Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளில் பிறப்பு


Guru

Status: Offline
Posts: 7467
Date:
திருக்குறளில் பிறப்பு
Permalink  
 


திருக்குறளில் பிறப்பு

 
எழுபிறப்பு: மனிதன் மீண்டும் பிறந்து எழுந்து வாழ்வதே மிகப்பெறும் துன்பமாகும்
Thiruvalluvar-Excavated-Idol.png


 
உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு.                                  குறள் 339:                                                     மரணம் எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
 
 
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 
வாழ்நாள் வழியடைக்கும் கல்.                                     குறள் 38:                                                            வீணாகும் நாளே இல்லை என எல்லா நாளும் ஒருவன் செய்வான் ஆயின், அது அவன் மீண்டும் மீண்டும் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.
 
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் 
செம்பொருள் காண்பது அறிவு.                             குறள் 358:                                            பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
 
 
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 
மற்றீண்டு வாரா நெறி.                                                       குறள் 356:                                                                 கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர், திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியை அடைவர்.
 
 
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.                                         குறள் 361:   
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற   மீண்டும்    மீண்டும் பிறக்கும் பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து ஆசை.
 
                                                                                                                      வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது                                                         வேண்டாமை வேண்ட வரும்.                                                குறள் 362                    ஒருவன் ஒன்றை விரும்புவதனால் மீண்டும் மீண்டும் பிறக்கும்படி இல்லாது  பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது  ஆசை அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
 
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.                                                  குறள் 370:                                                                               ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு பிறவா நிலையில் வாழும் இயல்பைக் கொடுக்கும்.
 
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.                                     குறள் 357:                                       ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், அப்பால்களுக்குள் நான்காவது பாலாக "வீடு" என்பதைக் காணும் முயற்சி பழைய உரையாசிரியர்களிடம் தெரிகிறது. இதைப் பரிதிப்பெருமாளும் பரிமேலழகரும் செய்வதற்கு முன்னரே மணக்குடவர் செய்துள்ளார். அவரது உரையில்,
புருடார்த்தமாகிய தன்மார்த்த காம மோட்சங்களுள் முதன் மூன்றனையும் வழுவாதொழுகவே மோட்சம் எய்தலான், அதற்கு வேறு வகுத்துக் கூற வேண்டுவது இன்மையின், அஃது ஒழித்துத் தன்மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பெயர் கூறுவார்...
என்று மணக்குடவர் விளக்குகிறார்.
அதுபோலவே பழைய உரையாசிரியர் பரிப்பெருமாளும் கூறுகின்றார்:

உலகத்து மக்கட்கு உறுதி பயத்தல் காரணமாகப் பல வகைப்பட்ட சமய நூல்கள் எல்லாவற்றுள்ளும் துணிந்துரைத்த அறம் பொருள் இன்பம் வீடு நான்கினையும் அருங்கினமுகத்து உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்; அவற்றுள் வீடாவது அறஞ்செய்தாரது பயனாதலின் அவ்வீடு பேற்றை அறத்தினுள் அடக்கி அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்றார்.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

பிறக்கும் (1)
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
  சொல் பிறக்கும் சோர்வு தரும் - குறள் 105:4
  
 பிறங்கா (1)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2
பிறத்தல் (3)
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
  பிறத்தல் அதனான் வரும் - குறள் 31:3
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
  பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
  பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:2
 
  பிறந்த (2)
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
  குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
  இல் ஆண்மை ஆக்கி கொளல் - குறள் 103:6
 
 பிறந்தார் (4)
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
  இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
  குன்றுவ செய்தல் இலர் - குறள் 96:4
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
  குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9
 
 பிறந்தார்-கண் (2)
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
  செப்பமும் நாணும் ஒருங்கு - குறள் 96:1
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
  மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7
 
 பிறந்து (2)
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
  நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
  கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4
 
  பிறந்தும் (1)
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
  
 பிறப்பில் (1)
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
  கண் நிறை நீர் கொண்டனள் - குறள் 132:5
 
 பிறப்பு (11)
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
  இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
  பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
  விழிப்பது போலும் பிறப்பு - குறள் 34:9
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
  உற்றார்க்கு உடம்பும் மிகை - குறள் 35:5
பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
  நிலையாமை காணப்படும் - குறள் 35:9
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 36:1
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
  பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு - குறள் 36:7
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
  செம் பொருள் காண்பது அறிவு - குறள் 36:8
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
  தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
  செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 101:2
 
 பிறப்பும் (2)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

எல்லா உயிர்க்கும் என்கையில் மெய்ஞான மரபில் உயிர்னங்களை பிறப்பு அடிப்படையில் நான்கு வகையாய் -அண்டகம், உற்பிசம், சராவுசம், சுவேதசம் என ஆகும்.

அண்டகம் என்பது முட்டையில் பிறந்து பறவையாக மாறும் உயிர் இதை வள்ளுவர்.

பகல் வெல்லும் கூகையைக் காக்கை’ (481)

 

உற்பிசம்- வேர் மற்றும் விதையில் இர்ந்து முளைக்கும் நகரா தாவரங்கள்( );

‘இளையதாய் முள்மரம் கொல்க’ 879 

வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்க்காது (78), வெள்ளத்து அனைய மலர் நீட்டம் (595) , நீரின்றி வாடிய வள்ளிக்கொடி(1304) முகை மொக்குள் உள்ளது நாற்றம் (1274) இணர் ஊழ்த்தும் நாறா மலர் (650)

சராவுசம் தாயின் கர்ப்பப் பையில் இருந்து பிறக்கும் உயிர்கள் - மனிதனும் மற்ற பாலூட்டிகளும்(486);

‘முதலை நெடும்புனலுள் வெல்லும் ; அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற வெல்லும்’ (495)

‘பரியது , கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலித் தாக்குறின் ‘ (599);

 

சுவேதசம் வேர்வையிலிருந்து தோன்றுவதான புழு பூச்சிகள்(77)

புள்ளினங்களையும்  என்பிலதனை வெயில் போல (77)

ஓரறிவுடைய உயிர் முதல் ஆறறிவுயிர் மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் பிறப்பால் ஒத்தன என்று வலியுறுத்த முற்படுகிறார்

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்..’ (322)

‘மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை ‘(244)


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
  மாயும் என் மாயா உயிர் - குறள் 1230
(பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் 
பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள் 68
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற
உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப தன் உயிர் அஞ்சும் வினை - குறள் 244
தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து
உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - குறள் 268
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள்
எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும். தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான்
என்-கொலோ மன் உயிர்க்கு இன்னா செயல் - குறள் 318
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் - குறள் 457
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை
(அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது
இன்றேல் மண் புக்கு மாய்வது மன் - குறள் 100:6
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா என்
அல்லது இல்லை துணை - குறள் 117:8
லகத்து அனைத்து உயிர்களையும் துயிலச் செய்து அன்பு காட்டும்
இரவுக்கு என்னை விட்டால் வேறு துணை இல்லை என்பது இக்குறட்கருத்து.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

எழுமை என்ற சொல்லுக்கு ஏழு என்பது பொருள். எழுபிறப்பும் என்ற் சொல் ஏழு பிறப்பு என்ற பொருள் தரும். எழுமை எழுபிறப்பும் என அதையே அழுத்தம் பெற இரட்டித்துக் கூறப்பட்டது.
எழுபிறப்பு என்பது எழுவகைப் பிறப்பைக் குறிக்கும். இது செடிகொடிகள், ஊர்வன, நீர் வாழ்வன, பறப
்பன, விலங்கு, மானுடர், தேவர் என்பனவற்றைக் குறிக்கும் என்பர். எழுபிறப்பு என்பதற்கு இனிவரும் பிறப்பு அதாவது இனி உண்டாகப்போகிற பிறவி என்று பொருள் கூறுவோரும் உண்டு. இனிவரும் பிறப்பு அல்லது எழுந்த பிறப்பு என்றாலும் இரண்டுமே பிறப்பு-இறப்புத் தொடர்கள் அதாவது மறுபிறவி, பலபிறவி, பற்றிக் கூறும் சமயக்கருத்து பற்றியது ஆகும். ஒருவர் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு பல பிறவிகள் உண்டு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உண்டானது..
எழுமை எழுபிறப்பு என்பது பலநிலை வாய்ந்த அல்லது பலதன்மை கொண்ட பல தலைமுறை' என்று பொருள் தருகிறது என்றும் கூறுவர்.. .

ஏழு பிறப்பென்று எழுதி வைத்தனர்
கீழுலகு மேலுலகு வானுலகு மூன்றுலகு
கூழு குடிப்பது ஒரு பிறப்பு குனிந்திருப்பது ஒன்று

பாழும் பிறப்புகள் பலப்பல வினைப்பயனால்

செல்வம் சேர்க்கும் பேராசைக்காரர்கள்
கல்வியைச் சேர்க்கத் தயங்குகின்றனர்
கல்லையும் தங்கமாக்கத் துடிக்கின்றனர்
சொல்லில் உண்மை இல்லாதானாரே

முற்பிறப்பு ஞாபகங்கள் நினைவானால்
தற்பிறப்பு தனிப்பிறப்பாய்க் குழப்பமாகும்
கற்பது ஒரு பிறப்பு கல்லாதது ஒருபிறப்பு
நிற்பது ஆறறிவில் இருந்து ஓரறிவுவரை

பிறப்புக்குப் பிறப்பு செல்வம் சேர்க்கலாமெனில்
இறப்பன்றும் செல்வம் சேர்ப்பர் அறிவீலிகள்
சிறப்பான வாழ்வு வாழத் துணியாதவரவர்
திறவுகோலைக் கையோடு கொண்டுசெல்வர்

அன்பெனும் மென்மை உளம் நிரம்பினால்
என்றும் பிறப்பு தொடராதென்பர் முன்னோர்
குன்றென சுயநலமற்ற சிந்தையாளர்க்கு
சென்று விடும் மற்ற பிறப்புகள் வந்தவழியே.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 முத்தி நால்வகை; சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன. சிவலோகத்தே வைத்தல், சாலோக பதவியளித்தல். பூவார் கழற்கே புகவிடுதல், சாயுச்சிய பதவியளித்தலாம். சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்க. பிறவி வேண்டாதவர் உலகப் போகங்களில் மனத்தைச் செலுத்தாது இறைவன் திருவுள்ளக் குறிப்பின்வண்ணம் நடந்தால் மீண்டு வாரா வழியாகிய சாயுச்சிய பதவி கிட்டும் என்பதாம். இதனால், இறைவன் தன் அடியார்க்குப் பரமுத்தியை நல்குவான் என்பது கூறப்பட்டது.
1. சாலோகம் – இறைவன் இடத்தில் இருக்கும் நிலை. பூவுலகம் விட்டுப்போனபின் தேவர் உலகத்தில் வாழ்வதை சாலோகம் என்பர்.
2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.கடவுளின் அருகே இருப்பதை சாமீபம் என்பார்கள்.
3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு. கடவுளின் உருவினைப் பெற்று வாழ்வதை சாரூபம் என்றும்;
4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை.கடவுளோடு இரண்டறக்கலந்து வாழ்வதை சாயுஜ்ஜியம் என்றும் சொல்வர்.

யாத்திரைப் பத்து/உரை 13-16

 
Jump to navigationJump to search

அடியா ரானீர் எல்லீரும்

அகல விடுமின் விளையாட்டைக்

கடிசே ரடியே வந்தடைந்து

கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்

செடிசேர் உடலைச் செலநீக்கிச்

சிவலோ கத்தே நமைவைப்பான்

பொடிச்சேர் மேனிப் புயங்கன்தன்

பூவார் கழற்கே புகவிடுமே.

 

பதப்பொருள் :

அடியார் ஆனிர் எல்லீரும் - அடியாராகிய நீங்கள் எல்லீரும், விளையாட்டை - உலக இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுது போக்குகின்ற நிலையை, அகல விடுமின் - நீங்கிப் போமாறு விட்டு ஒழியுங்கள்; கடிசேர் அடியே - மணம் தங்கிய திருவடியையே, வந்து அடைந்து - வந்து பொருந்தி, திருக்குறிப்பை - திருவுள்ளக் குறிப்பை, கடைக்கொண்டு இருமின் - உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள்; பொடி சேர் மேனி - திருவெண்ணீறு பூசப்பெற்ற திருமேனியையுடைய, புயங்கன் - பாம்பணிந்த பெருமான், செடி சேர் உடலை - குற்றம் பொருந்திய உடம்பை, செல நீக்கி - போகும்படி நீக்கி, சிவலோகத்தே - சிவபுரத்தே, நமைவைப்பான் - நம்மை வைப்பான், தன் பூ ஆர் கழற்கே - தனது தாமரை மலர் போன்ற திருவடி நிழலிலே, புகவிடும் - புகும்படி செய்வான்.

விளக்கம் :

முத்தி நால்வகை; சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன. சிவலோகத்தே வைத்தல், சாலோக பதவியளித்தல். பூவார் கழற்கே புகவிடுதல், சாயுச்சிய பதவியளித்தலாம். சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்க. பிறவி வேண்டாதவர் உலகப் போகங்களில் மனத்தைச் செலுத்தாது இறைவன் திருவுள்ளக் குறிப்பின்வண்ணம் நடந்தால் மீண்டு வாரா வழியாகிய சாயுச்சிய பதவி கிட்டும் என்பதாம்.

இதனால், இறைவன் தன் அடியார்க்குப் பரமுத்தியை நல்குவான் என்பது கூறப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

உயிர் இப்பிறவில் ஏற்று உள்ளதே மனித உடல், உடம்பு நிலையற்றது என்பதை வள்ளுவர்

உடம்பு

உயிர் வாழ்கின்ற கூட்டுக்கு உடல் என்று பெயர். உயிரை ஆடையாக உடுத்திக் கொண்டு இருப்பதால் அதற்கு உடல் என்று பெயர் வந்தது.

இந்த உடலுக்கு எத்தனை, எத்தனை பெயர்கள் இருக்கின்றன. சரீரம், உடம்பு, மெய், காயம், தேசம், யாக்கை, மேனி, பொன்.

'உடல் என்றாலே 'மாறுபாடு என்பது அர்த்தம். இந்தச் சொல் காக்கின்ற இரகசியம் என்னவென்றால், உலகத்திலே நடமாடுகின்ற உடலானது, இயற்கைக்கு ஏற்ப மாறுபடும், இயற்கையைப் போல மாறுபடும். இயற்கைக்காக மாறுபடும் என்பதுதான்.

ஒரேநிலையில் உடல் எப்பொழுதும் இருக்காது. அது பிநாடிக்கு நொடி, நிமிடத்திற்கு நிமிடம், பொழுதுக்குப் பொழுது மாறிக் கொண்டே வரும். மருகிக் கொண்டே

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு. குறள் 73: அன்புடைமை

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு.  குறள் 338: நிலையாமை

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.   குறள் 258: புலான்மறுத்தல்



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

  அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.          குறள் 80: அன்புடைமை

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.     குறள் 339: நிலையாமை

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு.         குறள் 340: நிலையாமை

மணக்குடவர் உரை: தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

(அதிகாரம்:கூடாஒழுக்கம் குறள் எண்:271)

பொழிப்பு (மு வரதராசன்): வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

 

பெரும்பாலோர் 'வஞ்சனை பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும்' என்ற பொருளில் உரை செய்தனர்.
பரிமேலழகரது 'உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம்முள்ளே நகுதலின், 'அகத்தே நகும்' என்ற பொருளே சிறந்து நிற்கிறது.

நிலம், தீ, நீர், காற்று வானம் என்ற ஐந்து பூதங்கள் ஒருவனது செயல்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு இருப்பதால், அவன் மற்றவர்கள் யாருக்கும் தெரியாமல் செய்கிறோம் என்று எண்ணி தீச்செயல்களில் ஈடுபட்டால் பூதங்கள் ஐந்தும் தமக்குள்ளேயே சிரிக்கும்.

வஞ்சக மனமுடையானது மறைந்த ஒழுக்கத்தைக் கண்டு, ஐம்பூதங்களும் தம்முள்ளே சிரிக்கும் என்பது இக்குறட்கருத்து



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. 
குறள் 36: அறன்வலியுறுத்தல்

மணக்குடவர் உரை:பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.

மு. வரதராசன் உரை: இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். குறள் 501: தெரிந்துதெளிதல்
மணக்குடவர் உரை: அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து, ஆராய்ந்தபின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான். முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டுமென்றார் பின்பு தேறப்படுமென்றார். மு. வரதராசன் உரை: அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
  கோடியும் அல்ல பல - குறள் 34:7 
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
  எழுபது கோடி உறும் - குறள் 64:9 அமைச்சு குறள் 639:

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் 

எழுபது கோடி உறும்.

மணக்குடவர் உரை: குற்றப்பட எண்ணும் அமைச்சரில் எழுபது கோடி மடங்கு நல்லர், உட்பகையாய்த் தன் னருகிலிருப்பவர். இவை யிரண்டும் மந்திரிகளுள் விடப்படுவாரது இலக்கணங் கூறின.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. அவர்வயின்விதும்பல் குறள் 1269:
மணக்குடவர் உரை:நெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் போலச் செல்கின்றது.
மு. கருணாநிதி உரை:நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை: தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து. குறள் 1278: குறிப்பறிவுறுத்தல்.
மணக்குடவர் உரை:எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம். இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி
இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.
சாலமன் பாப்பையா உரை: என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு  நாள்களாகிவிட்டன.
மு. கருணாநிதி உரை:நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. குறள் 459: சிற்றினஞ்சேராமை
மணக்குடவர் உரை: மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும். அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது.
சாலமன் பாப்பையா உரை: ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - குறள் 91:4 பெண்வழிச்சேறல்.
மணக்குடவர் உரை: மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை. இது பொருள் செய்ய மாட்டானென்றது.
மு. வரதராசன் உரை: மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை. சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - குறள் :98 இனியவைகூறல்
மணக்குடவர் உரை: புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை: பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
இன்மை என ஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும் - குறள் 1042 நல்குரவு
 மணக்குடவர் உரை: நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன் இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும். தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.
 மு. வரதராசன் உரை: வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard