Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 06 - Jesus Baptism இயேசுவின் ஞானஸ்நானம்


Guru

Status: Offline
Posts: 7387
Date:
06 - Jesus Baptism இயேசுவின் ஞானஸ்நானம்
Permalink  
 


 இயேசுவின் ஞானஸ்நானம்

இயேசு யோவானிடத்தில் ஸ்ஞானஸ்நானம் பெற்றுகொண்டார் என்று முதல் இரண்டு சுவிசேஷங்களும் கூறுகின்றன (மத்தேயு 3: 15,16,17; மாற்கு 1: 9,10,11). இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடன் பா¢சுத்த ஆவி ஒரு புறாவைப்போல் இயேசுவின் மீது இறங்கியது என்று முதல் மூன்று சுவிசேஷங்களுமே குறிப்பிடுகின்றன. உடQனே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி 'நீர் என் நேசகுமாரன், நான் உம்மில் பி¡¢யமாக இருக்கிறேன்' என்று சொன்னதாக மாற்குவும், லூக்காவும் சொல்கிறார்கள். இந்த வார்த்தைகள் இயேசுவை நோக்கி ஜெகோவா நேரடியாகச் சொன்ன வார்த்தைகளாக இருக்கின்றன. மத்தேயுவில் அசா£¡¢ ' இவர் என்னுடைய நேசகுமாரன் , நான் இவா¢ல் பி¡¢யமாக இருக்கிறேன்' என்று சொல்லுகிறது. இது இயேசுவிடம் நேரடியாகச் சொல்லாமல் அங்கே நின்றுகொண்டிருந்த மக்களுக்கு அல்லது யோவான் ஸ்நானகனுக்குச் சொன்னதாகப்படுகிறது. மூன்றாம் சுவிசேஷமான லூக்காவில் இயேசு யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றதாகச் சொல்லப்படவில்லை. இயேசு ஞானஸ்நானம் பெறுவதற்காக யோர்தான் நதிக்கரைக்கு வந்து சேருமுன்னரே காற்பங்கு தேசாதிபதியான ஏரோது யோவானைச் சிறைக்காவலில் வைத்துவிட்டான் (லூக்கா 3: 19-20). அதன் பின்புதான் இயேசு ஞானஸ்நானம் பெற வருகிறார், 'ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்றார்' (லூக்கா 3: 21) அவ்வளவுதான். இயேசு யா¡¢டம் ஞானஸ்நானம் பெற்றார் என்பதும் சொல்லப்படவில்லை. லூக்காவின் சுவிசேஷம் மத்தேயுவைப்போல் மாற்குவின் சுவிசேஷத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்றாவதாக எழுதப்பட்டது என்பது வரலாற்று ஆசி¡¢யர்கள் முடிவு. எனவே லூக்காவின் ஆசி¡¢யர் இயேசு யோவான் ஸ்நானகனிடம் ஞானஸ்நானம் பெற்ற விஷயத்தை நிச்சயம் அறிந்திருக்கவேண்டும். அப்படியானால் அவர் ஏன் யோவான் பெயரை விட்டிருக்கிறார்அவர் திட்டமாய் விசா¡¢த்து அறிந்ததில் யோவான் இயேசு ஞானஸ்நானம் பெறுமுன்பே சிறையில் அடைக்கப்பட்டுவிட்டான் என்ற செய்தி அவருக்குத் தொ¢ந்திருக்கிறது. தான் கேட்டறிந்த விஷயங்களை ஆய்ந்து அவற்றிலுள்ள உண்மையை மட்டும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது என்பதை அவரே தொடக்கத்தில் தியோபிலுவுக்கு எழுதிய குறிப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறார் (லூக்கா 1: 1-4).

சாதாரண மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு பாவமன்னிப்பு பெறுவதற்காக ஞானஸ்நானம் கொடுத்துவரும் யோவான் போன்ற ஒருவா¢டம் மேசியா நிலையில் உள்ள இயேசு வந்து ஞானஸ்நானம் பெறுவது என்பது அவருக்குக் கௌரவக்குறைவு மட்டுமல்ல, பாவங்களுக்கு அப்பாற்பட்ட அவருக்கு அது தேவையும் அல்ல என்று கருதியதாலோ அல்லது இயேசு ஞானஸ்நானம் பெற்ற நிகழ்வே நடைபெறவில்லை என்பதாலோ நானகாம் சுவிசேஷ ஆசி¡¢யர் இயேசு ஞானஸ்நானம் பெற்ற நிகழ்வையே தவிர்த்துவிட்டார். அதனால் யோவானின் சுவிசேஷத்தில், யோவான் ஸ்ஞானகன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது தவிர்க்கப்பட்டு, அவன் 'தேவ ஆவியானவர் இவர்மேல் புறாவைப்போல் வந்து இறங்குவதைக்கண்டேன்' என்று சாட்சி  சொல்வதாக மட்டும் எழுதப்பட்டுள்ளது. அதுவும் எங்கே எப்போது என்று சொல்லவில்லை. மேலும் வானத்திலிருந்து ஒலித்த அசா£¡¢ வாக்கினைப் பற்றி யோவான் எதுவும் பேசவில்லை.

புறந்தள்ளப்பட்ட எபிரேயா¢ன் சுவிசேஷத்தில் (Gospel according to Hebrews) 6 வது சுவடியில் (fragment) "இயேசுவின் தாயும், சகோதரர்களும் யோவான் ஸ்ஞானகன் பாவங்களைக் கழிப்பதற்காக ஞானஸ்நானம் கொடுக்கிறான். நாமும் அவனிடத்தில் சென்று ஞானஸ்நானம் பெறுவோம் என்று சொன்னார்கள். இயேசு அவர்களிடம்: யோவானால் ஞானஸ்நானம் செய்விக்கப்படுவதற்கு நான் பாவம் செய்திருக்கிறேனா என்ன? ஒருவேளை நான் அறியாமல் சொல்லியிருக்கலாம் என்றார் " என்று சொல்லப்பட்டுள்ளது.

7 ஆம் சுவடியில் 'மக்கள் வந்து யோவான் ஸ்நானகனிடம் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்போது இயேசுவும் வந்து பெற்றுக்கொண்டார். அவர் திரும்பும்போது பா¢சுத்த ஆவி ஒரு புறா வடிவத்தில் வந்து  அவர்மேல் இறங்கியது. அதோடு வானத்திலிருந்து ஒரு சத்தம் 'நீர் என் நேசகுமாரன், உம்மில் நான் பி¡¢யமாயிருக்கிறேன்' என்றது. மறுபடியும், 'நான் இன்று உம்மை ஜனிப்பித்தேன்' என்றது. உடனே அவ்விடத்தைச் சுற்றி பிரகாசமான ஒளி சூழ்ந்தது. அதைக்கண்டவுடன் யோவான் இயேசுவை நோக்கி: ஐயா, நீர் யார் என்று கேட்டான். வானத்திலிருந்து சத்தம் உண்டாகி ' இவர் என் நேசகுமாரன், நான் இவர்மேல் பி¡¢யமாயிருக்கிறேன்' என்று மறுபடியும் சொன்னது. உடனே யோவான் இயேசுவின் கால்களில் விழுந்து நீர் எனக்கு ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுகொண்டான். அவர் அவனைத் தடுத்து: இப்படியே நடக்கட்டும், எல்லாவற்றையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்'. இந்த கூற்றுக்கு வலு சேர்க்கிறது மாற்குவின் சுவிசேஷம். மாற்கு 1: 9 ல் 'அந்த நாட்களில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூ¡¢லிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்' என்று சொல்லப்பட்டுள்ளது.

முப்பதாவது வயதில் தன் இறைப்பணியைத் தொடங்கிய இயேசு, அதற்குமுன் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார் என்று முதல் மூன்று சுவிசேஷங்களும் கூறுகின்றன. மேசியாவாகப் பணியைத் தொடங்கப்போகும் இயேசு எதற்காகச் சாதாரண மக்களைப்போல்  ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவேண்டும்? பாவநிவாரணத்திற்கு என்றால், அவர்தான் பாவங்கள் செய்யாதவராயிற்றே. அநேக கிறிஸ்தவர்கள் அவர் தன் எளிமையை எடுத்துக்காட்ட மக்களில் ஒருவராக தானும் வந்து ஞானஸ்நானம் பெற்றார் என்பார்கள். அப்படியானால் அவரும் பிறரைப்போல நீ¡¢ல் மூழ்குமுன் தன் பாவங்களை அறிக்கையிட்டாரா என்ற கேள்விக்கு சுவிசேஷங்களில் பதில் இல்லை. இயேசுவின் காலத்தில் யோவான் ஸ்நானகனைப்போல்  ஞானஸ்நானம் கொடுக்கிற வேறு சில அல்லது பல போதகர்கள் இருந்திருக்கலாம். ஆனால் புதிய ஏற்பாட்டில் அவர்கள் எவரைப்பற்றியும் குறிப்பிடப்படவில்லை. யோவான் மட்டுமே ஸ்நானகன் என்று அழைக்கப்படுகிறார். எஸ்ஸேனியரான யோவான் இயேசுவுக்கு முன்பே யூதேயாவில் பிரபலமான ஒரு போதகராக இருந்திருக்கிறார். அநேக மக்கள் அவரை எலியா தீர்க்கத்தா¢சியின் மறு அவதாரம் என்று எண்ணிகொண்டிருந்தார்கள் (யோவான் 1: 21). சிலர் அவர் வரப்போகும் கிறிஸ்துவாக (மேசியா) இருப்பாரோ என்றுகூட கருதினார்கள் (லூக்கா 3: 15). யோவான் அவ்வளவு பிரபலமானவராக இருந்தார். லூக்காவில் யோவான் இயேசுவுக்கு ஒருவகையில் உறவினராகக் காட்டப்பட்டிருக்கிறார். கன்னிமை கழியாத காலத்தில் கர்ப்பமுற்றிருந்த இயேசுவின் தாயான மா¢யாள் யோவானை வயிற்றில் சுமந்துகொண்டிருந்த அவருடைய தாய் எலிசபெத்தை காணவரும்போது, தாயின் வயிற்றிலிருந்த யோவான் களிப்பால் துள்ளிக்குதித்ததாக லூக்காவில் எழுதப்பட்டிருக்கிறது (லூக்கா 1: 41). யோவான் இயேசுவைவிட வயதில் ஆறுமாதங்கள் மூத்தவர். இப்படி பல தகுதிகள் யோவானுக்கு இருந்ததால் அவா¢டம் ஞானஸ்நானம் பெறுவதே இயேசுவின் தகுதிக்குப் பொருத்தமாயிருக்கும் என்று கருதி சுவிசேஷ ஆசி¡¢யர்கள் அவரை யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றதாக எழுதியிருக்கலாம்.

சிசுவாகத் தன் தாயின் கர்ப்பத்திலிருக்கும்போதே கன்னி மா¢யாளின் கர்ப்பத்திலிருந்த இயேசுவின் வருகையை உணர்ந்து துள்ளிய யோவான், பைபிளில் அங்கீகா¢க்கப்பட்ட சுவிசேஷங்களில் இயேசுவின் வருகையை முன்னறிவித்த யோவான், இயேசு தன்னை நோக்கி வருகையில், 'என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்' என்று மக்களுக்கு இயேசுவை அடையாளம் காட்டிய யோவான், எபிரேயா¢ன் சுவிசேஷத்தில் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது பா¢சுத்த ஆவி அவர்மேல் வந்திறங்கியதையும், வானத்து அசா£¡¢யையும் கேட்டு அதிர்ச்சியடைந்து இயேசுவை நோக்கி, நீர் யார் என்று கேட்கிறார்.

முதல் இரண்டு சுவிசேஷங்களிலும் நீ¡¢ல் மூழ்கிஎழுந்து இயேசு கரைக்கு வந்தவுடன் வானம் திறந்து ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்கும் காட்சியை இயேசு  மட்டுமே காண்கிறார் (மத்தேயு 3: 16; மாற்கு 1: 10). நான்காவது சுவிசேஷத்தில் யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது சொல்லப்படவில்லையானாலும், "ஆவியானவர் புறாவைப்போல் வானத்திலிருந்து இறங்கி இவர்மேல் தங்கினதைக்கண்டேன்" என்று யோவான் தான் மட்டுமே கண்டதை  மக்களுக்குச் சொல்கிறார் (யோவான் 1: 32). மூன்றாவது சுவிசேஷமான லூக்காவில் ஜனங்கள் எல்லாரும் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டிருக்கையில்  பா¢சுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் இயேசுவின்மேல் இறங்கினார் என்று கூறப்படுகிறது (லூக்கா 3: 21-22). யோவானுக்கு அங்கு இடமில்லை, ஏனெனில் அவர் ஏற்கனவே சிறையிலடைக்கப்பட்டுவிட்டார். அப்படியானால் அங்கிருந்த மக்கள் எல்லாரும் பார்த்தனர் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

இயேசுவின் வாழ்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒவ்வொரு சம்பவத்தையும் விவா¢ப்பதில் எத்தனை குழப்பம் பாருங்கள். சுவிசேஷ ஆசி¡¢யர்கள் இயேசுவின் எளிமையைக் காட்ட இந்நிகழ்வை உருவாக்கவில்லைமாறாக இயேசு தன் இறைப்பணியை தொடங்குமுன் அவர் தேவனுடைய குமாரன்மேசியாவாக அவதா¢த்திருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்காகவேஏற்கனவே இயேசு பா¢சுத்த ஆவியின் மகனாய்ப்பிறந்தார் என்று அறிவித்திருந்தாலும்மீண்டும் ஒருமுறை பா¢சுத்த ஆவி அவர்மேல் இறங்கவும்வானத்திலிருந்து ஜெகோவா 'இவர் என் நேசகுமாரன்என்று அசா£¡¢யாகச் சான்று அளிக்கவும்யோவான் ஸ்நானகன் 'இதோ தேவ ஆட்டுக்குட்டிஎன்று சாட்சி அளிக்கவும் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

 

முதல் மூன்று சுவிசேஷங்களில் இயேசு ஞானஸ்நானம் பெறுகின்ற நிகழ்விலும்நான்காவது சுவிசேஷத்தில் யோவானின் வாய்மொழியாகவும் பா¢சுத்த ஆவி இயேசுவின் மீது புறாவைப்போல் இறங்கியதாகக் கூறப்படுகிறது. மத்தேயுவும் லூக்காவும் இயேசுவின் தாயான மா¢யாள் பா¢சுத்த ஆவியால் இயேசுவைக் கர்ப்பம் தா¢த்தாள் என்று கூறுகின்றனர். ஏற்கனவே பா¢சுத்த ஆவியின் குமாரனாக அவதா¢த்துள்ள இயேசுவின்மேல் இரண்டாம் முறையாக பா¢சுத்த ஆவி இறங்கவேண்டியதின் அவசியம் என்னசில கிறிஸ்தவ மறையியலாளர்கள் என்னதான் இயேசு உள்ளுக்குள் தெய்வீகநிலையில் இருந்தாலும் மேசியா பணியைத் தொடங்குமுன் அவருக்கு வெளிலிருந்து ஒரு தெய்வீகத் தூண்டுதல் தேவைப்பட்டதுஆகையால் ஆவியானவர் மீண்டும் அவர்மேல் இறங்கினார் என்று சொல்லுகிறார்கள். இது பொதுவாகப் புத்தர்மகாவீரர்குரு நானக்நபிகள் நாயகம் போன்ற இறைநிலை நோக்கிப் பயணித்த மகான்களுக்குப் பொருந்தும். மகான்களைப் பொறுத்தவரை அகத்து தெய்வீக இயல்பும் புறத்து தெய்வீகத் தூண்டுதலும் தலைகீழ் விகிதத்தில் உள்ளது என்று மறையியலாள்ர் ப்ரெடொ¢க் ஸ்ட் ராஸ் (Frederick Strauss) கூறுகிறார். அதாவது முழுமையான தெய்வீக இயல்பு அகத்தில் இல்லாத மகான்களுக்குப் புறத்திலிருந்து தெய்வீகத்தூண்டுதல் மிகுந்த அளவில் தேவைப்படுகிறது. மேற்கூறிய மகான்களுக்கு அவர்கள் தெய்வீகநிலையடைய  மிகக்குறைந்தத் தெய்வீகத் தூண்டுதலே புறத்திலிருந்து தேவைப்பட்டது.  இயேசுவோ பிற மகான்களைப்போலில்லாமல் இயற்கைக்குமீறிய (supernatural) ஜனனத்தில்பா¢சுத்த ஆவியானவருக்கு நேரடியாக ஏகபுத்திரனாய்ப் பிறந்தவர். அப்படியிருக்குங்கால் அவர் முழுமையான தெய்வீக இயல்புடன் பிறந்திருக்கிறார் என்றுதானே பொருள்அவருக்கு மீண்டும் பொ¢ய அளவிலான ஒரு தெய்வீகத் தூண்டுதல் தேவை என்பதை நம்ப இயலவில்லை.

வானத்து அசா£¡¢ சொல்கின்ற, 'இவர் என்னுடைய நேசகுமாரன்நான் இவா¢ல் பி¡¢யமாயிருக்கிறேன்', 'இவர் என்னுடைய ஒரே பேறான குமாரன்நான் இவரை ஜனிப்பித்தேன்என்று பலவாறாக சுவிசேஷங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைப்பிரயோகங்கள் பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களிலிருந்தும் பிற மறைநூற்களிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. சங்கீதம் 2: 7 ல்  தாவீது, ''கர்த்தர் என்னை

நோக்கி: நீர் என்னுடைய குமாரன்இன்று உம்மை நான் ஜனிப்பித்தேன் என்றார்" என்கிறார். எபிரேயா¢ன் சுவிசேஷத்தில் 7 ஆம் சுவடியில் வானத்திலிருந்து ஒரு சத்தம் 'நீர் என் நேசகுமாரன்உம்மில் நான் பி¡¢யமாயிருக்கிறேன்என்றது. மறுபடியும், 'நான் இன்று உம்மை ஜனிப்பித்தேன்என்கிறது. "இதோநான் ஆதா¢க்கிற என் தாசன்நான் தொ¢ந்துகொண்டவரும்என் ஆத்துமாவுக்குப் பி¡¢யமானவரும் இவரேஎன் ஆவியை இவர்மேல் அமரப்பண்ணினேன்" என்ற வா¢கள் ஏசாயா 42: 1 ல் உள்ளன. ஆதியாகமம் 22: 2 ல் ஜெகோவா ஆபிரகாமை நோக்கி: உன் ஏகபுத்திரனும்உன் நேசகுமாரனுமாகிய ஏசாக்கை நீ அழைத்துக்கொண்டு மோ¡¢யா தேசத்துக்குப் போ என்று சொல்லுகிறார். ஏசாயா 61: 2 ல் "தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்" என்று தீர்க்கத்தா¢சி கூறுகிறார். அப்பொழுது சாமுவேல் தாவீதை அபிஷேகம் பண்ணினான். அந்நாள் முதற்கொண்டுகர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்" என்று 1 சாமுவேல் 16: 13 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்தேயு 12: 17-18 ல் சுவிசேஷத்தின் ஆசி¡¢யர் ஏசாயா 42: 1 ல் சொல்லப்பட்டுள்ள வா¢களை இயேசுவைப் பற்றிக் கூறப்பட்டத் தீர்க்கத்தா¢சனமாகவே இயம்புகிறார். அதே வா¢களை சற்றே மாற்றி இயேசுவின் ஞானஸ்நான நிகழ்வில் எடுத்தாண்டிருக்கிறார்.

தேவ ஆவியானவர் புறா வடிவில் வந்து தலையில் இறங்கும் காட்சி புறந்தள்ளப்பட்ட யாக்கோபுவின் சுவிசேஷத்தில் (Gospel according to James / Protevanjalium of Jacobi) உள்ளது. அதில் 9 ஆம் அதிகாரத்தில் இயேசுவின் தாயான மா¢யாளுக்கு எவ்வாறு திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளது. தேவாலயத்தில் நிகழ்ந்த சுயம்வரம் போன்ற நிகழ்ச்சியில்  முதிர்வயதினரான யோசேப்பும் வந்து நிற்கையில் ஒரு புறா அவர் தலையின்மேல் இறங்க  அவர் மா¢யாளின் மணமகனாக பிரதான ஆசா¡¢யர்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுத் தேர்ந்தெடுக்கபட்ட வரலாறு 6-7 வசனங்களில் உள்ளது. சுவிசேஷ ஆசி¡¢யர்கள் மேற்கூறிய புத்தகங்களிலுள்ள இந்த வசனங்களில் பொருத்தமான வார்த்தைகளை எடுத்து தேவையான இடங்களில் இட்டு தங்கள் சுவிசேஷங்களிலுள்ள இயேசுவின் ஞானஸ்நானக் காட்சிகளை நிறைவு செய்திருக்கிறார்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard