Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 17 Jesus and Paul பவுல் அப்போஸ்தலரும் இயேசு கிறிஸ்துவும்


Guru

Status: Offline
Posts: 7478
Date:
17 Jesus and Paul பவுல் அப்போஸ்தலரும் இயேசு கிறிஸ்துவும்
Permalink  
 


பவுல் அப்போஸ்தலரும் இயேசு கிறிஸ்துவும்

 

றிஸ்தவமதத்தை ஸ்தாபித்த பவுலின் இயற்பெயர் சவுல் என்பதாகும். சிலிசியா (தற்போதைய துருக்கி) நாட்டிலுள்ள தார்சு (Tarsus) என்னும் ஊ¡¢ல் பேகன் மதத்திலிருந்து யூதமதத்திற்கு மாறிய பெற்றோருக்குப் பிறந்தவர் என்று எபிபனியஸ் (Epiphanius) என்ற வரலாற்றாசி¡¢யர் ஹெரெசீஸ் (Heresies) என்ற தன் நூலில் கூறுகிறார். பவுல் இயல்பில்  பா¢சேயர் கூட்டத்தைச் சார்ந்த ஒரு போதகரும் அல்ல. எருசலேம் நகரத்தில் சதுசேயர் என்ற யூதர் குழுவைச் சார்ந்த பிரதான ஆசா¡¢யனின் காவல் துறையில் பணியற்றி வந்தார். பவுல் தர்சு பட்டணத்திலிருந்து வந்திருந்தாலும் , எருசலேமில் கமலியேல் (Gamaliel) என்ற யூதப்போதகா¢டம் கல்வி கற்றவர் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 22: 3) கூடாரம் அமைக்கும் தொழிலையும் செய்திருக்கிறார்(அப்போஸ்தலருடைய நடபடிகள் 18: 3).கிறிஸ்தவராக மனமாற்றம் அடையுமுன் அவர் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களைத் துன்புறுத்தும் பணியையே செய்துவந்தார். இயேசுவின் கொள்கைகளைப் பின்பற்றிய ஸ்தேவான் (Stephan) என்பவனை யூதர்கள் கல்லெறிந்து கொன்றபோது சவுலும் அந்த கொலைக்கு உடந்தையாக இருந்தார் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:1). பெரும்பாலும் பவுல் பாலஸ்தீனத்துக்கு வெளியேயுள்ள நகரங்களில் வசித்துவந்தார். அவரது தாய்மொழி  கிரேக்கம், அராமைக் அல்ல. பவுல் ஒரு ரோமானியக் குடிமகனாகவும் இருந்தார் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 22: 27). யூதர்கள் மத்தியில் இருக்கும்போது தன்னை யூதன் என்றும் மற்றவர்களோடு இருக்கும்போது தன்னை ரோமன் அல்லது கிரேக்கன் என்றும் சொல்லிக்கொண்டேன் என்று அவரே கூறுகிறார்.

 

கிறிஸ்துவின் மறைவுக்குப் பின் அவருடைய சீடரும் சகோதரருமான ஜேம்ஸ், கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுபவர்களைச் சேர்த்துக்கொண்டு எருசலேமில் ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். இயேசுவின் மற்றொரு சீடரான பேதுருவும், யோவானும் அவருக்கு ஆதரவு அளித்தனர். இவர்கள் எருசலேம் தேவாலயத்தில் ஜெகோவா (Yehweh) என்று அறியப்பட்ட யூதர்களின் இறைவனைத் தொழுதுவந்தனர். யூதர்களின் நியாயப்பிரமாணத்தின்படி அனுசா¢க்கப்பட வேண்டிய ஓய்வுநாளை ஆசா¢த்தல், உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்தல், விருத்தசேதனத்தை  (Circumcision)வலியுறுத்துதல் ஆகியவற்றை ஒழுகிவந்தனர். இயேசுகிறிஸ்துவும் இவை எல்லாவற்றையும் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்திருந்தார். ஆனால் பவுல், தோரா (Torah) என்று அழைக்கப்பட்ட யூதர்களின் நியாயப்பிரமாணத்தின் சட்டதிட்டங்களை புறக்கணிப்பதில் ஈடுபட்டார்.

 

பவுலும் இயேசுவும் சமகாலத்தவராக இருந்தாலும் ஒருவற்கொருவர் சந்தித்துக் கொண்டதேயில்லை. இயேசுவின் மறைவிற்குப் பின்னர்தான் அவரைப் பற்றி பவுலுக்குத் தொ¢யவந்தது. இயேசு மறைந்தபின் அவரைப் பின்பற்றியவர்கள் தொடர்ந்து யூதர்களாகவே வாழ்ந்துகொண்டு இயேசு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தவைகளைக் கடைப்பிடித்து வந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் தங்களுக்கென்றுத் தனியாக தொழும் சபை எதுவும் அமைத்துக் கொள்ளவிலலை. ஏனெனில் யூதமதத்திலிருந்து பி¡¢ந்து சென்று தங்களுக்கென்றுத் தனியாக ஒரு மதத்தைத் ஸ்தாபிக்கவேண்டும் என்னும்படியாக அவர்கள் எதையும் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் யூதமதத்தின் தலைமையில் இருந்தவர்கள் இயேசுவைப் பின்பற்றிய யூதர்களை வெறுத்தார்கள். இவர்களால் தங்கள் அதிகாரத்திற்குப் பாதகம் வந்துவிடுமோ என்று நினைத்தார்கள்.

 

இயேசுவின் சீடர்களான பேதுருவும், கர்த்தா¢ன் சகோதரர் என்றழைக்கப்பட்ட ஜேம்ஸ் மற்றும் அவர்களைப் பின்பற்றிய யூதர்களும்  கி.பி.70 ஆண்டு எருசலேம் நகரம் ரோமானிய ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டபோது எருசலேமை விட்டு வெளியேறினார்கள்.

 

உத்தேசமாக கி.பி. 57 ல் இயேசு எதிர்ப்பளராக இருந்த பவுல் ஒருநாள் தமஸ்குவிற்குச் செல்லும் சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது திடீரென கண்கள் கூசும்படியான மிகப்பொ¢ய வெளிச்சமும் பெரும் சத்தமும் ஏற்பட்டு கீழேவிழுந்தார். "சவுலேஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்" என்ற குரலும் உணர்ச்சிவசப்பட்டிருந்த பவுலுக்குக் கேட்டது. இயேசுவைப் பின்பற்றியவர்களைத் துன்புறுத்துவதையே தொழிலாக வைத்திருந்த பவுல் இதை இயேசுவின் குரல் என்றும் தா¢சனம் என்றும் நம்பி அன்று முதல் இயேசுவின் அடியாராக மாறினார்.

 

ஆராய்ச்சியாளர்கள் பலரும் பவுல் ஒருவகை காக்கைவலிப்பு (Temporal lobe Epilepsy  )  நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக நம்புகின்றனர். டி. லாண்ட்ஸ்பரோ (D.Landsborough) என்னும் நரம்பியல் மற்றும் மனதத்துவ நிபுணர் பவுல் அப்போஸ்தலருக்கு காக்கைவலிப்பு நோய்  இருந்திருக்க பொ¢தும் வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். இவ்வகை காக்கைவலிப்பில் சில நேரங்களில் பெருவெளிச்சக் காட்சிகளும் உணர்ச்சிபூர்வமான தெய்வீக தா¢சனம் காட்சிகளும் மற்றும் உரையாடல்களும் நிகழலாம் என்றும் சொல்லுகிறார்.

 

ஜோனதான் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards) என்பவர் இந்த உண்மையை வெளிப்படுத்த ஒர் ஆவணப்படம் தயா¡¢த்திருந்தார். அதை முன்னொருமுறை பி.பி.சி. (B.B.C.) என்ற இங்கிலாந்து நாட்டின் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியது. இது ஏராளமான கிறிஸ்தவர்களைச் சீற்றமடையச் செய்தது.*

 

கலிபோர்னியா பல்கலை கழகத்தில் பேராசி¡¢யராகப் பணியாற்றும் விலயனூர் இராமச்சந்திரன் எனற நரம்பியல் அறிஞரும் வலிப்பு வரும்போது பவுலுக்கு ஏற்பட்டது போல் மாயக்காட்சிகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது என்கிறார். இப்படி ஒரு தொடர்நோய் தனக்கு இருப்பதாக மறைமுகமாக பவுலே ஒத்துக்கொள்கிறார். "மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று பவுல் சொல்லுகிறார் (2 கொ¡¢ந்தியர் 12: 7). மேலும் கலாத்தியர்  4: 14 ல் ' என் சா£ரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டை பண்ணாமலும், வெறுக்காமலும், ஒரு தேவதூதனைப் போலவும், இயேசு கிறிஸ்துவைப் போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்' என்று பவுல் கூறுகிறார். இத்தகைய நோய் தனக்கு இருந்ததின் காரணமாகவே வைத்தியராக இருந்த லூக்காவைத் தன் தோழராக வைத்திருந்தார் என்று தொ¢கிறது.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
RE: 17 Jesus and Paul பவுல் அப்போஸ்தலரும் இயேசு கிறிஸ்துவும்
Permalink  
 


சாலையில் கண்ட திடீர்க் காட்சியின் மூலம் கிறிஸ்தவராக மாறிய பவுல் உடனே இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ளுமாறு இயேசுவின் சீடர்கள் இருந்த எருசலேமுக்குச் செல்லவில்லைமாறாக அரேபியாவுக்குச் சென்றார். அங்கே மூன்று ஆண்டுகள் தங்கியிருந்துவிட்டு பின்னர் எருசலேம் சென்று பேதுருவுடன் பதினைந்து நாட்கள் தங்கியிருந்ததாக எழுதுகிறார். அங்கே பேதுருவுடன் இயேசுவின் சகோதரராகக் கருதப்பட்ட யாக்கோபு (ஜேம்ஸ்)யோவான் ஆகியோரைப் பார்த்தார். அவர்களிடமிருந்து பவுல் இயேசுவின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் எதையும் தொ¢ந்து கொள்ளவில்லை. கிறிஸ்தவ மதத்தைத் ஸ்தாபித்த பவுல்புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் அவருடைய கடித நூல்களில் நான்கு இடங்களில் மட்டுமே இயேசுவின் வரலாறு சம்பந்தமாகக் குறிப்பிடுகிறார். அவை பின்வருமாறு:

 

1.         ஸ்தி¡£க்குப் பிறந்தவரும்சட்டபூர்வமாகப் பிறந்தவருமாகிய தன் குமாரனைத் தேவன் அனுப்பினார். (கலாத்தியர் 4: 4 & 5) ‘God sentforth His Son, having been born of a woman, having been born under the law’  என்ற வாசகங்களைத் தமிழ் பைபிளில் ஸ்தி¡£யினிடத்தில் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்என்று பொருள் மாற்றம்  செய்து

----------------------------------------------------------------------------------------------

*http://www.telegraph.co.uk/news/uknews/1427916/ St-Paul-converted-by-epileptic-fit-suggests-BBC.html

மொழிபெயர்த்திருக்கிறர்கள். ‘having been born under the law’ என்பது 'நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகியஎன்று சம்பந்தமில்லாமல்  மாற்றப்பட்டுள்ளது. ஏனெனில் சட்டபூர்வமாக பிறந்தவர்’ என்றால் கன்னிகைக்குப் பா¢சுத்த ஆவியின் மூலம் பிறக்கவில்லைதிருமணமான தந்தைக்கும் தாய்க்கும் (யோசேப்புக்கும் மா¢யாளுக்கும்) பிறந்தவர் என்று பொருள் வந்துவிடும்.

2. தாவீதின் வித்திலிருந்து தோன்றினார். (ஆங்கில பைபிளில் ரோமர் 1: 3; தமிழ் பைபிளில் ரோமர் 1: 5; 'வித்து' [seed] என்ற  வார்த்தை தமிழ் பைபிளில் 'சந்ததிஎன்று மாற்றி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இரண்டுக்கும் வேற்றுமை உள்ளது.)

3. இயேசுவுக்கு சகோதரர்கள் இருந்தார்கள் என்ற தகவல் (1 கொ¡¢ந்தியர் 9: 5)

4. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மா¢த்துமூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து தன் சீடர்களுக்குத் தா¢சனமானார்பின்பு பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்

என்ற தகவல் (1 கொ¡¢ந்தியர் 1: 23, 15: 3-5)

           

 



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
Permalink  
 

 பவுலுடைய எழுத்துக்களில் இயேசு ஒரு யூதர்தாவீதின் வம்சத்தில் பிறந்தார்யூதர்கள் அவரை சிலுவையில் அறைந்து கொலை செய்தார்கள்அதன்பின் அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்  என்ற விஷயங்களைத் தவிற  பிற முக்கியமான விஷயங்களான இயேசுவின் பிறப்பு ரகசியம்அவர் பிறக்கும்போது அவர் பெற்றோர் எங்கிருந்தார்கள்அவரது இளமைக் காலம்வளர்ந்த சூழ்நிலைஅவர் எங்கெல்லாம் சென்று மக்களுக்கு உபதேசித்தார் என்பது போன்ற எதுவுமே இல்லை. இயேசுவின் பெற்றோரைப் பற்றிய விவரங்கள்அவருடைய சகோதர சகோதா¢களைப் பற்றிய விவரங்கள்அவருக்கு மிகவும் நெருக்கமான அடியார்களுள் ஒருவரான மகதலேனா மா¢யாள் போன்றவர்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் இயேசு கைது செய்யப்பட்டு விசாரணை செய்ய்யப் பட்டபோது நடந்த நிகழ்ச்சிகள்,  அவர் சிலுவையில் மா¢த்தபின் கல்லறையில் வைக்கப்பட்டு மூன்றாம் நாள் காலை உயிர்த்தெழுந்தபோது நடந்த விஷயங்கள்  இவை எதையுமே பவுல் குறிப்பிடவில்லை.

 

மேலும் பவுல் இயேசுவின் போதனைகளைப் பின்பற்றித் தன்னுடைய போதனைகளை அமைத்துக் கொள்ளாமல் தனக்கென்று ஒரு தனி வழியைப் பின்பற்றுகிறார். அவற்றுள் பவுலின் பல போதனைகள் இயேசுவின் போதனைகளுக்கு எதிர்மறையாகவே இருக்கின்றன. இயேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களிலும் அவரது உபதேசங்களிலும் பவுலுக்கு உண்மையிலேயே ஈடுபாடு இல்லாமலிருந்ததா அல்லது நான்கு சுவிசேஷ்ங்களிலும் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் பல வாழ்க்கை நிகழ்ச்சிகளும்அவர் கூறியதாகச் சொல்லப்பட்டுள்ள உபதேசங்களும் எழுதியவர்களின் கற்பனையில் உதித்தவையா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் பவுல் இயேசுவைப்ப் பின்பற்றும்படி மக்களிடையே பிரச்சாரம் செய்த காலத்தில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் சுவிசேஷங்கள் எழுதப்படவில்லை. புதிய ஏற்பாட்டில் முதன் முதலில் தொகுக்கப்பட்ட புத்தகங்கள் பவுலின் கடிதங்கள்தாம். அவருடைய காலத்திற்குப் பின்புதான் சுவிஷேங்கள் எழுதப்பட்டுச் சேர்க்கப்பட்டன. மத்தேயுமாற்கு,  லூக்கா மற்றும் யோவான் இவர்களின் பெயரால் உள்ள சுவிசேஷங்களிலுள்ள ஒரு வார்த்தையைக்கூட பவுல் படித்ததில்லை.  அவர் இயேசுவைப் பற்றி அறிந்ததெல்லாம் காதுவழிச் செய்திகள்தாம்.

 

இயேசு பிரத்தியட்சமாகத் தனக்குக் காட்சியளித்தார் என்று பவுல் எங்கும் சொன்னதில்லை. பவுல் தமஸ்குவுக்குச் செல்லும் சாலையில் பயணம் செய்தபோது அவருடன் கூடச் சிலர் சேர்ந்து பயணித்தார்கள். அப்போஸ்தலருடைய நடபடிகள் 9: 20 ல்  பவுல் வழியில் கண்ட பிரகாசமான ஒளிக்காட்சியும்அதோடுகூட இயேசுவின் குரலும் அவருக்குச் சத்தமாகக் கேட்டபோதுஅவருடன் கூட பிரயாணம் செய்த மனிதர்களும் அந்த சத்தத்தைக்  கேட்டு யாரையும் காணாமல் பிரமித்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பவுலைச் சுற்றி உண்டான வெளிச்சத்தை அவர்கள் பார்த்ததாகச் சொல்லப்படவில்லை. சத்தத்தை மட்டும் கேட்டிருக்கிறார்கள். அதே சமயம் அப்போஸ்தலருடைய நடபடிகள் 22: 9 ல் 'என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்ச்த்தைக் கண்டுபயமடைந்தார்கள்என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.என்று பவுலே சொல்லுகிறார். ஒரே புத்தகத்தில் இருக்கிற இந்த முரண்பாட்டை எப்படி எடுத்துக் கொள்வதுஅப்போஸ்தலருடைய நடபடிகள் என்ற இப்புத்தகம் பவுல் மரணமடந்து சில ஆண்டுகள் சென்றபின்னர்  பவுலின் உற்ற தோழரான லூக்காவால் எழுதப்பட்டது என்று நம்பப்படுகிறது. அவர் எழுதியது உண்மையானால்பவுல் கண்ட தெய்வீகக்காட்சியை விவா¢ப்பதில் அவருக்கே இவ்வளவு தடுமாற்றம் ஏற்பட்டது ஏன்இந்தக் காட்சியின்போது லூக்காவும் பவுலுடன் கூட இருந்திருப்பார் அல்லவா?       

 

"நான் சுவிசேஷத்தை மனுஷனால் பெற்றதுமில்லைமனுஷனால் கற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்" என்று (கலாத்தியர் 1:12) சொல்லுகிறார். அதுதான் எப்படி என்பது தொ¢யவில்லை. இயேசுவின் சீடர்களிடமிருந்துதான் பவுல் இயேசுவைப் பற்றிய விபரங்களைத் தொ¢ந்து கொண்டிருக்கவேண்டும். இயேசுவின் சீடர்களான பேதுரு முதலானவர்கள் யூதர்களின் நியாயப்பிரமாணத்திலுள்ள கொள்கைகளை மக்களிடையே பரப்புரை செய்ததை பவுல் விரும்பாததால் அவர்களோடு கருத்துபேதம் கொண்டு நியாயப்பிரமாணத்தைப் புறக்கணிக்கவேண்டும் என்று தான் தனியாகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். தான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை மட்டுமே மக்கள் பின்பற்றவேண்டும் பிறர் இயேசுவைப் பற்றிச் சொல்வதைஅது தேவதூதனாக இருந்தால்கூட பின்பற்றினால் அவர்கள் சபிக்கப்படுவார்கள் என்று பவுல் கூறுகிறார் (கலாத்தியர் 2: 8)).

 

பவுல் இயேசுவைப் பின்பற்றுங்கள் என்று மக்களிடையே பரப்புரையாற்றும்போது இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் போதிக்கவில்லைதன்னுடைய கருத்துக்களையே போதித்தார். இயேசு கிறிஸ்து, " நான் யூதர்களின் நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருப்பவைகளை நிறைவேற்றவே வந்தேன்அழிக்க அல்ல" என்று சொல்லியிருக்கிறார். (மாற்கு 5:17). சொன்னது மட்டும் அல்ல தன் வாழ்நாளில் அவற்றைக் கடைப்பிடிக்கவும் செய்தார். ஆனல் பவுல் நியாயப்பிரமாணத்திற்கு எதிரான கருத்துகளையே கூறிவந்தார்.

 

நியாயப்பிரமாணத்தின்படி யூதர்களுக்கு விருத்தசேதனம் (circumcision) கட்டயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பவுல்,"விருத்தசேதனம் பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது" என்று மக்களிடையே பிரச்சாரம் செய்தார் (கலாத்தியர் 5: 2 - 6).

 

யூதர்களின் நியாயப்பிரமாணத்தில் பல உணவுக் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பிராணிகளின்பறவைகளின் மாமிசத்தை சாப்பிடலாகாது என்று பைபிளில்  பழைய ஏற்பாட்டிலுள்ள லேவியராகமம் என்ற பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் விக்கிரகங்களுக்குப் படைக்கப் பட்டதையும் சாப்பிடக்கூடாது என்று விலக்கப்பட்டுள்ளது. ஆனால் பவுல் அந்த உணவுக் கட்டுப்படுகள் எதுவும் தேவை இல்லை என்கிறார். அவர் கொ¡¢ந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில் 25 ஆம் வசனத்தில் "கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்.மனசாட்சியின் நிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசா¡¢க்கவேண்டியதில்லை" என்று கூறுகிறார்.

 

இயேசு கிறிஸ்துதிருமண வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும்போது கணவன் தன் மனைவியை பாலியல் ஒழுக்கக்கேடு என்ற காரணம் தவிற வேறு எதற்கும் விவாகரத்து செய்தல் கூடாது என்றார். மேலும் விவாகரத்தான பெண்ணை யாரும் மணம் செய்துகொள்ளக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறார் (மத்தேயு 5: 32). ஆனால் பவுல் என்ன கூறுகிறார் என்றால், "மனைவி எக்காரணம் கொண்டும் கணவனை விட்டுப் பி¡¢யக்கூடாதுஅப்படி பி¡¢ந்தால் தனியாக வாழக்கூடாது (அதாவது மறுமணம் செய்யலாம் என்று பொருள் கொள்ளலாம் அல்லது பி¡¢ந்த கணவனோடு மறுபடியும் சேர்ந்து வாழலாம்.) மேலும் கணவன் தன் மனைவியை விவாகரத்தே செய்யக்கூடாது என்றும் சொல்லுகிறார்" (1 கொ¡¢ந்தியர் 7:10-13). பவுலின் கொள்கை  இயேசு கிறிஸ்துவின் கொள்கைக்கு நேர் எதிராக இருக்கிறது. இப்படியாக பல குழப்பங்களுக்கிடையே கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தை இன்றுவரைப் பின்பற்றி வருகின்றனர்.

 

இயேசு பெண்களை பொ¢தும் மதித்தவர். அநேக பெண்கள் அவருக்கு சிஷ்யைகளாக இருந்தனர். (லூக்கா 8:1 -3). மகதலேனா மா¢யாள்மார்த்தாள் போன்றவர்கள் அவருக்கு மிக நெருங்கிய சீடர்களாக இருந்தனர் என்பதற்கு நான்கு சுவிசேஷங்களிலும் ஆதாரம் உள்ளது.  புறந்தள்ளப்பட்ட பிலிப்புவின் சுவிசேஷத்தில் (Gospel of Philip) இயேசு மகதலேனா மா¢யாளை தன்னுடைய ஆண்சீடர்களுக்கு சமமாக நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. புறந்தள்ளப்பட்ட மா¢யாளின் சுவிசேஷத்திலோ (Gospel of Mary) ஒருபடி மேலேபோய் பிறசீடர்களுக்கு உபதேசிக்காத சில உயர்ந்த விஷயங்களை இயேசு மகதலேனா மா¢யாளுக்குத் தனியாக உபதேசிக்கிறார். பெண்களை ஆண்களுக்குச் சமமாகக் நடத்திய இயேசுவின் அடியாராகிய பவுலோ பெண்கள் ஆண்களுக்குச் சம்மானவர்கள் அல்ல என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். "உபதேசம் பண்ணவும்புருஷன்மேல் அதிகாரம் செலுத்தவும்ஸ்தி¡£யானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லைஅவள் அமைதலாயிருக்கவேண்டும்" என்று பவுல் கூறுகிறார் ( 1 தீமோத்தேயு 2: 12). மேலும் அவர் கூறுகிறார்: "மனைவிகளேகர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல உங்கள் புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள். சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப்புருஷர்களுக்கு எந்தக் கா¡¢யத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்" (எபேசியர் 5: 22-24) என்று கூறுகிறார்..

 

யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பத்துக் கட்டளைகளில் இரண்டை மட்டும் இயேசு கிறிஸ்து பிரதான கட்டளைகளாகக் கூறுகிறார். அவை முதலில் "நம்முடைய தேவனாகிய கர்த்தர் (ஜெகோவா) ஒருவரே (உபாகமம் 6: 4). அவா¢டத்தில் உன் முழு இருதயத்தோடும்உன் முழு ஆத்துமாவோடும் அன்பு கூருவாயாக.இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால் உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” என்பதே (லேவியராகமம் 19: 18; மாற்கு 12: 29 -31). ஆனால் பவுல் இதை மறுத்து "உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்" என்று கற்பித்தார் (கலாத்தியர்  5: 14). தேவனாகிய கர்த்தர் ஒருவரே என்ற கொள்கையைக் கைககழுவிவிட்டார்.

 "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் (ஜெகோவாவின்) சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை"என்று இயேசு சொல்லியிருக்கிறார்

மத்தேயு 7: 21). ஆனால் பவுல்யூதர்கள் வணங்கிய ஒரே கடவுளான ஜெகோவாவை விடுத்து இயேசு கிறிஸ்துவைத்தான் கடவுளாக வணங்க வேண்டும் என்ற தன் கொள்கையைத் திணித்தார். பவுல் 1 கொ¡¢ந்தியர் 2: 2 ல்  "இயேசு கிறிஸ்துவைசிலுவையில் அறையப்பட்ட அவரேயன்றிவேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்"  என்று பிரகடனப்படுத்தினார். இதுதான் கிறிஸ்தவ மதத்தில் ஒரே கடவுள் என்ற கொள்கையிலிருந்து விலகி நான்காம் நூற்றாண்டில் வலுப்பெற்ற பிதாகுமாரன்பா¢சுத்த ஆவி ஆகிய மூன்று பேரை வணங்கவேண்டும்  என்ற தி¡¢த்துவக் (Trinity) கொள்கையின் ஆரம்பம்.

 

யூதர்களின் நியாயப்பிரமாணத்தில் (Torah) 613 கட்டளைகள் உள்ளன. மோசே பத்து கட்டளைகளை மட்டும் தொகுத்து இறைவன் கொடுத்ததாக யூதமக்களுக்கு வழங்கினார்.  இயேசு அவற்றில் இரணடைப் பிரதானமாகக் கடைபிடிக்கக் கூறினார். பவுலோ அதில் ஒரே ஒரு கட்டளையைப் பின்பற்றினால் போதும் என்று கிறிஸ்தவ மக்களுக்குச் சொல்லுகிறார். எனவே கிறிஸ்தவ மதம் பெயா¢ல் அப்படி இருந்தாலும் பவுலின் மதமாகவே திகழ்கிறது.

 

இயேசு கிறிஸ்து தன்னுடைய உபதேசங்களின்போது அடிக்கடி குறிப்பிடும் 'தேவனுடைய

இராஜ்ஜியம்பற்றி பவுல் எங்கும் பேசவில்லை. மேலும் இயேசுவின் மலைப்பிரசங்கத்தைப் பற்றியோஅவருடைய உவமைக்கதைகள் பற்றியோஅவர் செய்த அற்புதங்கள்பிணியாளர்களைக் குணப்படுத்தியது  மற்றும் பிசாசுகளை விரட்டியது பற்றியோ,  ஏன் அவர் சீடர்களுக்குச் சொல்லிக்கொடுத்த 'கர்த்தா¢ன் ஜெபம்பற்றியோ கூட பவுல் எங்கும் குறிப்பிடவில்லை. ஏனெனில் பவுலின் காலத்தில் அதாவது முதல் நூற்றாண்டில் இவற்றைப் பற்றி எவரும் பேசவில்லை. இவையெல்லாம் பவுலின் மரணத்திற்குப் பின் எழுதப்பட்ட சுவிசேஷங்களின் ஆசி¡¢யர்கள் தாங்கள் கேட்டிருந்த காதுவழிச் செய்திகளோடு தங்கள் கற்பனைக்கதைகளையும் சேர்த்து எழுதியவை என்று தொ¢யவருகிறது.

 

இயேசு ஒருபோதும் தன்னைக் கடவுளாக வணங்கவேண்டும் என்று சொன்னதில்லை. பைபிள் முழுவதும் தேடினால்கூட அதற்கு ஆதாரம் கிடைக்காது. அவர் மக்களிடம் பரலோகத்திலே இருக்கிற பிதாவைத்தான் வணங்கச்சொன்னார். ஆனால் பவுல் இயேசுவைத்தான் பிரதானகடவுளாக வணங்கவேண்டும் என்று போதித்தார். இது புத்த மதத்தினர் செய்வது போலிருக்கிறது. கடவுள் இல்லை என்ற கொள்கையைப் போதித்த புத்தருக்கு ஆலயங்கள் கட்டி புத்த மதத்தினர் அவரைக் கடவுளாக வணங்கிவருகின்றனர். கிறிஸ்தவர்களும் ஆதி முதலே பவுலைப் பின்பற்றி இயேசுவைத்தான் கடவுளாகக் கொண்டிருக்கின்றனர். பிதாவானவர் (Jehova) இரண்டாம் பட்சம்தான்.

 

பவுலுக்கும் இயேசுவின் சீடர்களான பேதுருஜேம்ஸ்மற்றும் யோவான் ஆகியோருக்கும் ஆதிமுதலே ஆகாது. பவுல் அவர்களையும் அவர்கள் பவுலையும் மிகவும் கேவலமாக திட்டிக்கொண்ட வார்த்தைகள் பைபிளில் அவர்கள் ஒவ்வொருவரும் எழுதிய புத்தகங்களில் உள்ளன. பேதுருவைஅவன் மீது குற்றம் சுமந்ததினால்  நான் முகத்துக்கு நேர்

 எதிர்த்தேன்” என்றுப் பவுல் கலாத்தியர் 2:11 ல் சொல்லுகிறார். யோவானுடைய வெளிப்படுத்தின விசேஷத்தில் (பைபிளின் புதிய தொகுப்பில் திருவெளிப்பாடு என்று அழைக்கப்படுகிறது) 2: 9 ல் "யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்" என்று பவுலையும்  அவரைப் பின்பற்றுகிறவர்களையும் யோவான் கடுமையாகத் தாக்குகிறார். யக்கோபு 2:20 ல் (யாக்கோபும் ஜேம்ஸ¤ம் ஒருவரே)  ஜேம்ஸ்பவுலை 'வீணாய்ப்போன மனிதன்என்று திட்டுகிறார்.

 

தற்போது கிறிஸ்தவ மதம் பிளவுபட்டு நூற்றுக்கும் அதிகமான பி¡¢வுகளாக இயங்குகிறது. ஆனால் முதல் நூற்றாண்டிலேயேஅதாவது கிறிஸ்து மறைந்து சில ஆண்டுகள் கழிந்திருந்த  காலத்திலேயே அவரைப் பின்பற்றியவர்களுக்கிடையே பிளவும் சச்சரவுகளும் மிகுந்திருந்தன என்பதற்கு 'இறைவனின் வார்த்தைகள்என்று கருதப்படும் பைபிளே சாட்சி.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard