Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 31. TEN COMMANDMENTS பத்து கட்டளைகள்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
31. TEN COMMANDMENTS பத்து கட்டளைகள்
Permalink  
 


  பத்து கட்டளைகள்

 

சமூக வாழ்க்கையில் மக்கள் கைக்கொள்ளவேண்டிய யதார்த்தமான நல்லொழுக்கங்களை இறைவனின் சட்டங்கள் அல்லது நியாயப்பிரமாணங்கள் என்று கூறுவதே முட்டாள் தனமானது என்று வில்லியம் ப்ளேக் (Wiilam Blake) என்ற மறையியல் அறிஞர் கூறுகிறார். நற்குணங்கள் இயற்கையாகவே உள்ளத்திலிருந்துப் புறப்பட்டு வரவேண்டுமே தவிர மதத்தின்பேரால் விதிக்கப்பட்ட கட்டளைகளிலிருந்து அல்ல. சுவிசேஷங்களில் சொல்லியிருக்கிறபடியுள்ள இயேசுவின் வாழ்க்கையைக்  கூர்ந்து கவனித்தோமானால் அவர் உபதேசிக்கின்ற நல்லொழுக்கங்கள் யாவும் அவர் உள்ளத்திலிருந்து வந்ததேயல்லாமல், எற்கனவே யூதர்களுக்கு அவர்கள் மார்க்கத்தில் விதிக்கப்பட்டுள்ள நியாயப்பிரமாணத்தின்படியல்ல என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒப்புக்கொள்வார். ஓய்வுநாளில் பிறர் துயர்துடைக்க நன்மை செய்வது மற்றும் பசியாயிருக்கும்போது தானியங்களையோ அல்லது பழங்களையோ பறித்து உண்பது போன்றவை  மதத்தால் தடை செய்ய்யப்பட்டிருந்தும் இயேசு அவற்றை ஆதா¢த்ததோடு மட்டுமல்லாது தானே நிகழ்த்தியும் காட்டினார்.

 

இறைவனின் கட்டளைகள் என்பன கற்பலகையில் எழுதிவைக்கப்படவில்லை, அவை மனிதர்களின் இதயத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. அதுதான் உண்மை. பன்னிரண்டு ராசிகளின் வழியாக பயணிக்கின்ற சூ¡¢யனின்பயணத்தில் அவைகள் இருக்கின்றன. ஒவ்வொரு செடியிலும், மரத்திலும், பிராணியிலும், மனிதனிலும் அவை வெளிப்படுகின்றன. அவைகளுக்குப் பல வடிவங்கள் உள்ளன. புவிஈர்ப்பு விசை என்பது அவற்றுள் ஒன்று. மேலும் ஒருவரை ஒருவர் ஈர்ப்பது அல்லது விலகுவது (attraction and repulsion), நேர்மறை மற்றும் எதிர்மறைப் பண்புகள் (positive and negative polarities), ஆண் பெண் பாலினம், வலது மற்றும் இடது பக்கம் என்கிற கொள்கை, நேசமும் வெறுப்பும் (love and hatred), என்று பலவிதமாக இறைவனின் கோட்பாடுகள் வெளிப்படுகின்றன. ஆனால் நல்லவை கெட்டவை (good and evil) என்று எதுவும் கிடையாது என்று வில்லியம் ப்ளேக் மேலும் கூறுகிறார்.*

 

நன்மையும் தீங்கும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகத் தோற்றம் அளிப்பினும் இரண்டுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. ஒருவருக்கு நல்லவிஷயமாகப் படுவது மற்றொருவருக்குத் தீமையாகத் தென்படுகிறது. புலால்மறுத்தல் ஒரு சாராருக்கு நல்ல கொள்கையாக இருக்கிறது. ஆனால் தாவரங்களே இல்லாத வடதுருவப்பகுதியில் வாழ்கின்ற எஸ்கிமோக்களிடம் சென்று புலால்மறுத்தலை பிரச்சாரம் செய்ய இயலுமோ?

 

எல்லா நல்லொழுக்கங்களும் தீயொழுக்கங்களும் இடம் மற்றும் காலம், இவை இரண்டின் வயப்பட்டவை ஆகும். கருவிலிருக்கும் சிசுவை அழித்தல் இந்திய நாட்டில் 1978 க்கு முன்பு தண்டிக்கப்படக்கூடிய குற்றம். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவற்காக குடும்பக்கட்டுப்பாடு திட்டம் பாரத அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டபோது, கருவிலிருக்கும் சிசுவை அழித்தல் குற்றப்பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டது. தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொல்வது தண்டனைக்கு¡¢

 

---------------------------------------------------------------------------------------------------------------------------- ---

*John Henry Clarke, M.D., William Blake on the Lord’s Prayer, The Hermis Press, The Great Brittain,

1926, p 50

 

 

கொலைக்குற்றம் ஆகும். ஆனால் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் ஏற்படும் விரோதத்தின் காரணமாக யுத்தம் நிகழும்போது ஒரு நாட்டின் படைவீரர்கள் எதி¡¢ நாட்டின் படைவீரர்களைக் கொல்வது வீரம் என்று கருதப்படும். அநேகரை அழித்தவர்க்கு விருதுகளும் வழங்குவதுண்டு.

 

பழைய எற்பாட்டுக்காலத்தில் யூதர்களின் நியாயப்பிரமாணத்தின்படி தானாக இறந்துபோன மிருகங்களின் மாமிசத்தை உண்ணுவதோ, கடனுக்கு வட்டி வசூலிப்பதோ தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் யூதர்கள் வேற்று மதத்தினர் விருந்தினராக வந்தால் அவர்களுக்கு அப்படிப்பட்ட மாமிசத்தை சமைத்து உணவாகப் பா¢மாறலாம். மேலும் யூதரல்லாதவர்க்கு கடன் கொடுத்திருந்தால் வட்டி வசூலிக்கலாம். இது போன்று ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் கூறலாம். ஆகவே எது நல்ல விஷயம் எது தீங்குபயக்கும் விஷயம் என்பதை சட்டங்களினால் அல்லது கட்டளைகளினால் வரையறுக்கவியலாது. அது அரசு இட்ட கட்டளையாக இருந்தாலும் சா¢, இறைவன்பெயரால் மதம் சொல்லுகின்ற கட்டளையாக இருப்பினும் சா¢. ஆபிரகாமுக்கு ஜெகோவா (கர்த்தர்) இட்ட கட்டளையான கட்டாய விருத்தசேதனத்தை (cicumscision) கிறிஸ்துவ மதத்தைத் ஸ்தாபித்த பவுல் பின்பற்றவேண்டியதில்லை என்றார். அவர் வார்த்தையே கிறிஸ்தவர்களின் வேதமாயிற்று. ஜெகோவாவின் கட்டளை காற்றோடு போயிற்று. அது மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டிலுள்ள கர்த்தா¢ன் கட்டளைகளுள் தடைசெய்யப்பட்டவைகளில் ஒன்றான பன்றிமாமிசத்தை உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் விரும்பி உண்ணுகின்றனர். இதுபோலச் சொல்லிக்கொண்டே போகலாம்.

 

அடிமைப்பட்டுக்கிடந்த யூதர்களை எகிப்து தேசத்திலிருந்து மோசே மீட்டுவருகையில், சீனாய் மலையின்மேல் கர்த்தர் இறங்கி மோசேக்குத் தா¢சனம் கொடுத்து அவா¢டம் தன் பத்துக் கட்டளைகளைக் கூறுகிறார் (யாத்திராகமம் 20:1-17). அவை பின்வருமாறு:

 

1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். யாதொரு விக்கிரத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கியிருக்கவேண்டாம், நீ அவைகளை நமஸ்கா¢க்கவும் சேவிக்கவும் வேண்டாம்; ஏனெனில் உன் தேவனாகிய ஜெகோவாவான நான் பொறாமையுள்ள தேவனாயிருக்கிறேன்.

2. உன் தேவனாகிய என் நாமத்தை வீணிலே வழங்காதிருப்ப்யாக.

3. ஓய்வுநாளைப் பா¢சுத்தமாக ஆசா¢ப்பாயாக.

4. உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக.

5. கொலை செய்யாதிருப்பாயாக.

6. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.

7. களவு செய்யாதிருப்பாயாக.

8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

9. பிறன் மனைவியை இச்சியாதிருப்பாயாக.

10.பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.

 

 __________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யூதர்களின் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் (Talmud) 613 கட்டளைகள் உள்ளன. அவற்றுள் தன் மனதுக்குச் சிறந்தவை என்று பட்ட பத்துக் கட்டளைகளை மட்டும் தொகுத்துசினாய் மலையின்மேல் கர்த்தர் தன்னைச் சந்தித்துக் கற்பலகைகளில் எழுதிக்கொடுத்தார் என்று மோசே தான் எகிப்திலிருந்து அழைத்து வந்த யூதர்களிடம் கூறி நம்பவைத்தார்.

 

யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளில் இரண்டை மட்டும் இயேசு கிறிஸ்து பிரதான கட்டளைகளாகக் கூறுகிறார். அவற்றுள் முதல் கட்டளை: "நம்முடைய தேவனாகிய கர்த்தர் (ஜெகோவா) ஒருவரே (உபாகமம் 6: 4). அவா¢டத்தில் உன் முழு இருதயத்தோடும்உன் முழு ஆத்துமாவோடும் அன்பு கூருவாயாக”.இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால் உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” என்பதே (லேவியராகமம் 19: 18; மாற்கு 12: 29 -31). ஆனால் பவுல் இதை மறுத்து "உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும் என்று கற்பித்தார் (கலாத்தியர்  5: 14). பவுல் முதல் கட்டளையாகிய 'உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே" என்பதைக் கழட்டிவிட்டதற்குஅவர் தேவனோடு சேர்த்து இயேசுவையும் கடவுளாக வழிபட வேண்டும் என்று வற்புறுத்தியதே காரணம்.

 

முதல் கட்டளையில் ஏக இறைவனாகிய ஜெகோவா தான் ஒருவர் மட்டும்தான் உனக்கு இறைவன்நீ வேறு தெய்வங்களை வணங்குதல் கூடாது என்று தான் சிருஷ்டித்த யூதர்களிடம் கட்டளையிடுகிறார். அது மட்டுமல்ல யூதர்கள் வேறு தெய்வங்களை வழிபட்டால் தான் பொறாமைப்படுவேன் என்றும் (தமிழ் பைபிளில் 'பொறாமைஎன்ற வார்த்தை '¡¢ச்சல்என்று மாற்றி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூலநூலாகிய எபிரேயமொழி பழையஏற்பாடு அல்லது

ஆங்கில பைபிளைப் பார்க்கவும்.) அப்படித் தன் கட்டளையை மீறுபவர்களை                                                                                                                                                                                                மூன்றாம் நான்காம் தலைமுறை வரைக்கும் விசா¡¢த்துத் தண்டிப்பேன் என்றும் கூறுகிறார் (யாத்திராகமம் 20:55 20: 5) . இதிலிருந்தே பைபிளின் கடவுள் தன்னைத்தவிர வேறு பல தெய்வங்கள் இருக்கிறார்கள் என்று ஒத்துக்கொள்வதுபோல் இருக்கிறது. மேலும் ஒரு தகப்பன் தன் குழந்தை பக்கத்து வீட்டுக்காரனை அப்பா என்று அழைத்தால் எப்படி பொறாமையும் கோபமும் அடைவானோஅது போல யூதமக்கள் வேற்றுநாட்டினா¢ன் தெய்வங்களை வணங்கினால் தானும் பொறாமைப்படுவேன் என்று ஜெகோவா சொல்லுகிறார். இதைப்போல ஒரு சிறுபிள்ளைத்தனமான கட்டளை இறைவனின் வாயிலிருந்து வந்திருக்கும என்றால் நிச்சயமாக இருக்காது என்றுதான் பகுத்தறிவுள்ளோர் கூறுவர். மதத்தைக் கையாண்டவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த பாமரர்களாகிய பழங்குடி யூதமக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக இப்படி ஒரு கட்டளையை எழுதி வத்திருக்கிறார்கள்.

 

எதற்கெடுத்தாலும் கடவுள் பெயரால் சத்தியம் செய்து அதை மீறுகின்ற வழக்கத்தைக் கொண்டிருந்த பழங்குடி யூதர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக மார்க்கத்தலைவர்கள் இரண்டாவது கட்டளையை விதித்தார்கள். என் பெயரை வீணில் வழங்காதிருப்பயாக என்று கடவுள் சொல்வாரா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பொதுவாக தங்கள் குழந்தைகளுக்குப் பெற்றோரும்இறைவனுக்கு அவன் அடியார்களும்தான் பெயர் வைப்பது வழக்கம். பைபிள் கடவுள் தனக்குத்தானே ஜெகோவா என்று பெயர் வைத்துக்கொண்டார் (யாத்திராகமம் 6: 3) என்பது மிக அதிசயமான செய்தி. இந்த கட்டளை பைபிளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களுக்கு வசதியாக இருந்தது. மூலநூலாகிய எபிரேயமொழி பழையஏற்பாட்டிலுள்ள ஜெகோவா மற்றும் பரலோகபிதாவுக்குள்ள பல பெயர்களும் (ஜெகோவா [yehwah], ஏலோகிம் [elohim], அதோனை [adonai], எல் சடாய் [El Shadai]), வீணாக எழுதப்பட்டுள்ளதாக அவர்களே கருதிக்கொண்டு எல்லாப்பெயர்களையும் மறைத்துவிட்டனர். இதுவே அனைத்து மொழிகளிலும் பின்பற்றப்பட்டது. கிறிஸ்தவர்கள் தாங்கள் யூதர்களின் கடவுளான ஜெகோவாவை வணங்கவில்லைஇயேசுவின் பிதாவாகிய தேவனைஅதாவது பரமபிதாவைத்தான் வணங்குகிறோம் என்ற மாய உணர்வை ஏற்படுத்த இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

 

மூன்றாவதாக ஓய்வுநாளை ஆசா¢ப்பாயாக என்று ஜெகோவா யூதர்களுக்குக் கட்டளையிடுகிறார். சபத் என்ற ஓய்வுநாளை எப்படி ஆசா¢க்கவேண்டும் என மோசே தான் எகிப்திலிருந்து மீட்டுவந்த யூதர்களிடம் சொல்லுவதாக யாத்திராகமம் 16: 22,23 ஆம் வசனங்களில் ஒரு கூற்று வருகிறது. வாரத்தின் ஆறாம் நாள் மோசே யூதர்களை நோக்கிநாளைக்கு ஜெகோவாவுக்கு¡¢ய பா¢சுத்த நாளாகிய ஓய்வுநாள்நீங்கள் சுடவேண்டியதைச்சுட்டுவேவிக்கவேண்டியதை வேவித்துமீதியாயிருக்கிறதையெல்லம் நாளைமட்டும் உங்களுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்றான். ஓய்வுநாளன்று உணவு சமைத்தல் ஆகாது என்று இதன் மூலம் அறிவுறுத்தப்பட்டது. இதை விட்டால் ஒய்வுநாளைப் பற்றிய எந்தகுறிப்பும் தாவீதின் காலம் வரை பழைய ஏற்பட்டில் இல்லை. மோசே எகிப்திலிருந்து யூதர்களுக்கு விடுதலை பெற்றுத்தர முயற்சித்துக்கொண்டிருக்கும்போதுஅவர்கள்  மிகவும் கொடுமைப் படுத்தப்பட்டு ஓய்வே இல்லாமல் வாரத்தின் ஏழுநாட்களும் எகிப்தியர் தன் இனத்தா¡¢டம் வேலை வாங்குவதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார். முதலில் இதற்கொரு தீர்வு காணவேண்டும் என்று கருதிஎகிப்திய மன்னரான பரோவாவைச் (Paroah) சந்தித்து அடிமைகளாயிருந்து கடினமாக உழைக்கின்ற இஸ்ரேலியருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு தருமாறு மிகவும் பணிவோடு வேண்டிக்கொண்டார். பரோவாவும் மோசேயின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு யூதர்கள் மிகுதியாக இருந்த கோஷன் (Goshen) பகுதியிலும்மற்றும் எகிப்திலுள்ள பிற பகுதிகளிலும் அவர்களுக்கு ஆறுநாட்கள் வேலையும்ஏழாம் நாள் ஓய்வும் கொடுக்குமாறு தன் நாட்டுமக்களுக்குக் கட்டளையிட்டார். பரோவாவின் இந்த உத்தரவுக்குப்பின் எகிப்தியர்கள் மற்றும் யூதர்களின் பார்வையில் மோசே மிகவும் உயர்ந்து நின்றார். இதுதான் ஓய்வுநாள் தோன்றிய வரலாறு. இவ்விஷயம் யாஷோ¢ன் புத்தகத்தில் (The Book of Jasher) 70 ஆம் அத்தியாயம் 41 முதல் 51 வரையுள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ளது.* யாஷோ¢ன் புத்தகம் பழைய ஏற்பாட்டில் சேர்க்கப்படாமல் புறந்தள்ளப்பட்ட ஒரு புத்தகம். ஆனால் யாஷோ¢ன் புத்தகத்தைப் பற்றி பைபிளில் யோசுவா 10: 12-13 மற்றும் 2 சாமுவேல் 1: 18 ஆகிய இரண்டு இடங்களில் குறிப்பிடப்பட்டுஅதிலுள்ள வேறு விஷயங்கள் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

 

ஆதியாகமத்தில் சிருஷ்டிகர்த்தாவாகிய ஜெகோவா ஆறுநாட்களில் சிருஷ்டியை முடித்துவிட்டு களைத்துப்போய் ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார் என்று எழுதியிருப்பதும்யூதர்கள் ஏழாம் நாளாகிய சனிக்கிழமையை ஓய்வுநாளாகக்   கடைப்பிடிக்கும்படியாக இறைவனே பத்துக்கட்டளைகளில் ஒன்றாக அறிவித்தார் என்று மோசே சொல்வதாக எழுதியிருப்பதுவும் கற்பனையே.

 

தாய் தந்தையரை வணங்குதல் வேண்டும் என்பது கர்த்தா¢ன் நான்காவது கட்டளை. 'மாதாபிதாகுரு ஆகியோர் தெய்வத்திற்கு சமம்என்பது எல்லா மதங்களிலும் உள்ள சமூகக்கருத்தே. இந்துமத மறைநூற்களில் உள்ள உபநிஷத்துகளில் ஒன்றான தைத்¡£ய உபநிஷத்தில் "மாத்ரு தேவோ பவபித்ரு தேவோ பவஆச்சார்ய தேவோ பவஅதிதி தேவோ பவ" என்று சொல்லப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால்தாய்தந்தைகுரு மற்றும் விருந்தினர் ஆகியோரைத் தெய்வத்துக்குச் சமமாகப் போற்றவேண்டும் என்பதாகும்.  அதுவும் இவ்வொழுக்கத்தை நிறைவேற்றவில்லையெனில் மரணதண்டனை விதிக்கப்படும் என்று  யூத,மற்றும் கிறிஸ்தவ மதங்களைப்போல் இந்துமதம் பயமுறுத்தவில்லை.

இதை ஒரு கட்டளையாக கடவுள் வந்து சொல்லவேண்டியதில்லை. கட்டளை என்றாலே அதில் அதிகார அழுத்தம் உள்ளது. எந்த படிப்பினையையும்நல்ல கருத்தையும் அதிகார தோரணையில் உத்தரவிட்டு யாரையும் பணியவைக்கமுடியாது. அதுவும் பெற்ற தாயையும்தந்தையையும் மதிக்கவேண்டும் என்று கட்டளையிட்டு பிள்ளைகளை வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்றால் அது அவர்களின் பெற்றோருக்கே இழுக்கு ஆகும்.

 

தாய் தந்தைக்கு அடங்காத மகனை தாயும் தகப்பனுமே  பஞ்சாயத்து நடுவில் கொண்டுவிட்டுபொதுமக்களைக் கொண்டு கல்லெறிந்து கொலை செய்யவேண்டும் என்ற கர்த்தா¢ன் கட்டளை உபாகமம் 21: 18-21 ல் கூறப்பட்டுள்ளது.

 

ஒருமுறை  எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும்பா¢சேயரும் இயேசுவினிடத்தில் வந்துபாரம்பா¢ய வழக்கத்தினை ஏன் மீறி நடக்கிறீர் என்று கேட்டபோது அவர்களுக்குப் பிரதியுத்தரமாக அவர் சொன்னார்: 'உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்றும்தப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும் தேவன் கற்பித்திருக்கிறாரேஆனால் நீங்கள் அதைப் பின்பற்றுவதில்லையேஎன்றார் (மத்தேயு 15: 4). ஆனால் இந்த போதனையை இயேசு பின்பற்றினாரா என்றால் இல்லை. ஒருமுறை அவருடைய தாயாரும்சகோதரரும்வந்து,  இயேசு இருந்த இடத்தின் வெளியே நின்று அவரைப் பார்க்கும்படிக்கு அவா¢டத்தில் ஆள் அனுப்பினார்கள். அவரைச் சுற்றியிருந்த ஜனங்கள் உம்முடைய தாயாரும்சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.அதற்கு அவர் என் தாயார் யார்என் சகோதரர் யார் என்று சொல்லிதன் தாயாரைச் சந்திக்க மறுத்துவிட்டார் ( மாற்கு 4: 31 -33). மற்றொருமுறை ஒருவனை நோக்கி இயேசு என்னைப் பினப்ற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே,  முதலில் நான் போய் இறந்துபோன என் தகப்பனை அடக்கம் பண்ண எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு அவனை நோக்கி : மா¢த்தோர் தங்கள் மா¢த்தோரை அடக்கம் பண்ணட்டும்நீ போய் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிஎன்றார் (லூக்கா 10: 59,60). அவரே தன்னைச் சந்திக்கவந்த தன் தாயை மதித்து அவளைச் சந்திக்கவில்லைமேலும் தன்னைப் பின்பற்றிவந்த அடியானை அவன் தன் தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதிக்கி¡¢யையைச் செய்ய அனுமதிக்கவில்லை. ஆக இயேசுவே இந்தக்கட்டளையைப் கடைப்பிடிக்கவில்லை.

 

'கொலை செய்யாதிருப்பாயாகஎன்ற ஐந்தாவது கட்டளைக்கும் கிறிஸ்தவமதத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தொ¢யவில்லை. இதுவரை உலகில் கொலையுண்ட மனிதர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால்இரண்டு உலகமகாயுத்தங்களிலும் சேர்த்து மாண்டவர்களின் எண்ணிக்கையைவிட கடவுளின் பெயரால் கொலையுண்டவர்களே அதிகம். உலகவரலாற்றில்

போதைப்பொருள் வணிகம்ஹவாலா பணமாற்றம்கள்ளக்கடத்தல்  ஆகியவற்றில் ஈடுபடும் மாபியா கும்பல்களின் பயங்கரவாதச் செயல்களைவிடமதத்தின் பெயரால் தீவிரவாதக்கும்பல்கள் சகமனிதர்களைக் கொல்லும் பயங்கரவாதச் செயல்களே அதிகம். உலக வரலாற்றில் பைபிளைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களே அதிகமான கொலைகளைச் செய்திருக்கிறார்கள். அயர்லாந்துஇங்கிலாந்துஇத்தாலிஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும்மத்திய கிழக்கு நாடுகளிலும்புனித சிலுவை யுத்தங்களிலும் (The Crusades), ரோமன் கத்தோலிக்க சபையின் 'விசாரணைக் கொலை'களிலும் (Inquisition) லட்சக்கணக்கான கிறிஸ்தவரல்லதார் கிறிஸ்தவர்களால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

 

யூதர்களின் நியாயப்பிரமாணத்தில் (Talmud: Tosefta, Abda Zara VIII-5) யூதனல்லாதான் ஒருவன் யூதனைக் கொன்றால் அவன் தண்டனைக்கு¡¢யவன்அதே சமயம் யூதனொருவன் வேற்று இனத்தானைக் கொன்றால் அவனுக்குத் தண்டனை கிடையாது என்று சொல்லபட்டிருக்கிறது. எப்படி இருக்கிறது பைபிள் கடவுளின் பாரபட்சமான கட்டளை!

 

'விபச்சாரம் செய்யாதிருப்பாயாகஎன்பது ஐந்தாம் கட்டளை. 'பிறன்மனைவியை இச்சியாதிருப்பாயாகஎன்பது ஒன்பதாம் கட்டளை. இந்த இரு கட்டளைகளுக்கும் அதிக வேற்றுமை கிடையாது. இவைகள் கொடுக்கப்பட்ட பழைய ஏற்பாட்டுக்காலத்திலேயே இவ்விரு கட்டளைகளையும் யூதர்கள் கடைப்ப்டித்ததாகத் தொ¢யவில்லை. ஆதியாகமம் 19 ஆம் அதிகாரத்தில் லோத் என்பவனுடைய கதை கூறப்பட்டுள்ளது. "லோத்தும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள்.அவர்கள் மலையிலிருந்த ஒரு குகையில் குடியிருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம் தந்தை முதிர்வயதானார்பூமியெங்கும் நடக்கிற முறையின்படி நம்மைத் திருமணம் செய்துகொள்ள இங்கே ஒரு புருஷனும் இல்லை. நம்முடைய தகப்பனாலே சந்ததி உண்டாகும்படிக்குஅவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்துஅவரோடே சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவு தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்ககொடுத்தார்கள்.  மூத்தவள் போய் தன் தப்பனோடே சயனித்தாள். அதை அவன் உணராதிருந்தான். மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: இன்று ராத்தி¡¢யும் மதுவைக் குடிக்ககொடுப்போம்நீ போய் அவரோடே சயனி என்றாள். அப்படியே அன்று ராத்தி¡¢யும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்ககொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் அவனோடே சயனித்தாள். இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் இவ்வாறு முறைதவறிய பாலுறவால் கர்ப்பவதிகள் ஆனார்கள்" (ஆதியாகமம் 19: 30-36).

 

மத்தேயு இயேசுவின் வம்சாவழியை எழுதும்போது அதில் பாலியல் குற்றம் இழைத்த நான்கு

பெண்களை இயேசுவின் முன்னோர்’ என்று குறிப்பிடுகிறார்.

 

1)         தன் மாமனாருடன் பாலியல் உறவுகொள்வதற்காக விலைமாதுபோல் வேடமிடும் தமார் (Tamar)என்ற பெண். (ஆதியாகமம் 38: 12-19).  2)      கானான் தேசத்தில் எ¡¢கோ என்னும் நகரத்தில் வாழ்ந்த ரகாப். (Rahab) என்ற விலைமாது. (யோசுவா 2: 1) 3)         தன் மாமியா¡¢ன் வேண்டுகோளுக்குக்கிணங்க போவாஸ் என்ற தனவந்தா¢ன் படுக்கைக்குச்  சென்று பின்பு அவரையே திருமணம் செய்து கொண்ட ரூத் (Ruth).           (ரூத் 3: 1-14)

 

4)படைத்தளபதிகளில் ஒருவனான உ¡¢யா என்பவனின் மனைவியாக இருந்து அரசனான தாவீதினால் கர்ப்பமுற்ற பேத்சேபாள் (Bathsheba) (2 சாமுவேல் 11: 2-5).

 

பின்னர் தாவீது அவள் கணவனைச் சதி செய்து கொன்றுவிட்டுஅவளைத் தன் மனைவியாக்கிக்கொண்டான்.  தாவீது ராஜாவுக்கும் பெத்சேபாவுக்கும் இவ்வாறான முறையற்ற உறவில் பிறந்த சாலமனும்தன் தந்தை தாவீதைப் போலவே இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களில் ஒருவன் என்பதை இயேசுவின் வம்சாவழிப் பட்டியலிலிருந்து தொ¢யவருகிறது (மத்தேயு 1: 6).

 

1 இராஜாக்கள் 1: 1-4 வரையுள்ள வசனங்களில் தாவீது சம்பந்தமாக மற்றொரு விபச்சார சம்பவம் சொல்லப்பட்டுள்ளது. தாவீது இராஜாவுக்கு வயது முதிர்ந்து விருத்தனானபோது அவனுக்கு குளிருண்டாகி போர்வைகளால் மூடினாலும் அவனுக்கு உஷ்ணம் உண்டாகவில்லை. அப்போது அவனுடைய பணியாள்ர் அவன் மடியில் படுத்து அவனுக்கு சூடு உண்டாக்க கன்னிகையான ஒரு சிறு பெண்ணைத்தேடிசூனேம் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு அவனிடத்தில் கொண்டுவந்தார்கள். அந்தப்பெண் மிக அழகாயிருந்தாள். அவள் அரசனுக்குப் பணிவிடை செய்தாள். ஆயினும் அரசன் அவளை அறியவில்லை (வயதுமுதிர்ந்து இயலாமையால் அவளோடு உடலுறவு கொள்ளவில்லை). இப்படி மேற்கூறிய கட்டளைகளைகளையும் மீறிவாழ்ந்த தாவீது மன்னன் கர்த்தருக்குப் பி¡¢யமான ஒரு ராஜாவாக இருந்தான். மேலும் இத்தகைய தாவீது ராஜாவின் வம்சத்திலேதான் இயேசு அவதா¢த்தார் என்பதில் கிறிஸ்தவர்கள் பெருமை கொள்வர்.

 'களவு செய்யாதிருப்பாயாகஎன்ற ஏழாவது கட்டளையும், 'பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக'  என்ற எட்டாவது கட்டளையும், 'பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாகஎன்ற பத்தாவது கட்டளையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சுருங்கச் சொன்னால் சமூகவாழ்வில் 'நேர்வழியில் நடப்பாயாகஎன்ற கோட்பாட்டை மூன்று கட்டளைகளாக பி¡¢த்துச் சொல்லியிருக்கிறார்கள். தேவனாகிய கர்த்தர் அடிக்கடி நோ¢ல் வந்து பேசிவிட்டு செல்கிற யூதர்களின் வம்சத்தலைவன் ஆபிரகாம் ஒரு கொள்ளைக்காரனாயிருந்தான் என்ற் செய்தி பலருக்கு வியப்பை அளிக்கும்ஆனால் அதுதான் உண்மை. (எபிரேயர் 7: 4). இதிலிருந்து என்ன தொ¢கிறதுகர்த்தருக்குப் பி¡¢யமானவர்களாக இருந்தால் எந்த கட்டளையையும்ஒழுக்கத்தையும் பின்பற்றவேண்டியதில்லைஎப்படிப்பட்ட ஒழுங்கீனத்தையும் செய்யலாம்பரலோகத்தில் இருக்கின்ற  பிதா அவர்களை அங்கீகா¢ப்பார்!                                                                   ------__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard