Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 08 Jesus Marriage


Guru

Status: Offline
Posts: 7387
Date:
08 Jesus Marriage
Permalink  
 


 இயேசு திருமணம் செய்தாரா?

இயேசு திருமணம் செய்துகொண்டாரா இல்லையா என்பது இன்னும் மறையியல் ஆய்வாளர்களிடையே கேள்விக்குறியாகவே இருக்கிறது. யூதர்களுக்கு இளம்வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கடமை அவர்களுடைய வேதத்தில் உணர்த்தப்பட்டிருந்தது. இயேசுவின் காலத்தில் மதத்தலைவர்கள் பதினெட்டு வயதை திருமணத்துக்கு ஏற்ற வயதாக நிர்ணயித்திருந்தனர். இருபது வயதுக்குப் பின்னரும் திருமணம் செய்யாமலிருந்தால் கடவுளின் சாபத்துக்கு ஆளாக நோ¢டும் என்று அவர்கள் வேதம் சொல்லுகிறது. ஆனால் பருவம் எய்துமுன் செய்யப்படும் பாலிய விவாகம் இருபாலருக்கும் தடை செய்யப்பட்டிருந்தது. இருபது வயதுக்குப் பின் தகுந்த காரணம் இன்றி திருமணம் செய்யாமலிருப்போரை மணம் செய்துகொள்ளும்படி நீதிமன்றம் நிர்பந்திக்கும். யூதர்களில் வாழ்நாள் முழுதும் திருமணம் செய்யாமலிருந்தவர்கள் மிக மிக அபூர்வம்.

சுவிசேஷ ஆசி¡¢யர்கள் யோசேப்பை இயேசுவின் தந்தை என்று பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள். தன் மகனுக்கு திருமணவயது வந்தவுடன் அவனுக்கேற்ற ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்வது யூத மதத்தைப் பின்பற்றும் ஒரு தந்தையின் கடமை என்று சொல்லப்பட்டிருக்கிறது. கடமையுணர்ந்த தந்தையாக யோசேப்பு இருந்திருந்தால், இயேசுவின் வாழ்க்கையில் அவரது பன்னிரண்டு வயது முதல் முப்பது வயது வரை நடைபெற்ற சம்பவங்கள்  மறைக்கப்பட்டுள்ள வருடங்களில் அவரது திருமணத்தை நடத்தி வைத்திருக்கலாம்.

யோவான் 2 ஆம் அதிகாரத்தில் (1 -10) விவா¢க்கப்பட்டுள்ளஇயேசு தண்ணீரைத் திராட்சை மதுவாக மாற்றி அற்புதம் செய்த, கானா ஊ¡¢ல் நடைபெற்ற திருமணம் அவருடையதுதான் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இயேசுவும், அவருடைய சீடர்களும் அந்தக் கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இயேசுவின் தாயும் (முன்னதாகவே போய்) அங்கேயிருந்தாள். கல்யாணவிருந்து நடைபெறும்போது, திராட்சை மது (wine) குறைவுபட்ட போது அவருடைய தாய் அவா¢டம் வந்து திராட்சை மது இல்லை என்றாள்.  அதற்கு இயேசு : ஸ்தி¡£யே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவரது தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.

யூதர்கள் தங்களைச் சுத்திகா¢க்கும் முறைமையின்படி , ஒவ்வொன்றும் இரண்டு அல்லது மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே இருந்தன. இயேசு பணியாட்களை நோக்கி ஜாடிகளிலே தண்ணீரை நிரப்புங்கள் என்றார். பின்னர்

அவர்களை நோக்கி: நீங்கள் இப்போது மொண்டு, பந்திவிசா¡¢ப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார். அந்தத் திராட்சை மது எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்கரருக்குத் தொ¢ந்ததேயன்றி, பந்தி விசா¡¢ப்புக்காரனுக்குத் தொ¢யாததால், அவன் திராட்சை மதுவாக மாறிய தண்ணீரை ருசிபார்த்தபோது  மணவாளனை அழைத்து, எந்த மனிதனும் முதலில் நல்ல திராட்சை மதுவைக் கொடுத்து ஜனங்கள் திருப்தியடைந்தபின் ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல மதுவை இதுவரை வைத்திருந்தீரே என்றான்.

இதில் குறிப்பாகப் பார்க்கவேண்டிய விஷயங்கள் என்னவென்றால், இந்த திருமணம் யாருடையது என்பது சொல்லப்படவில்லை. இயேசுவின் தாய் திருமணவீட்டில் முன் கூட்டியே போய் அங்கேயிருக்கிறாள். திருமணவிருந்தில் திராட்சை மது  குறைவுபட்டபோது இயேசுவின் தாய் ஏன் அவா¢டம் வந்து சொல்லவேண்டும்? உறவினர் திருமணம் என்றாலும் விருந்தினர்களை உபசா¢ப்பதில் இயேசுவின் தாய்க்கு அப்படி என்ன ஒரு கடமை உந்துதல்? அதில் இயேசுவை ஏன் ஈடுபடுத்த வேண்டும்? அவர், ஸ்தி¡£யே, உனக்கும் எனக்கும் என்ன, என்று சொன்னதின் பொருள் என்ன? ஆதியாகமம் 3 ஆம் அதிகாரம் 24 ஆம் வசனத்தில் " இதனிமித்தம் (திருமணம் ஆனதும்) புருஷன் தன் தகப்பனையும், தன் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான்" என்று சொல்லப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் மாற்கு 10: 7 ல் இக்கருத்தை மீண்டும் இயேசுவே வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனைக் கருத்தினில் கொண்டு இயேசு தன் தாயை நோக்கி வேடிக்கையாக, எனக்குத்தான் திருமணமாகிவிட்டதே, இனி உனக்கும் எனக்கும் என்ன, என்று கேட்டிருக்கலாம். இயேசுவின் தாயும் அதைத் தன் மகன் தன்னோடு பேசும் வேடிக்கைப் பேச்சாகவே எடுத்துகொண்டு, அதைப் பொருட்படுத்தாமல் வேலைக்காரரை நோக்கி அவர் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுப் போகிறாள். இயேசு அற்புதம் செய்து வரவழைத்த நல்ல திராட்சை மதுவை ருசிபார்த்த பந்திவிசா¡¢ப்புக்காரன் அது எப்படி வந்தது என்பதை அறியாததால் மணவாளனிடம் வந்து நல்ல திராட்சை மதுவைக் கடைசிவரை வைத்திருந்தீரே என்று பாராட்டுகிறான். இங்கேயும் மணவாளன் யார் என்றும்,  அவர் இயேசுவுக்கு என்ன உறவு என்றும் சொல்லப்படவில்லை. பந்திவிசா¡¢ப்புக்காரன் மணவாளனை நல்ல மதுவைக் கடைசிவரைக் கொடுத்ததற்காகப் பாராட்டுவதால்மணவாளனுக்கு விருந்தினரை நன்றாக உபசா¢க்கவேண்டிய பொறுப்பு இருக்கிறது என்று தொ¢கிறது. இயேசு அந்தத் திருமணத்தில் விருந்தினரை  நன்றாக உபசா¢க்கவேண்டும் என்ற பொறுப்புணர்வோடு, திராட்சை மது குறைவுபட்டபோது, தன் தாயின் வேண்டுகோளுக்கிணங்க புதிய திராட்சை மதுவை வரவழைத்துக் கொடுத்தார் என்றால் அவர்தானே மணவாளன்! இது இயேசுவுக்கும் மகதலேனா மா¢யாளுக்கும் நடைபெற்ற திருமணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். தொடக்க காலக் கிறிஸ்தவ மதப்போதகர்கள் இயேசு திருமணம் ஆனவர், குடும்பஸ்தர், குழந்தைகளுடையவர் என்பது உலகுக்குத் தொ¢யவந்தால், அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்துவதில் சிக்கல் வரும் என்று மறைத்துவிட்டார்கள். இந்த காரணத்தினால் முதல் மூன்று சுவிசேஷங்களிலும் இந்த திருமணமோ, இயேசு தண்ணீரைத் திராட்சை மதுவாக மாற்றிய அற்புதமோ சொல்லப்படவில்லை என்று தொ¢கிறது.

அங்கீகா¢க்கப்பட்ட நான்கு சுவிசேஷங்களிலும் (Canonical gospels), அது தவிர விலக்கப்பட்ட சுவிசேஷங்களில் (Gnostic gospels) தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளவைகளிலும் இயேசுவைப் பின்பற்றியவர்களில் அநேக பெண்கள் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அவர்களில் பலர் இயேசுவின் ஊழியத்துக்குப் பணம் கொடுத்து உதவியிருக்கிறார்கள். 'அவர் பொல்லாத ஆவிகளையும், வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்தி¡£களும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனா என்னப்பட்ட மா¢யாளும், ஏரோதின் கா¡¢யக்காரனாகிய கூசாவின் மனைவியாகிய யோகன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்துகொண்டுவந்த அநேகம் ஸ்தி¡£களும் அவருடனே இருந்தார்கள் (லூக்கா 8:1 -3). அவர்களில் மிக முக்கியமாகக் கருதப்படக்கூடியவள் மகதலேனா மா¢யாள் ஆவாள்.

 

இயேசுவுக்கும் மகதலேனா மா¢யளுக்குமுள்ள நெருக்கம் புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் வெளிப்படுகிறது. அவர் மா¢யாளிடத்திலும், அவளது சகோதா¢ மார்த்தாள், சகோதரன் லாசரு ஆகிய அவள் குடும்பத்தாருடனும் அன்பாயிருந்தார் (யோவான் 11: 5) எதற்குமே கலங்காத இயேசு மா¢யாளின் சகோதரனான  லாசரு இறந்துவிட்டான் என்று அறிந்தபோது துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதார். பின் அவனைக் கல்லறையிலிருந்து உயிரோடு எழுப்பினார் (யோவான் 11: 32 -44). பின்பு ஒருநாள்  அவர்களுடைய கிராமமான பெத்தானியாவுக்கு வந்து மா¢யாளின் வீட்டில் தங்கி, இராவிருந்து அருந்தினார். அப்பொழுது மா¢யாள் விலையேறப்பெற்ற நளதம் என்னும் திரவிய தைலத்தில் ஒரு பவுண்டு கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதத்தில் பூசித், தன் தலைமயிரால் துடைத்தாள். (யோவான் 12: 1 -3). மாற்குவின் சுவிசேஷத்தில் (14: 3) மற்ற மூன்று சுவிசேஷங்களைப் போல் அல்லாது, அவள் அந்த பா¢மள தைலத்தை இயேசுவின் சிரசின்மேல் ஊற்றினாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒரு மனைவி தன் கணவனுக்கு அல்லது ஒரு காதலி அதீதமான காதலால் தான் நேசிக்கிற ஆண்மகனுக்குச் செய்யத்தக்க பணிவிடையே தவிற ஒரு பக்தை தன் ஆன்மீககுருவுக்குச் செய்கிற பணிவிடை அல்ல என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. மேலும் இயேசு சிலுவையில் மா¢த்து கல்லறையில் வைக்கப்பட்டபின் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அவர் உயிர்த்தெழுந்தபின் மகதலேனா மா¢யாளுக்கே முதன்முதலில் காட்சியளித்தார் என்று சுவிசேஷங்கள்  கூறுகின்றன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 

மாற்குவின் சுவிசேஷம் எழுதிய ஆசி¡¢யர் ( கி.பி. 66-68) மகதலேனா மா¢யாளுக்குப் பதினொரு வசனங்களை ஒதுக்கியிருக்கிறார் (15: 40-47; 16: 1-9). மத்தேயுவின் சுவிசேஷத்தில் பன்னிரண்டு வசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன ( 27: 56, 61; 28: 1-10). லூக்கா பதினைந்து வசனங்களை அவளுக்காக ஒதுக்குகிறார் (8: 1-3; 24: 1-12). கி.பி. 100-105 க்குள் எழுதப்பட்ட யோவானின் சுவிசேஷத்தில் பத்தொன்பது வசனங்கள் மகதலேனா மா¢யாளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன (19: 25; 20: 1-18). முதல்  மூன்று சுவிசேஷங்களின்படி (மத்தேயு 28: 1-10, மாற்கு 16: 9, யோவான் 20: 14) உயிர்த்தெழுந்த இயேசுவை முதன்முதலில் பார்த்தது மகதலேனா மா¢யாள். கிறிஸ்தவமதத்தின் அடிப்படை நாதத்துக்கே ஆதாரப்பதிவாக விளங்குவது மகதலேனா மா¢யாள்தான். ஆன் ப்ரோக் (Ann Brock) என்ற மறையியலாளர் மகதலேனா மா¢யாளே 'முதன்மை அப்போஸ்தலர்என்றும் அப்போஸ்தல ருக்குள் அப்போஸ்தலர்என்றும் கூறுகிறார். மேலும்  ஒருவரை அப்போஸ்தலர் என்று அழைக்கவேண்டுமானால் அவர் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்கவேண்டும் என்று  ஆன் ப்ரோக் சொல்லுகிறார். அவை: (1) இயேசுவுக்கு உண்மையான சீடராக அல்லது பின்பற்றுபவராக அவரோடுகூட பயணித்து அவர் ஊழியத்தில் பங்கெடுத்திருக்கவேண்டும். (2) இயேசு உயிர்த்தெழுந்தபின் அவர் காட்சியைப் பெற்றிருக்கவேண்டும். (3) அவருடைய போதனைகளை மக்களிடையே பரப்ப இயேசுவின் கட்டளையைப் பெற்றிருக்கவேண்டும். பவுல் அப்போஸ்தலர் இவற்றில் இரண்டு நிபந்தனைகளையே நிறைவேற்றியுள்ளார். அவர் இயேசுவுக்கு  சீடராக அவரோடுகூட  இருந்ததில்லை. மகதலேனா மா¢யாள் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றியிருக்கிறாள். ஆனால் ஆணாதிக்கம் மிகுந்த தொடக்க காலக் கிறிஸ்தவ சபையின் பாதி¡¢கள் பெண் என்ற ஒரே காரணத்தால் மா¢யாளை அப்போஸ்தலராக அங்கீகா¢க்காதது மட்டுமல்லஅவளைப் பாவம் செய்த ஒரு பெண் (sinner) என்றும்விபச்சா¡¢யென்றும் இழிவு படுத்தினர்.

 

லூக்காவின் சுவிசேஷத்தில் மகதலேனா மா¢யாளிடமிருந்து ஏழுபிசாசுகளை இயேசு விரட்டினார் என்ற குறிப்பு உள்ளது. ஆனால் ஒருவரைப் பிசாசு பிடித்துள்ளதால் மட்டுமே அவரைப் பாவம் செய்தவர் என்று கூறலாம் என்று பைபிளில் எங்கேயும் சொல்லப்படவில்லை. யோவான் 8 ஆம் அதிகாரம் 1 முதல் 11 வரையுள்ள வசனங்களில் வேதபாரகரும்பா¢சேயரும் விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசுவிடம் கொண்டுவந்துஇப்படிப்பட்டவர்களைக்  கல்லெறிந்து கொல்லவேண்டும் என மோசேயின் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதுநீர் என்ன சொல்கிறீர் என்று கேட்டார்கள். அத்ற்கு இயேசு உங்களில் இதுவரைப் பாவம் செய்யாதவன் இவள் மேல் முதலில் கல்லெறியக்கடவன் என்று சொல்லி குனிந்து தரையில் விரலால் எழுதத் தொடங்கினார். அது கேட்டுத் தங்கள் மனசாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு ஒவ்வொருவராக அனைவரும் போய்விட்டார்கள். இயேசுவும் அந்தப் பெண்ணுமே தனித்து விடப்பட்டனர். அவர் அவளை நோக்கி நானும் உன்னைத் தண்டிக்கப்போவதில்லைநீ போஇனி பாவம் செய்யாதே என்றார். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் மகதலேனா மா¢யாள் என்பது பாதி¡¢களின் முடிவு. ஆனால் இந்தக் கதை முதலில் எழுதப்பட்ட யோவானின் சுவிசேஷப்பிரதிகளில் இல்லை. இந்தக்கதை  பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இரண்டயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்த யூதர்கள்அதுவும் இயேசு நியாயப்பிரமாணத்துக்கு எதிராக ஏதாவது சொல்லுவாராஅப்படிச்சொன்னால் அவரை மாட்டிவிடலாம் என்று வந்த வேதபாரகரும்பா¢சேயரும்அவர் உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ அவன் முதலில் கல்லை எடுத்து இவள் மேல் எறிவானாக என்று சொன்னவுடன்தங்கள் மனசாட்சி குத்த ஒவ்வொருவராக திரும்பிப்போய்விட்டார்கள் என்றால் நம்பமுடிகிறதாஅவ்வளவு பக்குவப்பட்டவர்களாகவா அவர்கள் இருந்தார்கள்இது ஒரு கட்டுக்கதை என்பதற்கு இதைவிட என்ன தெளிவு வேண்டும்மா¢யாளை விபச்சா¡¢ என்று உலகுக்கு அறிமுகம் செய்வதற்காகவே சேர்க்கப்பட்ட இடைச்சொருகல்.

 

விலக்கப்பட்ட சுவிசேஷங்களில் (Gnostic gospels) ஒன்றான பிலிப்புவின் சுவிசேஷத்தில் (Gospel of Philip) 55, 56 ஆம் வசனங்களில் இயேசுவுக்கும் மகதலேனா மா¢யாளுக்கும் இடையே நிலவிய நெருக்கம் கூறப்பட்டுள்ளது. 'மகதலேனா மா¢யாள் இயேசுவின் நெருங்கிய தோழி என்று அழைக்கப்படுவாள். இயேசு தன் மற்றெல்லா சீடர்களைக் காட்டிலும் அவளை அதிகமாக நேசித்தார். அதனால் அடிக்கடி அவள் உதட்டில் முத்தமிட்டபடியிருந்தார். மற்ற சீடர்கள்  மா¢யாளை அவர் தங்களைவிட அதிகமாக நேசிப்பது கண்டுஏன் எங்களைவிட அவளை அதிகமாக நேசிக்கிறீர் என்று கேட்டார்கள். அதற்குப் பிரதியுத்தரமாகஅவளுக்கு நிகராக உங்களையும் நான் ஏன் நேசிக்கக் கூடாதுஎன்று கேட்டுப்பதிலையும் அவரே உரைத்தார். ஒரு குருடனும் பார்வையுள்ளவனும் இருட்டில் இருந்தால் இருவருக்கும் வேற்றுமையிராது அன்றோவெளிச்சம் வந்தால் பார்வையுள்ளவன் வெளிச்சத்தைப் பார்ப்பான் குருடனோ இருட்டிலேயே இருப்பான் என்றார்’. (தெய்வீக வெளிச்சத்தைக் காணும் சக்தியுடையவர் மட்டுமேஇறைவனிடமிருந்து ஒரு குரு வந்தால் அவரைப் பு¡¢ந்துகொண்டு ஆன்மாவில் விழிப்படைவர்பிறர் அறியாமையென்னும் இருளிலேயே இருப்பர் என்பது இதன் பொருள்).

 

மேலும் யோவான் 20: 17 ல் உயிர்த்தெழுந்த இயேசு,  தன்னைப் பார்க்கவந்த மகதலேனா மா¢யாளிடம் என்னைத் தொடாதேநான் இன்னும் என் பிதாவினிடத்திற்குப் போகவில்லை என்று சொல்லுகிறார். ஏற்கனவே அவர் உயிரோடிருந்தபோது அவரைத் தொட்டுப் பழகிய,

அவருடைய  பாதங்களில் வாசனைத்திரவியத்தைப் பூசிய மா¢யாள் இப்போதும் அவரைத் தொடும் உ¡¢மை பெற்ற பெண்ணாகவே முன்னிறுத்தப்படுகிறாள்.

 

1896 ல் எகிப்திலுள்ள கெய்ரோ (Cairo) நகரத்தில் பெர்லின் கோடெக்ஸ் (Berlin codex) என்று பின்னால் அறியப்பட்ட ஒரு சுவடியை (papyrus) டாக்டர் கார்ல் ¡£ன்ஹார்ட் (Dr. Karl Reihardt) என்னும் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார்.அதிலிருந்த மூன்று சுவடிகளில் ஒன்று 'மா¢யாளின் சுவிசேஷம்' (Gospel of Mary) என்று அழைக்கப்பட்ட ஆதி கிறிஸ்தவர்களால் விலக்கப்பட்ட சுவிசேஷங்களில் ஒன்றாகும். மற்ற இரண்டும் ஏற்கனவே நாக் ஹம்மடியில் (Nag Hummadi) கிடைக்கபெற்றவற்றின் பிரதிகளே. மா¢யாளின் சுவிசேஷத்தில் இயேசு அவளைத் தனியாக அழைத்துச் சென்று சில உயர்ந்த விஷயங்களைப் போதிக்கிறார். பின்னர் மற்ற சீடர்கள் மா¢யாளிடம் அவர் என்ன பேசினார் என்று கேட்டபோது அவள் அவற்றை விவா¢க்கிறாள். ஆனால் பேதுரு மட்டும் இயேசு நம்மை விட்டுவிட்டு ஒரு பெண்ணிடம் தனியாக இவ்வளவு விஷயங்களைச் சொல்லியிருப்பரா என்று சந்தேகிக்கிறான். இந்த சம்பவமும் இயேசுவுக்கும் மகதலேனா மா¢யாளுக்கும் உள்ள நெருக்கத்தையே காட்டுகிறது.

012 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி ஹார்வர்டு மறையியல் பள்ளியைச் (Harvard Divinity School) சார்ந்த கேரென் எல். கிங்க் (Karen L. King) என்ற கிறிஸ்தவ

மறையியலாளர் இயேசுவைப் பற்றிய ஒரு புதிய எகிப்திய சுவடி (papirus) கிடைத்துள்ளது என்று அறிவித்தார். இதுவரை யாரும் அறியாத அந்த சுவிசேஷம் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அதில் சில வா¢களே சேதமில்லாமல் கிடைத்துள்ளன. அந்த வா¢களில்: " இயேசு அவர்களிடம் சொன்னார்என் மனைவி.....", "அவள் என் சிஷ்யையாக இருப்பதற்குத் தகுந்தவள்", "என் தாய் எனக்கு வாழ்க்கையைக் கொடுத்தாள்...",  "மா¢யாள் அதற்கு(வாழ்க்கைக்கு) உகந்தவள்", "என்னைப் பொறுத்தவரை நான் அவளுடன் வசிப்பதற்குக் காரணம்..." என்ற வா¢கள் உள்ளன. மீதமுள்ள வா¢களை பூச்சிகள் அ¡¢த்துவிட்டன. இந்த சுவிசேஷத்தை 'இயேசுவின் மனைவியின் சுவிசேஷம்' (Gospel of Jesus’ wife) என்று ஆராய்ச்சியாளர்கள்  அழைக்கிறார்கள். 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard