Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 25 Original Sin - ஆதி பாவம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
25 Original Sin - ஆதி பாவம்
Permalink  
 


 ஆதி பாவம்

உலகிலுள்ள கிறிஸ்தவர்களில் ஒரு பாதியினர் ஏற்றுக்கொள்ள மறுக்கும் கிறிஸ்தவமதக் கோட்பாடு  ஆதி பாவம்’ (Original sin) ஆகும். மறு பாதியினர் ஆதி பாவத்தைப் பற்றி சிந்திக்கும்போது குழப்பநிலையிலேயே உள்ளனர். ஆதி பாவம் என்றால் என்ன? பைபிளில் ஆதியாகமம் என்ற முதல் அதிகாரத்தில் ஜெகோவா தரை, கடல், வான், நீர்வாழ் ஜீவன்கள், பறவைகள், மிருகங்கள் அனைத்தையும் படைத்துவிட்டு, மனிதனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்த கதை சொல்லப்பட்டுள்ளது.. ஆதாம், ஏவாள் ஆகிய இரு முதல் மனிதர்களையும் சகல வளங்களும் நிறைந்த ஏதேன் என்னும் தோட்டத்திலே குடியமர்த்தினார். ஏதேன் தோட்டத்தின் நடுவில் ஜீவவிருட்சம், ஞானவிருட்சம் என்று இரண்டு மரங்களையும் ஜெகோவா வைத்திருந்தார். ஜீவவிருட்சத்தின் கனியைப்புசிப்பவனுக்கு மரணம் நோ¢டுவதில்லை. ஞானவிருட்சத்தின் கனியைப்புசித்தால் நன்மை தீமை அறியத்தக்க பகுத்தறிவு உண்டாகும். ஆதாம் ,ஏவாள் இருவா¢டமும் நன்மை தீமை அறியத்தக்க ஞானவிருட்சத்தின் கனியை புசிக்கலாகாது, கட்டளையை மீறிப் புசித்தால் இருவரும் சாவீர்கள் என்று கடுமையாக எச்சா¢த்திருந்தார்.

தான் படைத்த எல்லாவற்றுக்கும் மேலாகவும், தன்னுடைய சாயலிலும் மனிதனைப் படைத்திருந்தாலும் கடவுள் மனிதனுக்குப் பகுத்தறிவைக் கொடுக்கவில்லை (?) ஆனால் பாம்புக்குப் பகுத்தறிவையும், மனிதனின் மொழியில் பேசும் சக்தியையும் கொடுத்திருந்தார்! (ஆதியாகமம் 3: 1). ஆதாமும் ஏவாளும் இளம் தம்பதியினர் வயதில் இருந்தாலும் மனோநிலையிலும், அறிவிலும் நன்மை தீமை அறியக்கூடாத பிள்ளைப்பருவத்திலேயே இருந்தனர். சர்ப்பம் ஏவாளிடம் வந்து ஞானவிருட்சத்தின் கனியைப் புசித்தால் நீங்களும் நல்லது கெட்டது அறிந்து தேவர்களைப்போல் ஆவீர்கள் என்று அம்மரத்தின் கனியைச் சாப்பிட அவளைத் தூண்டியது. ஒரு குழந்தையின் மனோநிலையைக் கொண்டிருந்த ஏவாளும் கடவுளின் கட்டளையை மீறுகிறோம் என்பது பு¡¢யாமல், அக்கனியைப் பறித்து, புசித்து தன் புருஷனுக்கும் கொடுத்தாள், அவனும் புசித்தான் (ஆதியாகமம் 3: 6). இதுதான் ஆதி பாவம்’!

பகுத்தறிவு பெறாத முதல் மனிதர்களான ஏவாளும், ஆதாமும் முதன் முதலில் செய்தஇந்த கட்டளை மீறுதலுக்கு (ஆதி பாவத்திற்கு) ஜெகோவா அளித்த தண்டனை என்ன தொ¢யுமா? சர்ப்பம், ஆதாம், ஏவாள் ஆகிய மூவருக்கும் சாபம் கொடுத்தார். சர்ப்பத்தைப் பார்த்து நீ வயிற்றினால் நகர்ந்து , உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய். ஸ்தி¡£யின் வித்துக்கும் உன் வித்துக்கும் பகை உண்டாக்குவேன், அவர்கள் உன் தலையை நசுக்குவார்கள், நீ அவர்கள் குதிங்காலை நசுக்குவாய் என்று சபித்தார். ஏவாளை நோக்கி உன்னை வேதனையோடு பிரசவிக்கச் செய்வேன் என்றார். ஆதாமை நோக்கி மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட நீ மண்ணுக்குத் திரும்பும் மட்டும் கஷ்டப்பட்டு உழைத்து உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் சாப்பிடுவாய் என்று சபித்தார். ஆதி பாவமும் அதற்கு ஜெகோவா அளித்த சாபமும் ஆதாமின் சந்ததிகள் வழியே  இன்றுவரை தொடர்ந்து வருகிறது என்று தீவிரமான கிறிஸ்தவர்களில் பலர் நம்புகின்றனர்.

 

இந்த சாபங்களில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னவென்றால்

(1) ஜெகோவா மனிதனைச் சாகாவரத்தோடு படைத்தார் என்றும், அவர் கட்டளையை மீறி ஆதாமும், ஏவாளும் ஞானவிருட்சத்தின் பழத்தை புசித்ததனாலேயே அவர்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற சாபத்தைக் கொடுத்தார் என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள், இதற்கு ஆதாரமாக " நீ மண்ணிலிருந்து வந்தாய், மண்ணுக்கே திரும்புவாய்" என்ற ஜெகோவாவின் வார்த்தைகளைக் காட்டுவர் (ஆதியாகமம் 3: 19). ஆனால் தேவனோ, 'மனிதன் ஞானவிருட்சத்தின் கனியைப்புசித்து நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் (தேவர்களுள்) ஒருவனாக ஆனான். அவன் ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து என்றென்றைக்கும் உயிரோடிராதபடிச் செய்யவேண்டும்' என்று நினைத்து ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தைவிட்டு விரட்டிவிட்டு, தோட்டத்தில் மீண்டும் அவர்கள் நுழையாதபடி காவலும் இட்டார் (ஆதியாகமம் 3: 22-24). அப்படியானால் அவர் மனிதனை மரணமில்லா நித்தியவாழ்வுடன் படைக்கவில்லை என்றுதானே பொருள்? இதில் 'பாவத்தின் சம்பளம் மரணம்' என்ற கோட்பாடு எங்கிருந்து வந்தது? 'ஞானவிருட்சத்தின் கனியைப்புசிக்கும் நாளில் நீ சாகவே சாவாய்' என்று தேவன் ஆதாமை எச்சா¢த்தது உண்மையற்ற கூற்றாகிறது (ஆதியாகமம் 2: 17). தவறு செய்யும் குழந்தைகளைப் பெற்றோர் 'சாமி கண்ணைக் குத்தும்' என்று சொல்லி பயமுறுத்துவது போலிருக்கிறது!

(2) கனியைப் பறித்து புசித்தபோது ஆதாமும் ஏவாளும் எது  நன்மை எது தீமை என்று பு¡¢ந்துகொள்ளும் அறிவில்லாத குழந்தை மனத்தோடு இருந்தார்கள் என்று ஆதியாகமக் கதையிலிருந்து தெளிவாகிறது. இந்நிலையில் இதை ஒரு தண்டனைக்கு¡¢ய பாவம் என்று எப்படி கருதமுடியும்? கடவுளுக்குக் கீழ்படியாததைப் பாவம் என்று கருதினாலும், அதற்காக வேதனையும், துயரமும் நிறைந்த வாழ்க்கையை ஆதாம் ஏவாள் இருவருக்கும் மட்டுமல்லாமல் அவர்கள் சந்ததியினருக்கும் தண்டனையாக வழங்குவது எவ்வகையில் தர்மம்? எல்லாவற்றையும் சிருஷ்டித்து பா¢பாலிக்கும் சர்வ வல்லமையுடைய கடவுளுக்கு சாதாரண தர்ம நியாயங்கள் தொ¢யாதா?

(3) சர்ப்பம் ஏவாளைத் தவறு செய்யத் தூண்டியதற்காக அதைத் தேவன், 'நீ வயிற்றினால் நகர்ந்து உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய், உனக்கும் ஸ்தி¡£க்கும், உன் வித்துக்கும் அவள்  வித்துக்கும் பகை உண்டாக்குவேன்' என்று சபிக்கிறார். இன்றுவரை எந்த பாம்பும் மண்ணைத் தின்று உயிர்வாழ்வதில்லை. ஆதியாகமத்தில் கடவுளால் தடை செய்யபட்ட அறிவு தரும் பழத்தை ஏவாளைக்கொண்டு சாப்பிடச்செய்த பாம்பைப்  பிற்காலத்தில் சாத்தான் என்று கூற ஆரம்பித்தனர். சர்ப்பம் ஏவாளைக் கடவுளால் தடை செய்ய்யப்பட்ட ஞானவிருட்சத்தின் பழத்தைச் சாப்பிடத்தூண்டியது. கடவுள் சிறார் கதைகளில் (Fairy tales) வருகின்ற பிராணிகளைப்போல சர்ப்பத்திற்கு மனிதர்களோடு பேசும் சக்தியைக் கொடுத்திருந்தார்! "அவர் உண்டாக்கின சகல பிராணிகளிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது" (ஆதியாகமம் 3:1) என்று பைபிள் சொல்லுகிறது. சர்ப்பத்தை மனிதனைவிட அறிவுள்ள பிராணியாக ஏன் கடவுள் படைத்தார் என்பதற்கு பைபிளில் விடையில்லை. சாத்தான் பாம்பு வேடத்தில் வந்து ஏவாளைத் தடை மீறச்செய்தான் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும் சர்ப்பம் இவ்வாறு செய்ததற்குக் கடவுள்  சாத்தானைச் சபிக்கவில்லை, சர்ப்பத்தைத்தான் சபிக்கிறார். "நீ இதைச் செய்தபடியால் சகல மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய்" (ஆதியாகமம் 3:14) என்று கடவுள் சர்ப்பத்தை மிருகங்களில் ஒன்றாகக் கருதியே சபிக்கிறார். அது மட்டுமல்ல சர்ப்பத்தின் சந்ததிகளையும் சேர்த்து சபிக்கிறார். எனவே சாத்தானுக்கும் இந்த சம்பவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது. அப்போஸ்தலர் பவுலும் "சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது" (2 கொ¡¢ந்தியர் 11: 3) என்று சர்ப்பத்தைத்தான் குற்றம் சாட்டுகிறாரே தவிர சாத்தானை அல்ல. சாத்தான் ஏவாளை ஏமாற்றி வஞ்சித்தான் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் பைபிளில் இல்லை. மோசேயால் எழுதப்பட்டது என்று நம்பப்படுகிற பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களிலும் (Pentateuch) சாத்தானைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடையாது. எனினும் சாத்தான்தான் சர்ப்பத்தின் வடிவில் வந்து ஏவாளை வஞ்சித்தான் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தின விசேஷம் 12: 9 ல் 'உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பொ¢ய வலுசர்ப்பம் பூமியிலே விழத்தள்ளப்பட்டது' என்று ஆதியாகமத்துப் பாம்பையும், கிறிஸ்துவின் தேவலோகத்துத் தாயைத் துரத்திச் செல்லும் வலுசர்ப்பத்தையும் (dragon) யோவான் ஒன்றெனக்கருதிக் கூறுகிறார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

 

(4) சர்வ வல்லமையுள்ள தேவன் நடந்ததுநடப்பதுநடக்கப்போவது என எல்லாம் தொ¢ந்த சர்வ ஞானமும் (omniscience) உடையவராகத்தானே இருக்கவேண்டும். அப்படியானால் சர்ப்பமானது ஏவாளை வஞ்சித்து அவளைத் தன் கட்டளையை மீறச் செய்யப்போகிறது என்பது அவருக்கு ஏன் முன்பே தொ¢யவில்லை. தொ¢ந்திருந்தும் தடுக்கவில்லையெனில் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் கடவுள் அன்பே உருவானவர்தன்னால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களைப் பாதுகாக்கிறவர் என்று சொல்வதில் என்ன பொருள் இருக்கமுடியும்ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பா¢ட்சை வைத்தார் என்றால்ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு பன்னிரண்டாம் வகுப்புக்கு¡¢ய கேள்வித்தாளைக் கொடுத்துப் பதில் எழுதச் சொல்லுவது போலஞானக்கனியை உண்ணும் முன்பு நன்மை தீமை அறியாத ஆதாமும் ஏவாளும் சர்ப்பத்தின் தூண்டுதலில் உள்ள நனமை தீமையை அறிவார்கள் என்று எப்படி எதிர்பார்த்தார்ஏதோ அவரது கட்டளைக்குக் கீழ்படியாமல் தவறு செய்துவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம்ஒரு பழத்தைப் பறித்து சாப்பிடுவது என்ன அப்படி ஒரு உலகமகா பாவமாஅதற்கு இவ்வளவு பொ¢ய தண்டனை (மரணதண்டனை!)அதுவும் ஏதுமறியாதஎப்பாவமும் செய்யாதஇன்னும் பிறககவே பிறக்காத அவர்களுடைய சந்ததிகளுக்கெல்லாம் சேர்த்து வழங்குவாரா ஜெகோவாஏவாளைத் தவறு செய்யத் தூண்டிய பாம்பை அது உண்மையிலேயே அது சாத்தானாக இருந்தால்சாத்தானின் வடிவம் என்று  அவர் அறியமட்டாராஅறிந்திருந்தும் சாத்தானைச் சபிக்காமல் பாம்பையும் அதன் சந்ததிகளையும் ஏன் சபிக்கவேண்டும்இந்த அளவுக்கு அறிவு மழுங்கியவராக கடவுளை வேறு எந்த மதத்தினராவது சித்தா¢த்து இருப்பார்களா என்று சிந்திக்க இயலவில்லை.

ஆதி பாவம் என்ற கோட்பாட்டில் இத்தனைக் குழறுபடிகள் இருந்தாலும் கிறிஸ்தவமதம் இது இல்லாமல் இயங்குவது கடினம். ஏனெனில் ஆதி பாவக் கோட்பாட்டின் வேர்கள் கிறிஸ்தவமதத்தின் அடித்தளம் வரை ஊடுருவியிருக்கின்றன. ரோமர் 5: 18-19 ல் பவுல் கூறுகிறார்: " ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல,ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் தீர்ப்பு உண்டாயிற்று. அன்றியும் ஒரே மனுஷனுடைய (ஆதாம்) கீழ்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோலஒருவருடைய (இயேசு) கீழ்படிதலினாலேஅநேகர் நீதிமான் களாக்கப்படுவர்". எனவே கிறிஸ்தவமதத்திலிருந்து  ஆதி பாவக் கோடபாட்டை எடுத்துவிட்டோமானால்அவர்களால் இயேசுவின் அவதார நோக்கம்பாடுகள்சிலுவையில் அறையுண்ட தியாகம் (?), உயிர்த்தெழுந்தது ஆகியவற்றின் காரணத்தை விளக்க இயலாது.

ஆதாம் செய்த பாவம் காம இச்சையின்மூலம் அவன் சந்ததிகளுக்குப் பரவிமனிதகுலத்தின் சுதந்திரமான செயல்பாட்டை முற்றிலும் அழிக்கவில்லையெனினும்அதைத் தளர்வடையச் செய்துவிட்டது என்று புனித அகஸ்டின் (St Augustine - A.D.354-430) கூறுகிறார். ஆதாமும் ஏவாளும் தங்களுக்குள் ஏற்பட்ட காம இச்சையின் காரணமாக குழந்தைகளைப் பிறப்பித்து தங்கள் சுபாவத்தையும்தாங்கள் செய்த பாவத்தின் தாக்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தனர். இப்படித் தலைமுறை தலைமுறையாக காமத்தால் முதல் பாவம் கடத்தப்பட்டு தற்போது நாம் யாவரும் பாவம் செய்தவர்களாய் நிற்கிறோம் என்று மேலும் கூறுகிறார். "எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாகிப் போனோம்" என்று பவுலும் ரோமர் 3: 23 ல் இதையே சொல்லுகிறார். மனிதர்கள் மா¢த்தபின் செல்லவேண்டிய இடங்கள் இரண்டுஒன்று மோட்சம்,  மற்றொன்று நரகம் எனபதில் புனித அகஸ்டின்  தீவிர நம்பிக்கையுடையவராயிருந்தார். ஞானஸ்நானம் பெறுவதால் ஆதிபாவம் உள்பட எல்லா பாவங்களையும் விட்டொழிக்கலாம் என்று அவர் நம்பினார். எனவே ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே மரணத்தை தழுவும் குழந்தைகள் யாவும் நரகத்திற்குச் செல்லும் என்று அவர் கூறிவந்தார்.

ஆதாமின் பாவத்தை ஒவ்வொரு மனிதனும் அவன் தன் தாயின் கருவில் உதித்த உடனேயே வா¢த்துக்கொள்கிறான் என்று புரோடஸ்டன்ட் கிறிஸ்தவமதப் பி¡¢வை ஸ்தாபித்த மார்டின் லூதர் (Martin Luther) கூறுகிறார். 'உன் தாய் உன்னை பாவத்தில் கர்ப்பம் தா¢த்தாள்என்று கிறிஸ்தவர்கள் கூறுவதின்  பொருள் இதுதான்.

மார்மோனிசம் (Mormonism) அல்லது எல்.டி.எஸ் (Later Days Saints of Jesus Christ) என்ற கிறிஸ்தவமதப் பி¡¢வை ஸ்தாபித்த ஜோசப் ஸ்மித் என்பவர்: ஆதாமின் பாவத்தால் மானுட வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்பட்டது என்பது உண்மையே என்றாலும்ஆதாம் ஏவாள் இவர்கள் செய்த பாவத்தின் தாக்கம் அவர்களுடைய சந்ததியினருக்கும் தொடர்ந்துவரும் என்பதை நம்ப இயலாது. மனிதர்கள் அவரவர் செய்கின்ற பாவங்களுக்கேற்ப பலன்களை அனுபவிப்பர் என்பதே உண்மை” என்று கூறியிருக்கிறார். ஆக கிறிஸ்தவமதப் பி¡¢வுகளுக்கிடையே ஆதி பாவத்தைப் பற்றிய குழப்பம் நீடித்துவருகிறது.

யூதமார்க்கத்தில் ஆதாமின் முதல் பாவத்தைப் பற்றிய கருத்தியல் எதுவும் இல்லை. ஆனால் பாபிலோனைச் சார்ந்த பழமைவாத யூதமார்ககத்தில் மட்டும் ஆதாமும் ஏவாளும் செய்த முதல் பாவத்தின் விளைவாகவே மனிதனுக்கு மரணம் என்ற தண்டனை வந்தது என்ற நம்பிக்கை இருக்கிறது. முதல் பாவத்தினால்தான் மனிதனுக்கு மரணம் உண்டானதுஇல்லையெனில் தீர்க்காயுசாக முடிவில்லாமல் மனித உடலோடு பூமியில் வாழ்ந்துகொண்டே இருப்பான் என்று நம்புகிறவர்கள் அறிவுபூர்வமாகவும்விஞ்ஞானபூர்வமாகவும் அது சாத்தியமே இல்லை என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதில்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard