Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 09 Miralcles of Jesus இயேசு செய்த அற்புதங்களும், பிசாசுகளைத் துரத்துதலும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
09 Miralcles of Jesus இயேசு செய்த அற்புதங்களும், பிசாசுகளைத் துரத்துதலும்
Permalink  
 


 இயேசு செய்த அற்புதங்களும், பிசாசுகளைத் துரத்துதலும்

 

மனித வரலாற்றில் இதுவரை எழுதப்பட்டுள்ள மறைநூற்கள் எல்லாவற்றிலும் ஏராளமான அற்புதங்களைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.பைபிளிலும்அற்புதங்களுக்குக் குறைவில்லை. ஏதேன் தோட்டத்துபேசும் சர்ப்பத்திலிருந்து தொடங்கி, திமிங்கிலத்தின் வயிற்றில் மூன்று நாட்களும் மூன்று இரவுகளும் தங்கியிருந்து பின் உயிரோடு வெளிவந்த யோனா தீர்க்கத்தா¢சியின் கதை வரை எழுபத்திஆறு அற்புதங்கள் யூதர்களின் வேதமான பழைய ஏற்பாட்டில் நாலாயிரம் ஆண்டுகள் காலத்தில் நடைபெற்றதாக விவா¢க்கப்பட்டுள்ளது. பண்டைக்கால கிரேக்க நாட்டில் கி.மு. 300 ல் தெய்வீகசக்தி வாய்ந்த மருத்துவராகக் கருதப்பட்ட  ஆஸ்குலேப்பியஸ் (Asclepius) மரணமடைந்த மனிதர்களை மீண்டும் உயிரோடு எழுப்பியதாகச் செய்திகள் உள்ளன. முதல் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தில் ஹோனி (Honi) என்ற யூத அறிஞர் வரட்சி காலங்களில் பிரார்த்தனை மூலம் மழை பெய்யச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இயேசுவின் சமகாலத்தவரான ஹனீனா பென் தோசா (Hanina ben Dosa) நோயாளிகளை அற்புதம்செய்து குணமாக்குபவராகவும், மழையைக் கட்டுப்படுத்துபவராகவும் இருந்தார். இயேசுவின் மற்றொரு சமகாலத்தவரான  தியானாவைச் சார்ந்த அப்பொல்லோனியஸ் (Appolonius of Tiana) என்ற கிரேக்க தத்துவ இயலாளர் பிசாசுகளைத் துரத்தியதாகவும், மா¢த்தவர்களை உயிரோடு எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. பலர் அற்புதங்களைச் செய்யவும், பிசாசுகளைத் துரத்தவும் வல்லவர்களாக இருந்ததைப் புதிய ஏற்பாட்டில் காணலாம் (மாற்கு 9: 38 - 41; அப்போஸ்தலருடைய நடபடிகள் 8: 9 - 11). பிறவிலிருந்து முடமாயிருந்த ஒருவனைப் பவுல் அற்புதம் செய்துக் குணமாக்கியதாக லூக்கா சொல்லுகிறார் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 14: 8 - 18). கி.பி. 79 ல் ரோமானியச் சக்கரவர்த்தி வெஸ்பேசியன் (Vespasian) பிறவிக்குருடன் ஒருவனுக்குத் தன் எச்சிலைத் தொட்டு அவன் கண்களில் வைத்து பார்வையடையச் செய்ததாக பதிவுகள் உள்ளன. மேலும் பல நூற்றண்டுகளாக கத்தோலிக்க கிறிஸ்தவமதத்தைச் சார்ந்த புனிதர்கள் ஏராளமான நோயாளிகளின் பிணிகளை அதிசயிக்கத்தக்க முறையில் குணப்படுத்தியதாக கதைகள் உண்டு.

 

நான்கு சுவிசேஷங்களும் இயேசுவின் வாழ்க்கை முழுவதும் அற்புதங்கள் நிறைந்ததாகவே காண்பிக்கின்றன. ஒரு ஆண்மகனுடன் தாம்பத்திய உறவு கொள்ளாமலேயே அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்தாள் என்பது சுவிசேஷங்களில் கூறப்படும் முதல் அற்புதம். முப்பது வயதில் தொடங்கி மக்கள் மத்தியில் அவர் அடுத்தடுத்து அற்புதங்களாகவே செய்துகொண்டிருந்தார். தண்ணீரைத் திராட்சை மதுவாக்கினார், குருடர்களுக்குப் பார்வையளித்தார், காது கேளாதவர்களைக் கேட்கவைத்தார், முடவர்களை நடக்கவைத்தார், பிசாசுகளைத் துரத்தினார், நீர்மேல் நடந்தார். புயலை அடக்கினார், மா¢த்தவர்களை உயிரோடு எழுப்பினார், எல்லாவற்றிற்கும் மேலாக முடிவில் மிகப்பொ¢ய அற்புதமாக, தாமே மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து சீடர்கள் முன்னிலையில் பரலோகம் ஏறினார் என்று அவருடைய வாழ்க்கையே ஒரு அற்புதங்களின் குவியலாகக் காண்பிக்கப்படுகிறது. இயற்கையைக் கட்டுப்படுத்தும் எட்டு அற்புதங்கள், நோயாளிகளைக் குணப்படுத்தச் செய்த பதினேழு அற்புதங்கள், பதின்மூன்று பிசாசு விரட்டுதல்கள், மரணமடைந்தோர் மூன்றுபேரை உயிரோடு எழுப்பியது என ஏராளமான அற்புதங்களை இயேசு செய்திருப்பதாக நான்கு சுவிசேஷங்களிலும் விவா¢க்கப் பட்டுள்ளன. புதிய ஏற்பாட்டில் இந்த அற்புதங்களெல்லாம் தெய்வீகத்தன்மைக்கான அடையாளங்கள், ஆச்சா¢யமான வல்லமையைக் காட்டும் நிகழ்வுகள் என்றே சொல்லப்படுகிறது.

 

இயேசு யூதர்கள் நெடுங்காலமாக எதிர்பார்த்திருந்த, அரசியல் விடுதலைப் பெற்றுக்கொடுக்கும் மேசியாவாக (Messiah) நடந்து கொள்ளவேயில்லை. ரோமானிய அரசுக்கு  எதிராக அவர் ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. எதி¡¢களைத் துவம்சம் செய்து சுதந்திர இஸ்ரேல் நாட்டை உருவாக்கி முடிசூடும் ஒரு இராஜா மேசியாவை யூதர்கள் எதிர்பார்த்திருந்தார்களே தவிற, தேவனுடைய இராஜ்யம் வருகிறது, தயாராகுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு துறவி மேசியாவை அல்ல.

 

யோவான் ஸ்ஞானகன் சிறையில் இருக்கும்போது இயேசுவின் நடவடிக்கைகளைக் கேள்வியுற்று, தான் அவருக்கு ஸ்ஞானஸ்நானம் கொடுக்கும்பொழுது நம்பியதுபோல்  உண்மையாகவே அவர் மேசியா தானா என்று  சந்தேகம் வந்துவிட்டது. உடனே தன் சீடர்களில் இருவரை அவா¢டத்தில் அனுப்பி, ‘நீர் நாங்கள் எதிர்பார்க்கிறவர்தானாஎன்று அவா¢டத்திலேயே கேட்க வைக்கிறார். இயேசு அவர்களிடம், நீங்கள் கேட்கிறதையும், காண்கிறதையும் உங்கள் தலைவா¢டத்தில் போய் அறிவியுங்கள். குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மா¢த்தோர் எழுந்திருக்கிறார்கள் என்று பதிலுரைக்கிறார் (மத்தேயு 11: 2 - 5). இதிலிருந்து மேசியா என்று கருதப்படுபவர் அற்புதங்களைச் செய்து காட்டவேண்டும் என்று  யூத மக்கள் எதிர்பார்த்திருந்தனர் என்று தொ¢கிறது. அதே சமயம் அவர் அந்நிய அரசுக்கெதிராகப் போராடித்  தங்களைஅடிமைத்தளையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்றும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இயேசுவோ அற்புதங்களை மட்டும் செய்ததாக சுவிசேஷங்கள் விவா¢க்கின்றன. ரோமானிய அரசை எதிர்த்து அவர் போராடவில்லை.

 

இயேசு பிறப்பதற்கு  சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் வரை யூதர்களுக்குப் பிசாசு, சாத்தான், அசுத்த ஆவிகள் போன்றவற்றில் நம்பிக்கை இல்லமல் இருந்தது. இந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட பைபிளின் முதல்ஐந்து புத்தகங்களில் (Pentateuch) சாத்தான் மற்றும் பிசாசுகள் பற்றிய குறிப்புகள் எதுவுமில்லை. பின்னர் சுற்றியுள்ள நாடுகளிலுள்ள  அல்லது இஸ்ரேல் மீது படையெடுத்து வந்து அடிமைப்படுத்திய நாடுகளிலுள்ள  பேகன் மதத்தினா¢டமிருந்து சாத்தான் மற்றும் பிசாசுகள் பற்றீய நம்பிக்கைகள்  யூதர்களிடம் பரவின. இயேசுவின் காலத்தில் யூதர்களிடம் இந்த நம்பிக்கைகள் மிகவும் பரவலாக இருந்தது மட்டுமல்லாது, யாருக்கு எந்த வியாதி ஏற்பட்டாலும் அதற்குப் பிசாசுகள் மனிதர் உடலில் புகுந்திருப்பதுதான் காரணம் என்று நினைத்தார்கள். இதைப் புதிய ஏற்பாட்டிலுள்ள எல்லாப்புத்தகங்களிலும் காணப்படும் பிசாசுகள் பற்றிய குறிப்புகளிலிருந்து அறியலாம். இயேசு வாழ்ந்த காலத்தில் மனிதர்களிடமிருந்து பிசாசுகளை விரட்டும் மாந்த்¡£கர்கள் பலர்

இருந்திருக்கிறார்கள். இயேசுவும் ஏராளமான பிசாசுகளை விரட்டியிருக்கிறார். பா¢சேயர் இயேசுவை அவர் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூ (Beelzebul) லின் துணையோடு பிசாசுகளைத் துரத்துகிறார் என்று சொன்னார்கள். இயேசு அவர்களை நோக்கி நான் பெயல்செபூலினால் பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள் என்று கேட்டார் (மத்தேயு 12: 24-27). அவருக்கோ அவருடைய சீடர்களுக்கோ தொடர்பில்லாத ஒருவன், சீமோன் என்ற மாந்த்¡£கன் (Simon Magus) கப்பர்நகூம் என்ற ஊ¡¢ல் இயேசுவின் பெயரால் பிசாசுகளைத் துரத்திக்கொண்டிருந்தான். அவன் இயேசுவைப் பின்பற்றாததால் அவனைத் தடுத்தோம் என யோவான் வந்து அவா¢டம் சொல்ல, அவர்: அவனைத் தடுக்க வேண்டாம்; என் நாமத்தினலே அற்புதங்கள் செய்கிறவன் என்னைக் குறித்து தீங்கு சொல்லமாட்டான் என்று சொல்லுகிறார் (மாற்கு 10: 38). இயேசுவின் காலத்தில் யூதர்கள் மூடநம்பிக்கைகள் மிகவுடையவராகவும், பில்லி சூனியம், மாந்த்¡£கம், மாயவித்தைகளில் மிக்க நம்பிக்கைஉள்ளவர்களாகவும் இருந்தனர்

(அப்போஸ்தலருடைய நடபடிகள் 13: 6 -12; 19: 12 -16; கலாத்தியர் 5: 20). யூதர்களுக்கு வானவியலைப் பற்றியோ, புவியியலைப் பற்றியோ எதுவும் தொ¢ந்திருக்கவில்லை. அவர்களுடைய வேதங்கள் பூமி தட்டையானது, சக்கரவடிவானது, அஸ்திவாரத்தூண்களின் மீது அசைவில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று நம்பினார்கள் (சகா¢யா 9: 10; ஏசாயா 11: 12; மத்தேயு 4: 8; 1சாமுவேல் 2: 8; சங்கீதம் 93: 1). மேலும் ஆகாயவி¡¢வின் மேல் ஏழு வானங்கள் இருப்பதாகவும் நம்பினார்கள், அதில் மூன்றாம் வானம் வரை பவுல் சென்றுவந்ததாக, 2 கொ¡¢ந்தியர் 12: 1 -4 வரையுள்ள வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: 09 Miralcles of Jesus இயேசு செய்த அற்புதங்களும், பிசாசுகளைத் துரத்துதலும்
Permalink  
 


அசுத்த ஆவிகள் இரவில் அதிகமாக நடமாடும் என்று யூதர்கள் நம்பினார்கள். இரவினில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை வாழ்த்தக்கூடாதுஏனெனில் அவர் வாழ்த்துவது ஒரு பிசாசாகக்கூட இருக்கலாம். இருட்டியபின் ஆள்நடமாட்டமில்லாத வனாந்தரமான  இடங்களுக்குத் தனியாக செல்லக்கூடாது. ஆட்களில்லாத வீட்டில் ஒரு மனிதர் தனியாக உறங்கக்கூடாதுஏனெனில் தனியாக உறங்குபவரை லைலித் (Lilith) என்ற மோகினிப் பிசாசு  கொலைசெய்ய வரும். இரவில் தண்ணீர் குடிக்கலாகாதுமீறிக்குடித்தால் ஷப்¡¢¡¢ (Schafriri) என்ற பிசாசு கண்பார்வையைப் பறிக்கும். இரவில் கல்லறைகள் இருக்குமிடதிற்குச் சென்றால் பிசாசுகளின் வயப்பட்டு பிணங்களைச் சாப்பிடும் குணம் உண்டாகும். ஆவிகள் பொதுவாக அசுத்தமானபாழடந்த  இடங்களில் தங்குவதை விரும்பும்.* பிசாசு பிடித்தவர்கள் வரண்ட வனாந்தரப்பிரதேசங்களிலும்கல்லறைகள் இருக்குமிடங்களிலும் தங்கியிருந்தார்கள் என்பதற்குச் சுவிசேஷங்களில் பல உதாரணங்கள் உள்ளன. (மத்தேயு 8: 28, 12: 43; மாற்கு 5: 3,5; லூக்கா 8: 27,29, 11: 24). மத்தேயு 12: 43 முதல் 45 வரையுள்ள வசனங்களில் இயேசுவே அசுத்த ஆவிகளின் இயல்பைப் பற்றிச் சொல்லுகிறார், "அசுத்த ஆவி ஒரு மனிதனை விட்டுப் போய் வரண்ட இடங்களில் அலைந்து தி¡¢ந்துஇளைப்பாறுதல் கிடைக்காமல்நான் விட்டுவந்த வீட்டுக்கே மீண்டும் போவேன் என்று அங்கேவந்து அந்தவீடு காலியாகவும்சுத்தப் படுத்தப்பட்டும்அழகு படுத்தப்பட்டும் இருப்பதைக் கண்டுதிரும்பிப்போய் தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு கூட்டிவந்துஉட்புகுந்து குடியிருக்கும். அப்பொழுது அந்த மனிதனின் முன்நிலையைவிட இப்போதுள்ள நிலை அதிக கேடுள்ளதாக இருக்கும்".

 

புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களில் இயேசுவுக்கும்  பிசாசுகளுக்கும் இடையில் நடைபெறும் வாக்குவாதங்களில் பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களிலுள்ள வாசகங்கள் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணம்: "நீர் தேவனுடைய குமாரனேயானால் உப்பா¢கையிலிருந்து தாழக்குதியும்அவர் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார். உமது பாதம் கல்லில் இடறாதபடிக்குஅவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திகொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது" என்று இயேசுவைப்பார்த்து சாத்தான் சொல்வதாய் அமைந்துள்ளது (மத்தேயு 4: 6 / லூக்கா 4: 10 & 11). இது சங்கீதம் (திருப்பாடல்) 91: 11 ஆம் வசனத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அது அப்பாடலின் ஆசி¡¢யர் கடவுளைப்பற்றி தம் நம்பிக்கையை வெளிப்படுத்தி எழுதியதே தவிற இயேசுவைப்பற்றிய தீர்க்கத்தா¢சனம் இல்லை. இயேசு அநேக மனிதர்களிடமிருந்து பிசாசுகளைத் துரத்தியதாக சுவிசேஷங்களில் கதைகள் உள்ளன (மாற்கு 1: 32,34 & 39). மாற்குவின் சுவிசேஷத்தில் பதின்மூன்று பிசாசு விரட்டும் கதைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு விளக்கமாகக்ச் சொல்லப்பட்டுள்ளன. மாற்கு 1; 21 முதல் 26 வரையுள்ள வசனங்களில் கப்பர்நகூம் ஜெப ஆலயத்தில் அசுத்த ஆவிபிடித்த ஒரு மனிதன் இருந்தான்அவன் இயேசு அங்கு வந்ததைப் பார்த்து எங்களுக்கும் உமக்கும் என்னஎங்களைக் கெடுக்கவா வந்தீர்உம்மை இன்னார் என்று அறிவேன்நீர் தேவனுடைய பா¢சுத்தர் என்று சத்தமிட்டான். அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டுப் புறப்பட்டுப்போ என்று  அவனை அதட்டினார். உடனே அந்த அசுத்த ஆவி மிகுந்த சத்தமிட்டு அவனைவிட்டுப் போய்விட்டது.

 *Supernatural Religion Vol 1; Sixth Edition, Rose-Belford Publishing Company, Toronto and Detroit;  p 134-137

மாற்கு 5: 1 முதல் 21 வரையுள்ள வசனங்களில் இயேசு கடல் வழியாக கதரேனருடைய நாட்டில் வந்து படகைவிட்டு இறங்கும்போது அசுத்த ஆவியுள்ள ஒரு மனிதன் கல்லறை பகுதிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். (மத்தேயுவின் சுவிசேஷத்தில் இரு மனிதர்கள்

என்று கூறப்படுகிறது) அவன் அநேகதரம் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தும்அவைகளை முறித்துபோட்டுஅடக்கமுடியாதவனாக இருந்தான். அவன் இயேசுவைப் பணிந்து உன்னதமான தேவனுடைய குமாரனேநீர் என்னை வேதனைப் படுத்தாதபடிக்கு தேவன் மீது ஆணை என்றான். அவர் அசுத்த ஆவியேஇவனைவிட்டு நீ போஉன் பெயர் என்ன  என்றவுடன் அவன் அவரை நோக்கி நான் ஒருவரல்லநாங்கள் அநேகராயிருக்கிறோம் அதனால் என்பெயர் லேஜியன் (legion) என்று பதிலுரைத்துதங்களை அந்தப் பகுதியிலிருந்து துரத்திவிட வேண்டாம் என்று வேண்டிக்கொண்டான். அங்கே பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. அந்தப் பிசாசுகள் அவா¢டம் பன்றிகளுக்குள்ளே தங்களை அனுப்பும்படி வேண்டிக்கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்த்வுடன் அவை அந்த மனிதனை விட்டுப்போய் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அங்கே மேய்ந்துகொண்டிருந்தன. அவை அனத்தும் பிசாசுகள் புகுந்ததும் ஓடிப்போய் கடலில் விழுந்து மாண்டன. இக்கதையில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு. யூதர்கள் பன்றி மாமிசம் உண்ணமாட்டார்கள். அது அவர்கள் மதத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. அப்படியிருக்குங்கால் எவ்வாறு கூட்டங்கூட்டமான பன்றிகள் அப்பிரதேசத்தில் காணப்படும்யார் அவற்றை வளர்ப்பார்கள்இந்த கேள்விக்குப் பதில் சொல்லுமுகமாகஇந்த சம்பவம் கலிலேயா கடலுக்கு அக்கறையிலுள்ள கதரா (Gadara) என்னும் சிற்றூ¡¢லே நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. அது சி¡¢யா நாட்டின் ஒரு பகுதிஅங்கு யூதர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே வாழ்ந்தனர். எனவே யூதரல்லாத அந்நாட்டினர் எவராவது அந்தப் பன்றிகளின் உ¡¢மையாளராக இருப்பார்கள் என்று கொள்ளலாம். இருப்பினும் அத்தனைப் பன்றிகளையும் கடலில் விழுந்து மாளச்செய்த இயேசுவின் இரக்கமின்மையை எப்படி எடுத்துக் கொள்வதுஆட்டுக்குட்டியின் மீது மட்டும்தான் இயேசு இரக்கம் காண்பிப்பாராமேலும் பன்றிகளின் உ¡¢மையாளருக்கு நஷ்ட ஈடு கொடுக்க இயேசு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகச் சொல்லப்படவில்லை. 

 

இந்த சம்பவம் நடந்து முடிந்த உடனே இயேசு படகில் ஏறி வந்த வழியே தன் இருப்பிடமாகிய கலிலேயாவுக்குத் திரும்பினார் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அவர் எதற்காக அவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டு பலத்த சுழல் காற்றில்மோதி வீசுகிற அலைகளின் மத்தியில் கடலில் பயணம் செய்து கதரா சென்றார்? (மாற்கு 4:37) இந்த பிசாசுவிரட்டும் அற்புதத்தை நிகழ்த்துவதற்காக மட்டுமே என்றால் நம்ப இயலவில்லை. இதுவும் கற்பனையே என்று எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 முதல் மூன்று சுவிசேஷங்களில் மட்டுமே இயேசு பிசாசுகளை விரட்டினார் என்று சொல்லப்படுகிறது. இந்த மூன்று ஒத்தமைந்த சுவிசேஷங்களிலும் இயேசு மனிதர்களைப் பீடித்திருந்த பிசாசுகளை துரத்தியதாகக் கற்பனையாக எழுதியிருக்கவேண்டும்.

ஏனெனில் நான்காவது சுவிசேஷமான யோவானின் சுவிசேஷத்தில் இயேசு சில அற்புதங்களை நிகழ்த்தினார் என்று கூறப்படுகிறதே தவிறஅவர் பிசாசுகளையும் துரத்தினார் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. யோவானின் சுவிசேஷத்தை எழுதியவருக்கு பிசாசுகளின் மீது நம்பிக்கை இல்லாமலிருந்திருக்க வேண்டும் அல்லது இயேசு அத்தகைய பிசாசுவிரட்டும் சம்பவங்கள் எதையும் நிகழ்த்தாமலிருந்திருக்க வேண்டும்.

 

மாற்கு 7: 26 முதல் 30 வரையுள்ள வசனங்களில் சொல்லப்படும் கதையில் சிரோபீனீசியா (Syrophoenicia) நாட்டிலுள்ள ஒரு கிரேக்கப்பெண் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்தவேண்டுமென்று இயேசுவை வேண்டிகொண்டாள். இயேசுவோ 'நான் யூதர்களுக்கு நன்மை செய்வதற்காகவே பிற்ந்திருக்கிறேன்நீ யூதஸ்தி¡£ அல்லஉனக்கு நான் ஏன் உதவ வேண்டும்என்ற பொருளில் 'பிள்ளைகளுக்காக வைத்திருக்கும் அப்பத்தை எடுத்து நாய்களுக்கு போடுவார்களாஎன்று கேட்கிறார். அவளோ 'மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள்பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னலாம் அல்லவாஎன்று பதில் உரைத்தாள். அப்பொழுது அவர் நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம்பிசாசு உன் மகளைவிட்டு நீங்கிப்போயிற்று என்றார்.

 

இயேசு ஜனக்கூட்டத்திடையே நிற்கும்போது ஒருவர் வந்து அவா¢டம்போதகரேஊமையான ஒரு ஆவி என் மகனைப் பிடித்து அலக்கழித்து ஆட்டுகிறது. அப்பொழுது அவன் வாயில் நுரைதள்ளிபல்கடித்து சோர்ந்துபோகிறான் என்று சொல்லி அவனைக் குணமாக்க வேண்டுகிறார். அவனைக் கொண்டுவந்தவுடன் அவன் தரையிலே விழுந்து நுரைதள்ளிப் புரண்டான். இயேசு அவனுடைய தகப்பனை நோக்கி இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். சிறுவயது முதலே இது உண்டாயிருக்கிறதுஇந்தப்பிசாசு இவனைக் கொல்லும்படிக்கு அநேகதரம் தீயிலும் தண்ணீ¡¢லும் தள்ளியது என்று அவர் பதிலுரைத்தார். இயேசு அந்த அசுத்த ஆவியை நோக்கி இவனை விட்டுப்போ என்று அதட்டியதும் அது சத்தமிட்டு அவனை மிகவும் அலக்கழித்து புறப்பட்டுப்போனது. அவன் தரையில் செத்தவன் போல் மயங்கிக் கிடந்தான். இயேசு அவன் கையைப்பிடித்துத் தூக்கியதும் எழுந்தான் (மாற்கு 9: 17 -27). அவன் தீயிலும் தண்ணீ¡¢லும் விழுந்தது காக்கை வலிப்பு (Epilepsy) நோயினால் இருக்கலாம்அல்லது அவன் மனநோய் பீடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். அதைச் சுற்றியிருந்தவர்கள் பிசாசு பிடித்திருக்கிறது என்று எண்ணியிருக்க வாய்ப்பு இருக்கிறது. இதைப் போன்ற நோய்களால் அவதிப்படும் ஆயிரக்கணக்கானோர் தற்காலத்தில் பொ¢ய மருத்துவமனைகளில் நரம்பியல் நிபுணர்களாலும்மனநோய் மருத்துவர்களாலும் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாவதையும் இந்த பிணிகள் பிசாசுகள் பீடிப்பதால் வருவதல்ல என்பதையும்மூளை மற்றும் நரம்புமண்டலத்தில் ஏற்படும் கோளாறுகளால் உண்டாவது என்பதையும் நாம் அறிவோம்.

 

இயேசு அவர் காலத்து யூதமக்களிடையே நிலவிய குருட்டு நம்பிக்கைகளையும்இனவாத எண்ணங்களையும் போக்க நினத்ததேயில்லை. யூதர்கள் தங்களை மிக உயர்ந்த  இனத்தார் என்றும்தாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்றும் தங்களைக் கருதிக்கொண்டிருந்தார்கள். பிற இனத்தாரையும்மதத்தினரையும் மிகவும் துச்சமாக நடத்தினார்கள். சிரோபீனிசிய நாட்டு பெண்ணிடம் இயேசு பேசிய பேச்சு அவருக்கும் அந்த எண்ணம் இருந்தது என்பதைத்தான் காட்டுகிறது. இன்னொரு உதாரணம்: யூதர்களை இரட்சிப்பதற்காக மட்டுமே தான் அவதா¢த்துள்ளேன்என்ற பொருளில், 'காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டா¡¢டத்திற்குப் போங்கள் என்று இயேசு தன் சீடர்களோடு  இன்னொரு இடத்தில் சொல்கிறார் (மத்தேயு 10: 6). சிறுவயதிலிருந்தே காக்கை வலிப்பு நோயால் அவதிப்படும் ஒரு இளைஞனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று பெற்றோரும்மற்றவர்களும் மூடநம்பிக்கை வைத்திருந்தாலும்இயேசு அதனைப் போக்கமுயலாமல் அவர்கள் கேட்டுகொண்டபடியே பிசாசு விரட்டுகிறார் என்று காட்டப்பட்டுள்ளது.

 

ஆரம்பகால கிறிஸ்தவமதப் பிரச்சாரகர்களுக்கு இயேசுவைப் பிசாசுகளைத் துரத்தும் வல்லமையுடையவராகக் காண்பிக்க வேண்டும் என்பது அவசியமாக இருந்தது. எனெனில் அசுத்த ஆவிகளை விரட்டுவது அவருடைய தெய்வீகத்தன்மையை உயர்த்திஅவருக்கு 'கடவுளின் குமாரன்என்ற தகுதியைக் கொடுக்கும் என்று நம்பினர். மேலும் பிசாசுகளை விரட்டுவதுகடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையில் நிகழும் யுத்தத்தில் அவர் ஜெயித்தது போல் ஆகும் என்றும் நம்பினர். அதற்காகவே பல பிசாசுவிரட்டும் சம்பவங்களைச்  சிருஷ்டித்து அதில்  வரும் பிசாசுகள் இயேசுவைப் பார்த்ததுமே 'நீர் தேவனுடைய குமாரன்உம்மை இன்னார் என்று அறிவேன்நீர் தேவனுடைய பா¢சுத்தர்என்றெல்லாம் சொல்லும்படியாகக் கதைகளை அமைத்துள்ளார்கள். மேலும் இந்த பிசாசுவிரட்டும் சம்பவங்களில் இயேசு மற்ற பிசாசு விரட்டுபவர்களைப் போல பௌதீகப்பொருள்கள் அல்லது சாதனங்கள் எதையும் பயன்படுத்தவில்லை. அவர் ஜெபிப்பதோ அல்லது பிசாசு பிடித்தவர்களைக் கைகளால் தொடுவதோ கூட இல்லை. அவர் போதனைகள் அளிக்கும்போது 'மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்என்று ஆரம்பிப்பது போல, 'நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்ஓடிப்போஎன்ற கம்பீரமான தொனியில்தான் பிசாசுகளை விரட்டுகிறார்.

 

சுவிசேஷங்களில் குறிப்ப்பிடப்பட்டுள்ள பிசாசு பிடித்தவர்கள் அனைவரும் ஏதாவது உடல்பிணியால் அல்லது மனநோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகிறார்கள். யூதர்களில் பலரும் இயேசுவையே பிசாசு பிடித்த ஒரு மனிதராகக் கருதினார்கள்  (யோவான் 7: 20, 8: 48, 10: 20; மாற்கு 3: 22). இயேசுவைச் சுற்றியிருந்த மக்களில் 90 விழுக்காட்டிற்கு மேல் படிப்பறிவு இல்லாதவர்களாகவும்யூதர்களின் சட்டதிட்டங்களில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாகவும் இருந்தனர். பல வருடகாலம் கிரேக்கரோமானிய ஆட்சிகளுக்குட்பட்டிருந்ததனால் அந்த நாடுகளிலுள்ள பேகன் மதங்களின் புராணக்கதைகளினாலும் கவரப்பட்டிருந்தனர். அவர்கள் கொண்டிருந்த மூடநம்பிக்கைகள் அவர்களை மாய வித்தைகள் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 13: 6 -12; 19: 19), பில்லிசூனியம் (கலாத்தியர் 5: 19&20), இயற்கைக்கு மாறான அற்புதச் செயல்கள் (மாற்கு 16:17&18) இவற்றை நம்பவைத்தது. அவர்கள் நோய்களின் தன்மையையும்அவற்றுக்குண்டான மருந்துகளையும் அறிந்திருக்கவில்லை. மனிதர் செய்கின்ற பாவச்செயல்கள்அசுத்த ஆவிகளின் பீடிப்பு அல்லது கடவுளின் நேரடியான தண்டனை, (யோவான் 5: 13 -15; லூக்கா 13: 11; உபாகமம் 28: 27 -29) இவைதாம் எல்லா நோய்களுக்கும் காரணம் என்று கருதினார்கள். மனநோய்களால் ஏற்படும் பாதிப்புகளையும்வாதம் போன்ற நரம்பியல் நோய்களையும் பிசாசுகள் மனிதர் உடலில் புகுந்துகொள்வதால் உண்டாகின்றன என்று நம்பினார்கள் (மாற்கு 7: 32 -34; 9: 17 -27).

 

சுவிசேஷங்களில் விவா¢க்கப்பட்டுள்ள இயேசுவின் அநேக அற்புதங்கள் பழைய ஏற்பாட்டிலுள்ள தீர்க்கத்தா¢சிகளின் அற்புதங்கள் மற்றும் சங்கீதப் பாடல்களின் வா¢களினூடே சொல்லப்படும் சம்பவங்களை எடுத்து இயேசுவின் காலத்திற்கேற்பக் கற்பனைச் சேர்த்து வடிவமைக்கப் பட்டுள்ளன. இயேசுவும் சீடர்களும் படகிலேறி கலிலேயா கடலின்  அக்கரையிலுள்ள கதரா என்ற ஊரை நோக்கிச் செல்லும்போது பலத்த சுழற்காற்றும் உயர்ந்த அலைகளும் எழும்பி  மோதி படகைக் கவிழ்க்கமுயலும்போது  சீடர்கள் மிகவும் பயந்து இயேசுவைப் பார்க்கும் பொழுதில் அவர் தலையணை வைத்துக்கொண்டு படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அவரை எழுப்பித் தங்கள் நிலையை அவா¢டம் முறையிட்ட உடன் அவர் காற்றையும்கடலையும் அதட்டி அடக்கினார். உடனே காற்றும் கடலும் அமைதியாயின. காற்றும்கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று அவர்கள் அதிசயித்தார்கள் ( மாற்கு 4: 37 -41). இதே கதை மத்தேயு 8: 23 -30 ல் அப்படியே சொல்லப்பட்டுள்ளது. இக்கதைக்கான ஆதாரம் பழைய ஏற்பாட்டில்யோனா 1: 5 -6; மற்றும் சங்கீதம் 107:23 -30 ல் உள்ளது.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தண்ணீ¡¢ன்மேல் அதுவும் அலைகள் வீசும் கடலின்மேல் நடந்தது இயேசு செய்த இன்னொரு அற்புதம் (மாற்கு 6; 47 -53; மத்தேயு 14: 24 -34; யோவான் 6: 16 -21). எகிப்திலிருந்து விடுதலை செய்ய்யப்பட்டு தங்கள் நாடு நோக்கிப் புறப்பட்டுவந்த யூதர்கள்மீண்டும் அவர்களைப் பிடிக்க எகிப்திய மன்னனும்படைகளும் தொடர்ந்துவர எதி¡¢ல் செங்கடல் இருப்பதைக்கண்டுத் திகைத்து நின்றார்கள். அப்போது அவர்களை வழிநடத்திய மோசே கடவுளின் உத்தரவின்படி கடலின் மேல் கோலால் அடிக்க கடல் இரண்டாகப் பிளந்து யூதர்கள் கடந்து செல்ல வழிவிட்டது (யாத்திராகமம் 14:15 -22). இயேசு மோசேயை விட பொ¢யவர் என்பதனால்அவர் கடலையும் காற்றையும் அடக்குவது மட்டுமல்லஅதன்மேல் நடக்கவும் செய்வார் என்பதைக் காட்டவே சுவிசேஷ ஆசி¡¢யர்கள் இவற்றை எழுதியுள்ளனர்.

 

மத்தேயுவின் சுவிசேஷத்தில் 8 ஆம் அதிகாரம் 16 & 17 ல் "அஸ்தமனமானபோதுபிசாசு பிடித்திருந்த அநேகரை அவா¢டத்தில் கொண்டுவந்தார்கள்அவர் அந்த ஆவிகளை தமது வார்த்தையினாலே துரத்திப் பிணியாளிகளையெல்லரையும் சுகமாக்கினார். அவர் தாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுகொண்டுநம்முடைய நோய்களைச் சுமந்தார் என்றுஏசாயா தீர்க்கதா¢சியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது" எனச் சொல்லப்பட்டுள்ளது. இதில் எடுத்தாளப்பட்டுள்ள ஏசாயா தீர்க்கத்தா¢சியின் வார்த்தைகள் ஏசாயா 53: 4 ல் உள்ளன. ஏசாயா 53 ஆம் அதிகாரம் முழுவதும் வாசிப்பவருக்கு அது,  துன்பப்பட்டு இறந்துபோன தன் நண்பர் ஒருவருக்காகஅவருடைய இழப்பைத் தாங்கமுடியாமல் தீர்க்கத்தா¢சி புலம்பிய இரங்கற்பா என்பது விளங்கும். இந்த அத்தியாயத்தில் சில வார்த்தைகள் இயேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களோடு இசைந்திருப்பது போல் தோன்றுவதால் அவற்றைத் தேடிஎடுத்து சுவிசேஷ ஆசி¡¢யர் பயன்படுத்திக்கொள்கிறார்.

 

மத்தேயு 12: 14 ல் "அப்பொழுது பா¢சேயர் வெளியே போய்அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனை செய்தார்கள். இயேசு அதை அறிந்து அவ்விடம் விட்டு விலகிப்போனார்.திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.அவர்கள் எல்லாரையும் அவர் குணமாக்கிதம்மைப் பிரசித்தம் பண்ணாதபடிக்கு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். ஏசாயா  தீர்க்கத்தா¢சியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது: இதோ நான் தொ¢ந்துகொண்ட என்னுடைய தாசன்என் ஆத்துமாவுக்குப் பி¡¢யமாயிருக்கிற என்னுடைய  நேசன்நான் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன்,  அவர் புறஜாதியாருக்கு  நியாயத்தை அறிவிப்பார். வாக்குவாதம் செய்யவும் மாட்டார்கூக்குரலிடவும் மாட்டார்அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப் பண்ணிகிறவரைக்கும்நெறிந்த நாணலை முறிக்காமலும் மங்கியொ¢கிற தி¡¢யை அணைக்கமாலும் இருப்பார். அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாக இருப்பார்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது.

 

இதில் குறிப்பிட்டுள்ள ஏசாயா 42: 1 -3 வரையுள்ள வசனங்களுக்கும் மேற்குறிப்பிட்ட மத்தேயு வசனங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தொ¢யவில்லை. பா¢சேயர் இயேசுவைக் கொலை செய்வதற்காக ஆலோசனை செய்ததையும் அவர் ஒளிந்து ஓடியதையும் இந்தத் தீர்க்கத்தா¢சனத்தில் எங்கே தேடுவதுபின்வந்த திரளான ஜனங்கள் எல்லாரையும் அவர் குணப்படுத்தினார் என்றால்அவர்கள் அனைவரும் நோயாளிகளாஅவ்ர்களுக்கு என்னென்ன நோய்கள் இருந்தது என்பது குறிப்பிடப்படவில்லை. ஏசாயாவின் தீர்க்கத்தா¢சனத்திலும் இயேசு மக்களின் பிணிகளைத் தீர்த்தார் என்பது பற்றிய பேச்சே இல்லை.   இயேசு நாடு முழுதும் சுற்றித்தி¡¢ந்து மக்களிடையே உபதேசம் செய்கின்ற ஒரு போதகர். அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை என்றால் என்ன பொருள்அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார் என்ற தீர்க்கத்தா¢சன வார்த்தைகளுக்கு என்ன பொருள்?யூதர்களோ அல்லது புறஜாதியாரோ எப்பொழுதுமே இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்பட்டு இருந்ததில்லை. தாமஸ் பெயின் (Thomas Paine) என்ற மதவியலாள்ர் 'பகுத்தறிவின் காலம்' (The Age of Reason) என்ற தன் புத்தகத்தில் இந்த தீர்க்கத்தா¢சனம் சைரஸ் (Cyrus) என்ற பாரசீக அரசனைப் பற்றியது என்கிறார்.* அவன் புறஜாதியார் மத்தியில் அதிகாரமிக்கவன்பாபிலோனியரை வென்று யூதர்களை அடிமைத்தளையிலிருநு விடுவித்தவன். ஏசாயா சைரசின் காலத்தில் வாழ்ந்தவர்சைரஸ் யூதர்களுக்கு நன்மை செய்தபடியால் அவன்மீது  மிக்க மதிப்பு வைத்திருந்தார் போலும்.

 

ஒருநாள் வனந்தரமான ஓ¡¢டத்தில் இயேசு ஏராளமான மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். வெகுநேரம் சென்றபின்பு அவருடைய சீடர்கள் அவா¢டத்தில் வந்து இது வனாந்தரமான இடம் வெகுநேரமுமாயிற்றுபுசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டுபோய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து ஐந்து அப்பங்களும்இரண்டு மீன் களுமுண்டு என்றார்கள். அவர் அந்த ஐந்து அப்பங்களையும்இரண்டு மீன் களையும் ஆசீர்வதித்துஅப்பங்களைப்பிட்டுஅவர்களுக்குப் பா¢மாறும்படி தம்முடைய சீடர்களைப் பணித்தார். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மேலும்  அப்பங்களிலும் மீன் களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள் (மாற்கு 6: 34 -44, மத்தேயு 14: 15 -21).பழைய ஏற்பாட்டில் 1 இராஜாக்கள் 4: 42 -44 வரையுள்ள வசனங்களில் இதே போன்றதொரு கதை சொல்லப்படுகிறது. அதில் எலிசா தீர்க்கத்தா¢சி அற்புதத்தைச் செய்கிறார். ஒரு மனிதன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்.அப்பொழுது எலிசாஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு என்றான். அதற்குஅவனுடைய பணிவிடைக்காரன் இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அத்ற்கு எலிசா அதை ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடுசாப்பிட்டபிற்பாடு இன்னும் மீதியிருக்கும் என்று கடவுள் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது அவ்ர்களுக்கு முன்பாக அதை வைத்தான்கடவுளின் வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது. எலிசா தீர்க்கத்தா¢சி செய்த அற்புதத்தைவிட இயேசு செய்கின்ற அற்புதம் பொ¢தாகத் தோன்றவேண்டும்என்பதற்காக இருபது அப்பங்களை நூறுபேருக்கு எலிசா கொடுத்ததுஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்துச் சாப்பிடச் செய்ததாக எழுதப்பட்டுள்ளது. மேலும் மாற்கு 8: 14 -21மற்றும் மத்தேயு 15: 32 -38 வரையுள்ள வசனங்களில் இயேசு ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டு கொடுத்து மீதி துணிக்கைகள் ஏழு கூடைகள் நிறைய எடுத்ததாக ஒரு சங்கதி  கூறப்படுகிறது. ஆனால் லூக்கா மற்றும் யோவான் இவர்களின் சுவிசேஷத்தில் இந்த அப்பங்கள் பங்கிடும் அற்புதத்தைப் பற்றிய விவரம் எதுவுமில்லை.

 

 

* Thomas Paine, The Age of Reason; Freethought Publishing Company, London, 1880; p187

 

லூக்கா 7: 11 -15 வரையுள்ள வசனங்களில் இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனபோது மா¢த்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும்படிக் கொண்டுவந்தார்கள். அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான்அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்.இயேசு அவளைப் பார்த்துமனதுருகி அழாதே என்று சொல்லி கிட்டவந்து பாடையைத் தொட்டார்அதைச் சுமந்தவர்கள் நிறார்கள்அப்பொழுது அவர் வாலிபனேஎழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மா¢த்தவன் எழுந்து உட்கார்ந்துபேசத்தொடங்கினான் என மா¢த்தவன் உயிரோடு எழுப்பபட்ட கதை உள்ளது. இதேபோல் எலியா தீர்க்கத்தா¢சி ஒரு விதவையின் இறந்துபோன மகனை உயிரோடு எழுப்பிய வரலாறு 1 இராஜாக்கள் 17: 17 -24 வரையுள்ள வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கத்தா¢சிகள் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்ற பதிவுகள் இருப்பதால் அதே போன்ற அற்புதங்களை அல்லது அதைவிட மேலான அற்புதங்களை மேசியா என்று நம்பப்படுகிற இயேசு செய்தாகவேண்டும் என அவரது வரலாற்றை எழுதியவர்கள் கருதினார்கள்.

 

ஒருநாள் அவர் வழியில் பிறவிக்குருடனாகிய ஒரு மனிதனைக் கண்டார். அப்பொழுது சீடர்கள் அவரை நோக்கி: ரபீஇவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்இவன் செய்த பாவமோஇவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கல். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமும் அல்லஇவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் அல்லதேவனுடைய கி¡¢யைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் என்று சொல்லிதரையில் துப்பி உமிழ்நீ¡¢னால் சேறுண்டாக்கிஅந்த சேற்றைக் குருடனுடைய கண்களில் பூசிநீ போய் சீலோவாம் குளத்தில் கழுவு என்றார். அப்படியே அவன் போய்க் கழுவிப் பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான் ( யோவான் 9: 1 -7). இருபது இருபத்தைந்து வயதுவரை ஒருவன் பிறவிக்குருடனாகத் வேறு எந்தக் காரணமும் இன்றித் துயரத்தில் வாழ்ந்தது தேவனுடைய வல்லமை வெளிப்படும் பொருட்டு என்றால்அந்த தேவன் எவ்வளவு சுயநலவாதியாகவும்கொடூர உள்ளம் படைத்தவனாகவும்சாதாரண மனிதர்களைப் போல விளம்பரப்பி¡¢யனாகவும்  இருக்கவேண்டும். இந்த ஒரு பிறவிக் குருடனை விடுங்கள்உலகெங்குமுள்ள இலட்சக்கணக்கான மற்ற பிறவிக்குருடர்களின் கதை என்னஇன்னும் மற்றுமுள்ளபிற உறுப்புகள் ஊனமடைந்து பிறப்பவர்களின்  கதை என்னஅவர்கள் எதற்காக அப்படி பிறக்க வேண்டும்பைபிளில் பதில் இல்லை.

 

இயேசு கிறிஸ்து செய்த முதல் அற்புதமாகக் கருதப்படுவதுஅவர் ஒரு திருமண வீட்டு விருந்தில் திராட்சை மது குறைவுபட்ட போது தண்ணீரைத் திராட்சை மதுவாக மாற்றிவிருந்தினருக்குக் கொடுக்கச் செய்தார். இது யோவானின் சுவிசேஷத்தில் மட்டும் விவா¢க்கப்பட்டுள்ளது (யோவான் 2; 1 -11). இயேசுவும்அவருடைய தாயாரும்சீடர்களும் அந்தக் கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். திராட்சை மது குறைவுபட்ட போது அவருடைய தாய் அவா¢டம் வந்து திராட்சை மது இல்லை என்றாள்.  யூதர்கள் தங்களைச் சுத்திகா¢க்கும் முறைமையின்படி ஒவ்வொன்றும் இரண்டு அல்லது மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே இருந்தன. இயேசு பணியாட்களை நோக்கி ஜாடிகளிலே தண்ணீரை நிரப்புங்கள் என்றார். பின்னர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்போது மொண்டுபந்திவிசா¡¢ப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார். அந்தத் திராட்சை மது எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்கரருக்குத் தொ¢ந்ததேயன்றிபந்தி விசா¡¢ப்புக்காரனுக்குத் தொ¢யாததால்அவன் திராட்சை மதுவாக மாறிய தண்ணீரை ருசிபார்த்தபோது  மணவாளனை அழைத்துஎந்த மனிதனும் முதலில் நல்ல திராட்சை மதுவைக் கொடுத்து ஜனங்கள் திருப்தியடைந்தபின் ருசிகுறைந்ததைக் கொடுப்பான்நீரோ நல்ல மதுவை இதுவரை வைத்திருந்தீரே என்றான்.

 

இந்த அற்புதச்செயலை ஆராய்ந்து பார்த்தால்இதிலுள்ள குழறுபடி தொ¢யவரும். விருந்தில் எற்கனவே மது பறிமாறப்பட்டுள்ளது. எனவே குறைந்த அளவு மதுவே கடைசியில் பந்தியிருப்பவர்களுக்குப் போதுமானது. ஆனால் இயேசு உண்டுபண்ணிய திராட்சை மது மிகவும் அபா¢மிதமான அளவில் இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் நிறைய மது என்றால் அது  மிக அதிகமான அளவேயாகும். யூதர்களின் ஒரு குடம் என்பது 1ண ரோமன் ஆம்போரே (amphorae) அல்லது 21 விர்டெம்பர்க் (Wirtemberg) அளவை களாகும். மொத்தம் ஆறு ஜாடிகளும் சேர்த்து 252 லிருந்து 378 விர்டெம்பர்க் அளவைகள்  ஆகும். ஒரு விர்டெம்பர்க் அளவை என்பது தற்போதைய அளவில் 3.32 ஆங்கிலேய பைன்ட் (pint) களுக்குச் சமம். அதாவது சுமார் 1.8 லிட்டர்கள். அப்படியென்றால் இயேசு அற்புதத்தால்  உண்டுபண்ணிய மது சுமார் 680 லிட்டர்கள் ஆகும்!. பைபிளின் ஆங்கில மொழிபெயர்ப்பில் (King James Version) ஒரு கற்சாடி இரண்டு அல்லது மூன்று பர்கின் கள் (firkins) கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பர்கின் என்பது தற்போதைய அளவில் 9 அல்லது 10 காலன் கள் (gallons) ஆகும். புதிய ஆங்கில பைபிளில் ஒவ்வொரு கற்சாடியும் 20 முத்ல் 30 காலன் கள் தண்ணீர் கொள்ளும் என்று உள்ளது.  ஒரு காலன் 3.78 லிட்டர்கள். இந்தக் கணக்கு வைத்துப்  பார்த்தாலும் அதே 680 லிட்டர் திராட்சை மது உண்டாக்கப்பட்டுள்ளது என்பது தொ¢யவரும்.

 

 ஒரு லிட்டர் மதுவை நான்குபேர் பகிர்ந்து கொண்டாலும் 2720 பேர் குடிக்கலாம். கானா ஊர் என்றழைக்கபடும் அந்த சிற்றூ¡¢ல் நடைபெற்ற அந்தத் திருமணத்தில் ஏழாயிரம் எட்டாயிரம் பேர் கலந்துகொண்டிருந்தால் தான் கடைசி பந்திகளுக்கு  இவ்வளவு மது தேவைப்படும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீனத்தில் ஒரு சிற்றூ¡¢லே  நடந்த ஒரு சாதாரணக் கல்யாணத்தில் இத்தனைபேர் கலந்து கொண்டிருப்பார்கள் என்பதையும்அதில் கடைசி பந்தியிருப்பவர்களுக்கு மட்டும் இவ்வளவு திராட்சை மது தேவைப்பட்டிருக்கும் என்பதையும் நம்ப முடிகிறதாமுதல் மூன்று சுவிசேஷங்களிலும் இந்த அற்புதம் சொல்லப்படவேயில்லை.

 

பழைய ஏற்பாட்டில் மோசே  எகிப்திலிருந்து யூதர்களை  அழைத்துகொண்டு வனாந்தரத்தில் செல்லும்போது குடிதண்ணீருக்குப் பஞ்சம் எற்பட்டது. மோசே கன்மலையை கம்பால் அடித்து தண்ணீரை வரவழைத்து அவர்களை அருந்தவைக்கிறார் (யாத்திராகமம் 17: 6; எண்ணாகமம் 20: 7 -11). சிம்சோன் வனாந்தரத்தில் தாகத்தினால் துடித்து தேவனிடம் வேண்டியபோதுதேவன் பள்ளத்தாக்கைப் பிளக்கச்செய்து தண்ணீரை பாய்ந்துவரச் செய்து அவன் தாகத்தைப் போக்கினார் ( நியாயாதிபதிகள் 15: 18 &19). இந்த இரு அற்புதங்களிலும் தண்ணீர் தண்ணீராகவே வரவழைக்கப்பட்டது. முதன்முதலில் தண்ணீரை உருமாற்றம் அடையச் செய்தது மோசே ஆவார். மோசே எகிப்து மன்னனைப் பணியவைத்து யூதர்களுக்கு விடுதலை வாங்கித் தருவதற்காக எகிப்திலுள்ள எல்லா நீர்நிலைகளிலுமுள்ள தண்ணீரை இரத்தமாக மாற்றினார் (யாத்திராகமம் 7: 17 முதல்). பின்பு மற்றொரு சந்தர்ப்பத்தில் எலிசா தீர்க்கத்தா¢சி அசுத்தமான தண்ணீரை உப்பை அதில் இட்டு ஆரோக்கியமான தண்ணீராக மாற்றிக் காட்டினார் (2 இராஜாக்கள் 2:19 -21). தண்ணீரை உருமாற்றம் அடையச் செய்யும் இந்த கலை’ மோசேயிடம் தொடங்கி தீர்க்கத்தா¢சிகள் வழியாக இயேசுவிடம் வந்தடைந்திருக்கிறது.

 

இஸ்ரேலிலும்,  யூதேயாவிலும் அத்திமரங்கள் ஏராளம் இருந்தன. யூதர்கள் அத்திப்பழத்தை விரும்பிச் சாப்பிடுவர். ஒருநாள் இயேசுவும் அவரது சீடர்களும் பெத்தானியாவிலிருந்து எருசலேம் நகரத்துக்கு வந்துகொண்டிருந்தபோது இயேசுவுக்குப் பசியாயிருந்ததனால்வழியில் ஒரு அத்திமரத்தைக் கண்டு அதன் பழங்களைப் புசிக்கலாமென்று அதனிடத்தில் போனார். அது அத்திப்பழக் காலமாயிராதபடியால்அவர் அதனிடத்தில் வந்தபோது அதில் இலைகளேயல்லாமல் வேறொன்றையும் காணவில்லை. உடனே இயேசு கோபங்கொண்டுஇனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனிகள் உண்டாகாதிருக்கக்கடவது என்று மரத்தைச் சபித்தார். அந்தமரம் பட்டுப் போயிற்று (மத்தேயு 21: 18 -21; மாற்கு 11: 12 -14). மத்தேயுவின் சுவிசேஷத்தில் இயேசு சபித்த உடனே மரம் பட்டுப்போயிற்று. ஆனால் மாற்குவின் சுவிசேஷத்திலோ காலையில் அந்தவழியாகப் போகும்போது இயேசு மரத்தை சபித்தார். ஆனால் மரம் உடனே பட்டுப்போகவில்லைமறுநாள் காலையில் திரும்பி அதேவழியாகப் போகும்போதுதான் சீடர்கள் மரம் பட்டுப் போனதைக் கண்டார்கள்! மற்றெல்லா அற்புதங்களிலும் ஆக்கபூர்வமான நிகழ்வுகளையே சந்தித்த நாம் இதில்  குற்றமில்லாத ஒரு மரத்தின் அழிவைப் பார்க்கிறோம். லூக்கா 9; 56 ல் மனுஷகுமாரன் மனிதர்களுடைய ஜீவனை அழிப்பதற்கு அல்லஅவர்களை இரட்சிக்கவே வந்தார் என்று தன்னைபற்றி இயேசு கூறுகிறார். அப்படியானால் அவர் ஏன் ஒரு சாதாரண விஷயத்துக்காக ஒரு மரத்தை அழிக்க வேண்டும்அது மனிதன் அல்லவெறும் மரம்தானே என்பதாலாபடிப்பறிவில்லாத பாமரன் கூடபருவமில்லாத காலத்தில் ஒரு மரத்திடமிருந்து கனிகளை எதிர்பார்க்கமாட்டான். கனிகள் இல்லையென்றால் மரத்தைச் சபிக்கமாட்டான். இயேசுவைப் போன்ற ஒரு போதகர் இவ்வாறு நடந்துகொண்டது புதிர் தான். இது அவருடைய பண்புக்கே இழுக்காகத் தோன்றவில்லயா?

 

கிறிஸ்தவ மறையியலாளர்கள் இதைக்குறித்துப் பேசும்போதுயூதமக்கள் கடவுளுக்குப் பி¡¢யமில்லாதவர்களாகவும்கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாமலும் இருந்ததால்அவர்கள் அழிந்துபோவார்கள் என்பதை உணர்த்து-வதற்கான ஒரு அடையாளமாகத்தான் இதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் இயேசு அப்படி நினைக்கவில்லை என்பது மத்தேயு 21: 21ம் வசனத்தை வாசித்தால் தொ¢யும். இயேசு சீடர்களைப் பார்த்து உங்களுக்குக் கொஞ்சமாவது விசுவாசம் இருந்தால் இந்த மரத்துக்கு நான் செய்தது போல மட்டுமல்லாது இந்த மலையைப் பார்த்து நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்றால் அப்படியே நடக்கும் என்று தன் செயலை நியாயப்படுத்துகிறார். 

 

ஒத்தமைந்த (synoptic) சுவிசேஷங்கள் மூன்றிலும் (மத்தேயு 17: 1 -12; மாற்கு 9: 2 -13; லூக்கா 9: 28 -36) இயேசு மறுரூபமான சம்பவம் விவா¢க்கப்பட்டுள்ளது. அவர் தன்னுடைய முடிவு எப்படி நேரும் என்பதைப் பற்றி சீடர்களிடம் சொல்லியபின்,  ஆறு அல்லது எட்டு நாள் கழித்து தனக்கு மிகவும் அணுக்கமான சீடர்களான பேதுருயாக்கோபு மற்றும் அவன் சகோதரனான யோவான் ஆகியோரை அழைத்துகொண்டு உயர்ந்தமலையின் மேல் போய் சீடர்களை விட்டுவிட்டுத் தனியாக ஜெபம் செய்யச் சென்றார். அப்போது அவர் முகம் மறு ரூபம் அடைந்தது. அவருடைய உடை உறைந்த மழையைப்போல (snow) வெண்மையாகப் பிரகாசித்தது. மோசேஎலியா ஆகிய இரு தீர்க்கத்தா¢சிகளும் அவருடன்அவர் எருசலேமில் நிறைவேற்றப் போகிற மரணத்தைக்குறித்துப்  பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவனோடுஇருந்தவர்களும் நித்திரை மயக்கமாயிருந்தார்கள். இருப்பினும் அவர்கள் விழித்தெழுந்து அவருடைய மகிமையையும்அவரோடு நின்ற இரண்டுபேரையும் கண்டார்கள். இயேசுவோடுகூட இருந்தவர்கள் மோசேயும்எலியாவும்தான் என்பதை சீடர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று தொ¢யவில்லை. ஏனெனில் இயேசு தன் விருந்தினர்களை அவர்களுக்கு அறிமுகப் படுத்தவில்லை.

லூக்காவின் சுவிசேஷத்தில் மோசேயும்எலியாவும் இயேசுவிடம் நிறைவேறப்போகிற அவரது மரணத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுளின் ஒரே பேறான குமாரன் என்று கருதப்படும்  இயேசு எற்கனவே தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்துவிளக்கமாகத் தன் சீடர்களுக்குசொல்லியபிறகு,  பழங்காலத்து தீர்க்கத்தா¢சிகள் இருவர் ஆவியாக மேலுலகிலிருந்து இறங்கிவந்து பின்னர் வரும் இறுதி நாட்களில் அவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவுரை கூறவேண்டிய அவசியம் என்னஅப்படிப்பட்ட ஒரு நிலையில் அவர் இருந்ததாகவும் சொல்லப்படவில்லை. கு¡¢சில் அறையப்படுவதற்கு முந்தின இரவில் கெத்சமனே தோட்டத்தில் தன் மரணத்தைக் குறித்து மனங்கலங்கி கடவுளிடம்அதிலிருந்து தன்னைத் தப்புவிக்குமாறு இரண்டுமுறை வேண்டினார். அந்த நேரத்தில் தீர்க்கத்தா¢சிகள் வந்து ஆறுதல் சொல்லியிருந்தாலும் ஏற்றுகொள்ளலாம்.

 

ஆராய்ச்சியாளர்கள் இதை ஒரு சாதாரணமான நிகழ்வாகவே கருதுகிறார்கள். இயேசு மலையுச்சியில் தனியாகச் சென்று ஜெபம் செய்தபோது பேதுருவும் மற்ற இரு சீடர்களும் நித்திரையிலிருந்தார்கள். பேதுரு தன் கனவில் இந்த மறுரூப தா¢சனக் காட்சியைக் கண்டு கண்விழித்தவுடன் இயேசுவிடமும்மற்றசீடர்களிடமும் விவா¢த்திருக்கலாம். இயேசு இதை யா¡¢டமும் சொல்லவேண்டாம் என்று சொன்னதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். இந்த நிகழ்வில் பங்கெடுத்த யோவான் தன் சுவிசேஷத்தில் இச்சம்பவம் பற்றிய எந்தக் குறிப்பும் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவத்தின்போது இயேசுவுடன் இருந்த யோவான் மற்றும் யாக்கோபு ஆகியோர் தனித்தனியாக எழுதிய கடிதங்கள் புதிய ஏற்பாட்டில் உள்ளனஅவற்றிலும் இயேசுவின் மறுரூப நிகழ்ச்சியைப் பற்றி எவ்விதமான குறிப்புமில்லை. பேதுரு மட்டும் தன் இரண்டாம் கடிதமான 2 பேதுரு 1: 17, 18 வசனங்களில் இதனைக் குறிப்பிடுகிறார். ஏனெனில் அவர்தான் அந்த கனவு தா¢சனத்தில் முக்கியமாகப் பங்கெடுத்திருக்கிறார்இயேசுவோடு பேசியிருக்கிறார்வானத்திலிருந்து ஒலித்த அசா£¡¢, 'இவர் என் நேசகுமாரன்இவா¢ல் நான் பி¡¢யமாயிருக்கிறேன்இவருக்குச் செவிகொடுங்கள்என்று சொல்லியதையும் அவரே கேட்டிருக்கிறார்.

 

பழைய ஏற்பாட்டில் இதே போன்றதொரு சம்பவம் விவா¢க்கப் பட்டுள்ளது. மோசே தன்னுடன் தன் நம்பிக்கைக்-கு¡¢யவர்களான ஆரோன்நதாப்அபியு மற்றும் எழுபது மூப்பர்களையும் அழைத்துக்கொண்டுசினாய் மலையின் மீது ஏறி ஜெகோவாவின் தா¢சனம் கண்டார் (யாத்திராகமம் 24: 9 -11). மோசே  தன் நம்பிக்கைக்கு¡¢யவர்களான ஆரோன்நதாப்அபியு ஆகியோரை மலை மேல் அழைத்துச் சென்றதுபோலபேதுருவின் காட்சியிலும்இயேசு தன் நம்பிக்கைக்கு¡¢யவர்களான பேதுருயோவான் மற்றும் யாக்கோபு ஆகியவர்களை மலைமீது அழைத்துச் செல்கிறார். பழைய ஏற்பாட்டுச் சம்பவத்தின் பிரதிபலிப்பாகவே இந்த சம்பவமும் புனையப்பட்டுள்ளது. 

இயேசுவின் வாழ்க்கையில் நடந்த அதிசயங்களில் மிகப்பொ¢ய அதிசயம் என்னவென்றால் சாத்தான் அவரைத் தூக்கிக்கொண்டு ஆகாயத்தில் பறந்ததுதான் . மத்தேயு4:5 ஆம் வசனத்தில் சாத்தான் இயேசுவை எருசலேம் தேவாலயத்து உப்பா¢கையில் தூக்கிக்கொண்டு போய் நிறுத்தியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. லூக்கா 4: 5 ல் சாத்தான் அவரை உயர்ந்த மலையின் உச்சியின் மேல் தூக்கிக்கொண்டு போய் உலகத்திலுள்ள சாம்ராஜ்ஜியத்தையெல்லாம் காண்பித்தான் என்று கூறப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்ன என்றால் இது இயேசு செய்த அற்புதம் அல்லஇது சாத்தான் செய்த அற்புதம்! இராமாயணத்து இராவணனுக்காவது சீதையைத் தூக்கிச்செல்ல புஷ்பகவிமானம் தேவைப்பட்டதுஆனால் சாத்தானுக்கு இயேசுவைத் தூக்கிச் செல்ல எதுவும் தேவைப்படவில்லை! கடவுளின் குமாரனாகிய இயேசுவையே தூக்கிகொண்டு  ஆகாயத்தில் பறப்பதற்குச் சாத்தானுக்கு முடிகிறது என்றல் அவன் இயேசுவை விட  எவ்வளவு வல்லமையுடையவன் என்பது தெளிவாகிறது. இப்படி புராணத்தில் வருகின்ற கற்பனைக் கதைகளையும்வரலாற்றுச் சம்பவங்களையும் இணைத்துக் குழப்பக்குவியலாக எழுதியிருக்கிறார்கள் சுவிசேஷங்களின் ஆசி¡¢யர்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard