Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு உண்மையில் வாழ்ந்தாரா?


Guru

Status: Offline
Posts: 7474
Date:
இயேசு உண்மையில் வாழ்ந்தாரா?
Permalink  
 


 

கிறிஸ்துவ மத தொன்மக் கதை நாயகன் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்கிறது. இயேசுவைப் பற்றி உள்ள கதைகள் அனைத்திற்கும் ஒரே தரவு விவிலிய சுவிசேஷக் கதைகள் மட்டுமே. சுவிசேஷங்களை முழுமையாய் ஆய்ந்து பார்ப்போம்.ஒருவரை வரலாற்று முறையில் கூற - இந்த ஊரைச் சேர்ந்த - இவர்களின் மகன், - இந்த வருடம் பிறந்தார்- இந்த வருடம் இறந்தார்- அவர் இந்த இந்த ஊர்களில் இயங்கினார் என்பர்

பொகா 30 வாக்கில் இறந்தார் எனப்படும் ஏசு பற்றி 2 தலைமுறை பின்னர் முதலில் வரையப்பட்ட சுவி கதை மாற்கு 70- 80 வாக்கில். இந்த மாற்கு கதையை வைத்து தான் மேலும் பல செவிவழி கதை பாரம்பரியம் கேட்டு மற்ற சுவி கதைகள் எழுந்தன.

ஏசு யார்?

பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்பின் மகன் -  மத்தேயு சுவி கதை

நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பின் மகன  - லூக்கா சுவி கதை

எந்த வருடம் பிறந்தார். 

மத்தேயு சுவி கதை -பெரிய ஏரோது 2 வயது குழந்தைகளை கொல்ல அனுப்பினார்;  ஏரோது பொமு4ல் மரணம் அப்படி எனில் ஏசு பிறப்பு பொமு 6 ௭ல்

லூக்கா சுவி கதை-  சிரியாவின் கவர்னர் கிரேனியு காலத்தில் யூதேயாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொகா 7 - 8ல் பிறந்திருக்க வேண்டும்.

 

லூக்கா 16:10  10 சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனாயிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே இருப்பான். 

அப்போஸ்தலர் 13:16பவுல் எழுந்து நின்றான். ..

30 ஆனால் தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார்! 31 அதன் பிறகு, கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு இயேசுவோடு வந்திருந்தவர்கள் அவரைப் பல நாட்கள் கண்டார்கள். இவர்களே, இப்போது எல்லா மக்களுக்கும் அவரது சாட்சிகள்.

 

அப்போஸ்தலர் 10:34 பேதுரு பேச ஆரம்பித்தான். 

40 ஆனால் மரணத்திற்குப்பின் மூன்றாவது நாள் தேவன் இயேசுவை உயிரோடு எழுப்பினார். இயேசுவை மக்கள் தெளிவாகப் பார்க்கும் வாய்ப்பை தேவன் கொடுத்தார். 41 ஆனால் எல்லா மக்களும் அவரைப் பார்க்கவில்லை. தேவனால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சாட்சிகள் மட்டும் அவரைப் பார்த்தார்கள். நாங்களே அந்த சாட்சிகள்! இயேசு மரித்து பின்னர் எழுந்த பிறகு அவரோடு உண்டோம், குடித்தோம்.

லூக்கா 24:50 எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். 51 இயேசு அவர்களை வாழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டார்.

மாற்கு 14: 28 ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்என்றார்.

மத்தேயு 26:3232 ஆனால் நான் இறந்தபின், மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்என்றார்.

மத்தேயு 28:16 பதினொரு சீஷர்களும் கலிலேயாவில் இயேசு கூறிய மலைக்குச் சென்றார்கள். 17 மலை மீது இயேசுவை சீஷர்கள் கண்டு, வணங்கினார்கள்.

அப்போஸ்தலர் 1:2  நான் இயேசுவின் வாழ்க்கை முழுவதையும் தொடக்கத்திலிருந்து இறுதியில் அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் எழுதியிருந்தேன்…

3…இயேசு மரணத்தினின்று எழுந்த பின்பு 40 நாட்களில் அப்போஸ்தலர்கள் பலமுறை இயேசுவைப் பார்த்தனர். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி இயேசு அப்போஸ்தலர்களிடம் பேசினார்.

6 அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூடியிருந்தார்கள். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீங்கள் யூதர்களுக்கு அவர்களது இராஜ்யத்தை மீண்டும் கொடுக்கும் காலம் இதுவா?” என்று வினவினார்கள்.

9.இயேசு அப்போஸ்தலர்களுக்கு இந்தக் காரியங்களைக் குறித்துக் கூறிய பிறகு வானிற்குள்ளாக அவர் மேலே எடுத்துச் செல்லப்பட்டார். அப்போஸ்தலர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவர் மேகத்திற்குள்ளாகச் சென்றார். பின்னர் அவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை

 

21-22எனவே இன்னொருவன் நம்மோடு சேர்ந்துகொண்டு இயேசு உயிரோடு எழுந்ததற்கு சாட்சியாக இருக்கட்டும். ஆண்டவராகிய இயேசு நம்மோடு இருந்தபோது எப்போதும் நம்மோடு கூட இருந்த மனிதர்களில் ஒருவனாக அவன் இருத்தல் வேண்டும். யோவான் ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து இயேசு பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் நம்மோடு இருந்தவனாக அவன் இருக்க வேண்டும்என்றான்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஏசுவின் பெற்றோர் யார், எந்த ஊர்க்காரர்கள், எப்போது பிறந்தார் என்பதிலேயே இவ்வளவு முரண்பாடுகள்- அதாவது எழுதிய கதாசிரியர்கள் ஏசுவை அறிய வில்லை. புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்

 கதைகள்படி கலிலேயாவைச் சேர்ந்த ஏசு யூதேயா சென்று ஞானஸ்நான யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்று சிலகாலம் கழித்து சீடர்களை சேர்த்து இயக்கம் எனக் கதை.அதாவது ஏசு பெற்றோர்- பிறப்பு கதைகளை அறியாதவர்கள் -இதை அப்போஸ்தலர் நடபடிகள் வசனமும் உறுதிப்ப் படுத்துகிறது. 

 

ஏசு சீடரோடு இயங்கியது எங்கே - எத்தனை மாதங்கள்?  
முதலில் இயற்றிய மாற்கு கதையை ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கியபின் ஞானஸ்நான யோவான் கைதாகிட ஏசு கலிலேயா வந்து அங்கே சீடர்களை சேர்த்து இயங்கியவர் அடுத்து வந்த பஸ்கா பண்டிகைக்கு,  யூதத் தொன்ம கதை சட்டங்கள்படி இஸ்ரேலிற்கான கடவுள் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் ஆலய்த்தில் ஆடு கொலை பலி தர சென்றபோது கைதாகி மரண தண்டனையில் இறந்தார்.
ஏசு சீடரோடு இயங்கியது முழுமையும் கலிலேயாவில் தான், அது ஒரு வருடத்திற்கும் குறைவு என ஏசு இறப்பிற்கு 40 ௪5 வருடம் பின்பு செவிவழி கதைகளைக் கேட்டு மாற்கு கதாசிரியர் தெளிவாக சொல்கிறார். மீதி மூன்று சுவிகளும் மாற்கு சுவியை வைத்து மேலும் பல சேர்த்தவை. இதில் மத்தேயு - லூக்கா மாற்கு கதையின் நடையை அப்படியே பின்பற்றினார்கள் என்றதால் ஒத்தை கதையமைப்பு சுவிகள் எனப் பெயர். 
நான்காவது சுவி: சர்ச் பாரம்பரியப்படி ரோமன் மன்னர் ட்ராஜன் ஆட்சியின் (981117) போது இயற்றப்பட்டது நான்காவது சுவி என்னும் யோவான் சுவிசேஷம். நான்காவது சுவி முழுமையும் ஏசு- சீடர் இடையான உரையாடல் தொடங்கி ஏசுவின் பேச்சு எல்லாமே மற்றவற்றில் மாறுபடுவதாலும் அதன் கிரேக்க நடை, பிற்காலத்தது என்பதால் யோவான் சுவியின் வரலாற்றுத் தன்மையை பைபிள் அறிஞர்கள் ஏற்பதில்லை.
நான்காவது சுவி கதையில் ஏசு சிடர்களில் சிலரை யூதேயாவிலேயே சேர்த்து ஆரம்பித்து, கலிலேயாவிற்கும் - யூதேயாவிற்கும் இடையே பயணித்து இயங்கியதாய் கதை. முன்ன்று பஸ்கா பண்டிகை கூறப்படுகிறது. ஏசுவின் கடைசி 8 மாதங்கள் அதாவது கூடாரப் பண்டிகை(செப்டம்பர்) தொடங்கி - மறு அர்ப்பணிப்பு பண்டிகை(டிசம்பர்) எனச் செல்ல் பஸ்கா ஏப்ரல் வரை முழுமையாய் யூதேயாவில் தான்.
3 பஸ்கா பண்டிகைக்கு ஜெருசலேம் சென்றது உள்ளது எனில், முதலாம் பண்டிகைக்குமுன் ஏசு கலிலேயாவில் இருந்து யூதேயா வந்தபோது பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி ஏசுவின் பொது இயக்கம் 2 வருடம் மற்றும் சில நாட்கள், அதில் கடைசி 8 மாதம் முழுமையும் யூதேயாவில்.

The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.  Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard