Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தோமா இந்தியா புனைக்கதைகள் தரவுகள் ரப்பான் பாட்டு


Guru

Status: Offline
Posts: 7474
Date:
தோமா இந்தியா புனைக்கதைகள் தரவுகள் ரப்பான் பாட்டு
Permalink  
 


ரப்பான் பாட்டு[தொகு]

கொண்டபோரஸ் அரசரின் நாட்டில் பணியாற்றிய பின்பு, அங்கிருந்து செக்கோட்டிரா தீவு வழியாக தோமா மீண்டும் பாலஸ்தீன் சென்றார் என்று வரலாறு கூறுகிறது. அதன் பிறகு மீண்டும் இந்தியாவில் நற்செய்தி பணி செய்ய விரும்பிய தோமா, பண்டைய தமிழகத்தின் சேர நாட்டுதுறைமுகங்களில் ஒன்றான முசிறியில் கி.பி.52 ஆம் ஆண்டு வந்து இறங்கினார். மலபார் கடற்கரை பகுதியில் போதித்து, ஆயிரக்கணக்கான மக்களை கிறிஸ்தவர்களாக மனந்திருப்பினார். தோமா கிறிஸ்தவர்கள் என்று தங்களை குறிப்பிடும், இவர்களது வாய்மொழி மரபாக உருவான பாடல்களின் தொகுப்பே ரப்பான் பாட்டு என்று அழைக்கப்படுகிறது.

திருவிதாங்கோடு அறப்பள்ளி

திருத்தூதர் தோமாவிடம் திருமுழுக்கு பெற்ற ஒருவரின் பேரனான தாமஸ் ரப்பான் என்பவர், கி.பி.2ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் இதன் மூலப்பாடலை இயற்றியதாக அறிகிறோம். பல நூற்றாண்டுகளாக வாய்மொழி மரபாக வழங்கி வந்த இந்த பாடல்கள், 16 ஆம் நூற்றாண்டில் தற்போதைய வடிவில் எழுத்து வடிவம் பெற்றன. மலியங்கரா (கொடுங்கல்லூர்), கொல்லம் (குய்லோன்), நிரனம், நிலக்கல் (சாயல்), கோக்கமங்கலம் (பள்ளிபுரம்), கொட்டகாவு (பரவூர்), பழயூர்[18] உள்ளிட்ட ஏழு இடங்களில் வாழ்ந்த மக்களிடையே தோமா ஆற்றிய பணி குறித்து ரப்பான் பாட்டு விவரிக்கிறது. இங்கு திருத்தூதர் தோமாவால் கட்டப்பட்ட ஆலயங்கள், பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் தோமாவால் நிறுவப்பட்ட ஆலயம் அறப்பள்ளி என்று அழைக்கப்படுகிறது.

இயேசுவைப் பற்றிய தோமாவின் போதனைகளை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பிய மக்களுக்கு, தோமா திருமுழுக்கு கொடுத்தது குறித்தும், அவர்களிடையே பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியது குறித்தும் இந்த பாடல்கள் குறிப்பிடுகின்றன. தோமாவால் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கையும் இதில் காண முடிகிறது. ஒருமுறை வானத்தை நோக்கி நீரை தெளித்தவாறு மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்த பிராமணர்கள் சிலரைக் கண்ட தோமா, நீர்த்துளிகளை அந்தரத்திலேயே நிறுத்தி அற்புதம் செய்ததாகவும், அதைக் கண்ட அனைவரும் கிறிஸ்தவர்களாக மனந்திரும்பியதாகவும் ஒரு பாடல் கூறுகிறது.[1]

மலபார் கடற்கரையில் ஏழு அறப்பள்ளிகளை நிறுவிய பிறகு, சோழமண்டல கடற்கரை வழியாக தோமா மயிலாப்பூர் சென்றதாக இந்த பாடல்கள் கூறுகின்றன. அங்கு வாழ்ந்த மக்களிடையே பல்வேறு அற்புதங்கள் மூலம் இயேசுவின் நற்செய்தியை அறிவித்ததாக காண்கிறோம். அரசரையும் மனந்திருப்பும் முயற்சியில் தோமா ஈடுபட்டிருந்த வேளையில், தோமா மீது பொறாமை கொண்ட சிலர் அவரை ஈட்டியால் குத்தி கொலை செய்ததாக இந்த பாடல்கள் தெரிவிக்கின்றன.[16] சென்னையில் உள்ள புனித தோமையார் மலையே, தோமா குத்தி கொல்லப்பட்ட இடம் என்றும், சாந்தோம் ஆலயம் உள்ள இடத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார் என்றும் மரபுகள், வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் அகழ்வாய்வுகள் மூலம் அறிகிறோம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: தோமா இந்தியா புனைக்கதைகள் தரவுகள் ரப்பான் பாட்டு
Permalink  
 


 

 

 Christians are very careful, they use the term "Tradition" -What does Tradition means - Rev.A.M.Mundaden says-

.. whole story which lies shrouded in Legends, fables, fictions and confusing details. Quiet often One has no other option but tto fall back on what is claimed as tradion. No wonder then that Speculations,Surmises and Presumptions have characterized many studies of the period. To avoid filling into such pitfalls out of a large basket of all sorts of materials all claiming to be Tradtion-facts: Legends, Myths, wishful thinking, telescoping of events easy hormonisation etc.,

P-2  History of Christianity in India, Vol. I, by Fr. A. Mathias Mundadan, Professor of Church History and Theology at the Dharmaram Pontifical Institute, Bangalore

HOW RELIABLE IS RAMBAN PATTU Or Other Keralite Traditions?

Rev.A.M.Mundaden says-Indian Tradition is clearly influenced by the accounts of the Acts of Thomas and also by the East Syrian Tradition.. Some of the elements of the Sacraments pf Confirmation may be regarded as details, which have crept in to the Account from the Portuguese Sources P.32 ibid The so called details available are mostly the fruit of fertile imaginations, generously employed to fill the gaps and provide facile interpretation. P-3 ibid

Ramban Song as per Church claims was composed in 17th Century. But one of the Nasrani Thomas Christian website says that Linguistically it can be dated to 19th Century. www.stmaryssharjah.com, -and

article titled ST. THOMAS THE APOSTLE- Written by Mr. Mathen Manathala says-This tradition has many contradictions and factual errors. First of all there were no Brahmins in the Malabar Coast until the eight century. Secondly, the places where he is supposed to have founded churches were non existent as those parts of the western coast were still under the Arabian Sea. Thirdly, ordination of Kassesos and Rambans was not practiced in Christianity until the first quarter of the second century any where in the world. The only written evidence to this Malabar tradition is found in the Ramban Pattu supposed to be written in early 17th century, but the language used denotes a much later time, sometime in the 19th century. Ramban Pattu is made from Acts of Thomas and Portughese Legends.

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard