Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 00 முன்னுரை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
00 முன்னுரை
Permalink  
 


இறை நம்ம்பிக்கை இந்நூலின் ஆணி வேராகவும், அறம், பொருள், இன்பம் ஆகியன நீண்டு அகன்ற முப்பெரும் கிளைகளாகவும் 133 இயல்களும் சல்லி வேர்களாகவும் உயிர்ொடியாக விளங்கும் 1330 குறள்களும் மரத்தின் உறுதியான தண்டாகவும், அக்குறள்களின் விரவியுள்ள தெரிநிலை    பொருள்களும், உள்ளார்ந்த பொருளுண்மைகளும் கனியைப் போன்றனவாகவும் உள்ளன. 

 எஸ். கைலாசபதி அவர்கள் பின்வருமாறு உறரக்கின்றார்.

“சுருக்கமாக ஈரடியில் படைக்கப்பட்டிருப்பதனால் வாசிப்பதற்கு மிகவும் சுலபமாகத் தோன்றினாலும், அதன் உண்மைப் பொருளை உணர்தல் அவ்வளவு எளிதன்று. திருக்குறளில் வேதத்தின் சாரம் அடங்கியுள்ளததாடு ஆய்பவர்களின் உள்ளதைப் பண்படுத்துவதாகவும் அஃது அமைகின்றது" S.கைலாசபதி திருக்குறள் காட்டும் நெறி, பக்- 96.

“திருவள்ளுவர் தனது குறளில் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை மட்டுமே படைத்துள்ளார்.

ஆயினும் இதன்வழி கூறப்படும் மறைபொருள் என்னவெனில், இவை அனைத்தையும் முறையாகப் பின்பற்றி, உலகில் வாழ வேண்டிய நெறிப்படி வாழ்பவர்கள் கண்டிப்பாக வீடு பேறு (மோட்சத்தை) அடைவர் என்பட்தே ஆகும் (அப்படி ஒன்று இருப்பின்). ஏனெனில், மோட்சம் என்ற பேச்சு எழுந்தாலேஅதனுள் மதம் சம்பந்தப்பட்ட கொள்கைகள் தொக்கி நிற்கின்றன. மேலும், மதம் சார்ந்த நம்பிக்கைகளும் கைகோர்த்துக் கொள்கின்றன.  எப்போது இவ்வாறான மதக் கொள்கைகளும், நம்பிக்கைகளும் எழுகின்றனவோ, அப்போது அறிவியல் முறைப்படி ஆதாரப்பூர்வமாகச் சிந்திக்க வழி இல்லாமல் போய்விடுகின்றது. ஆனால், அறம், பொருள் இன்பம் ஆகியவற்றற விளக்கிய வள்ளுவப் பெருந்தகை,மோட்சம் குறித்த செய்திகளை நேரடியாக எந்த இடத்திலும் பயன்படுத்ததவே இல்லை. இதன்வழி, அறிவியல் முறைப்படி ஆதாரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஆய்வுக்கு வள்ளுவர் இடங்கொடுத்துள்ளார் என்பததாடு, மதங்களுக்கிடையிலான கருத்து பேதங்களுக்கும், பூசல்களுக்கும் வழி ஏற்படுத்தாது தவிர்த்தும் விட்டார்.”30  என திருொவுக்கரசர் தனது நூலில் கூறியிருக்கின்றார்.

மு. வரதராசைார் சுட்டிக்காட்டுகின்றார்.                                                                                                                                                                                முதலாவது : அறவழியில் சென்று, அறக்கொள்கைகனள ஒழுகி, பொருள் தேடுபவன் பேரானந்தத்தை அடைகின்றான். அவ்வாறு அவன் பெரும் பேரானந்தம் , இம்மையிலும் மறுமையிலும் அவனுக்குத் தொடர்ந்து இருக்கும். இஃது உலக நியதி.

இரண்டாவது:அறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அறவழியில் குடும்பத்தைச் செலுத்தி வாழ்பவான் உண்னமயாைன இன்பத்தைப் பெறுகின்றான். அப்படி வாழ்வாங்கு வாழ்பவன் மாியாதைக்கும் போற்றுதலுக்கும் உாியவனாகின்றான்.

மூன்றாவது : புனித நிலையில் இருப்பபோர், தங்களுக்குப் பாதகமான சூழலிலும், எத்தகைய துன்பங்கள் நேர்ந்த போதிலும் கூட அவற்றைத் தாங்கிக்கொள்வதோடு, எந்த சூழலிலும் பிறனரரை ம்மனதளவிலும் கூட காயப்படுத்த மாட்டார்கள். அத்தாடு உலகத்தால் வெறுக்கத்தக்க எந்த காாியங்கனளயும் செய்ய மாட்டார்கள். இவ்வாறனவர்களுக்கே முக்தி கிட்டுகின்றது.



-- Edited by admin on Tuesday 4th of September 2018 02:32:58 PM



-- Edited by admin on Tuesday 4th of September 2018 03:29:24 PM

__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஆசிரம அறம் எனப்படுவது ஒரு மனிதன் தன் வொழ்நொளில் ைைந்து கசல்ல வவண்டிய நொன்கு பருவங்ைளில் ைகைப்பிடித்து ஒழுை வவண்டிய அறத்கதக் குறிக்ைின்றது. அகவ பிரம்மச்சொியம் (மொணவர் பருவம்), ைிரைஸ்தம் (இல்லற வொழ்க்கை), வனப்பிரஸ்தம் (ைைகமைள் யொவும் முடிக்கும் பருவம்) மற்றும் சன்யொசம் (துறவு வொழ்க்கை) ஆைியகவைளொகும்.

“வர்ணொசிரம அறம் அவசியம் ைகைப்பிடிக்ை வவண்டிய ஒன்றொகும். ஒவ்கவொருவரது அல்லது ஒவ்கவொரு பருவத்தினரது வொழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப கபொறுப்புைளும் மொறுபடுைின்றன. இதகன ‘விவசஷ அறம்’ என குறிக்ைின்றனர். இதன் அடிப்பகையில் ஒவ்கவொருவருக்கும் தகலயொய கபொறுப்பு ஒன்று உண்டு. இது அவரவருக்கு உொித்தொன வழக்ைமொன அறங்ைளொகும். நற்குணத்கதக் கைொண்டிருத்தல், அன்பு பொரொட்டுதல், சுயக் ைட்டுப்பொடு, ைொதல், ைருகண, கைொல்லொகம, ைள்ளுண்ணொகம ஆைியன கபொதுவொை அகனவருக்கும் உொித்தொன அறங்ைளொகும். வருணொசிரம அறம் இதிலிருந்து சற்று மொறுபட்டு

26

வழக்ைமொன அறங்ைளுைன் உள அறங்ைளுக்கும் முக்ைியத்துவம் அளிக்ைின்றது.”21

என முக்ைர்ைீ அவர்ைள் ைருத்துகரக்ைின்றொர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நாம் செய்யும் அறச்செயல்கள் நமக்கு நன்மையை விளைவிக்கின்றன நாம் தீய செயல் செய்தால் அவை பாவச்சுமையை சேர்க்கின்றன நாம் பாவங்களை தொடர்ந்து செய்தால் அது நமக்கு பிறப்புகளை கொடுக்கிறது பாவங்கள் பாவங்கள் நாம் செய்வதற்கு காரணமாயுள்ளது ஆசை நாம் செய்யும் அறங்களை நம்மை காக்கும்

 அறிவுசார் வாழ்க்கையில் ஆசையே பாவங்களை செய்ய தூண்டுகிறது பாவங்கள் பிறப்பை மீண்டும் மீண்டும் தருகின்றது பிறப்பற்ற நிலையில் இறைவனோடு கலக்கும் போது ஏற்படுகிறது இதை நோக்கம் வீடுபேறு என்கிறோம் வள்ளுவர் பிறவிப் பெருங்கடல் நீந்த இறைவனோடு சேர வேண்டும் என்கிறார்

 

பண்டைத் தமிழகத்தில் சட்டமும் நீதியும் நாம் பண்டைய தமிழரின் வாழ்வியலை அறிய உதவியாய் இருப்பது சங்க இலக்கியங்கள் கல்வெட்டுகள் செப்பேடுகள் என்பன ஆகும்.

 மேலுள்ள மூன்றையும் ஒருசேர பார்க்கின்றபோது தமிழகத்தில் சட்டம் மற்றும் நீதி ஆகியவை பற்றிக் கூறப்படும் கருத்துக்கள் மனுதர்ம சாஸ்திரம் போன்ற நீதி நூல்கள், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் மற்றும் பௌத்த சமண நீதி நூல்களில் காணப்படும் கருத்துக்கள் ஆகியவற்றோடு ஒட்டி செய்வதை காண முடிகிறது. இந்த ஒற்றுமை ஏறத்தாழ இந்திய துணைக்கண்டம் முழுவதும் ஒரே விதமான சட்டம் நீதி ஆகியவையும் அதன் தொடர்பான அமைப்புகளும் பதக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கரிகால சோழனின் சாஸனம் ஒன்று இருக்கிறது. அது நல்ல சமஸ்கிருத பாஷையில் அமைந்திருக்கிறது.

பாத்ராகலித வேதானாம் சாஸ்த்ர மார்க்கா நுஸாரிணாம் |

ததேது அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாஸனம் ||

கரிகாலன் இதில் தன்னை ‘அரிகாலனாகிய கரிகாலன்’ என்கிறான். ‘அரி’ என்றால் விரோதி என்று அர்த்தம். விரோதிகளுக்கு யமனாக இருக்கிற வீராதி வீரன்தான் ‘அரிகாலன்’. சரி, கரிகாலனுடைய அந்த விரோதிகள் யார்? வேத சாஸ்திர மார்கத்தை அநுசரிக்காதவர்கள் அனைவரும்தான் அவனுடைய விரோதிகள். வேத சாஸ்திர வழியில் செல்கிறவர்களை ரக்ஷிக்க வேண்டும் என்பதே கரிகாலனின் சாஸனம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பழந் தமிழகத்தின் மிகப் பழைய அரச மரமாக கருதப்படுகின்ற பாண்டிய மரபு நீதி வழங்குவதில் சிறந்து விளங்கியது பாண்டிய மன்னர்கள் ஆசாரங்களை அனுஷ்டிப்பதற்கு மனுவையும் ஞானத்தில் பிரகஸ்பதியும் விஞ்சி நின்றதாக பாண்டியர் செப்பேடுகள் கூறுகின்றன இந்தச் செப்பேடுகள் பாண்டிய அரசர்களை மனுவோடு இணைத்து மனோபவம் மனுசனா மனோ சாமிநாதன் மற்றும் மனுசர் இது போன்று பல அடைமொழிகள் பெயர்களில் அழைக்கின்றனர் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் மனுதர்ம மனுதர்ம மார்க்கத்தின்படி நீதி வழங்கினான் என்று சிவரமங்கலச் செப்பேடு கூறுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருவள்ளுவர் பல விஷயங்களை வட நூல்களில் இருந்து எடுத்து கையாண்டுள்ளார் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது திருக்குறளில் காலம் போக அவருக்கு பின்னால தான் என்பது தெளிவாகும் திருக்குறளுக்கு முதலில் எழுந்த உரை மணக்குடவர் உரை ஆகும் மணக்குடவர் ஒரு சமணர் திருக்குறளுக்கு பழைய உரைகள் பத்து என ஒரு பாடல் கூறுகிறது இன்று நம்மிடம் கிடைத்துள்ளது ஐந்து மட்டுமே பரிமேலழகர் உரை என்பது பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது பரிமேலழகர் பெருமளவில் மணக்குடவர் உரையை ஒட்டியே தான் உரை செய்துள்ளார் பரிமேலழகர் உரையில் அவர் திருக்குறள் விளக்கத்திற்கு சங்க இலக்கியத்தில் இருந்தும் பிற இலக்கியங்களில் இருந்தும் பல உதாரணம் காட்டி கூறுவார் இதனால் பரிமேலழகர் உரை என்பது இலக்கண உரை என்றும் அழைக்கப்படும் இப்படி எடுத்த பேட்டி இது

திருக்குறளில் பல புதிய சொற்களை காண்கிறோம் தமிழில் நாம் இன்றைக்கு பலபேர் பல இருக்கிறார் என்பதை அவர்கள் இவர்கள் என்று சொல்வோம் சங்க இலக்கியத்தில் உயர்திணைப் பெயர்கள் விதி கிடையாது திருக்குறளில் மூன்று இடங்களில் மற்றையவர்கள் என்பன போன்ற கல்வியோடு உள்ளது

திருவள்ளுவர் வேதக் கருத்துக்களை சுருக்கமாக இலக்கியத்தில் இரண்டு வரிகளில் குரலாக கொடுத்துள்ளார் வெண்பா இலக்கியம் என்பதில் முதலில் ஆரம்பித்தது சங்க இலக்கியத்தில் பிற்கால நூல்களான கலித்தொகை மற்றும் பரிபாடலில்

 பதினெண்கீழ்க்கணக்கு எனும் அந்தப் பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை வெண்பாவில் உள்ளன

 திருக்குறள் குறள் வெண்பா என்னும் நடையில் உள்ளது சங்க இலக்கியம் முழுவதும் ஆசிரியப்பாவில் உள்ளது ஆசிரியப்பாவின் மகிழ்ச்சி அடைந்த வடிவமே கழிப்பறை மற்றும் பரிபாடல் சங்க இலக்கியத்தின் தொன்மையானவை பூமி 200mb அதன் மிகப் பிற்காலம் ஆறாம் நூற்றாண்டு வரை என்றும் அறிஞர்கள் கூறுவர் தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்கு பிற்பாடாக இருந்தது தொல்காப்பியத்தில் வெண்பாவிற்கு இலக்கணம் உள்ளது தொல்காப்பியத்தில் குருவின் பா என சொல்லப்பட்டுள்ளது குறள் வெண்பா என்பது குரு வெண்பா என்பதிலிருந்து மகிழ்ச்சி அடைந்த வடிவம் சங்க இலக்கியத்தில் இல்லாத ஒரு பெண்கள் தொல்காப்பியத்தில் காணப்படுகிறது சங்க இலக்கியத்தில் இல்லாத பல புதிய சொற்கள் கலித்தொகையிலும் பரிபாடலிலும் காணப்படுகிறது சங்க இலக்கியத்தில் பாடப்பட்ட வகை அகமும் புறமும் மட்டுமே சங்ககால பாடல்களில் பாயிரம் கடவுள் வாழ்த்து கிடையாது இன்று நம்மிடம் சங்கப்பாக்களில் உள்ள கடவுள் வாழ்த்து ஒன்பதாம் நூற்றாண்டு பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவரால் சேர்க்கப்பட்டவை ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே பாயிரம் பாடும் முறை வந்தது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியத்தில் பாயிரம் உள்ளது திருவள்ளுவரும் தன்னுடைய முப்பால் அறம் பொருள் இன்பம் என பாடியவர் அதில் முதன்மையாக பாயிரம் என நான்கு அதிகாரங்கள் எழுதியுள்ளார்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருக்குறள் போற்றும் அறவாழ்வு

c03120ad.gif (1750 bytes)E

 

தமிழரின் அறவாழ்வைக் காட்டும் நூல்களில் திருக்குறளின் பங்கு மிகவும் உயரியது. திருக்குறள் ஒரு சமூகத்தளத்தில் நின்று பாடப்பட்டது எனினும், உலகனைத்திற்கும் பொதுவான தன்மைகள் அந்நூலில் மிகுதியாயுள்ளன. கடுமையான குறிக்கோள்களை நடைமுறைக்கு ஒவ்வாத நிலையிலிருந்து பேசாமல், வாழ்க்கையை உயர்ந்ததாகவும், இனியதாகவும் ஆக்கிக் கொள்வதற்குப் பயன்படும் ஒரு பண்பாட்டு வழிகாட்டியாகத் திருக்குறள் விளங்குகின்றது. திருக்குறள் காட்டும் அறநெறிக் கோட்பாடுகள் பிறிதொரு பாடத்தொகுப்பில் ('வள்ளுவரின் வாழ்வியல் தத்துவம்') விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. இப்பாடத்தில் ஒழுக்கம், கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, வரைவின் மகளிர் - இவை பற்றிய கருத்துகளை மட்டும் காண்போம்.

3.2.1 திருவள்ளுவர் கூறும் கள் உண்ணாமை

சங்க காலச் சமூகம் கள் குடிப்பதைத் தவறென்று குறிக்கவில்லை. விருந்தோம்புவதில் கள் ஒரு தகுதியான இடத்தைப் பெற்றிருந்தது. ஆனால் திருவள்ளுவர் கள் குடித்தல் தீய பழக்கமென்பதை அறிவுறுத்தத் தயங்கவில்லை. கள் குடிப்பதால் வரும் கேடுகளைத் திருவள்ளுவர் கள் உண்ணாமை என்ற அதிகாரத்தில் கீழ்க்காணும் வகைகளில் கூறுகின்றார்:

Kudikaaran(Drunkard)
கள் மயக்கம்

  • கள் குடிப்பவரைக் கண்டு பகைவர் அஞ்சமாட்டார்.

  • கள் குடிப்பவர் புகழை இழந்துவிடுவர்.

  • கள் குடிப்பவர் சான்றோரால் மதிக்கப்படமாட்டார்.

  • கள் குடிப்பவரைத் தாயும் வெறுப்பாள்.

  • கள் குடிப்பவரை நாணம் என்னும் உணர்ச்சி நீங்கிவிடும்.

  • கள் குடித்தல் அறியாமையின் விளைவாகும்.

  • கள் குடித்தலும் இறப்பும் வேறுபட்டவை அல்ல.

  • கள் குடிப்பவரைக் கண்டு பிறர் நகைப்பர்.

  • கள் குடிப்பதனால் பிறர் அறியாமல் இருந்த குற்றங்கள் எல்லாம் வெளிப்படும்.

  • கள் உண்பவனைத் திருத்துதல் இயலாது.

  • கள் உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகிய ஒருவன், சுய நினைவில் இருக்கும் போது, கள் உண்டு மயங்கிய ஒருவனைக் கண்டால் திருந்தக் கூடும்.

ஒரு மனிதனைப் பண்பாட்டு உயர்நிலையிலிருந்து கீழே தள்ளிவிடும் இக்கொடிய பழக்கத்தைத் திருவள்ளுவரே முதன்முதலில் இந்த அளவுக்குக் கண்டித்துள்ளார்.

 

3.2.2 ஒழுக்கம் விழுப்பம் தரும்

Ozukkaminmai(Immoral)

நல்ல நெறியில் வாழ்வது என்பது உடலுக்கும் மனத்திற்கும் நல்லது; சமூக அமைதிக்கும் இனியது. இன்று ஒழுக்கமின்மையே 'எய்ட்ஸ்' நோயை உருவாக்கியுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியுள்ளார்.

சங்க காலத்தில் பெரிதும் கடியப்படாத பரத்தைமையினையும் வள்ளுவர் கண்டிக்கின்றார். பொருள் கொடுத்து பெண் ஒருத்தியைத் தழுவுவது பிணத்தைத் தழுவுவதைப் போன்றது என்கிறார். சங்ககாலப் பண்பாடு பரத்தைமையைக் கண்டித்து மொழியவில்லை. ஆணின் ஒழுங்கைச் சங்கச் சமூகம் பெரிதும் வற்புறுத்தவில்லை. பரத்தை என்ற பெண்பாற் சொல் மட்டுமே சங்க இலக்கியத்தில் உண்டு. அதற்கு நிகராக ஆண்பாலுக்கும் பொருந்தப் பரத்தன் என்ற சொல்லைத் திருவள்ளுவரே ஆளக் காண்கிறோம் (குறள், 1311).

விலைமாதரின் தோளைச் சேர்வோர் கீழ்மக்கள் என்றும், அவ்வுறவு நரகத்தை ஒத்தது என்றும் வள்ளுவர் கூறுகின்றார்.

 

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
 குறள் - 919)

Tamil Audio

ஒழுக்க வரையறை இல்லாத பெண்களின் தோள்களைச் சேர்தல்இழிந்த மக்களுக்கு உரிய செயலாகும்; அச்செயல் சேற்றில் விழுந்து புரள்வது போலக் கீழானதாகும் என்பது மேற்சொன்ன குறளின் பொருளாகும்.

3.2.3 ஊன் உண்ணாமை

திருவள்ளுவர் அருள் உணர்வின் அடிப்படையில் புலால் உணவையும் மறுக்குமாறு அறிவுறுத்துகின்றார். சங்க காலத்தில் கபிலர், ஒளவையார் போன்ற பெரும் புலவர்களும் ஊன் உணவின் பெருமை பேசக் காண்கின்றோம். ஆனால் திருவள்ளுவர்,

 

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதுஊன் உண்பான் 
எங்ஙனம் ஆளும் அருள்.
 (குறள் - 251)

Tamil Audio

 

Pulaal Unnaamai(Vegetarian)
புலால் மறுப்பு

என்கின்றார். தன் உடம்பைப் பெருக்க வைத்துக்கொள்ள வேறொன்றின் ஊனை உண்பவன் எங்ஙனம் அருள் உணர்வைக் காட்ட முடியும் எனக் கேட்கிறார். சமண பௌத்த சமயங்களும் புலால் உண்ணுதலைக் கண்டித்திருக்கின்றன. தமிழகத்தில் அதைக் கண்டிக்கும் முதல் குரல் திருவள்ளுவருடையதாக இருந்திருக்கிறது. தமிழர் அருள் உணர்வு மிக்கவர். ஒரு பூங்கொடி, ஒரு மயில் பறவை என அஃறிணை உயிர்களும் துயருறுதல் கூடாது என நினைத்த சமூகத்தில் ஊன் உணவைச் சரியானதென்று கருத முடியாத நிலை தோன்றியதில் வியப்பில்லை. வைதிக சமயம் வேள்வியில் உயிர்க்கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது.

பசுவைப் புனிதமாகக் கருதுவதாகக் கூறும் வைதிக சமயம்முற்காலத்தில் வேள்வியின் பொருட்டுக் கொலைப்படுத்தப் பசுவைக் கட்டி வைத்திருந்ததனை மணிமேகலை குறிப்பிடுகின்றது. ஆயிரம் வேள்விகள் கூடப் பெரிதில்லை; ஓர் உயிரைக் கொல்லாத நோன்பே பெரியது என்கிறார் திருவள்ளுவர். புண்ணை யாராவது உண்பார்களா என அவ்வுணவில் ஓர் அருவருப்பை ஏற்படுத்துகிறார். திருவள்ளுவர் கண்டஇப்பண்பாடே அருளாளர்களின் சமயமாக வளர்ந்து இராமலிங்க வள்ளலாரின் உயிரிரக்கம் எனப்படும் சீவகாருணிய அறமாக ஓங்கியது. தமிழர்களில் பலர் சைவ உணவினராகவும், புலால் உண்பவர்களில் பலர் மாதத்தில் சில நாட்களேனும் நோன்பு மேற்கொள்வோராகவும் அமைவது இப்பண்பாட்டின் வளர்ச்சியால்தான் என அறியலாம்.

3.2.4 வாழ்க்கையில் இருநிலைகள்

தமிழர் பண்பாட்டில் மிகக் குறிப்பிடத்தக்க இரண்டு நிலைகள் இல்லறமும் துறவறமும் ஆகும். பிரம்மசரியம், சந்நியாசம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம் என்ற நான்கு நிலைகளை வடமொழி கூறுகின்றது. வடமொழி இதிகாசங்களில் இடம்பெறும் முனிவர்கள் காடுகளில் வாழ்ந்தாலும் மனைவி மக்களோடு வாழ்ந்தனர். அரசியல் துறையிலும் அவர்களுக்குப் பங்கு இருந்தது. மேனகை போன்ற பெண்களிடம் அவர்கள் மனத்தைப் பறிகொடுத்ததும் உண்டு. துருவாசர், விசுவாமித்திரர் போன்றோர் அடங்காச்சினம் கொண்டவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.  அம்முனிவர்கள் நீங்காத சாபங்களை இடுவோராகவும் இருந்துள்ளனர். தமிழர் பண்பாடு கண்ட இல்லறம் துறவறம் இவற்றினின்றும்வேறானவை. 

 

  • இல்லறம் எதற்கு?

 

இல்லறம் எதற்கு என்ற வினாவிற்குச் சங்க இலக்கியமானகுறிஞ்சிப் பாட்டு விளக்கம் கூறுவதைக் கேளுங்கள்!

Virundhombal(Hospitality)
விருந்து உபசரித்தல்

“பலரும் உண்ணும்படி அகலமாகக் கதவு திறந்து கிடக்கும் வாசலையுடைய பெரிய வீட்டில், சோற்றை வருகின்றவர்களுக்கெல்லாம் இல்லையென்னாமல் இட வேண்டும். அதனால் வீடு பொலிவு பெற வேண்டும். விருந்தினர் உண்டது போக மிஞ்சியிருக்கும் உணவை மனைவியாகிய நீ இட நான் உண்ண வேண்டும். அவ்வுயர்ந்த இல்லறம் நம்மைக் கரையேற்றும்"

என்று தலைவன் தன் காதலியிடம் கூறுகின்றான். ஒருவன் திருமணம் செய்து கொள்வதே விருந்தோம்பல் என்னும் கடமையைச் செய்ய என்று கூறும் பண்பாடு தமிழருடையதாக இருந்திருக்கின்றது.  வேளாண் சமூகத்தின் அடிப்படைப் பண்பாடு இதுதான். வீடு முழுவதும் நிறைந்திருக்கும் தானியத்தை அடுத்த விளைச்சல் வந்து சேருமுன் செலவழிக்க வேண்டும். விருந்து செய்யவும் விழாக் கொண்டாடவும் வேண்டும். பொருளாதார உலகில் 'பணம்' வந்துவிட்ட பிறகே, விளைச்சல் பொருள் பணமாக மாற்றப்பட்ட பிறகே இந்த விருந்திடும் உள்ளம் சுருங்கியிருக்கிறது.

 

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்விருந்து வானத் தவர்க்கு
 (குறள் - 86)

Tamil Audio

என்று விருந்து செய்தலை இடைவிடாத கடமையாகத் திருவள்ளுவர் கூறுகின்றார். எனவே இல்லறத்தின் தலையாய கடன் விருந்தோம்பலாகும்.

 

  • எது துறவறம்?

 

மனைவி, மக்கள், சுற்றத்தார் என நெருங்கிய உறவு வட்டத்தில் அன்பு காட்டி வாழ்ந்த ஒருவன் இல்லறத்தின் தேவைகளை நிறைவு செய்த நிலையில், தன்னை அடுத்த அயலார்க்கும், ஊரார்க்கும், பிறர்க்கும், பிற பிற உயிர்களுக்கும் நல்லன ஆற்றும் வகையில் அருள் உணர்ச்சி பெற வேண்டும். இதுவே துறவு. துறவு என்பது பற்று நீக்கி வாழ்வதன்று; பற்றின் விரிவு. துறவு நிலை அடையும் ஒருவன் தன் வீட்டிலுள்ளவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருந்த நிலை மாறி எல்லா உயிர்க்கும் அன்பு செய்வோராக மாறுகிறான். இதுவே துறவறம் எனப்பட்டது. அருள் என்பது அன்பின் குழந்தை என்கிறார் திருவள்ளுவர். எனவே திருவள்ளுவர் கூறும் துறவறம் நாட்டில் ஒவ்வொருவர்க்கும் உரியது என அறியலாம்.

 

3.2.5 சில நம்பிக்கைகள்

தமிழர் பண்பாட்டில், நல்வினை, தீவினை, ஊழ், மறுபிறப்புஆகியவற்றுக்குப் பேரிடமுண்டு. வினைகளின் பயன் தொடர்ந்து அடுத்தடுத்த பிறப்புகளைத் தரும் எனத் தமிழர் நம்பினர். திருவள்ளுவரும் இக்கருத்துக்களைக் கொண்டிருந்தார்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
        (குறள்-371)

 

என்று ஊழின் வலிமையைத் திருவள்ளுவர் கூறுகின்றார். எனினும் ஊழையும் விலக்க முடியும் என்பதே வள்ளுவரின் புரட்சி நோக்கமாகும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர்

Audio

ஆள்வினையோடு தொடர்ந்து முயல்பவர் ஊழின்
தாக்குதலை வென்றுவிட முடியும் என்கிறார்

வள்ளுவர்.
விதி வலியது மாற்ற முடியாதது என்று கூறி அழியும்
குருட்டு நம்பிக்கை கொண்ட சமூகங்களைப் போல
அல்லாமல் முயற்சியின் வலிமையை வற்புறுத்திய
சமூகமாகத் தமிழ்ச் சமூகம் காட்சி தருகின்றது.

3.2.6 வாழ்க்கைக் கடமைகள்

பொருள் ஈட்டுதல், குடும்பத்தைப் பாதுகாத்தல், பிள்ளைகளை வளர்த்தல், சமூகத் தொண்டு செய்தல் போன்ற பல கடமைகள்மனிதர்களுக்கு உள்ளன. தனி மனிதனாயினும் அவனும் சமூகத்தில் ஓர் உறுப்பினன். அவ்வகையில் வீட்டுக்கும் நாட்டுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளைத் தமிழ் அறநூல்கள் எடுத்துரைக்கின்றன.

 

  • பொருள் ஈட்டுதல்

 

வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது என்பதைத் தமிழினம் உணர்ந்திருந்தது. பொருள் உடையவரே அறத்தைச் செய்யும் இன்பத்தைத் துய்க்கவும் முடியும் என்பதைத் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார். இரண்டு யானைகள் போரிடும் போது அக்காட்சியை மலை மேலிருந்து பார்ப்பதைப் போலப் பாதுகாப்புடையது பொருள் உடையவன் நிலை என்கிறார். அன்பு பெற்றெடுத்த குழந்தை அருள். அது பொருள் என்னும் செவிலித் தாயால் வளர்க்கப்படும் என்று கூறுகின்றார்.

 

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை 
எல்லாரும் செய்வர் சிறப்பு
 (குறள் - 752)

Audio

என்பது உலக நடைமுறையை உணர்ந்து கூறும் குறளாகும். பொருளை முயற்சியால் அறவழிகளில் தேடி நற்செயல்களுக்காக அதனைச் செலவிட வேண்டுமென்பது தமிழர் வாழ்க்கை நோக்கமாகும். பழியஞ்சிப் பிறரோடு பகுத்துண்டு, ஒப்புரவும் ஈகையும் கொண்டு பண்போடு வாழ்வோர் சான்றாண்மை உடையவர் ஆவர். இத்தகையோர் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் ஆவர். இவர்கள் மறைந்த பின்னும் தெய்வமென்று போற்றப்படுவர் என வள்ளுவர் கூறுகின்றார்.

 

  • பலர்க்கும் உரிய கடமைகள்

 

வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் கடமை இருக்கிறது. தந்தை, தன் மகனைக் கற்றவனாகவும் அவையில் முன்நிற்பவனாகவும் ஆக்க வேண்டும். மகன், 'இவனுடைய தந்தை நோன்பு நோற்று இவனைப் பெற்றிருக்கின்றான்' என்று கூறுமாறு சிறந்து விளங்க வேண்டும். மனைவி, தற்காத்துத் தற்கொண்டானைப் பேணி, புகழை நீங்காமல் காத்து நற்பண்புகளில் சோர்வற்றவள் ஆதல் வேண்டும். அரசர், தன்கீழ் வாழும் குடிமக்களை உயிரெனக் கருதிக் காத்துக் காட்சிக்கு எளியனாகவும் கடுஞ்சொல்லன் அல்லனாகவும் விளங்க வேண்டும். அமைச்சர், வேந்தனுக்கு உறுதுணையாய்ச் சொல்வன்மை, வினைத்தூய்மை உடையவராதல் வேண்டும். உழவர், விளைநிலத்தை நாள்தோறும் சென்று கண்டு, அதனைக் காவல் செய்து பயிர்களுக்குச் செய்யத்தகுவன செய்தல் வேண்டும். ஆசிரியன், மெய்ப்பொருளை எல்லாரும் அறிந்து கொள்ள உரைப்பவனாக ஆதல் வேண்டும். மாணவன், செல்வர் முன் வறியவர் போல ஆசிரியர் முன் தாழ்ந்து நின்று கற்றல் வேண்டும். கணவன், தென் புலத்தார் தெய்வம் விருந்து சுற்றத்தார் தான் எனப்படும் ஐவர்க்கும் உரியன செய்ய வேண்டும். வணிகர், வாணிகத்தை நடுவுநிலைமை தவறாமல் செய்ய வேண்டும். சான்றோர், அன்பு நாண் ஒப்புரவுகண்ணோட்டம் வாய்மை ஆகிய ஐந்து பண்புகளைக் கொள்ளவேண்டும். இவ்வாறு வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் உரிய கடமையை வற்புறுத்தும் தமிழரின் அறநூல் சாதி, மதம் ஆகியவற்றைப் போற்றவில்லை.

3.2.7 மனத்தூய்மையே அறம்

 

தமிழ் அறநூல்கள் புறத்தூய்மையைவிட அகத்தூய்மையையே வற்புறுத்துகின்றன. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறி மனத்தில் மாசு இன்மையையே அறம் என்று கூறுகின்றது, தமிழ் அறம். சடங்குகள், ஆசாரங்கள், கழுவாய்கள் ஆகியவற்றுக்குத் தமிழர் வாழ்வில் பேரிடமில்லை. துறவி என்பவன் மொட்டையடித்துக் கொள்வதா, சடைமுடி கொள்வதா என்பன போன்ற வினாக்களுக்கு இங்கு இடமில்லை. புறப் புனைவுகள், வேடங்கள் ஆகியவற்றைத் தமிழர் போற்றவில்லை. மனத்தின்கண் தூய்மை, எவ்வாறு செயல்படுகின்றார் என்பவற்றைப் பொறுத்தே ஒருவர் சமுதாயத்தில் எத்தகையவர் என்பதை முடிவு செய்தனர். உருவு கண்டு போற்றுதலும் தூற்றுதலும் தமிழர்க்குப் பொருந்தாச் செயல்களாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இல்லறம் நாடினான் இனியவன்

—————- —–எம் விழைதரு பெருவிறல்
உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு,   200
சாறு அயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப,
மலரத் திறந்த வாயில் பலர் உணப்
பைந்நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசையில் வான் திணைப் புரையோர் கடும்பொடு,   205
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு,
அறம் புணை ஆகத் தேற்றிப், (199-208)

The Sweet Man Desired Marriage

The victorious man told us about how they
as a couple would feed everybody who came
to their big, splendid house with an open door.
Food would be cooked in big pots as done on
festive days and meals would be served,
cooked with rice, abundant amouns of ghee
and fresh fat.

He said to my friend, “O noble one!
After those of great heritage and relatives
have eaten their full, we will eat together the
left-over food.  Eating with you will be special.
We will live with justice, and be a raft to each
other in marriage,”.

Meanings:   எம் விழைதரு – desiring us, பெருவிறல் – the man who is greatly victorious (பெருவிறல் – அன்மொழித்தொகை), உள்ளத் தன்மை – about the mind (of the heroine), உள்ளினன் கொண்டு – he thought about it, சாறு அயர்ந்து அன்ன – like how festivals were celebrated, மிடாஅ – in a big pot (இசை நிறை அளபெடை), சொன்றி – rice, வருநர்க்கு – for those who come, வரையா – without limit, வள நகர் – rich house, பொற்ப – to be splendid, மலரத் திறந்த – wide open, வாயில் – entrance, பலர் உண – for many to eat (உண உண்ண என்பதன் விகாரம்), பை நிணம் – fresh fat, ஒழுகிய – flowing, நெய் மலி அடிசில் – ghee filled rice, வசையில் – without fault, வான் திணை – superior clans, noble heritage, புரையோர் – superior people, கடும்பொடு – with relatives, விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் – left over after they are fed festive meals, பெருந்தகை – noble one, நின்னோடு உண்டலும் – eating with you, புரைவது – it will be great, என்று ஆங்கு – thus he said there, அறம் – justice, charity, புணையாகத் தேற்றி – he explained that they will be a raft to each other



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard