Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Munnurai

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Munnurai
Permalink  
 
தென்குமரி வடபெருங்கல் 

குணகுடகட லாவெல்லை  வளர்ச்சி

தென் திசையில் குமரி மலையும், வட திசையில் இமயமும், கிழக்கு மேற்கில் கடல் எல்லையாகவும் இறைவன் வரலாற்றில் ஆளும் புண்ணிய பூமியாய் விளங்கும் இந்திய நாடு 2000 ஆண்டுகள் உலகின்  பெரும்  பணக்கார நாடாக,  உற்பத்தியில் , தொழில்  நுட்பம்  அனைத்திலும் முன்னேறிய நாடக் இருந்தமை ஆக்ஸ்ஸ்போர்டு பல்கலைக் கழக பேராசிரியர் ஆங்கஸ் மாடிசன்  ஆய்வு  நூல் காட்டும்.

https://www.livemint.com/Opinion/JFl9w4ydmFuc2Ih3pMKHvJ/Complex-truths-about-colonial-Indias-economy.html

கடவுள் நிலைய கல் ஓங்கு நெடுவரை

வடதிசை எல்லை இமயம் ஆக.

கடவுள் நிலை பெற்று, ஓங்கி நிற்கும் கற்களை உடைய, நீண்ட மலையான வடக்குத் திசையில் உள்ள இமயமலை எல்லையாக என்பது பொருள்.   குறுந்தொகையில் மாமூலனார் கட்டி என்னும் மன்னனின் நாட்டுக்கு வடக்கில் வடுகர் (தெலுங்கர்) வாழ்ந்து வந்தனர் என்பதை,

குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்.

(குறுந்தொகை,11:6-7)

-- Edited by admin on Sunday 30th of June 2019 03:46:02 PM

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 
..... கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை
வட திசை எல்லை இமயம் ஆக
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர்
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ
சொல் பல நாட்டை தொல் கவின் அழித்த
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ..... - பதி.43

பொருள்: கடவுள் நிலைபெற்ற உயர்ந்த உச்சியினையுடைய இமயமலையானது வடதிசை எல்லையாகவும் தெற்கில் குமரி எல்லையாகவும் இருக்கின்ற பரந்த நிலப்பரப்பில் முரசினை உடைய அரசர்கள் பலரும் பெரும் போரில் ஒழிய ஆரவாரத்துடன் அவர்களது பல நாடுகளின் அழகினைச் சிதைத்த வெற்றி தரும் போர்ப்படையினையுடைய பொன் போலும் மாலையணிந்த குட்டுவனே....

புறநானூற்றில் முரிஞ்சியூர் முடி நாகராயர், சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை வாழ்த்திப் பாடுகிறார்.

அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்

முத்தீ விளக்கின் துஞ்சும்

பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே!

.....இமையவர் உறையும் சிமையச் செவ்வரை வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடும் கோட்டு
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை..... - பெரும். 429

பொருள்: இமைமூடித் தியானிக்கும் பெரியோர்கள் வாழ்கின்ற சிகரத்தினை உடையதும் வெண்ணிறப் பஞ்சுப்பொதி மேகங்களைக் கிழித்துக்கொண்டு ஒளிர்ந்தவாறு விளங்கும் உச்சியினை உடையதுமான இமயமலையில் தோன்றி பொன்துகள்களை வாரிக்கொண்டுக் கீழிறங்கி வருகின்ற அழிவில்லாத கங்கை ஆறானது......

முத்து: எட்டு
....வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன்.... - சிறு. 48

பொருள்: இமயமலையின் வடக்குப் பகுதியில் வளைந்த வில்சின்னத்தினைப் பொறித்துவைத்தவனும் தூண்போல் திரண்ட தோட்களை உடையவனும் தேரினை உடையவனுமான குட்டுவன் ......

என்பதாக. மாலை நேரத்தில் அந்தணர் தம் அருங்கடன் செய்யும் போது வளர்க்கும் வேள்வித்தீ வெளிச்சத்தில் உறங்குகின்ற பொன் போல் ஒளிரும் இமயமும் பொதிகை மலையும் போன்று நீ வாழ்க என்பது பொருள். இமயம் எனும் மலைக்கும் சொல்லுக்கும் இணையாகப் பொதியம் என்றொரு சொல்லைப் புலவர் பயன்படுத்துவதை அறிக! அந்தி அருங்கடன் என்ற சொற்பிரயோகத்தை சந்தியா வந்தனம் எனும் பொருளில் புரிந்து கொள்ளலாம். 

கலித்தொகையின் குறிஞ்சிக் கலி 29 பாடல்களையும் பாடிய கபிலர், இரண்டாவது பாடலில்,

இமய வில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமையமர்ந்து உயர்மலை இருந்தனனாக.

என்று குறிக்கிறார். இமயமலையில் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்த, கங்கையினால் எப்போதும் ஈரம் கொண்டதாகிய சடையை உடைய இறைவன், இறைவியுடன் பொருந்தி, உயரிய கயிலை மலையில் இருந்தான் என்பது பொருள்.

-- Edited by admin on Sunday 30th of June 2019 03:49:48 PM

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 
புறநானூறு - 99 அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,

புறநானூறு - 99 அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. 
துறை: அரச வாகை. 

அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல

ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்
பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்
எழுபொறி நாட்டத்து எழா அத்தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய்; செருவேட்டு
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்

சென்றுஅமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்கு அரியை; இன்றும்
பரணன் பாடினன் மற்கொல், மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்அடு திகிரி ஏந்திய தோளே.

பொருளுரை:

தேவர்களைப் போற்றி, அவர்களுக்கு வேள்வி நடத்தி, 
அதன் மூலம் உணவுப் பொருட்களை அவர்களுக்கு உண்பித்துப் பெறுதற்கரிய முறைமையுடைய 
கரும்பை இவ்வுலகத்திற்குக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், 
கடலால் சூழப்பட்ட நிலத்தின்கண் தன் ஆணையை நிலைநாட்டிப் 
பழைய நிலைமை பொருந்திய மரபுடைய உன் முன்னோர் போல, 

காலில் பொன்னாலான அழகிய கழல்களும், 
கழுத்தில் பெரிய பனம்பூ மாலையும், 
பூக்கள் நிறைந்த சோலையும், பகைவரைக் குத்தியதால் ஈரத் தசைகளுடைய நெடிய வேலும், 

ஏழு சின்னங்களுடைய முத்திரையும் ஐயத்திற்கு இடமில்லாத அரசுரிமையும் தவறாமல் பெற்றிருந்தாலும், 
உன் மனம் நிறைவடையவில்லை. 

போரை விரும்பி, ஒலிக்கும் ஓசையுடன் கூடிய முரசோடு சென்று 
எழுவரையும் வென்ற பொழுது உன் ஆற்றல் வெளிப்பட்டது. 
அன்றும் நீ பாடுவதற்கு அறியவனாக இருந்தாய். 
கோவலூரில் பகைவரின் மிகுந்த வலிமையையும் அவர்களது அரண்களையும் 
அழித்து ஆட்சிச் சக்கரத்தை ஏந்திய 
உன் வலிமையைப் (தோளைப்) பாடுவது இன்றும் அரிதே. 

பரணனால் தானே உன்னைப் பாட முடிந்தது!

Description: (A Song About Adhiyamaan Nedumaan Anji)

You respect Devaas, do velvies, give the rare sugarcane to this world, 
rule up to Naahalogam which is under the sea and you live like your ancestors. 

You have golden kazhals on your legs and garland made up of palm flowers. 
You have parks with plenty of flowers, vel which has flesh, seven kinds of symbols and long lasting ruling right. 

Though you have so many like this, you went to fight with the seven kings. 
You defeated them and had the strength which cannot be sung. 

Now ,because of your Kovaloor victory you have attained the fame of being sing by Paranar. 
-Awvaiyaar

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 
367. வாழச் செய்த நல்வினை!

367. வாழச் செய்த நல்வினை! 

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87-இல் காண்க.
பாடப்பட்டோர்: சேரமான் மாவண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவேந்தர்கள்.
பாடலின் பின்னணி: ஒருகால், சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தனர்.  அதைக் கண்ட ஒளவையார் பெருமகிழ்ச்சியோடு இப்பாடலை இயற்றியுள்ளார். ’வேந்தர்களே! இவ்வுலகம் வேந்தர்களுக்கு உரியதாயினும், அவர்கள் இறந்தால், இவ்வுலகம் அவர்களோடு செல்வதில்லை. ஆகவே, அறநெறிகளில் பொருளீட்டி, இரவலர்க்கு வழங்கி, இன்பமாக வாழுங்கள்.  உங்கள் வாழ்நாட்களில் நீங்கள் செய்த நல்வினையைத் தவிர நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை.  எனக்குத் தெரிந்தது இதுதான். ‘  என்று இப்பாடலில் ஒளவையார் மூவேந்தர்களுக்கும் அறிவுரை கூறுகிறார். 
திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும், தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து                  5

பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும்இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது                           10

ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,
யான்அறி அளவையோ இதுவே; வானத்து             15

வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழை உறையினும்
உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநும் நாளே!

அருஞ்சொற்பொருள்: 1. நாகம் = நாகலோகம் = தேவலோகம்; பாகார் = பாகு+ஆர்; பாகு = பங்கு; ஆர்தல் = பொருந்துதல்; மண்டிலம் = வட்டம், நாடு. 3. நோன்மை = வலி; நோற்றார் = வலிமையுடையோர். 4. ஏற்றல் = இரத்தல். 6. பாசிழை = பாசு + இழை; பாசு = பசுமை; பொலம் = பொன். 7. நாரரி = நாரால் வடிக்கப்பட்ட; தேறல் = கள்ளின் தெளிவு; மாந்துதல் = குடித்தல், உண்ணுதல். 8. அருகாது = குறையாது; வீசுதல் = குறையாது கொடுத்தல். 9. வைகல் = நாள். 11. ஆழ்தல் = மூழ்குதல் (இறத்தல்); புணை = தெப்பம். 12. ஒன்று – இங்கு வீடுபேற்றைக் குறிக்கிறது; புரிதல் = விரும்பல்; இருபிறப்பாளர் = பார்ப்பனர். 13. முத்தீ = வேள்வி செய்யும் பொழுது அந்தணர்கள் வளர்க்கும் மூன்று வகையான தீ (ஆகவனீயம், தட்சிணாக்கினிகாருகபத்தியம்); புரைய = போல; காண் = அழகு; தக= பொருந்த. 16. வயங்குதல் = விளங்குதல்; இம் – ஒலிக் குறிப்பு. 17. உறை = மழைத்துளி. 18. பொலிதல் = சிறத்தல், செழித்தல்
 
கொண்டு கூட்டு: வேந்திர், மண்டிலம் செல்லா ஒழியும்; சொரிந்து, சிறந்து வீசி, வாழ்தல் வேண்டும்;  புணைபிறிது இல்லை, மீனினும் உறையினும் தோன்றிப் பொலிக எனக் கூட்டுக.
 
உரை: தேவலோகத்தைப் போன்ற பகுதிகளையுடைய நாடு, அந்த நாட்டு வேந்தனுடையதாக இருந்தாலும், அவ்வேந்தன் இறக்கும்பொழுது அது அவனுடன் செல்வதில்லை.  அது அவனுக்குப் பின்னர் வரும் தொடர்பில்லாத வலியோர்க்குப் போய்ச் சேரும். பொருளை வேண்டி இரந்த பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஈரக்கை நிறைய பூவும் பொன்னும் நீர்வார்த்துக் கொடுத்தும், நல்ல அணிகலன்களை அணிந்த மகளிர் பொற்கலங்களில் கொண்டுவந்து கொடுக்கும், நாரால் வடிகட்டப்பட்ட கள்ளின் தெளிவை அருந்தியும், மகிழ்ச்சியோடும், சிறப்பாகவும், இரவலர்க்கு அரிய அணிகலன்களைக் குறையாது கொடுத்தும், இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட நாட்கள் முழுதும் வாழ்க. நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும். வானத்தில் விளங்கும் விண்மீன்களையும் இம்மென்ற ஒலியுடன் பெய்யும் பெரிய மழைத்துளிகளையும் விட நும்முடைய வாழ்நாட்கள் மேம்பட்டு விளங்குவன ஆகுக.
 
சிறப்புக் குறிப்பு: புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களில், இந்த ஒரு பாடல் மட்டுமே மூவேந்தர்களும் ஒருங்கிருந்தபொழுது பாடப்பட்ட பாடல்.
 
ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம் என்பவை, அந்தணர்கள் வேள்வி செய்யும் பொழுது வளர்க்கும் மூன்று தீ வகைகளாகும்.  அவற்றுள் ஆகவனீயம் என்னும் தீ,தேவர்களுக்காக யாகசாலையின் வடகிழக்கில் நாற்கோணக் குண்டத்தில் வளர்க்கப்படுவது. தட்சிணாக்கினி என்னும் தீ,தெற்கில் எட்டாம் பிறைத் திங்கள் போன்ற வடிவமான குண்டமிட்டு அதில் வளர்க்கப்படும் தீ.  காருகபத்தியம் என்னும் தீ ஆகவனீயத்தை அடுத்து, வட்ட வடிவமைந்த குண்டமிட்டு அதில் வளர்க்கப்படும் தீ. இப்பாடலில், தமிழ் மூவேந்தர்களுக்கு முத்தீ உவமம் ஆகக் கூறப்பட்டுள்ளது.
 
மூவேந்தர்களும் அவரவர் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து, அறம் சார்ந்த செயல்களைச் செய்து தம்முடைய நாட்டு மக்களைப் பாதுகக்க வேண்டும் என்பது இப்பாடலில் ஒளவையார் கூறும் கருத்து. ஆனால், தமிழ் வேந்தர்கள் ஒற்றுமையின்றித் தமக்குள் போர் புரிந்து கொண்டிருந்ததால், களப்பிரரும், வடுகரும், மோரியரும், பல்லவரும், துருக்கரும், தெலுங்கரும், வெள்ளையரும் தமிழ் நாட்டை பலகாலம் ஆட்சி செய்தனர் என்பது வரலாறு கூறும் செய்தி.

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 
  நின் முன்னோர் எல்லாம் பார்ப்பனர் நோவன செய்யார் என்று ஒரு புலவர் ஓர் அரசனிடம் கூறுவதாக உரைக்கிறது புறம் 43. புறம் 99இல் ஔவையார் அதியமான் நெடுமானஞ்சியின் முன்னோர் அமரர்ப் பேணி ஆவுதி அருத்திய (தேவர்களை மகிழ்விக்க வேள்வி செய்த) பெருமையைப் பேசுகிறார். புறம் 166, நான்கு வேதம், ஆறு ஆங்கம் ஓதி உணர்ந்த அந்தணர்கள் அறம் ஒன்று மட்டுமே புரிந்ததையும் 21 வகையான வேள்விகள் பற்றியும் குறிப்பிடுகிறது. புறம் 367 முத்தீ பற்றிக் குறிப்பிடுகிறது.

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 
When Christopher Columbus and his crew reached the Caribbean, they were the first Europeans to encounter Capsicum, calling them "peppers" because they, like black pepper of the genus Piper known in Europe, have a spicy, hot taste unlike other foods.[10] 

https://en.wikipedia.org/wiki/Chili_pepper  29.6.2019

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 
Ancient times[edit]

Black peppercorns were found stuffed in the nostrils of Ramesses II, placed there as part of the mummification rituals shortly after his death in 1213 BCE.[23] Little else is known about the use of pepper in ancient Egypt and how it reached the Nile from South Asia.

Pepper (both long and black) was known in Greece at least as early as the fourth century BCE, though it was probably an uncommon and expensive item that only the very rich could afford.

A Roman-era trade route from India to Italy

By the time of the early Roman Empire, especially after Rome's conquest of Egypt in 30 BCE, open-ocean crossing of the Arabian Sea direct to Chera dynasty southern India's Malabar Coast was near routine. Details of this trading across the Indian Ocean have been passed down in the Periplus of the Erythraean Sea. According to the Greek geographer Strabo, the early empire sent a fleet of around 120 ships on an annual trip to India and back.[24] The fleet timed its travel across the Arabian Sea to take advantage of the predictable monsoon winds. Returning from India, the ships travelled up the Red Sea, from where the cargo was carried overland or via the Nile-Red Sea canal to the Nile River, barged to Alexandria, and shipped from there to Italy and Rome. The rough geographical outlines of this same trade route would dominate the pepper trade into Europe for a millennium and a half to come.

With ships sailing directly to the Malabar coast, black pepper was now travelling a shorter trade route than long pepper, and the prices reflected it. Pliny the Elder's Natural History tells us the prices in Rome around 77 CE: "Long pepper ... is 15 denarii per pound, while that of white pepper is seven, and of black, four." Pliny also complains, "There is no year in which India does not drain the Roman Empire of 50 million sesterces", and further moralizes on pepper:

It is quite surprising that the use of pepper has come so much into fashion, seeing that in other substances which we use, it is sometimes their sweetness, and sometimes their appearance that has attracted our notice; whereas, pepper has nothing in it that can plead as a recommendation to either fruit or berry, its only desirable quality being a certain pungency; and yet it is for this that we import it all the way from India! Who was the first to make trial of it as an article of food? and who, I wonder, was the man that was not content to prepare himself by hunger only for the satisfying of a greedy appetite?

— Pliny, Natural History 12.14[25]

He does not state whether the 50 million was the actual amount of money which found its way to India or the total retail cost of the items in Rome, and, elsewhere, he cites a figure of 100 million sesterces.[26]

Black pepper was a well-known and widespread, if expensive, seasoning in the Roman Empire. ApiciusDe re coquinaria, a third-century cookbook probably based at least partly on one from the first century CE, includes pepper in a majority of its recipes. Edward Gibbon wrote, in The History of the Decline and Fall of the Roman Empire, that pepper was "a favorite ingredient of the most expensive Roman cookery".

 பண்டைய காலம்[தொகு]

ஐரோப்பாவிலிருந்து தென் இந்தியா வரை நீளும் மிளகு வணிக பாதை

மிளகை பண்டைய காலத்தில், இலத்தீன் மொழியில் பைப்பர் என்று குறிப்பிட்டனர்.பழம்பெரும் நாகரிகமான எகிப்து நாகரிகத்தின் எச்சங்களாக விளங்கும், பிரமிடுகளில் பதப்படுத்தப்பட்டுள்ள இறந்த அரசர்களின் மூக்கு துவாரங்களில் மிளகு காணப்பட்டதன் மூலம் பண்டைய எகிப்த்து நாகரிகத்தில் மிளகு சிறந்த மருத்துவப் பொருளாகவும், விலையுயர்ந்த பொருளாகவும் மதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம். கி.மு. 1213 ஆம் ஆண்டில், எகிப்த்தின் அரசனான இரண்டாம் ராம்சிஸ் இறப்பின்போது நடத்தப்பட்ட இறுதி சடங்குகளில் மிளகு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும், மிளகின் பயன்பாடு எந்த அளவில் பண்டைய எகிப்து நாகரிகத்தில் இருந்தது என்பது பற்றியும், எவ்விதம் மிளகு இந்தியாவிலிருந்து எகிப்து வரை கொண்டு செல்லப்பட்டது பற்றியும் அறிய இயலவில்லை.

பண்டைய கிரேக்க நாகரிகத்திலும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் மிளகு மிகக்குறைந்த அளவில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மிக விலையுயர்ந்த பொருளாகவும், பெரும் தட்டுப்பாடுடைய பொருளாகவும் இருந்ததால், செல்வந்தர் மட்டுமே மிளகின் சுவையை அறிந்திருந்தனர். வாணிக வழிகள் நிலமார்க்கமாகவோ, அரபிக்கடலின் கடலோரமாக நீர்மார்க்கமாகவோ இருந்ததினால், மிளகு வாணிகம் குறைந்த அளவிலே நடைபெற்றது.

கி.மு. 30 இல், எகிப்து ரோமப் பேரரசின் பகுதியானபின், தென் இந்தியாவின் கேரளக் கடற்கரையில் இருந்து அரபிக் கடலின் வழியே ஐரோப்பாவுக்கு முறையான வணிகக் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்டது. ரோமப் பேரரசின் வரலாற்று சான்றுகள் மூலம், ஆண்டுதோறும் சுமார் 120 வாணிகக் கப்பல்கள் இந்தியாவுக்கு பருவக்காற்று காலங்களில் வந்ததாக அறிய முடிகிறது. இக்கப்பல்களில் கொண்டு செல்லப்பட்ட [நறுமணப் பொருள்களும், முத்துவைரம் போன்ற கற்களும், மத்திய ஆசியாவில் உள்ள செங்கடல் வரை கொண்டு செல்லப்பட்டு, பின் நிலவழியாகவோ, நைல் ஆற்றின் கால்வாய்கள் வாயிலாகவோ, மத்தியதரைக் கடல் வரை எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் கப்பல் மூலமாக ரோம் நகருக்கு அனுப்பப்பட்டன. இந்தியாவுக்கு நேரடிக் கடல்வழி கண்டுபிடிக்கப்படும் வரை இத்தகைய கடுமையான பாதைகளின் மூலமே ஐரோப்பிய மிளகு வாணிகம் நடைபெற்றது.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard