Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு தாவீது குமாரன் – தாவீதை அறிவோம்


Guru

Status: Offline
Posts: 7387
Date:
இயேசு தாவீது குமாரன் – தாவீதை அறிவோம்
Permalink  
 


இயேசு தாவீது குமாரன் – தாவீதை அறிவோம்

ஏசுவை யூதா- தாவீது பரம்பரை என மத்தேயுவும், லூக்காவும் தன் சுவியின் கதைப்படி

 

மத்தேயுவின் ஏசு அபிரகாமிலிருந்து 41வது தலைமுறை, பெத்லஹெம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் -மேரியின் மகன்
லூக்காவின் ஏசு அபிரகாமிலிருந்து 57வது தலைமுறை, நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப் -மேரியின் மகன்

 

 
மத்தேயு6:27 தாவீதின் குமாரனே, எங்களுக்குக் கருணை காட்டும்” 
 
 
ரோமன்1: 3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்:
 

images?q=tbn:ANd9GcQwpxKgEq6785y3OehLzWoimages?q=tbn:ANd9GcTP3W3tLTsxQHIBPmRT6aw

 

  தாவிதை நாம் அறிவோம்                             Bethsabha

 

நாடு போருக்கு செல்ல,  போரில் ஈடுபடாதவன் மனைவி  பெத்சபாளை போகித்து பின்னர் அந்த வீரன் உரியாவைக் கொன்றவர் தாவீது 

 

 

2சாமுவேல்11:1 இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்கு செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இராபாவை முற்றுக்கையிட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.2 ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பதைக் தாவீது கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்ருந்தாள். 3தாவீது அவளை யார் என்று கேட்க, ஆளனுப்பினார். அவள் எலியாமின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா என்று கூறினர். 4 தாவீது தூதனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாதவிலக்கு முடிந்து அவள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தம் இல்லம் சென்றாள்.5 அப்பெண் கருவுற்று தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.

 

6 அப்பொழுது தாவீது இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பி வை என்று யோபாவுக்குச் செய்தி செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பிவைத்தார். 7 உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார்.8 பிறகு தாவீது உரியாவிடம் உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக் கொள் என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார்.9 உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக் கொண்டார். தம் வீட்டுக்குச் செல்லவில்லை. 10 உரியா தம் வீட்டுக்கு செல்லவில்லை என்று தாவீது அறிந்ததும் அவரிடம் “நீ நெடும் தொலைவிலிருந்து வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை?” என்று கேட்டார். 11 அதற்கு உரியா தாவீதிடம் “பேழையும், இஸ்ரயேலரும் யூதாவினரும் கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர். என் தலைவர் யோவாபும், என் தலைவரின் பணியாளர்களும் திறந்த வெளிகளில் தங்கியிருக்கின்றனர். நான் மட்டும் என் வீட்டிற்குச் சென்று உண்டு குடித்து என் மனைவியோடு இருப்பேனா? உம் மேலும் உம் உயிர் மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யவே மாட்டேன்” என்று சொன்னார்.12 தாவீது உரியாவிடம், “இன்னும் இங்கேயே தங்கு. நாளை உன்னை அனுப்பி வைக்கிறேன்” என்றார். அன்றும் மறுநாளும் உரியா எருசலேமிலேயே தங்கினார். 14 காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார். 15அம்மடலில் அவர், “உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டு பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். 16யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த போது வலிமைமிகு எதிரிகள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார். 17 நகரின் ஆள்கள் புறப்பட்டு வந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவருள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.  

 



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

தாவீது – வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன்
1இராஜாக்கள்4:29 கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் கடற்கரை மணலெனப் பரந்த அறிவாற்றலையும் அளித்திருந்தார். 34 சாலமோனின் ஞானத்தைக் கேட்கப் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர் அவரை நாடி வந்தனர். அவரது ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்ற பின்னர் அனைவரும் அவரைத் தேடி வந்தனர்.

தன்னிடம் படைபலம் வர ஒருவன் சொத்தை அபகரிக்க முயல, பின் அவன் மனைவி மயங்க நாபால் என்னும் அவனை கொலை செய்து நாபாலின் மனைவி அபிகாயில் மணந்தார்.

1சாமுவேல் 25:2 கர்மேலில் சொத்துக்களை உடைய ஒருவன் மாவோனில் இருந்தான். அம் மனிதன் செல்வம் மிக்கவன். அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரித்துக் கொண்டிருந்தான்.3 அம் மனிதன் பெயர் நாபால், அவன் மனைவியின் பெயர் அபிகாயில், அப்பெண் மிகுந்த அறிவும் அழகும் வாய்ந்தவள்.
9 தாவீதின் இளைஞர்கள் சென்ற நாபாலிடம் தாவீதின் பெயரால் அவை யாவற்றiயும் கூறிக் காத்திருந்தனர்.10 நாபால் தாவீதின் இளைஞர்களிடம், தாவீது என்பவன் யார்? ஈசாயின் மகன் யார்? தங்கள் தலைவர்களைவிட்டுப் பிரிந்து செல்லும் பணியாளர் பலர் உள்ளனர்.11 என் அப்பங்களையும் தண்ணீரையும் உரோமம் கத்திரிப்பவர்களுக்காக நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியும் எடுத்து எங்கிருந்தோ வந்த வந்த மனிதர்களுக்கு நான் கொடுப்பதா? என்று பதிலளித்தான்.

 

23அபிகாயில் தாவீதைப் பார்த்த போது கழுதையினின்று வேகமாக இறங்கி அவர் முன் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கினார். .26 இப்பொழுது, என் தலைவரே, நீர் இரத்தத்தைச் சிந்தாதவாறு, நீர் உம் கைகளினால் பழிக்குப் பழி வாங்காதவாறும் உம்மைத் தடுத்தவர் ஆண்டவரே! வாழும் ஆண்டவர் மேலும் உம் இருக்கையின் மேலும் ஆணை! உம் பகைவர்களும் என் தலைவராகிய உமக்கு தீங்கு செய்ய முயல்பவர்களும் நாபாலைப்போல் ஆவார்களாக!35 பின்பு அபிகாலில் தாம் கொண்டு வந்ததை தாவீது அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவரை நோக்கி, சமாதனத்துடன் நீ உன் வீட்டுக்குப் போ! உனக்குச் செவிக் கொடுத்து உன் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன் என்றார்.36 அபிகாலில் நாபாலிடம் வந்த பொழுது அவன் அரசவிருந்துக்கு ஒப்பான விருந்தொன்றை தன் வீட்டில் அனுபவித்துக் கொண்டிருந்தான்: அவன் உள்ளம் களிப்புற்றிருந்தது அவன் மிகுந்த குடிப் போதையில் இருந்ததால் பொழுது விடியும் வரை அவர் எதுவும் பேசாதிருந்தார்.37 காலையில் நாபால் திராட்சை மதுவின் போதை தெளிந்தப் பின் அவன் மனைவி இவையனைத்தையும் அவனிடம் கூறினார். அப்பொழுது அவன் அதிர்ச்சிக்குள்ளாகிய கல்லைப் போல் செயலற்றவன் ஆனான்.38 ஆண்டவர் நாபாலை வதைத்ததால் சுமார் பத்துநாள்களுக்குபின் அவன் இறந்தான்.39 நாபால் இறந்து விட்டதைக் தாவீது கேள்வியுற்றபோது, நாபால் கையினால் எனக்கு வந்த இழிவுக்கு எதிராக நீதி வழங்கி தம் அடியானைத் தீமை செய்யாதவாறு காப்பாற்றிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! 40 தாவீது பணியாளர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாலிடம் வந்து அவரை நோக்கி, தாவீது உம்மை மணந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக எங்களை உங்களிடம் அனுப்பினார் என்றார்.41 அவர் எழுந்து தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கி, இதோ! உம் அடிமைகளாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக! என்றாள்.42 உடனே அபிகாயில் ஒரு கழுதை மேல் ஏறி விரைந்துச் சென்றார். பணிப்பெண்கள் ஐவர் அவருடன் சென்றார்கள்: அவர் தாவீது தூதர்களை பின் தொடர்ந்து அவருக்கு மனைவியானார். 

ராஜா சவுலின் திருமணமான மனவி மீக்காளை மணக்க 200 பிலிஸ்தியரைக் கொன்று ஆண்குறி நுனித்தோலைக் கொடுத்து பல்தி என்பவன் மனைவி மீக்காளை அபகரித்தான்.

2சாமுவேல் 3:  13 தாவீது நல்லது உன்னோடு நான் உடன்படிக்கை செய்து கொள்கிறேன். ஆனால் உன்னிடமிருந்து நான் ஒன்று கேட்கிறேன்: அதாவது நீ என்னுடன் வரும் போது சவுலின் மகள் மீக்காலை கொண்டு வரவேண்டும். இல்லையெனில் என் முகத்தில் விழிக்காதே என்று மறுமொழி கூறினான்.14 அதற்குபின் தாவீது சவுலின் மகன் இஸ்பொசேத்திடம் தூதனுப்பி, பெலிஸ்தியர் நூறு பேரின் நுனித் தோலை ஈடாகக் கொடுத்து நான் மணந்த என் மீக்காலை எனக்குக் கொடு என்ற கேட்டார்.15 இஸ்பொசேத்து ஆளனுப்பி அவளை அவள் கணவன் இலாயிசின் மகன் பல்தியேலிடமிருந்து கொண்டுவரச் செய்தான்.16அவள் கணவனோ அழுது கொண்டே அவளைத் தொடர்ந்து பகுரிம் வரை சென்றான்.

 

 

தாவீது – தன் காரியங்களுக்கு கர்த்தரிடம்மன்னிப்பு பெற நடுத்தெருவில் பிற பெண்கள்முன் நிர்வாணமாக நடனமாடி கர்த்தரைமகிழ்வித்தார்.

 

2சாமுவேல்6:20 தாவீது தம் வீட்டாருக்கு ஆசி வழங்க வந்தார். அப்போது சவுலின் மகள் மீக்கால் தாவீதை எதிர் கொண்டு, இழிந்தவன் ஒருவன் வெட்கமின்றித் தன் ஆடைகளைக் கழட்டுவது போல, இஸ்ரயேலின் அரசர் தன் பணியாளரின் பணிப்பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளைக் கழற்றி இன்று பெருமைக் கொண்டாரே! என்று ஏளனம்21 ஆண்டவரின் மக்கள் மீதும் இஸ்ரயேல் மீதும் தலைவனாக இருக்குமாறு உன் தந்தையும் அவர் தம் வீட்டாரையும் ஒதுக்கிட்டு, என்னைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் திருமுன் நான் ஆடினேன்: இன்னும் ஆடுவேன்.22 நான் என்னை இன்னும் என்னைக் கடையவனாக்கிக் கொள்வேன்: நீ குறிப்பிட்ட பெண்களுக்கு முன்பா நான் பெருமை அடைவேன் என்று தாவீது மீக்காலிடம் கூறினார்.23 சவுலின் மகள் மீக்காலுக்குச் சாகும் வரை குழந்தைப் பேறு கிட்டவில்லை.  
திருவள்ளுவர் அடுத்தவர் மனைவியை பார்ப்பவர் பேடி என்கிறார். 
 
குறள் 148: பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு 
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
மு.வ உரை:

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

பைபிள் கர்த்தர் சட்டம் என்ன சொல்கிறது  

 

உபாகமம் 22:22 ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு படுத்திருப்பது கண்டு பிடிக்கப் பட்டால், அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவனும், இருவரும் சாவர். இவ்வாறு இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்று.

அண்ணன் இறந்தால் தம்பி அண்ணியை மணக்க வேண்டும் என்பது கர்த்தர் சட்டம். கொடியவன் ஏரை கர்த்தர் கொன்றிட, தம்பி ஓனான்  அண்ணியுடன் உடலுறவு கொண்டு, அண்ணி பெண் குறியில் விந்து வெளியாகுமுன் நீக்கி கீழேவிட்ட யூதா மகன் ஓனானை கர்த்தர் கொன்றார் (ஆதி 38:710). 

2சாமுவேல்16:  20 அப்சலோம் நபி(தீர்க்கர்) அகிதோபலிடம், நான் என்ன செய்யலாம் என்று அறிவுரை கூறு என்று கேட்டான்.21அகிதோபல் அப்சலோமிடம், என் தந்தை தன் வீட்டைக் காக்க இங்கு விட்டுச் சென்றுள்ள வைப்பாட்டியரிடம் சென்று அவர்களோடு உறவு கொள். நீ உன் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டாய் என்று இஸ்ரயேல் அனைவரும் கேள்விப்படுவர். உன்னொடு இருப்பவர் கை ஓங்கும் என்றான்.22 அப்சலோமுக்காக மாடியில் ஒரு கூடாரம் அடைக்கப்பட்டது. இஸ்ரயேல் முழுவதும் அறிய, அப்சலோம் தன் தந்தை தாவீது வைப்பாட்டியரோடு உறவு கொண்டான்.23 அந்நாளில் அகிதோபலின் ஆலோசனை கடவுளின் வாக்காக கருதப்பட்டது. இவ்வாறு தான் தாவீது அப்சலோமும் அகதோபலின் அனைத்து ஆலோசனைகளையும் கருதினர்.

தாவீதின் தன்மையையும் கர்த்தர் செய்ததுவும் இதுவே. இந்த தாவிதின் குமாரன் ஏசு



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard