Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு -கிறிஸ்து யார்? பைபிள் ஓளியில்- நுழைவாயில்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
இயேசு -கிறிஸ்து யார்? பைபிள் ஓளியில்- நுழைவாயில்
Permalink  
 


  பைபிள் எனும் கிறிஸ்துவ சமயத்தின் புராணக் கதை தொகுப்பு நூல், உலகின் பெரும்பாலான மொழிகளில் பெரும் பொருட்செலவில் மொழிபெயர்க்கப்பட்டு, மேலும் ஒவ்வொரு நாட்டிலும் ஆண்டிற்கு பல்லாயிரம் கோடிகள் செலவில் உலகெங்கும் பரப்பப்படும் கதைகளும் ஆகும்.

 

மின்னணுப் புரட்சியும் கைப்பேசியில் வலையுலகமும் உலகை ஒரு சிறு கிராமமாக சுருக்கிவிட்டது. உலகின் பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களின் பல முக்கிய பதவிகளில் இந்தியர் உள்ளனர். நம்மிடையேயும் பல்வேறு சமய மக்கள் வாழ்கின்றனர். தங்கள் சமயமே உயர்ந்தது என திணிக்கபட்ட புனையலை கேட்டு அதே ஊகத்தில் பாரத இறை வரலாற்றை -வழிபாட்டையை அறியாது பேசுவோர் காண்கிறோம்.

 

சமுதாயத்தில் நல்லிணக்கம் தோன்ற அனைத்து மக்க்ளிடையே உரையாடல்கள் அவசியம், அந்த நிலையில் பிற சமயங்களைப் பற்றிய வரலாற்றுப் புரிதல் அவசியம். கிறிஸ்துவம் பற்றிய தற்போதைய பன்னாட்டு பல்கலைக்கழக ஆய்வுகளின் இன்றைய நிலையினை-உண்மைகளை இந்நூலில் தருகிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

ஏசு கிறிஸ்து மற்றும் விவிலியக் கதைகள் மேற்க்கத்திய நாடுகொளோடு கடந்த 1700 ஆண்டுகளாக பின்னிப் பிணைந்தவை, விவிலியம் ரோமன் கத்தோலிக்க சர்ச்சினால் சிறை படுத்தப் பட்டு இருந்தது, ப்ரோட்டஸ்டண்ட் கிளர்ச்சி என எழுந்த போது அதில் ஒரு கோரிக்கை, நூல் மட்டுமே (சோலா ஸ்கிருப்சர்) என்பதால் வெளிவந்தது, ஆயினும் விவிலியக் கதைகள் மீது நேர்மையான ஆய்வுகள் தொடங்கியது  17ம் நூற்றாண்டின் இறுதியில் தான். ஆரம்பத்தில் விவிலியத்தை பதிப்பித்தவர்களை கொன்றது சர்ச், பைபிள்களை வாங்கி அழித்தது. ஆகையினால் விவிலியக் கதைகள் மீது நேர்மையான ஆய்வுகள் தொடங்கியது மேலும் 200 ஆண்டு பின்பு தான். ஆய்வு செய்தோரும் கடுமையாய் விமர்சிக்கப்பட்டனர். கைது செய்தல் - கொலை எல்லாமே நிகழ்ந்தன. தற்போதும் நேர்மையான ஆய்வாளர்கள் சர்ச்சினால் துன்புறுத்தல் தொடர்கிறது.

 

 

பழைய ஏற்பாட்டில் மோசேயின் சட்டங்கள் எனும் கதைகளில் உள்ள ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனத் தொடொங்கி, மோசே வழியில் யோசுவா காலத்தில் இஸ்ரேலின் ஊர்களை 12 கோத்திரங்களுக்கு பிரித்துக் கொடுப்பதாகக் கதை, இவர்களை முற்பிதாக்கள் எனப் பெயர். பாபிலோனில் வாழ்ந்த ஆபிரகாம் என்னும் அன்னியர் இங்கே வந்து தங்கி பஞ்சத்தில் எகிப்து சென்றிட, 400 ஆண்டு பின்பு வந்தேறி எபிரேயர்கள் மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்து, கன்னிப் பெண்களை அனுவபித்தும், மண்ணின் மைந்தர்களின் சொத்துக்களை அபகரித்தலுமே பைபிளின் அடிப்படை



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

  இஸ்ரேலின் எபிரேய மொழி, வளர்சியற்ற மொழி, அம்மொழியின் உயிரெழுத்து கிடையாது, பொகா.8- 9 நூற்றாண்டில் உயிர் எழுத்து சேர்த்தபின் பழைய ஏற்பாடு ஏடுகள் அனைத்தையும் அழித்து மேசோடரிக் படிமான ஏடு எனும் 10- 11ம் நூற்றாண்டின் ஏடுகளே பழைமையானது, மொழி நடையும் பிற்காலத்தது.  

எபிரேய மொழி மொழிரீதியில் வளர்ச்சியற்றது, , உயிர் எழுத்துக்கள், ஏசுவிற்கு 800 ஆண்டு பின்பு தான் உருவாயிற்று, உயிர் எழுத்து சேர்த்து எழுதப்பட்ட மேசோடரிக் படிமான ஏடு 11ம் நூற்றான்டு ஏடு தான் நம்மிடம் உள்ள எபிரேய பழைய ஏற்பாடு ஏடுகள்,மொழி நடையும் பிற்காலத்தது. (பழைய ஏடுகள் அழிக்கப்பட நம்மிடம் பழைய ஏடுகளே கிடையாது). 1947ல்  கிடைத்த சாக்கடல் சுருள்கள் ஏசுவிற்கு ஒரு நூற்றாண்டு முன் தான் இவற்றை மாற்றி இக்கதைகள் இன்றைய  வடிவில் இயற்றப்பட்டன என நிருபிக்கிறது.

சாக்கடல் சுருள்கள்: மேற்குக் கரையோரமுள்ள சாக்கடல் அருகே 11 சிறு குகைகளில் 1946 - 56 இடையே பல பழைய சுவடி சுருள்கள் கிடைத்தன, இவற்றினை 1991 வரை சர்ச் கட்டுப்பட்டில் கொண்டது, பின் அப்படிகள் அச்சில் வந்தன.

இதே போல நாக் அம்மாடி எனும் எகிப்து அருகிலுள்ள இடத்தில் 1945ல் பல காபிடிக் மொழி, கிரேக்க ஏடுகள் கிடைத்தன, இவை 2 ௩ ம் நூற்றாண்டு கிறிஸ்துவ விவிலிய நூல்கள். ஞான மார்க்க சுவிசேஷங்கள், புதிய ஏற்பாட்டில் சேர்க்கப்படாதவை, ரோமன் சர்ச் கொடுமைக்கு பயந்து புதைக்கப்பட்டாது கிடைத்தது 1975ல் அச்சில் வந்தது



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

 சாக்கடல் சுருள்கள், ஞான மார்க்க சுவிசேஷங்கள் இவை விவிலிய ஆய்வினை வரலாற்று நோக்கிற்கு ழைத்துச் சென்றது. எகிப்து, இஸ்ரேல்,சிரியா என இப்பகுதி முழுமையாய் நடந்த தொல்லியல் புதைபொருள் அகழ்வாய்வுகள் முதல்முறையாய் நேர்மையான அறிவியல் ஆய்வுவழியில் காலம் குறிக்கப்பட விவிலியக் கதைகளில் வரலாற்று தன்மை சிறிதும் இல்லை என்பதை, இஸ்ரேல் தொல்லியல் ஆய்வுகளின் இயக்குனர், டெல் அவிவ் பல்கலைக்கழக தொல்லியல் துறையின் பேராசிரியர் இஸ்ரேல் ஃபின்கெல்ஸ்டீன். விவிலியம் தோண்டப்படுகிறது எனும் நூலின் முன்னுரையில் அவர் கூறுவது

The Bible Unearthed  //The world in which the Bible was created was not a mythic realm of great cities and saintly heroes,but a tiny, down-to-earth kingdom where people struggled for their future against the all-too-human fears of war, poverty, injustice, disease, famine, and drought. The historical saga contained in the Bible—from Abraham’s encounter with God and his journey to Canaan, to Moses’ deliverance of the children of Israel from bondage, to the rise and fall of the kingdoms of Israel and Judah—was not a miraculous revelation, but a brilliant product of the human imagination.// 

டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியதுறை இயக்குனர்  இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் தன் நூலின்(The Bible Unearthed) முன்னுரையில் கூறுவது- //விவிலிய உலகம் இஸ்ரேல் ஒரு மிகச் சிறிய வளர்ச்சியற்ற ஒரு சாதாரண பகுதியில் மக்கள் எதிர்காலம் பற்றிய பயங்கள் வருமை, போர் , வியாதிகள், அநியாயங்கள், பஞ்சம் போன்றவையில் தவித்த மக்கள் பகுதி தான், பைபிள் கதைகள் - கூறப்பட்டுள்ள புனையல்கள் - ஆபிரகாமை கடவுள் தேந்தெடுத்தார், பின் பாபிலோனிலிருந்து அவர் கானான் வந்தார் என்பது, எகிப்திலிருந்து மோசே மூலம் மக்களை அடிமைப்பாட்டிலிருந்து மீட்டு, பின் யூதேயா -இஸ்ரேல் நாடுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் இவை ஏதும் ஒரு இறை வெளிப்பாடு இல்லை, மனிதச் சிந்தனையின் கற்பனை வளம்  மிக்கக் கதைகள்.//-

 



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

 உலகின் மூன்று பெருமதங்களில் ஒன்றாய் விளங்கும் கிறிஸ்துவத்தின் துவக்கம் மிகவும் மெதுவானது. கிறிஸ்துவ சமயத் தொடக்க வளர்ச்சியினை ஆய்வு செய்த நூல்கள், அதனை சர்ச் வரலாற்றாசிரியர்களின் விமர்சன அடிப்படையில் காணும்போது, ஏசு பொகா 30 வாக்கில் இறந்தார் எனில், 40 வாக்கில் 1000 பேர் சர்ச் உறுப்பினராய் கிறிஸ்துவரானர், இது ஆண்டிற்கு 2.5% எனும் வேகத்தில் வளர்ந்தது.[iii]  

கிறிஸ்துவ சர்ச்சின் ரோம் ஆட்சியின் கீழிருந்த 5.5 கோடி மக்களுள் பத்தாயிரம் என்ற நிலை எட்ட ஏசுவின் மரணத்திற்கு 100 ஆண்டு பின்பு தான் ஆனது, ஆனால் 10 லட்சம் பேர் எனும் நிலையில் 320 வாக்கில் இருந்த கிறிஸ்துவ மக்கள் தொகை, ரோமன் ஆட்சியில் அதிகார அங்கிகாரம் பெற்றிட அடுத்த 50 ஆண்டினும் 5.5 கோடியைத் தாண்டியது. கிறிஸ்துவம் பெருமதமாய் உரு பெறக் காரணம் ரோமன் ஆட்சியின் ஆதரவே அன்றி வரலாற்று ஏசுவோ, அதிசயங்களோ இல்லை என்பது வரலாற்று உண்மை(iv)

இயேசு கதைகளை சொல்லும் புதிய ஏற்பாடு எனும் 27 நூல் தொகுப்பு, மிகப் பழைய ஏடுகள்  என்பவை ஒரு சிறு புத்தகம் முழுதும் எனில் கூட 4ம் நூற்றாண்டு இறுதி அல்லது பிற்பாடு தான், புதிய ஏற்பாடு முழுமைக்கும் எனில் 6ம் நூற்றாண்டு ஏடுகள் அதிலும் பிற்கால திருத்தங்கள் என உள்ளது,  உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் மாற்றாக வேறு இரு சொற்களாவது உள்ளது, எனவே உள்ள 6000 கிரேக்க ஏடுகள் எவ்விதத்திலும் நம்மை மூல ஏட்டிற்கு அழைத்துச் செல்ல இயலாது.[v]

வரலாற்று நாம்  அறிவது கிறிஸ்துவம் வளர வரலாற்று ஏசுவோ, அவர் கதைகளோ அல்லது அதிசயக் கதைகளின் வரலாற்றுத் தன்மையோ அல்ல. நம்பிக்கையான ஏடுகளும் கிடையாது. ரோமன் ஆட்சிக்கத்தி பலமே கிறிஸ்துவம் பெரும் சம்யமாய் வளரக் காரணம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
RE: இயேசு -கிறிஸ்து யார்? பைபிள் ஓளியில்- நுழைவாயில்
Permalink  
 


சமயங்களை பின்பற்றுவோர் தன் மதத்தின் மீது அதீதப் பற்று வைத்தல் நடைமுறையே. 100 கோடிக்கும் அதிகமானோர் பின்பற்றும் கிறிஸ்துவ சமய சர்ச், விவிலியக் கதைகளை வரலாறு என்பதை வாடிக்கையாய் பரப்புகிறது. மேம்போக்கான ஆய்வு முடிவுகளை 60கள் வரை பரப்பப் பட்ட தவறான ஆதாரங்கள் இன்றும் விளம்பரப் படுத்தப் படுகிறது. 

வரலாற்று ஆய்வு என்பது தொன்மக் கதைகள் அல்ல, புதை பொருள் தொல்லியல் ஆய்வுத் தரவுகள், கல்வெட்டு போன்ற சமகால எழுத்துக்கள், மதம் பரப்ப அன்றி நடுநிலையாளர் எழுதியவை போன்றவையே. இவற்றின் அடிப்படையில் இன்று அமெரிக்க - ஐரோப்பா பல்கலைக் கழக பேராசிரியர்களின் பாட நூல்களின் அடிப்படையிலும், பைபிளியல் மழுப்பலாளர் நூல்கள் அடிப்படையிலும் இந்நுல் உண்மைகளைத் தருகின்றது.

ஹிந்துக்கள் இனி பிற சமய மக்களோடு உரையாடல் செய்யும்போது கிறிஸ்துவம் பற்றிய ஒரு கையேடாக பயன்படுத்தப்படவும் வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

 [1] Professor Dr.Thomas L. Thompson

 

[1] )  https://en.wikipedia.org/wiki/Masoretic_Text

[1] https://en.wikipedia.org/wiki/Dead_Sea_Scrolls

[1] a. Eline Pagels -Gnostic Gospels  

b.https://en.wikipedia.org/wiki/Nag_Hammadi_library

[1] The Bible Unearthed  //The world in which the Bible was created was not a mythic realm of great cities and saintly heroes,but a tiny, down-to-earth kingdom where people struggled for their future against the all-too-human fears of war, poverty, injustice, disease, famine, and drought. The historical saga contained in the Bible—from Abraham’s encounter with God and his journey to Canaan, to Moses’ deliverance of the children of Israel from bondage, to the rise and fall of the kingdoms of Israel and Judah—was not a miraculous revelation, but a brilliant product of the human imagination.// 

[1] Rodney Stark, The Rise of Christianity (1996)  ; W.V. Harris, ed., The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).’ Ramsey MacMullen, Christianizing the Roman Empire 

[1] In 313 the most severe of all the persecution was ended when Emperor Constantine became Christian. The big minority rapidly swelled in to a big majority and 80 years later it had become practically illegal for a citizen of Roman empire not to be Xtan. One hundred years after that the words Roman and Xtans seems to have become interchangeable. …..

The conversion of the empire carried with it eventually the conversion of those tribes who looked to the empire. From 360 onward the visigate Spain, 490- France, 590 -Lombard, 597- Anglo Saoxan, 700 further west and East Germany, 825- Sweden, 995- Norwegian,. One by one the Barbarian tribes accepted the faith usually in obedience to their King, sometimes under the compulsion from already christian ruler almost at the behest of austere Evangelist  Page -531 & p-531 Vol-3, Chambers Encyclopedia

[1] Bart Ehrman, Helmet Koester

[1] 0000



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard