Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பராந்தக நெடுஞ்சடையன் (768-815) 1. வேள்விக்குடிச் செப்பேடு

Guru

Status: Offline
Posts: 7474
Date:
பராந்தக நெடுஞ்சடையன் (768-815) 1. வேள்விக்குடிச் செப்பேடு
Permalink  
 
மெய்க்கீர்த்திகள் - 1
1. பாண்டிய மன்னர் மெய்க்கீர்த்திகள்

1.1. பராந்தக நெடுஞ்சடையன் (768-815) 
1. வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி.

1.1.1 (01)

கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால்
நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும்
பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச்
சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாத
5
கொற்கைக்கிழா னற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக்
கேள்வியந்த ணாளர்முன்பு கேட்கவென் றெடுத்துரைத்து
வேள்விச்சாலை முன்புநின்று வேள்விக்குடி யென்றப்பதியைச்
சீரோடு திருவளரச் செய்தார்வேந்த னப்பொழுதே
நீரோடட்டிக் கொடுத்தமையா னீடுபுக்தி துய்த்தபின்
10
அளவரிய ஆதிராசரை யகலநீக்கி யகலிடத்தைக்
களப்ரனென்னும் கலியரசன் கைக்கொண்டதனை யிறக்கியபின்
படுகடன்முளைத்த பருதிபோல பாண்டியாதிராசன் வௌிப்பட்டு
விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து
வேலை சூழ்ந்த வியலிடத்துக்
15
கோவும் குறும்பும் பாவுடன் முறுக்கிச்
செங்கோ லோச்சி வெண்குடை நீழற்
றங்கொலி நிறைந்த தரணி மங்கையைப்
பிறர்பா லுரிமை திறவிதின் நீக்கித்
தன்பா லுரிமை நன்கன மமைத்த-
20
மானம் பேர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்ன ரொளிநக ரழித்த
கடுங்கோ னென்னுங் கதிர்வேற் றென்னன்
மற்றவற்கு மகனாகி மகீதலம் பொதுநீக்கி
மலர் மங்கையொடு மணனயர்ந்த
25
அற்றமிலடர் வேற்றானை யாதிராச னவனிசூளாமணி
எத்திறத்து மிகலழிக்கும் மத்தயானை மாறவர்மன்; மற்றவர்க்கு
மருவினியவொரு மகனாகி மண்மகளை மறுக்கடிந்து
விக்ரமத்தின் வௌிப்பட்டு விலங்கல்வெல்பொறி வேந்தர்வேந்தன்
சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன் செங்கோற்சேந்தன்
30
மற்றவற்குப் பழிப்பின்றி வழித்தோன்றி
உதயகிரி மத்யமத் துறுசுடர்போலத்
தெற்றென்று திசைநடுங்க மற்றவன் வௌிப்பட்டுச்
சூழியானை செலவுந்திப் பாழிவா யமர்கடந்து
வில்வேலி கடற்றானையை நெல்வேலிச் செருவென்றும்
35
விரவிவந் தடையாத பரவரைப் பாழ்படுத்தும்
அறுகாலினம் புடைதிளைக்குங் குறுநாட்டவர் குலங்கெடுத்தும்
கைந்நலத்த களிறுந்திச் செந்நிலத்துச் செருவென்றும்
பாரளவுந் தனிச்செங்கோற் கேரளனைப் பலமுறையும்
உரிமைச்சுற்றமோ டவர்யானையும் புரிசையுமதிற் புலியூரும்
40
பகல்நாழிகை யிறவாமை இகலாழியுள் வென்றுகொண்டும்
வேலாழியும் வியன்பறம்பு மேலாமைசென் றெறிந்தழித்தும்
இரணியகர்ப்பமுந் துலாபாரமுந் தரணிமிசைப் பலசெய்தும்
அந்தணர்க்கும் அசக்தர்க்கும் வந்தணைகவென் றீத்தளித்த
மகரிகையணி மணிநெடுமுடி அரிகேசரி யசமசமன் சிரீமாறவர்மன்
45
மற்றவற்கு மகனாகிக் கொற்றவேல் வலனேந்திப்
பொருதூருங் கடற்றானையை மருதூருண் மாண்பழித்
தாய்வேளை யகப்படஎய் யென்னாமை யெறிந்தழித்துச்
செங்கொடியும் புதான்கோட்டுஞ் செருவென்றவர் சினந்தவிர்த்துக்
கொங்கலரும் நறும்பொழில்வாய்க் குயிலொடு மயிலகவும்
50
மங்கலபுரமெனு மாநகருண் மகாரதரை எறிந்தழித்து
அறைகடல் வளாகம் பொதுமொழி யகற்றிச்
சிலையும் புலியுங் கயலுஞ் சென்று 
நிலையமை நெடுவரை யிடவயிற் கிடாஅய்
மண்ணினி தாண்ட தண்ணளிச் செங்கோல்
55
தென்ன வானவன் செம்பியன் சோழன்
மன்னர் மன்னன் மதுரகரு நாடகன்
கொன்னவின்ற நெடுஞ்சுடர்வேற் கொங்கர்கோமான் கோச்சடையன்;
மற்றவற்குப் புத்திரனாய் மண்மகளது பொருட்டாக
மத்தயானை செலவுந்தி மானவேல் வலனேந்திக்
60
கடுவிசையா லெதிர்ந்தவரை நெடுவயல்வாய் நிகரழித்து
கறுவடைந்த மனத்தவரைக் குறுமடைவாய்க் கூர்ப்பழித்து
மன்னிக்குறுச்சியுந் திருமங்கையு முன்னின்றவர் முரணழித்து
மேவலோர் கடற்றானையோ டேற்றெதிரே வந்தவரைப்
பூவலூர்ப் புறங்கண்டும்
65

கொடும்புரிசை நெடுங்கிடங்கிற் கொடும்பா ளூர்க்கூடார்
கடும்பரியுங் கடுங்களிறுங் கதிர்வேலிற் கைக்கொண்டும்
செழும்புரவிப் பல்லவனைக் குழும்பூருட் டேசழிய
எண்ணிறந்த மால்களிறும் இவுளிகளும் பலகவர்ந்தும்
தரியலராய்த் தறித்தவரைப் பெரியலூர்ப் பீடழித்தும்
70
பூவிரியும் பொழிற்சோலைக் காவிரியைக் கடந்திட்டு
அழகமைந்த வார்சிலையின் மழகொங்கம் அடிப்படுத்தும்
ஈண்டொளிய மணியிமைக்கு மெழிலமைந்த நெடும்புரிசைப்
பாண்டிக் கொடுமுடி சென்றெய்திப் பசுபதியது
பதும பாதம் பணிந்தேத்திக்-
75
கனகராசியும் கதிர்மணியும் மனமகிழக் கொடுத்திட்டுங்
கொங்கர்வன் நறுங்கண்ணிக் கங்கராசனொடு சம்பந்தஞ்செய்தும்
எண்ணிறந்தன கோசகசிரமும் இரணியகர்ப்பமுந் துலாபாரமும்
மண்ணின்மிசைப் பலசெய்து மறைநாவினோர் குறைதீர்த்தும்
கூடல்வஞ்சி கோழியென்னு மாடமா மதில்புதுக்கியும்-
80
அறைகடல் வளாகங் குறையா தாண்ட
மன்னர் மன்னன் றென்னவர் மருகன்
மான வெண்குடை மான்றேர் மாறன்;
மற்றவற்கு மகனாகி மாலுருவின் வௌிப்பட்டுக்
கொற்றமூன் றுடனியம்பக் குளிர்வெண்குடை மண்காப்பப்
85
பூமகளும் புலமகளும் நாமகளும் நலனேத்தக்
கலியரைசன் வலிதளரப் பொலிவினொடு வீற்றிருந்து
கருங்கட லுடுத்த பெருங்கண் ஞாலத்து
நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக்
கருதாதுவந் தெதிர்மலைந்த காடவனைக் காடடையைப்
90
பூவிரியும் புனற்கழனிக் காவிரியின் றென்கரைமேல்
தண்ணாக மலர்ச்சோலைப் பெண்ணாகடத் தமர்வென்றும்
தீவாய் அயிலேந்தித் திளைத்தெதிரே வந்திறுத்த
ஆய்வேளையுங் குறும்பரையு மடலமரு ளழித்தோட்டிக்
காட்டுக்குறும்பு சென்றடைய நாட்டுக்குறும்பிற் செருவென்றும்
95
அறைகடல் வளாக மொருமொழிக் கொளீஇய
சிலைமலி தடக்கைத் தென்ன வானவன் அவனே
சிரீவரன் சிரீமனோகரன் சினச்சோழன் புனப்பூழியன்
வீதகன்மஷன் விநயவிச்ருதன் விக்ரமபாரகன் வீரபுரோகன்
மருத்பலன் மான்யசாசனன் மனூபமன் மர்த்தித வீரன்
100
கிரிஸ்திரன் கீதிகிந்நரன் கிருபாலயன் கிருதாபதானன்
கலிப்பகை கண்டகநிஷ்டூரன் காரியதட்சிணன் கார்முகபார்த்தன்
பராந்தகன் பண்டிதவத்சலன் பரிபூர்ணன் பாபபீரு 
குரையுறு கடற்படைத்தானைக் குணக்கிறுகியன் கூடணிற்ணயன்
நிறையுறு மலர் மணிநீண்முடி நேறியர்கோ னெடுஞ்சடையன்
105
மற்றவன்றன் ராஜ்யவத்சரம் மூன்றாவது செலாநிற்ப
ஆங்கொரு நாண்மாட மாமதில்.....

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard