Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வீர பாண்டியன் (946-966) சிவகாசிச் செப்பேடு


Guru

Status: Offline
Posts: 7474
Date:
வீர பாண்டியன் (946-966) சிவகாசிச் செப்பேடு
Permalink  
 


வீர பாண்டியன் (946-966)
சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி

1.4.1 (06)

ஸ்வஸ்திஸரீ
சந்திரனது வழித்தோன்றிஇத் தராமண்டல முழுதாண்டுபண்டு
இந்திரன்முடி வளையுடைத்தும் இமயத்துக் கயலெழுதியும்
ஆனையாயிர மையமிட்டும் அகத்தியனொடு தமிழ்தெரிந்தும்
வானவர்க்குத் தூதுசென்றும் மால்கடலின் வரவுமாற்றியும்
ஈண்டியவக் கடல்கடைந்தும் இன்னனபல திறல்செய்த
5
பாண்டியபர மேச்வரராள் பரம்பரையில் வந்துதோன்றினன்
மன்னவர்க்கோன் இராசமல்லன் மணிமுடிமா னாபரணன்
தென்னவர்க்கோன் மற்றவற்குச் சேரலன்றன் மடப்பாவை
சீர்திகழு மணிபயிலிச் செழுநிலந்தொழ வௌிப்பட்ட 
வீரகேரளன் வீரபாண்டியன் விநயகஞ்சுகன் விசாலசீலன்
10
தன்னுடைய குலம்விளங்கத் தன்தேயத் தமிழ்கூடலில்
மன்னியமணி முடிகவித்து மகாபிஷேக மகிழ்ந்தநாளில்
மேதகுசா சனசுலோகம் விதிகிடந்தவா செய்யவல்ல
பூசுரமத் திவன்னதுதன் பூம்பொருநம் புடைவர்க்கும்
சீர்திகழ்தரு முள்ளிநாட்டுத் தென்வீரதர மங்கலத்து
15
ஏர்திகழும் பெருந்தன்மை ராதிதர கோத்திரத்தில்
அளப்பரிய பேரொழுக்கத் தாச்வலாயன சூத்திரத்து
விளக்கமுற வந்துதோன்றி விப்ரர்க்கோர் விளக்காயின
ஒருதன்மை இருபிறப்பில் முச்செந்தீ நால்வேதத்து
அருமரபில் ஐவேள்வி ஆறங்கத் தந்தணாளன்
20
கோவிந்தஸ்வாமி பட்டர்க்குச் சோமாசிதன் குலவரவில்
வாசுதேவ பீதாம்பர பட்டனென்ற மறைவாழ்நனை
மதித்தருளி நீசெய்கென மற்றவனு மனமகிழ்ந்து
விதித்தமைத்த அநுஷ்டுப்பின் விழுப்பநோக்கி மிகமகிழ்ந்து
தனக்கிரண்டாமாண்டின் எதிராமாண்டில்
25
அண்டநாட்டு மின்னுக்கொடி நெடுமாடவீதி. . .


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard