Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 14. Jesus Crucified


Guru

Status: Offline
Posts: 7410
Date:
14. Jesus Crucified
Permalink  
 


  இயேசுவைக் குருசிலறைதல்

 

இயேசுவைக் கைது செய்த இரவில் முதலில் சேவகர்கள் அவரை பிரதான ஆசா¡¢யனான காய்பாவின் மாமனான அன்னா என்பவனிடத்தில் கொண்டு போனார்கள். பின்பு பிரதான ஆசா¡¢யனிடத்து அழைத்துச் சென்றார்கள். 'இயேசு ஏற்கனவே ' எருசலேம் தேவாலயத்தை இடித்துப் போடுங்கள், நான் அதை மூன்று நாளில் கட்டியெழுப்புவேன்' என்று சொல்லி-யிருப்பதால் அவர் மீது தேவதூஷணம் செய்தார் என்று குற்றம் சுமத்தி மோசேயின் நியாயப்பிரமாணப்படி கொலைத்தண்டனை வழங்கினார்கள். ஆனால் யூதர்கள் ரோம சாம்ராஜ்ஜிய ஆட்சிக்குட்பட்டிருந்ததார்கள் என்பதால் ரோமானிய ஆட்சிப் பிரதிநிதியின் உத்தரவு இருந்தால்தான் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கமுடியும். எனவே அவரை யூதேயாவின் ரோமானிய ஆளுநரான பொந்தி பிலாத்துவிடம் (Pontius Pilate) கொண்டு சென்றார்கள். அவா¢டம் இயேசு தன்னை யூதர்களின் இராஜா என்று அழைத்துக்கொண்டார் என்று இராஜத்துரோகக் குற்றத்தைச் சுமத்தினர். அவர் இயேசுவிடம் ' நீர் யூதர்களின் இராஜாவா' என்று கேட்டதற்கு அவர், 'என்னுடைய இராஜ்ஜியம் இந்த உலகம் சார்ந்தது அல்ல' என்று பதிலிறுத்தார். (யோவான் 18: 36). பிலாத்து அவர் மீது குற்றம் ஏதும் காணாமல், இயேசு கலிலேயர் என்று அறிந்து கலிலேயாவை ரோமசாம்ராஜ்ஜியப் பிரதிநிதியாக ஆட்சி செய்துவந்த காற்பங்கு தேசாதிபதி ஏரோதுவிடம் (Herod) அனுப்பித் தன் பொறுப்பை தட்டிக்கழிக்க முயன்றார். ஆனால் ஏரோது அவருக்குத் தண்டனை எதுவும் கொடுக்காமல் பிலாத்துவிடமே திருப்பி அனுப்பினார். பஸ்கா பண்டிகை சமயம் ரோமனிய ஆளுநர் ஒரு கைதியை விடுதலை செய்வது வழக்கம். பிலாத்து இயேசுவை விடுவிப்பதில் ஆர்வம் கொண்டு, அவர் மேல் குற்றம் சாட்டிய யூதர்களிடம் பண்டிகையை முன்னிட்டு இயேசுவை விடுதலை செய்யட்டுமா என்று கேட்டதற்கு அவர்கள் பாரப்பாசை (Bar Abbas) விடுதலை செய்யுங்கள் எனக் கூக்குரல் எழுப்பினர். இறுதியில் வேறு வழியின்றி இயேசுவுக்கு சிலுவையில் அறைந்து கொல்லும்படிக்குத் தண்டனை வழங்கினார்.

 

இதில் என்ன வேடிக்கை என்றால் விடுதலை செய்யப்பட்ட கைதியின் பெயரும் இயேசுவின் பெயரும் ஒன்றே. நாட்டில் கலகம் செய்து , கொலை முதலிய குற்றங்களைச் செய்த அவன் முழுப்பெயர் இயேசு பாரப்பாஸ் (Yeshua Bar Abbas). பார் (bar) என்ற எபிரேய வார்த்தைக்கு 'மகன்' என்று பொருள். அப்பா (Abbas) என்ற எபிரேய வார்த்தை 'தந்தை' அல்லது இறைவன் என்று பொருள்படும். அப்படியானால் அவன் பெயர் பிதாவின் குமாரனாகிய இயேசு’ (Jesus, Son of Father) என்றாகிறது! பிலாத்து யூதர்களை நோக்கி; எவனை உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? இயேசு பாரப்பாசையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ என்று கேட்டான் என மூலநூலான கிரேக்கமொழி புதிய ஏற்பாட்டில் மத்தேயு 27: 17 ஆம் வசனம் உள்ளது. ஆனால் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகளில் 'இயேசு பாரப்பாஸ்' என்ற பெயா¢ல் இயேசு என்ற வார்த்தையை நீக்கிவிட்டார்கள்.

 

கிறிஸ்தவ மதத்தின் அடித்தளமான இயேசுவைச் சிலுவையில் அறைந்த சம்பவத்திலும் ஏகப்பட்டக் குளறுபடிகள் நிறைந்துள்ளன. இயேசு எருசலேம் நகரத்துக்கு புறம்பேயுள்ள கொல்கொதா (Golkotha) என்ற மலையில் சிலுவையில் அறையப்படுவதற்காக கொண்டுசெல்லப்பட்டார். போர்ச்சேவகர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டிருந்ததால் உடல் வலிமை குன்றி அவரால் தன் சிலுவை மரத்தைத் தூக்கிக்கொண்டு நடக்க இயலவில்லை. அச்சமயம் போர்ச்சேவகர்கள் சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவனை வழியில் கண்டு, அவனை இயேசுவின் சிலுவையைச் சுமந்துவரப் பலவந்தப்படுத்தினார்கள் (மத்தேயு 27: 32; மாற்கு 15: 21; லூக்கா 23: 26). இதற்கு மாறாக யோவானின் சுவிசேஷத்தில் மட்டும் (19: 17) 'இயேசு தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப் போனார்' என்று சொல்லப்படுகிறது. இயேசு முன்னொருமுறை, 'தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல' ( மத்தேயு 10: 38) என்று சொல்லியிருக்கிறார். இங்கே 'சிலுவையைச் சுமந்துகொண்டு' என்று இயேசு கூறுவதை, அவனவன் தன்  துன்பங்களை சுமந்துகொண்டு என்று  பொருள் கொள்ளவேண்டும். இயேசுவே தன்னைப் பின்பற்றுபவர்களை அவரவர் சிலுவையை அவர்களே சுமக்கும்படிச் சொல்லியிருக்கும்போது , அவருடைய சிலுவையை மற்றொருவரைச் சுமக்கவைத்தார்கள் என்று கூறுவது இயேசுவை இழிவுபடுத்துவது ஆகாதா என்று யோசித்த யோவானின் சுவிசேஷ ஆசி¡¢யர் இயேசுவே தன் சிலுவையைச் சுமந்துகொண்டு போனார் என்று உண்மையை மறைத்து எழுதியிருக்கிறார்.

 

யூதர்களும், போர்ச்சேவகர்களும் இயேசுவைக் கொல்கொதா மலைக்குக் கொண்டு செல்கையில், திரளான ஜனங்களும், அவருக்காக புலம்பி அழுகிற ஸ்தி¡£களும் அவருக்குப் பின் சென்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "இதோ மலடிகள் பாக்கியவதிகள் என்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும், பால் கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். அப்பொழுது மலைகளை நோக்கி எங்கள் மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி எங்களை மறைத்துக்கொள்ளுங்கள் என்றும் சொல்லத்தொடங்குவார்கள்" என்று கூறுகிறார் (லூக்கா 23: 29,30). இதில் முதல் பகுதி பழைய ஏற்பாட்டிலுள்ள  ஏசாயா 54: 1 லிருந்தும், இரண்டாம் பகுதி ஓசியா 10: 8 லிருந்தும் எடுக்கப்பட்டுள்ளனவே அன்றி இயேசுவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அல்ல. மேலும் அந்த சந்தர்ப்பத்தில் இந்த வார்த்தைகளுக்குச் சம்பந்தமேயில்லை என்பதும் உன்னிப்பாக வாசிப்பவருக்குப் புலப்படும்.

 

மத்தேயு 27: 35 ல் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது. 'போர்ச்சேவகர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களைச் சீட்டுப் போட்டு தங்களுக்குள் பங்கிட்டுகொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் போ¢ல் சீட்டுப் போட்டார்கள் என்று தீர்க்கதா¢சியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது'. இது தீர்க்கத்தா¢சனம் அல்ல. சங்கீதம் 22: 18  லிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் பல வா¢கள் இயேசுவைப் பற்றி சுவிசேஷங்களில் எழுதியிருப்பதற்கு ஒத்த மாதி¡¢த் தோன்றுவதால், அல்லது இவைகளுக்குத் தக்க சுவிசேஷ ஆசி¡¢யர்கள் எழுதியிருப்பதால், அவற்றை இயேசுவைக் கு¡¢சில் அறையும் போது நடந்த நிகழ்ச்சிகளாகக் குறிப்பிட்டுத் தீர்க்கத்தா¢சனம் நிறைவேறியது என்கிறார்கள்.  இந்த சங்கீதப் பாடல்  தாவீது  இராஜாவினால் அவர் மிகுந்த துயரத்தில் இருக்கும்போது பாடப்பட்ட  சுய இரக்கப்பாடல். அவர்

