Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவரின் காலம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
திருவள்ளுவரின் காலம்
Permalink  
 


திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலம்

 
திருக்குறள் ஒன்றே முக்கால் அடியில் உலகக் கருத்துகளை உள்ளடக்கிய அருமையான நூல் இது. தமிழில் உள்ள அறநூல்களுள் தலை சிறந்ததும் திருக்குறளாகும். ஈரடி வெண்பாகுறள் வெண்பா எனப்படும். அவ்வெண்பாவால் ஆன நூலும் ஆகுபெயராகக் குறள் என்று பெயர் பெற்றது. அதன் சிறப்பு நோக்கித் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருக்குறள் என்று வழங்கி வருகின்றோம்.
val.png

 
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு என்னும் பெயர் பெற்றன. இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவது திருக்குறள். இந்த நூலை இயற்றியவர் திருவள்ளுவர். 
 
திருக்குறள் மிகவும் எளிமையான நடைஇயற்றப்பட்டு 1250 ஆண்டுகள் பின்பும் இன்றைக்கும் படிப்போர் புரிந்து கொள்ளும் எளிமை.  அதற்கு முந்தைய சங்க இலக்கியம் போல கடுமையான நடைபுரியாத பல சொற்கள் என்று இல்லாமல் குறள் வெண்பாவில் இயற்றப் பட்டது குறள். திருவள்ளுவர்  காலம் தற்போது காலம் 7 - 8ம் நுற்றாண்டு என்பதில் நடுநிலையாளர்களுள் ஒரு கருத்து ஒற்றுமை வருகிறது.
 
திருவள்ளுவர் காலம் பற்றிய ஆய்வு முடிவுகள் நடுநிலையாய் செய்த ஜி.யு.போப் 10ம் நூற்றாண்டு என்பதாய், பேரறிஞர் வையாபுரி பிள்ளைஇவர்  வள்ளுவர் காலம் குறித்ததை600 ஒட்டி என்றார்.
 
திருக்குறளில் உள்ள பல சங்கப்பாடல் தொடர்களை தலைகீழாய் குறளை சங்கப் புலவர்கள் பயன்படுத்தியதாய் கூறித் திரிந்த வள்ளுவரால் பாழ்செய்யும் பல்குழு (குறள் 735) எனும் பிரிவினைவாத சக்திகள் அவரை கடுமையாய் விமர்சித்தனர். 
 
தற்போது பன்னாட்டு பல்கலைக் கழக நெறியில் ஆய்வுகள் திருவள்ளுவர் காலம் பொ.ஆ.800ஐ ஒட்டி என கருத்தொற்றுமை உள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக் கழக பேராசிரியர்  டேவிட் ஷுல்மன் பாண்டியர் - பல்லவர் காலம் இன்னும் பின் தள்ளும்படி குறிப்பு காட்டி உள்ளார்.
 
திருவள்ளுவர் காலத்தை மிகவும் பின் தள்ளியோரின் தரவுகள் என்ன? அவை நடுநிலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட நேர்மையான காரணங்கள் என்ன
1.முச்சங்கம் இருந்தது என்ற தொனமக் கதை நம்பிக்கை.
மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது எனும் ஒரு தொன்மக் கதை  மூன்று கடற்கோள்கள் இறையனார் களவியல் ஆசிரியர் உரையில் புனைந்துள்ளதை இன்று அறிவு சார் ஆய்வுலகம் முழுமையாய் நிராகரித்துவிட்டது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லைபுலவர் பட்டியல் எல்லாமே கற்பனைகள் என தூக்கி எறிந்து பல காலம் ஆகிவிட்டது.
 
சங்ககால மன்னர் காலநிலை  வரலாறு-   வி.பி.புருஷோத்தம்;   
அணிந்துரை- சிலம்பொலி செல்லப்பன். இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.   பாராட்டுரை- பேராசிரியர். சாலை- இளந்திரையன்.
நூலின் ஆய்வின் விஸ்தீரணம் கண்டு இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- இந்நூலிற்கு தமிழக அரசு சார்பாக வேளியீடு மான்யம் பெற்று தந்தார்.
 
53.png
 
 
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி.ப். எட்டாம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்கக் கதையை நம்பி, சங்ககாலத்தைக் கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். -பக்கம்30 
8ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை- என்னும் நூலில் ஒரே ஒரு பாடல் மட்டும் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதை. இதில் முதல்- இடைச் சங்கப் புலவர்கள் என உரையில் கூறப்பட்ட புலவர்கள் பெயர்கள் பெரும்பாலும் பாட்டுத்தொகை ஆசிரியர்கள் பெயரே உள்ளது. 
 
இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம்- இவை எல்லாம் வெறும் ஆரவார புராணம். ஆதாரமில்லாதது.
2. தொல்கப்பியம் பற்றிய பின்னோக்கிய காலம் குறித்தல் -முச்சங்க கதைகளின் தாக்கம்.
தொல்காப்பியத்தில் உள்ள சொல், சொல் தொடரி போன்றவை ஆய்வில், காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் என அறிஞர்கள் ஏற்கின்ற்னர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.
இன்றைய நிலையில் தொல்காப்பியர் காலம் பொ.ஆ. 7ம்  நூற்றாண்டு என்பதில் பெரும் கருத்தொற்றுமை உள்ளது
3.வள்ளுவர் சங்க காலப் புலவர் எனும் நம்பிக்கை.
 
பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூல்களுள் உள்ள தொடர், பாட்டு கருத்துக்கள் குறளிலும் உள்ளதைக் கொண்டு - திருக்குறளை முன் தள்ளியனர். இத்தோடு முசங்கக் கதை, கீழுள்ள கதைகள் அவற்றிற்கு உதவின
 திருவள்ளுவமாலையில் உள்ள பாடல்களில் திருக்குறளின் ஒவ்வொரு பாலின் உள்ளும் உள்ள இயல்களில் எத்தனை அதிகாரங்கள் என்பதை கூறும் வகையில் பல பாடல்கள் உள்ளன.
4.திருவள்ளுவர் பற்றி உள்ள திருவள்ளுவமாலை மற்றும் கபிலர் அகவலில் உள்ள புனைக் கதைகள்
 
திருக்குறள் எழுதப் பட்ட பின் வரையப்பட்ட முதல் உரை மணக்குடவர் எனும் சமணர் உரை, ஆனல் இவர் உரையில் உள்ள இயல்களினும் உள்ள அதிகார அமைப்பினோடு திருவள்ளுவமாலை பாடல்கள் பொருந்த வில்லை, ஆனால் 13ம் நூற்றாண்டின் பரிமேலழகர் பிரித்துள்ளதோடு பொருந்துகிறது. எனவே நிச்சயமாய் இவை அவற்றிற்கு பிற்பட்டவை
 
 
வள்ளுவர் பற்றிய கதைகளில் பல கிறிஸ்துவப் பாதிரிகள் திணித்தவை எனப் பல ஆய்வுகள் கூறுவதையும் அறிஞர் காட்டி உள்ளனர். 
5. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை தெளிவாய் திருக்குறளை குறிப்பிடுவதால் 
 
 
சிலப்பதிகாரக் கதையின் சேரன், செங்குட்டுவன் போன்ற அரசர்கள் சங்க காலத்தவர், அதாவது பொ.மு.300 - பொ.ஆ.300 இடையிலானவர், ஆனால் சங்கப் பாடல்கள் பொ.ஆ.6ம் நூற்றாண்டின் முற்பாதி வரை வரையப்பட்டவை. சிலப்பதிகாரமோ கதை மாந்தர்களை சங்க காலத்தினராகக் காட்டினும் அதில் உள்ள செய்திகள், நகர வாழ்வு இவை பிற்காலத்தது, அறிஞர்படி 9ம் அல்லது 12ம் நூற்றாண்டு எனக் குறிக்கின்றனர், தொல்லியலும் கண்ணகி கோவிலின் தொன்மை 9ம் நூற்றாண்டு பின் என்பதால் தெளிவாய் சிலப்பதிகாரம் 9ம் நூற்றாண்டு  இறுதிக்கு முன் வாராது.
 
 
 
 திருவள்ளுவர் காலம் பன்னாட்டு பல்கலைக் கழக முறை ஆய்வுகள் 8ம் நூற்றாண்டு எனக் குறிக்க காரணம் பெருமளவில் மொழியும் திருக்குறள் நடையும் தான்.
 
 திருக்குறளின் மொழி நடை
 
சங்க இலக்கியத்தின் பாடல்கள் பெரும்பாலும் இன்றைக்கு புரியா மொழி நடை, ஆசிர்யப்பாவில் அமைந்தது.
 
திருக்குறளோ வெண்பா, அதிலும் குறள் வேண்பா, சொற்கள் வளர்ச்சியுற்று எளிதில் புரியும் நடை.
 திருக்குறளின் மொழியியல் வழியில் இலக்கண திறனாய்வு நூல்கள் மிகவும் குறைவு. 
 
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் ஈ.சுந்தரமூர்தி அவர்களின்  குறளின் நடையியல் மற்றும், முனைவர் மோகனராசுவின்  -"திருவள்ளுவர் நடைநலைம்". இரணடுமே திருக்குறள் பேராசிரியர் அகத்தியலிங்கம் அவர்கள் நூலும் உண்டு.
 

vals.png

valss.png

இவை நமக்கு தெளிவாய் காட்டுவது, திருக்குறள் பாட்டுத் தொகை நூல்களுக்குப் பிறகான தொல்காஅபியத்திலிருந்து பிற்காலத்தது.
 
 
திருவள்ளுவர் காலம் என்ற பெயரிலேயே ஒரு கட்டுரை பேராசிரியர்.கஸ்தூரி ராஜா அவர்கள்   நூலில் ஒரு கட்டுரையும், முனைவர் மோகனராசுவின் வளர்ச்சி வரலாறு - பகுதி௨ நூலின் பெரும் பகுதியும் 


-- Edited by admin on Monday 27th of August 2018 01:56:14 PM

__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 திருவள்ளுவர் காலம் - பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை காலம்

 
Vai%2B0.png

Vai%2B1.png

Vai%2BKrl1.png

Vai%2BKrl1a.png

Vai%2BKrl1b.png


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருவள்ளுவர் காலம் - தமிழக அரசு கருணநிதி ஆட்சி வெளியிட்ட நூல்

 
தமிழக அரசு கன்னியாகுமரியில் நின்று எழுதும் வடிவில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வெளிய்ட்ட நூல்  குறளமுதம்
திருவள்ளுவர் காலம் - சாமி சிதம்பரனார்
tn%2Bkural.png

தமிழக அரசு கன்னியாகுமரியில் நின்று எழுதும் வடிவில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வெளிய்ட்ட நூலில்

//திருக்குறளும் பிறப்புகளும் ஆத்மாவும் என ஒரு 2000 ஆண்டுக்கு முன்பு; 3000 ஆண்டுக்கு முன்பு எனக் கூறுவது தான் வள்ளுவருக்கு பெருமை எனச் சிலர் எண்ணுகின்றனர்// 
அன்றைய நிலையில் புலவர் திருக்குறளை 600 வாக்கில் என்பதை ஏற்று எழுதியது, ஆனால் இன்று நடுநிலையாளர் ஏற்பது பொ.ஆ.800 வாக்கில் தான் திருக்குறள் இயற்றப் பட்ட காலம்.
tn%2Bkural1.png

tn%2Bkural1a.png

 

9780674059924.jpg
 
 (சாமி சிதம்பரனார் 1930களில் ஆண்டுகளுக்கு திராவிட/சுயமரியாதை இயக்க இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை அவற்றுள் சில. இவை தவிர தினமணி, வெற்றிமுரசு, சரஸ்வதி ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். 1936-38 காலகட்டத்தில் அறிவுக்கொடி என்னும் பத்திரிக்கையை கும்பகோணத்தில் நடத்தினார். 1939 வரையான பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை “தமிழர் தலைவர்” என்னும் பெயரில் வெளியிட்டார். இந்நூல் இன்று வரை பெரியார் ஆய்வாளர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. 1940களில் பெரியாருடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார். திராவிட இயக்கம் முன்வைத்த திராவிட-ஆரிய முரண் கொள்கையை மறுத்து இருவரும் ஒரே இனம் என்ற கருத்தை வலியுறுத்தினார். சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையல்ல என்றும் பிற்காலத்தியவை என்றும் நிறுவ முற்பட்டார். இளங்கோவடிகள் செங்குட்டுவனின் உடன்பிறந்தவர் அல்லர் எனவும் சிலப்பதிகாரத்தில் கூறப்படும் சேரன் செங்குட்டுவனின் வட நாட்டுப் படையெடுப்பு (கனக-விசயர்களை வெற்றி கொள்ளுதல்) தமிழர்கள் வடநாட்டவர்பாற் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் திணிக்கப்பட்ட புனைவு என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார். 1950 களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ஜனசக்தி யில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.)
IMG_20180413_152041.jpg

IMG_20180413_152045.jpg

IMG_20180413_152048.jpg

IMG_20180413_152052.jpg

IMG_20180413_152057.jpg

IMG_20180413_152100.jpg

IMG_20180413_152104.jpg

IMG_20180413_152107.jpg

IMG_20180413_152111.jpg

IMG_20180413_152114.jpg

IMG_20180413_152118.jpg

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தொல்காப்பியமும் தமிழ் எழுத்துக்களும் வடமொழியும்

 

தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சியின்படி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.
பெர்கிலியின் கொலம்பியா பல்கலை கழக பேராசிரியர் திரு.ஜியார்ஜ் ஹார்டு மற்றும் இஸ்ரேலின் ஜெருசலேம் ஹீப்ரு பல்கலை கழக பேராசிரியர் திரு.டேவிட் ஷுல்மன்; இருவரும் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை உள்ளவர்கள்; இருவருமே சங்க இலக்கியம் முதல் இன்றுவரை தமிழ் இலக்கியம சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு பெற்றும் கொடுத்தும் வளர்ந்து வந்துள்ளது, தொல்காப்பியம் சமஸ்கிருத இலக்கணத்தை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளது என்பர்
9780674059924.jpg53a.png
 


தமிழ் மெய் எழுத்துகளிலும், பின்னர் உயிர் மெய்யிலும் சிறப்பு எழுத்துக்கள் "ள" "ற" "ன"; இவை வட மொழியில் கிடையாது, எனவே தான் தமிழுக்கே தனியாய் இவை பீனர் உருவாகியவை ஆதலால் கடைசி எழுத்துக்களாய் சேர்த்தார் தொல்காப்பியர் என பல அறிஞர்கள் கூறியதை பேராசிரியர் சு.இன்னாசி அவர்கள் தன் எழுத்தியல் நூலில் கூறுவார்.
ezuthu%2B-.jpg
தமிழ் உணர்வாளர்களால் தமிழ் எழுத்துக்கள் வடமொழி எழுத்திலிருந்து தான் உரு பெற்றது என்பதை ஏற்க இயலாமல் போக, கே.பி.அறவாணன் ஒரு போலி ஆய்வு கட்டுரை படித்தார், ஆனால் ஆய்வுலகம் ஏற்கவில்லை என்கிறார் பேராசிரியர்.
(வடமொழி என்கையில் சமஸ்கிருதம் என்பதைவிட அதன் பேச்சு வழக்கு மொழியான ப்ராகிர்தத்தையே குறிக்கும்)


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தொல்காப்பியர் காலம்

 

tholkaappiyaree.png

தொல்காப்பியம் தமிழின் மிக முக்கியமான இலக்கண நூல். இதன் மொழி நடை இது சங்க இலக்கியம் எனும் பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூல்களுக்கு பிற்பட்டது என மொழியியல் தெளிவாய் காட்டுகிறது.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய பாதிரி கால்டுவெல்  பொ.ஆ.-8ம் 13ம் நூற்றாண்டு இடையே என்றார்
அன்றைய  தரவுகளின் அடிப்படையில் பன்னாட்டு  பல்கலைக்கழக ஆய்வுமுறைகள்படி ஆய்வாளர்கள் கூறியது
P.Tசீனிவாசையங்கர் : பொ.ஆ. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவர் History of Tamils P. 70

தெ.பொ.மீ: பொ.ஆ. 2-நூற்றாண்டை ஒட்டிய சங்க நூல்களுக்கு முற்பட்டவர் - சமணத் தமிழ் இலக்கிய வரலாறு பக்-28

பெரிடேல் கீத் : பொ.ஆ. 4-நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் தமிழ்ச்சுடர் மணிகள் பக்-39

எஸ். வையாபுரிப்பிள்ளை : பொ.ஆ.அல்லது 5 நூற்றாண்டில் வாழ்ந்தவர் தமிழ்ச்சுடர் மணி பக்-39
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி : பொ.ஆ. 5-ம் நூற்றாண்டு
கே.எஸ் சிவராஜபிள்ளை : பொ.ஆ.6-ம் நூற்றாண்டு 
முச்சங்க தொன்மக் கதை
 
மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது எனும் ஒரு தொன்மக் கதை  மூன்று கடற்கோள்கள் இறையனார் களவியல் ஆசிரியர் உரையில் புனைந்துள்ளதை இன்று அறிவு சார் ஆய்வுலகம் முழுமையாய் நிராகரித்துவிட்டது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லைபுலவர் பட்டியல் எல்லாமே கற்பனைகள் என தூக்கி எறிந்து பல காலம் ஆகிவிட்டது.
 
சங்ககால மன்னர் காலநிலை  வரலாறு-   வி.பி.புருஷோத்தம்;   
அணிந்துரை- சிலம்பொலி செல்லப்பன். இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.   பாராட்டுரை- பேராசிரியர். சாலை- இளந்திரையன்.
நூலின் ஆய்வின் விஸ்தீரணம் கண்டு இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- இந்நூலிற்கு தமிழக அரசு சார்பாக வேளியீடு மான்யம் பெற்று தந்தார்.
 
53.png
 
 
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி.ப். எட்டாம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்கக் கதையை நம்பி, சங்ககாலத்தைக் கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். -பக்கம் -30
8ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை- என்னும் நூலில் ஒரே ஒரு பாடல் மட்டும் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதை. இதில் முதல்- இடைச் சங்கப் புலவர்கள் என உரையில் கூறப்பட்ட புலவர்கள் பெயர்கள் பெரும்பாலும் பாட்டுத்தொகை ஆசிரியர்கள் பெயரே உள்ளது. 
 
இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம்- இவை எல்லாம் வெறும் ஆரவார புராணம். ஆதாரமில்லாதது.
பன்னாட்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஏற்பது என்ன
 
தொல்காப்பியத்தில் உள்ள சொல், சொல் தொடரி போன்றவை ஆய்வில், காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் என அறிஞர்கள் ஏற்கின்ற்னர்.
 
ஜப்பானின் ஒசாக்கா பன்னாட்டு புத்த மத பல்கலைக் கழக இந்தியவியல் பேராசிரியரும், திருக்குறளை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்த டகனொபுடகஹஷி   இன்றைய வடிவு 5- 6ம் நூற்றாண்டினது
 
 பென்சில்வேனியா பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் V.S.ராஜம்   பொ.ஆ. 5- நூற்றாண்டிற்கு   சற்று முந்தையது
ஹாலந்து  லெய்டன் இந்தியவியல் பேராசிரியரும் ஹெர்மன் டிய்கென்   பொ.ஆ.9ம் நூற்றாண்டினது 
19ம்  ஏ.சி.பர்னெல் பொ.ஆ. 19ம் நூற்றாண்டின் இந்தியவியல் ஆய்வாளர் 8ம் நூற்றாண்டினது முன்பாய் இருக்க இயலாது
  அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.
53a.png
தொல்காப்பியம் சொல் இலக்கணம் மட்டும் இல்லை, எழுத்து இலக்கணமும் சொல்கிறது. அதாவது
 உயிர் எழுத்து 12 அ - ஔ ;  மற்றும்
 மெய் எழுத்து 18 க் - ன்
இவற்றின் கலப்பே உயிர்மெய் எழுத்து
கல்வெட்டுகளில் 30 எழுத்துகளும் தனி உரு பெறுவது 5ம் பொ.ஆ. 5ம் நூற்றாண்டில் தான். அதாவது  தமிழில்  "ற" "ன" போன்றவை இரண்டு, ஆனால் வடமொழியில் ஒன்று தான்.
உதாரணமாக ராகம் என எழுத்கையில் எழுதும் போது அறம் என எழுதும் போதும்  மாறு படும் ஆனால் 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய கல்வெட்டுகளில் இரண்டு ஒரே உரு தான், மொழி இடையில் வந்தால் படிப்பவர் மாற்றி  மாற்றி படித்து பொருள் சொல்கின்றனர். 
புள்ளி மயங்கியல்
 
புள்ளி வைத்து எழுதுதல், பின் புள்ளி மயங்கியல் என மெய் எழுத்து சேறும் முறை பற்றியும் தொல்காப்பியத்தில் இலக்கணம் உள்ளது
தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி - அதாவது பிராமியில் தொடங்கி அது வட்டெழுத்தாய் மாற்றம் பெற்றதினை தமிழ் எனப் படித்து வெளிப் படுத்திய பேராசிரியர் கே.வி.ராமன், ஐராவதம் மகாதேவன் போன்றோர் தெளிவாய் தொல்காப்பிய எழுத்து இலக்கணத்தோடு அதை ஒப்பிட்டு அதன் அடிப்படையில் தான் தொல்காப்பியம் இயற்றப் பட்ட காலம் குறிக்க வேண்டும் எனத் தெளிவாய் கூறுகின்றனர். அதன்படி தொல்காப்பியம் 7ம் நூற்றாண்டிலானாது.
 
 
  தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சியின்படி வடமொழி எழுத்துக்களை பயன்படுத்த தொடங்கி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.

தொல்காப்பியம் தமிழ் மெய் எழுத்து வரிசையில் கடைசியில் ளா, ற, ஜ்ன உள்ளது - இவை வட மொழியில் இல்லாதவை, இது தெளிவாய் தமிழ் எழுத்துருக்கள் வடமொழி உருவிடம் கடன் வாங்கியது என்பதையும், நிருபித்தன என பேராசிரியர் இன்னாசி தன் எழுத்தியல் நூலில் விளக்கி உள்ளார்


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

திருவள்ளுவர் வரலாறு

Picture

திருவள்ளுவர் காலம்
 
அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தை பிரித்து பயன்படுத்துகிறார்கள்.
 
திருக்குறள் காலம்
 
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.

திருவள்ளுவர்

திருவள்ளுவரின் பிறப்பு முதலான வரலாற்றை அறுதியிட்டு கூற போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இவர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவர் இயற்றிய திருக்குறளின் அடிப்படையில் அவர் தாயார் பெயர் ஆதி என்றும், தந்தையார் பெயர் பகவன் என்றும் கூறுவோர் பலர் உள்ளனர். இவர் வாசுகி என்பவரை மணந்ததாகவும் சொல்லப்படுகிறது.இவர் உலகப் பொதுமறை என அனைவராலும் ஏற்கப்படும் விதத்தில் குறள் வெண்பாக்களால் ஆன செய்யுள்களை இயற்றினார். மொத்தம் ஆயிரத்து முன்னூற்று முப்பது பாடல்கள், நூற்று முப்பத்துமூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நூல் திருக்குறள் என வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு தலைப்பில் அமைந்துள்ளது. அதிகாரத்திற்கு பத்து பாடல்கள் அமைந்துள்ளன.

இவருக்கு சென்னை மைலாப்பூரில் வள்ளுவர் கோட்டம் என்னும் பெயரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்தியாவின் தென்முனையான குமரிக் கடலுள் நூற்று முப்பத்துமூன்று அடி உயத்தில் கல்லினாலான சிலை அமைக்கப் பட்டுள்ளது.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டை 1921 ல் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறையினர் கண்டு பிடித்ததாக சொல்லப்படுகிறது. திருக்குறளை வள்ளுவர் தமிழில் எழுதவில்லை. திருவள்ளுவர் என்பவர் தமது வாழ்க்கையில் அனுபவித்துணர்ந்து அவ்வப்போது ஒலைச்சுவடிகளில் டைரி போல் குறிப்பெடுத்து வைத்த சில பட்டறிவு யதார்த்த நிகழ்வுகளை மணக்குடவர் என்பவர் தொகுத்து எழுதியுள்ளார்.

கிராமங்களில் இருக்கும் வீட்டு ஒட்டுத் திண்ணைகள் அல்லது மேடை மேல் வந்து அமர்ந்து கேட்பவரை நோக்கி அவருக்கு நடக்க வேண்டியதை குறித்து சொல்பவர்களை குறி சொல்பவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மந்திர தந்திர மாயாஜால வித்தைகளையும் கற்று வேடிக்கை செய்து காட்டி பிழைத்து வந்தவர்களாக இருந்ததால் மக்கள் அவர்களை குறளி வித்தை காட்டிகள் என்று அழைத்தனர். வள்ளுவர் குறளிகள் இனத்தவர் என்பதை இச்செய்தி மூலம் அறியலாம்.

இப்படி ஒரு இனத்தினர் அந்த நாளில் இருந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குறளி இனத்தில் இருந்து வந்தவர் எழுதியதால் குறளி என்ற வார்த்தை மருவி குறளாகி விட்டது. ஒன்றரை வரிகளில் குறுகி எழுதப்பட்டதால் உரை எழுத அதனை ஆய்ந்தவர்கள் திரு என்ற வார்த்தையை அதன் முன்னால் சேர்த்து திரு குறள் என அழைத்தார்கள். மணக்குடவர் திருவள்ளுவர் காலத்தவராக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் திருவள்ளுவரைப்பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மணக்குடவர் எப்போதோ எழுதிய மூலத் தொகுப்பை கண்டு பிடித்து சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலில் அச்சில் ஏற்றியவர் தஞ்சையை சேர்ந்த ஞானப்பிரகாசன் என்பவர். திருவள்ளுவர் யார் மணக்குடவர் யார் இவர்களிருவரும் எந்த இருப்பிடத்தில் எந்த காலத்தில் இருந்தவர்கள் திருவள்ளுவருக்கும் மணக்குடவருக்கும் இடைப்பட்ட தொடர்பு நட்பா அல்லது தொப்புள் கொடி உறவா என்பன பற்றிய விவரங்களை தஞ்சை ஞானப்பிரகாசன் முதன் முதலாக அச்சில் ஏற்றிய திருக்குறள் முன்னுரைகளில் குறிப்பிட்டிருக்க வாய்ப்பு இல்லை.

1330 பாக்கள் உள்ள திருக்குறளில் மொத்தம் உள்ள எழுத்துக்கள் 42,194.திருக்குறள் முதன் முதலில் 1812 ம் ஆண்டு ஓலை சுவடியில் இருந்து அச்சடிக்கப்பட்டது. குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர் ஆவார். மொத்தம் நூற்றி முப்பத்திமூன்று அதிகாரங்களாகும். 133 அதிகாரங்களில் 1330 குறட்பாக்களைக் கொண்டிருக்கிறது.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டை ஆராய்ந்து கண்டறிந்த பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறையினரும் இந்த அடிப்படை விவரங்களை குறிப்பிடவில்லை. காங்கிரஸிடமிருந்து தமிழக ஆட்சியை கைப்பற்றிய திராவிட கட்சி ஆட்சிகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை பெற்றவராக இருந்த அறிஞர் அண்ணாதுரை அவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராக இருந்தவர் என்ற காரணத்தினால் 1971 ல் அரசு அலுவலகங்களில் கிறிஸ்து பிறந்த ஆண்டுக்கு போட்டியாக திருவள்ளுவர் பிறந்த ஆண்டும் பின்பற்றப்பட வேண்டு மென்ற ஆணையிட்டிருந்தும் 1981ல் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆட்சியில் தான் முதன் முதலாக அரசு அலுவலகங்களிலும் நாட்காட்டிகளிலும் அது நடை முறைக்கு கொண்டுவரப்பட்டது. பிறகு தமிழக பஞ்சாங்கங்களில் சேர்க்கப்பட்டது.

திருவள்ளுவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன. இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

தமிழ் என்ற வார்த்தை திருக்குறளில் இல்லாத போது அது தமிழினத்தை சார்ந்த நூலாக கருத முடியாது. இதனை தெரிந்தே அதனை உலக பொது மறை என மாற்றி விட்டார்கள் போலும். ஆரம்பத்தில் இருந்து இன்று வரை இந்த உலக பொது மறை விளம்பரம் தமிழக ஆட்சியாளர்களிடமும் நாத்திக வாதிகளாக மாறிய தமிழ் புலவர்களிடமும் தமிழ் அறிஞர்களிடமும் சிக்கி படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது.

திருக்குறளில் வள்ளுவர் மனித வாழ்க்கையில் கடை பிடித்த அல்லது கடை பிடித்துதுணர்ந்த யதார்த்த உலக அனுபவ அல்லது பட்டறிவு கோட்பாடுகளை படித்தறிந்த 45 பேர்கள் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர். திருக்குறளில் வட மொழி சொற்கள் விரவி எழுதப்பட்டுள்ளன. அதில் ஔ என்ற வார்த்தை இல்லை.

திருக்குறளில் மூன்று ஒன்பது எண்களைத் தவிர மற்ற வரிசை எண்கள் 1 2 4 5 6 7 8 10 ஏராளமாக கையாளப்பட்டுள்ளன. கணித மேதை இராமனுஜம் கண்டு பிடித்த 1 முதல் 10 வரையுள்ள எண்கள் திருவள்ளுவர் காலத்திலோ அல்லது அவர் காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மணக்குடவர் காலத்திலோ பயன் பாட்டில் இல்லை. அது சென்ற நூற்றாண்டு நிகழ்வு என்பதால் முதலில் திருக்குறளை அச்சில் ஏற்றிய தஞ்சை ஞானபிரகாசன் என்பவரே எண் வரிசைகளை அதில் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும்.

திருக்குறளில் கூறப்பட்டுள்ள நல்ல செய்திகள் ஒரு பக்கம் இருந்தாலும் அதன் மூல கர்த்தாக்களின் முழு வரலாற்று விவரம் சரியான ஆதாரங்களுடன் தெரியவில்லை. திருவள்ளுவர் பிறந்த ஆண்டை அரசு அலுவலகங்களில் பயன் படுத்த வேண்டு மென்று 1971ல் ஆணையிட்ட தமிழக அரசும் மேற்படி அடிப்படை ஆதாரங்களை முறையாக ஆய்ந்து மக்களிடம் வெளிப்படுத்த வில்லை. திருக்குறளில் கூறப்பட்டவைகள் அனைத்தும் உள்ளபடியே அப்படியே திருவள்ளுவர் கூறியது தானா என்பதை அவருக்குப் பின்னர் அதனை பல கால கட்டங்களில் பின்பற்றி எழுதியவர்கள் மொழி பெயர்த்தவர்கள் உரை எழுதியவர்கள் அச்சுக்கு கொண்டு சென்றவர்கள் எவரும் ஆராய்ந்து தெரிவிக்கவில்லை. அவர்கள் திருக்குறள் தமிழிலக்கண வரம்பிற்குட்பட்டதா என்பதையும் ஆராய்ந்து உரை நடை எழுதியதாக தெரியவில்லை. ஆனால் கால ஓட்டத்தில் அவர் அவர்களுக்கு தெரிந்த பல செய்திகளையும் சிறிது சிறிதாக உள்ளே நுழைத்து தொகுத்து திருக்குறளை உறுவாக்கி யிருக்க வேண்டும்.

திருக்குறள் மனிதவள மேம்பாட்டுக்கு தேவையான அறம் பொருள் காமம் என்ற மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை உணர்த்துவதுடன் அதில் உள்ள குறை நிறைகளை நிதானமாக சுட்டிக்காட்டி மனித இனத்தை திருத்த முற்படுவதால் மின்சாரம் ஆகாய விமானம் ரேடியோ போன்ற மனித வாழ்வு மேம்பாட்டுக்குத் தேவையான வெளிநாட்டவர்களின் கண்டு பிடிப்புகளைப் போன்று விஞ்ஞான அறிவியிலில் அக்கறையில்லாமல் தமிழக தெருக்கூத்துகளிலும் டிராமாக்களிலும் வட நாட்டு இதிகாசங்களையும் புராணங்களையும் மக்களிடம் பரப்பி விட்டுக் கொண்டிருந்த அப்போதைய தமிழினத்தவரில் ஞானப்பிரகாசன் போன்ற நல்லவர் ஒருவர் யாராலோ எழுதப்பட்டு யாராலோ தொகுக்கப்பட்டதனை அச்சில் ஏற்றி வெளி உலகுக்கு கொண்டு வந்து பின்னால் வரும் அரசியல் தலைவர்களுக்கு பேருதவி செய்துள்ளது மறக்க முடியாதது.

அவருக்கும் ஒரு சிலை திருவள்ளுவர் சிலை அருகே அமைத்திருக்க வேண்டும். அவர் அச்சேற்றிய திருக்குறள் ஒரு நிரந்தர இலக்கிய நூலாகி திருவள்ளுவர் சிலைகளுடன் தமிழுலகில் தனித் தன்மையாக உலா வருவதும் உலக அந்தஸ்து பெற்று விட்டதும் தமிழுக்கு கிடைத்த பெருமை என்று சொல்லலாம்.

திருக்குறள் அரங்கேற்றம்

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.300 க்கும் கி.பி.250 க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன.வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும் கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான். மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றம் செய்ய வள்ளுவர் சென்றிருக்கிறார். புலவர்கள் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.

அதை எதிர்த்து தன்னுடைய நூலை சங்கப் பலகையின் மேல் வைத்தாராம். அப்பலகை மற்ற புலவர்களை பொற்தாமரை குளத்தில் தள்ளிவிட்டு, திருக்குறளை மட்டும் ஏற்றுக் கொண்டதாம்.

வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று.”

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.

திருக்குறள் உரை

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது உரை. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.பழந்தமிழ் நூல்வரிசையில் திருக்குறள்

1. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினெண் மேற்கணக்கு.
2. பதினெண்கீழ்க்கணக்கு.
3. ஐம்பெருங்காப்பியங்கள்.
4. ஐஞ்சிறு காப்பியங்கள்.இவற்றில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்” என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் “திருக்குறள்” என்றும் இது பெயர் பெற்றது.
 
குறள் பெயர் வரலாறு

திருவள்ளுவர் என்பவர் தமது வாழ்க்கையில் அனுபவித்துணர்ந்து அவ்வப்போது ஒலைச்சுவடிகளில் டைரி போல் குறிப்பெடுத்து வைத்த சில பட்டறிவு யதார்த்த நிகழ்வுகளை மணக்குடவர் என்பவர் தொகுத்து எழுதியுள்ளார். கிராமங்களில் இருக்கும் வீட்டு ஒட்டுத் திண்ணைகள் அல்லது மேடை மேல் வந்து அமர்ந்து கேட்பவரை நோக்கி அவருக்கு நடக்க வேண்டியதை குறித்து சொல்பவர்களை குறி சொல்பவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மந்திர தந்திர மாயாஜால வித்தைகளையும் கற்று வேடிக்கை செய்து காட்டி பிழைத்து வந்தவர்களாக இருந்ததால் மக்கள் அவர்களை குறளி வித்தை காட்டிகள் என்று அழைத்தனர். வள்ளுவர் குறளிகள் இனத்தவர் என்பதை இச்செய்தி மூலம் அறியலாம். இப்படி ஒரு இனத்தினர் அந்த நாளில் இருந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குறளி இனத்தில் இருந்து வந்தவர் எழுதியதால் குறளி என்ற வார்த்தை மருவி குறளாகி விட்டது. ஒன்றரை வரிகளில் குறுகி எழுதப்பட்டதால் உரை எழுத அதனை ஆய்ந்தவர்கள் திரு என்ற வார்த்தையை அதன் முன்னால் சேர்த்து “திரு குறள்” என அழைத்தார்கள்

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நூல் அமைப்பு

“பாயிரம்” என்னும் பகுதியுடன் முதலில் “அறத்துப்பால்” வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , “கடவுள் வாழ்த்து” என்னும் அதிகாரம். தொடர்ந்து, “வான் சிறப்பு”, “நீத்தார் பெருமை”, “அறன் வலியுறுத்தல்” ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் “இல்லறவியல்” என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலி”ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

“அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு….”
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
“ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப்பெறின்”
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர்.
 
திருக்குறளின் பால்களும், இயல்களும், அதிகாரங்களும்
 
திருக்குறளின் 1330 குறள்களும் மூன்று பால்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. அவை,
 
அறத்துப்பால்
பாயிரம்
இல்லறவியல்
துறவறவியல்
ஊழியல்
 
பொருட்பால்
 
அரசியல்
அமைச்சியல்
அரணியல்
கூழியல்
படையியல்
நட்பியல்
குடியியல்
 
காமத்துப்பால்
களவியல்
கற்பியல்
 
திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்
 
1. ஞானவெட்டியான் – 1500 பாக்கள்
2. திருக்குறள் – 1330 பாக்கள்
3. ரத்தினசிந்தாமணி – 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் – 500 பாக்கள்
5. கற்பம் – 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் – 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல – 100 பாக்கள்
8. வைத்திய சூஸ்திரம் – 100 பாக்கள்
9. கற்ப குருநூல் – 50 பாக்கள்
10. முப்பு சூஸ்திரம் – 30 பாக்கள்
11. வாத சூஸ்திரம் – 16 பாக்கள்
12. முப்புக்குரு – 11 பாக்கள்
13. கவுன மணி – 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் – 100 பாக்கள்
15. குருநூல் – 51 பாக்கள்நினைவுச் சின்னங்கள்

தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது . இந்த சிலையை வடிவமைத்தவர் , பிரபல சிற்பி , கணபதி ஸ்தபதி என்பவர்.சென்னையில் வள்ளுவர் நினைவாக , வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி , கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.

லண்டன்ரஸ்ஸல் ஸ்கொயரிலுள்ள “ஸ்கூல் ஆ. .ப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்” என்னும் கல்வி நிறுவனத்தில் , வள்ளுவரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார்.

பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள்,அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், திருவள்ளுவர் மறைந்தாலும்,
எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.

திருவள்ளுவர் ஆசானுக்கெல்லாம் ஆசான்.அவரது புகழ் உலகம் முடியும்வரை நிலைத்து நிற்கும் என்றால் அது மிகையல்ல.

திருவள்ளுவரைக் குறிக்கும் பிற பெயர்கள்

செந்நாப் புலவர்
செந்தாப் போதார்
திருத்தகு தெய்வத் திருவள்ளுவர்
தெய்வத் திருவள்ளுவர்
தெய்வப் புலமைத் திருவள்ளுவர்
தெய்வப் புலவர்
தேவர்
தேவர் திருவள்ளுவர்
தேவிற் சிறந்த திருவள்ளுவர்
நாயனார்
புலவர்
பெருநாவலர்
பொய்ய மொழியார்
பொய்யில் புலவர்
மாதாநுபங்கியார்
முதற் பாவலர்
வள்ளுவ தேவன்(ர்)
வள்ளுவர்
 
திருக்குறளைக் குறிக்கும் பிற பெயர்கள்
 
அறம்
இரண்டு
உத்தரவேதம்
எழுதுண்டமறை
குறள்
தமிழ்மறை
திருவள்ளுவப் பயன்
திருவள்ளுவர்
தெய்வநூல்
தெய்வமாமறை
நம் மறை
பழமொழி
பால்முறை
புகழ்ச்சி நூல்
பொது மறை
பொய்யா மொழி
பொருளுரை
முதுநெறி
முதுமொழி
முப்பால்
முப்பொருள்
மெய்வைத்தசொல்
வள்ளுவ தேவன் வசனம்
வள்ளுவம்
வள்ளுவ மாலை
வள்ளுவர்
வள்ளுவர் வாய்மொழி
வள்ளுவர் வைப்பு
வள்ளுவன் வாய்ச்சொல்
வாய்மை
வாயுறை வாழ்த்து
 
“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை”
“மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்”
“மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 தெரிந்த திருக்குறள் தெரியாத பல தகவல்கள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். திருக்குறளைப்பற்றிய சில அரிய தகவல்.திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு -1812
திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் -380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் -700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் -250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் -1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் – 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247  இல் –  37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் -அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றுமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து -ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து -னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் -ளீ,ங
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் –மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10 ஆவது உரையாசிரியர் –பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.திருவள்ளுவர் பற்றி நாம் அறியாதவை

 

நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் உண்மை இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.  இது ஒரு குத்து மதிப்புத்தான். திருவள்ளுவர் பிறந்து இந்த ஆண்டுடன் 2049 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லாப மதத்தினருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050 இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று. (திருவள்ளுவர் மாலை)

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

வள்ளுவரின் பிறப்பிடம்

மண்ணகத்தில் முதன்முதலில் மக்களினம் தோன்றிய நாடு குமரிக்கண்டம் என்பர் ஆராய்ச்சியாளர்கள். இது தற்போதைய இந்தியப் பெருங்கடல் உள்ள பெரும் பகுதியில் மூழ்கிக்கிடக்கும் ஒரு பரந்த நிலப்பரப்பாகும். இதனை நம் முன்னோர்கள் குமரிக்கண்டம் என்றும் மேனாட்டினர் இலெமூரியா என்றும் அழைத்துள்ளனர். இங்கு குமரிக்கோடு என்ற பெரும் மலைத்தொடரும் பஃறுளியாறு என்ற ஒரு பெரும் நதி ஓடியதாகவும் இவை கடல் கோளுக்கு இரையாயின என்று இளங்கோவடிகளின் வாய்மொழியாலும், புறநானூறு (9:10 -11) இறையனார் களவியல் உரையும், சிலப்பதிகாரமும் கூறுகின்றன.அடியார்க்கு நல்லார் தனது சிலப்பதிகார உரையில் குமரிகண்டத்தில் நாற்பத்தொன்பது நாடுகளைப்பற்றிய குறிப்புகளையும் தருகிறார்.

கடல் கொண்ட குமரியில் தான் தலைச்சங்கம் நடை பெற்ற தென்மதுரையும், இடைச்சங்க கபடாபுரமும் இருந்தன என்றும் கூறுகிறார்.சுவாமி விபுலானந்த அடிகளும் இதையே கூறியுள்ளார்.அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் நாடுகளில் தெங்கநாடும், குறும்பனை நாடும் இன்று குமரி மாவட்டம் என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து வந்துள்ளன என்றும் இன்றைய தேங்காப்பட்டினமும், குறும்பனையும் மேல் காட்டிய நாடுகளின் தலைநகரங்களாகத் திகழ்ந்தன என்றும் அறிய முடிகிறது.கடல் கொண்ட குமரிகண்டத்தில் ஓடிய பஃறுளியாறு, பறளியாறாகி இன்று பழையாறு என்று அழைக்கப்படுகிறது. திராவிட ஒப்பிலக்கண ஆசான் டாக்டர் கால்டுவெல் இப்பகுதியை இந்த ஆற்றின் பெயராலேயே பறளி நாடு என்று குறிப்பிடுகிறார்.

வள்ளுவரின் பிறப்பிடம் ஒரு விவாதத்திற்குரிய இடமாகவே இருந்து வருகிறது. வள்ளுவரின் கோவில் சென்னை மைலாப்பூரில் இருப்பதால் அதனை அவரின் பிறப்பிடமாக ஒருசிலர் கூறுவதும் உண்டு.

“உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கச் சென்ப இப்பக்கம்
மாதாநுபங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற் கூடற் கச்சு”

என்று கூறும் திருவள்ளுவ மாலையிலே வரும் பாடலுக்கு உபகேசியை மணந்த கண்ணபிரான் வடமதுரைக்கு அச்சு ஆவார்.
அது போல் திருக்குறள் படைத்த மாதாநுபங்கியும் செந்நாப் போதருமாகிய திருவள்ளுவர் தென்மதுரைக்கு அச்சு ஆவர் என்று கூறி வள்ளுவர் பிறந்த இடம் மதுரை என்பர்.

இங்கு முக்கியமாக கவணிக்கப்படவேண்டிய சொல் “புனற் கூடல்” என்ற சொல்லாகும்.

“புனற் கூடல்” என்பது பஃறுளியாறும் முக்கடல் நீறும் ஒன்று சேரும் இடம் என்பதனையே குறிக்கும். மேலும் மதுரை மாநகரை “கூடல்” என்று திருமுருகாற்றுப்படையும், “நான்மாடக் கூடல்” என கலித்தொகையும் குறிப்பிடுகின்றன. மதுரையையை “புனற்கூடல்” என்று இலக்கியமோ, கல்வெட்டோ அழைக்கவில்லை.வள்ளுவர் பிறந்தது தென்மதுரையாகிய குமரிமாவட்டம் அல்லது கடல் கொண்ட தென்குமரியின் புதைந்த மாநிலமாகவும் இருக்கலாம். அல்லது இன்றைய கன்னியாகுமரியாகவும் இருப்பதற்கு வாய்புகள்அதிகம்.மேலும் இன்றைய மைலை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த வணமாகவே இருந்துள்ளது. தனது கடைசி காலத்தில் வள்ளுவர் அமைதி தேடி அங்கு சென்று மடிந்திருக்கலாம். உக்கிரபாண்டிய மன்னனின் சபையில் தான் திருக்குறள் அரங்கேரியதாக வாய்மொழிசெய்திகள் உண்டு.இது உண்மையாகின் அது உக்கிரபாண்டிய மன்னனின் கபடாபுரத்தையோ அல்லது தென்மதுரையையோ தான் குறிப்பிடும். தற்போதைய கூடல் மாநகராகிய மதுரையையை அல்ல என்பதை நாம் அறிதல் வேண்டும்.

குமரிமாவட்டம் பன்டைய மலைநாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால் “கோடு” என்ற சொல்லை ஈற்றாகக் கொண்ட திருவிதாங்கோடு, மேலாங்கோடு, ஆதங்கோடு, குமரிக்கோடு, விளவங்கோடு போன்று ஐம்பதிற்கும் மேற்பட்ட ஊர்களை இங்கு காணலாம். வள்ளுவன் கோடு என்ற ஊரே இன்று விளங்கோடு என்று திரிந்திருக்க வேண்டும் என்று கருதுபவர்களும் உண்டு. வள்ளுவர் நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியாகிய வள்ளுவநாட்டை சார்ந்தவரென்றும் இவரும் நாஞ்சில் வள்ளுவனும் ஒரே குலத்தில் உதித்தவர்கள் என்று கூறுபவர்களும் உண்டு. நாஞ்சில் நாட்டையும், அதனை ஆண்ட வள்ளுவனின் சிறப்பையும் ஐந்து புறநானூற்றுப் பாடல்கள் கூறுகின்றன.

ஒருசிறைப் பெரியனார், மருதன் இளநாகனார், ஒளவையார், கருவூர் கதப்பிள்ளை போன்ற சங்கப் புலவர்களும் நாஞ்சில் நாட்டையும் அதனை ஆண்ட வள்ளுவனையும் பற்றி பாடியுள்ளனர். சிலப்பம், சோதிடம், வைத்தியம், போன்ற துறைகளில் நாஞ்சில் நாட்டு மக்கள் சிறந்து வந்துள்ளனர். வள்ளுவ நாட்டு முட்டத்தை அடுத்துள்ள திருநாயனார் குறிச்சி தான் திருவள்ளுவர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. வள்ளுவ நாட்டின் ஆட்சித்தலைவராக திகழ்ந்த வள்ளுவர் மகாவீரர், புத்தர் போன்று அரச பதவியைத் துறந்து துறவியாக மாறி அறநெறிக் கருத்துகளை மக்களிடையே பரப்ப உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்தருளினார் என்றும் மன்னனாக இருந்து துறவியாக மாறிய காரணத்தால் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனத் திருக்குறளை வகுத்தமைத்தார் என்று கருதுபவர்களும் உண்டு.

நெல்லை மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள பெருங்குளத்தில் உக்கிரப்பெருவழுதியின் அவையிலே திருக்குறள் அரங்கேற்றப்பட்டது என்று கூறுவர் உளர். டாக்டர் உ.வே சாமிநாதையர் தமது “என் சரிதம்” என்ற நூலில் தான் பெருங்குளத்திலுள்ள செங்கோல் மடத்தில் தங்கியபோது மாடாதிபதி தன்னை பெருங்குளத்து சிவாலயத்திற்கு அழைத்துச் சென்றதையும் “அங்கே உக்கிரபாண்டியர் அரசாட்சி செய்து சிவபெருமானை பூசித்தமையால் அவ்வூர் சிவபெருமானுக்கு உக்கிரவழுதீசுவரர் என்ற திருநாமம் வழங்குகிறதென்றும், அந்தப்பாண்டியர் முன்னிலையில் நக்கீரனார் முதலிய சங்கப்புலவர்கள் கூடிய இடத்தில் திருக்குறள் அரங்கேற்றம் நடை பெற்றது என்றும் அதற்கு அடையாளமாக சிவாலயத்தில் 49 புலவர்களின் வடிவமும், உக்கிரபாண்டியர் வடிவமும் உண்டு என்றும் கூறியுள்ளார். (என் சரிதம் டாக்டர் உ.வே சாமிநாதையர் பக்கம் 932) திருவள்ளுவர் உக்கிரபெருவழுதி காலத்தவர் என்று சென்னைப் பல்கலைக் கழகச் சார்பில் பதிப்பித்த “திரிகடுகமும்
சிறுபஞ்சமூலமும்” என்ற நூலின் முன்னுரையில் எஸ்.வையாபுரி பிள்ளை குறிப்பிடுகிறார். திருவழுதி வளநாட்டின் பகுதிகளே ஸ்ரீவைகுண்டமும் பெருங்குளமும் என்று ஸ்ரீவைகுண்ட கைலாசநாதர் மற்றும் கள்ளபிரான் கோவில்களில் கிடைத்த கல்வெட்டுகள் கூறுகின்றன.

மேலே கூறிய செய்திகளில் இருந்து திருவள்ளுவர் நெல்லை மாவட்டத்தை அடுத்துள்ள தெங்குமரியைச் சார்ந்தவர் என்ற உண்மை உறுதிப்படுகின்றது.

திருவள்ளுவர்  தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து  கி.பி.1050 இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்கள்  தெரிவிக்கின்றன.

திருவள்ளுவர்  காலத்தில்  சாதிப் பிரிவுகள்  இருந்திருக்கின்றன.  அதனால் சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று எழுதா வேதங்களை விட  திருவள்ளுவர் யாத்த திருக்குறள் உயர்ந்தது என்பது புலவர்களின் கருத்து.  அந்தப்  பாடல்:

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று.

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால் இதனை உணர்ந்த தமிழர்கள் எத்தனை விழுக்காடு? திருக்குறள் உள்ள வீடுகளின் விழுக்காடு எத்தனை?

நினைவுச் சின்னங்கள்

இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.

அவர் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

இலண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

திருக்குறள் தமிழ் நாட்டின் சொத்து! 

1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கலாமா என்ற விவாதத்தின் போது ஆங்கிலேய தளபதி “இந்தியாவின் மிக பெரியசொத்தான திருக்குறளை நாம் எடுத்து வந்தாகி விட்டது. இனிமேல் அது வெறும் மண்தான். ஆகவே அது நமக்கு தேவை இல்லை” என்று கூறினாராம்.

திருக்குறள் இந்தியாவின் சொத்து என அவர் கூறியது தவறு. அது தமிழ் நாட்டின் சொத்து! ஒட்டு மொத்த தமிழினத்தின் சொத்து!

திருக்குறள் தகவல்கள்

திருக்குறள் பற்றிய முதல் அச்சிட்ட நூல் திருவள்ளுவர் கடல் திரட்டு அல்லது அறிவுக்கடல் 1794 தொகுத்தவர் கிண்டர்ச்லி – லண்டன்.அறத்துப்பாலை மட்டும் அச்சிட்டு வெளியிட்டவர் எப்.டபிள்யு எல்லிஸ் 1812

திருக்குறள் மூலத்துடன் ஆங்கில மொழிபெயர்ப்புக் குறிப்புடன் 304பக்கம் புத்தகம் வெளியானது.

திருக்குறள்

இலத்தின் மொழியில்அச்சிட்ட ஆண்டு 1730
பிரெஞ்ச் மொழியில்அச்சிட்ட ஆண்டு 1767
தெலுங்கு மொழியில்அச்சிட்ட ஆண்டு 1887
மலையாள மொழியில்அச்சிட்ட ஆண்டு 1915
சமஸ்கிருத மொழியில்அச்சிட்ட ஆண்டு 1922
ஹிந்தி மொழியில்அச்சிட்ட ஆண்டு 1924
 
திருக்குறள்  சில சேகரங்கள்!
 
சங்குராம் என்பவர் மிக அழகாகத் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார்

மலையாளத்தில் திரு சந்திரசேகர் நாயர் 2000 இல் மொழிபெயர்த்துள்ளார்

ஹிந்தியில் த.இ.ச..ராகவன் 1978 மொழிபெயர்த்துள்ளார்

தினம் ஒரு திருக்குறள் படித்திட வேண்டும்!
திரும்பிய பக்கமெல்லாம்
அதை உணர்த்திட வேண்டும்!
மனம் அதிலே நிலைத்திட வேண்டும்!
மனிதனின் தீய குணத்தினை மாற்றிட வேண்டும்!
வள்ளுவன் வகுத்த அதிகாரமெல்லாம்
மனிதனை ஆதிக்கம் செய்ய வேண்டும்!
இதைப் போதிக்கும் திறமையில் – அனைவரும்
சாதிக்க வேண்டும்!
இரண்டு வரி வேதவாக்கு – இதை
இறுதி வரைக் கடைப்பிடித்தால் கிடைக்கும் நல்வாழ்வு!
மறதியில் கூட மறக்கக் கூடாத உயிர்மூச்சு இது!
பிறவியிலே நீ – பிறந்த பயன் வேண்டுமென்றால்
உறுதியோடு ஒரு துறவி போல
திருக்குறளை நீ படித்து விடு…!
படித்தபடி நீ – நடந்து கொண்டால்
நீ நினைத்தபடி வாழ்க்கை இருக்கும்!
நீ தொட்டதெல்லாம் மணமணக்கும்…!
இனிக்கும் திருக்குறளை
இனியாவது படிப்போம்!
மணக்கும் வாழ்க்கையை
மனதோடு மணந்திடுவோம்…!

நாகேன் வேலாயுதம்

 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard