Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 11. Messiah and Kingdom of God


Guru

Status: Offline
Posts: 7471
Date:
11. Messiah and Kingdom of God
Permalink  
 


   மேசியாவும் தேவனுடைய ராஜ்யமும்

 

மேசியா (Messiah) என்ற எபிரேய வார்த்தைக்கு 'அபிஷேகம் செய்யப்பட்டவர்' (the anointed one) என்று பொருள். கிறிஸ்து (Christ)  என்பது மேசியா என்ற வார்த்தைக்கு நிகரான கிரேக்க வார்த்தையான கி¡¢ஸ்டோஸ் (Kristos) என்பதின் ஆங்கில மருவு ஆகும். புதிய ஏற்பாடு முதன்முதலில் கிரேக்கமொழியில் எழுதப்பட்டதால் பல எபிரேயமொழி வார்த்தைகள் கிரேக்க வடிவம் பெற்றன. ஜெகோஷ்வா (Yehoshwa) என்ற இயேசுவின் பெயரும் கிரேக்கமொழியில் இயோஷ்வோ (Ieosou) என்று மருவி, ஆங்கிலத்தில் ஜீசஸ் (Jesus) என்றானது. தமிழ் புதிய ஏற்பாடு கிரேக்க மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப் பட்டபடியால் கிரேக்க இயோஷ்வோ தமிழில் இயேசு ஆயிற்று.

 

யூதர்கள் மரபில் அரசர்களைப் பட்டாபிஷேகம் செய்து அவர்களுக்கு ஆட்சி செய்யும் அதிகாரம் வழங்குவது வழக்கம். இயேசு மா¢த்து சுமார் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள்வரை அவரது வரலாறு எழுதப்படவில்லை. அந்த காலகட்டத்தில் அவர்தான் மேசியா என்று அவரது போதனைகளைப் பரப்பிய அப்போஸ்தலர்கள் கருதியதால் அவருக்கு மேசியா அல்லது கிறிஸ்து என்ற பட்டத்தை வழங்கினர். ஆனால் உண்மையில் இயேசுவுக்கு யாரும் அபிஷேகம் செய்வித்து அரசு¡¢மை வழங்கவில்லை. அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே தங்கியிருந்தபோது , ஒரு ஸ்தி¡£ (மகதலேனா மா¢யாள்) விலையேறப்பெற்ற நளதம் என்னும் தைலத்தைக்கொண்டுவந்து அவர் தலையின்மேல் ஊற்றினாள் (மாற்கு 14: 3). கிறிஸ்தவமதப் போதகர்கள் இதை இயேசு, மேசியா அல்லது அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று அழைக்கப்படுவதற்கு அடையாளமாகக் கொள்ளலாம் என்று கூறுவர். மக்கள் கூடியிருக்கும் சபையில் சிம்மாசனத்தில் அமரவைத்து அபிஷேகம் செய்வித்து, அரசர்க்கு¡¢ய கி¡£டத்தைச் சூட்டுவதும் இதுவும் ஒன்றாகுமா? ஆனால் மற்ற மூன்று சுவிசேஷங்களிலும் அந்த பெண் வாசனைத் தைலத்தை இயேசுவின் பாதங்களில் பூசி தன் கூந்தலால் அதைத் துடைத்தாள் என்று  சொல்லப்பட்டுள்ளது.

 

யூதர்கள் எதிர்பார்த்த மேசியாவின் குணநலன்கள் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி தீர்க்கத்தா¢சிகள் விளக்கியிருக்கிருக்கின்றனர். அவர் யூதரைத் தலைமை தாங்கி அழைத்துச் செல்பவராகவும், ஞானத்திலும், அதிகாரத்திலூம், ஆத்மபலத்திலும் சிறந்தவராகவும்  இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். அவர் யூதருக்கு விடுதலை வாங்கித்தந்து, என்றென்றைக்கும் அமைதியையும், அன்பையும், ஐசுவா¢யத்தையும், நீதிநெறிகளையும் நிலைநாட்டுபவராகவும் இருக்கவேண்டும் (ஏசாயா 11:2). ' பூமியைத் தன் வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கா¢ப்பார்' என்று ஏசாயா மேலும் கூறுகிறார் (ஏசாயா 11: 4). மேசியா மனிதப்பெற்றோருக்கு மகனாகப் பிறந்துவளர்ந்து ஒரு தலைவராக உருவாவார் என்று எதிர்பார்க்கப்பட்டாரே தவிர ஜெகோவாவின் குமாரனாகப் பிறப்பார் என்று யூதர்கள் கருதவில்லை. கடவுள் மேசியாவாக அவதா¢ப்பார் அல்லது கடவுளின் குமாரன் மேசியாவாக வருவார் என்று பைபிளில் எங்கும் சொல்லப்படவேயில்லை. மேலும் மேசியா ஒரு கன்னிகைக்குக் குழந்தையாகப் பிறப்பார் என்றும் சொல்லப்படவில்லை. ஏசாயா 7:14 ல் "இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயா¢டுவாள்," என்று சொல்லப்பட்டுள்ளது. இதை  கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய தீர்க்கத்தா¢சனமாகத் தற்கால கிறிஸ்தவ மறையியல் ஒப்புகொள்ளவில்லை (Catholic Encyclopedia Vol xv 1913: p 451). யூதர்கள் எதிர்பார்த்த மேசியா நிச்சயமாக இந்த உலகத்துக்கு உ¡¢யவரே.

 

இயேசுவின் வாழ்க்கைக்கும் தீர்க்கத்தா¢சிகள் யூதர்களின் வேதபுத்தகங்களில் விவா¢த்துள்ள மேசியாவின் குணாதிசயங்களுக்கும் சம்பந்தமேயில்லை. யூதர்களுக்கு அரசியல் விடுதலையைப் பெற்றுத்தருவதில் இயேசு தோல்வியடைந்தார் என்று சொல்வதைவிட அவர் அதற்கு முயற்சி  செய்யவேயில்லை என்பதுதான் உண்மை. ஆகவே கிறிஸ்தவர்கள் மேசியாவின் அவதார நோக்கம் யூதர்களுக்கு அரசியல் விடுதலை பெற்றுத்தருவதல்ல, அவர் மக்களைத் தீமைகளிலிருந்து விடுவித்து மனிதர்கள் செய்யும் பாவங்களிலிருந்து அவர்களை இரட்சித்து மறுமையில் நித்தியஜீவனை அளிப்பதேயாகும் என்று என்ற ஒரு புதிய கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த கருத்தாக்கத்தை வி¡¢வாக்கி இயேசு அகில உலகத்துக்கும் இரட்சிப்பை வழங்க அவதா¢த்தார் என்ற கருத்தையும் விதைத்தார்கள். யூதர்களின் மறைநூற்களில் கூறப்பட்டிருப்பதுபோல மேசியா முதலில் யூதர்களை அடிமைத்தளையிலிருந்து இரட்சித்து, பின்னர் உலகமக்களின் விவகாரங்களைப்

பார்ப்பார் என்ற கருத்தைப் புறந்தள்ளிவிட்டார்கள். கிறிஸ்தவர்களின் கருத்துப்படி மேசியா அகில உலகையும் தன்வசப்படுத்தி தன்னை இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களின் பாவங்களை மட்டும் தான் ஏற்று மன்னித்து அவர்களைப் பரலோக ராஜ்யம் அழைத்துச் சென்று ஒரு அரசரைப்போல் ஆட்சிசெய்வார். எனவே இயேசுவின் ராஜ்யம் இந்த உலகத்துக்கு¡¢யது அல்ல. யோவான் 18: 36 ல் இயேசுவே 'என் ராஜ்யம் இந்த உலகத்திற்கு¡¢யதல்ல' என்று சொல்லியிருக்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

இயேசு பாவங்கள் எதுவும் செய்யவில்லையெனில் எதற்காகச் சிலுவையில் அறையுண்டுபாடுபட்டுகொடிய குற்றவாளிகளைப்போல கீழான மரணத்தை அடைந்தார்இதற்கு கிறிஸ்தவர்கள் ஒரு சாமர்த்தியமான பதிலை வைத்திருக்கிறார்கள். இயேசு மனிதகுலத்தின் பாவங்களுக்காக சிலுவையில் மா¢த்தார் என்பதுதான் அது. ஆனால்  இயேசுவுக்கு முன்பு யாரும் துயருற்றுபாடுபட்டுசெய்யாத குற்றத்துக்காக கொலையானதில்லையாஇதற்கும் அவர்களிடம் பதில் உள்ளது. ஆதாம் செய்த 'முதல் பாவ'த்துக்குப் (original sin) பா¢காரம் தேடவேண்டுமானால் சதாரண மனிதர்களின் பலி ஈடாகாது. அதற்குக் கடவுளின் குமாரனாகிய இயேசுவே தன்னைப் பலியிட்டுக் கொள்ளவேண்டும் என்பார்கள். இதற்கு ஆதாரமாக எசாயா 52: 13 முதல் 53: 12 வரையுள்ள வசனங்களைக் காட்டுவார்கள். அந்நியா¢ன் கொடுந்தாக்குதலுக்குள்ளான ஜெகோவாவின் துயரப்படும் ஊழியனைப் பற்றி (Suffering servant) அதாவது யூதமக்களைத் 'துயரப்படும் ஊழியனாகஉருவகப்படுத்தி

ஏசாயா எழுதியிருக்கும் வாசகங்களை இயேசுவுக்குப் பொருத்திக்கொள்வார்கள். தீர்க்கத்தா¢சிகள் இஸ்ரேல் நாட்டை அதாவது யூத மக்களை ஜெகோவாவின் குமாரன் என்றும் ஊழியன் என்றும் கவித்துவமாகக் குறிப்பிடுவது பழைய ஏற்பாட்டில் புதிதான விஷயம் அல்ல. இதேபோல் தாவீது மன்னன் தன் உள்ளத்துயரையெல்லாம் கொட்டி சுய இரக்கத்தில் தன்னைப்பற்றிப் பாடிய 22 ஆம் சங்கீதப்பாடல் வா¢களையும் இயேசுவின் பாடுகளுக்குப் பொருத்தி அதற்கேற்ப மத்தேயுவின் சுவிசேஷத்தில் வசனங்களை வடிவமைத்துக் கொண்டார்கள்.

 

இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது. உலகமக்களின் இரட்சகராக அவதா¢த்த ஒருவர் இப்படி ஒரு மோசமான மரணத்தைத் தழுவினால் எப்படி மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள்அதற்கும் பதில் உண்டு. யூதர்களின் நம்பிக்கைகளில் ஒன்றான உயிர்த்தெழுதலைக் கிறிஸ்தவர்கள் கையிலெடுத்துக் கொண்டார்கள். சிலுவையில் மா¢த்த இயேசுவை மூன்றாம்நாளில் உயிர்த்தெழவைத்தார்கள். மேலும் உலகம் தோன்றிய காலம் முதல் மா¢த்துபோன மனிதர்களுள் முதன்முதல் உயிர்த்தெழுந்தவரும் இயேசுவே என்றனர். இதன்மூலம் இயேசுவின் தெய்வீகத்தன்மையை உறுதி செய்தனர். இயேசுவைப் பின்பற்றுபவர்கள் பிதா (ஜெகோவா) இத்தகைய துன்பத்தையும்மரணத்தையும் வேண்டுமென்றே இயேசுவின்மேல் சுமத்தினார் என்பதையும் நம்பமாட்டார்கள். ஏனெனில் இயேசுவின் சித்தமும் பிதாவின் சித்தமும் ஒன்றேசிலுவையில் அறையப்படுவது உட்பட என்பார்கள். ஆட்டுக்குட்டி எப்படித் தன்ன்னுடைய மயிர் கத்தா¢க்கப்படும்ப்படும்போது எதிர்ப்பு காட்டாமல் நிற்கிறதோ அவ்வாறே

இயேசுவும் தன் விருப்பத்தின்படியே சிலுவையில் அறையுண்டு மா¢த்தார் என்று அவர்கள் சொல்லுவார்கள்.

 

இயேசு தன் வாழ்நாளில் ஜெகோவாவைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் பரலோகத்திலிருக்கும் என் பிதா என்றே சொல்லுவார். யூதர்களுக்கு கடவுளைப் 'பிதாஎன்று சொல்லுவது ஒரு கவித்துவ சொல்லாட்சியாகும். இயேசுவின் தாய்மொழியான அராமைக் (Aramaic) மொழியில் பிதாவை அப்பா (abba) என்று அழைத்தார்கள். இயேசுவும் அப்பா என்றே அழைத்தார்.

 

கிரேக்கப் புராணக்கதைகளில் கடவுளர்கள் மனிதப்பெண்கள் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது விவா¢க்கப்பட்டுள்ளது. பைபிளிலும் இவ்விஷயம் சொல்லப்பட்டுள்ளது (ஆதியாகமம் 6: 4). இத்தகைய கதைகள் கிரேக்க சமூகத்தில் பிரபலமான மனிதர்களான பிளேட்டோ (Plato), பிதகோரஸ் (Pythogoras), மகா அலெக்சாண்டர் (Alexander, the Great) போன்றவர்களைப் பற்றிகூட ஆங்காங்கே பேசப்பட்டது. ஏன் இயேசுவைப்பற்றியும் பேசப்பட்டிருக்கக்கூடாது.  இயேசுவையும் கடவுளின் குழந்தையாக்கினார்கள். கிரேக்க புராணங்களில் எழுதப்பட்டிருப்பதுபோல் ஜெகோவா பூமிக்குவந்து மா¢யாளுடன் உடலுறவு கொண்டு அவள் கர்ப்பமுற்று இயேசுவைப் பெற்றெடுத்தாள் என்றால் விரசமாக இருக்கும் என்று கருதி சுவிசேஷ ஆசி¡¢யர்கள் பா¢சுத்த ஆவியைக் கண்டுபிடித்தார்கள். கண்ணுக்குத்தொ¢யாத பா¢சுத்த ஆவியினல் மா¢யாள் கர்ப்பம் தா¢த்தாள் என்று எழுதினார்கள். பா¢சுத்த ஆவியைப் பற்றிய நேரடியான குறிப்புகள் எதுவும் பழைய ஏற்பாட்டில் இல்லை.

 

ஒருமுறை இயேசு தன் சீடர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்களில் சிலர் உம்மை யோவான் ஸ்ஞானகன் என்றும்சிலர் எலியா என்றும்வேறு சிலர் தீர்க்கத்தா¢சிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர் நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக நீர் கிறிஸ்து (மேசியா) என்றான். இயேசு அகமகிழ்ந்து  அவனை நோக்கி: பரலோகத்திலிருக்கிற  என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். நீ கற்பாறையாக (Peter [petros]) இருக்கிறாய் (பேதுரு என்றால் கிரேக்கமொழியில் கற்பாறை என்று பொருள்)உன்மேல் என் சபையைக் (church) கட்டுவேன். பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன் என்று சொன்னார் (மத்தேயு 16: 13 -19). மோட்ச ராஜ்யம் என்பது பூட்டியிருக்கும் கோட்டை வாசலை உடையது என்றும்திறவுகோல் கொண்டு திறந்தபின்னரே உள்ளே பிரவேசிக்கமுடியும் என்பதும் பேகன் மதத்தினா¢ன் புராணக்கதைகளில் உள்ள கருத்து. மேலும் இங்கே என் சபை’ என்று குறிப்பிடப்படுவது 'கிறிஸ்தவ சபை' (church) ஆகும். இது கிரேக்கமொழியில் எழுதப்பட்ட மூலப்பிரதிகளில் 'எக்லேசியா' (ecclesia [ekkesian]) என்றிருக்கிறது. எக்லேசியா என்றால் பண்டைகால கிரேக்கர்களின் அரசியல் நிர்வாக சபைஅதாவது நம்முடைய சட்டசபை அல்லது பாராளுமன்றத்துக்கு ஒப்பானது. அதற்கும் மதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. முதன்முதலில் கான்ஸ்டான்டைன் பேரரசர் கிறிஸ்தவமதத் தலைவர்களைக் கூட்டி தானே தலைமை தாங்கி நடத்திய நைசியா ஆலோசனை சபையும் (Council of Nicea) அரசர் தலைமை வகித்ததனால்  எக்லெசியா என்றுதான் அறியப்பட்டது. அதிலிருந்து கிறிஸ்தவமதச் சபைகளுக்கு எக்லெசியா என்று பெயர் ஏற்பட்டது. இது கி.பி.325 ல் நிகழ்ந்தது. பிற்காலத்தில் புதிய ஏற்பாடு கிரேக்கமொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது எக்லெசியன் (ecclesian) என்ற கிரேக்க வார்த்தை ஆங்கிலத்தில் 'சர்ச்' (church) என்றானது. அப்படியானால் முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட மத்தேயுவின் சுவிசேஷத்தில் இயேசு எக்லேசியனை (church) பேதுருவின் மேல் கட்டுவேன் என்று எப்படி சொல்லமுடிந்ததுசுவிசேஷத்தில் விவா¢க்கப்பட்டுள்ள இச்சம்பவம் இயேசுவை மேசியா என்று நிலைநாட்டுவதற்காகச் சேர்க்கப்பட்ட ஒரு இடைச்சொருகல் என்று அநேகமாக எல்லா நேர்மையான கிறிஸ்தவ  மறையியல் ஆராய்ச்சியாளர்களும் செய்த முடிவு. மேலும் கிறிஸ்தவமதம் இயேசுவால் ஸ்தாபிக்கப்பட்டது அல்ல என்பதும் பவுல் மற்றும் இயேசுவின் சீடர்களான பேதுருயோவான்ஜேம்ஸ் போன்றவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது என்பதும் எல்லாருக்கும் தொ¢ந்ததே.

 

இயேசு மா¢த்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததனால் அவரது மரணம் தற்காலிகமானது என்று  நம்பவைக்கப்பட்டுள்ளது.  மேசியாவைக்குறித்தத் தீர்க்கதா¢சிகளின் அருள்வாக்குகளில் பல இயேசுவால் நிறைவேற்றப்படாமலே போனதால் தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் அவருடைய 'இரண்டாம் வருகை'யைக் கண்டுபிடித்து அதை ஜெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளுடன் இணைத்தனர். அது மட்டுமல்லஅன்றயதினம் இயேசு ஜெகோவாவின் வலது பக்கத்தில் அமர்ந்து உலகமக்களை நியாயம் தீர்ப்பார். இந்த தீர்ப்புவைபவம் முடிந்தபின் சாத்தான் இயேசுவால் தோற்கடிக்கப்பட்டுச் சிறைப்பிடிக்கப்படுவான். தீமையும்பாவங்களும் அத்தோடு விலகும் இருளின் அதிகாரம் ஒழிக்கப்பட்டு தேவனுடைய ராஜ்யம் நிறுவப்படும் என்று புதிய ஏற்பாடு சொல்லுகிறது.

 

உண்மையான மேசியாவாக இருந்தால் அவர் யூதர்களின் இராஜாவாக முடிசூடிக்கொண்டு அவர்களை ஆட்சி செய்யவேண்டும். ஆனால் இயேசுவின் பொது வாழ்க்கையோ மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவேயிருந்தது. அதன் முடிவில் ரோமானியரால் ஒரு கொடுங்குற்றவாளியைப்போல் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்.

யூதர்களின் பைபிளில் விவா¢க்கப்பட்டுள்ள மேசியா இஸ்ரேலை அவர்களுக்கு மீட்டுக் கொடுக்கவேண்டும். ஆனால் இயேசுவின் விஷயத்தில் அத்ற்கு நேர்மாறாக நிகழ்ந்தது. இயேசு மா¢த்து சில ஆண்டுகளே ஆன நிலையில் (கி.பி.70) எருசலேம் தேவாலயம் ரோமானிய அரசால் இடிக்கப்பட்டு தரைமட்டமானது. அதன்பின் யூதர்கள் நாட்டைவிட்டு நிர்பந்தமாக வெளியேறவேண்டி வந்தது. சுமார் 1900 வருடகாலம் அந்நியர் நாடுகளில்மேசியா என்று அழைக்கப்பட்ட இயேசுவைப் பின்பற்றுபவர்களால் சொல்லொணாத் துயரையும்கொடுந்தண்டனைகளையும் அனுபவித்தனர்.

 

மேசியாவின் ஆட்சி நடைபெறும்போது "சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல்பூமி ஜெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" (ஏசாயா 11: 9) என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்தது என்னஇயேசுவின் மரணத்துக்குப்பின் இஸ்லாம் மதம் தோன்றி அரேபியாவிலும்சுற்றியுள்ள பிறநாடுகளிலும் பரவியது. கிறிஸ்தவமதம் உடைந்து ஒன்றுக்கொன்று விரோதமுள்ள பலபி¡¢வுகளாகத் துண்டுபட்டதுஅதிலும் பெரும்பகுதியினர் (கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்) பழைய ஏற்பாட்டில் தடைசெய்யப்பட்ட விக்கிரக ஆராதனையைக் கைக்கொண்டனர்.

 

யூதர்களின் பைபிளில் மேசியா வருவார்அவரை மக்கள் கொன்றுவிடுவார்கள்அவர் மீண்டும் இரண்டாம் வருகை தருவார் என்று எங்கும் சொல்லப்படவேயில்லை. மேலும் மேசியா என்பவர் தாவீது அரசனின் வம்சத்தில் ஒருவராகப் பிறப்பார் என்று பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளதாகச் சொல்லுவார்கள். இயேசுவோ சுவிசேஷங்களின்படி 'பா¢சுத்த ஆவிக்குமகனாகப் பிறந்தவர்! தாவீதின் வம்சத்தில் பா¢சுத்த ஆவி எங்கே வந்தது?

 

யூதர்களுக்கு அவ்ர்களுடைய நியாயப்பிரமாணம் (Torah) உயிரைவிட மேலானது. 'நியாயப்பிரமாணத்தையானாலும்தீர்க்கத்தா¢சனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணாதீர்கள்அழிக்கிறதற்கு அல்லநிறைவேற்றுகிறதற்கே வந்தேன்என்று இயேசு சொன்னார். மேலும் வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும்நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறுமளவும்அதில் ஒரு சிறு எழுத்தாகிலும்ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்என்று இயேசு சொன்னார் (மத்தேயு 5: 17,18). ஆனால் அவரே நியாயப்பிரமாணத்திலுள்ள சில கட்டளைகளை மீறினார். அவரைப் பின்பற்றியவர்களோ அநேகமாக எல்லா கட்டளைகளையும் மீறிவிட்டனர்.

 

கிறிஸ்தவமதப் போதகர்கள் தீர்க்கத்தா¢சனத்தை  நிறைவேற்றவே மேசியாவாகிய இயேசு சிலுவையில் அறையுண்டு மா¢த்தார் என்பார்கள். இதற்காக சங்கீதம்  22: 16 ஆம் வசனத்தை எடுத்துக்காட்டாகக் கூறுவர். "நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறதுபொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டதுஎன் கைகளையும் கால்களையும் உருவக்குத்தினார்கள்."  இந்த வசனத்தின் பின்பகுதி  " பொல்லாதவர்களின் கூட்டம் ஒரு சிங்கத்தைப் போல் என் கைகளையும் கால்களையும் வளைத்துக்கொணடது." என்றிருக்கவேண்டும். எபிரேய மொழியில் 'கேயோ¢' (keAri) என்றால் 'சிங்கத்தைப் போல்என்று பொருள். கிறிஸ்தவ மொழிபெயர்ப்பாளர்கள்  இதை 'கா¡¢' (kaari) என்று மாற்றிவிட்டார்கள். இதற்குத் 'துளையிடுதல்என்று பொருள். ஆங்கில பைபிளின்  ஜேம்ஸ் அரசா¢ன் தொகுப்பில் (King James Version) 'என் கைகளையும் கால்கலையும் உருவக்குத்தினார்கள்' (pierce) என்று மொழிபெயர்த்துவிட்டார்கள். எபிரேயமொழியில் எழுதப்பட்ட சாவுக்கடல் பதிவுகளிலும் (Dead Sea Scrolls),  கிரேக்க மொழியில் எழுதப்பட்ட செப்டுவாஜின்ட் (Septuagint) பைபிளிலும்சி¡¢யாக்மொழி பைபிளிலும்அதிகாரபூர்வ எபிரேயமொழி மற்றும் அராமைக் (Aramaic) மொழி பைபிள்களிலும் 'சிங்கத்தைப் போல்' (like a lion) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அகில உலக ஆங்கிலதொகுப்பு பைபிளில் (New International Version- 50th Anniversary Bible) அடிக்குறிப்பாக இவ்விவரத்தைக் கொடுத்திருக்கிறர்கள். இதிலிருந்து இது எத்தகைய மோசடி என்பது விளங்குகிறது.

 

எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்தவமத போதகர்கள் மேற்கோளாக எடுத்துக்கொண்ட இந்த 22 ஆம் சங்கீதப்பாடல் தாவீது அரசன் தன் சொந்த மனத்துயரைப்  இறைவனிடம் சொல்லி முறையிட்ட பாடலாகும். யோர்தான் நதியின் கிழக்கிலிருந்த பாசான் (Bashan) என்ற தேசத்தின் மன்னன் தாவீதின் இஸ்ரேல் ராஜ்யத்தை முற்றுகையிட்டிருந்த நேரம் அது. 12,13 ஆம் வசனங்களில் "பாசான் தேசத்து எருதுகள் என்னை வளைத்துக்கொண்டது. பீறி கெர்ச்சிக்கின்ற சிங்கத்தைபோல் என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்" என்று தாவீது முறையிடுவதிலிருந்து இது பு¡¢யும். இயேசுவின் காலத்தில் பாசான் தேசமும் ரோமானியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்த சங்கீதப் பாடலுக்கும் இயேசுவின் பாடுகளுக்கும் சம்பந்தம் இல்லையென்பதே உண்மை. இந்த சங்கீதப்பாடலில் வரும் சில வா¢களுக்கேற்ப சுவிசேஷ ஆசி¡¢யர்கள் சில வசனங்களைத் தங்களுக்கு வசதியாக எழுதிவைத்திருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை.

 

கிறிஸ்தவமதப் போதகர்கள் இயேசு ஒருவரால் மட்டும்தான் நம்முடைய பாவங்களிலிருந்து நமக்கு இரட்சிப்பு கிடைக்கும் என்று போதிக்கிறார்கள். ஏனெனில் இயேசு நம்முடைய பாவங்களுக்காக ஏற்கனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவது போல) தன்னைச் சிலுவையில் பலியிட்டுக்கொண்டார். இதுதான் கிறிஸ்தவமதத்தின் அடிப்படைப் போதனை. 'தேவன்தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி உலகத்தில் அன்பு கூர்ந்தார்என்று யோவான் 3: 18 ல் கூறப்பட்டுள்ளது. மாற்கு 10: 45 ல் மனுஷகுமாரன் ஊழியம் கொள்ளும்படி வராமல்ஊழியம் செய்யவும்அநேகரை மீட்கும்பொருளாகத் (ransom) தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் அதே  பைபிளில் பல இடங்களில் இந்தக்கருத்து மறுக்கப்பட்டுள்ளது. உபாகமம் 24: 16 ல் பிள்ளைகளுக்காகப் பிதாக்களும்பிதாக்களுக்காகப் பிள்ளகளும் கொலை செய்யப்படவேண்டாம்அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்என்று சொல்லப்பட்டுள்ளது.

2 இராஜாக்கள் 14: 6 லும், 2 நாளாகமம் 25: 4 லிலும் இதே கருத்து வலியுறுத்தப்படுகிறது. எசேக்கியேல் 18: 20 ல் பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லைதகப்பன்  குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லைநீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும்துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எரேமியா 31: 29-30 ல் "பிதாக்கள் திராட்சைக்காய்களைத் தின்றார்கள்பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். அவனவன் தன் தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்எந்த மனுஷன் திராட்சைக்காய்களைத் தின்றானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்" என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவனும் அவனவன் செயலுக்கு அவனவனே பொறுப்பு ஏற்கவேண்டும். 'தீதும் நன்றும் பிறர்தர வாராஎன்ற கருத்து பைபிளில் பல இடங்களில் கூறப்படுகிறது.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

கிறிஸ்தவமதப் போதகர்கள் வலியுறுத்தும் மற்றொரு விஷயம் பாவ நிவாரணத்துக்கு இரத்தம் சிந்துதல்என்பதாகும். இதற்கு அவர்கள் ஆதாரமாகக் காட்டுவது லேவியராகமம் 17: 11ஆம் வசனம்:ஆத்துமாவிற்காக பாவநிவிருத்தி செய்கிறது இரத்தமே'. மேலும்  எபிரேயர் 9: 22 ல் 'எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகா¢க்கப்படும்இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாதுஎன்று சொல்லப்படுகிறது. தொடக்கத்தில் யூதர்கள் பறவைகளையும்மிருகங்களையும் ஜெகோவாவிற்குப் பலியிட்டுஅவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்துதங்கள் பாவங்களிலிருந்து விடுபட்டதாக நம்பினர். யூதர்களின்  இந்த நம்பிக்கையே இயேசு எல்லா மனிதர்களின் பாவங்களுக்கும் பாவநிவிருத்தியாக சிலுவையில்  இரத்தம் சிந்தினார் என்ற கிறிஸ்தவர்களின் கற்பனைக்கு ஆதாரம்.

 

லேவியராகமம் 5 ஆம் அதிகாரத்தில் யூதர்கள் தங்கள் பாவநிவாரணத்திற்காக எந்தெந்த மிருகங்களையும்பறவைகளயும் கர்த்தருக்குப் பலியிடவேண்டும் என்ற நியதிகளை வகுத்திருக்கிறார்கள். செல்வந்தர்கள் ஆட்டுக்குட்டிகளையும்ஆட்டுக்குட்டிகள் வாங்க சக்தியில்லாதவர்கள் இரண்டு காட்டுப் புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும். புறாக்களை வாங்கக்கூட சக்தியில்லாத ஏழைமக்கள் பாவநிவரணத்துக்காக ஒரு எப்பா (ephah) அளவான மெல்லிய மாவில் பத்தில் ஒருபங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாகஎன்று லேவியராகமம் 5: 11 ஆம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. எப்பா என்பது மாவையும்தானியங்களையும் அளக்கும் அளவை. அதுவும் ஒரு புஷல் (bushel) அளவும் சமமாயிருக்கும். இன்றைய அளவில் சுமார் 35 அல்லது 36 லிட்டர்கள். அதில் தசம பாகம் என்றால் 3.5 லிட்டர்கள். மூன்றரை லிட்டர் மாவில் தீரக்கூடிய நம் பாவத்திற்காக இயேசு இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு சிலுவையில் தன் உயிரைக்கொடுத்து இரத்தம் சிந்தினார் என்று கிறிஸ்தவர்கள் நம்புவது வியப்பாக இருக்கிறது!

 

பைபிளில் பாவநிவிருத்திக்காக மற்றொரு உபாயம் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால் 'மனம் திருந்துதல்'. பழைய ஏற்பாட்டில் எசேக்கியேல் 33: 11,19; எரேமியா 36: 3, ஓசியா 14: 2 ஆகிய வசனங்களில் தீயவழிகளில் சென்றவர்கள் மனம் திருந்தினால் பாவமன்னிப்பு பெறுவார்கள் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. நீங்கள் மனம் திருந்தி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள். அமா¢க்கையும்நம்பிக்கையுமே உங்கள் பலனாயிருக்கும் என்று இஸ்ரேலின் பா¢சுத்தராயிருக்கிற  ஜெகோவா ஆகிய தேவன் சொல்லுகிறார் என்று ஏசாயா 30: 15 ல் கூறப்பட்டுள்ளது. உங்கள் பாவங்கள் நிவர்த்தி செய்யப்படும்பொருட்டு நீங்கள் மனம்திருந்திக் குணப்படுங்கள் என்று அப்போஸ்தலருடைய நடபடிகள் 3: 20 ல் சொல்லப்பட்டுள்ளது. இயேசுவும் லூக்கா 5: 32 ல் நீதிமான்களையல்லபாவிகளையே மனம் திருந்துவதற்காக அழைக்கவந்தேன்என்கிறார். ஒவ்வொருவனும் மனம் திருந்தினால்  இரட்சிக்கப்படுவான் என்றால் இயேசுவின் சிலுவை மரணம் எதற்காக?

 

உலகவரலாற்றில் மிக அதிகமான படையெடுப்புகளைச் சந்தித்ததும்,  மிக அதிகமான ஆண்டுகள் அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த நாடும் எது என்று கேட்டால் அது இஸ்ரேல்தான். சுமார் 27 முறை அந்நியர் படையெடுப்பால் அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நகரம் எருசலேம்.

 

சுமார் கி.மு.435 ல் மல்கியா (Malachi) என்ற் தீர்க்கத்தா¢சி தன் புத்தகத்தை (பழைய

ஏற்பாட்டின் இறுதி புத்தகம்) எழுதி முடித்ததும் உலகின் மையமான வல்லரசு சக்திகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்தது. அது வரை பாபிலோன் சாம்ராஜ்ஜியமே வல்லரசாக விளங்கியது. அதன் பின் பாபிலோன் தோற்கடிக்கப்பட்டு மேதிய பாரசீக (Medio Persian) சாம்ராஜ்ஜியம் அமைந்தது. மேதியர் என்பவர் தற்போதைய இரானின் ஆதி குடிமக்கள். பாரசீக சாம்ரஜ்ஜியம் வளர்ந்துவருகையில்கருங்கடலின் வடக்கே மாசிடோனியா (Macedonia) என்னும் ராஜ்யத்தில் பிலிப்பு என்பவன் மக்கள் தலைவனாக எழும்பி மாசிடோனியாவை (தற்போதைய கிரேக்கம்) ஆட்சி செய்தான். அவனுடைய புதல்வன்தான் மகா அலெக்சாண்டர் (Alexander, the Great). கி.மு.330 ல்  இருபது வயதே நிரம்பிய அலக்சாண்டர் பாரசீகத்தோடு போ¡¢ட்டு ஜெயித்து கிரேக்க சாம்ரஜ்ஜியத்தை நிறுவினான். பின் ஒவ்வொரு நாடாக ஜெயித்து கிழக்கே இந்தியாவில் சிந்துநதிக்கரை வரை தன் இராஜியத்தை வி¡¢வாக்கினான். அலெக்சாண்டர் மரணமடைந்ததும்அவனுக்கு வா¡¢சு இல்லாததால்கிரேக்க சாம்ராஜ்ஜியத்தை அவனது நான்கு படைத்தளபதிகளும் தங்களுக்குள் பி¡¢த்துக்கொண்டனர். அவர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவன் தாலமி (Ptolemy), அவன் எகிப்தையும்வடக்கு ஆப்¡¢க்க நாடுகளையும் தனக்கு எடுத்துக்கொண்டான். மற்றொருவன் செல்யூக்கஸ் (Seleucus), அவன் சி¡¢யாவையும்பாலஸ்தீனத்தில் வட பகுதிகளையும் தனக்கு எடுத்துக்கொண்டான். (The 400 Silent Years by H.A.Ironside)

 

இந்த சமயத்தில்தான் கிரேக்கர்களின் கலாச்சார ஆதிக்கம் தீவிரமாக யூதர்களின் சமூகவாழ்வில் நுழைந்தது. கிரேக்க கலாச்சாரத்தை தம் நாட்டில் புகுத்துவதில் தவறில்லை என்று யூதர்களில் ஒரு சாரார் கருதினர். அவர்கள் பொதுவாக ஹெல்லெனிஸ்டுகள் (hellenists) என்று அழைக்கப்பட்டனர். தற்காலத் தமிழர்கள் ஆங்கிலத்தில்  பேசுவதைப்

பெருமையாகக் கருதுவது போலஅக்காலத்து யூதர்களில் பெரும்பாலோர் கிரேக்கமொழியில் புலமை பெறுவதைப் பெருமையாகக் கருதினர். புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் கிரேக்கமொழியில் முதலில் எழுதப்பட்டதற்கு இந்த ஹெல்லெனிஸ்டுகளதாம் காரணம். மற்றொரு சாரார் பழமைவாதிகளாய் இருந்தனர். அவர்கள் கட்சியிலுள்ளவர்கள் மோசே யூதர்களுக்குக் கொடுத்த நியாயப்பிரமாணத்தை தீவிரமாகப் பின்பற்றிஅந்நிய கலாச்சாரங்கள்  யூதர் சமூகத்தில் ஊடுருவதை வெறுப்பவர்களுமாயிருந்தனர். அவர்கள் பா¢சேயர் (Pharisees) எனப்பட்டனர். பா¢சேயர் சட்டதிட்டங்களை நிறைவேற்றுவதில் குறியாக இருந்தனரே தவிர ஏழைமக்களின் வாழ்வைச் சீரமைப்பதில் கொஞ்சமும் நாட்டம் காண்பிக்கவில்லை. சீர்திருத்தம் செய்யவந்தவர்களையும் துன்புறுத்தினர். மதத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களை ஆட்டிவைத்தனர். இயேசு கிறிஸ்துவுக்கும் பா¢சேயருக்கும் இதனாலேயே அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்தன. அவரும் பா¢சேயரைக் கபடவேஷதா¡¢கள் என்று மிகக்கடுமையாக விமா¢சித்திருக்கிறார்.

 

கிரேக்க கலாச்சாரத்தில் மோகம் கொண்டவர்கள் சதுசேயர் (Sadducees) எனத்  தனிக்கட்சியாக அறியப்பட்டார்கள். சதுசேயர் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களாயிருந்தனர். அவர்கள் பகுத்தறிவு வாதம் பேசுபவர்களாகவும்இயற்கைக்கு ஒவ்வாத நிகழ்வுகளை நம்பாதவர்களாகவும் இருந்தனர். ஏழு சகோதரர்களை ஒன்றன்பின் ஒன்றாக மணம் செய்துகொண்ட ஒரு பெண் மரணத்துக்குப்பின்  பரலோகராஜ்ஜியத்தில் யாருடைய மனைவியாக இருப்பாள் என்று இயேசுவிடம் கேட்டவர்கள் இவர்களே (மத்தேயு 22: 23 -33). உயிர்த்தெழுதலையும் இவர்கள் நம்பவில்லை. சதுசேயர்கள்  பா¢சேயரைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தனர். அவர்கள் இயேசுவின் காலத்தில் யூதர்களை ஆட்சி செய்த ரோமானியருக்குச் சாதகமாகவே நடந்துகொண்டனர். அதனால் அரசாங்கப்பதவிகளும் அவர்களுக்குக் கிடைத்தன. ரோம அரசாங்கமே எருசலேம் தேவாலயத்தின் பிரதான ஆசா¡¢யர்களாக சதுசேயர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது.

 

இந்த இரு சாரார் தவிர சீயோலாத்துகள் (Zeolots) என்ற ஒரு கூட்டத்தினரும்எஸ்ஸேனியர்

(Essenes) என்ற மற்றொரு கூட்டத்தாரும் யூத சமூகத்தில் இருந்தனர். சீயோலாத்துகள் அந்நியர் ஆதிக்கத்தை விரட்டியடிக்கவேண்டும் என்ற முனைப்பில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் புரட்சிப்படையினராக இருந்தனர். இயேசுவின் சீடர்களில் ஒருவனான சீமோன் சீயோலாத் (Simon, the Zeolot) ஆவான். எஸ்ஸேன்கள் எல்லவற்றையும் துறந்து

துறவிகளைப்போல வாழ்ந்தனர். யோவான் ஸ்ஞானகன் ஒரு எஸ்ஸேனியர் என்பர். இயேசு கிறிஸ்துவையும் எஸ்ஸேனியர் என்பாருளர்.

 

யூதசமூகத்தின் அரசியல் போக்கை நிர்ணயிப்பதில் தீர்க்கத்தா¢சிகள் (prophets) என்ற மறையியலாளர் கூட்டம் பெரும்பங்கு வகித்தது. இவர்கள் யூதர்களிடம்ஜெகோவா என்ற ஒரே தேவனைத்தான் வழிபடவேண்டும்அவர்தான் வானத்தையும் பூமியையும் படைத்த சிருஷ்டிகர்த்தாஅவர் யூதமக்களை தன் சொந்த மக்களாக வா¢த்திருக்கிறார்அவர் வேறு தெய்வங்களை வணங்கும் பிற நாட்டு மக்களை அழித்துக் கருவறுப்பார்நேரம் வரும்போது உலகம் முழுவதும் ஜெகோவாவின் ஆட்சியின் கீழ்வரும் என்றும்விக்கிரகவணக்கம் கூடாது என்றும் போதித்துஅவர்களுடைய அரசர்களையும் மூளைச்சலவை செய்து யூதர்களை பலதெய்வ வணக்கத்தை விடுத்து ஒரே தெய்வத்தை வணங்கவைக்கப் பெரும் பாடுபட்டனர்.

 

படிப்படியாக யூதர்கள் தாங்கள் வணங்கும் ஜெகோவா மட்டுமே உண்மையான சர்வவல்லமையுள்ள தேவன்பிறநாட்டவர் வணங்கும் தெய்வங்கள் யாவையும் வெறும் சிலைகள் என்று நம்பத்தொடங்கினர். தாங்கள்  ஜெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனால் அவர் தங்களை கடுமையாகத் தண்டிப்பார் என்றும்பிறநாட்டவருக்கும் தங்களுக்கும் நடக்கும் யுத்தத்தில் தாங்கள் ஜெயித்தால் அது ஜெகோவா தங்கள் பக்கம் இருந்ததனால் என்றும்தங்கள் தோல்வியுற்று வேற்றுநாட்டவருக்கு அடிமைப்பட்டிருக்க நோ¢ட்டால் அதைத் தாங்கள் இழைத்த தவறுகளுக்காக ஜெகோவா தண்டித்திருக்கிறார் என்றும் நம்பினர். ஒவ்வொரு முறை அந்நியா¢ன் கீழ் அடிமைப்பட்டிருக்கும் போதெல்லாம் யூதருக்கு அவர்கள் மதநம்பிக்கைகள் வலுப்பெற்று தங்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க ஜெகோவா ஒரு இரட்சகர்’ அல்லது 'மேசியாவை' (Messiah) அனுப்புவார் என்று நம்பத்தொடங்கினர். கிறிஸ்து (Christ) என்பது இயேசுவின் பெயர் அல்லஅவருக்கு கிறிஸ்தவர்களால் அளிக்கப்பட்ட பட்டம். அவர்களுடைய இந்த நம்பிக்கைக்கு முக்கியமான காரணம் தீர்க்கத்தா¢சிகளின் அருள்வாக்குகளைத் தவறாகப் பு¡¢ந்துகொண்டமைதான். ரோமானியர் ஆட்சியில் யூதர்கள் கி.மு.63 லிருந்து கி.பி.313 வரை அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். கிறிஸ்து பிறப்பதற்கு சிலகாலம் (சுமார் 250 ஆண்டுகள்) முன்பிருந்து இந்த மேசியா நம்பிக்கை யூதர்கள் மத்தியில் வலுவடைந்து,  யூதர் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற தாவீது (David) இராஜா வம்சத்தில் மேசியா பிறப்பார் என்று அவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கைதான் சுவிசேஷ ஆசி¡¢யர்களை இயேசுவைக் 'கிறிஸ்து'வாக மாற்றி அவரது பிறப்பு முதல் மா¢த்து உயிர்த்தெழுவது வரை அவருடைய வாழ்க்கை முழுவதையும் புராணக்கதைகள் போல இயற்கைக்கு ஒவ்வாத முறையில் எழுதவைத்து அவரை கடவுளின் குமாரனாகவும்கடவுளாகவும் காண்பிக்கவைத்தது.

 

யூதர்கள் மேசியா என்பவர் தங்களுக்கு அரசியல் விடுதலை பெற்றுத்தந்து தங்களை அரசாள்வார் என்றுதான் நம்பினார்கள். ஆனால் இயேசுவின் வாழ்க்கைச் சா¢தத்தை உருவாக்கினவர்கள் அவரை ஒரு அரசியல் இரட்சகராகக் காண்பிக்காமல்

 'ஆன்மீக இரட்சகராகமாற்றிவிட்டனர். ஏனெனில் அவர் தன் வாழ்நாளில் என்றுமே ரோமானிய அரசை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. மேலும் ரோம அரசுக்கு ஆதரவாக்வே இருந்திருக்கிறார். பா¢சேயர் அவா¢டம் வந்து ரோம அரசாங்கத்துக்கு வா¢ கொடுப்பது நியாயமோஅல்லவோ என்று கேட்டபோது கொடுங்கள் என்ற்தான் சொன்னார் (மத்தேயு 22: 15 -21). மற்றொரு சந்தர்ப்பத்தில் அவா¢டமே வா¢வசூலிப்பவன் வந்து வா¢ செலுத்தும்படிக் கேட்டபோதுஎவ்வித எதிர்ப்பும் காட்டாது தன் வா¢யை மட்டுமல்லாதுதன் சீடனான பேதுருவின் வா¢யையும் செலுத்தவைத்தார் (மத்தேயு 17: 27). ஒருமுறை கலிலேயாக் கடலின் அக்கரைக்குச் சென்று இயேசு மக்களுக்கு உபதேசித்துக்கொண்டிருக்கையில் உணவுநேரம் வந்து மக்கள் பசியாக இருந்தார்கள். இயேசு ஒரு பையன் தனக்காகக் கொண்டுவந்திருந்த ஐந்து அப்பங்களையும்இரண்டு மீன் களையும் வாங்கி அங்கேயிருந்த சுமார் ஐயாயிரம் மக்களுக்கும் பங்குவைத்து கொடுத்து வயிறாற உணவளித்தார். அவருடைய வல்லமையைக் கண்ணுற்ற மக்கள் அவர்தான் மேசியா என்று கருதி அவரை யூதர்களின் இராஜாவாக்கினால் அவர் ரோமானிய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை வாங்கிக்கொடுப்பார் என்று நினைத்தார்கள். மக்கள் தம்மைப் பிடித்துப்போக மனதாயிருக்கிறார்கள் என்பதை உணர்ந்த இயேசு உடனே அவ்விடம் விட்டு தப்பிச் சென்றார் (யோவான் 6:14,15). இந்த நிகழ்வும் இயேசுவுக்கு அரசியல் மேசியா ஆகவேண்டும் என்ற எண்ணம் சற்றும் இல்லை என்பதையே உணர்த்துகிறது.

 

இயேசுவுக்கு யோர்தான் நதிக்கரையில் ஞானஸ்நானம் அளித்த யோவான் இயேசுவைத்தான் மேசியா என்று நம்பியிருந்தார்மேலும் இவர்தான் நாம் எதிர்பார்த்த மேசியா என்று மக்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார். ரோமானிய அரசின் பிரதிநிதியாக யூதேயாவை ஆண்ட ஏரோது அந்திபாஸ்யோவான் அவருடைய கள்ளக்காதலை விமா¢சித்தார் என்பதற்காக அவரைச் சிறைலிட்டான். அதைப்பற்றிச் சற்றும் கவலைப்படாமல் தன்பாட்டுக்கு மக்களிடையே இறைபக்தியை மட்டும் பிரங்கம் செய்துகொண்டிருந்த இயேசுவைப் பற்றி யோவானுக்கே சந்தேகம் வந்துவிட்டது.  சிறையிலிருந்த அவர் தன் சீடர்களில் இருவரை அழைத்து: வருகிறவர் (மேசியா) நீர்தானாஅல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமாஎன்று  இயேசுவிடம் கேட்கும்படி அனுப்பினார் (மத்தேயு 11: 2,3). யோவான் ஸ்ஞானகன் உட்பட இயேசுவுக்கு அறிமுகமான எல்லா யூதர்களும் அவர் அரசியல் புரட்சி செய்து தம்மை ரோம அரசின் பிடியிலிருந்து விடுவிப்பார் என்றே நம்பியிருந்தார்கள். ஆனால் இயேசுவோ அதற்கு நேர் எதிர்மறையானவராக இருந்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

புதிய ஏற்பாட்டில் இயேசுவின் காலத்தில் யூதமதத்துக்கும் ரோமானிய அரசுக்குமிடையே எவ்விதக் கருத்துவேறுபாடுகளும்போராட்டங்களும் இருந்ததாக பதிவுகள் இல்லை. மாறாக யூதமத நிறுவனத்துக்கும் இயேசுவுக்குமிடையே நிலவிய கருத்துவேறுபாடுகளும்அவர்களுக்கு இயேசுவின் மீதிருந்த பகையுணர்ச்சியுமே சுவிசேஷ்ங்களின் கருத்தியலாக இருக்கிறது. ரோம ஏகாதிபத்தியத்துக்கு எதிராக யூதர்கள் எந்த விதமான எதிர்ப்பும் காட்டவில்லை. உண்மையில் அச்சமயத்தில் ரோம அரசுக்கு எதிரான புரட்சி சக்திகள் யூதா¢டையே  இயங்கிக்கொண்டிருந்தாலும்அவை மறைக்கப்பட்டு மொத்த யூதமதமும் இயேசுவை எதிர்ப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது.

 

இயேசு புரட்சி என்று ஏதோ ஒன்றைச் செய்தார் என்றால் அதுஅவர் கைது செய்யப்படுவத்ற்கு ஆறு நாட்கள் முன்னதாக எருசலேம் நகரத்துக்கு மிக அருகாமையிலுள்ள பெத்தானியா என்ற ஊ¡¢லிருந்து கோவேறு கழுதையின் மேல் ஏறி மக்கள் புடைசூழ எருசலேமுக்கு ஊர்வலமாக வந்ததுதான். மக்கள் 'ஹோசன்னா' (Hosanna) என்று கூவியபடி கைகளில் போ£ச்ச ஓலைகளை ஏந்தி மிகவும் குதூகலமாக வந்ததாக சுவிசேஷங்களில் சொல்லப்பட்டுள்ளது. எபிரேயமொழியில் 'ஹோசன்னாஎன்றால் 'எங்களைக் காப்பாற்றுங்கள்' (Save us) என்று பொருள்அதாவது 'இறைவனேஉமது மேசியா மூலம் எங்களை (அடிமைத்தளையிலிருந்து) விடுவியுங்கள்என்று எடுத்துக்கொள்ளவேண்டும். யூதர்களின் அரசர் போல் அவர் இவ்வாறு ஊர்வலம் வந்தது யூத மதத்தலைவர்களின்  கண்ணை உறுத்தியது. மேலும் அவர் எருசலேம் தேவாலயத்தில் புகுந்து அங்கு பலியிடப்படவேண்டிய ஆடு மாடுகளையும்புறாக்களையும் விற்றுக்கொண்டிருந்த கடைக்காரர்களையும்ஆலய உண்டியலில் இடுவதற்காக யூத நாணயங்களை ரோம நாணயங்களாக மாற்றும்படிக்கு காசுக்கடை வைத்திருந்தவர்களையும் சவுக்கால் அடித்து விரட்டினார். சுமார் இருபத்தைந்து கால்பந்து மைதானங்களின் பரப்பளவுள்ள எருசலேம் தேவாலயவளாகத்தில் பிரதான ஆசா¡¢யனின் கீழ் பணியாற்றிய காவலர்கள் அநேகர் இருந்தாலும் இயேசுவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில் பண்டிகைக் காலமாதலால் நாட்டின் வெவ்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் திரளாக எருசலேமில் வந்துகூடியிருந்தனர். ஆகையால் ஓரளவு மக்கள் செல்வாக்குள்ள இயேசுவை உடனே  கண்டித்தால் கலகம் ஏற்படுமோ என்று ஆசா¡¢யர்களும்பா¢சேயரும் பயந்திருந்தனர். இதுவும் ரோம அரசுக்கு எதிராக செய்யப்பட்ட செயல் அல்லமதத்தின் பெயரால் மக்களை ஆட்டிவைத்துக்கொண்டிருந்த ஆசா¡¢யர்களுக்கும் (சதுசேயர்)பா¢சேயர்களுக்கும் எதிரான போராட்டமே.

 

இயேசு தன்னுடைய பிரசங்கங்கள்  எல்லாவற்றிலும் 'தேவனுடைய இராஜ்யம் அல்லது பரலோக இராஜ்யம்' (Kingdom of God / Kingdom of Heaven) என்ற ஒன்றைப்பற்றி உபதேசித்துவந்தார். இயேசு  முதன்முதலாக மக்களிடையே தன் போதனைகளைத் தொடங்கும்போது கலிலேயாவில் வந்து  " காலம் நிறைவேறிற்றுதேவனுடைய ராஜ்யம் மிக அருகில் உள்ளது" என்று சொல்லியே ஆரம்பிக்கிறார் (மாற்கு 1: 14,15). இயேசுவின் போதனைகளில் தேவனுடைய ராஜ்யமே பிரதானச் செய்தியாக இருந்தாலும் அவர்  எங்கும் அதை நேரடியாக விளக்கமுற்பட்டதேயில்லை. ஒவ்வொருமுறையும் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி இயேசு பேசும்போதெல்லாம் வெவ்வேறு உவமேயக்கதைகளை அவர் சொல்லிவந்ததால் சீடர்களும்மக்களும் தேவனுடைய ராஜ்யம் என்ன என்பதைக் கடைசிவரைப் பு¡¢ந்துகொள்ளவேயில்லை. மேலும் புதிய ஏற்பாட்டில் யாரும் அவா¢டம் தேவனுடைய ராஜ்யம் என்றல் என்ன என்று கேட்டறிந்ததாக பதிவுகள் ஒன்றுமில்லை.

 

அப்போஸ்தலருடைய நடபடிகள் என்ற புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தை சற்று கவனமாக வாசிப்பவர்களுக்கு இயேசுவின் இலட்சியத்திற்கும் சீடர்களின் இலட்சியத்திற்குமுள்ள வேற்றுமை புலப்படும் என்று ¡¢மேரஸ் (Remarus) என்ற மறையியலாளர் கூறுகிறார்.  ஒரு புதிய மதத்தைத் தொடங்குவதைவிட யூதர்களை ஒரு உயர்ந்த நேர்மையான் வாழ்க்கைக்கும்சிறந்த ஒழுக்கநெறிக்கும் வழிப்படுத்தி அவர்களை மேம்பட்ட இறைபக்திக்கு அழைத்துச் செல்வதே இயேசுவின் நோக்கமாகயிருந்தது. இவ்வழியில் அவ்ர் தேவனுடைய ராஜ்யத்தைப் பூமியில் நிறுவிவிடலாம் என்று நம்பியிருந்தார்.  மத்தேயு 27: 46 மற்றும் மாற்கு 15: 34 லிலும் சிலுவையில் அறையப்பட்ட இயேசு "ஏலிஏலிலாமா சபக்தானி என்று மிகச் சத்தமாய் கூப்பிட்டார்" என்று சொல்லப்படுகிறது. இதற்கு 'என் தேவனேஎன் தேவனேஏன் என்னைக் கைவிட்டீர்?' என்று பொருள். இந்த ஒரு வாசகம் மட்டும் இயேசு பேசிய அராமைக் மொழியில் சொல்லப்பட்டு அதன் பொருளும் கிரேக்க மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது. தேவனுடைய ராஜ்யத்தை அடைந்துவிடலாம் என்றிருந்த இயேசுவின் நொறுக்கப்பட்ட நம்பிக்கை இந்த வார்த்தைகளில் வெளிப்படுகிறது என்று ¡¢மேரஸ் மீண்டும் கூறுகிறார்.

 

மேசியாவின் ஆட்சி வரும்போது ஜெகோவா தன் மக்களுக்கு தான் அளித்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும் இலக்கை நோக்கி பயணித்துமனம் திருந்தியவர்களை மீட்டெடுத்துநீதி வழ்ங்குவார் என்று யூதர்கள் நம்பினார்கள் . யூதர்களின் மறைநூற்களில் 'தேவனுடைய இராஜ்யம்என்ற வார்த்தைகள்  எங்குமே குறிப்பிடப்படவில்லை. ஆனால் பழைய ஏற்பாட்டில் பிற்காலத்துத் தீர்க்கத்தா¢சிகள் சிலர் எழுதிய புத்தகங்களில் மட்டும் மறைமுகமான சில குறிப்புகள் காணப்படுகின்றன. ஏசாயா 24: 23, மீகா 4: 7, ஓபதியா 21 ஆகிய வசனங்களில் ஜெகோவா சீயோன் (Zion) பர்வதத்தின் மீது இறங்கிவந்துஅங்கிருந்து  தன் மக்களுக்கு நீதி பா¢பாலித்து ஆட்சி செய்வார் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த சீயோன் பர்வதம் என்பது எருசலேமைச் சுற்றியுள்ள மலைகளில் ஒன்று.  எருசலேமின் ஆதி குடிமக்களான எபூசியர் (Jebusites)  இம்மலையின்மேல் கோட்டை கட்டி வாழ்ந்தனர். யூத அரசனாகிய தாவீது அக்கோட்டையைக் கைப்பற்றி அதில் தன் அரண்மனையைக் கட்டியெழுப்பினான். அது முதல் சீயோன் மலைக்கு 'தாவீதின் நகரம்' (City of David) என்று மற்றொரு பெயர் உண்டாயிற்று. கடவுள் மலைகளின் மேல்  (அதாவது மனிதன் வாழும் தரைமட்டத்திலிருந்து உயரமான இடங்களில்) வாசம் செய்வார் என்பது பண்டைக்காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் நம்பிக்கை. கிரேக்கநாட்டில் ஒலிம்பஸ் மலையின் மீதுதான் அவர்களுடைய கடவுள்கள் வசித்தனர். இந்தியாவிலும் இந்த நம்பிக்கை இருக்கிறது. கைலாச பர்வதத்தின்மேல் சிவனும்தெற்கில் வேங்கடமலையில் (திருப்பதி) வெங்கடாசலபதியும்கேரளத்து சபா¢மலையில் சுவாமி ஐயப்பனும்தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் அருணாசலேஷ்வரரும்குன்றுகள்தோறும் குமரக்கடவுளும் குடியிருக்கின்றார்கள்.

 

ஏசாயா 56: 1ல்  'என் இரட்சிப்பு வரவும்என் நீதி வெளிப்படவும் காலம் சமீபமாயிருக்கிறதுஎன்று ஜெகோவா கூறுகிறார். அதாவது ஜெகோவா தன்னுடைய ஆட்சியை பூமியின்மேல் நிறுவுவதற்கான காலம் விரைவில் வரவிருக்கிறது  என்று சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் சொன்னார். இயேசுவும் தேவனுடைய இராஜ்ஜியம் சமீபமாக இருக்கிறது என்று 2000 ஆண்டுகளுக்குமுன்  அதையே சொன்னார். ஆனால் காலம் இன்னும் கனியவில்லை.

 

சகா¢யா 14: 9 ல் அப்பொழுது ஜெகோவா பூமியின் மீதெங்கும் இராஜாவாக இருப்பார்அந்நாளில் 'ஒரே ஜெகோவாஇருப்பார்அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்என்று சொல்லப்பட்டுள்ளது.  பழைய ஏற்பாட்டிலுள்ள இந்த வசனம்புதிய ஏற்பாட்டுக் காலத்தில் உருவான தி¡¢த்துவக் கொள்கைக்கு எதிராக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் மூன்றாகப் பி¡¢த்து வைத்திருக்கும்  பிதாகுமாரன் மற்றும் பா¢சுத்த ஆவி என்பவர்கள் தேவனுடைய இராஜ்ஜியம் வரும்போது மீண்டும் ஒன்றாகிவிடுவார்களாகடவுளர் பெயர்கள் கூட மறைந்து ஒரே பெயராக இருக்கும் என்றல்லவா சொல்லப்படுகிறது.

 

இயேசு தேவனுடைய இரஜ்ஜியத்தைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் அநேக இடங்களில் நேரடியாகச் சொல்லாமல் உவமைகளாலே மட்டுமே உரைக்கிறார். மனிதன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்களையும்நற்குணங்களையும் மட்டுமே பரலோக இராஜ்ஜியத்தில் நுழைவதற்கான தகுதிச்சீட்டுகளாக போதிக்கிறாரே தவிர  தன்னை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எவ்விடத்திலும் சொல்லவில்லை. மனதில் களங்கமற்றவர்களாய் சிறு குழந்தைகள் போலிருப்பவர்களே பரலோகராஜ்யத்துக்குள் புகுவற்குத் தகுதியானவர்கள் என்பது இயேசுவின் கருத்து.  சிறுபிள்ளைகளை என்னிடத்தில் வரவிடுங்கள்தடை பண்ணாதிருங்கள்பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று இயேசு சொல்கிறார் (மத்தேயு 19: 14; மாற்கு 10: 14). களங்கமில்லாதவர்களும்லௌகீக இச்சைகளை விட்டொழித்தவர்களுமே பரலோகராஜ்யத்துக்குள் வரமுடியும் என்பதும் அவரது போதனையாக இருந்தது. லௌகீக ஆசைகளை விடுவதற்கு செல்வம் இடைஞ்சலாக இருப்பதால் 'ஐசுவா¢யான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும்ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்என்று இயேசு சொல்கிறார் (மாற்கு 10: 25). ஆனால் கிறிஸ்தவமதத்தை ஆரம்பத்தில் பரப்பிய பவுல் போன்றவர்கள்மனிதர்கள்  எத்தனை கீழான கி¡¢யைகள் அல்லது மேலான கி¡¢யைகள் பு¡¢ந்திருந்தாலும் பரவாயில்லைஅவையெல்லாம் கணக்கில் வராதுகிறிஸ்தவனாக மாறி இயேசுவை ஏற்றிக்கொண்டால் போதும்கர்த்தர் இரட்சிப்பார் என்ற தவறான கருத்தை பிரச்சாரம் செய்து வந்தார்கள். பவுல் தீமொத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், "அவர் நம்முடைய கி¡¢யைகளின்படி  நம்மை இரட்சியாமல்தம்முடைய தீர்மானத்தின்படியும்கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும்நம்மை இரட்சித்து பா¢சுத்த அழைப்பினாலே அழைத்தார்" என்று கூறுகிறார் (2 தீமோத்தேயு 1: 9).

 

 

பரலோகராஜ்யம் என்றாலே கிறிஸ்தவர்களிடையே குழப்பமான கருத்துக்கள் நிலவுகின்றன. மனிதர்கள் மரணத்துக்குப் பின்  நித்திரைநிலையிலேயே நியாயத்தீர்ப்புநாள் வரை இருந்து பின்னர் கர்த்தரால் எழுப்பப்பட்டு கிறிஸ்தவர்கள் மட்டும் பரமபிதாவும்இயேசுவும் வசிக்கின்றவானத்தில் எங்கோ இருக்கின்ற மோட்சராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்இயேசுவை ஏற்றுக்கொள்ளாத பிறமத்த்தினர்  யாவரும் நரகத்தில் தள்ளப்பட்டு மீளாத்துயரை அனுபவிப்பர் என்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை மோட்ச ராஜ்யம் தான் பரலோக ராஜ்யம். இயேசுவைச் சிலுவையில் அறைந்த போதுஅவரோடு சேர்த்து இரு குற்றவாளிகளை அவருக்கு இருபுறமும் சிலுவையில் அறைந்தனர். அப்பொழுது சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு குற்றவாளி இயேசுவை ஏளனம் செய்தபோது மற்றொருவன் மனம்திருந்தி அவ்ருக்காக்ப் பா¢ந்து பேசினான். அதோடு அவரை நோக்கி 'ஆண்டவரேநீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்என்று வேண்டினான். இயேசு அவனை நோக்கி இன்றைக்கு நீ என்னுடனே பரதீசில் (பரலோகராஜ்யம்) இருப்பாய்என்று வாக்களிக்கிறார் (லூக்கா 23: 42,43). அவனுக்கு மட்டும் அவன் வேண்டிக்கொண்ட உடனேயே இயேசு நியாயத்தீர்ப்பு செய்துஅவன் பாவங்களை மன்னித்து பரலோகத்துக்கு அன்றைக்கே அனுமதி வழங்கிவிட்டார். இது எந்தவகையில் தர்மம் என்று தொ¢யவில்லை.

 

ஒருமுறை இயேசு பேதுருவையும்யாக்கோபையும் யோவானையும் அழைத்துகொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய் நின்றபோது மோசேயும்எலியாவும் அங்கே வந்து அவரோடு பேசுகிறவர்களாகக் காணப்பட்டார்கள் என்று மத்தேயு 17: 1 -3 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. பலநூறு ஆண்டுகளுக்குமுன் மா¢த்துப்போன மோசேயும்எலியாவும் எங்கிருந்து வந்தார்கள்பரலோகத்திலிருந்தாஅப்படியானால் அவர்கள் நியாயத்தீர்ப்புநாள் வரைக்கும் நித்திரையில் இருக்கவேண்டியதில்லையாஇந்த நியாயத்தீர்ப்புநாள் என்பது எல்லாவர்க்கும் பொதுவானது அல்லவா?

 

நியாயத்தீர்ப்புநாளுக்கு அப்புறம்தான் பரலோகராஜ்யம் கிட்டுமெனில், "பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவேஉம்முடய ராஜ்யம் வருவதாகபரலோகத்தில் உமது சித்தம் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக" என்று தினம்தினம் ஜெபிப்பதின் பொருள் என்னஇப்போழுது பூமியிலே  யார் ஆட்சி செய்கின்றார்கள்கிறிஸ்தவர்கள் சாத்தானின் ஆட்சி என்பார்கள். பூமியையும் வானத்தையும் படைத்து அதில் எல்லா ஜீவராசிகளையும்மனிதனையும் படைத்து இறுதியில் சாத்தானிடம் எல்லாவற்றையும் ஜெகோவா  இழந்துவிட்டு நிற்கிறாரா என்னஅப்படியானால் சாத்தானின் வல்லமையும்அதிகாரமும் கடவுளைக் காட்டிலும் அதிகமானதா என்னகிறிஸ்தவர்கள் கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையில் நிகழும் ஓர் பிரபஞ்ச யுத்தத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள். அதில் ஜெகோவாவின் சார்பாக இயேசு சாத்தானுடன் போ¡¢ட்டு வெற்றி பெறுவார். அதன்பின் தேவனுடைய ராஜ்யம்  பூமியில் வரும் என்றும் நம்புகிறார்கள். அவர்களின் குழப்பம் அவர்களுக்கே பு¡¢யாது. ஒருவர்க்கொருவர் அறிமுகமில்லாத இரண்டு கிறிஸ்தவர்களிடம் பரலோக ராஜ்யம் என்றால் என்ன என்று கேட்பீர்களானால் இரண்டுபேரும் வெவ்வேறு விதமாகப் பதிலிறுப்பர்.

 

பிறிதோர் இடத்தில் இயேசுவே பரலோக ராஜ்யத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், ' தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாக வராது. இதோ இங்கே என்றும்அதோ அங்கே என்றும் சொல்லப்படுவத்ற்கும் ஏதுவிராதுஇதோதேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதேஎன்று கூறுகிறார் (லூக்கா 17: 19,20).  எல்லா மதங்களும் மனிதனின் உள்ளம் பா¢சுத்தமாக இருந்தால் இறைவன் அந்த மனிதனைத் தேடிவருவான் என்று சொல்கின்றன. அதையேதான் இயேசுவும் 'தேவனுடைய ராஜ்யம்என்று சொல்கிறார். 'பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல்நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்என்று இயேசு மீண்டும் சொல்கிறார் (மத்தேயு 5: 48). மனம் திருந்துங்கள்தெய்வத்தை அடையவேண்டுமானால் தெய்வீகத்தன்மையை நாம் ஒவ்வொருவரும் அடையவேண்டும எனபதே இதன் பொருள். தனியாக மோட்சம் என்றும் நரகம் என்றும் கிடையாது என்பதும் வெளிப்படை. கிறிஸ்தவர்களால் புறந்தள்ளப்பட்ட சுவிசேஷங்களில் ஒன்றான தோமாவின் சுவிசேஷத்தில் 3 வது வசனத்தில் இயேசு,"தேவனுடைய ராஜ்யத்தை ஆகாயத்தில் தேடுவீர்கள் என்றால் ஆகாயத்துப் பட்சிகளெல்லாம் உங்களுக்கு முன்னதாக தேவனுடைய ராஜ்யத்தைச் சென்றடைந்திருக்கும்சமுத்திரத்தில் தேடுவீர்கள் என்றால் சமுத்திரத்து மீன்களெல்லாம் உங்களுக்கு முன்னதாக தேவனுடைய ராஜ்யத்தைச் சென்றடைந்திருக்கும்" என்று சொல்கிறார்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7471
Date:
Permalink  
 

 பரலோக ராஜ்யம் அல்லது தேவனுடைய ராஜ்யம் என்பது வானவெளியிலுள்ள ஒரு இடமோஅல்லது பூமியிலுள்ள ஒரு தேசமோஅல்லது கடவுளால் ஆட்சி செய்யப்படும் ஒரு சமூகமோ அல்லஅது ஒரு கருத்தியல் (abstract), அவ்வளவுதான். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருப்பது போல கடவுள் ஒரு ராஜ்யத்தை ஆளும் அரசனைப்போல் மனிதர்களை ஆட்சி செய்யமாட்டார். அப்படிப்பட்ட எண்ணமே இறைவனைக் கீழ்மைப் படுத்துவதாகும். அவருடைய பரம்பொருள் தன்மையிலிருந்து அவரைக் கீழிறக்குவதாகும். எல்லா மதங்களிலும் சாதாரணமாக மனிதர்கள் கடவுளைப்பற்றிச் சிந்திக்கும்போது தங்களுக்குள்ள நற்குணங்கள் மற்றும் கொடிய குணங்களையெல்லாம் கடவுள் மேல் ஏற்றி தங்களைப் போலவே அவரும் நடந்துகொள்வார் என்று எதிர்பார்க்கின்றனர். தங்களைப்போலவே  கடவுளும் மனித உருவில் இருப்பார்ஆனால் தங்களைவிட மிக அதிகமான வல்லமை உடையவர் என்று நினைக்கின்றனர். மறைநூற்களிலும் அவ்வாறே எழுதிவைக்கின்றனர். இத்தகைய சிந்தனைதான் எல்லா மதங்களிலுமுள்ள புராணக்கதைகளுக்கு வித்தாகும். மனிதனை தன்னுடைய சாயலில் கடவுள் படைத்தார் என்று நம்புவதற்கும் இதுவே காரணம். குதிரைகளுக்கு மனிதனைப்போல் சிந்திக்கத் தொ¢ந்து சிருஷ்டியைபற்றி எழுத முடியுமானால் அவைகளும் கடவுள் தன் சாயலில் குதிரைகளைப் படைத்தார் என்றுதான் எழுதும் என ஓஷோ கூறுகிறார்.

 

இந்த பிரபஞ்சத்தில் சூ¡¢யனைப்போல் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அவைகளைச் சுற்றி கோடிக்கணக்கான கிரகங்கள் சுற்றுகின்றன. அவைகளில் எத்தனை இலட்சம் கிரகங்களில் பூமியைப்போல் ஜீவராசிகளும்மனிதர்களும் இருக்கின்றார்களோநமக்குத் தொ¢யாது. இவை அனைத்தும் பரம்பொருளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அப்படி இருக்கும்போது இந்த பூமியிலுள்ள மனிதர்களுக்காக மட்டும் (அதுவும் கிறிஸ்தவர்களுக்காக   மட்டும்) இறைவன் இறங்கிவந்து சிம்மாசனத்தில் அமர்ந்து ஒரு மானுட அரசனைப்போல் ஆட்சிசெய்வார் என்பது எப்படிப்பட்ட அதீதமான் கற்பனை. அதுவும் இஸ்ரேலிலுள்ள சீயோன் மலையின் மீதிருந்து கிறிஸ்தவர்களை மட்டும் ஆசீர்வதிப்பார்  என்பது மூடநம்பிக்கையன்றி வேறு என்னகிறிஸ்தவர்கள் நம்பிக்கைபடி சீயோன் மலைக்குச் சொந்தக்காரர்களான யூதர்களுக்கு இரட்சிப்பும்பரலோக ராஜ்ய பிரவேசமும் கிடையாது. ஏனெனில் அவர்கள் இயேசுவைத் தங்கள் இரட்சகராகவும்கடவுளாகவும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள மூவாயிரம் ஆண்டுகளாக ஜெகோவா நோ¢ல் இறங்கிவந்து சீயோன் மலையின் மீதிருந்து தங்களை ஆள்வார் என்று காத்திருப்பது வீண்தான்!

 

பைபிளில் தேவனுடைய ராஜ்யத்தைபற்றி இரண்டுவிதமாகக் கூறப்பட்டுள்ளது. ஒன்று பழைய ஏற்பாட்டில் யூதர்களால் நெடுங்காலமாக எதிர்பார்க்கப்படுகின்றஜெகோவா தன் ஆட்சியை இஸ்ரேலில் நிலைநிறுத்த வருகைதரும் நாள். அது இவ்வுலகுக்கு¡¢யது மற்றும் வரலாற்றுபூர்வமானது. மற்றொன்று புதிய ஏற்பாட்டில் இயேசுவும்பவுலும் உபதேசித்த தேவனுடைய ராஜ்யம் வரும் நாள். அது இவ்வுலகுக்கு¡¢யது அல்ல. மாறாக மனிதனின் இவ்வுலக வாழ்க்கை முடிந்தபின் எதிர்பார்க்கப்படும் மறுமைக்கானது. விசாரணைக்கு அழைத்துவரப் பட்டிருந்த இயேசுவை நோக்கி பிலாத்துநீ யூதருடைய இராஜாவா என்று கேட்டபோதுஇயேசு அவா¢டம்: " என் இராஜ்யம் இவ்வுலகத்திற்கு¡¢யதல்ல" என்று  பதில் சொல்கிறார் (யோவான் 18: 36).

 

ஜெகோவாவின் நாள் வரும்போது இஸ்ரேலியர் புறஇனத்தார் அனைவரையும் வென்றுசெல்வச்செழுமையோடுதாவீதின் ராஜ்யத்தை மீண்டும் அமைத்துஆனந்தக்களிப்புடன் குதூகலிக்கலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தீர்க்கத்தா¢சிகளின் அருள்வாக்கோ வேறுவிதமாக இருந்தது. 'ஜெகோவாவின் (கர்த்தருடைய) நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும். உங்களுக்கு மன்னிப்பு அல்ல நியாயத்தீர்ப்பே கிட்டும்ஆசீர்வாதம் அல்ல ஆக்கினையே கிட்டும்என்று ஆமோஸ் 5: 18 முதல் உள்ள வசனங்களில்  தீர்க்கத்தா¢சி கடுமையாக உரைக்கிறார். செப்பனியா என்ற் தீர்க்கத்தா¢சி ஒருபடி மேலே போய் பூமி முழுவதுமே ஜெகோவாவின் நாளில் அழிந்துபடும் என்கிறார். 'அந்தநாள் உக்கிரத்தின் நாள்இக்கட்டும் இடுக்கண்ணுமான நாள்அழிவும் பாழடிப்புமான நாள்இருளும் அந்தகாரமுமான நாள்ஜெகோவாவின் எ¡¢ச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்தேசத்தின் குடிகளை¦ய்ல்லாம் சடுதியில் நிர்மூலம் பண்ணுவார்என்று தீர்க்கத்தா¢சி சொல்கிறார் (செப்பனியா 1: 14 -18).

 

ஆமோஸ் மற்றும் செப்பனியா ஆகிய இரு தீர்க்கத்தா¢சிகளின் கூற்றுக்கு மாற்றாக ஏசாயா தீர்க்கத்தா¢சி சில ஆறுதல் வார்த்தைகளைக் கூறுகிறார். நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்அதில் நீங்கள் என்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்எருசலேமைக் களிகூருதலாகவும் அதன் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்என்று ஜெகோவா சொல்வதாகத் தீர்க்கத்தா¢சி  கூறுகிறார் (ஏசாயா 65: 17,18). இதன்படி ஜெகோவாவின் ராஜ்யம் என்பது இஸ்ரேல் மக்களுக்காகவே அளவெடுக்கப்பட்டு அமைக்கப் பட்ட (tailor-made) ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகிறது. பிறநாட்டவர்களான யூதரால்லாதவர்க்கு இதில் பங்களிப்பு எதுமில்லை என்பதும் வெளிப்படை. யோவான் 4: 22 ல் "இரட்சிப்பு யூதர்களுக்கு¡¢யது" என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது இயேசுவின் மூலம் வரும் இரட்சிப்பு இதர இனத்தாருக்கு இல்லை என்று பொருள். (மூலநூலான கிரேக்கமொழி புதிய ஏற்பாட்டிலும்ஆங்கில மொழி பைபிள்களிலும் (KJV) உள்ள 'இரட்சிப்பு யூதர்களுக்கு¡¢யது' (Savation is of jews) என்ற வாசகங்கள் தமிழ் பைபிளில் 'இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறதுஎனறு மோசடியாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

இயேசுவும் இஸ்ரேல் மக்களுக்காகவே  தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றி  உபதேசித்தார். கிறிஸ்தவர்கள் நம்பிகொண்டிருப்பதுபோல அவருடைய உபதேசம் உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் உ¡¢யது அல்ல. ஒரு கானானிய ஸ்தி¡£ இயேசுவிடம் வந்து தன் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்அவளுக்கு இரங்கும் என்று கெஞ்சிவேண்டிக் கொண்டபோதுஅவர்: 'காணாமல்போன ஆடுகளாகிய இஸ்ரேல் வீட்டா¡¢டத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றிமற்றபடியல்லஎன்று சொல்லி அவளுக்கு இரங்க மறுக்கிறார். (மத்தேயு 15: 22 -24). இயேசு தன் பன்னிரண்டு சீடர்களையும் மக்களுக்கு உபதேசிக்க அனுப்புகையில்அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: 'நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும்சமா¡¢யர் பட்டணங்களில் பிரவேசியாமலும்காணாமல்போன ஆடுகளாகிய இஸ்ரேல் வீட்டா¡¢டத்திற்கு போங்கள்என்பதாகும் (மத்தேயு 10: 5,6). இஸ்ரேல் மக்களைத் திருத்தி அவர்களைப் பரலோகத்திலிருக்கிற பிதாவுக்குப் பி¡¢யமானவர்களாக மாற்றவேண்டும் என்று இயேசு மிகவும் பாடுபட்டார். ஆனால் மொத்த இஸ்ரேல் மக்களும் அவரையும் அவருடைய பரலோக ராஜ்யத்தையும் நிராகா¢த்துவிட்டார்கள். அதனால் மனமுடைந்துபோன இயேசு: "எருசலேமேஎருசலேமேதீர்க்கத்தா¢சிகளை கொலைசெய்துஉன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! ... இதோஉங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்" என்று இஸ்ரேல் மக்களைச் சபித்தார் (மத்தேயு 23: 37,38). ஒருவன் உனது இடது கன்னத்தில் அடித்தால் வலது கன்னத்தையும் காட்டு என்று அகிம்சையை உபதேசித்த இயேசுவிடம் பிதாவாகிய ஜெகோவாவின் சாயலும் தொ¢கிறதல்லவா?

 

எது எப்படி இருந்தாலும் யூதர்கள் எதிர்பாத்திருக்கிற மேசியா யூதர்களை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்டுயுத்தங்களை ஒழித்துதுன்பங்களையும்அநீதியையும் உலகிலிருந்து அகற்றிஒரு புதிய உலகைப் படைப்பார் என்று அவர்களுடைய மறைநூற்கள் சொல்லுகின்றன. இதில் இயேசு கிறிஸ்து தோற்றுப்போனதால்  கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை' (Second coming of Christ) என்ற ஒரு கற்பனைக் கருத்தியலைக் கண்டுபிடித்துஅதைப் புதிய ஏற்பாட்டில் திணித்தார்கள். '

 

'கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டுதமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாம்தரம் பாவமில்லாமல் தா¢சனமாவார்’ (எபிரேயர் 9: 28). 'தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்' ( 2 பேதுரு 3: 12).

 

கிறிஸ்தவர்கள் இயேசு மீண்டும் வருவார் என்று சுமார் 1600 ஆண்டுகளுக்கும் மேலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காத்திருந்து காத்திருந்து அலுத்துப்போய் மதநம்பிக்கையை இழந்துவிடுவர்களோ என்று பயந்துபோன மறைநூல் ஆசி¡¢யர்கள்: 'கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம் போலவும்ஆயிரம் வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறதென்பதை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்என்று சமாதானம் சொல்லுகிறார்கள். (2 பேதுரு 3: 8).

 

கிறிஸ்தவமதம் இயேசு கிறிஸ்துவின் போதனைகளால் வளர்ச்சியடையவில்லைமாறாக இயேசுவின் வா¢சையான தோல்விகளை மறைக்க முற்பட்ட அப்போஸ்தலர்களின் கற்பனைப் படைப்புகளாலேயே வளர்ச்சியடைந்தது. 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard