Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218) - 3


Guru

Status: Offline
Posts: 7474
Date:
சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218) - 3
Permalink  
 


சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218) - 3

1.9.3 (14)

 

    • ஸ்வஸ்திஸரீ

 

    • பூவின் கிழத்தி மேவிவீற் றிருப்ப

 

    • மேதினி மாது நீதியிற் புணர

 

    • வயப்போர் மடந்தை சயப்புயத் திருப்ப

 

    • மாக்கலை மடந்தை வாக்கினில் விளங்கத்

 

    • திசையிரு நான்கும் சையிலா வெறிப்ப - 5

 

    • மறைநெறி வளர மனுநெறி திகழ

 

    • அறநெறிச் சமயங்கள் ஆறும் தழைப்பக்

 

    • கானில் வேங்கை வில்லுடன் தொடர்ந்துற

 

    • மீனம் கனகாசலத்து வீற் றிருப்ப

 

    • எண்கிரி சூழ்ந்த எழுகடல் எழுபொழில் - 10

 

    • வெண்குடை நிழற்ற செங்கோல் நடப்பக்

 

    • கொடுங்கலி நடுங்கி நெடும்பிலத் தொளிப்ப

 

    • வில்லவர் செம்பியர் விராடர் மராடர்

 

    • பல்லவர் திறையுடன் முறைமுறை பணிய

 

    • ருநேமி யளவும் ஒருநேமியோங்க - 15

 

    • ன்னமுதாகிய யலிசை நாடகம்

 

    • மன்னி வளர மணிமுடி சூடி

 

    • விளங்கு கதிரொளி வீரசிம்மா சனத்து

 

    • கற்பகநிழற்கிழ் கலைவல்லோர் புகழ்

 

    • மன்னவர் தேவியர் வணங்கி நின்றேத்தும் - 20

 

    • அன்ன மென்னடை அவனி முழுதுடை

 

    • யாளொடும் வீற்றிருந் தருளிய

 

    • மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதல்

 

    • கோச்சாடய பன்மரான திரிபுனச்

 

    • சக்கரவர்த்திகள் ஸரீகுலசேகர தேவர்க்கு - 25

 

  • யாண்டு பதின்முன்றாவதின் எதிராமாண்டு . .


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1215 - 1239)

1.10.1 (15)

 

    • ஸ்வஸ்திஸரீ

 

    • பூமலர்த் திருவும் பொருசய மடந்தையும்

 

    • தாமரைக் குவிமுலை சேர்ப்புயத் திருப்ப

 

    • வேத நாவின் வெள்ளிதழ்த் தாமரைக்

 

    • காதல் மாது கவின்பெறத் திளைப்ப

 

    • வெண்டிரை யுடுத்த மண்டிணி கிடக்கை - 5

 

    • ருநில மடந்தை உரிமையிற் களிப்பச்

 

    • சமயமும் நீதியும் தருமமும் தழைப்ப

 

    • மையவர் விழாக்கொடி டந்தொறு மெடுப்பக்

 

    • கருங்கலி கனல்கெடக் கடவுள் வேதியர்

 

    • அருந்தொழில் வேள்விச் செங்கனல் வளர்ப்பச் - 10

 

    • சுருதியும் தமிழும் சொல்வளங் குலவப்

 

    • பொருதிற லாழி பூதலஞ் சூழ்வர

 

    • ஒருகை ருசெவி மும்மத நாற்கோட்டு

 

    • அயிரா வதமுதற் செயிர்தீர் கொற்றத்து

 

    • எண்டிசை யானை எருத்த மேறிக் - 15

 

    • கண்டநாடு எமதெனக் கயல்களி கூர

 

    • கோசலந் துளுவந் குதிரங் குச்சரம்

 

    • போசல மகதம் பொப்பளம் புண்டரம்

 

    • கலிங்கம் ஈழங் கடாரங் கவுடம்

 

    • தெலிங்கஞ் சோனகஞ் சீனக முதலா - 20



    • விதிமுறை திகழ வெவ்வேறு வகுத்த

 

    • முதுநிலக் கிழமையின் முடிபுனை வேந்தர்க்

 

    • கொருதனி நாயகன் என்றுல கேத்தத்

 

    • திருமுடி சூடிச் செங்கோ லோச்சிக்

 

    • கொற்றத் தாளக் குளிர்வெண் குடைநிழல் - 25

 

    • கற்றைக் கவரி காவலர் வீச

 

    • மிடைகதிர் நவமணி வீரசிங்கா தனத்து

 

    • உடன்முடி சூடி யுயர்குலத் திருவெனப்

 

    • பங்கய மலர்க்கரங் குவித்துப்பார்த் திபர்வர

 

    • மங்கையர் திரண்டு வணங்கும் சென்னியிற் - 30

 

    • சுடரொளி மவுலிச் சுடர்மணி மேலிடச்< dd>சிவந்த ணைமலர்ச் சீறடி மதுகரம்

 

    • கமலமென் றணுகும் உலகு முழுதுடை

 

    • யாளொடு வீற்றிருந் தருளிய

 

    • மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதற் - 35

 

    • கோமாற வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீசுந்தர

 

    • பாண்டிய தேவர்க்கு யாண்டு பதினைந்தாவது நாள்

 

    • நூற்று எழுபத்தாறினால்.

 

 

1.10. மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1215 - 1239) - 2

1.10.2 (16)

    • ஸ்வஸ்திஸரீ

 

    • பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும் புயத்திருப்ப

 

    • நாமருவிய கலைமடந்தையும் செயமடந்தையும் நலம்சிறப்ப

 

    • கோளார்ந்த சினப்புலியும் கொடுஞ்சிலையும் குலைந்தொளிப்ப

 

    • வாளார்ந்த பொற்கிரிமேல் வரிக்கயல்கள் விளையாட

 

    • ருங்கடல் வலயத் தினிதறம் பெருகக் - 5

 

    • கருங்கலி கடிந்து செங்கோல் நடப்ப

 

    • ஒருகுடை நீழல் ருநிலங் குளிர

 

    • மூவகைத் தமிழு முறைமையின் விளங்க

 

    • நால்வகை வேதமும் நவின்றுடன் வளர

 

    • ஐவகை வேள்வியும் செய்வினை யற்ற - 10

 

    • அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ

 

    • எழுவகைப் பாடலும் யலுடன் பரவ

 

    • எண்டிசை யளவும் சக்கரம் செல்லக்

 

    • கொங்கணர் கலிங்கர் கோசலர் மாளுவர்

 

    • சிங்களர் தெலிங்கர் சீனர் குச்சரர் - 15

 

    • வில்லவர் மாகதர் விக்கலர் செம்பியர்

 

    • பல்லவர் முதலிய பார்த்திவ ரெல்லாம் 

 

    • உறைவிட மருளென ஒருவர்முன் னொருவர்

 

    • முறைமுறை கடவதம் திறைகொணர்ந் திறைஞ்ச

 

    • லங்கொளி மணிமுடி ந்திரன் பூட்டிய - 20

 

    • பொலங்கதிர் ஆரம் மார்பினிற் பொலியப்

 

    • பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த

 

    • மனுநெறி தழைப்ப மணிமுடி சூடிப்

 

    • பொன்னிசூழ் நாட்டிற் புலியாணைபோ யகலக்

 

    • கன்னிசூழ் நாட்டுக் கயலாணைகை வளர - 25

 

    • வெஞ்சின வுளியும் வேழமும் பரப்பித்

 

    • தஞ்சையு முறந்தையும் செந்தழல் கொளுத்திக்

 

    • காவியும் நீலமும் நின்றுகவின் நிழற்ற

 

    • வாவியும் ஆறு மணிநீர்நலன் அழித்துக்

 

    • கூடமா மதிலுங் கோபுரமா டரங்கும் - 30

 

    • மாடமா ளிகையும் மண்டபம்பல விடித்துத்

 

    • தொழுதுவந் தடையார் நிருபர்தந் தோகையர்

 

    • அழுத கண்ணீர் ஆறு பரப்பி

 

    • கழுதைகொண் டுழுது கவடிச்செம் பியனைச்

 

    • சினமிரியப் பொருது சுரம்புக வோட்டியும் - 35

 

    • பொன்முடி பறித்துப் பாணனுக்குக் கொடுத்துப்

 

    • பாடருஞ் சிறப்பிற் பருதிவான் தோயும் 

 

    • ஆடகப் புரிசை ஆயிரத் தளியிற்

 

    • சேரர் வளவன் அபி ஷேகமண் டபத்து

 

    • வீராபி ஷேகம் செய்துபுகழ் விரித்து - 40

 

    • பரராசர் நாமந் தலைவிடுத் துமிழுந்

 

    • தறுகண் மதசர யானைமேல் கொண்டு

 

    • நீராழி வையம் முழுதும்பொது வழித்த

 

    • கூராழியுஞ் செய்ய தோளுமெய் கொண்டுபோய்

 

    • அடையப் படாத வருமறைதேரந் தணர்வாழ் - 45

 

    • தெய்வப் புலியூர் திருவெல்லை யிற்புக்குப்

 

    • பொன்னம்ப லம்பொலிய ஆடுவார் பூவையுடன்

 

    • மன்னுந் திருமேனி கண்டுமனங் களித்துக்

 

    • கோலமலர் மேலயனுங் குளிர்துழாய் மாலும்

 

    • அறியா மலர்ச்சே வடிவணங்கி வாங்கு - 50

 

    • மேற்சிறை யன்னம் துயிலொழிய வண்டெழும்

 

    • பூங்கமல வாவிசூழ் பொன்னமரா பதியில்

 

    • ஒத்துலகந் தாங்கும் உயர்மா மேருவைக்

 

    • கொணர்ந்துவைத் தனையசோதி மணிமண்ட பத்திருந்து

 

    • சோலைமலி பழனச் சோணாடு தான்ழந்து - 55

 

    • மாலை முடியுந் தரவருக வென்றழைப்ப

 

    • வான்நிலை குலைய வல்லாநிலத்து எல்லை

 

    • தான்கடந்து சக்கர வாளகிரிக் கப்புறத்துப்

 

    • போன வளவன் உரிமையோடும் புகுந்து

 

    • பெற்ற புதல்வனைநின் பேரென்று முன்காட்டி - 60

 

    • வெற்றி அடியிணைக்கீழ் வீழ்ந்து தொழுது ரப்பத்

 

    • தானோடி முன்னிழந்த தன்மையெல்லாம் கையகலத்

 

    • தானே தகம்பண்ணி தண்டார் முடியுடனே

 

    • விட்ட அகலிடந்தன் மார்வேளைக் குத்திரிய

 

    • ட்ட படிக்கென்றும் துபிடிபா டாகவென - 65

 

    • பொங்குதிரை ஞாலத்துப் பூபாலர் தொழவிளங்கும்

 

    • செங்கயல் கொண்டு ஊன்றுந் திருமுகமும் 

 

    • பண்டிழந்த சோழ பதியெனும் நாமமும்

 

    • தொல்நகரும் மீள வழங்கி விடைகொடுத்து

 

    • விட்டருளி ஒருக்கடற் பாரில் வேந்தர்களைக் - 70

 

    • குற்றங்கள் தீர்க்குங் கடவுளிவன் என்றெண்ணித்

 

    • தளையுற் றடையாதார் தண்ட லிடையிற்

 

    • கிளையுற் றெனமுழுதுங் கேட்டருள நன்றேத்தி

 

    • வணங்கும் வடகோங்க னைச்சிறையு மீட்டு

 

    • களங்கோ ளருநீ ருந்தேரன் மாலை - 75

 

    • கழித்தெல் வழங்கி யருளியபின் னொருநாள்

 

    • மற்றார முழங்கு முரசக் கடற்றானை 

 

    • முன்புகுந்து தென்கொங்கர் வந்திட்ட தெண்டனுக்கு

 

    • மின்பொங்கச் சாத்தியஆ பரணந்தக்க தெனவழங்கி

 

    • ஆறாத பெருநண்பி னவன்சிறையு மீட்டித் - 80

 

    • திருமால்ரு மருங்கும்சந்திர சூரியர்சே விக்கச்செங்கண்

 

    • கருமால் களிக்கிற்றில் வருமுக்கட் கடவுளென

 

    • மாட மதுரையிற் தான்போந்து புவனியிலே 

 

    • கூட்டுக் கொங்கரையுங் கும்பீடு கொண்டவர்க்குத்

 

    • தொல்லைப் புவிக்கு மிணங்காமல் தாஞ்சொன்ன - 85

 

    • எல்லைக்குள் நிற்ப சைந்திட்டு ஏற்(ப)க்கொண்டு

 

    • வ்வாறு செய்யா தொழியில்ய மனுக்குவெவ்

 

    • வேல்விருந் தாக்குதும் உம்மையென விட்டருளி

 

    • முன்னம் நமக்கு முடிவழங்கு சேவடிக்கீழ்

 

    • ன்னம் வழிபடுவோ மென்னாது பின்னொருநாள் - 90

 

    • காலனது புனநா டெனுங்களியா லெதிர்செல்லா

 

    • திறைமறுத்த சென்னிவிடு தூசியும் பேரணியும்

 

    • ஒக்கச் சுருண்டொதுங்கி வாசியும் வாரணமும்

 

    • தெருமடற் கருவக் காலனும் வெட்டுண்ணக்

 

    • கண்ணி ரண்டு மயங்கக் கைக்கொண்டு - 95

 

    • வேலா வலையத்து வீழ்ந்தவன் போய் மெய்நடுங்க

 

    • அம்பருந்து மார்த்த கடல்மண்ட லீகருடல்

 

    • வெம்பருந் துண்ண அக்களத்தில் ஆனையின்

 

    • வெண்மருப்புங் கையுங் குறைத்தெங்கன் மீனவற்கும்

 

    • பால்குடமா மென்றுதான் வீரர்கோன் மாமுகடு - 100

 

    • தடவி மழைமடுக்கும் காகநெடும் பந்தற்கே

 

    • அவற்றது ஆடலும் கூகையின் பாடலுங்

 

    • கண்டும் கேட்டுங் களித்தஉடல் கருங்கூந்தல்

 

    • வெள்ளெயி றில்செவ் வாய்பெரிய சூலக்க

 

    • வல்லி பலிகொள்கஎன வாழ்த்தி வென்று - 105

 

    • பகையின் மிகையொழிய வேந்தலறக் கொன்று

 

    • சினந்தணியாக் கொற்றவ நெடுவாள் உயற்கு

 

    • செங்குருதி நிறத்தொளி செய்து தெகுபுலத்து

 

    • வெண்கவடி வித்த வீர முழுதெடுத்துப்

 

    • பாடும் பரணிதனைப் பார்வேந்தர் கேட்பிக்க - 110

 

    • ஆடுந் திருமஞ் சனநீர்கள் மண்குளிர

 

    • ஆங்கவந் திணைகட்டணத்துக் கற்பு தனக்கரணாய்



    • ஓங்குரி மைக்குழாம் ஓருகை திசைகொண்டு

 

    • மூரி மணிப்பட்டங் கட்டி முடிசூட்டி

 

    • மார்பில் அணைத்துவளவ னவன்முதல் தேவியென்று - 115

 

    • பேர்பெற்ற வஞ்சி முதலாய பெய்வளையார்

 

    • பொங்கு புனற்கும்சப முதலாய்போ லவர்புகழ 

 

    • மங்கலங்கள் எட்டும் மணிகதவத்தேந்தி

 

    • கொடிகொண்ட நெற்றி நிறைந்தக்கோ புரஞ்சூழ

 

    • முடிகொண்டசோழபுர மண்டபத்துப் புகுத - 120

 

    • திசைதொறும் சொம்பொற் செயத்தம்பம் நாட்டி

 

    • வாகைக் கதிர்வேல் வடவேந்தர் தம்பாதம்

 

    • மேகத் தழையணிய வீரக் கழலணிந்து

 

    • விளங்கிய மணியணி வீரசிம் மாசனத்து

 

    • விளங்கெழு கவரி யிருமருங்கசைப்பக் 125

 

    • கடலென்ன முழங்கும் களிநல் யானை

 

    • வடபுல வேந்தர்தம் மணிப்புயம் பிரியா

 

    • லங்கிழை அரிவையர் தொழுதுநின் றேத்தும்

 

    • உலக முழுதுடை யாளொடும் வீற்றிருந்து

 

    • அருளிய ஸரீகோ மாறபன்ம ரான

 

    • திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீசோணாடு - 130

 

    • கொண்டுமுடிகொண்டசோழபரத்து வீராபிக்ஷேகம்

 

    • பண்ணி அருளிய

 

    • ஸரீசுந்தர பாண்டியதேவர்கு யாண்டு - 20 வது

 

  • நாள் 37 னால் . . . .

 


 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

1.11. சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1252 - 1271)

1.11.1 (17)

 

    • ஸ்வஸ்திஸரீ

 

    • பூமலர்வளர் திகழ்திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப

 

    • நாமலர்வளர் கலைவஞ்சி நலமிகுமா மனத்துறையச்

 

    • சிமையவரைத் திறன்மடந்தை திருத்தோளின் மிசைவாழ

 

    • மையவர் கோன்அன்றிட்ட எழிலாரம் கழுத்திலங்கப்

 

    • பகிரதிபோற் துய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந்தோட்டத் - 5

 

    • திகிரிவரைக் கப்புறத்துஞ் செழுந்திகிரி சென்றுலவத்

 

    • தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார்நிழற்ற

 

    • வெங்கோபக் கலிகடிந்து செங்கோலெண்டிசைநடப்பச்

 

    • செம்முரசின் முகில்முழங்கச் சிலையகன்று விசும்படையத்

 

    • திறற்புலிபோய் வனமடையக் . . . . . - 10

 

    • கயலிரண்டும் நெடுஞ்சிகர கனவரையின் விளையாட

 

    • ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத்

 

    • தருமறையோர் ஐவேள்வி யாறங்கமுடன்சிறப்ப

 

    • அருந்தமிழும் ஆரியமு அறுசமயத் தறநெறியும்

 

    • திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்கக் - 15

 

    • குச்சரரும் ஆரியரும் கோசலரும் கொங்கணரும்

 

    • வச்சிரரும் காசியரும் மாகதரும் . . . 

 

    • அருமணரும் சோனகரும் அவந்தியரு முதலாய

 

    • ருநிலமா முடிவேந்தர் றைஞ்சிநின்று திறைகாட்ட

 

    • வடிநெடுவாளும் வயப்பெரும்புரவியும் - 20

 

    • தொடிநெடுந் தோளுமே துணையெனச் சென்று

 

    • சேரனும் தானையும் செருக்களத் தொழிய

 

    • வாரசும் புலரா மலைநாடு நூறப்

 

    • பருதிமாமரபிற் பொருதிறல் மிக்க 

 

    • சென்னியைத் திறைகொண்டு திண்தோள்வலியிற் - 25

 

    • பொன்னி நாட்டு போசலத்தரைசர்களைப்

 

    • புரிசையிலடைத்துப் பொங்குவீரப் புரவியும்

 

    • செருவிற லாண்மைச் சிங்கணன் முதலாய

 

    • தண்டத் தலைவரும் தானையும் அழிபடத்

 

    • துண்டித்தளவில் சோரி வெங்கலுழிப் - 30

 

    • பெரும்பிணக் குன்றம் ருங்களனிறைத்துப்

 

    • பருந்தும் காகமும் பாறும் தசையும்

 

    • அருந்தி மகிழ்தாங்கு அமர்கள மெடுப்பச்

 

    • செம்பொற் குவையும் திகழ்கதிர் மணியும்

 

    • மடந்தையர் ஆரமார்பும் உடன் கவர்ந்தருளி - 35

 

    • முதுகிடு போசலன் தன்னொடு முனையும்

 

    • அதுதவ றென்றவன் தன்னை வெற்பேற்றி

 

    • நட்பது போலுட் பகையாய் நின்ற 

 

    • சேமனைக்கொன்றுசினந்தணிந்தருளி

 

    • நண்ணுதல் பிறரால் எண்ணுதற்கரிய - 40

 

    • கண்ணனூர்க்கொப்பத்தைக் கைக்கொண்டருளி

 

    • பொன்னிசூழ் செல்வப் புதுப்புனல் நாட்டைக்

 

    • கன்னி நாடென காத்தருள் செய்யப்

 

    • பெருவரை யரணிற்பின்னருகாக்கிய

 

    • கருநா டரசனைக் களிறுதிரை கொண்டு - 45

 

    • துலங்கொளி மணியும் சூழிவேழமும்

 

    • லங்கை காவலனைக் றைகொண்டருளி

 

    • வருதிறை மறுத்து அங்கவனைப்பிடித்துக்

 

    • கருருமுகில் நிகளங் காலினிற் கோத்து

 

    • வேந்தர்கண் டறியா விறற்றிண் புரிசைச் - 50

 

    • சேந்தமங்கலசெழும்பதிமுற்றிப்

 

    • பல்லவன் நடுங்கப் பலபோ ராடி

 

    • நெல்விளை நாடும் நெடும்பெரும் பொன்னும்

 

    • பரும யானையு பரியு முதலிய

 

    • அரசுரிமைக் கைக்கொண்டு அரசவற்களித்துத் - 55

 

    • தில்லையம்பலத்துத் திருநடம்பயிலுந்

 

    • தொல்லை றைவர் துணைகழல் வணங்கிக்

 

    • குளிர்பொழில் புடைசூழ் கோழி மானகர்

 

    • அளிசெறி வேம்பின் அணிமலர் கலந்த

 

    • தொங்கல் வாகைத் தொடைகள் சூட்டித் - 60

 

    • திங்ளுயர் மரபு திகழவந் திருந்த

 

    • தன்னசை யால்நன் னிலைவிசை யம்பின்

 

    • எண்ணெண் கலைதேர் இன்மொழிப் பாவலர்

 

    • மண்ணின்மே லூழி வாழ்கென வாழத்தக்

 

    • கண்டவர் மனமும் கண்ணும் களிப்ப - 65

 

    • வெண்டிரை மகர வேலையி னெடுவரை

 

    • ஆயிரம் பணைப்பணத் தனந்தன் மீமிசைப்

 

    • பாயல் கொள்ளும் பரம யோகத்து

 

    • ஒருபெருங் கடவளும் வந்தினி துறையும்

 

    • ருபெருங் காவிரி யிடைநிலத் திலங்கு - 70

 

    • திருவரங் கம்பெருஞ் செல்வம் சிறப்பப்

 

    • பன்முறை யணிதுலா பார மேறிப்

 

    • பொன்மாலை யன்ன பொலிந்து தோன்றவும்

 

    • பொன்வேய்ந் தருளிய செம்பொற் கோயிலுள்

 

    • வளந்திகழ் மாஅல் உதய வெற்பெனத் - 75

 

    • திருவளர் குலமணிச் சிங்கா சனமிசை

 

    • மரகத மலையென மகிழ்தினி தேறித்

 

    • தினகரோ தயமெனச் செழுங்கதிர் சொரியும்

 

    • கனக மாமுடி கவின்பெறச் சூடிப்

 

    • பாராள் வேந்தர் உரிமை அரிவையர் - 80

 

    • ருமறுங்கு நின்று விரிபெருங் கவரியின்

 

    • மந்த வாடையும் மலயத் தென்றலும்

 

    • அந்தளிர்க் கரங்கொண்ட சைய வீச

 

    • ஒருபொழு தும்விடாது உடனிருந்து மகிழும்

 

    • திருமகளெனத் திருத்தோள் மேவி - 85

 

    • யொத்தமுடி சூடி யுயர் பேராணை

 

    • திக்கெட்டும் நடப்பச் செழுந்தவஞ் செய்த

 

    • இவன்போ லுலகிலே வீரன் பலத்திற

 

    • மதிமுகத் தவனி மாமகளிலகு

 

    • கோடிக் காதல் முகிழ்த்துநின் றேத்தும் - 90

 

    • உலகமுழுதுடை யாளொடும் வீற்றிருந்தருளிய

 

    • சிரீகோச் சடைய வன்மரான

 

    • திரிபுவன சக்கர வர்த்திகள்சிரீ சுந்தர பாண்டிய

 

    • தேவர்க்கு யாண்டு ஏழாவது கன்னி ஞாயிற்று

 

    • அபர பட்சத்துத் திரியோதசியும் ஞாயிற்றுக் கிழமையும் - 95

 

  • பெற்றஅத்தத்துநாள் .


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

சடையவர்மன் வீரபாண்டியன் (1253 - 1268)

1.12.1 (18)

 

    • ஸ்வஸ்திஸரீ

 

    • திருமகள் வளர்முலை திருமார்பு தளைபடப்

 

    • பொருமகள் வளர்முலை புயம்புணர்ந்து களிப்ப

 

    • வன்மொழி நாமிசைச் சொன்மகள் ருப்பத்

 

    • திசைகள் எட்டினும் சைமகள் வளர

 

    • ருமூன்று சமயமும் ஒருமூன்று தமிழும் - 5

 

    • வேதம் நான்கும் நீதியில் விளங்க

 

    • கங்கங் கவுடம் கடாரம் காசிபம்

 

    • கொங்கங் குதிரம் கோசலம் மாளுவம்

 

    • அருமனம் சோனகம் சீனம் வந்தி

 

    • திருநடம் ஈழம் கலிங்கம் தெலிங்கம் - 10

 

    • பெபனந் தண்டகம் பண்டர முதலிய

 

    • எப்புவி வேந்தரும் கல்மண்டலீகரும் 

 

    • மும்முரைசு முழங்கும் செம்மணி மாளிகை

 

    • கோயில் கொற்ற வாயில் புகுந்து

 

    • காலம் பார்த்து கழலிணை பணிந்து - 15

 

    • நல்ல வேழமும் நிதியமும் காட்டிப்

 

    • பூவிரி சோலை காவிரி களத்துச்

 

    • சோழன் பொருத வேழப் போரில்

 

    • மதப்பிற் றாறாக் கதக்களி யானை

 

    • துளைக்கைச் சொம்பொற் றொடிக்கையிற் பிடித்து - 20

 

    • வளைத்துமேல் கொண்டு வாகைச் சூடி

 

    • தலைப்பே ராண்மை தனித்தனி யெடுத்து

 

    • கலைத்தவி ரரசர் கவின்பெறத் துதிப்பத்

 

    • தெற்ற மன்னர் திதாத்தி யாமல்

 

    • ஒற்றை யாழி யுலகு வலமா - 2 

 

    • ஏனை மன்னவர் தற்கோ டிறைந்து

 

    • மீனவர் கோடித் தெருவில் என்க

 

    • வடுவரைக் கொடுங்கோல் வழங்கா வண்ணம்

 

    • நடுவுநிலை செங்கோல் நாடொறும் நடப்ப

 

    • எத்திசை மன்னரும் ருங்கலி கடிந்து - 30

 

    • முத்த வெண்குடை முழுநிலவு சொரிய

 

    • ஒருமொழி தரிப்பப் புவி முழு தாண்ட

 

    • மதமார்பு விளங்க மணிமுடி சூடி

 

    • உரைகெழு....பல அரைசியல் வழக்கம்

 

    • நெறிப்பட நாட்டுங் குறிப்பி னூரட்டு - 35

 

    • சைந்திருப் பாதஞ்செ..திருந்த மந்திரி சரணமை

 

    • திகழ்ந்தினிது நோக்கி முரண்மிகு சிறப்பில்

 

    • ஈழ மன்னர் லகுவரி லொருவனை

 

    • வீழப் பொருது விண்மிசை யேற்றி

 

    • உரிமைச் சுற்றமும் உய்குலம் புக்குத் - 40

 

    • தருமை யானையும் பலப்பைப் புரவியும்

 

    • கண்மணித்தேரும் சீன வடமரும்

 

    • நாகத் தோடும் நவமணிக் குவையும்

 

    • ஆடகத் திரியும் அரியா சனமும்

 

    • முடியும் கடகமும் முழுமணி யாரமும் - 45

 

    • கொடியுங் குடையுங் குளிர் வெண் கவரியும்

 

    • முரசுஞ் சங்கமும் தனமும் முதலிய

 

    • அரைசுகெழு தாய மடைய வாரி

 

    • காணா மன்னவர் கண்டுகண் டேங்க

 

    • கோணா மலையினும் திரிகூட கிரியினும் - 50

 

    • உருகெழ கொடிமிசை ருகயல் எழுதி

 

    • ஏனை வேந்தனை ஆனைதிறை கொண்டுபண்

 

    • டேவல் செய்யா திகல்செய் திருந்த

 

    • சாவன் மைந்தன் நலமிகந் திறைஞ்ச

 

    • வீரக் கழலை விரலரைச் சூட்டித் - 55

 

    • திருக்கோ லம்அலை வாய்ப்படன் கழித்து

 

    • வழங்கி யருளி முழங்கு களிறேறி

 

    • பார்முழு தறிய ஓர் ஊர்வலஞ் செய்வித்து dd>தந்தை மரபு என நினைப்பிட்டு

 

    • அரைசிட மகிழ்ந்து ஆனூர் புரிச்சு - 60

 

    • விரையச் செல்கென விடைகொடுத் தருளி

 

    • யாக மடந்தை அன்புடன் சாத்தி

 

    • வாகை சூட மதுமணங் கமழ

 

    • வசந்தவெண் கவரியின் வாடலுந் தென்றலும்

 

    • வேந்தர் வீச வீரசிங்கா தனத்துக் - 65

 

    • கபகந் தழுவிய காமர் உள்ளதள்

 

    • பொற்றொடி புணர்ந்து மலர்ந்த மலர்க்கெழும்

 

    • பாபுரைச் சிற்றடி உலகமுடையாரொடும்

 

    • விற்றிருந் தருளிய ஸ்வஸ்திஸரீ கோச்சடைய பன்மரான

 

    • திரிபுவன சக்கரவர்த்திகள் சிரீ வீரபாண்டிய தேவர்க்கு - 70

 

  • யாண்டு 11ஆவது நாளள் 173 னால் . . .

 

1.12. சடையவர்மன் வீரபாண்டியன் (1253 - 1268) - 2

1.12.2 (19)

 

    • ஸ்வஸ்திஸரீ

 

    • கொங்குஈழம் கொண்டு கொடுவடுகு கோடழித்து

 

    • கங்கை ருகரையும் காவிரியும் கைக்கொண்டு

 

    • வல்லானைவென்று தில்லைமா நகரில் வீற்றிருந்து

 

    • வீராபி ஷேகமம் விசயாபி ஷேகமும்

 

    • பண்ணியருளிய கோச்சடைய வன்மரான திரிபுவனச் - 5

 

    • சக்கரவர்த்திகள் சிரீவீரபாண்டிய தேவர்க்கு யாண்டு

 

    • 16வது சிம்ம ஞாயிற்று பூர்வபட்சத்து வியாழக்

 

  • கிழமையும் தசமியும் பெற்ற மூலத்து நாள் . .

 

1.13 மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268 - 1285)

1.13.1 (20)

 

    • ஸ்வஸ்திஸரீ

 

    • தேர்போ லல்குல் திருமகள் புணரவும்

 

    • கார்சேர் கூந்தல் கலைமகள் கலப்பவும்

 

    • பார்மகள் மனத்துப் பாங்குட னிருப்பவும்

 

    • செங்கோல் நடப்பவும் வெண்குடை நிழற்றவும்

 

    • கருங்கலி முருங்கவும் பெரும்புகழ் விளங்கவும் - 5

 

    • கானிலை செம்பியன் கடும்புலி யாளவும்

 

    • மீனம் பொன்வரை மேருவில் ஓங்கவும்

 

    • முத்தமிழும் மனுநூலும் நால்மறை முழுவதும்

 

    • எத்தவச் சமயமும் னிதுடன் விளங்கவும்

 

    • சிங்களம் கலிங்கம் தெலிங்கம் சேதிபம் - 10

 

    • கொங்கணம் குதிரம் கோசலம் குச்சரம்

 

    • முறைமயின் ஆளும் முதுநில வேந்தர்

 

    • திறைமுறை காட்டிச் சேவடி வணங்க

 

    • மன்னர் மாதர் பொன்னணி கவற்ற

 

    • ருபுடை மருங்கும் ஒருபடி யிரட்டப் - 15

 

    • பழுதறு சிறப்பிற் செழுவைக் காவலன்

 

    • வீரசிங் காதனத்து ஓராங் கிருந்தே

 

    • ஆரும் வேம்பும் அணியிதழ் புடையாத்

 

    • தாரும் சூழ்ந்த தடமணி மகுடம்

 

    • பன்னூ றூழி தொன்னிலம் புரந்து - 20

 

    • மாழ்கெனக் குட்டம் மகிழ்ந்துடன் சூடி

 

    • அலைமக ள் முதலாம் அரிவையர் பரவ

 

    • உலக மழுதுடையாளொடும் வீற்றிருந்

 

    • தருளின கோமாற வன்ம ரான 

 

    • திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீகுலசேகர . - 25

 

  • தேவர்க்கு யாண்டு பத்தாவது . . .

 


 

1.14. மாற வர்மன் விக்கிரம பாண்டியன் (1283 - 1296)

1.14.1 (21)

 

    • ஸ்வஸ்திஸரீ

 

    • திருமகள் செயமகள் திருப்புயத் திருப்ப

 

    • பொருகடல் ஆடை நிலமகள் புணர

 

    • கடவுள் மேருவில் கயல் விளையாட

 

    • வடபுல மன்னவர் வந்தடி பணிய

 

    • நேமி வரைசூழ் நெடுநில முழுவதும் - 5

 

    • தரும வெண்குடை நிழலில் தழைப்ப

 

    • செங்கோல் நடப்பக் கருங்கலி துறந்து

 

    • வேத விதியில் நீதி நிலவ

 

    • சேரனும் வளவனும் திறைகொணர்ந் திறைஞ்ச

 

    • வீரமும் புகழும் மிகநனி விளங்க - 10

 

    • நதிபெருஞ் சடைமுடி நாதன் சூடிய

 

    • மதிக்குலம் திகழ மணிமுடி சூடி

 

    • விளங்கிய மணியணி வீர சிங்காசனத்து< dd>வீற்றிருந்தருளிய ஸரீகோமாற பன்மரான

 

    • திரிபுவன சக்கர வர்த்திகள் ஸரீ விக்கிரம பாண்டிய - 15

 

  • தேவர்க் கியாண்டு ஏழாவதின் எதிர் நாலாமாண்டு . .

 


 

1.15. சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1296 - 1310)

1.15.1 (22)

 

    • ஸ்வஸ்திஸரீ

 

    • புயல்வாய்த்து சமஸ்த சாகர பரமண்டலத்து

 

    • க்ஷமைவினொடும் கருணையெய்தி சமயத்தன்மை

 

    • னிது நடாத்தி நிகழா நின்ற சாரிகைக்

 

    • கோட்டையில் விக்கிரம பாண்டியன் மடிகையில்

 

    • நான்குதிசைப் பதிணென் விஷயத்தோம் சுத்தவல்லி - 5

 

    • வளநாட்டுத் தனியூர் ராசாதி ராசச்

 

    • சதுர்வேதி மங்கலத் துடையார்

 

    • சயங்கொண்ட சோழீஸ்வரமுடையார் திருமுன்

 

    • விக்கிர பாண்டியன் திருமண்ட பத்து

 

    • நிறைவற நிறைந்து குறைவறக்கூடி - 10

 

    • ஸரீகோச்சடைய பன்மரான

 

    • திரிபுவன சக்கர வர்த்திகள் ஸரீசுந்தர பாண்டிய

 

    • தேவர்க்கு யாண்டு பன்னிரண்டாவது கன்னி ஞாயிற்றுப்

 

    • பூர்வ பட்சத்துத் திரியோதசியும் வெள்ளிக்கிழமையும்

 

  • பெற்ற சோதிநாள் . . .


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அரிகேசரி பராக்கிரம பாண்டியன் (1422 - 1463)

1.16.1 (23)

 

    • சுபமஸ்து

 

    • பூமிசை வனிதை மார்பினிற் பொலிய

 

    • நாமிசை கலைமகள் நலனுற விளங்கப்

 

    • புயவரை மீது சயமகள் புணரக்

 

    • கயலிணை யுலகின் கண்ணென திகழச்

 

    • சந்திர குலத்து வந்தவ தரித்து - 5

 

    • முந்தையோர் தவத்து முளையென வளர்ந்து

 

    • தென்கலை வடகலை தௌிவுறத் தெரிந்து

 

    • மன்பதை புரக்க மணிமுடி புனைந்து

 

    • சங்கர சரண பங்கயஞ் சூடிச்

 

    • செங்கோ லோச்சி வெண்குடை நிழற்றி - 10

 

    • வான வாரியும் மன்னருள் வாரியும்

 

    • தான வாரியும் தப்பாது அளித்து

 

    • மறக்களை பறித்துநல் அறப்பயிர் விளைத்து

 

    • சிங்கையில் அனுரையில் ராசையிற் செண்பையில்

 

    • விந்தையி லறந்தையில் முதலையில் வீரையில் - 15

 

    • வைப்பாற் றெல்லையில் மன்னரை வென்கண்டு

 

    • எப்பாற் றிசையும் சைவிளக் கேற்றிப்

 

    • பதிணெண் பாடை பார்த்திவ ரனைவரும்

 

    • திறையும் சின்னமும் முறைமுறை கொணர்ந்து

 

    • குறைபல ரந்து குறைகழல் றைஞ்ச - 20

 

    • அவரவர் வேண்டியது அவரவர்க் கருளி

 

    • அந்தணர் அனேகர் செந்தழல் ஓம்ப

 

    • விந்தைமுத லகரம் ஐந்திடத்து யற்றிச்

 

    • சிவநெறியோங்க சிவார்ச்சனை புரிந்து

 

    • மருதூ ரவர்க்கு மண்டப மமைத்து - 25

 

    • முன்னொரு தூறு முங்கில்புக் கிருந்த

 

    • சிற்பரர் தம்மைத் திருவத்த சாமத்துப்

 

    • பொற்கலத் தமுது பொலிவித் தருளிச்

 

    • சண்பக வனத்துச் சங்கரர் தமக்கு

 

    • மண்டபம் அமைத்து மணிமுடி சூட்டி - 30

 

    • விழாவணி நடாத்தி விரைப்புன லாடல்

 

    • வழாவகை நடாத்தநின் மன்னருள் அதனால்

 

    • வற்றா வருவியும் வற்றி வற்கடம்

 

    • உற்றவிக் காலத்து உறுபுனல் நல்கென

 

    • வேண்டிய பொழுதே வேறிடத் தின்றிச் - 35

 

    • சேண்டகு புனலிற் செழும்புன லாட்டி

 

    • மின்கால் வேணி விசுவ நாதர்க்குத்

 

    • தென்கா சிப்பெருங் கோயில் செய்து

 

    • நல்லா கமவழி நைமித் திகமுடன் 

 

    • எல்லாப் பூசையும் எக்கோ யிலினும் - 40

 

    • பொருள் முதலனைத்தும் புரையற நடாத்தித்

 

    • திருமலி செம்பொன் சிங்கா சனமிசை

 

    • உலக முழுது முடையா ளுடனே

 

    • லகு கருணை யிரண்டுரு வென்ன

 

    • அம்மையும் அப்பனு மாயனைத் துயிர்க்கும் - 45

 

    • ம்மைப் பயனும் மறுமைக் குறுதியும்

 

    • மேம்பட நல்கி விற்றிருந் தருளிய

 

    • ஸரீஅரிகேசரி பராக்கிரம

 

    • பாண்டிய தேவர்க்கு யாண்டு ருபத்தெட்டாவதின்

 

  • எதிராவது . . நாள்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard