Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 05 - Jesus missing 18 years -மறைக்கப்பட்ட 18 வருடங்கள்


Guru

Status: Offline
Posts: 7387
Date:
05 - Jesus missing 18 years -மறைக்கப்பட்ட 18 வருடங்கள்
Permalink  
 


 5 இயேசுவின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட 18 வருடங்கள் 

 

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய பிறப்பு முதல் விவா¢க்கும் இரண்டு சுவிசேஷங்களான மத்தேயுவும், லூக்காவும் அவருடைய முதல் பன்னிரண்டு ஆண்டுகளில் நடைபெற்றச் சம்பவங்களைக் கூறுகின்றன. பின்பு அவரது இறுதி மூன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளை மிக விளக்கமாக சொல்லுகின்றன. ஆனால் அவருடைய பன்னிரண்டு வயது முதல் முப்பது ஆண்டுகள் வரையுள்ள இடைப்பட்ட காலத்தை எல்லா சுவிசேஷ ஆசி¡¢யர்களுமே  மறைத்து விட்டனர்.

லூக்கா 3: 23 ல் இயேசு, மக்களுக்கு அறிமுகமான முப்பது வயதுள்ள ஒரு மனிதராக முன்நிறுத்தப்படுகிறார். லூக்காவின் சுவிசேஷ ஆசி¡¢யர் தொடக்கவசனங்களில் (1: 2,3) இயேசுவின் வாழ்க்கையை ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு எங்களுக்குப் போதித்தவர்கள் ஒப்பித்தவற்றை நன்றாக விசா¡¢த்து அறிந்த நான் இதை எழுதுகிறேன் என்று தொடங்குகிறார். இதை உண்மையென்று எடுத்துக் கொண்டால்அவர் பன்னிரண்டு வயதில் எருசலேம் தேவாலயத்தில் அதிவிவேகத்துடன் மறைநூல் வல்லுனர்களோடு வாதம் செய்ததைக் கண்டவர்களும், அறிந்தவர்களும் அதன் பின்னர் அவரது முப்பது வயதுவரை அவரைப் பார்த்ததேயில்லை என்றாகிறது. பன்னிரண்டு வயதில் அவருக்குள் எழுந்த ஆன்மீக ஞானம் முப்பது வயது வரை எங்கே போய் ஒளிந்துகொண்டிருந்தது? இடைப்பட்ட காலத்தில் நாசரேத்தில் தன் தந்தையுடன் தச்சுத்தொழில் செய்துகொண்டிருந்தார் என்று கிறிஸ்தவர்கள் சொல்லுவார்கள். இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ஏனெனில் அவர் பல ஆண்டுகள் காணாமல்போயிருந்து சொந்த ஊ¡¢லே முப்பது வயதில் அவர் வந்து முதன் முதலில் ஜெப ஆலயத்தில் மக்களுக்கு உபதேசம் செய்யும்போது அவர்கள் ஆச்சா¢யப்பட்டு, இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவனுடைய தாய் மா¢யாள் அல்லவா? இவன் சகோதர்களும், சகோதா¢களும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று தங்களுக்குள் பேசிக்கொண்டர்கள் (மத்தேயு 13: 54,55). மேலும் முப்பது வயதுள்ள ஒரு மனிதனை அவர் அந்த ஊ¡¢ல் தச்சுவேலை செய்து வசிப்பவராக இருந்தால் இவன் தச்சன் அல்லவா என்று கூறுவார்களே தவிற இவன் தச்சனின் குமாரன் அல்லவா என்று கேட்கமாட்டார்கள்.  இவன் சகோதரர்களும், சகோதா¢களும் நம்மிடத்தே இருக்கிறார்கள் அல்லவா என்று அவர்கள் சொன்னதிலிருந்தே, இயேசு அவர்களைப் பல ஆண்டுகள் பி¡¢ந்து போயிருந்தார் என்பது புலனாகிறது.

 

பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் தேவாலயத்தில் ஆசா¡¢யர்களுடன் வாதம் செய்த் நிகழ்ச்சிக்குப் பிறகு இயேசுவின் தந்தையான யோசேப்பைப் பற்றி பைபிளில் எந்தக் குறிப்பும் இல்லை. கானா ஊர் திருமணவீட்டிலும் இயேசுவின் தந்தை வந்ததாகக் குறிப்பு எதுவும் இல்லை. அவருடைய தாய் மட்டும்தான் அங்கேயிருக்கிறாள். இயேசு முப்பது வயதில் தன் சொந்த ஊரான நாசரேத்துக்கு வரும்பொழுது அங்கே அவருடைய தாய் மா¢யாள், சகோதரர்கள். மற்றும் சகோதா¢கள் மட்டுமே இருக்கிறார்கள் (மத்தேயு 13: 55,56). ஆனால் யோசேப்பைப் பற்றி எதுவும் சொல்லப்படாததால் அவர் அந்த 'மறைக்கப்பட்ட வருடங்களில்' இறந்திருக்கவேண்டும்¡¢மத்தியா என்ற ஊரைச்சார்ந்த யோசேப்பு என்பவரைப் பற்றி நான்கு சுவிசேஷங்களிலும் இறுதி அதிகாரத்தில் கூறப்படுகிறது. அவர் ஒரு தனவந்தர், தேவாலய நிர்வாகக்குழுவில் (Sanhedrin) ஆலோசனையாளர், இயேசுவுக்கு அந்தரங்கமான சீடர் மற்றும் அரசியல் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் உள்ளவர். லூக்கா 20: 50,51 ல் அவர் உத்தமனும், நீதிமானுமாக இருந்தாரென்று சொல்லப்படுகிறது. அவர் உயர்ந்த நிலையில் இருந்தபடியால் நேரடியாக ஆளுநர் பிலாத்துவிடம் சென்று மா¢த்துப்போன இயேசுவின் உடலைப் பெற்று அதை தன் குடும்பத்தாருக்காக அமைக்கப்பட்டிருந்த கல்லறையில் நல்லடக்கம் செய்தார் என்று நான்கு சுவிசேஷங்களும் சொல்லுகின்றன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 

ரேமான்ட் கேப்ட் (Raymond Capt) என்ற ஆராய்ச்சியாளர்¡¢மத்தியா ஊரானாகிய யோசேப்பு பி¡¢ட்டிஷ் தீவுகளில் (British isles) உலோக வாணிகம் செய்துவந்தகடல் கடந்து வியாபாரம் செய்த உலோகவணிகர் என்ற செய்தி கிலாஸ்டன்பா¢யில் (Glastonbury) வழங்கும் கர்ணபரம்பரைக் கதைகளில் உள்ளதாகக் கூறுகிறார். சாலமோன் அரசர்  காலத்திலிருந்து பி¡¢ட்டிஷ் தீவுகள் இஸ்ரேல் வசமிருந்தது. அங்கே இஸ்ரேலிய யூதர்கள் ஏராளமாக வசித்துவந்தனர். கி.மு.721 ல் இஸ்ரேல் அசீ¡¢யர்கள் ஆட்சிக்குட்பட்டபோது பி¡¢ட்டிஷ் தீவுகளில் இருந்த யூதர்கள் இங்கிலாந்துஅயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள். யோசேப்பு ரோமானிய அரசில் பத்துப் படைவீரர் கொண்ட ஒரு குழுவுக்கு அதிகா¡¢யாகவும் (Nobilis Decurio) விளங்கினார்.

 

இயேசு பன்னிரண்டு வயதில் எருசலேம் தேவாலயத்தில் மறைநூல் வல்லுனர்களோடு வாதிடும் காலத்திலிருந்தே அ¡¢மத்தியா ஊரானாகிய யோசேப்பு அவரை நன்றாக அறிவார். இயேசுவின் தந்தையான யோசேப்பு மா¢த்தபின் இந்த யோசேப்பு அவருக்கு ஒரு காப்பாளராக (guardian) விளங்கியிருக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. யோசேப்பு ரோமானியரோடு இணைந்து பி¡¢ட்டிஷ் தீவுகள் தவிற பார்தியா (Parthia), ஆசியா முதலிய வெகுதூரத்திலுள்ள நாடுகளுக்கும் உலோக ஏற்றுமதி செய்து வந்தார் என்று தொ¢கிறது. ஒரு காலத்தில் பார்தியா சாம்ராஜ்ஜியத்தில்தற்போதைய இரான்இராக்துருக்கிஆர்மேனியாஜியார்ஜியாஅசர்பைஜான்துர்க்மேனிஸ்தான்ஆப்கானிஸ்தான்தாஜிகிஸ்தான்பாகிஸ்தான்சி¡¢யாலெபனான்ஜோர்டான்பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் இருந்தன. ஏன் இயேசு யோசேப்பின் வணிகக்குழுக்களுடன் சேர்ந்து தன் முப்பது வயது வரையுள்ள காலத்தில் பயணித்துஇந்தியா உட்பட பல நாடுகளுக்கும் சென்று வந்திருக்ககூடாதுஎன்ற ஒரு கருத்து ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நிலவுகிறது. இயேசுவின் பல போதனைகளில் பௌத்தமதக் கருத்துகள் காணப்படுவதற்கு இதுவே காரணமாயிருக்கலாம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard