Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 07 Temptation -சபலம்


Guru

Status: Offline
Posts: 7387
Date:
07 Temptation -சபலம்
Permalink  
 


சபலம

மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா ஆகிய முதல் மூன்று சுவிசேஷங்களிலும் பா¢சுத்த ஆவியானவரால் இயேசு வனாந்தரத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கே சாத்தான் அவருக்கு ஆசைகாட்டி மயக்க முயற்சிக்கும் படலம் விவா¢க்கப்பட்டுள்ளது. மனோதிடம் உள்ள சாமான்ய மனிதர்களே  ஆசைகாட்டுவோருக்கு இணங்க மறுக்கும்போது கடவுளின் குமாரன் என்று வர்ணிக்கப்படும் இயேசு எங்ஙனம் சாத்தானுக்கு உடன்படுவார்? சாத்தானின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.

திடமான மனம் இல்லாதவர்கள் ஐம்புலன்களின் ஆளுகைக்குட்பட்டு ஆசைகாட்டுவோ¡¢ன் வார்த்தைகளுக்குப் பணிந்து சபலப்பட்டு அவர் சொல்லியபடியே செய்து துன்பவலையில் வீழ்வர். மனதில் திடம் எங்கிருந்து வருகிறது? உள்ளத்தில் இறைவனுடைய பிரசன்னம் இருந்தால் சூழ்ச்சிக்குப் பணியாத மனோதிடம் தானே வரும். அதனால்தான் "ஐம்புலக் கள்வர் எம்அகத்தினில் புகும்பொழுது, அகத்தினில் நீ இலையோ அருணாச்சல" என்று இறைவனிடம் கேட்கிறார் ரமண மகா¢ஷி. இயேசுவின் உள்ளத்தில் இறைவன் இல்லாமல் இருப்பானா? இறைவன் இருப்பான் என்று நமக்குத் தொ¢கிறது, ஆனால் பா¢சுத்த ஆவியானவருக்குத் தொ¢யவில்லைஇயேசுவின் ஞானஸ்நானம் முடிந்த கையோடு ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்துக்குக் கொண்டுபோய் சாத்தானிடம் ஒப்படைப்பதாக  முதல் மூன்று சுவிசேஷங்களிலும் சொல்லப்படுகிறது.அவர் அங்கு நாற்பதுநாட்கள் உபவாசம் இருந்து சாத்தானின் ஆசைகாட்டுதலுக்கு உட்பட்டு அவனுக்கு உடன்படாமல் மீண்டுவருகிறார். இயேசு பா¢சுத்த ஆவியினால் உற்பவிக்கப்பட்ட தேவகுமாரன், மீண்டும் அவருடைய ஞானஸ்நானத்தின்போது ஆவியானவர் அவர்மேல் புறாவைப்போல் இறங்கியதன் மூலமும், வானத்து அசா£¡¢ இவர் என் நேசகுமாரன், இவர்மேல் பி¡¢யமாயிருக்கிறேன் என்று சொன்ன வாக்கின்படியும் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ''இயேசு பா¢சுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டு திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்துக்குக் கொண்டுபோகப்பட்டார்" என்று லூக்கா 4: 1 ல் சொல்லப்பட்டுள்ளது.  பா¢சுத்த ஆவியானவர்  தன்னால் நிரம்பபெற்ற இயேசுவின் உள்ளம் திடமாயிருக்கிறதா என்று உடனே சோதித்து அறியவேண்டியதன் அவசியம் என்ன? தந்தையான அவருக்குத் தன் குமாரனாகிய  இயேசுவின் குணநலன்கள் தொ¢யாதா? அதுவும் சாத்தானைக்கொண்டு இயேசுவை சோதிக்கவேண்டுமா? பழைய ஏற்பாட்டில் ஜெகோவா (கர்த்தர்) யோபு என்ற நேர்மையான மனிதனைச் சாத்தானைக்கொண்டு சோதிக்கிறார். புதிய ஏற்பாட்டில் ஆவியானவர் இயேசுவைச் சாத்தானைக்கொண்டு சோதிக்கிறார். யோபுவும் இயேசுவும் ஒன்றா? இயேசுவின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களில் அநேகம் பகுத்தறிவுடன் சிந்திக்கப்படாமல் பழைய ஏற்பாட்டுச் சம்பவங்களைச் சார்ந்தே புனையப்பட்டுள்ளன.

 

இயேசு பிசாசினால் (சாத்தான்) சோதிக்கப்படுவற்காக வனாந்தரத்துக்குக் கொண்டுபோகப்பட்டார் என்று சுவிசேஷங்கள் சொல்லுகின்றன. 'யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புகென்று மனந்திருந்துதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான்' என்று மாற்கு 1: 4 ல் கூறப்பட்டிருக்கிறது.  வனாந்தரத்தில் யோர்தான் நதிக்கரையில் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட இயேசுவை ஆவியானவர் வனாந்தரத்துக்கு கொண்டுபோனார் என்று சொன்னால் முரண்பாடாக இருக்கிறதல்லவா? முதல் மூன்று சுவிசேஷ ஆசி¡¢யர்களும் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள்.

 

நான்காவது சுவிசேஷமான யோவானில், இயேசுவுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்த சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசா¡¢யரையும், லேவியரையும் யோவானிடத்து அனுப்பி ஞானஸ்நானம் கொடுக்கும் அவன் யார் என்று கேட்டுவரச் செய்தார்கள். அவர்களிடம் யோவான் இயேசுவைப் பற்றி முன்னறிவிப்பு சொல்லுகிறான். மறுநாளில் இயேசு தன்னிடத்தில் வருவதைக் கண்டு: என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே அவர் இவர்தான் என்று மக்களுக்கு அடையாளம் காட்டுகிறான் (யோவான் 1:29). மறுநாளிலே யோவானும் அவனது சீடர் இரண்டுபேரும் நிற்கும்போது, இயேசு நடந்துபோகிறதைக் கண்டு, இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்கிறான். (யோவான் 1: 35-36). மறுநாளில் இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்தார் (யோவான் 1: 43). மூன்றாம் நாளிலே இயேசு  கலிலேயாவிலுள்ள கானா ஊ¡¢லேயிருந்த ஒரு கல்யாணவீட்டில் இருந்தார் (யோவான் 2: 1-2). முதல் மூன்று சுவிசேஷங்களில் ஞானஸ்நானம் முடிந்தவுடன் ஆவியானவராலே வனாந்தரத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு சாத்தானால் சோதிக்கப்பட்டு அங்கே நாற்பதுநாள் உபவாசம் இருந்த இயேசு, நான்காம் சுவிசேஷத்தில் வனாந்தரத்துக்குச் செல்லாமல், கலிலேயா சென்று கானா ஊர் கல்யாணவீட்டில் தண்ணீரைத் திராட்சைமதுவாக்கி அற்புதம் நிகழ்த்திக்கொண்டிருந்தார்! யோவான் சுவிசேஷத்தின் ஆசி¡¢யர் சாத்தானால் இயேசு சோதிக்கப்படுவது அவரது தகுதிக்கு ஏற்றதல்ல அன்று கருதி சாத்தான் ஆசைகாட்டுதலையும், நாற்பதுநாட்கள் உபவாசத்தையும் தவிர்த்திருக்கலாம். மேலும் நாற்பதுநாட்கள் உபவாசம் இருப்பது ஒரு மனிதனால் இயலாத கா¡¢யம் என்றும் கருதியிருக்கலாம். இந்த நாற்பது நாட்கள் உபவாசமும், பழைய எற்பாட்டில் மோசே சினாய் மலையின்மேல் ஏறி நாற்பது நாட்கள் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் கர்த்தரோடே இருந்தான் (யாத்திராகமம் 34: 28) என்று சொல்லபட்டிருப்பதைப் பின்பற்றி ஒத்தமை சுவிசேஷங்களில் எழுதப்பட்டிருக்கலாம். இயேசுவும் நாற்பதுநாள் இரவும் பகலும் உபவாசமிருந்தார்  என மத்தேயு 4: 2 ல் சொல்லப்பட்டுள்ளது.

 

இயேசு உபவாசம் இருந்த நாற்பதுநாளும் சாத்தான் அவரைச் சோதிக்கவில்லை, அவருடைய உபவாசம் முடிந்தபின்பே அவா¢டம் வந்து மூன்று விஷயங்களில் அவரைச் சோதிக்கிறான். நாற்பதுநாள் உபவாசம் இருந்து பசியோடிருந்த இயேசுவிடம்: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கற்களை அப்பங்களாகும்படிச் செய்யும் என்றான்.அதற்கு அவர்: மனிதன் அப்பத்தினாலே மட்டுமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார் (மத்தேயு 4: 4). ஏற்கனவே கூறியதுபோல் இயேசுவின் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளையே ஆதாரமாகக் கொண்டு சுவிசேஷ ஆசி¡¢யர்கள் எழுதியுள்ளார்கள். இங்கும் சாத்தானின் முதல் சோதனைக்கு இயேசு அளித்த பதில் உபாகமம் 8: 3 லிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

 

உடனே சாத்தான் இயேசுவை இரண்டாவது சோதனைக்காக எருசலேம் நகரத்துக்குக் கொண்டுபோய் தேவாலயத்து உப்பா¢கையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும், அவர் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக்கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்றான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பா¢ட்சை பாராதிருப்பாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார் (மத்தேயு 4: 6-7). இதில் சாத்தான் பேசிய வாசகங்கள் பழைய ஏற்பாட்டில் சங்கீதம் 91: 11-12 ல் உள்ளன. இதைத்தான் சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்லிவைத்தார்கள் போலும்! இயேசுவின் பதில் உபாகமம் 6: 16 லிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

 

மறுபடியும் சாத்தான் மூன்றாம்முறையாக அவரைச் சோதனை செய்ய மிகவும் உயர்ந்த மலையின்மேல் அவரைக் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்துகொண்டால், இவையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ, சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவர்க்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார் (மத்தேயு 4: 8-10). ( இயேசுவின் இந்தப் பதில் உபாகமம் 6: 13 ல் உள்ளது.

 

உயர்ந்த மலையின்மேல் நின்று பார்த்தால் உலகத்தின் ராஜ்யங்கள் எல்லாம் தொ¢யும் என்ற கருத்து அறிவியலுக்கு எதிரானது. யூதர்கள் உலகம் தட்டையானது  என்று நம்பினார்கள்.

சூ¡¢யன் கிழக்கில் உதித்து மேலெழும்பிப் பயணித்து மேற்கில் பூமியின் விளிம்பில் மறைந்து பூமியின் அடிபுறமாகச் சுற்றி மீண்டும் அடுத்தநாள் காலை கிழக்கில் உதிக்கிறான் என்ற தவறான நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். பைபிளில் உலகம் தட்டையானது என்ற கருத்தைச் சொல்லியிருப்பதால், கிறிஸ்தவர்களும் இதையே பல நூற்றாண்டு காலமாய் நம்பிக்கொண்டிருந்தார்கள். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலிய அறிஞர் கலிலியோ சூ¡¢யன் பூமியைச் சுற்றவில்லை, சூ¡¢யன் நடுவில் இருக்க, உருண்டையான பூமிதான் சூ¡¢யனைச் சுற்றிவருகிறது என்ற அறிவியல் உண்மையை எடுத்துச் சொன்னார், அதற்காகக் கிறிஸ்தவசபை (church) அவரைச் சிறையிலிட்டத

சாத்தான் இயேசுவை நோக்கி: நீர் என்னைப் பணிந்துகொண்டால் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் நான் உமக்குத் தருவேன் சொல்லுமளவுக்கு அவனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இந்த கேள்விக்கு இயேசுவே பதில் சொல்லுகிறார். யோவானின் சுவிசேஷத்தில் மூன்று இடங்களில், இயேசு சாத்தானைக் குறித்துப் பேசும்போது அவனை 'இந்த உலகத்தின் அதிபதி' என்று சொல்லுகிறார் (யோவான் 12: 31; 14: 30; 16: 11). (ஆங்கில மொழிபெயர்ப்பு பைபிள்களில் அதிபதி என்ற சொல்லுக்கு prince (இளவரசன்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிரேக்கமொழியிலுள்ள மூலநூல் புதிய ஏற்பாட்டில் 'ஆள்கிறவன்' என்ற பொருளில் archon என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது).

த்து உயிர்த்தெழுந்த இயேசு கலிலேயாவில் தன் சீடர்களுக்குத் தா¢சனம் கொடுக்கும்போது, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார் (மத்தேயு 28:18). லூக்கா 4: 6 ல் சாத்தான் கூறுகிறான்: "உலகத்து சகல ராஜயங்களின் மேலுள்ள அதிகாரத்தையும், மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது, எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்". இது என்ன முரண்பாடு? உண்மையில் பூமியின்மேலுள்ள அதிகாரம் யாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, இயேசுவுக்கா அல்லது சாத்தானுக்கா?

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard