இயேசுவின் போதனைகள்தொடக்கத்தில் கொடூரமான சமூக நியாயங்களையும், 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' போன்ற கருத்துக்களையும் கொண்டிருந்த யூதர்கள் எகிப்திய, பாபிலோனிய, பாரசீக, கிரேக்க, ரோமானிய கலாச்சாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாலஸ்தீனத்தில் ஊடுருவியபின் இயேசுவின் காலத்தில் ஒரு முதிர்ந்த சமூகமாகவே வாழ்ந்தனர். யூதமதப் போதகர்கள் (rabbis) விரோதிகளையும் நேசிக்க வேண்டும், தீயவை செய்வதை நிறுத்தி மனம் திருந்துதலே இறைவனின் கோபத்தைத் தடுக்கும் வழி என்றெல்லாம் உபதேசித்தனர், மறைநூற்களிலும் எழுதிவைத்தனர். இயேசுவின் காலத்தில் யூதர்களின் ஜனத்தொகையில் மிக அதிகமாக இருந்தவர்கள் பா¢சேயரே. அவர்களில் பலரும் போதகர்களாயிருந்தனர். அவர்கள் யூதர்களின் நியாயப்பிரமாணத்திலுள்ள சட்டதிட்டங்களையும், பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களிலுள்ள கொள்கைகளையும் மக்களிடையே உபதேசித்துவந்தனர். இந்நிலையில்தான் இயேசுவும் உபதேசிக்க ஆரம்பித்தார்.
வரலாற்று அறிஞர்கள் கூற்றுப்படி பவுல் அப்போஸ்தலரே புதிய ஏற்பாட்டின் முதல் கிறிஸ்தவ எழுத்தாளர் ஆவார். அவர் தன் கடிதங்களை எழுதிய காலத்தில் சுவிசேஷங்கள் எழுதப்பட்டிருக்கவில்லை. பவுலின் எழுத்துகளிலிருந்து நாம் இயேசுவைப் பற்றித் தொ¢ந்து கொள்வதெல்லாம், அவர் ஒரு சாதரண மனிதக்குழந்தையாக அவதா¢த்தார், சீடர்களுடன் கடைசி இரவு விருந்து உண்டபின்னர் சிலுவையில் அறையப்பட்டு மா¢த்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார், உயிர்த்தெழுந்தபின் சீடர்களுக்குத் தா¢சனம் தந்து முடிவில் பரலோகம் சென்றார் என்பதுதான். இயேசுவின் போதனைகளைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.
ஆக்ஸ்போர்டு வரலாற்று மறையியல் கழகம் (Oxford Society of Historical Theology) 1905 ல் ஒரு அறிஞர்குழுவை நியமித்து சுவிசேஷங்களில் இயேசுவைப் பற்றி எழுதப்பட்டுள்ள சங்கதிகளிலும், அவருடைய போதனைகளாகக் கூறப்பட்டுள்ளவைகளிலும் எத்தனை விஷயங்கள் முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட கிறிஸ்தவ மறைநூற்களில் மேற்கோள் இடப்பட்டிருக்கின்றன என்று ஆராய்ந்ததில், சுவிசேஷங்களில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் ஒன்று கூட இல்லை, ஒன்றிரண்டு இருந்தாலும் அவை கேள்விக்கு¡¢யதாகவே இருக்கிறது என்பதுதான் உண்மை.(The New Testament in the Apostalic Fathers-1905)
பவுல் எழுதிய கடிதங்களிலோ, இயேசுவோடு கூட இருந்து அவருடைய எல்லா உபதேசங்களிலும் பங்கெடுத்துகொண்ட பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய சீடர்கள் எழுதிய கடிதங்களிலோ இயேசுவின் போதனைகள் மேற்கோள்களாகக் குறிப்பிடப்படவில்லை.
முதன்முதலாக எழுதப்பட்டதென்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட மாற்குவின் சுவிசேஷம் கி.பி. 60 க்குப் பின்னரே எழுதப்பட்டுள்ளது, அதாவது இயேசு மறைந்தபின் சுமார் 30 ஆண்டுகள் கழித்து. மத்தேயுவின் சுவிசேஷமும், லூக்காவின் சுவிசேஷமும் கி.பி.70 முத்ல் 90 க்குள்ளும், யோவானின் சுவிசேஷம் கி.பி. 100லிருந்து 120 க்குள்ளும் எழுதப்பட்டிருக்கலாம் என்று மறையியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். வெறும் காதுவழிச் செய்திகளைக் கொண்டுதான் இயேசுவின் வாழ்க்கையைக் கூறும் இந்த சுவிசேஷங்கள் எழுதப்பட்டுள்ளன. இயேசு வாழ்ந்த காலத்தில் அவரைப் பற்றி எழுதப்பட்டதாகச் சொல்லத்தக்க ஆவணங்கள் எதுவும் கிடைககபெறவில்ல. மேலும் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு சுவிசேஷங்களில் இரண்டு இயேசுவின் நேரடிச் சீடர்களின் பெயா¢ல் இருந்தாலும் அவை அவர்களால் எழுதப்படவில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு.
மத்தேயுவும், லூக்காவும் மாற்குவின் சுவிசேஷத்தை ஒட்டியே எழுதப்பட்டுள்ளன. நான்காவது சுவிசேஷமான யோவான் மட்டும் மொத்த கதையையும் மாற்றி இயேசுவைக் கடவுளாகக் காண்பித்தே தீரவேண்டும் என்ற உத்வேகத்துடன் தத்துவா£தியாக எழுதப்பட்டுள்ளது. மற்ற மூன்று சுவிசேஷங்களைப்போல இதையும் யோவானின் பெயரால் யாரோ பெயர் அறிவிக்காத ஒருவர்தாம் எழுதியிருக்கவேண்டும். ஏனெனில் யோவான் படிப்பறிவில்லாத பேதை என்று அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 13 ல் கூற்ப்பட்டுள்ளது. மேலும் இயேசுவின் சீடராயிருந்த அவருடைய காலம் கி.பி. 100 ஆம் ஆண்டுக்குள் முடிந்திருக்கவேண்டும்.
இயேசுவின் போதனைகள் அவருக்குப்பின் நாற்பது ஐம்பது ஆண்டுகள் சென்றபின்னரும் எப்படி வார்த்தைக்கு வார்த்தை பிசகாமல் சுவிசேஷ ஆசி¡¢யர்களுக்குக் கிடைத்தன என்பது தொ¢யவில்லை. அதிலும் பிரசித்திபெற்ற இயேசுவின் 'மலைப்பிரசங்கம்' (Sermon on the mount) மத்தேயுவின் சுவிசேஷத்தில் மூன்று அதிகாரங்கள் (5,6 7) முழுவதும், நூற்றிப்பதினொரு வசனங்களும் கொண்டது. ஒரே நாளில் இயேசு பிரசங்கித்த இவ்வளவு தத்துவார்த்தமான விஷயங்களை காதுவழிச் செய்திகளின் மூலம் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு வெளிக்கொணருவதென்பது நம்பமுடியாத செயலே.
நான்கு சுவிசேஷங்களிலும் இயேசு கிறிஸ்துவின் ஏராளமான போதனைகள் பரவிக்கிடக்கின்றன. அவருடைய வாயிலிருந்து வெளிவந்த உபதேசங்கள் யாவும் அவருடைய சொந்தக் கருத்துக்கள் அல்ல. ஏனெனில் இயேசுவின் உபதேசங்கள் பலவும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த யூத மறைநூற்களில் உள்ள கருத்துக்கள்தாம். அவற்றை எடுத்துத் தகுந்த இடங்களில் பொருத்தி இயேசுவின் உபதேசங்களாக சுவிசேஷ ஆசி¡¢யர்கள் காண்பித்திருக்கிறார்கள் அல்லது ஏற்கனவே மறைநூற்களில் சொல்லப்பட்ட கருத்துக்களையே இயேசுவும் மற்ற யூதமதப் போதகர்களைப்போல் உபதேசித்திருக்கவேண்டும்.
சுவிசேஷங்களில் யூதர்களின் சமூகவாழ்க்கையைப் பற்றி மிகக்குறைவாகவே சித்தா¢த்திருக்கிறார்கள். பா¢சேயர்களுக்கும் இயேசுவுக்குமிடையே ஏற்படுகின்ற வாக்குவாதங்களில் சில நேரங்களில் அவர்களுடைய வாழ்க்கைமுறைகள் பிரதிபலிக்கின்றன. அவற்றிலும் பா¢சேயர்களுக்கு நியாயப்பிரமாணத்தின் சட்டங்களை நிறைவேற்றுவதிலுள்ள ஆர்வமே தென்படுகிறது. இயேசுவின் காலத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்த யூதமதப் போதகர்களான (rabbis) கமாலியேல் (Gamaliel), ஹில்லெல் (Hillel), அகிவா (Akiva)
போன்ற பா¢சேயர்களைப் பற்றிய எந்த குறிப்பும் சுவிசேஷங்களில் இல்லை. இயேசுவைக் கடவுளாக ஏற்றுக்கொள்வதற்குமுன் பவுல் கமாலியேலிடம் சீடராக இருந்து கல்வி கற்றார். பின்பு ஒருமுறை பேதுரு உள்ளிட்ட இயேசுவின் சில சீடர்களை பிரதான ஆசா¡¢யன் சிறையிலடைத்து அவர்களைக் கொல்ல மனதாயிருந்தபோது இதே கமாலியேல்தான் தலையிட்டு அவர்களை விடுவித்தார் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 5: 34). யூதர்களில் துறவு மனப்பான்மையுள்ள ஒரு பி¡¢வினரான எஸ்ஸேன்கள் (Essenes) என்று அழைக்கப்பட்ட கூட்டத்தா¡¢ன் உயர்ந்த நீதிநெறிகளை சுவிசேஷ ஆசி¡¢யர்கள் முழுதுமாக மறைத்துவிட்டார்கள். இதன் முடிவில் இயேசுவை ஒரு மென்மையான, மனிதாபிமானம் மிக்க, ஏழை எளியவர்களை நேசிக்கின்ற, நியாயப்பிரமாணத்துக்கு மதிப்பளிக்கின்ற, தெய்வீக நிலையிலுள்ள ஒரு போதகராகக் காட்சியளிக்க வைத்தார்கள்.
உங்கள் அயலானை மட்டுமல்லாது விரோதிகளையும் நேசியுங்கள், குழந்தைகளிடம் மென்மையாக நடந்துகொள்ளுங்கள், திக்கற்றவர்களுக்கு உதவுங்கள், எண்ணங்களிலும் நடத்தையிலும் பா¢சுத்தத்தைக் கொண்டுவாருங்கள், தந்தைக்கும் தாய்க்கும் மதிப்பளியுங்கள், உங்கள் ஒரு கன்னத்தில் ஒருவன் அடித்தால் எதிர்த்து நில்லாது அடுத்த கன்னத்தையும் காட்டுங்கள் என்ற் அளவுக்கு இவை யாவையுமே யூதர்களின் மறைநூற்களில் ஏற்கனவே உள்ளன. அவற்றை இயேசுவின் காலத்திலிருந்த போதகர்கள் (rabbis) உபதேசித்துவந்தனர். இதற்கெல்லாம் பைபிளின் முற்பகுதியாகிய பழைய ஏற்பாட்டிலேயே ஆதாரங்கள் உள்ளன.
"சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தா¢த்துக் கொள்வார்கள்" (மத்தேயு 5: 5). இது இயேசுவின் போதனை. "சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தா¢த்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியயிருப்பார்கள்" (சங்கீதம் 37: 11). இது பழைய ஏற்பாட்டு வாசகம்.
"இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவாங்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" (மத்தேயு 5: 7). இவை இயேசுவின் வார்த்தைகள். "சிறுமைப் பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் (ஜெகோவா) அவனை விடுவிப்பார்" (சங்கீதம் 41: 1). இது பழைய ஏற்பாட்டு வாசகம்.
"இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தா¢சிப்பார்கள்" (மத்தேயு 5: 8). இது இயேசுவின் வார்த்தைகள். "யார் கர்த்தர்¢ன் (ஜெகோவாவின்) பர்வதத்தில் ஏறுவான்? கைகளில் சுத்தமுள்ளவனும், இருதயத்தில் மாசில்லதவனாயிருந்து தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருப்பவனே" (சங்கீதம் 24: 3,4). இது பழைய ஏற்பாட்டு வாசகம்.
"உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக" (மத்தேயு 22: 39). இது இயேசுவின் போதனை. "உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக" (லேவியராகமம் 19: 18). இது பழைய ஏற்பாட்டு வாசகம்.
"ஒரு ஸ்தி¡£யை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று" (மத்தேயு 5: 28). இது இயேசுவின் வார்த்தைகள். "பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பயாக" (யாத்திராகமம் 20"17). இது பழைய ஏற்பாட்டு வாசகம்.
"பா¢ச்சேதம் சத்தியம் செய்யவேண்டாம். வானத்தின்போ¢ல் சத்தியம் பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்" (மத்தேயு 5: 34). இது இயேசுவின் வார்த்தைகள். "உன் தேவனாகிய ஜெகோவாவின் நாமத்தை வீணில் வழங்காதிருப்பாயாக" (யாத்திராகமம் 20; 7). இது பழைய ஏற்பாட்டு வாசகம்.
"ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு" மத்தேயு 5:39). இது இயேசுவின் போதனை. "தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக" (புலம்பல் 3: 30). இது பழைய ஏற்பாட்டு வாசகம்.
"பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே , உம்முடைய நாமம் பா¢சுத்தப்படுவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக." (மத்தேயு 6: 9,10). இவை இயேசுவின் வார்த்தைகள். "தேவா£ர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பா¢சுத்தமும், மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தத்திலிருந்து பாரும்" (ஏசாயா 63: 15). இது பழைய ஏற்பாட்டு வாசகம்.
"ராஜ்யமும், வல்லமையும் , மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே". ( மத்தேயு 6: 13). இது இயேசுவின் வார்த்தைகள். "மாட்சிமையும், வல்லமையும், மகிமையும், ஜெயமும், மகத்துவமும் உம்முடையவைகள்". (1 நாளாகமம் 29: 11). இது பழைய ஏற்பாட்டு வாசகம்.
"ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்". (மத்தேயு 6: 26). இவை இயேசுவின் வார்த்தைகள். "காக்கைக் குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதா¢த்துக் கொடுப்பவர் யார்? (யோபு 38: 41). "அவர் மிருக ஜீவ ன்களுக்கும், கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரம் கொடுக்கிறார்" (சங்கீதம் 147: 9). இவை பழைய ஏற்பாட்டு வாசகங்கள்.
"மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" (மத்தேயு 7: 12). இது இயேசுவின் போதனை. 'உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே" (தோபித்து 4: 15) இது பழைய ஏற்பாட்டு வாசகம். ( தோபித்து என்ற புத்தகம் யூதர்களின் பைபிளிலும், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் பைபிளிலும் உள்ளது. ஆனால் ப்ரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் இந்த புத்தகம் 'கர்த்தா¢ன் வார்த்தைகளால் எழுதப்படவில்லை' என்பதை பதினாறாம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததால் , தங்கள் பைபிளிலிருந்து நீக்கிவிட்டார்கள்!)
இயேசு கிறிஸ்து பிறமதத்தினரையும் தன்னுடைய வார்த்தைகளாலும், நடத்தையினாலும் கவர்ந்த ஒரு மகான். அன்பையும், அமைதியையும் போதித்தவர், தன் வாழ்க்கையில் மிகப்பொ¢ய கோட்பாடுகளைக் கடைப்பிடித்தவர் என்றுதான் பலரும் நினைக்கின்றார்கள். கிறிஸ்தவமதத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும், இயேசுவை அவர்களால் வெறுக்க இயலாது. ஆனால் அவரது வாழ்க்கையை விளக்கும் சுவிசேஷங்களைக் கூர்ந்து கவனித்து வாசித்தோமானால் பல முரண்பாடுகளைக் காணலாம். இயேசுவைப் பின்பற்றியவர்கள் அவரது உபதேசங்களை முழுமையாகத் தங்கள் வாழ்க்கையில் கைக்கொள்ளுகிறார்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். இயேசுவே தன் போதனைகளைத் தானே பின்பற்றவில்லையென்றால் என்ன செய்வது?
"ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அடித்தால் அவனுக்கு உன் மறு கன்னத்தையும் காட்டு" (லூக்கா 6: 29) என்பது இயேசுவின் பிரசித்திபெற்ற ஒரு போதனை. ஆனால் இயேசுவே தனக்கு என்று ஒரு சந்தர்ப்பம் வரும்பொழுது இதைக் கடைபிடிக்கவில்லை. இயேசு கைது செய்யப்பட்டுப் பிரதான ஆசா¡¢யனால் விசா¡¢க்கப்படும் பொழுதில் அவனுடைய கேள்விக்குக் குதர்க்கமாகப் பதில் சொன்னபடியால், பிரதான ஆசா¡¢யனின் சேவகன்: 'பிரதான ஆசா¡¢யனுக்கு இப்படியா பதில் சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால் தகாததை ஒப்புவி, நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார் (யோவான் 18: 22,23). தன்னுடையப் போதனைப்படி அவர் தன்னை அவன் மீண்டும் அடிக்கட்டும் என்று ஒப்புக்கொடுக்கவில்லை, அதற்குப் பதிலாக அவனிடம் ஏன் அடித்தாய் என்று கோபப்படுகிறார்.
"உங்கள் சத்துருக்களைச் சினேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" என்று இயேசு மலைபிரசங்கம் செய்யும்போது உபதேசித்தார் (மத்தேயு 6: 44). லூக்காவின் சுவிசேஷத்தில் ஒரு உவமேயக்கதையில் தன்னை ஒரு பிரபுவாகச் சித்தா¢த்துக்கொண்டார். அந்தப் பிரபு தூரதேசம் சென்று திரும்பிவந்து ஒரு ராஜ்யத்தை நிறுவ முற்படுகையில், ‘தங்கள்மேல் நான் இராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என் சத்துருக்களை இங்கே கொண்டுவந்து எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள்’ என்று தன் சேவகர்களுக்கு உத்தரவிட்டான் என இயேசு சொன்னார் (லூக்கா 19: 27). இந்த உருவகக்கதையில் இயேசுதான் (யூதர்களுக்கு) இராஜாவாக விரும்பிய அந்த பிரபு. சத்துருக்களைச் சினேகியுங்கள் என்று கூறிய இயேசு அதைக் கதையில் கூட பின்பற்றவில்லை.
"உன்னை நீ நேசிப்பதுபோல் பிறனையும் நேசிப்பாயாக" (லேவியராகமம் 18: 19) என்பது யூத மதத்தின் அடிப்படைப் போதனையாகும். இயேசுவின் காலத்துக்குப் பல ஆண்டுகள் முன்பே ரபி அகிவா (Rabbi Akiva) என்ற யூதமதப் போதகர் இதுதான் நியாயப்பிரமாணத்தின் முக்கியமான கட்டளை என்று அறிவித்திருக்கிறார். ஆனால் கிறிஸ்தவ மக்கள் இதை இயேசுவின் போதனைகளில் ஒன்று எனக் கருதுகிறார்கள்.
மத்தேயு13:31-32; மாற்கு 4:30-32; லூக்கா 13: 18-19 ல் இயேசு தேவனுடைய ராஜ்யத்தை ஒரு கடுகுவிதைக்கும் அதிலிருந்து முளைத்துவளரும் மரத்துக்கும் ஒப்பிடுகிறார். கடுகுவிதை பொ¢ய மரமானபின் அதில் ஆகாயத்துப் பறவைகள் வந்து குடியிருக்கும் என்கிறார். இங்கே தேவனுடைய ராஜ்யம் என்றால் இறைவனின் சொரூபம் (Divinity) என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். இறைவனின் சொரூபம் ஒரு மாபெரும் மரம் போல் நிற்கிறது என்ற கருத்து அநேகமாக எல்லாமதங்களிலும் வேரூன்றிய கருத்தே. இந்து மதத்தில் தைத்¡£ய உபநிஷத்தில் (11:1) இக்கருத்து கூறப்படுகிறது. கதோபநிஷத்திலும் (2:6), பகவத் கீதையிலும் (15:1-4) இதே கருத்து, வேர்கள் மேலேயும், கிளைகளும் இலைகளும் கீழ்நோக்கியும் இருக்கும் 'அஸ்வதா' மரமாக (அரசமரம்) விளக்கப்படுகிறது. இறைக்குணங்கள் வேர்கள் வழியாக மேலிருந்து இறங்கி கீழேயிருக்கும் மனிதா¢டம் வந்துசேரத்தக்கதாய் அஸ்வதா மரம் தலைகீழாகச் சித்தா¢க்கப்படுகிறது. புத்தமதத்தில் அரச மரம் போதி என்று அழைக்கப்படுகிறது. புத்தர் போதி மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து ஞானம் பெற்றார். ஆனால் இயேசு சித்தா¢க்கும் கடுகு மரம் உண்மையில் 6 முதல் 15 அடி உயரம் வரை வளரும் ஒரு பொ¢ய செடியே ஆகும். இயேசு குறிப்பிடுவது போல் அது வளர்ந்து மாபெரும் மரமாகி பறவைகளுக்கு அடக்கலம் தரும் என்பது கற்பனையே.
லூக்காவின் சுவிசேஷத்தில் 10: 27 -37 வசனங்களில் இயேசுவின் சிறந்த உவமேயக்கதைகளில் ஒன்று கூறப்பட்டுள்ளது. 'ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எ¡¢கோவுக்கு போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான். அவர்கள் அவன் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் யூதர்களின் ஆசா¡¢யன் ஒருவன் அந்தவழியே வந்து , அவனைக்கண்டு உதவாமல் விலகிப்போனான். சற்றுநேரம் சென்று ஒரு லேவியனும் (ஆசா¡¢யனுடைய உதவியாளர்) அவ்வழியே வந்து அவனைக்கண்டு உதவாமல் விலகிப்போனான். பிறகு சமா¡¢யன் ஒருவன் பிரயாணமாய் வருகையில் அவனைக் கண்டு மனதுருகி, கிட்டவந்து அவன் காயங்களில் எண்ணெய்யும், திராட்சைமதுவும் வார்த்து கட்டுகளிட்டுத் தன் வாகனத்தில் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய் அவனைப் பராமா¢த்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து சத்திரக்காரன் கையில் கொடுத்து, நீ இவனைப் பார்த்துக்கொள், அதிகமாய் நீ ஏதாகிலும் இவனுக்காக செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை நான் உனக்குத் தருவேன் என்றான்'. இக்கதை 'நல்ல சமா¡¢யனின் கதை' என்று இன்றுவரைப் பிரபலமாகவுள்ளது.. உண்மையில் சமா¡¢யர்களுக்கும் யூதர்களுக்கும் பகையுணர்ச்சியிருந்தாலும் சமா¡¢யர்களும் ஒருவகையில் யூதர்களே. பாபிலோனியர் படையெடுப்புக்கு முன் இஸ்ரேலில் வாழ்ந்த யூதமக்களின் வம்சாவழியினரே சமா¡¢யர் எனப்படுவர். எகிப்திலிருந்து மோசே அழைத்துவந்த யூதர்கள் இஸ்ரேலை (பழைய கானான் தேசம்) ஆக்கிரமித்துக்கொண்டு, அதன் ஒரு பகுதியாக இருந்த சமா¡¢யாவிலிருந்த மக்களை ஒதுக்கிவைத்தனர். ஏனெனில் இரண்டு பி¡¢வினருக்கும் தெய்வங்களும், வழிபாட்டுமுறைகளும் வெவ்வேறாக இருந்தன. ஆனாலும் அவர்களும் இஸ்ரேலியரே. இக்கதையின் மூலம் சமா¡¢யனை நல்லமனிதனாகக் காண்பிப்பதைவிட ஒட்டுமொத்த யூதமதத் தலைவர்களும் நல்லமனதுடையவர்கள் அல்ல என்று பழிப்பதே இயேசுவின் அல்லது இதை எழுதியவா¢ன் நோக்கமாக இருக்கிறது.
நம்மில் பலரும் இயேசு அன்பையும், சமாதானத்தையும் உபதேசிக்க வந்தார் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். இயேசு மத்தேயு 5:22 ல் "தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு உட்படுவான்,... மூடனே என்று சொல்கிறவன் எ¡¢நரகத்துக்கு உட்படுவான்" என்று சாதாரணமான குற்றங்களுக்குகூட கடுமையான் தண்டனை கிடைக்கும் என்கிறார். மத்தேயு 10: 34-35 ல் இயேசு: "பூமியில்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, கொலைவாளையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பி¡¢வினையுண்டாக்க வந்தேன்" என்று சொல்கிறார். மேலும் "பார்வையற்றவர்கள் பார்வை அடையும்படியும், பார்வையுள்ளவர்கள் குருடராகும்படியும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன்" என்று இயேசு சொல்லுகிறார் (யோவான் 9: 39). அகிம்சையைப் போதித்த இயேசு கடைசி விருந்து முடிவடையும்பொழுது தன் சீடர்களை நோக்கி, "இப்பொழுதே பணப்பபையும், சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன், கொலைவாள் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்" என்கிறார் ( லூக்கா 22: 36). வேதபாரகரையும், பா¢சேயரையும் இயேசு மிகவும் கடுமையான் வார்த்தைகளால் திட்டுகிறார்."சர்ப்பங்களே, வி¡¢யன் பாம்புக்குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?" என்று ஏசுகிறார் (மத்தேயு 23: 33). 'நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்' என்று இயேசு அவர்களைத் திட்டுகிறார் ( யோவான் 8: 44).
யூதர் அல்லாத பிற இனத்தா¡¢டத்து யூதர்களில் பலர் எத்தகைய மனோபாவம் கொண்டிருந்தனர் என்பது பழைய ஏற்பாட்டின் புகழ்வாய்ந்த யூதமன்னர்களுள் ஒருவனான சாலமன் இராஜாவின் பிரார்த்தனையிலிருந்து விளங்கும். 'அந்நிய ஜாதியானும் தூரதேசத்திலிருந்து வந்து, உமது நாமத்தினிமித்தம் இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம் செய்தால், பரலோகத்திலிருக்கிற தேவா£ர் அதைக்கேட்டு, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவா£ர் செய்வீராக' என்று சாலமன் பிரார்த்திக்கிறார் (1 இராஜாக்கள் 8: 42,43). இயேசுவுக்கு இத்தகைய பரந்த மனப்பான்மை இருந்ததா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லவேண்டியுள்ளது. தன்னுடைய பன்னிரண்டு சீடர்களையும் மக்களிடம் சென்று பரலோக ராஜ்யத்தைப் பற்றி உபதேசம் செய்வதற்குக் கட்டளையிட்டு அனுப்பியபோது அவர் சொன்னது என்னவென்றால்: 'நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமா¡¢யர் பட்டணங்களில் பிரவேசிக்காமலும், காணாமற்ப்போன ஆடுகளாகிய இஸ்ரேல் வீட்டா¡¢டத்திற்குப் போங்கள்' என்றார் (மத்தேயு 10: 5,6). மாற்கு 7: 26 முதல் 30 வரையுள்ள வசனங்களில் சொல்லப்படும் கதையில் சிரோபீனீசியா (Syrophoenicia) நாட்டிலுள்ள ஒரு கிரேக்கப்பெண் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்தவேண்டுமென்று இயேசுவை வேண்டிகொண்டாள். இயேசுவோ 'நான் யூதர்களுக்கு நன்மை செய்வதற்காகவே பிற்ந்திருக்கிறேன், நீ யூதஸ்தி¡£ அல்ல, உனக்கு நான் ஏன் உதவ வேண்டும்' என்ற பொருளில் 'பிள்ளைகளுக்காக வைத்திருக்கும் அப்பத்தை எடுத்து நாய்களுக்கு போடுவார்களா' என்று கேட்கிறார். யூதர்களின் மறைநூற்களில் ஒன்றான தால்முதில் (Tamud) கிட்டின் 61a (Gittin 61a) என்ற பகுதியில், "யூத இனத்து ஏழைகளுக்கு எப்படி உணவு அளிப்பீர்களோ, அவ்வாறே பிற இனத்து ஏழைகளுக்கும் உணவளியுங்கள்" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இயேசுவோ பிற இனத்து ஏழைமக்களை நாய்களாகக் கருதுகிறார் என்றெண்ண இடமிருக்கிறதல்லவா?
ஒருமுறை அவரது சீடனாகிய பேதுரு இயேசுவை நோக்கி: நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.அதற்கு அவர்: மறுமையில் மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பினபற்றின நீங்களும் இஸ்ரேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத்தேயு 19: 28). இஸ்ரேல் என்ற ஒரு நாட்டின் மக்களுக்காகவே அனுதினமும் பாடுபட்டு, அவர்களையே எப்பொழுதும் மனதில் நினத்துக்கொண்டிருந்த இயேசுவை உலகமக்களுக்கெல்லாம் இரட்சகர் என்று நம்பவைத்து அவர்தான் கடவுள் , மற்ற மதங்களைப் பின்பற்றுகிறவர்களெல்லாம் மூடர்கள் என்று கூறும் கிறிஸ்தவர்களை என்ன சொல்வது?
ஒருமுறை எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும், பா¢சேயரும் இயேசுவினிடத்தில் வந்து, பாரம்பா¢ய வழக்கத்தினை ஏன் மீறி நடக்கிறீர் என்று கேட்டபோது அவர்களுக்குப் பிரதியுத்தரமாக அவர் சொன்னார்: 'உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்றும், தப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும் தேவன் கற்பித்திருக்கிறாரே; ஆனால் நீங்கள் அதைப் பின்பற்றுவதில்லையே' என்றார் (மத்தேயு 15: 4). ஆனால் இந்த போதனையை இயேசு பின்பற்றினாரா என்றால் இல்லை. ஒருமுறை அவருடைய தாயாரும், சகோதரரும்வந்து, இயேசு இருந்த இடத்தின் வெளியே நின்று அவரைப் பார்க்கும்படிக்கு அவா¢டத்தில் ஆள் அனுப்பினார்கள். அவரைச் சுற்றியிருந்த ஜனங்கள் உம்முடைய தாயாரும், சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.அதற்கு அவர் என் தாயார் யார், என் சகோதரர் யார் என்று சொல்லி, அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார் ( மாற்கு 4: 31 -33).
வேரொருமுறை ஒருவனை நோக்கி இயேசு என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முதலில் நான் போய் இறந்துபோன என் தகப்பனை அடக்கம் பண்ண எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு அவனை நோக்கி : மா¢த்தோர் தங்கள் மா¢த்தோரை அடக்கம் பண்ணட்டும்; நீ போய் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கி' என்று சொல்லி அவனை அவன் தன் தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதிச் சடங்கைச் செய்யவிடவில்லை. (லூக்கா 10: 59,60).
"மலைப்பிரசங்கத்தில் இயேசு போதித்த அறிவுரைகள் எதுவும் யதார்த்த வாழ்க்கையில் கைக்கொள்ள இயலாத கருத்தியல்களே. நமது ஒரு கன்னத்தில் அடிப்பவருக்கு மறு கன்னத்தையும் காட்டுவதென்பது இயலாத கா¡¢யம். எத்தகைய ஹிம்சையையும் ஏற்றுக்கொள்வது என்பது தெய்வீகமாக இருக்கலாம், ஆனால் நம் உடல் அதைத் தாங்குமளவுக்கு வலிமையானது அல்ல. இயேசுவே தனக்கு ஏற்படவிருக்கும் சிலுவைமரணத்தைக் குறித்து உள்ளம் துயருற்று, "பிதாவே, இந்த பாத்திரம் என்னைவிட்டு விலகுமாறு செய்யவேண்டும்" என இரண்டு முறை இறைவனை வேண்டிக்கொண்டார். சிலுவையில் தொங்கும் போதும்: " என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று இறைஞ்சினார். தங்கள் யதார்த்த ஆத்மாவில் பெருமை கொண்டிருப்பவர்களும், அதிகாரம், பொருள் லாபம், உடலாசை, திடனிழந்த உள்ளம் ஆகியவற்றால் ஆசைத்தூண்டுதல் ஏற்படும்போது சாதாரண மனிதர் நிலக்கு இறங்கிவிடுகிறார்கள் " என்று தத்துவமேதையும், மறைந்த முந்நாள் ஜனாதிபதியுமான டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
இயேசு தனக்குப் பிடிக்காத மனிதர்களின் மீது மட்டும் வெறுப்பை உமிழ்ந்தார் என்று கருதவேண்டாம், அவர் தனக்குப் பிடிக்காத மரத்தைக்கூட விட்டுவைக்கவில்லை!
இஸ்ரேலிலும், யூதேயாவிலும் அத்திமரங்கள் ஏராளம் இருந்தன. யூதர்கள் அத்திப்பழத்தை விரும்பிச் சாப்பிடுவர். ஒருநாள் இயேசுவும் அவரது சீடர்களும் பெத்தானியாவிலிருந்து எருசலேம் நகரத்துக்கு வந்துகொண்டிருந்தபோது இயேசுவுக்குப் பசியாயிருந்ததனால், வழியில் ஒரு அத்திமரத்தைக் கண்டு அதன் பழங்களைப் புசிக்கலாமென்று அதனிடத்தில் போனார். அது அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதனிடத்தில் வந்தபோது அதில் இலைகளேயல்லாமல் வேறொன்றையும் காணவில்லை. உடனே இயேசு கோபங்கொண்டு, இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனிகள் உண்டாகாதிருக்கக்கடவது என்று மரத்தைச் சபித்தார். அந்தமரம் பட்டுப் போயிற்று (மத்தேயு 21: 18 -21). லூக்கா 9; 56 ல் மனுஷகுமாரன் மனிதர்களுடைய ஜீவனை அழிப்பதற்கு அல்ல, அவர்களை இரட்சிக்கவே வந்தார் என்று தன்னைபற்றி இயேசு கூறுகிறார். அப்படியானால் அவர் ஏன் ஒரு சாதாரண விஷயத்துக்காக ஒரு மரத்தை அழிக்க வேண்டும்? அது மனிதன் அல்ல, வெறும் மரம்தானே என்பதாலா? படிப்பறிவில்லாத பாமரன் கூட, பருவமில்லாத காலத்தில் ஒரு மரத்திடமிருந்து கனிகளை எதிர்பார்க்கமாட்டான். கனிகள் இல்லையென்றால் மரத்தைச் சபிக்கமாட்டான். இயேசுவைப் போன்ற ஒரு மகான் இவ்வாறு நடந்துகொண்டதாக பைபிள் கூறுவதை நம்ப இயலவில்லை.
தால்முதில் (Talmud) [யூதர்களின் வேதம்] தானிஸ் 24a (Taanis 24a) என்ற பகுதியில் இதைப் போன்ற ஒரு சம்பவம் சொல்லப்பட்டுள்ளது. ஒருநாள் ரபி யோஸி (Rabbi Yosi) என்ற யூதமதப் போதகா¢ன் தோட்டத்தில் அவரது பணியாட்கள், வேலை செய்து கொண்டிருந்தார்கள். உணவுநேரம் கழிந்து வெகுநேரம் சென்றும் பணியாட்களுக்கு வரவேண்டிய உணவு வந்து சேரவில்லை. அப்பொழுது அங்கிருந்த ரபி யோஸியின் மகன் தந்தையின் பணியாட்களுக்கு ஏதாவது சாப்பிட அளிக்கவேண்டுமென்ற கருத்தில் அருகிலிருந்த அத்திமரத்தை நோக்கி , 'அத்திமரமே, என் தந்தையின் பணியாட்களுக்கு உன் பழங்களைச் சாப்பிடக்கொடு' என்று உரத்தகுரலில் வேண்டினான். அது அத்திமரங்கள் கனிகள் கொடுக்கும் பருவம் ரம் ரபி யோஸியின் மகனி வேண்டுகோளுக்கிணங்கி உடனே ஏராளமான காய்களை உண்டுபண்ணியது, அவை உடனே பழுக்கவும் செய்தது. பணியாட்கள் அனைவரும் அத்திக்கனிகளை வயிறாற உண்டுமகிழ்ந்தனர். இயேசுவும் அற்புதங்களைச் செய்யவல்லவராக இருந்திருப்பின் அத்திமரத்தைக் கனிகள் கொடுக்கவைத்திருக்கலாம், அதை விடுத்து அவர் அந்த மரத்துக்குச் சாபம் கொடுத்து அழித்தார். தன்னுடைய போதனைகளைப் பின்பற்ற இயேசுவுக்கே இயலவில்லை.