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7410
Date:
Permalink  
 

இறைவனிடம் தன் துன்பங்களையெல்லாம் சொல்லி முறையிடுகிறார். தன் விரோதிகள் தம்மை எப்படிச் சூழ்ந்துகொண்டு துன்புறுத்துகிறர்கள் என்பதைப் பாடலிலே வெளிப்படுத்துகிறார். 12 ஆம் வா¢யில் தன்னைப் பாசான் (Bashan) தேசத்து எருதுகள் வளைத்துக்கொண்டதாக் குறிப்பிடுகிறார். ஆனால் இயேசுவை வளத்துக்கொண்டவர்கள் யூதர்கள்பாசான் தேசத்தவர்கள் அல்ல.மேலும் 38 ஆவது  வா¢யில் மகாசபையிலே உம்மைத் துதிப்பேன்என் பொருத்தனைகளைச் செலுத்துவேன் என்று தன் துயரங்களைத் தீர்த்தால் இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவேன் என்றும்  தாவீது சொல்லுகிறார். எனவே இந்த 22 ஆம் சங்கீதத்துக்கும் இயேசு சிலுவையில் அறையப்படும்போது நிகழ்ந்த சம்பவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அக்காலத்தில் மரணதண்டனை பெற்ற கைதியின் உடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வது ரோமானிய போர்ச்சேவகர் வழக்கம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அதுதான் இங்கும் நடந்திருக்கிறது. மத்தேயு 27: 46 ஆம் வசனத்தில் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த இயேசு " என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 22 ஆம் சங்கீதம் 2 ஆம் வசனத்தில் 'என் தேவனேஎன் தேவனேஏன் என்னைக் கைவிட்டீர்எனக்கு உதவி செய்யாமலும்நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்என்று தாவீது இறைவனை நோக்கி மன்றாடுகிறார். இதை எடுத்து இயேசுவின் வார்த்தைகளாக மாற்றியிருக்கிறார் சுவிசேஷ ஆசி¡¢யர்.

 

ஏசாயா 53 ஆம் அதிகாரத்தில் ஜெகோவாவின் 'துயரப்படும் ஊழியனைப்' (suffering servant) பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு பிறப்பதற்குச் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு எசாயா கவித்துவமாகக் குறிப்பிடும் இந்த 'துயரப்படும் ஊழியன்யாரெனில் இஸ்ரேலிய மக்களே’. தீர்க்கத்தா¢சி எதிர்காலத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை என்பது இவ்வதிகாரத்தைக் கூர்ந்து படிப்பவர்களுக்குப் பு¡¢யும். மக்கள் வழிதவறி நடக்கும்போதெல்லாம் யூதர்கள் அவர்களுக்காகத் தீமைகளைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு துன்பத்தை அனுபவிப்பார்கள்பின்பு விடிவு காலம் பிறக்கும் என்பதைத் தீவிரமாக நம்பினார்கள். "மெய்யாகவே அவர்  நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டுநம்முடைய துக்கங்களைச் சுமந்தார்நாமோ அவர்தேவனால் அடிபட்டுவாதிக்கப்பட்டுசிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டுநம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்ததுஅவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (எசாயா 53: 4-5). தீர்க்கத்தா¢சிகள் இஸ்ரேலை ஜெகோவாவின் குமாரன் என்றும் ஊழியன் என்றும் கவித்துவமாகக் குறிப்பிடுவது பழைய ஏற்பாட்டில் புதிதான விஷயம் அல்ல. ஏசாயா எழுநூறு வருடங்களுக்கு முன் கவித்துவமாகச் சொன்ன இந்த வசனங்களை இயேசு சிலுவையில் அறையப்பட்டு மா¢த்த சம்பவத்துடன் தொடர்புபடுத்திஅவர் தீர்க்கதா¢சனமாகச் சொல்லியிருக்கிறார் என்று யோவான் சுவிசேஷ ஆசி¡¢யரும் (யோவான் 12: 38), ரோமருக்கு எழுதிய கடிதத்தில் பவுலும் (ரோமர் 10: 16) தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 

இயேசு கைது செய்யப்படுமுன் பேதுருவையும்யோவான் மற்றும் யாக்கோபு ஆகிய மூன்று சீடர்களையும் கெத்சமனே தோட்டத்திற்கு கூட்டிக்கொண்டுபோய் துக்கமடையவும்துயரப்படவும் தொடங்கினார். அவர்களிடம், ‘என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறதுநீங்கள்  இங்கே தங்கி என்னோடுகூட விழித்திருங்கள்’ என்று சொன்னார் (மத்தேயு 26: 37,38). அவர் தனியாகச் சென்று ஜெபம் செய்யும்பொழுதுஇந்த கோப்பையிலிருந்து (மரணதண்டனையிலிருந்து) தன்னை விடுவிக்குமாறு இறைவனிடம்  கண்ணீரோடு மன்றாடினார். சிறிதுநேரம் கழித்து மீண்டும் அவ்வாறே மன்றாடினார். பின்பு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்போதும், 'என் தேவனேஎன் தேவனேஏன் என்னைக் கைவிட்டீர்என்று புலம்புகிறார். இதற்குக்  கிறிஸ்தவ மதவியலாளர்கள் தேவனாகிய இயேசு மனித வடிவில் இருந்ததால் மனிதர்க்கு¡¢ய குணமான மரணபயத்தை வெளிப்படுத்தினார் என்பார்கள்.  சாக்ரடீசிடம் சிறைக்காவலர்கள் நஞ்சு நிறைந்த கோப்பையைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னபொழுது மகிழ்ச்சியோடு அதை வாங்கிக் குடித்து உயிரைவிட்டார் என்று வரலாறு கூறுகிறது. பாரதத்தின் சுதந்திரப் போராட்டவீரர் பகத்சிஙகைத் தூக்கிலிடும்முன்லேன் ராபர்ட்ஸ் (Lane Roberts) என்ற ஆங்கிலேய அதிகா¡¢, நீ என்ன சொல்ல விரும்புகிறாய் என்று கேட்டபோது, 'இந்தியாவின் விடுதலைப் போராட்டவீரர்கள் எவ்வளவு ¨தா¢யமாக மரணத்தை முத்தமிடப் போகிறார்கள் என்பதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்என்று சொல்லிவிட்டுத் தன் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டார். இவர்களும் மனிதர்கள்தாம். இயேசுவோ தேவ குமாரன் என்று புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு பக்கமும் கூறுகிறது. ஆனால் மனமுவந்து தன் உயிரைத் தியாகம் செய்யப் பயப்பட்ட இயேசுவை எப்படி உலக இரட்சகர் என்று கிறிஸ்தவர்கள் சொல்லுகிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது.

 

இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோது அவரோடே கூட அவருடைய இரு பக்கத்திலும் இரண்டு கள்ளர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள் (மத்தேயு 27: 38; மாற்கு 16: 26). முதல் இரண்டு சுவிசேஷங்களில் இந்த இரு கள்ளர்களைப் பற்றி வேறு எந்த செய்தியும் இல்லை. லூக்காவில் (23: 39-42) சிலுவையில் அறையப்பட்ட  குற்றவாளிகளில் ஒருவன் : நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை  இகழ்ந்தான். மற்றவன் அவனை நோக்கி: நாமோ நியாயப்படித் தண்டிக்கப்படுகிறோம்ஆனால் இவரோ எந்த தவறையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு இயேசுவை நோக்கி: பிரபுநீர் உம்முடைய இராஜ்ஜியத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி நீ இன்றைக்கு என்னுடனேகூட பரதீசிலிருப்பாய் (Paradise) என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவான் 20:17 ல் மா¢த்து மூன்றாம் நாளில்  உயிர்த்தெழுந்த இயேசு  தன்னைத் தொடவந்த மகதலேனா மா¢யாளை என்னைத்தொடாதேநான் இன்னும் என் பிதாவின் இடத்திற்கு ஏறிப்போகவில்லை: என்று சொல்லுகிறார். சிலுவையில் தொங்கிய திருந்திய கள்ளனிடம்இயேசு: இன்றைக்கு என்னுடனே கூட பரலோகத்துக்கு வருவாய் என்று சொல்லிவிட்டு மூன்றாம் நாள் காலையில் கல்லறைக்கு வந்த மகதலேனா மா¢யாளிடம் நான் இன்னும் என் பிதாவின் இருப்பிடமான பரலோகத்துக்குப் போகவில்லை என்று சொல்கிறார் என்றால்இந்த இரண்டு கூற்றுகளில் எது உண்மை?

 

மத்தேயுமாற்கு ஆகிய இரு சுவிசேஷங்களிலும் இயேசுவின் பன்னிரு சீடர்களும் அவரைச் சிலுவையில் அறைந்த இடத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் அனைவரும் இயேசுவைக் கைது செய்யப்பட்டவுடன் தலைமறைவாகப் போய்விட்டார்கள் என்று கொள்ளவேண்டியிருக்கிறது. ஆனால் அங்கே திரளான ஜனங்களும்,  கலிலேயாவிலிருந்து வந்த அனேக ஸ்தி¡£களும் இருந்தார்கள் என்று தொ¢கிறது. அவர்களிலும் குறிப்பாக மூன்று பெண்களைப் பற்றிக் கூறப்படுகிறதுஅவர்கள்மகதலேனா மா¢யாளும்யாக்கோபுக்கும்யோசேக்கும் தாயாகிய மா¢யாளும்செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது (மத்தேயு 28: 55,56; மாற்கு 16: 40) . மாற்குவின் சுவிசேஷத்தில் செபெதேயுவின் மனைவியின் பெயர் சலோமி என்று தொ¢யவருகிறது.

 

லூக்காவின் சுவிசேஷத்தில் (23: 49) பெயர்கள் குறிப்பிடப்படாமல் பொதுவாக இயேசுவுக்கு அறிமுகமானவர்களும்கலிலேயாவிலிருந்து அவரைப் பின் தொடர்ந்துவந்த ஸ்தி¡£களும் அங்கே நின்றார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. முதல் மூன்று ஒத்தமைந்த சுவிசேஷங்களிலும் இயேசுவின் தாயாகிய மா¢யாள் அங்கே வந்ததாகச் சொல்லப்படவில்லை. ஆனால் யோவானின் சுவிசேஷத்தில் மட்டும் இயேசுவின் தாய் சிலுவையின் அருகே நிற்கிறாள். அதோடு இயேசுவுக்குப் பி¡¢யமான சீடனான யோவானும் (யோவான் சுவிசேஷத்தின் ஆசி¡¢யராகக் கிறிஸ்தவர்களால் கருதப்படுபவன்) அங்கே நிற்கிறான். இயேசு தன் தாயை நோக்கி அதோ உன் மகன் என்று யோவானைக் காட்டுகிறார். யோவானை நோக்கி அதோ உன் தாய் என்கிறார்.அவன் அவளை தன்னிடம் ஏற்றுக்கொண்டான்

(யோவான் 19: 26,27). இந்த நிகழ்வுமுதல் மூன்று சுவிசேஷங்களிலும் இல்லை. ஒருவேளை யோவானின் பெயரால் எழுதப்பட்டதால் இந்த சுவிசேஷத்தில் மட்டும் இந்நிகழ்வு கூறப்பட்டதோ என்னவோ. உடன்பிறந்த சகோதரர்களான ஜேம்ஸ்யோசேயூதாசீமோன் ஆகிய நால்வரும் இருக்கும்போதுஇயேசு எதற்காக யோவானிடம் தன் தாயைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைக்கவேண்டும்மேலும் லூக்கா 14: 26 ல் "யாதொருவன் என்னிடத்தில் வந்து தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதா¢களையும்தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாயிருக்கமாட்டான்" என்று சொன்ன இயேசு மரணத்தறுவாயில் தன் தாயிடம் பா¢வு காட்டுவதின் தாத்பா¢யம் என்னபிறருக்கு ஒரு நியாயம் தனக்கு ஒரு நியாயமா?

 

.



__________________


Guru

Status: Offline
Posts: 7410
Date:
Permalink  
 

ஓய்வுநாளில் யூதர்கள் உணவு சமைக்கவும் மாட்டார்கள். ஓய்வுநாளுக்கான உணவை வெள்ளிக்கிழமை பிற்பகலிலேயே சமைத்து வைத்துவிடுவதால் வெள்ளிக்கிழமை ஓய்வுநாளுக்கான ஆயத்தநாளாக விளங்குகிறது. யூதர்களின் பஸ்கா பண்டிகையும் அப்படியேமாலையில்தான் தொடங்குகிறது. முந்தினநாள் பஸ்காவின் ஆயத்த நாளாக இருக்கும். பஸ்காவிற்காக சமைக்கப்படும் ஆட்டு இறைச்சி உணவை அன்று இரவில்தான் உண்பார்கள். மாற்கு 14: 15 ல் இயேசுவின் சீடர்கள் அவா¢டம் வந்துநீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம் செய்ய சித்தமாயிருக்கிறீரென்று கேட்டார்கள். எனெனில் பஸ்கா வெள்ளிக்கிழமை வருகிறதுஆகையால் அது பஸ்கா பண்டிகையின் ஆயத்த நாளாக (வியாழக்கிழமை) இருந்தது. இயேசு அவர்களிடம் அன்றிரவு பஸ்கா விருந்தை எப்படி ஆயத்தம் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார். மாற்கு 15: 25 ல் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் சூர்யோதயத்திலிருந்து நேரத்தைக்கணக்கிடுவதால்,  யூதர்களுக்கு மூன்றாம்மணி என்றால் நமக்கு காலை ஒன்பது மணிஅதாவது முந்தின இரவு பஸ்கா விருந்து முடிந்து பஸ்கா பண்டிகையன்று காலையில் ஒன்பது மணிக்கு இயேசுவைச்சிலுவையில் அறைந்து ஆறுமணி நேரம் சென்றபின்பிற்பகல் மூன்று மணியளவில் அவர் உயிரைவிட்டார் என்று சொல்லப்பட்டிருக்கிறது (மாற்கு 15: 34-37).

 

ஆனால் யோவானின் சுவிசேஷத்தில் பஸ்காவின் ஆயத்தநாளில் (19: 14) நண்பகல் பன்னிரண்டு மணிக்கு (யூதர்களின் ஆறாம் மணி) பிலாத்து இயேசுவை விசாரணை செய்துகொண்டிருந்தார். பிற்பகலில் அவருக்கு மரணதண்டனை வழங்கினார். உடனே போர்ச்சேவகர்களும்  யூதர்களும் இயேசுவைக் கொல்கொதாவுக்குக் கொண்டுசென்று சிலுவையில் அறைந்தார்கள். சிலுவையில் அறையப்பட்டு இரண்டு மூன்று மணி நேரத்துக்குள்ளாகவே அந்தி சாயுமுன் அவர் இறந்துவிட்டார். மறுநாள் பொ¢ய ஓய்வுநாளாக (special Sabbath) இருந்தது (யோவான் 19: 31), இரவு வருமுன் அ¡¢மத்தியா ஊரானாகிய யோசேப்பினால் அடக்கம் செய்யப்பட்டார். அப்படியென்றால் அன்றிரவு இயேசு தன் சீடர்களுடன் பஸ்கா விருந்தில் (Last Supper) எவ்வாறு கலந்து கொண்டிருக்கமுடியும்?

 

இயேசு வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் மா¢த்தார். முதல் மூன்று சுவிசேஷங்களின்படி இயேசு சீடர்களுடன் இரவில் பஸ்கா உணவைப் புசித்தபின் அன்றிரவே கைது செய்யப்பட்டு பிரதான ஆசா¡¢யரால் இரவிலேயே விசா¡¢க்கப்பட்டுஅதிகாலையில் பிலாத்துவினால் விசா¡¢க்கப்பட்டு மரண  தண்டனையைப் பெற்றார். பஸ்காவன்று காலையில் சிலுவையில் அறையப்பட்டுப் பிற்பகலில் மா¢த்தார். யோவானின் சுவிசேஷத்தின்படி பஸ்காவின் ஆயத்தநாளில் நண்பகல் வரை பிலாத்துவினால் விசா¡¢க்கப்பட்டுபின் சிலுவையில் அறையப்பட்டுபஸ்கா உணவை யூதர்கள் அருந்தும் வேளையில் அவர்  பஸ்கா உணவைப் புசிக்காமலே மா¢த்தார். இயேசுவைத் தேவ ஆட்டுக்குட்டி என்று தொடக்கத்தில் வர்ணித்த யோவானின் சுவிசேஷ ஆசி¡¢யர் இறுதியில் இயேசுவையே பஸ்காவன்று பலியிடப்பட்டுச் சாப்பிடப்படும் ஆட்டுகுட்டியாக உலகுக்குக் காட்டுவதற்காக ஒருநாள் முந்தியே அவரை மரணமடைய வைத்துவிட்டார். இதே கருத்தில்தான் முதல் மூன்று சுவிசேஷங்களும்இயேசு தன் சீடர்களுடன் பந்தியிருந்த பஸ்கா விருந்தில்அப்பத்தைப் பிட்டு இது என் சா£ரமாயிருக்கிறதுதிராட்சை மதுவை எடுத்து இது என் இரத்தமாயிருக்கிறது என்றும் சொல்லி சீடர்களை அருந்தச் செய்தார் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் யோவானின் சுவிசேஷம் ஒருபடி மேலே போய்இயேசுவையே பஸ்கா விருந்தில் பறிமாறப்படும் பலி ஆடாகச் சித்தா¢க்கின்றது. எவ்வளவு முரண்பாடுகள்! இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் ஆறாம் மணி (நண்பகல் பன்னிரண்டுமணி) முதல் ஒன்பதாம் மணி (பிற்பகல் மூன்றுமணி) வரை பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று என்று மத்தேயு 27: 45 மற்றும் மாற்கு 16: 33 ல் சொல்லப்பட்டுள்ளது. லூக்காவில் (23: 44,45) சூ¡¢யன் மூன்று மணி நேரம் இருளடைந்தது என்று கூடுதலாக  சேர்க்கப்பட்டுள்ளது. மூன்று சுவிசேஷங்களிலும் அச்சமயத்தில்  சூ¡¢ய கிரகணம் நிகழ்ந்ததா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. சூ¡¢ய கிரகணம் என்பது சூ¡¢யனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து சூ¡¢யனை மறைக்கும்போது ஏற்படுவது. அன்றையதினம்  சூ¡¢ய கிரகணம் நடைபெறச் சாத்தியமேயில்லைஏனெனில் சூ¡¢ய கிரகணம் அமாவசையன்றுதான் நிகழும். ஆனால் பஸ்கா பண்டிகை பௌர்ணமி சமயத்தில் வருவதாகும். பழைய ஏற்பாட்டில் ஏசாயா 60: 2; எரேமியா 15: 9 ஆகிய வசனங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காகப் பூமியை இருள் மூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதையொட்டியேஇயேசு சிலுவையில் அறையப்பட்ட அன்றும் பூமியை இருள் மூடியது என்ற கற்பனையைச் சேர்த்திருக்கிறார்கள்.

 

இயேசு சிலுவையில் மா¢த்தபோது மற்றொரு மாபெரும் அற்புதம் நிகழ்ந்ததாக மத்தேயுவின் சுவிசேஷத்தில் மட்டும் (28: 52,53) கூறப்பட்டுள்ளது. இயேசு உயிரை விட்டபோது கல்லறைகள் திறந்துஅவற்றிலிருந்த அநேக பா¢சுத்தவானகளுடைய சா£ரங்கள் உயிரோடு எழுந்திருந்தன. அவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டுஎருசலேம் நகரத்தில் பிரவேசித்துஅநேகருக்குக் காணப்பட்டார்கள். இந்த விஷயம் புதிய ஏற்பாட்டிலுள்ள அப்போஸ்தலர்களுடைய கடிதங்களிலோஅப்போஸ்தலருடைய நடபடிகளிலோவேறு எந்த சுவிசேஷத்திலோ சொல்லப்படவில்லை. கல்லறைகளிலிருந்து உயிரோடு எழுந்த பா¢சுத்தவானகள் யார் யார் என்பதோஅவர்களை யார் யார் பார்த்தார்கள் என்பதோஅவர்கள் எவ்வளவு காலம் உயிரோடிருந்தார்கள் என்பதைப் பற்றியோ மத்தேயுவில் எந்தத் தகவலும் இல்லை. பவுல் கொலோசியருக்கு எழுதிய கடிதத்தில் (1: 18) 'இயேசுவே மா¢த்தோ¡¢லிருந்து எழுந்தவர்களுள் முதல் பேறானவர்என்று எழுதுகிறார். மீண்டும் 1 கொ¡¢ந்தியர் 15: 20 ல் 'கிறிஸ்துவே மா¢த்தோ¡¢லிருந்து எழுந்துநித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்என்று சொல்லுகிறார். அதன்படி பார்த்தால் மத்தேயுவின் இந்தப் புனிதர்கள் உயிர்த்தெழுந்த விவரம் உண்மையில்லை என்பது புலப்படும் . இது மாத்திரம் அல்லஇயேசு  இறந்து போனவர்களை உயிர்ப்பித்து ஏற்கனவே செய்த அற்புதங்களும் உண்மையல்ல என்றாகிறது. 

 

ஹன்ஸ் அத்ரோத் (Hans Atrott) போன்ற ஆராய்ச்சியாளர்கள் உண்மையில் சிலுவையில் மாண்டது இயேசு அல்லஅது யூதாஸ் ஸ்கா¡¢யோத் என்று கருதுகிறார்கள். அதற்குக் காரணம் இயேசுவின் சீடராகக் கருதப்படும் பர்னபாஸின் பெயரால் எழுதப்பட்ட சுவிசேஷம் (Gospel of Barnabas). அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால்இயேசு கடைசி இரவு விருந்தில் ரொட்டியைப்பிட்டு இது என் சா£ரமாயிருக்கிறது என்று யூதாசுக்குக் கொடுத்துபின் கோப்பையில் திராட்சை மதுவை எடுத்து இது என் இரத்தமாக இருக்கிறது என்று அவன் பருகத்தருகிறார் (transubstantiation). அப்போது யூதாஸ் இயேசுவைப்போல் மறுரூபம் (transfiguration) அடைந்தான். இயேசுவைப் போல் மறுரூபம் அடைந்த யூதாஸ்இயேசு என்று யூதர்களால் கருதப்பட்டுகைது செய்யப்பட்டு விசரணைக்குப்பின்  இயேசுவுக்குப் பதிலாக  சிலுவையில் அறையப்பட்டதாகவும்கல்லறையில் வைக்கப்பட்ட யூதாசின் உடலை இயேசுவின் சீடர்கள் கடத்திச் சென்றதாகவும்இயேசு தேவதூதர்களின் உதவியால் தப்பித்துச் சென்று பின்னர் உயிர்த்தெழுந்ததாக சீடர்களுக்குக் காட்சியளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பர்னபாஸின் சுவிசேஷம் பைபிளில் சேர்க்கப்படாத பல கிறிஸ்தவ மறைநூற்களில் (Apocrypa) ஒன்று.

 

நாக் ஹம்மடியில் 1945 ல் கிடைத்த புறந்தள்ளப்பட்ட கிறிஸ்தவ மறைநூற்களில் ஒன்றான 'மகா சேத்தின் இரண்டாம் விளக்கம்' (The Treatise of the Great Seth) என்ற நூலில் இயேசு தன் சிலுவை மரணத்தைக் குறித்துப் பின்வருமாறு கூறுவதாக எழுதப்பட்டுள்ளது:

"அவர்கள் திட்டமிட்டபடி நான் பலியாகவில்லை. நான் பாதிக்கப்படவேயில்லை. எனக்குத் தண்டனையளித்தவர்கள் அங்கு இருந்தார்கள். பார்வைக்கு அப்படித் தொ¢ந்ததே தவிர நான் உண்மையில் மா¢க்கவில்லைஇல்லாவிடில் அவர்களால் எனக்கு அவமானம் உண்டாகியிருக்கும்ஏனெனில் அவர்கள் என்னுடைய மனிதர்களாயிருந்தார்கள். அவமானத்தை என்னிலிருந்து விலக்கினேன்மேலும் அவர்கள் கையில் எனக்கு நேர்ந்தவைகளைக் குறித்து நான் இதயத்தில் கலங்கவில்லை. அவர்கள் அவர்களுடைய மனிதனை ஆணியடித்து மரணத்துக்கு ஒப்புக்கொடுத்ததனால்எனக்கு மரணம் சம்பவித்தது என்று அவர்கள் தங்கள் பிழையினாலும்குருட்டுத்தனத்தாலும் நினைத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் காதில்லாதவர்களாகவும்கண்ணில்லாதவர்களாகவும் இருந்ததனால் அவர்கள் என்னைப் பார்க்கவில்லை. என்னைப் பார்த்துதான் தண்டனை வழங்கினர். ஆனால் காடியையும்வினிகரையும் குடித்ததோ நானல்ல. அவர்கள் சவுக்கால் அடித்தது சிலுவையைச் சுமந்த  சீமோன் என்பவனைஎன்னையல்ல. முள்கி¡£டத்தை வேறொருவன் தலையில் வைத்தார்கள். நானோ நீதிபதிகளின் செல்வத்திற்கும்அவர்களுடைய பிழையுள்ள சந்ததிகளுக்கும்அவர்களின் வெற்று மகிமைக்கும் மேலாக நின்று மகிழ்ந்துகொண்டிருந்தேன்"*

 *The Nag Hummadi Library, The Second Treatise of the Great Seth, Translated by Rojer A. Bullard and Joseph A. Gibbons, p 384



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard