புதிய ஏற்பாட்டில் யோவானின் சுவிசேஷம் பின்வருமாறு தொடங்குகிறது. " ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது" (யோவான் 1:1). சுவிசேஷ ஆசி¡¢யர் இயேசுவை 'வார்த்தை' (word) என்று சிறப்புப் பெயா¢ட்டு அழைக்கிறார். என் அப்படி அழைக்கிறார் என்பதற்கு அவரே யோவான் 1: 14 ல் விளக்கம் அளிக்கிறார். பிதாவின் ஒரே பேறான குமாரனாகிய இயேசு பூமியில் மனிதனாக அவதா¢க்கும் முன்பே தேவனோடு இருந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக இயேசுவை தேவனுடைய வார்த்தை என்கிறார். இந்த வார்த்தை என்ற சொல் இயேசுவைக் குறித்துச் சொல்லப்படுவதாக பைபிளில் நான்கே இடங்களில் வருகிறது: யோவான் 1:1,14; 1 யோவான் 1:1 மற்றும் வெளிப்பாடு 19:13.
முதல் மூன்று சுவிசேஷங்களும் இயேசுவைக் 'கடவுளின் குமாரன்' (Son of God) என்று கொண்டாடினாலும், யோவானின் சுவிசேஷம் மட்டுமே அவரைக் கடவுளுக்கு நிகரானவராக அல்லது கடவுளாகவே உயர்த்துகிறது. ஆனால் யூதர்கள் கடவுளின் குமாரன் என்றால் கடவுளின் சொந்த புத்திரன் என்று கருதுவதில்லை. கடவுளின் அருள் பெற்றவர், கடவுளுக்கு நெருக்கமானவர், அவர் மூலம் கடவுளின் சித்தம் பூமியில் நிகழும் என்றுதான் கருதினார்கள். யூதர்களின் வேதமான பழைய ஏற்பாட்டில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. யோவானின் சுவிசேஷத்தில் இயேசுவைக் 'கடவுளுடைய வார்த்தை' (Word of God) என்றும் அவர் மூலம்தான் இப்பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் கிரேக்க மொழியிலேயே முதலில் எழுதப்பட்டன. ‘வார்த்தை’ கிரேக்கமொழியில் (logos) என்றும், எபிரேய/அராமைக் மொழிகளில் மெம்ரா (memra) என்றும் அழைக்கப்படுகிறது. கிரேக்கச் சொல்லான 'லோகோஸ்' (logos) என்பதே ஆங்கிலத்தில் word என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அது 'வார்த்தை' என தமிழாக்கம் செய்யப்பட்டது. கிரேக்கமொழியில் ‘றேமா' (rhema) என்றொரு சொல் இதே பொருளில் உள்ளது. லோகோஸ் என்றால் உள்ளத்தில் உண்டாகும் வார்த்தையின் உருவாக்கம், றேமா என்றால் வாயிலிருந்து புறப்பட்டு வெளிவரும் சொல். இவ்விரு சொற்களுமே புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன. லோகோஸ் என்ற சொல், வார்த்தை என்ற பொருளில் ஜெகோவாவுக்கும், இயேசுவுக்கும் பயன்படுத்தப்படுகிறது, எபேசியர் 6: 17 ல் றேமா என்ற சொல், வசனம் (வார்த்தை) என்ற பொருளில் ஆவிக்கு (spirit) பயன்படுத்தப்படுகிறது.
"நான் உங்களுடனே சொல்லுகின்ற 'வார்த்தைகளை' (rhemata -Gk) என் சுயமாய்ச் சொல்லவில்லை. என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கி¡¢யைகளைச் செய்துவருகிறார்." என்று இயேசு யோவான் 14: 10 திலும் "நீங்கள் கேட்கிற 'வார்த்தை' (logos -Gk) என்னுடையதாக இராமல் என்னை அனுப்பின பிதாவுடையதாயிருக்கிறது" என்று அவர் மறுபடியும் யோவான் 14: 24 லிலும் சொல்கிறார்.
இந்துமத மறைநூற்களில் ஒன்றான சுமார் கி.மு. 4000 த்திலிருந்து 3000 க்குள் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கிருஷ்ண யஜூர்வேதம், கதக சம்ஹிதை 12.5, 27.1 ல் (சமஸ்கிருத மொழி) கீழ்க்கண்ட வசனம் வருகிறது:
"ப்ரஜாபதிர் வை இடம் அக்ரே அசித் (ஆதியில் பிரஜாபதி [பிரம்மன்] இருந்தார்), தஸ்ய வாக் த்விதியா அசித் (வார்த்தை அவரோடிருந்தது), வாக் வை பரமன் ப்ரஹ்மா (வார்த்தையே பரபிரம்மனாக இருந்தது".
யோவான் 1:1 லுள்ள வாசகங்களுக்கும் மேற்கண்ட யஜூர்வேத வாசகங்களுக்கும் கடுகளவும் வேற்றுமையில்லை. யோவானின் சுவிசேஷம் யோவானால் எழுதப்பட்டிருக்கமுடியாது, ஏனெனில் அவன் படிப்பறிவு இல்லாதவன் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 13). எனவே நிச்சயமாக கற்றறிந்த ஒருவரே யோவானின் சுவிசேஷத்தை எழுதியிருக்கவேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. அவருக்கு இந்துமத வேதங்களில் பா¢ச்சயம் இருந்திருக்கலாம், அதனால் இந்த வாசகங்களை எடுத்தாண்டிருக்கலாம் என்பதும் சாத்தியமே.
பகவத் கீதை 8: 3 ல் அக்ஷரம் ப்ரஹ்மா பரமம் ( வார்த்தை பரபிரம்மம்ம் ஆக இருக்கிறது) என்று சொல்லப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் வாக் என்றாலும் அக்ஷரம் என்றாலும் வார்த்தை என்று பொருள்படும்.
இந்த உபநிஷத், மற்றும் பகவத் கீதை வாசகங்கள் பற்றி எதுவும் தொ¢யாமல் கூட யோவானின் சுவிசேஷத்தில் அவ்வாறு எழுதியிருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆதியாகமத்தில் கடவுள் அவர் பேசிய வார்த்தைகள் மூலமகவே எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்பது நமக்குத் தொ¢யும். 'கர்த்தருடைய வார்த்தைகளினால் வானங்கள் படைக்கப்பட்டன' என்று சங்கீதம் 33: 6 கூறுகிறது. 'தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழ்வேன்' என்று சங்கீதம் 56: 4 கூறுகிறது. ஆதியாகமம் 19: 24 ஆம் வசனத்தில் 'ஜெகோவா சோதோமின் மேலும் கொமோராவின் மேலும், ஜெகோவாவினாலே வானத்திலிருந்து கந்தகத்தையும், அக்னியையும் வர்ஷிக்கப் பண்ணினார்' என்று வருகிறது. அதாவது கர்த்தரே கர்த்தரால் செய்தார் என்ற பொருளில் இந்த வாசகத்தில் இரண்டுமுறை ஜெகோவா (கர்த்தர்) என்ற வார்த்தை வருகிறது. யோனத்தான் (Jonathan) என்ற எபிரேயமொழி பொருள்விளக்க (targum) வல்லுநர், இந்த வாசகத்தில் இரண்டாவது 'ஜெகோவா'வை ஜெகோவா என்று பொருள் கொள்ளாமல் 'வார்த்தை' என்று பொருள் கொள்ளவேண்டும் எனக் கூறுகிறார். அதாவது ' கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின் மேலும் 'வார்த்தை'யால் வானத்திலிருந்து கந்தகத்தையும், அக்னியையும் வர்ஷிக்கப் பண்ணினார்' என்று கொள்ளவேண்டும். இது போன்ற பல சந்தர்ப்பங்கள் எபிரேய மறைநூற்களில் காணப்படுகிறன. இத்தகைய targum விளக்கங்கள்தாம் யோவானின் சுவிசேஷத்தின் ஆரம்பத்தில், ' ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது' என்று எழுதக் காரணமாயிருக்கலாம். சுவிசேஷ ஆசி¡¢யா¢ன் அந்த வார்த்தைதான் மாமிச உருப்பெற்று இயேசுவாக, பிதாவின் குமாரனாக அவதா¢த்தது என்ற நம்பிக்கையும் உருவாக
காரணமாயிருந்திருக்கலாம்.
கர்த்தர் பேசிய 'வார்த்தை' இயேசு என்ற மனித உருவத்தில் கடவுளின் குமாரனாய்ப் பிறந்து வாழ்ந்து மா¢த்தது என்ற நம்பிக்கையை யோவானின் சுவிசேஷம் ஊட்டுகிறது.
அப்படிப் பார்த்தால் ஆதியாகமத்தின்படி வானமும், பூமியும் அதிலுள்ள எல்லா ஜீவராசிகளும் கர்த்தா¢ன் வார்த்தைகளிலிருந்து உண்டானதுதான். சிருஷ்டியிலுள்ள எல்லா படைப்புகளிலும் கடவுளின் அம்சம் இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.
'வார்த்தை தேவனாயிருந்தது' என்பது உண்மையானால் வார்த்தையைத் தேவனிடமிருந்து பி¡¢ப்பானேன். தேவனே மனிதனாய்ப் பிறந்தார் என்று சொல்லலாமே. அதில் கிறிஸ்தவர்களுக்கு என்னதடை? தடை என்னவென்றால் யூதர்கள் தங்கள் கடவுளான ஜெகோவா (Yahweh) மனிதனாக அவதா¢த்தார் என்றால் அனுமதிக்க மாட்டார்கள்! ஜெகோவாவின் குமாரன் என்றதற்கே இயேசுவைக் கொலை செய்தார்கள். பிற மதங்களில் இறைவனே பூமியில் அவதாரம் செய்கிறார் என்று நம்பி தெய்வீக புருஷர்களை இறைவனின் அவதாரம் (incarnation) என்றுதான் கூறுகிறார்கள்.