த பல கோட்பாடுகள் மனித அறிதலின் பெரும் பயணத்தில் மறுதலிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆரிய இனவாதக் கோட்பாடு போல மிகத் தெளிவாக மிக முழுமையாக உடைத்தெறியப் பட்ட கோட்பாடுகள் மிகச்சிலவே. எனினும் ஜேம்ஸ் ஷாஃபர் குறிப்பிடுவது போல மிகச் சிலக் கோட்பாடுகளே இவ்வாறு மறுதலிக்கப் பட்ட பின்பும், தன் ஆதாரமற்ற தன்மை வெளியானபின்பும், வெகு ஜன கல்வியிலும், சில அறிஞர்கள் மத்தியிலும், ஊடகங்களிலும் உயிர் வாழ்ந்துள்ளன. 'ஆரிய இன ' வாதம் அடிப்படையற்ற ஒரு உருவாக்கம். இன்று அது ஒரு நிரூப்பிக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏதுமற்று உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு பொய்.

 

இவ்வாறு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ள பொய்களிலும் கூட, ஆரிய இனவாதம் போன்று மனித குலத்திற்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய 'ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பொய்கள் ' ஏதுமில்லை. பலகோடி இந்தியர்களின் அடிமை நிலையினை நியாயப்படுத்திய இக்கொள்கையின் மரபுப் பிறழ்ச்சி ஹிட்லரின் 'இறுதித் தீர்வு 'களில் ஐரோப்பாவையும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. இலங்கையில் இன்றும் மனித இரத்தம் சிந்தக் காரணமாயுள்ளது. ஆரிய இன ஆராய்ச்சியில் தொடங்கிய இத்தகைய மேற்கத்திய இனவாத ஆராய்ச்சிகளின் விளைவுகள் ஆப்பிரிக்காவில் இன்றும் இனப்படுகொலைகளை நடத்தி தம் இரத்தப் பசியை தீர்த்து வருகின்றன. இத்தகைய இன ஆராய்ச்சிகள் வெறும் அறிவு தாகம் தீர மேற்கத்திய காலனிய அறிஞர்களால் நடத்தப்பட்டவை அல்ல. 'நற்செய்தியை உலகமெங்கும் பரப்ப ' கிளம்பிய மிஷனரி ஆய்வாளர்களின் மூளைகளில்தான் மனிதர்களைப் பிரிக்கும் இந்த இனக் கோட்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டிஷ் கல்விமுறை மூலம் பலகோடி இந்திய குழந்தைகளின் மனங்களில் விதைக்கப்பட்ட இக்கோட்பாடு, இந்தியர்களிடையே பொறாமை, நம்பிக்கையின்மை மற்றும் வெறுப்பினை பரப்பும் கருவியாகச் செயல்பட்டது. 'வெள்ளைத் தோல் ' ஆரிய நாடோடிகள் கருப்பின பழங்குடியினரை வெற்றிக் கொண்டதே பாரதத்தின் தொல் பழம் வரலாறு என விளக்கும் இந்த கோட்பாடு அன்றைய ஆளும் வர்க்கத்தினரின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு மிகச் சிறப்பாகத் துணை போனதென்றால், இன்று வத்திக்கான் முதல் பாப்டிஸ்ட்கள் ஈறாக பல மிஷினரிகள் வனவாசிகள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோரிடையே 'ஆத்மாக்களின் அறுவடை 'யை நடத்த இக்கோட்பாடு மிக நன்றாகவே உதவி புரிகிறது. அன்றைய காலனியாக்க வாதிகளுக்கு 'பிரித்தாள 'ப் பயன்பட்ட ஆரிய இனவாதம் இன்றைய ஆன்மிக காலனியாதிக்க வாதிகளுக்கு 'பிரித்து மெதம்மாற்ற ' பயன்படுகிறது.

 

இம்மாதிரி இனம் பற்றிய போலி ஆராய்ச்சிகளின் வேர்களை அறிய சில நூற்றாண்டுகளாவது நாம் பின் செல்ல வேண்டும். பொது வருடம் (CE) 1312 இல் வியென்னாவின் இயுக்மெனிக்கல் கவுன்சில், 'புனித திருச்சபைக்கு அவிசுவாசிகளின் மொழிகளில் திறமை பெற்ற பல கத்தோலிக்கர்கள் அவசியம். பரிசுத்த நற்செய்தியை அவிசுவாசிகளிடம் கொண்டு செல்ல அவர்கள் தேவைப்படுவார்கள் ' என அறிவித்தது. 'அவிசுவாசி 'களின் மொழியை கற்பதோடு இந்த மதமாற்ற வியூகம் முடிவு பெறவில்லை. மாறாக, மொழியியல் ஆராய்ச்சிகளும் இம்மதமாற்ற வியூகத்தின் ஒரு பகுதியாகவே மேற்கொள்ளப்பட்டன. எனவே காலனியாதிக்கத்தை இந்தியாவில் வேரூன்ற வைக்கும் திருப்பணியில் பங்கேற்க பல்கலைக்கழகங்கள் அழைக்கப்பட்ட போது அவற்றின் 'அறிஞர் பெருமக்கள் ' தீவிர கிறிஸ்தவ அறிஞர்களாகவே இருந்தனர். இவர்களைப் பொருத்தவரையில் இந்தியாவில் கல்விப் பணியின் முக்கிய அவசியம் உண்மையினை அறிதல் என்பதனை விட கிறிஸ்தவத்தைப் பரப்புதல்தான்.

 

எனவே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் கிழக்கத்திய கலாச்சாரம் குறித்து ஆராய கர்னல் போடன் ஒரு கணிசமான தொகையினை(அந்த காலத்தில் 1832 (CE) 25,000 பவுண்டுகள்) தன் உயிலில் அளித்திருந்தார். இதன் நோக்கம் குறித்து அவர் தெளிவாகவே கூறினார், 'நாம் இந்திய மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றவே இத்தொகை அளிக்கப்பட்டிருக்கிறது. ' பின்னாளில் ஆரிய இனவாதக் கோட்பாட்டின் மிக முக்கிய பரப்பு மையமாக போடனின் இந்த சமஸ்கிருத ஆய்வுத்துறையே விளங்கியது. ஆக்ஸ்போர்டின் ஒரு முக்கிய சமஸ்கிருத பேராசிரியரான மாக்ஸ்முல்லர்தான் ஆரிய இனவாதத்தைப் பரப்பியவர்களுள் முதன்மையானவர். இந்த சமஸ்கிருத பேராசிரியர் தன் பல வருட கடின உழைப்பின் மூலம் வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். தன் வாழ்வின் மிகப்பெரிய இச்சாதனைக் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார், ' எனது இம் மொழிபெயர்ப்பு இந்தியாவின் விதியையும் பலகோடி இந்திய ஆத்மாக்களின் வளர்ச்சியையும், பெருமளவுக்கு நிர்ணயிக்கப் போகின்றது. வேதங்களே இம்மக்களின் சமயத்தின் வேர். அவ்வேர் எத்தகையது என்பதனைக் காட்டுவதன் மூலம் அதிலிருந்து மூவாயிரம் வருடங்கள் வெளிவந்திருக்கும் அனைத்தையும் வேரறுக்க முடியும் என நிச்சயமாக நம்புகிறேன். ' 2

 

இந்திய கலாச்சாரத்தை அறிவதல்ல முல்லரின் நோக்கம் மாறாக அதனை 'வேரறுப்பதே '. பொதுவாகவே ஐரோப்பிய அறிஞர்களின் குறிப்பாக கிறிஸ்தவ மிஷினரி அறிஞர்களின் நோக்கங்களுக்கான சிறந்த எடுத்துக்காட்டே மாக்ஸ்முல்லர். 1851ெஇல் மாக்ஸ் முல்லர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில்தான் முதன்முதலாக 'ஆரிய ' எனும் வார்த்தை இனவாதத் தன்மையுடன் பயன்படுத்தப்பட்டது. மாக்ஸ் முல்லரின் சிறந்த நண்பரும் அவருடன் பணி புரிந்த இந்தியவியலாளருமான பவுல் இவ்வார்த்தையினை இனவாதப் பொருள்பட பிரான்சில் பிரபலப்படுத்தினார். விரைவிலேயே பல கிறிஸ்தவ ஈடுபாடுடைய அறிஞர்கள் ஆரிய இனவாதத்தால் ஈர்க்கப்பட்டனர். 1859 இல் சுவிஸ் மொழியியலாளரான அடால்ஃப் பிக்டெட் ஆரிய இனவாதம் குறித்து பின்வருமாறு எழுதினார், ' இறையருளால் உலகம் முழுவதும் ஆள வாக்களிக்கப்பட்டதோர் இனம் உநூடன்றால் அது ஆரிய இனம் தான். கிறிஸ்துவின் மதம் உலகிற்கொரு ஒளியாக வந்தது. கிரேக்க மேதமை அதனை சுவீகரித்துக்கொண்டது;ரோம சாம்ராஜ்யாதிகாரம் அதனைப் பரவச் செய்தது;ஜெர்மானிய வலிமை அதற்கு புத்துயிர் அளித்தது. மனித குலம் முழுமைக்குமான இறைவனின் திட்டத்தில் முக்கிய கருவி ஐரோப்பிய ஆரியர்களே. '3

 

பிரான்சின் சமய வரலாற்றாசிரியரான எர்னெஸ்ட் ரெனன் 1861 இல் பின்வருமாறு குறிப்பிட்டார், '..செமிட்டிக் இனத்தவர் (யூதர்கள் -அ.நீ) செய்ய வேண்டியதைச் செய்யும் திறன் அற்றவர்கள்;நாம் ஜெர்மானியகளாகவும் கெல்ட் இனத்தவர்களாகவுமே இருப்போம். நம் நித்திய நற்செய்தியான கிறிஸ்துவத்தை ஏந்தியிருப்போம்....யூதர்கள் வீழ்ந்த பிறகு ஆரியர்களான நாமே மனித இனத்தை நடத்திச் செல்ல மீதியிருப்போம். '4 ஆராய்ச்சியின் பேரில் இனவாத அர்த்தம் கொடுக்கப்பட்ட ஒரு சொல் ஒரு சில வருடங்களில் உலகத்தின் மீது ஐரோப்பிய இன, கலாச்சார, சமய மேன்மையினை நிறுவுதலை நியாயப்படுத்தும் ஒரு சொல்லாகிவிட்டது.

 

அனைத்து ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் மாக்ஸ்முல்லரின் இந்த இனவாத விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. 1861 இல் 'மொழிகளின் அறிவியல் ' என தான் கொடுத்த மூன்று நாட்கள் சொற்பொழிவுகளில் வேதங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி தன் இனவாத விளக்கத்தை மாக்ஸ் முல்லர் நியாயப்படுத்தினார். அமெரிக்க வரலாற்றறிஞரான லுயெிஸ் பி சிண்டர் மாக்ஸ் முல்லரின் இந்நிலைபாடு குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார், 'மாக்ஸ் முல்லர் மீண்டும் மீண்டும் , இந்தோெஐரோப்பிய மற்றும் இந்தோெஜெர்மானிய போன்ற பதங்கள் 'ஆரிய ' எனும் பதமாக மாற்றப்பட வேண்டும் என வாதாடினார். ஏனெனில் இந்தியாவில் வாழ்ந்த சமஸ்கிருதம் பேசிய இனத்தவர் தங்களை 'ஆரியர் ' எனக் குறிப்பிட்டனர் என்பதால். இப்பழம் ஆரிய மொழி ஒரு பழம் ஆரிய இனம் இருந்திருக்க வேண்டும் என்பதனை க 'ட்டுவதாகவும், அந்த இனமே ஜெர்மானிய, கெல்ட், ரோமானிய, கிரேக்க, ஸ்லாவிய, பெர்சிய, ஹிந்து இனங்களின் பொது மூதாதைய இனம் என்பது அவரது வாதம். '5 சிண்டர் மாக்ஸ்முல்லரின் இம்முயற்சி குறித்து, 'ஆரிய மொழியினை ஆரிய இனத்துடன் இணைக்க முயலுவது முட்டாள்தனமான முயற்சி ' என கருத்து தெரிவிக்கிறார்.5 மாக்ஸ்முல்லரது காலத்திலேயே ஜெக்கோபி, ஹிலெபிராந்த், விண்டர்னிட்ஸ் போன்றவர்கள் ஆரிய இன வாதக் கோட்பாட்டினை எதிர்த்துள்ளனர். எனினும் இக்கோட்பாடு எங்ஙனம் இந்தியாவில் வேரூன்றியது ?

 

இக்கோட்பாட்டினை பரப்புவதில் மிஷினரிகளின் பங்கு அபாரமானது. முன்னணி மிஷினரி இந்தியவியலாளரான ஹண்டர், இந்தியவியல் ஆராய்ச்சிகள் ' கிறிஸ்தவப் பற்று எனும் புனித ஜுவாலையால் சூடேற்றப்படுவதாக 'க் கூறினார்.6. இத்தகைய 'கிறிஸ்தவ புனித ஜுவாலையால் சூடேற்றப்பட்ட ' ஆராய்ச்சியின் விளைவின் எடுத்துக்காட்டாக மாக்ஸ் முல்லர் வேதங்களின் காலத்தை விவிலிய சிருஷ்டிக் கால அளவின் அடிப்படையில் ெ உலக சிருஷ்டி 4004(BCE) அக்டோபர் நிர்ணயித்ததன் மூலம் அறியலாம்.7 இவ்வாறு கிறிஸ்தவப் பற்று எனும் புனித ஜுவாலைக்கும் ஐரோப்பிய இனவாதத்திற்குமான திருமணத்தில் எழுந்த ஆராய்ச்சி வினோதங்கள் விரைவில் ஐரோப்பாவில் சாவு முகாம்களையும், உலகப்போரையும் உருவாக்கின. இத்தகைய இந்தியவியல் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பம்பாயின் ஆசியக் கழகத்தின் தலைவராக 1836ெமுதல் 1846 வரை விளங்கியவர் பிராட்டஸ்டண்ட் திருச்சபையைச் சார்ந்த மிஷினரி ஜான் வில்சன். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரியர்ெஆரியரல்லாதோர் எனும் பகுப்பின் படி அமைவது மதமாற்றத்திற்கு சிறந்த இலக்கான மக்கள் கூட்டங்களை தேர்ந்தெடுத்து பணியாற்ற உதவும் என்பது இவர் நம்பிக்கை. 1856 இல் அவர் ஆற்றிய உரையில் பிரிட்டிஷ் அரசு உண்மையில் ஆரியர்கள் என்ற முறையில் மீண்டும் தங்கள் இந்திய ஆரிய சகோதரர்களுடன் இணைந்ததுதான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என காலனியாதிக்கத்தை நியாயப்படுத்தினார். (மெக்காலேயிஸ்ட் இந்தியர்களும் இதற்கு ஒத்தூதினர். உதாரணமாக, கேஷப் சந்திர சென். இது குறித்து 'பில்ட் டவுண் மேற்கோள் ' என தனிக் கட்டுரை எழுதப்படுகிறது.) மேலும் வில்சன் இந்த பிரிந்தவர் இணைந்தது 'உலகின் மிக தாராள கொடையாளியான பிரிட்டிஷ் அரசுடன் இந்தியாவை இணைத்துள்ளதாகவும் ' குறிப்பிட்டார்8.

 

காலனியாதிக்கத்தை நியாயப்படுதியதுடன், இந்தியர்களுக்கு தங்கள் பாரம்பரியம் குறித்து எவ்வித பெருமையும் ஏற்படாதவாறும் இந்த இனவாதக் கோட்பாட்டின் கற்பித்தல் பார்த்துக்கொண்டது. கிழக்கத்தியவியல் அறிஞர்களின் சர்வ தேச மாநாட்டில் பேசிய மாக்ஸ்முல்லர் இது குறித்து தெளிவாகவே கூறினார், ' இனி அவர்கள் தங்கள் பழம் புலவர்கள் குறித்து உயர்வான புகழ்ச்சி கொள்ள மாட்டார்கள், மாறாக (தங்கள் பழம் பாரம்பரியம் குறித்து) கவனமான ஆராய்ச்சியில் எழும் இரசனையே கொள்வார்கள் '9 அதாவது தங்கள் மூதாதையர்கள் குறித்து இந்தியர்கள் கொள்ளும் பெருமிதத்தின் அளவுகோல்கள் மாக்ஸ்முல்லர் மற்றும் இதர கிறிஸ்தவ மிஷினரி ஆராய்ச்சியாளர்களாலேயே நிர்ணயிக்கப்படும். இந்த காலனியாதிக்க கலாச்சார மறுகல்வியினை பரப்ப, அக்கால பிரிட்டிஷ் கல்வி முறையைக்காட்டிலும் மேன்மையானதாக இருந்த இந்திய பாரம்பரிய கல்வி அமைப்புக்கள் அழிக்கப்பட்டு வெற்றிடம் உருவாக்கப் பட்டது. பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான கெயிர் ஹார்டி பிரிட்டிஷ் ஆவணங்களை ஆதாரமாகக்

கொண்டு அளித்த புள்ளிவிவரங்கள்படி வங்காளத்தில் மட்டுமே அனைத்து ஜாதியினரும் பயிலும் பள்ளிக்கூடங்களின் தொகை 80,000. அதாவது 400 வங்காளிகளுக்கு ஒரு கல்விச் சாலை. லதூலள தன் 'பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு ' எனும் நூலில், கூறுகிறார், ' ஒவ்வொரு ஹிந்து கிராமத்திலும் அனைத்துக் குழந்தைகளும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாகவும் அடிப்படைக் கணிதத்தில் தேர்ச்சி உடையவர்களாகவும் இருந்தனர். நம் அதிகாரம் பரவி வேரூன்றி விட்ட இடங்களில் இந்தக் கிராம கல்வி சாலைகள் அழிக்கப்பட்டு விட்டன. ' காலனியாதிக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்யவாதிகளால் பாரம்பரிய கல்விமுறை அழிக்கப்பட்ட பின் அவ்வெற்றிடங்களில் நுழைந்தன கிறிஸ்தவ மிஷினரிகளின் கல்விச்சாலைகள். இந்திய மொழி வழக்கில் உயர் இலக்கியத்திற்கோ அறிவியலுக்கோ சிறிதும் இடமில்லை என தன் புகழ் வாய்ந்த 'மினிட்ஸ் ' களில் குறிப்பிட்ட மெக்காலே பிரிட்டிஷ் கல்வி முறையினை இந்தியாவில் புகுத்த வழி வகுத்தார். இச்செயலின் குறிக்கோளில் மிகுதியான அளவுக்கு சமய நோக்கம் கலந்திருந்தது. இதனை மெக்காலே தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டார், ' நம் கல்வித்திட்டங்கள் முழுமையான முறையில் அமுல் செய்யப்பட்டால் இன்னமும் முப்பது வருடங்களில் வங்காளத்தில் படிப்பறிவு பெற்ற எவருமே விக்கிரக ஆராதனையாளர்களாக இருக்க மாட்டார்கள் என்பது என் திடமான நம்பிக்கை. '

 

மெக்காலேயின் 'திடமான நம்பிக்கைகள் ' இன்று பொய்ப்பிக்கப்பட்டு விட்டன. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவெங்கும் மெக்காலேமெிஷினரி கூட்டணியில் உருவான கல்விச்சாலைகள் மூலம் பல கோடி குழந்தைகளுக்கு ஆரிய இனக் கோட்பாடு கற்றுக் கொடுக்கப் பட்டது. இவ்வாறாக தலைமுறைகளாக இந்தியக் குழந்தைகளுக்கு தங்கள் வரலாற்றை, தங்கள் சமூக உறவுகளை இன ரீதியில் காண, விளக்க, அறிந்து கொள்ள ஒரு கோட்பாடு கொடுக்கப் பட்டது. ஆரியெஆரியரற்ற இனக்கூட்டங்களை அடையாளம் காணவும், இந்தியாவில் என்றென்றும் வடக்குெதெற்கு பிரிவினை ஏற்படுத்தி அதனை இன ரீதியில் அணுகவும் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு கல்வி முறை இந்தியாவில் இவ்வாறுதான் வேரூன்றியது. வெறுப்பின் விதைகள் இளம் மனங்களில் விதைக்கபட்டாயிற்று.

 

தென்னகத்தில் ஆங்கிலிக்க திருச்சபையைச் சார்ந்த ஆயர் இரா.கால்தூவல் தென்னிந்திய மக்கள் ஆரியரல்லாத திராவிடர் எனும் ஒரு தனி இனத்தைச் சார்ந்தவர்கள் எனும் பிரச்சாரத்தை தன் ஆய்வு மூலம் துவக்கினார். ஆரியர்களிலிருந்து இனத்தால் மாறுபட்ட, பண்பாட்டால் உயர்ந்ததொர் தனி இனத்தைச் சார்ந்தவர்கள் தாங்கள் எனும் பிரச்சாரம் தென்னகத்தில் நன்றாகவே எடுபட்டது. விரைவில் இந்த தனிமைப்படுத்தல் அரசியல் இயக்கமாகவும் வெளிப்பட்டது. இந்திய தேசிய விடுதலை இயக்கத்திற்கு எதிரானதோர் கருவியாக இந்த 'திராவிட ' அரசியல் 'விழிப்புணர்வு ' பிரிட்டிஷ் அரசால் நன்றாகவே பயன்படுத்தப் பட்டது.

 

பாரத விடுதலைக்குப் பின்னும் இந்தியாவில் பிரிவினை வாதப் போக்கினை தூண்டும் விதத்தில் கிருஸ்தவ திருச்சபைகள் ஆரிய-திராவிட இனவாதத்தைப் பயன்படுத்தின. 1950களின் இறுதியிலும், 1960களிலும் கிருஸ்தவ ஆயர்கள் வெளிப்படையாகவே 'திராவிட இயக்கம் இந்து மதத்தை அழிக்க கிருஸ்தவ சர்ச்சால் வைக்கப்பட்டுள்ள 'டைம்பாம் ' ' என பேசினர். எனினும் இன்று தமிழ் நாட்டில் ஒரு வலிமையான பிரிவினைவாத இயக்கத்தை உருவாக்குவதில் மிஷினரிகள் தோல்வியே அடைந்துள்ளனர் என்ற போதிலும் நாகலாந்து, மிசோரம், திரிபுரா ஆகிய இடங்களில் மிஸோ,ரியாங், ஜமாத்தியா, வங்காளிகள் என பல சமூகங்களிடையே மோதல்களுக்கு இனரீதியிலான பூச்சு கொடுப்பதில் மிஷினரிகள் ஆற்றியுள்ள பங்கு அபாரமானது.

 

இலங்கையில் நடைபெறும் தலைமுறைகளாக குடும்பங்களை சிதறடித்து வரும் வன்முறை நிகழ்வுகளின் வேர்களில் மிஷினரிகளால் பரப்பப் பட்ட இனக்கோட்பாடுகள் இருப்பதை நாம் காணலாம். தமிழ் சங்கங்களின் ஆஸ்திரேலாசிய ஒருங்கிணைப்புக் குழுவின் செயலரான அன.பரராஜ சிங்கம் கூறுகிறார், ' புராண கதைகளிலிருந்து சிங்கள தேசியவாதம் தன் மூலத்தை பெற்றிருந்தாலும், இன்றைய சிங்கள இனவாதத்தில் ஐரோப்பிய பங்கு மிகவும் உண்டு. சிங்களர்கள் (தமிழர்களிலிருந்து இனரீதியில் வேறுபட்டதோர்) ஆரிய இனத்தவர் என்பது மஹாவம்சம் மூலம் உருவான தேசியவாதமல்ல. மாறாக இதன் வேரினை சிங்களர்களையும் தமிழர்களையும் இரு வேறு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த மொழிகளை பேசும் வேற்றினத்தவர்கள் எனப் பகுத்த ஐரோப்பிய மொழியியலாளர்களிடம் காணலாம். '10 இனரீதியில் இலங்கை மக்கலை பிரிக்கும் முயற்சி 1856ெஇல் தொடங்கியது எனலாம். இராபர்ட் கால்தூவல் தன் புகழ்பெற்ற ஒப்பிலக்கண ஆய்வின் மூலம் 'சிங்களர்கள் பேசும் மொழிக்கும் தமிழர்களின் மொழிக்கும் எவ்வித நேரடித்

தொடர்பும் கிடையாது ' என அறிவித்தார். 1861 -இல் தன் 'மொழிகளின் அறிவியல் ' சொற்பொழிவில் 'சிங்கள மொழி ஆரிய குடும்பத்தைச் சார்ந்ததாக ' அறிவித்தார். சிங்கள இனவாத தேசியத்தின் உதயத்தில் சர்ச்கொலனிய அரசு எனும் கூட்டணி ஆற்றிய செவலித்தாய் பங்கு குறித்து சிங்கள அறிஞரான கமலிகா பியரிஸ் கூறுகிறார், ' 'ஆரிய ' மொழி பேசும் அனைவரும் ஆரிய இனத்தவர்களாக்கப் பட்டனர். அதனைப் போலவே திராவிட இனமும் அடையாளம் காணப்பட்டது. இதில் முக்கிய பங்கு ஆற்றியவர்கள் மாக்ஸ் முல்லரும், இராபர்ட் கால்தூவல்லும். போர்சுகீசியரும், டச்சுக்களும் அவர்கள் அவர்கள் நாட்டில் நிலவிய மத வெறுப்புக்களை இலங்கையில் இறக்குமதி செய்தனர். இன ரீதியிலான பிளவினை வேரூன்றச் செய்தவர்கள் பிரிட்டிஷ் காரர்கள்தான். 1833 அல்லது 1871 இல் இன ரீதியில் மக்களை அடையாளப்படுத்துவது முழுமையடைந்தது. 1833-இல் சட்ட சபைக்கு இனரீதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1871-இல் பிரிட்டிஷாரால் முதல் மக்கட் தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. இக்கணக்கெடுப்பில் தமிழர்களும் சிங்களர்களும் முதன்முதலாக தனித்தனி இனங்களாக பிரிக்கப் பட்டனர். ' 11 இன்றைக்கும் மேற்கின் ஆயுத வியாபாரிகளுக்கு கொழுத்த சந்தையாகவும் சிதறியடிக்கப்பட்ட குடும்பங்களை ஆசிய ஆத்மாக்களின் அறுவடையாளர்களுக்கு எளிதாக அறுவடையாகக் கூடிய வயல்களாகவும் மாற்றியிருக்க கூடியவை இந்த இன வெறுப்பை தம்மில் உள்ளடக்கிய இனக்கோட்பாடுகள்தாம்.

 

தெற்காசியாவில் மாத்திரமல்ல, உலகமெங்கிலும் இந்த செயல்பாதூடாழுங்கினை நாம் காலனியமெிஷினரி கூட்டு ஆராய்ச்சிகளில் காணலாம். உதாரணமாக அண்மையில் நடைபெற்ற ருவண்டாவில் நடைபெற்ற ஹுதூடட்சி இன மோதல்கள் ஏற்படுத்திய இனப்படுகொலை அவலங்களை அனைவரும் அறிவோம். இந்த இனமோதலின் தொடக்க வேர்கள் குறித்து பிரான்சின் மானுடவியலாளரான ஜீன்பெ¢யாரி லாங்லியர் கூறுகிறார், 'முதன்முதலாக ஹுதூடட்சிக்கள் வெவ்வேறு இனத்தை சார்ந்தவர்கள் எனும் தவறான கருத்தாக்கம் ஜான் ஸ்பீக் எனும் பிரிட்டிஷ் பயணியால் கூறப்பட்டது. மிஷினரிகள்,ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காலனிய அதிகாரிகள் ஆகியோரால் (மற்ற ஆப்பிரிக்க வரலாற்றைப் போன்றே) ருவாண்டாவின் வரலாறும் திரிக்கப்பட்டது. படையெடுத்து வந்த டட்சி இனத்தவரால் ஹுதுக்கள் அடிமையாக்கப்பட்டதாக மிஷினரிகளால் கற்பிக்கப் பட்ட வரலாற்றின் அடிப்படையிலேயே வெறுப்பு வளர்க்கப்பட்டது. ' 12

 

இவ்வாறாகத்தான் உலகமெங்கும் முக்கியமாக ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இனவாதத்தினை 'நற்செய்தியை பரப்பும் ' கருவியாக மிஷினரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தலைமுறைகளாக இந்த தேசங்களில் ஏற்பட்டிருக்கும் மனித இழப்புகள் கணக்கிலடங்காதவை. இன்றைக்கும் தாய்க்கும் மகளுக்கும், தந்தைக்கும் மகனுக்கும் பிரிவினையை ஏற்படுத்த வந்த நற்செய்தியின் 'சமாதானத்தையல்ல, பட்டயத்தையே ' கொண்டு வரும் தன்மை அன்பின் கடவுளின் பெயரை பூவுலகில் மகிமைபடுத்திக் கொண்டுதான் உள்ளது.

 

 

 

குறிப்புக்கள்

 

1. ஜேம்ஸ் ஷாஃபர் (கேஸ் வெஸ்டர்ன் பல்கலை கழகம்) 'Migration, Philology and South Asian Archaeology, ' Aryan and NonெAryan in South Asia: Evidence, Interpretation and History, edited by J. Bronkhorst and M. Deshpande (University of Michigan Press, 1998).

 

2. The Life and Letters of the Rt. Hon. Fredrich Max Muller, vol I, edited by his wife (London: Longmans, 1902), 328.

 

3. Adolphe Pictet in Essai de paleontologie linguistique (1859), மேற்கோள் காட்டப்பட்ட நூல் மைக்கேல் டானினோவின் The Invasion That Never Was (1996).

 

4. Ernest Renan, L 'Avenir religieux des societes modernes (1860), டானினோவின் மேற்கூறிய நூலில் மேற்கோள் காட்டப்பட்டது.

 

5. Louis B. Synder, The Idea of Nationalism: Its Meaning and History (New York: Von Nostrand, 1962)

 

6. 'Genesis of the Aryan race Theory and its Application to Indian History ' by Devendranath Swarup, வெளியான பத்திரிகை விவரம்: Manthan - Journal of Deendayal Research Institute (New Delhi, AprilெSeptember 1994).

 

7. N. S. Rajaram, Aryan Invasion of India, The Myth and the Truth (Voice of India, 1993).

 

8. Sri Aurobindo, 'The Origins of Aryan Speech, ' The Secret of the Veda, p. 554.

 

9. மேற்கோள் காட்டப்பட்ட நூல்: Arun Shourie 's Missionaries in India - Continuities, Changes, Dilemmas (New Delhi: ASA, 1994), 149.

 

10. Ana Pararasasingam, 'Peace with Justice. ' Paper presented at proceedings of the International Conference on the Conflict in Sri Lanka, Canberra, Australia, 1996.

 

11. காண்க : http://www.lacnet.org/srilanka/politics/devolution/item1342.html.

 

12. மேற்கோள் காட்டப்பட்ட நூல் N. S. இராஜாராமின், The Politics of History (New Delhi: Voice of India, 1995).

 

hindoo_humanist@sify.com

 

 

CopyrightThinnai.com



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: 'நற்செய்தி பரப்பும் ' கருவியாக இனவாதம் அரவிந்தன் நீலகண்டன்
Permalink  
 


œà®Ÿà®¾à®¯à¯ said...

//
கால்டுவெல், தன்னை கால்டுவெல் ஐயர் என்று அழைத்துக்கொண்டார். அதற்க்கு காரணம் என்ன, உங்களுக்கு தெரியுமா ?
//

இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஐயர், முனிவர் போன்ற பெயர் கொண்டவர்களை அன்றைய தமிழ்ச் சமுதாயம் மதித்துப் போற்றியது, குருமார்களாகவும் பாவித்தது. 

இதை வைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி கிறுத்துவ வலைக்குள் சிக்க வைப்பது எளிது என்பதால் தான் பெஸ்கி "வீரமாமுனிவர்" என்று பெயர் வைத்துக் கொண்டு காவி, கமண்டலத்துடன் உலா வந்தார். 

கால்டுவெல் பாதிரி தன்னை ஐயர் அன்று அழைத்துக் கொண்டார். நெல்லை மாவட்டத்தின் கிராமங்களில் பாதிரியாரை "எங்க அய்யரு" என்று தான் இன்னமும் அழைக்கிறார்கள். போப்பை முன்பு போப்பையர் என்றார்கள், இப்போது ஐயர்களுக்கு மவுசு குறைந்து விட்டதால் அவர் "பாப்பரசர்" ஆகிறார்! 

இன்னொரு முக்கியமான மொழியியல் குறிப்பு: 

அய்யன், அய்யா, அய்யர் இந்த எல்லாச் சொற்களுமே "மேலோன்" என்று பொருள்படும் "ஆர்ய" என்ற சொல்லில் முளைத்தவையே. "அய்" என்ற சங்கத்தமிழ்ச் சொல் தலைவன் என்று பொருள்படும். 

பெண்பாலில் "ஆர்யா" என்ற சொல்லில் இருந்தே ஐயை, ஆயி என்ற சொற்கள் உருவாயின. சிலப்பதிகாரத்தில் ஐயைக் கோட்டம் என்று வழங்கும் கோயில் "ஆர்யா" என்று வழங்கும் பராசக்தியின் கோயிலே.

ஸ்ரீஅரவிந்தர் நடத்திய பத்திரிகையின் பெயரும் "ஆர்யா" என்பது குறிப்பிடத் தக்கது.

11/11/2006 01:57:00 AM



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஸ்வயம் சேவகன் has left a new comment on your post "ஏசுவும்,
கிறுத்தவர்களும் ஆரியர்களா ?":

Expressions of Christianity:
விவேகானந்த கேந்திரம் கிறிஸ்தவத்தின் செயல்பாடுகளை விளக்கி வெளியிட்டுள்ள
ஒரு கதம்ப களஞ்சியம்.

பிள்ளையார் சுழியாக எல்ஸ்டின் கட்டுரைடன் இது தொடங்குகிறது. கொயன்ராட்
எல்ஸ்ட் கிறிஸ்தவத்தில் ஏதேனும் கிஞ்சித்து நல்ல விஷயம் இருந்தால் அது
எவ்வாறு பாரத வேர்கள் கொண்டதாக உள்ளது என சுட்டிக்காட்டுகிறார், வழக்கமாக
இளிச்சவாய்த்தனமான ஹிந்து ஜல்லியடிப்புகளான 'ஏசு காஷ்மீர் வந்தார்'
என்பது போன்ற அபத்தங்களையும் தோலுரித்து காட்டுகிறார். கிறிஸ்தவ unique
selling features எவ்வாறு ஹிந்து வேதாந்த மரபிற்கு கடமைப்பட்டுள்ளது
என்பதனை ஆழமாக தமக்கே உரிய பாணியில் விளக்குகிறார் எல்ஸ்ட். வாசிப்புக்கு
சுவாரசியம் அளிக்கக்கூடிய அதே நேரத்தில் ஆராய்ச்சித்தன்மை சிறிதும்
குறையாத கட்டுரை அது.

அடுத்து முக்கியமாக கலவை வெங்கட்டின் Holy cross to Holocaust.
சர்ச்-நாசி உறவுகள் அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். ஆனால் அதன்
வரலாற்று பரிணாமத்தை விளக்குகிறது இந்நூல். 60 இலட்சம் யூதர்கள் சாவு -
அது நிகழும் போது- ஏன் உலகின் மனசாட்சியில் சின்ன உறுத்தலைக் கூட
ஏற்படுத்தவில்லை என்பதன் மர்மத்தை விளக்குகிறது இக்கட்டுரை. ஹிட்லர் ஏதோ
வானத்திலிருந்து குதித்திடவில்லை. அவனது வெறியாட்டத்திற்கு 2000 வருட
தயாரிப்பு நிகழ்ந்திருந்தது. அந்த தயாரிப்பின் பெயர் கிறிஸ்தவம்.
கோல்ட்ஹேகன் கருதுகோள் அடிப்படையில் யூத படுகொலை நிகழ்வுகளின் பின்னணி
இயக்கங்களை ஆதாரங்களுடன் வெளிக்காட்டும் இக்கட்டுரை ஹிந்துக்களுக்கு ஒரு
முக்கிய படிப்பினையை வழங்குகிறது. காஷ்மீரில் பண்டிட்களும் மிஸோரமில்
ரியாங்குகளும் திரிபுராவில் ஜமாத்தியாக்களும் தம் சமயத்தை விட்டுக்கொடாத
காசிகளும் ஏன் நம் ஊடகங்களுக்கு எவ்வித உறுத்தலையும் ஏற்படுத்தவில்லை
என்பதற்கான விடை இக்கட்டுரையில் உள்ளது.

கோவா புனிதவிசாரணை ஹிந்துக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மாபெரும்
வன்கொடுமை. மேற்கூறியது போலவே இதுவும் நமது வரலாற்று பிரக்ஞையில் ஒரு
அத்தியாயமாக வேண்டியது அடிக்குறிப்பாக மாறியுள்ளது. ஆனால் உலக
வரலாற்றிலேயே அதிக காலம் நடத்தப்பட்ட புனிதவிசாரணை இதுதான்
(இன்க்விசிசன்). இதனை விளக்கமாக எழுதியுள்ளார் ராதாராஜன். மற்றொரு
முக்கிய ஆவணப்பதிவு இது.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களில் எவ்வாறு பூர்விக பண்பாடுகள்
அழித்தொழிக்கப்படுவதில் கிறிஸ்தவம் பெரும்பங்கு வகித்தது என்பது
ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக கிறிஸ்தவத்தின் வன்முறையை
ஹையபேஷியா காலம் தொடங்கி விவரிக்கிறார் மிஷேல் தனினோ.

கிறிஸ்தவத்தால் நீங்கா வடு பெற்ற உலக சமுதாயத்தினரின் ஒரு குரலாக இந்நூல்
ஒலிக்கிறது, சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுகிறது.

அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

..

ஸ்வயம் சேவக் எ திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் அனுப்பிய இந்த பின்னூட்டம் மட்டுறுத்தலில் தவறுதலாக நீக்கப் பட்டதால் இங்கே வெளியிடுகிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Anonymous said...

கால்டுவெல் பாதிரி வெள்ளையர்களுக்கு விசுவாசமாக வேலை செய்து திரிந்தவன். விடுதலை முழக்கம் இட்ட மறத்தமிழன் வீரபாண்டிய கட்டபொம்மனைக் குறித்து மட்டமான பொய்களை பிதற்றி திரிந்த வெள்ளைத்தோல் வெறியன். இவனது திராவிட இனவாதம் அவர்களது வெள்ளை இனவெறிக்கு சமமாக இங்கும் வெறியை உருவாக்க அமைக்கப்பட்டதுதான். "கால்டுவெல் பாதிரி வெள்ளையர்களுக்கு விசுவாசமாக வேலை செய்து திரிந்தவன். விடுதலை முழக்கம் இட்ட மறத்தமிழன் வீரபாண்டிய கட்டபொம்மனைக் குறித்து மட்டமான பொய்களை பிதற்றி திரிந்த வெள்ளைத்தோல் வெறியன். இவனது திராவிட இனவாதம் அவர்களது வெள்ளை இனவெறிக்கு சமமாக இங்கும் வெறியை உருவாக்க அமைக்கப்பட்டதுதான்." (http://keetru.com/kathaisolli/may06/manikkam.html) 

 

ரா.சமà¯à®ªà®¤à¯ said...

இந்த ஸ்டூவர்ட் பற்றி நீங்கள் தந்திருக்கும் லிங்கை இப்பதான் படிக்க டைம் கிடைத்தது. 

வாவ்!

The making of Aryan Jesus

In 1899 he wrote his most important work, Die Grundlagen des neunzehnten Jahrhunderts (The Foundations of the Nineteenth Century). The work focuses on the controversial notion that Western civilization is deeply marked by the influence of the Germanic peoples. Chamberlain grouped all European peoples—Celts, Germans, Slavs, Greeks, and Latins—into the "Aryan race", a race built on the ancient Proto-Indo-European culture. At the helm of the Aryan race was the Nordic or Germanic breed. Chamberlain's goal was to create a movement that would revive the recognition of Germanic blood. To do this, he incorporated not just the Teutonic peoples but all tribes with northern origins into a Germanic race. This included the Celts, Germans, and Slavs, all of whom Chamberlain considered to be of Germanic stock.

Chamberlain's works focused on the claim that the Germanic peoples were the heirs to the empires of Greece and Rome. He argued that when the Germanic tribes destroyed the Roman Empire, Jews and other non-Europeans already dominated it. The Germans, therefore, saved Western civilization from Semitic domination. Chamberlain's thoughts were influenced by the writings of Gobineau, who had argued for the superiority of the Aryan race, a term that was increasingly being used to describe white peoples, excluding Jews (whose language implied origins other than the Proto-Indo-Europeans). For Chamberlain the concept of an "Aryan" race was not simply defined by ethno-linguistic origins. It was also an abstract ideal of a racial elite (see Racism). The Aryan, or "noble" race was always in the process of creation as superior peoples supplanted inferior ones in evolutionary struggles for survival.

Chamberlain used a now discredited notion of the ethnic make up of Galilee to argue that, while Jesus may have been Jewish by religion, he was not Jewish by race. During the Nazi period certain pro-Nazi theologians developed these ideas as part of the manufacture of an Aryan Jesus. 

இவர்தான் ஆரிய இனத்தின் தந்தை போலிருக்கிறது.

11/09/2006 04:23:00 PMஇந்த ஸ்டுவர்ட் சொல்றதைப் பார்த்தால் நீங்க வச்சிருக்க தலைப்பு என்னமா பொருந்துது. அட்டேங்கப்பா!

"Though it were proved that there was never an Aryan race in the past, yet we desire that in the future there may be one. This is the decisive standpoint for men of action." 

"...being 'Aryan' is not the point, becoming 'Aryan' is what matters."

"Rather I am convinced that the school of Indian thinking is suitable to initiate a purer, freer, more sublime and consequently also worthier relationship to Jesus Christ."



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஏசுவும், கிறுத்தவர்களும் ஆரியர்களா ?

 

சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல்லாய்,

நேரிய எதிர் ஒப்பு இன்றி நீத்த ஓர் கடவுள் தூய,

வேரிய கமல பாதம் வினை அறப் பணிந்து போற்றி,

ஆரிய வளன்தன் காதை அறம் முதல் விளங்கச் சொல்வாம் 


திரு.ஜடாயு அவர்களின் பதிவில் பெஸ்கி பாதிரியார் ஏசுகிறிஸ்துவை ஆரியன் என்று பாடுவதாக ஒரு அனானி பின்னூட்டியிருந்தார்.

இரண்டாம் உலகப் போர் முன்பு இந்த ஆரிய இனக் கொள்கை மிகவும் பிரபலம். ஹிட்லரின் இந்த ஆரிய இனவாதம்வாடிகனின் ஆசியுடனேயேகடைபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மேற்கத்திய வெள்ளையர்களுக்கு கிறித்துவை, தாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாய் புழுவாய் நடத்திவரும் யூத இனத்தில் பிறந்தவராகக் காட்டிக் கொள்ள அருவருப்பாக இருந்தது. குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் ஏசு யூதர் அல்லர், ஆரியர் என்ற "உயர்ந்த இனத்தைச்" சேர்ந்தவர் என்ற புது வரலாறு இதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டுப் பரப்புரை செய்யப்பட்டது.

ஆரிய என்ற வேர்ச்சொல்லில் இருந்து (கிரேக்க aristos) அரிஸ்டோ, அரிஸ்டோக்ரேட் என்று பல சொற்கள் அதே பொருள்பட ஐரோப்பிய மொழிகளில் இருந்தும், அதை ஓர் இனமாக்கியது இந்தக் காரணத்திற்காகத்தான்.

Stewart Chamberlain போன்ற அடிப்படைவாத கிறுத்துவ இனவெறியர்கள், ஏசுவை யூதர் அல்லர், ஆரியர் என்று பரப்பி யூதப்பெருங்கொலைக்கு வழிவகுத்தவர்கள். இந்த ஸ்டுவர்ட் ஒருபடிமேலே போய், ஏசுவை யூதர் என்று சொல்பவர் வடிகட்டிய மடையர்கள். ஒரு சொட்டு யூத ரத்தம் கூட அவர் நாளங்களில் ஓடவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம் என்றான். இவனின் வாயிலிருந்து உதித்த இன்ன பிற நஞ்சுக்களைஇங்கே பார்க்கலாம். பின்னர் ஹிட்லரின் தோல்வி மற்றும் எதிர்பாராத யூத எழுச்சி போன்ற காரணங்களால், வாத்திகன் இந்த ஆரிய இனவாதக் குல்லாவைக் கழட்டி விட்டது. 

ஆனால் இந்தியர்களைப் பிரிப்பதற்கு வசதியாக இங்கே மட்டும் இந்த யாதொரு அடிப்படையுமில்லாத இனவாதத்தைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். அதற்கு இந்த திராவிட Fascist கள் ஜல்லி ஒரு பக்கம் என்றால் மார்க்ஸ்வாத மடையர்களின் Tacit support இன்னொறு பக்கம். 

திராவிட Fascist களுக்கு இது அதிகார ஆசையினால் கடைபிடிக்கும் கொள்கை என்றால், எதிர்ப்புவாத மார்க்ஸ்வாதிகளுக்கு என்ன இலாபம் ? If you cannot beat them, Join them என்ற உடன் போக்கு "பொதுபுத்தி" யோ ? 

இப்போது அந்த அனானி கேட்ட கேள்வி,


இங்கே ஆரியன் என்பது ஏசுவின் இனமா அல்லது குணமா என்று தமிழ்மண ஆரியதிராவிட இனவியாதிகளே பதில் சொல்லட்டும்.


அதை அப்படியே வழிமொழிந்து இந்த பதிவின் மூலம் இனவாத துவேஷிகளைக் கேட்கிறேன். பதில் உள்ளதா ?


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அன்புள்ள ஜெயமோகன்,
திரு குமார்.குமரப்பன் கூறியதைக் கண்டேன். இந்த நூல் சொல்லும் ஆதார கருத்து மேற்கு தன்னுடைய வசதிக்கேற்ப இந்தியாவை துண்டாட அல்லது கட்டுப்படுத்த அமைப்புகளை உருவாக்குகிறது அதில் தெரிந்தோ தெரியாமலோ பல அறிஞர்கள் துணை போகிறார்கள் என்பதுதான். தெரிந்து துணை போவோர் பொதுவாக அதிகமும் கூட. அந்த நூலில் சொல்லபப்ட்ட ஒவ்வொரு தரவுகளும் உண்மையே.

பேராசிரியர் இலக்குவனார் மோர்மோன் சர்ச் தோத்திரங்களுடன் திருவாசகத்தை ஒப்பிடுகிறார்:
I learned many things about the Mormon religion and the Church of the Latter day saints.The Mormon Bible reminded me of a prominent religious literature in Tamil,Thiruvachagam. The redundancy of the words Heart and Honey in Thiruvachagam, can be found easily by any reader of it.Likewise the Mormon Bible uses Heart and Honey many times.A comparative study of these two works may be of an immense benefit to scholars in theology. (http://www.associatedcontent.com/article/822317/i_love_you_americapart_i_pg2.html?cat=9)

மோர்மோன்களைக் குறித்து எந்த அடிப்படை அறிவுடையவர்களும் திருவாசகத்தை குறித்தும் அடிப்படை அறிவுடைய எவரும் இந்த ஒப்பீட்டின் ஒவ்வாமையை அறிவர். (நிச்சயமாக ஹார்ட்டுக்கு தெரிந்திருக்கும்) மிக மென்மையாக சொன்னால் சுந்தர.ராமசாமியை பி.டி.சாமியுடன் ஒப்பிடுவதை போன்ற மடத்தனம் இது. மேலும் இலக்குவனார் தெளிவாக வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்கிற கோட்பாடு உள்ளவர். திராவிட இனவாதக் கோட்பாட்டு ஆதரவாளர். ஒரிஸாவில் கிறிஸ்தவ மதபோதக பெண் வன்புணர்ச்சிக்கு ஆளானதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ”இந்தியாவே மதச்சிறுபான்மையினரின் சித்திரவதை கூடாரமாகிவிட்டதென குறிப்பிடுகிறார்”

http://www.associatedcontent.com/article/1091639/the_rape_of_a_christian_nun.html?cat=9

இவர்தான் ஹார்ட்டால் பெர்க்லே தமிழ் இருக்கைக்கு தேர்வு செய்யப்பட்டவர். மேலும் ஹார்ட் செய்திருக்கும் கம்ப ராமாயணம் குறித்த ’கட்டுடைப்பு’ ஆதாரத்துடனேயே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இவை அனைத்துமே தமிழர் பண்பாட்டை பொது இந்திய பண்பாட்டுப்புலத்திலிருந்து வெட்டி எடுப்பவையாகவே உள்ளது. அத்தகைய போக்குகளே ஊக்குவிக்கப்படுகின்றன. உதாரணமாக ஹார்ட் ராமாயணம் குறித்து கூறியதை எடுத்துக் கொள்வோம். ராமாயணம் ஒரு ‘இருட் காவியம்’ என்கிறார் ஹார்ட். ஒருவித எலியட்டிய வீண் பூமி காவியம் என்பது போன்ற அக உணர்வு சித்தரிப்பாக அவர் அதைப் பார்க்கிறாரென விட்டுவிடலாம். ஆனால் அடுத்து அதிலிருக்கும் சுயக்கட்டுப்பாட்டையும் வீரத்தையும் இரு இன/பண்பாட்டு எதிரெதிர் இரட்டை விழுமியங்களாக முன்வைக்கிறார். தமிழரின் மறமும் பிராம்மணீய அறமும். சங்கப் பாடல்களைப் படிப்போருக்கே இது எத்தனை தவறானது என்பது தெரியும். முழுக்க முழுக்க பத்தொன்பதாம் நூற்றாண்டு இனக்கோட்பாடுகளே ஒரு பண்பாட்டுக்கு ஒற்றை இனமும் ஒற்றை விழுமியமுமே இருக்க முடியும் என கருதுபவை. ஆனால் ஹார்ட்டின் மாஸ்டர் ஸ்ட்ரோக் அதனை நவீன அரசியல் கோட்பாடுகளுடன் இணைப்பதில் தான் உள்ளது: வாசகர்களே ஹார்ட் முன்வைக்கும் ஆய்வுக்கட்டுரை சுருக்கத்தை முழுமையாகப் படித்துப் பார்க்கட்டும்:

The Ramayanam of Kampan is a strange work. It presents a dark view of a world in which nothing is stable, even Rama, who ostensibly represents an absolute, unchanging, and unalterable reality. We find villains suddenly becoming heroes, ugly demonesses turning into women of irresistible beauty, perfect wives becoming shrewish or wicked, and landscapes whose virtue hides menace. On a larger scale, the work finds itself constantly shifting between two views of the world — that of poem, in which the predominant virtue is self-control and the ordered system of Brahmanical thought, and of maram, which is characterized by martial valor, courage, and ultimate power. These two incompatible views not only determine the structure of Kampan’s great work; they also, I would argue, reflect the political realities of his day, in which the great military and imperial power of the Cholas was leavened by the Brahmanical system that they supported. And, in a strange way that brings to mind some modern political themes, they reflect a historical reality, one in which a system from the North came to coexist with a conflicting indigenous system. Kampan had great regard for both world-views, and he knew that they could not be entirely reconciled. He used that fact to endow his work with a creative tension and a constantly shifting perspective that account for its extraordinary power and popularity.

வீரமும் அறமும் incompatible என்பது சரியா? ஏன் அரசதிகாரமும் அறமும் ஒன்று ஒரு சமூகத்தின் தனி விழுமியமாக அடையாளப்படுத்த முடியுமா? மேற்கின் ஆதார ஆதர்ச வாழ்க்கையை (வாஷிங்டனையோ அல்லது ஏசுவையோ) இப்படி கட்டுடைக்கும் ஒரு இந்திய ஆராய்ச்சியாளரை, இந்தியா வாழ் அமெரிக்கர்கள், இந்திய பல்கலைகக்ழகத்தில் தங்கள் பண்பாட்டின் பேராசிரியராக தனி இருக்கை ஏற்படுத்தி கௌரவிப்பார்களா?

மீண்டும் ஒரு விஷயத்தை தெளிவாக்குகிறேன். கம்ப ராமாயணத்தை கட்டுடைப்பதை நான் தவறென சொல்லவில்லை. இனவாத ரீதியில் கட்டுடைப்பதைக் கூட. இலக்குவனார் போன்ற ‘பேராசிரியர்களை’ தேர்ந்தெடுத்து அழைப்பதையும் தவறென சொல்லவில்லை. அதே போல அதே பெர்க்லே தெற்காசிய துறையின் தெலுங்குப் பேராசிரியையாக ஒரு மதமாற்ற பிரச்சாரகரே அதுவும் அமெரிக்க வலதுசாரி ஊடகங்களில் வளைய வரும் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளதையும் நான் குறையாக சொல்லவில்லை. இவற்றைச் சுட்டிக்காட்டுகிறோம் அவ்வளவே.

இச்செயல்முறைகளில் ஒரு போக்கு இருக்கிறது. ஒரு திசை இருக்கிறது. தமிழை பண்பாட்டு ரீதியாக தனித்துப் பிரித்தெடுத்து பின்னர் அதனை அரசியல் சக்தியாக்கும் போது அது மேற்கத்திய தலையீடுகளுக்கு உறுதுணை ஆகிறது.

இறுதியாக இந்நூல் அறிமுக விழாவில் டெல்லியில் இந்நூலின் இரு ஆசிரியர்களும் கூறியவற்றை மீண்டும் சொல்வேன்: இந்த நூல் சொல்பவை இறுதி சத்தியங்கள் என்று சொல்லவில்லை. பல தரவுகளை இங்கு ஒரு குறிப்பிட்ட அமைப்பில் உங்கள் முன் வைக்கிறோம். இவை காட்டும் திசைகளை விவாதிப்போம்.” இது தவறு என நிரூபிக்கப்பட்டால், தமிழர்கள் ஒரு சர்வதேச விளையாட்டில் தெரிந்தோ தெரியாமலோ சதுரங்கக் காய்கள் ஆகிடவில்லை என்பது நிறுவப்பட்டால் அது எனக்கு ஆனந்தமே.

அரவிந்தன் நீலகண்டன்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

  1. Maraimalai Ilakkuvanar on January 11, 2012 at 4:47 pm

    திரு.அரவிந்தன் நீலகண்டன்,
    மல்கோத்ராவுடன் நீங்கள் இணைந்து எழுதிய “Breaking India” நூலை வாங்கிப் படித்து சென்ற ஆண்டின் தொடக்கத்திலேயே சில மடலாடற்குழுக்களில் இதன் வழு நிறைந்த போக்கைப் பற்றிய சில கருத்துகளைப் பகிர்ந்திருந்தேன்.
    சூன் 2011 வரை தமிழகத்தில் பல அறிஞர்களுக்கு இந் நூல் பற்றித் தெரியாது.இந் நூலில் என்னையும் அறிஞர் சார்சு கார்ட்டு குறித்தும் கூறியுள்ள கருத்துகளையும் மின்னஞ்சல் வழிப் பகிர்ந்திருந்தேன்.எனினும் தாங்கள் கூறியுள்ள தவறான கருத்துகளை மறுத்துத் தங்களுக்கே எழுதவேண்டும் என அப்போது கருதவில்லை.அதற்குக் காரணம்,நீங்கள் கூறிய தவறான கருத்துகளை மறுத்து கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் அறிஞர் சார்சு கார்ட்டு அவர்கள் எழுதிவிட்டமையும் எழுத்தாளர் செயமோகன் அவர்களின் வலைத்தளத்தில் திரு.குமார் குமரப்பன் உண்மைகளைத் தெளிவுபடுத்தியமையுமே ஆகும்.
    ஆனால் இருவரின் மறுப்புகளையும் பொருட்படுத்தாது மீண்டும் பழைய பொய்களையே தமிழ்ப்பதிப்பிலும் நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள் என்பது வருந்தத்தக்கது.
    ஒரு பொய்யையே ஒன்பது முறை திருப்பிக் கூறினால் உண்மை என மக்களை நம்பவைத்துவிடலாம் எனும் கோயபல்சு வழியைப் பின்பற்றிய இட்லர்நெறியையே உங்கள் நெறியாகக் கொண்டுள்ளீர்கள்.

     
  2. Maraimalai Ilakkuvanar on January 11, 2012 at 4:48 pm

    என்னைப் பற்றிய தங்கள் கருத்துகளையும் அதற்கான என் மறுப்பையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.என்னிடம் ஆங்கில மூலம் கணினியில் உள்ளதால் அதனையே இங்குக் காட்டுகிறேன்.

    In 1996, the University of California at Berkeley launched a Tamil Chair, calling it ‘the first of its kind – – in an American University’. The person hired for the Chair was not a native Tamil speaker, but Professor George L. Hart, whose pro-Dravidian politics were mentioned above. One of the major campaigners and fund raisers for the Berkeley Chair was the Federation of Tamil Sangams of North America (FeTNA), whose links with Tamil nationalist movements are explained later in this Chapter. The first visiting Professor invited to Berkeley as part of the work done by the Chair was Professor Ilakkuvanar Maraimalai from Chennai. Ilakkuvanar had previously visited the U.S.A. in 1987 to attend a linguistic conference. At that conference, he expressed his delight to have learned ‘many things about the Mormon religion and the Church of the Latter Day Saints’. The Mormon Bible reminded him ‘of a prominent religious literature in Tamil, TIRUVACHAGAM’. Like a true Dravidianist, Ilakkunavar believes that the Government of India discriminates against its Tamil citizens and that ‘India remains North’, and that present-day India is a ‘torture camp for religious minorities’. His writings feature topics like ‘sexual assault on Christian nuns’ in India, and, ‘I love America’. He praised the ‘nobility and greatness of George Hart’, and in turn, Hart wrote to the Government of India, supporting Ilakkunavar’s Dravidianist positions, including his opinions on the status of Tamil studies in India. Hart used the Berkeley Tamil Studies Chair to boost those scholars who emphasise the separateness of Tamil from Indian traditions. He accomplishes this by organizing forums where such scholars come together to reinforce Dravidian separatist identity politics in India. For instance, he organized a meeting of Western Tamil educators featuring Thomas Malten, whose Tamil Studies department at Cologne University was closely associated with Germany’s Lutheran Church (whose activities in India are discussed in Chapter 17 and also Appendix H). Another guest was Norman Cutler of the University of Chicago, who studied Tamil under an American National Defence Foreign Language fellowship and whose work is considered to have opened up for U.S. policymakers ‘an India that does not speak Hindi and looks back to nearly 2,000 years of tradition outside of Sanskrit’. Tamil conferences organized by the Berkeley Tamil Chair often feature papers that deconstruct traditional Tamil images of devotion, in the same manner as is found in modern Dravidian politics. For example, a paper by Hart interprets RAMAYANA as ‘a strange work’ filled with contradictions between ‘Brahminical thought’ and ‘martial valour’. He sees RAMAYANA primarily and yet ‘subtly’ as a way to oppress the Dravidians. Hart claims that this was later reflected in the way that the ‘great military and imperial power of the Cholas was leavened by the Brahminical system that they supported’. This nuanced anti-Brahminism is camouflaged in academic language. Hart stresses that his interpretation ‘brings to mind some modern political themes’. In this manner, India’s classics are DECONSTRUCTED as a method to tease out the oppression inherent in Indian civilization.
    அறிஞர் சார்சு கார்ட்டு அவர்கள் பற்றியும் என்னைப் பற்றியும் நீங்கள் கூறியுள்ள “குற்றச்சாட்டுகளின்”மையப் பகுதி என இதனைக் கருதலாம்.உங்கள் ஆங்கில நூலின் பத்தாவது இயலில் (பக்.167-169) இப் பகுதி இடம் பெற்றுள்ளது.

     
  3. Maraimalai Ilakkuvanar on January 11, 2012 at 4:50 pm

    1997-1998 கல்வி ஆண்டில் நான் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றினேன்.ஆனால் என்னைப் பற்றிய மதிப்பீட்டுக்கு நீங்கள் அடிப்படையாகக் கொண்டுள்ள தரவுகள் 2008-இலும் அதன்பின்னும் வலைப்பூக்களில் அமைந்த என் பதிவுகளேயாகும்.
    பிரிகாம்யங் பல்கலைக் கழக மாநாட்டில் மார்மன் சமயம் பற்றி நான் பேசியதாக உங்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படையிலேயே இந்தக் கருத்து பிழையானது.நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள என் வலைப்பதிவில் தெளிவாக
    “My paper” Government Administrative terms -A Morphological study” got approved by the conference committee.”
    என்று கூறியுள்ளமையைக் கவனிக்காமல் நான் ஏதோ சமயப்பரப்புரை நிகழ்த்தியதாக எழுதியுள்ளீர்கள்.
    Deseret Language and Linguistic society, எனும் ஆராய்ச்சிநிறுவனம் பிரிகாம்யங் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்திய மொழியியல் மாநாட்டில் கலந்துகொண்ட போது என் பயண அனுபவங்களை 14/6/2008-இல் நான் பதிவு செய்துள்ளேன்.அந்தப் பதிவில் ஊட்டா மாநிலத்தில் பெண்கள் முழங்கால் தெரிய உடையணியக் கூடாது எனவும் மதுவகைகள்,காப்பி,தேநீர் போன்றவை அங்குப் பருகப்படுவதில்லை எனவும் நிலவிய சூழல் கண்டு வியந்து அதற்குக் காரணம் அவர்கள் பின்பற்றும் மார்மன் சமயமே எனவும் அறிந்தேன்.அவர்கள் பெண்மையைப் போற்றும் திறத்தினைப் பாராட்டியதுடன் மார்மன் விவிலியத்தைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியதால் காதலாகிக் கசியும் நம் நெறியை அந்த மறையில் காணநேரிட்டதையும் மாணிக்கவாசகர் நெஞ்சை முன்னிலைப்படுத்திப் பாடிய திருவாசகப் பாடல்களில் இறைவன் ‘தேன்’என உருவகப்படுத்தப்பட்டுள்ளமை போல் மார்மன் திருமறையிலும் குறிப்பிடப்பட்டுள்ள தற்செயலான் ஒப்புமைகள் குறித்தும் என் பதிவை வலைப்பூவில் (14/6/2008) பதிந்திருந்தேன்.இக் கருத்தை நான் அங்குப் பேசவும் இல்லை;அதற்குரிய அமைப்புகளும் அங்கில்லை.தாயகம் வந்தபின் மார்மன் விவிலியத்தைப் படித்து அதன்பின் எழுந்த என்
    கருத்துகளையே பதிவு செய்திருந்தேன்.நீங்கள் மாநாட்டில் அவ்வாறு நான் பேசியதாக உங்கள் நூலில் பதிவுசெய்துள்ளமை அடிப்படைப் பிழை.
    என் கருத்து ’ஒப்பீடு’ என்னும்வகையில் பதிவுசெய்வத்ற்கு எனக்கு எல்லா உரிமையும் உள்ளது.நீங்கள் குறிப்பிடும் ‘சாமி’கள் பற்றி எனக்குத் தெரியாது.ஒப்பீடு வேறு;ஒப்பாய்வு வேறு.இப்போதும் என் கருத்தில் -ஒப்பீட்டில்- எப் பிழை இருபதாகவும் கருதவில்லை.மார்மன் சமய வரலாறு கூறி அச் சமயத்தை இழிவுபடுத்த முயன்றுள்ளீர்கள்.
    அப்பரும் சம்பந்தரும் இயற்றிய பாட்லகளை மேற்கோள் காட்டுகிறோம்;அப்போது எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறிய ஓலக்குரலை யாராவ்து பொருட்படுத்துகிறோமா?இதனைச் சொல்லப்போனால் உடனே உங்களுக்குச் சீற்றம் பிறக்கலாம்.எந்தச் சமயவரலாறும் குருதிக்கறை தோய்ந்ததாக் உள்ளமையே உலகவரலாறு.இதில் மார்மன் சமயம் பற்றிய பழிப்புரை எதற்கு?அதனைச் சொல்லி என்னையும் அறிஞர் சார்சு கார்ட்டு அவர்களையும் ப்ழிக்கவேண்டும் என்பது உங்கள் ஆசை.
    அப்படிப் பழிப்புரை கூறுவதால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமேயாயின் நாங்கள் இருவருமே அதற்குக் குறுக்கே நிற்கப்போவதில்லை.
    இந்தியா என்றாலே சமற்கிருதம் மட்டுமே வழங்கும் மொழி என்னும் எண்ணம் பிழையானது என்பதை அப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நான் குறியதாக என் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளமையே உங்கள் சீற்றத்திற்குக் காரணம்.

     
  4. Maraimalai Ilakkuvanar on January 11, 2012 at 4:51 pm

    என் வலைப்பதிவுக்கு வழங்கப்பட்ட கருத்துரைகளில்
    Thank you for this showing of your love for my country. I have been to most of the places you mention, and they are truly beautiful. I’d like to someday visit all the beautiful places of your country. By the way, I have a Master’s degree in linguistics, and while I haven’t studied the languages of India, I am well aware that there are more than Sanskrit, and that Sanskrit is not used in everyday speech! i’m glad you could educate some American students; I hope they will pass your teachings on. I’m not a believer in the Mormon faith either, but I do applaud their emphasis on family ties. Thanks again for this wonderful piece; I’m looking forward to the next part!
    என்னும் கருத்து உங்களுக்குக் கசப்பாக இருந்திருகலாம்.ஆனால் இந்தக் கருத்தாடல் அனைத்தும் நான் கலிபோர்னியாவிலிருந்து வந்ததன்பின் -பதினோராண்டுகளின் பின்-இணையத்தில் நிகழ்ந்தவை என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள்.
    “The Rape of a Christian Nun-A National Shame“
    என்னும் என் கவிதை வலைப்பதிவில் வெளிவந்துள்ளமை உங்களுக்கு ஆறாச் சினததை அளித்துள்ளது.
    A Horrible crime,
    A dastardly act,
    About which
    The whole of India is ashamed;
    எனத் தொடங்கும் என் கவிதை சமயவெறியினால் நிகழ்ந்த வன்கொலை குறித்த என் மனத்துய்ரைப் பதிவுசெய்யும் முயற்சியே.அக்தோபர் 7,2008-இல் வெளிவந்த இந்த வலைப்பதிவை அறிஞர் சார்சு கார்ட்டு பார்த்திருக்க வாய்ப்பில்லை.அங்குப் பணியாற்றிவிட்டு வந்து பதினோராண்டுகளின் பின் நான் அவரை மகிழ்விப்பதற்காக இப்படி எழுதியதாக நீங்கள் கருதுவது பொருந்துமா?
    இப் பதிவுக்கு அமெரிக்க இளைஞர்கள் அளித்துள்ள கருத்தீடுகள் தங்களையே தாக்குவதாகக் கருதிவிட்டீர்களா?
    “This is so typical of fanatical religious terrorists, and it won’t stop unless all decent Indians stand up in protest against the violence, the religious intolerance, and the passiveness of the government. The people of India are in my prayers.”
    என்னும் Lisa Renee அவர்களின் கருத்தும். (10/8/2008 நாளிட்டது)
    “don’t know if one should leave this ‘change’ and ‘weeding out’ to the next generation…although hopefully they are as appalled as are you and i…so much evil done in the name of religion is really done out of greed and a thirst for power…sometimes merely xenophobic meanness!
    i hadn’t heard of this before your piece…thanks for spreading the word.”
    என்னும் Oonah merriwether அவர்களின் கருத்தும் (10/8/2008 நாளிட்டது) உங்களுக்கு மட்டுமல்ல; எனக்கும் கசப்பாகத் தான் உள்ளது.காரணங்கள்தான் வெவ்வேறு.

     
  5. Maraimalai Ilakkuvanar on January 11, 2012 at 4:51 pm

    தாங்கள் அமெரிக்கமண்ணில் பரப்பவிரும்பும் கருத்துகளுக்கு நேரெதிராக என் வலைப்பதிவுகள் பணியாற்றியமை தங்களுக்கு வெறுப்பை வழங்கியுள்ளதில் வியப்பில்லை.
    ஆனால் 2008-இல் நிகழ்ந்த இந்தக் கருத்தாடலுக்கும் 1997-இல் நிகழ்ந்த என் பணிநியமனத்திற்கும் நீங்கள் முடிச்சுப் போடுவதுதான் உங்கள் வாதத்தின் பொய்ம்மையையும் பொருந்தாமையையும் படம்பிடித்துக்காட்டுகிறது.
    He praised the ‘nobility and greatness of George Hart’, and in turn, Hart wrote to the Government of India, supporting Ilakkuvanar’s Dravidianist positions, including his opinions on the status of Tamil studies in India.
    என நீங்கள் எழுதியுள்ளமை முற்றிலும் பிழையான கூற்று.
    19/6/2008-இல் ”George L.Hart III- a Pride of the Nation” என வலைப்பதிவு வெளிவரப் போகிறது என எதிர்பார்த்தா ஏப்ரல் 11-2000 அன்று தமிழின் செம்மொழித் தகுதி பற்றிய தம் வலைப்பதிவை அறிஞர் சார்சு கார்ட்டு வெளியிட்டிருப்பார் எனக் கருதுகிறீர்கள்?
    ஏறக்குறைய இரண்டு கோடிப்பேர் உலகெங்கும் இந்த வலைப்பதிவைப் படித்துத் தமிழின் செம்மொழித் தகுதிப்பேற்றை அறிந்துகொண்டதும் இந்திய அரசுஅறிஞர் சார்சு கார்ட்டு அவர்களின் கருத்துக்கு உரிய மதிப்பு வழங்கியமையும் தங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளமை புலனாகின்றது. சமற்கிருதத்திற்குப் போட்டியாகத் தமிழையும்-நீச பாசையாகிய தமிழையும்-செம்மொழி என்றால் பாவம் உங்களால் தாங்கிக் கொள்ள இயலாதுதான்.
    தமிழ் செம்மொழித் தகுதிப்பேற்றை அடைந்தமைக்கு சார்சு ஆற்றிய பணியும் பங்களிப்பும் அவரைப் பழிதூற்றவும் “திராவிடப் பிரிவினைவாதிகளுக்கு” உறுதுணை பெரிந்ததாகக் குற்றம் சாட்டவும் உங்களைத் தூண்டியுள்ளது.இதற்காக இன்னும் மால்டன்,நார்மன் கட்லர் ஆகியோரையும் காரணமின்றிக் குறைகூறியுள்ளீர்கள்.
    ஆய்வுத்திறமும் கல்விப்பெருமிதமும் வாய்ந்த அறிஞர்களை உங்கள் விருப்பு வெறுப்புக்கேற்ப முத்திரை குத்துவது எவ்வகையில் முறையானது?
    இந்துசமயத்தைக் காப்பதாகக் காட்டிக்கொண்டு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பெரும்பொருள் திரட்டிவரும் உங்கள் முயற்சிக்கு நான் குறுக்கே நிற்கப்போவதில்லை.ஆதாரமின்றியும் காரணமின்றியும் அவதூறுகளை அள்ளிவீசினால் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படலாம்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு,

அந்த மாநாட்டுக்கு நீங்கள் சென்ற போதுதான் மார்மான்களை குறித்து அறிந்தீர்கள் என நீங்களே கூறியுள்ளீர்கள். “The next three days the conference went on in a fine manner.I learnt many things about the Mormon religion and the Church of the Latter day saints.” (” அடுத்த மூன்று நாட்களும் மாநாட்டில் நல்ல முறையில் கழிந்தது. நான் மார்மான் மதம் குறித்தும் பின்னாளைய புனிதர்கள் சபை குறித்தும் தெரிந்து கொண்டேன்”) இதற்கு பொருள் என்ன? மாநாட்டில் நீங்கள் தெரிந்துகொண்டீர்கள் என்பதுதானே… இதனைத்தான் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.

சரி //இக் கருத்தை நான் அங்குப் பேசவும் இல்லை;அதற்குரிய அமைப்புகளும் அங்கில்லை.தாயகம் வந்தபின் மார்மன் விவிலியத்தைப் படித்து அதன்பின் எழுந்த என் கருத்துகளையே பதிவு செய்திருந்தேன்// என சொல்கிறீர்கள்.

ஆனால் நீங்கள் எழுதியிருப்பது அவ்வாறல்ல, //The next three days the conference went on in a fine manner.I learnt many things about the Mormon religion and the Church of the Latter day saints.The Mormon Bible reminded me of a prominent religious literature in Tamil,Thiruvachagam. The redundancy of the words Heart and Honey in Thiruvachagam, can be found easily by any reader of it. Likewise the Mormon Bible uses Heart and Honey many times.A comparative study of these two works may be of an immense benefit to scholars in theology. The Mormon religion and its ways attracted me very much.The motto”Family for ever” and the respect given to the Lady of the Family i.e.wife are wonderful.The priest in Mormon church told:God felt that he should accompany us all the times and hence he created the relation called Wife. .//

ஆக இந்த எண்ணங்கள் அங்கே எழுந்ததாகவும் இவ்விசயங்களை அங்கே மார்மான் பாதிரியாரிடம் பேசி கேட்டறிந்ததாகவுமே கூறியுள்ளீர்கள். ஆனால் இப்போது அதற்கான அமைப்புகள் அங்கு இல்லை என கூறியுள்ளீர்கள். இந்த முரணை சற்று ஆராய்ந்த போது மற்றொரு விசயம் தெரிந்தது.

உங்கள் கட்டுரையில் //Brigham Young university is one of the prominent univertsities in US// என்று சொல்லியுள்ளீர்கள் இந்த பல்கலைக்கழகம் அமெரிக்காவின் பிரசித்தமான பல்கலைக்கழகங்களில் ஒன்று என்று மட்டும் சொல்லியுள்ள நீங்கள் அது ஒரு மத சார்பு -பிரச்சார கல்வி நிறுவனம் என்பதை ஏனோ சொல்லவில்லை.

ஆனால் அந்த பல்கலைக்கழகம் அதன் ‘மிஷன் ஸ்டேட்மென்டில்’ தெளிவாகவே சொல்கிறது: “, the goal of Brigham Young University has been to offer “a new kind of education” for Zion, one based on precepts “revealed by the Lord,” as Karl G. Maeser once remarked. Today, BYU is widely recognized for its deep commitments to inspired religious values and rigorous intellectual learning” (http://aims.byu.edu/)

ஆக இந்த மதச்சார்புடைய பல்கலைக்கழகம் உருவாக்கிய அமைப்பில் நீங்கள் பேசினீர்கள். உங்கள் குறிப்பிட்ட ஆய்வுத்தாள் மதச்சார்பற்ற விசயமாக இருந்தது என்பது உண்மைதான். அது ஒரு மொழியியல் கருத்தரங்கு என்பதை நாங்களும் குறிப்பிட்டுள்ளோம். ஆனால் போன இடத்தில் உங்கள் பார்வை எப்படி இருந்தது என்பதையே கூறியுள்ளோம்.

அடுத்தது: 2008 இல் நீங்கள் எழுதப் போவதை நினைத்தா 2000 இல் ஜியார்ஜ் ஹார்ட் (சியார்ச்சு கார்ட்டு) இந்திய அரசுக்கு கடிதம் எழுதினார் என வினவியுள்ளீர்கள். ஆனால் நீங்கள் எழுதியுள்ளதை பாருங்கள் :

//George Hart suggested my name for the nomination as the First Visiting Professor there. I found no words to describe the nobility and greatness of George Hart in remembering me and recommending me for a great job which is certainly a golden opportunity for any Professor in India. I determined to work to the fullest satisfaction of George Hart, Kausalya Hart, the University authorities and the Tamil community there at California// ஜார்ஜ் ஹார்ட் (சியார்ச்சு கார்ட்டு) என்னை முதல் வருகை பேராசிரியராக முன்வைத்தார். சியார்ச்சு கார்ட் என்னை நினைவில் வைத்து என்னை இந்த பெரிய வேலைக்கு பரிந்துரை செய்த -அது நிச்சயமாக ஒரு இந்திய பேராசியருக்கு பொன்னான வாய்ப்பேதான் -சியார்ச்சு கார்ட்டின் அந்த பெருமையையும் பிரபுத்தன்மையையும் – கூற வார்த்தைகளே எனக்கு இல்லை.//

இதை நீங்கள் கடந்த காலமாக அதாவது 1997 இல் அவர் உங்கள் பெயரை சிபாரிசு செய்த போது அவரது பிரபுத்துவத்தையும் மாட்சியையும் விவரிக்க வார்த்தைகளே இல்லாத அளவுக்கு உணர்ந்து அதன் காரணமாக சியார்ச்சு கார்ட்டுக்கும் கவுசலியா கார்ட்டுக்கும் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் கலிபோர்னிய தமிழ் மக்களுக்கும் திருப்தி அளிக்கும் படி வேலை செய்ய முடிவு செய்ததாக கூறியுள்ளீர்கள். இந்த 1997 செயலுக்கு பிரதியுபகாரமாக சியார்ச்சு கார்ட்டு இக்கடிதத்தை எழுதியதாக நாங்கள் கூறியுள்ளோம். உங்கள் வார்த்தைகளை அப்படியே போட்டால் அது தாங்கள் ஏதோ அவரது பரிந்துரைக்காக புளகாங்கிதம் அடைந்து அவரை பாரட்டுவதாக காட்டும் என கருதியே தங்கள் அவ்வாசகங்கள் மேலே சொன்ன விதத்தில் சுருக்கப்பட்டன. அடுத்த பதிப்பில் மேலே உள்ள தங்கள் மேற்கோளை -அதாவது 1997 இல் நீங்கள் அடைந்த உணர்வை – அப்படியே உங்கள் வார்த்தைகளிலேயே போட்டுவிடுகிறோம். சுட்டியமைக்கு நன்றி.

அப்படியே நீங்கள் அமெரிக்காவில் உரையாற்றியது ஒரு மதச்சார்பற்ற கல்வி அளிக்கும் பல்கலைக்கழகத்தில் அல்ல, மாறாக மதச்சார்புடைய மார்மான் கல்வி அமைப்பு ஒன்றில் என்பதையும் மறக்காமல் சேர்த்துவிடுகிறோம். தாங்கள் சிரமமெடுத்து இவற்றை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

இத்தரவுகள் விட்டுப் போனதால் தங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்குமெனில் அதற்கு மன்னிப்பும் கோரிக் கொள்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

  1.  
  2. Maraimalai Ilakkuvanar on January 12, 2012 at 9:32 pm

    தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என வாதிட்டால் அதற்கு மாற்றுவாதம் கிடையாது.2008-இல் என் பயண நினைவுகளைக் குறித்திருந்தேன்.அதனை அந்த மொழியியல் மாநாட்டில் நான் பேசியதாகத் திரித்துக் கூறிய தாங்கள் அந்த வாதத்தை மீண்டும் நிறுவ முயல்வது எப்படிப் பொருந்தும்?நீங்கள் இப்படித்தான் பழிப்புரைகளை அடுக்கிக் கூறுவது என முடிவு செய்துவிட்டு அதற்குரிய தரவுகளைக் காலத்தின் பிற்பகுதியிலிருந்து கோத்தளிப்பது உங்களுக்கு உவப்பாக இருக்கலாம்.ஆனால் கால ஓட்டத்தில் உண்மை நிற்கும்.

     
  3. Maraimalai Ilakkuvanar on January 12, 2012 at 9:41 pm

    கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் என் மேற்பார்வையில் இரு மாணாக்கர்கள் எந்த நூல்களை மொழிபெயர்த்தார்கள் தெரியுமா?
    திருமதி.அர்ச்சனா வெங்கடேசன் -நாச்சியார் திருமொழி
    திரு.லேன் லிட்டில்-திருமுருகாற்றுப்படை
    இவ்விரு நூல்களையும் பயிற்றிய நான்கிறித்துவ மத ஆதரவாளனா?
    மொட்டைத் தலைக்கும் முழங்காலுகும் முடிச்சுப் போடுவது போல் என் பயணக்குறிப்புகளுக்கும் தரவுகளுக்கும் இணைப்பு கற்பித்துள்ளீர்கள்.
    அமெரிக்கா முழுமையும் பயணம் செய்யும் வாய்ப்பையும் வார விடுமுறை நாள்களில் பொழிவாற்றும் வாய்ப்பையும் பெற்ற நான் எங்குமே திராவிட இயக்கச் சார்பைக் காட்டும் வகையில் பேசியதில்லை.தொல்காப்பியம் முதல் பாரதியார்,பாரதிதாசன் வரை தமிழின் அனைத்து இலக்கியங்களையும் பற்றியே என் பொழிவுகளை அமைத்துக்கொண்டேன்.திருவாசகம்,திவ்வியப்ப்பிரபந்தம்,திருமுருகாற்றுப்படை குறித்த என் பொழிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

     
  4. Maraimalai Ilakkuvanar on January 12, 2012 at 9:42 pm

    நடுநிலை பிறழா ஒரு பேராசிரியனைத் தவறாகச் சித்திரிப்பதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் ஆதாயம் என்ன?

     
  5. Maraimalai Ilakkuvanar on January 12, 2012 at 9:44 pm

    உங்கள் நூல் முழுமைக்கும் விரிவான விடையைப் பின்னர் வழங்குவேன்.தவறுகளைத் திருத்திக் கொள்ளும் நோக்கம் இல்லையெனின் கூறிவிடுங்கள்.நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

     
  6. ந. உமாசங்கர் on January 13, 2012 at 9:39 am

    பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு,

    ///கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் என் மேற்பார்வையில் இரு மாணாக்கர்கள் எந்த நூல்களை மொழிபெயர்த்தார்கள் தெரியுமா?
    திருமதி.அர்ச்சனா வெங்கடேசன் -நாச்சியார் திருமொழி
    திரு.லேன் லிட்டில்-திருமுருகாற்றுப்படை
    இவ்விரு நூல்களையும் பயிற்றிய நான்கிறித்துவ மத ஆதரவாளனா?///

    உங்கள் உளம் அறிய நீங்கள் கிறிஸ்தவ மத ஆதரவாளராகவோ, ஹிந்து மத எதிர்ப்பாளராகவோ இல்லை என்றால் எமக்கு மன நிறைவே.

    ஆனால், திருவாசகத்தை ஜி.யு. போப் தனது மத மாற்ற முயற்சிகளுக்குப் பயன் படுத்தியது போல நாச்சியார் திருமொழியும் திருமுருகாற்றுப் படையும் பயன்படுத்தப் பட உதவும் வகையில் (மறைமுகமாகக் கூட ) மொழிபெயர்ப்பு என்ற பெயரில் ஒப்பீடுகள் இருக்குமே ஆனால் அது குறித்துச் சுட்டிக் காட்டுவது ஏனைய ஹிந்துக்களின் கடமை ஆகிறது.

    இந்த நோக்கில்தான் உங்கள் திருவாசக- மோர்மன் விவிலிய ஒப்பீடும் கிறிஸ்தவ மத மாற்றத்துக்கு உதவும் வண்ணம் அமையுமா இல்லையா என்பதனை, நான் சுட்டிய கட்டுரைகளைப் படித்து நீங்களே சுய விசாரணை செய்து கொள்ளுங்கள்.

    நீங்கள் உள்பட யார் மனைத்தையும் நோகடிப்பதில் எனக்கு விருப்பம் ஏதும் இல்லை.

    பிரித்தாளும் சதிசெய்த ஐரோப்பியர்கள் நமது தெய்வத் தமிழ் இறை நூல்களையும் (சம்ஸ்கிருத) வேதம் உள்ளிட்ட இறைநூலகளையும் திரித்தாளும் சூழ்ச்சிகளை இப்போது வலுப்படுத்தி வருகிறார்கள் என்பதனைத் தாங்களே ஆய்வு செய்து கண்டு கொள்ளலாம்.

     
  7. பைந்தமிழன் on January 13, 2012 at 1:39 pm

    மதசார்பற்ற பல்கலைக் கழகங்கள் என்ற பெயரில் பாரத நாட்ட்டின் வேரைப் பிடுங்கி எறியவே அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக் கழகங்கள் பணி செய்கின்றன- ஆக்ஸ்போர்ட் பலகலைக் கழகத்தின் சமஸ்கிருதத் துறையில் எதற்காக உலகின் தொன்மையான வேதங்கள் மொழி பெயர்த்தேன் என்பதை மேக்ஸ்முல்லர் கடிதங்களில் காணலாம்.
    1. Max Müller was a British agent, especially employed (in 1847) to write the translations of the Vedas in such a demeaning way so that the Hindus should lose faith in them. His personal letter to his wife dated December 9, 1867 reveals this fact.

    2. He was highly paid for this job. According to the statistical information given on page 214 of the “English Education, 1798-1902” by John William Adamson, printed by Cambridge University Press in 1930, the revised scale of a male teacher was £90 per year and for a woman, £60 in 1853. The present salary of a teacher in London is £14,000 to £36,000 per year, which averages a minimum of at least 200 times increase in the last 146 years. Max Müller was paid £4 per sheet of his writing which comes to £800 of today (1999). This is an incredibly high price for only one sheet of writing. But it’s the general law of business, that the price of a commodity increases with its demand. The British were in such an imperative need to get someone to do this job and Max Müller was the right person, so they paid whatever Max Müller asked for. His enthusiastic letter to his mother dated April 15, 1847 reveals this fact.

    3. Max Müller’s letters dated August 25, 1856 and December 16, 1868 reveal the fact that he was desperate to bring Christianity into India so that the religion of the Hindus should be doomed.

    His letters also reveal that:

    4. He lived in poverty before he was employed by the British, (5) his duplicity in translation was praised by his superiors, and (6) in London, where he lived, there were a lot of orientalists working for the British.

    Letters of Max Müller.
    “The Life and Letters of Friedrich Max Müller.” First published in 1902 (London and N.Y.). Reprint in 1976 (USA).

    1. TO HIS WIFE, OXFORD, December 9, 1867.

    “…I feel convinced, though I shall not live to see it, that this edition of mine and the translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India, and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what that root is, I feel sure, the only way of uprooting all that has sprung from it during the last 3,000 years.”

    2. TO HIS MOTHER, 5 NEWMAN’S ROW, LINCOLN’S INN FIELDS, April 15, 1847.

    “I can yet hardly believe that I have at last got what I have struggled for so long… I am to hand over to the Company, ready for press, fifty sheets each year; for this I have asked £200 a year, £4 a sheet. They have been considering the matter since December, and it was only yesterday that it was officially settled.”

    “…In fact, I spent a delightful time, and when I reached London yesterday I found all settled, and I could say and feel, Thank God! Now I must at once send my thanks, and set to work to earn the first £100.”

    3. TO CHEVALIER BUNSEN. 55 ST. JOHN STREET, OXFORD, August 25, 1856.

    “India is much riper for Christianity than Rome or Greece were at the time of St. Paul. The rotten tree has for some time had artificial supports… For the good of this struggle I should like to lay down my life, or at least to lend my hand to bring about this struggle. Dhulip Singh is much at Court, and is evidently destined to play a political part in India.”

    TO THE DUKE OF ARGYLL. OXFORD, December 16, 1868.

    “India has been conquered once, but India must be conquered again, and that second conquest should be a conquest by education. Much has been done for education of late, but if the funds were tripled and quadrupled, that would hardly be enough… A new national literature may spring up, impregnated with western ideas, yet retaining its native spirit and character… A new national literature will bring with it a new national life, and new moral vigour. As to religion, that will take care of itself. The missionaries have done far more than they themselves seem to be aware of.”

    “The ancient religion of India is doomed, and if Christianity does not step in, whose fault will it be?”

    4. (a) FROM THE DIARY OF MAX MÜLLER. PARIS. April 10, 1845.

    “I get up early, have breakfast, i.e. bread and butter, no coffee. I stay at home and work till seven, go out and have dinner, come back in an hour and stay at home and work till I go to bed. I must live most economically and avoid every expense not actually necessary. The free lodging is an immense help, for unless one lives in a perfect hole… I have not been to any theatre, except one evening, when I had to pay 2 francs for a cup of chocolate, I thought ‘Never again’.”

    (b) TO HIS MOTHER. PARIS, December 23, 1845.

    “…instead of taking money from you, my dearest mother, I could have given you some little pleasure. But it was impossible, unless I sacrificed my whole future… I have again had to get 200 francs from Lederhose, and with the money you have just sent shall manage till January or February.”

     
  8. Sarang on January 13, 2012 at 2:45 pm

    //கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் என் மேற்பார்வையில் இரு மாணாக்கர்கள் எந்த நூல்களை மொழிபெயர்த்தார்கள் தெரியுமா?
    திருமதி.அர்ச்சனா வெங்கடேசன் -நாச்சியார் திருமொழி
    திரு.லேன் லிட்டில்-திருமுருகாற்றுப்படை
    இவ்விரு நூல்களையும் பயிற்றிய நான்கிறித்துவ மத ஆதரவாளனா?
    //

    பிரான்சிஸ் க்ளூனி என்றொரு அமெரிக்கர்

    தான் வைணவத்தில் பெரிதும் ஈர்கப்பட்டடாகவும் சொக்கிப்போனடாகவும் சொன்னார். திருவாய்மொழி பற்றி ஸ்லாகித்து ஸ்லாகித்து புத்தகம் எழுதினார். நம்மூர் வைணவவ சிகாமநிகளுக்கேல்லாம் ஒரே சந்தோசம். அடிக்கடி இந்தியா வந்து இவர்களுடன் கலந்துரையாடி வைணவத்தில் உள்ள பிரபத்தி மார்கத்தை ஸ்லாகித்து ஸ்லாகித்து மயிர் கூச கூச கற்றுத் தெளிந்தார். மறுபடியும் நம்மூர் வைணவர்கள் அடைந்த சந்தோசத்தை சொல்லவா வேண்டும். கடைசியில் இவர்கள் எல்லாருக்கும் ஒரு பெரிய நாமத்தை போட்டார் . பிரபத்தி கான்சப்ட்டை சுட்டு இது முழுக்க முழுக்க விவில்ய வேதாகம கூறு. இது ஏசுவின் வழி. இயேசு பரமபிதாவை இப்படித்தான் ச்லாகித்தார் என்றெல்லாம் சொல்லி ப்ரப்பத்தி என்பதை வைணவர்கள் இயேசு காஸ்மீர் வந்து ஊழியம் செய்த போது திருடிக்கொண்டது போல ஒரு சித்திரம் ஏற்படுத்தி விட்டார் <IMG SRC=" style="height:auto;" /> . கஜேந்திர மோக்ஷத்தையும், இயேசுவின் சிலுவை ஏற்றத்தின் முன் வரும் புலம்பல்களையும் சமன்வயம் செய்யவில்லை அவ்வளவு தான். அதுவும் அடுத்த பத்திப்பில் செய்யலாம்

    நீங்கள் நல்லவராகவே உங்களது பார்வையில் இருந்து விட்டுப் போங்கள். ஹிந்துக்கள் இன்றைக்கு இருக்கும் நிலைமையில் முதலில் எல்லோரையும் சந்தேகப்பட்டு நன்கு தெளிந்த பிறகு நம்புவதே நன்று

  9.  



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

  1. மதிப்பிற்குரிய பேராசிரியர் மறைமலை இலக்குவனார்,

    வணக்கம். உங்களை கிறிஸ்தவ மதச்சார்புடையவர் என நூல் கூறவில்லை. ஆனால் திராவிடவாத சிந்தனையோட்டமும் கருத்தாக்கமும் ஆபிரகாமிய சார்புடையதாக அமைகிறது. அதனை காட்டவே எவ்விதத்திலும் அனுபவ ரீதியிலோ கருத்து ரீதியிலோ இணைக்கவே முடியாத மார்மான் விவிலியத்துடன் திருவாசகத்தை முடிச்சு போடும் மனவோட்டம் காட்டப்படுகிறது. ஒரிஸா கன்னியாஸ்திரிக்காக கவிதை சமைக்கும் தங்களை அதே பாதிரிகள் நடத்தும் கல்விசாலையில் வன்புணர்ச்சிக்கு ஆளாகி மரணித்த தலித் சிறுமியின் மரணம் ஒரு செய்தியாக கூட தொடவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. இத்தனைக்கும் அந்த கன்னியாஸ்திரியின் புகார் கேள்விக்குரியதாகவே உள்ளது என்பது வேறு விசயம். ஐயா ஜார்ஜ் ஹார்ட் தமிழை செம்மொழியாக்க பரிந்துரை செய்தமையையோ அல்லது தாங்கள் பெர்க்லி தமிழிருக்கை பேராசிரியராக நியமிக்கப்பட்டதையோ தவறு என்றோ தாங்கள் செய்த எதுவுமே தவறு என்றோ நூல் கூறவில்லை. எது குறித்து கவிதை சமைக்கிறீர்கள் என்பது தங்கள் சுதந்திரம். பாடு பொருள் தங்கள் சுதந்திரம். இந்தியா சிறுபான்மையினரின் சித்திரவதை கூடமென்றோ அல்லது இந்தியா என்றாலே வட இந்தியா மட்டும்தான் என்றோ கூறுவது தங்கள் சுதந்திரம். அதை தவறு என்று நூல் சொல்லவில்லை. ஆனால் பெர்க்லே தமிழிருக்கையில் நியமிக்கப்பட்ட பேராசிரியரின் எண்ண்வோட்டங்கள் இத்தகையவை என்பதுதான் இந்நூல் சொல்ல வரும் கருத்து. ஒரு சில கருத்தியல் கொண்டவர்களின் வலைப்பின்னலே இங்கு உருவாகிறது என்பதே இந்நூல் சொல்லும் கருத்து. அந்த வலைப்பின்னலை உருவாக்க கட்டமைக்க தங்களுக்கு உரிமை உள்ளது. அதில் தவறேதும் இல்லை. ஆனால் அப்படி கட்டமைக்கப் படுவதை சுட்டிக்காட்ட எமக்கும் உரிமை உள்ளது. அதில் தனிமனித வசைப்பாடல்கள் எதுவும் இல்லை. இதனை புரிந்து கொள்ளும் நுண்ணறிதல் பேராசிரியராக தங்களுக்கு உண்டு என்றே கருதுகிறேன்.

    அன்புடன்
    அரவிந்தன் நீலகண்டன்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard