Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சோழ மன்னர் மெய்க்கீர்த்திகள்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
சோழ மன்னர் மெய்க்கீர்த்திகள்
Permalink  
 


முதலாம் இராசராசன் (கி. பி 985 - 1014)

2.1.1 (24)

    • ஸ்வஸ்திஸரீ

 

    • திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்

 

    • தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்

 

    • காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி

 

    • வேங்கை நாடும் கங்க பாடியும்

 

    • நுளம்ப பாடியும் கடிகை பாடியும் - - - - - - - - -5

 

    • குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்

 

    • முரட்டொழில் சிங்களர் ஈழமண் டலமும்

 

    • இரட்ட பாடி ஏழரை இலக்கமும்

 

    • முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமும்

 

    • திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன்-10

 

    • எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்

 

    • தொழுதகை விளங்கும் யாண்டே

 

    • செழியரைத் தேசுகொள் ஸரீகோஇராச கேசரி

 

  • வன்மரான ஸரீஇராசராச தேவர்க்கு யாண்டு...

 

2.1 முதலாம் இராசராசன் (கி. பி 985 - 1014) - 2

2.1.2 (25)

    • ஸ்வஸ்திஸரீ

 

    • ........ஜய ஜயவென்று மொழி

 

    • பன்னிய வாய்மையிற் பணியப் பொன்னியல்

 

    • விசும்பரிற் கதமும் பசும்பரி வெள்ளுளை

 

    • நெடுஞ்சுவர் றெடுத்த குறுந்துனைப் படுங்க

 

    • நள்ளுறப் பொன்ஞாண் வள்ளுற வச்சத் - - - - - - -5

 

    • தனிக்கா லரசு பனக்காற் கங்குற்

 

    • குழம்புபடு பேரிருட் பிழம்புபட வுருட்டிய

 

    • செஞ்சுடர் மௌலி வெஞ்சுடர் வானவன்

 

    • வழிமுதல் வந்த மகிபதி வழிமுதல்

 

    • அதிபதி நரபதி அசுவபதி ...ட் - - - - - - - - - - -10

 

    • கசபதி கடலிடங் காவலன் மதிமுதல்

 

    • வழுதியர் வரைபுக மற்றவர் தேவியர்

 

    • அழுதுய ரங்கலி லழுங்கப் பொழுதியல்

 

    • வஞ்சியிற் காஞ்சி வகுத்த செஞ்சிலைக்

 

    • கலிங்கன் கனெ.....கப் பா...லங்கன் - - - - - - - - 15

 

    • அ(ம்)ை(ம) ...................................

 

    • புதுமலர் வாகை புனைந்து நொதுமலர்

 

    • கங்கபாடி கவ்விக் கொங்கம்

 

    • வௌிப்படுத் தருளி யளிபடு திருளிய

 

    • சாரல்மலை யட்டுஞ் சேரன்மலை நாட்டுத் - - - - 20

 

    • தாவடிக் குவட்டின் பாவடி சுவட்டுத்

 

    • துடர்நெய்க் கனகந் துகளெழ நெடுநற்

 

    • கோபுரங் கோவைக் குலைய மாபெரும்

 

    • யுரிசை வட்டம் பொடிபடப் புரிசைச்

 

    • சுதைகவின் படைத்த சூளிகை மாளிகை - - - - - 25

 

    • யுதகைமுன் னொள்ளெரி கொளுவி உதகை

 

    • வேந்தைக் கடல்புக வெகுண்டு போந்து

 

    • சூழ்மண் டலம்தொழ வீமண் டலமுங்

 

    • கொண்டு தண்டருளிப் பண்டு தங்கள்

 

    • திருக்கு லத்தோர் தடவரை யெழுதிய - - - - - - 30

 

    • பொங்குபுலி போத்துப் புதுக்கத் துங்கத்

 

    • திக்கினிற் சேனை செலுத்தி மிக்க

 

    • வொற்றைவெண் குடைகீழ் இரட்டைவெண் கவரி

 

    • தெற்றிய வனலந் திவள வெற்றியுள்

 

    • வீற்றிருந் தருளிய வேந்தன் போற்றிருந் - - - - - 35

 

    • தண்டமிழ் நாடன் சண்டப ராக்கிரமன்

 

    • றிண்டிறற் கண்டன் செம்பியர் பெருமான்

 

    • செந்திரு மடந்தைமன் ஸரீராச ராசன்

 

    • இந்திர சேனன் ராஜசர் வஞ்ஞ னெனும்

 

    • புலியைப் பயந்த பொன்மான் கலியைக் - - - - - - 40

 

    • கரந்து கரவாக் காரிகை சுரந்த

 

    • முலைமிகப் பிரிந்து முழங்கெரி நடுவணுந்

 

    • தலைமகற் பிரியாத் தைய்யல் நிலைபெறும்

 

    • தூண்டா விளக்கு..............

 

    • ........ ......... .......சி சொல்லிய - - - - - - - - - - -45

 

    • வரைசர்தம் பெருமா னதுலனெம் பெருமான்

 

    • பரைசைவண் களிற்றுப் பூழியன் விரைசெயு

 

    • மாதவித் தொங்கல் மணிமுடி வளவன்

 

    • சுந்தர சோழன் மந்தர தாரன்

 

    • திருப்புய முயங்குந் தேவி விருப்புடன் - - - - - - - 50

 

    • வந்துதித் தருளிய மலையர் திருக்குலத்

 

    • தோரன் மையாக தமரகத் தொன்மையிற்

 

    • குலதெய்வ ........ கொண்டது நலமிகுங்

 

    • கவசந் தொடுத்த கவின்கொளக் கதிர்நுதித்

 

    • துவசந் தொடுத்த சுதைமதிற் சூழகழ்ப் - - - - 55

 

    • புளகப் புதவக் களகக் கோபுர

 

    • வாயின் மாட மாளிகை வீதித்

 

    • தேசாந் தன்மைத் தென்திருக் கோவலூ

 

    • ரிசரந் தன்றக் கவன்றது மிசரங்

 

    • குடக்குக் கலுழி குணக்கு கால்பழுங்கக் - - - - -60

 

    • காளா கருவுங் கமழ்சந் தனமுந்

 

    • தாளார் திரளச் சாளமு நீளார்

 

    • குறிஞ்சியுங் கொகுடியு முகடுயர் குன்றிற்

 

    • பறிந்துடன் வீழப் பாய்ந்து செறிந்துயர்

 

    • புதுமத கிடறிப் போர்க்கலிங் கிடந்து - - - - - - -65

 

    • மொதுமொது முதுதிரை விலகி கதுமென

 

    • வன்கரை பொருதுவருபுனற் பெண்ணைத்

 

    • தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது

 

    • மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத்

 

    • தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் - - - - - - 70

 

    • மூரிவண் டடக்கைப் பாரித னடைக்கலப்

 

    • பெண்ணை மலயர்க் குதவிப் பெண்ணை

 

    • யலைபுன லழுவத் தந்தரி க்ஷஞ்செல

 

    • மினல்புகும் விசும்பின் வீடுபே றெண்ணிக்

 

    • கனல்புகுங் கபிலக் கல்லது புனல்வளர் - - - - - - 75

 

    • பேரட் டான வீரட் டானம்

 

    • அனைத்தினு மனாதி யாயது நினைப்பினும்

 

    • உணர்தற் கரியது யோகிக ளுள்ளது

 

    • புணர்தற் கினியது பொய்கைக் கரையது

 

    • சந்தன வனத்தது சண்பகக் கானது - - - - - - - - - - 80

 

    • நந்தன வனத்தின் னடுவது பந்தர்

 

    • சுரும்படை வெண்பூங் கரும்பிடைத் துணித்தரத்

 

    • தாட்டொலி யாலை அயலாது பாட்டொலிக்

 

    • கருங்கைக் கடையர் பெருங்கைக் கடைவாள்

 

    • பசுந்தாட்டிஞ் செந்நெற் பழனத் தசும்பார் - - - - -85

 

    • கணி.. ......... ......... .........

 

    • ......... யவற்றை யருக்க னருச்சனை முற்றிய

 

    • நான்மறை தெரிந்து நூன்முறை யுணர்ந்தாங்

 

    • கருச்சனா விதியொடு தெரிச்சவா கமத்தொழில்

 

    • மூவெண் பெயருடை முப்புரி நூலோர் - - - - - - - -90

 

    • பிரியாத் தன்மைப் பெருந்திரு வுடையது

 

    • பாடகச் சீறடிப் பணைமுலைப் பாவையர்

 

    • நாடகத் துழதி நவின்றது சேடகச்

 

    • சண்டையுங் கண்டையுந் தாளமுங் காளமுங்

 

    • கொண்டதிர் படகமுங் குளிறுமத் தளங்களும் - - 95

 

    • கரடிகை தொகுதியுங் கைம்மணிப் பகுதியு

 

    • முருடியல் திமிலை முழக்கமு மருடரு

 

    • வால்வளைத் துணையு மெல்வளைத் தணையுங்

 

    • கரும்பொலி மேகமுங் கடலுமென கஞலி

 

    • திருப்பொலிn திருப்பலி சினத்து விருப்பொலிப்-100

 

    • பத்தர்தம் பாடல் பயின்றது முத்தமிழ்

 

    • நாவலர் நாற்கவி நவின்றது ஏவலில்

 

    • அருஷையோ டரஹரா வெனக்குனித் தடிமைசெய்

 

    • பருஷையர் பகுவிதம் பயின்றது கருஷைமுக்

 

    • கண்ணவ னுறைவது கடவுளர் நிறைவது . . . . . 105

 

    • மண்ணவர் தொழுவது வானவர் மகிழ்வது

 

    • மற்றுமின்ன வளங்கொள் மதிற்ப தாகைத்

 

    • தெற்றுங் கொழுநிழற் சிவபுரத் தாற்குப்

 

    • பன்னாள் நிறைபெற முன்னா ளுரவோன்

 

    • செய்த தானந் தேவன் குடியில் - - - - - - - - - - -110

 

    • அலகியல் மரபி னமைந்து உலகியல்

 

    • சாண்பன் னிரண்டிற் சமைந்த தனிக்கோல்

 

    • போற்றுற வளர்ந்த நூற்றறு பதுகுழி

 

    • மாவொன் றாகவந்த வேலி யாறே

 

    • காலி லந்தங் களைந்து நீங்கிய - - - - - - - - - - 115

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

  •  
  • நிலத்தா னீங்கா நெற்றுகை ஆங்கொரு

 

  • மாவிற்கு அறுகல மாகக்

 

  • கொழுநூற் றவராடுங் கூட்டி யளந்த

 

  • எழுநூற் றிருபதி லிறைமகற் குரிமை

 

  • நாழி யெட்டான் வாழி யட்டானக் - - - - - - - - 120

 

  • கருங்காலொன்றாற் செங்கை யிரண்டிட்டு

 

  • அளந்த நெல் லாற்று பதனிற்

 

  • களைந்த நிவந்தத் தன்மை நினையில்

 

  • உவந்துநஞ் சுண்டவருக் கமுதுண நயந்த

 

  • வொத்தெண் வழுவாப் பத்தெண் குத்தல் - - - - 125

 

  • பழநெல் லரிசி பன்னிரு நாழிக்குப்

 

  • பதினை யிரட்டிநெற் பதினை யிரட்டியுங்

 

  • குறுவா ளான நெடுவா ணயனிக்

 

  • கோரிரு நாழி யுட்படுத்து யர்ந்த

 

  • நெல்நா லெட்டொன நாழி யும்மே - - - - - - - - -130

 

  • .......... ......... ....மிளகு முப்பிடிக்கு

 

  • செல்லக் கொடுத்த நெல்லஞ் ஞாழியுஞ்

 

  • சூழ்கறி துவன்ற போழ்கற் கொள்நெற்

 

  • பெருக்கிய நாலுரி யுருக்கிய நறுநெய்

 

  • உழக்கரை தனக்கு வழக்கரை வினவில் - - - - - -135

 

  • முந்நாழி யுந்தயிர் முந்நாழிக் காங்கறு

 

  • நானா ழியுமடைக் காய மிதிற்குப்

 

  • பன்னீ ருழக்கும் பரிசா ரகமாள்

 

  • நன்னாங் கினுக்கு நெல்லறு நானாழியுந்

 

  • திருமடைப் பள்ளிப் பெருமடைக் குதவும் - - - -140

 

  • இந்தன வொருவற்குத் தந்தமுந் நாழியும்

 

  • ஆகநெற் கலமு மேகநற் றிவசம்

 

  • அப்பரி சியற்றலி லறுவகை யிருதுவும்

 

  • இப்பரி சியற்றி யெழுந்துநே ரானபின்

 

  • புதுமலர் விரிந்து மதுமலர் சோலைப் - - - - - - 145

 

  • புள்ளுர் கோவ லுள்ளுர்ப் பழநிலம்

 

  • இரட்டுமுக் காலிற் றந்தபதி னைஞ்சும்

 

  • மொட்டுக் கல்லை கவர்மூன்று மாவும்

 

  • ஆலஞ் செறுவி லஞ்சு மாவும்

 

  • திரண்டு பாய்புனற் றெங்காச் செறுவில் - - - - - -150

 

  • இரண்டு மாவும் இலுப்பைக்கா லிரண்டும்

 

  • நெல்லாலித் தேழும் புல்லா லிப்புறம்

 

  • அஞ்செடுங் கூட்டி ஆகிய நிலத்தொகை

 

  • அப்புத்திரண் டியல்மா முப்பத் திரண்டு

 

  • மேலா றுணர்ந்த நாறா றெண்பயில் - - - - - - - - -155

 

  • அந்தண ரனைவர்க்கும் அருச்சனா போகத்

 

  • தந்த பின்னைத் தடமலர்ப் பொய்கைப்

 

  • போதகர் பழனப் புதுமலர்ச் சோலைச்

 

  • சிதாரி பலமஞ்சு மஞ்சாமற் கெட்ட

 

  • திரு வைய்யன் கொட்டமில் குணத்தாற் - - - - -160

 

  • செம்பொற் புரிசைச் சிவபுரத் தாற்குக்

 

  • கோவலந் தணர்பாற் கொண்டு கொடுத்தன

 

  • பண்டைக் கோலாற் பண்டைக் குழித்தொகை

 

  • மணங்கொண் டீண்டு முணங்கல் பூண்டி

 

  • யொப்புத் தொறுமா முப்பத்தறு மாவு - - - - - - - 165

 

  • மிகவந் துயர்புனற் பகவந்தக் கழனி

 

  • யெட்டு முதலிருபது மாவு மட்டவிழ்

 

  • பூத்துழா வியபுனல் மாத்துழான் வேலி

 

  • ஏவிய வெட்டு மாவும் வாவியிற்

 

  • கோடேறு பழனக் காடேறு மாநிலம் - - - - - - - 170

 

  • அஞ்சும் களர்நிலம் பத்துந் நெஞ்சத்து

 

  • உள்ளத் தகும்புன லுரவுக்கட லுகாயம்

 

  • பள்ளத் திரண்டும் பாவருங் கணியக்

 

  • கழனியில் எட்டும் கைகலந் துரைப்பில்

 

  • துழணி.... ...... ..கலமென

 

  • ....மேற்படி காலாற் பாற்பட வளர்ந்த - - - - - - -175

 

  • வீங்கு டனவர் பாங்குடன் றொகுத்த

 

  • மெய்ஞ் ற்றுரைகையில் மேதகு தூநெல்

 

  • அஞ்ற் றிருபத் திருகலம் என்ன

 

  • மற்றைத் தொகயில் மதிவளர் சடையோன்

 

  • பெற்ற வாரம் பிழையறப் பேசில் - - - - - - - - - -180

 

  • ஐம்பதிற் றைஞ்சொடு மொய்ம்புறு பதினொரு

 

  • கலத்தொடு முணங்கல் பூண்டியிற் கறைஞெல்

 

  • நன்சை நீக்கி புன்சை நானமா

 

  • மாத்தாற் கலவரை யான வரையரை

 

  • அறுகல மேற்றிப் பெறுகல வளவை - - - - - - - - 185

 

  • மூன்றொடு முப்பது குறைந்த முன்னூற்றுக்

 

  • கலத்தனில் மற்றக் கண்ணுதற் காக

 

  • நிலத்தவ ருவந்த நிவந்தந் நலத்தகு

 

  • நாளொன் றினுக்கு நான்முந் நாழி

 

  • பானிறத் தன்மைத் தூநிறக் குத்தல் - - - - - - - -190

 

  • அரிசியி லான நெல்லு வரிசையிற்

 

  • குறுபவள் கூலி யேற்றிப் பெறுவன

 

  • பேணிய பழநெற் றூணியுங் காணிய

 

  • வையமது புகழு நெய்யமுது முப்பிடி

 

  • கொள்ளக் கொடுத்த நெல்லறு நாழியும் - - - - - 195

 

  • பொழுது மூன்றினுக் கிழுதுபடு செந்தயி

 

  • ரொருமுந் நாழிக் கிருமுன் நாழியு

 

  • மடைக் காயமுதுக் காறுரி யத்தும்

 

  • அந்தண னொருவ னபிஷேகஞ் செய்யத்

 

  • தந்தன குறுணி முற்றதைந்த நானாழியு - - - - - 200

 

  • மறைய வல்செய் மாணிரண் டினுக்கு

 

  • குறைவறக் கொடுத்தநெற் குறுணிநா நாழியும்

 

  • ஓராண் டினுக்கு நேராண் டாக

 

  • நண்ணிய நக்ஷத்திர மென நல்லோன்

 

  • நண்ணிய திருவிளக்கெண்பதுங் கண்ணெனக் - -205

 

  • காவியர் கயல்பய லாவியூ ரதனிற்

 

  • றிக்குடை யிவரு முக்குடை யவர்தம்

 

  • அறப்புற மான திறப்பட நீக்கிச்

 

  • சாலி விளைநிலம் வேலி யாக்கி

 

  • முதல்வதின் மூன்றே முக்காலே யரைக்கா - - - 210

 

  • லிதன்தனி வந்த யியல்வகை யுரைப்பில்

 

  • ஓப்பத்திரு வனையவர் முப்பத்திருவர்

 

  • பாடல் பயின்ற நாடக மகளிர்கும்

 

  • நெஞ்சா சார நிறைவொடு குறையாப்

 

  • பஞ்சா சாரியப் பகுதி யோர்க்கும் - - - - - - - - 215

 

  • நறைப்புது மலர்விரி நந்த வானம்

 

  • இறைப்புத்தொழில் புரிந்த விருத்தவத் தோர்க்கும்

 

  • யோகி யொருவனுக்கு நியோக முடைநில

 

  • ........ .......... .......... வாழியர்

 

  • ...செஞ்சடை கடவுடன் றிருவாக் கேழ்வித் - - -220

 

  • தஞ்சுடைக் கடிகையன் றனக்கும் நெஞ்சில்

 

  • விதித்த முறைமை மதித்து நோக்கி

 

  • யின்னவை பிறவு மிராச ராசன்

 

  • தன்னவை முன்னற் தத்துவ நெறியி

 

  • லறங்கள் யாவையு மிறங்கா வண்ணம் - - - - - - 225

 

  • விஞ்ஞா பனத்தால் மிகவௌிப் படுத்தோன்

 

  • அன்பது வேலயி லடைக்குன் றகர்கும்

 

  • ஒன்பது வேலி யுடைய வுரவோன்

 

  • கொம்பர் நாடுங் குளிர்மலைச் சோலை

 

  • அம்பர் நாடன் ஆலங்குடிக் கோன் - - - - - - - -230

 

  • தெண்டிரைப் பழனத் திரைமூர் நாடன்

 

  • வண்டிரைத் துயர்பொழில் மணற்குடி நாடன்

 

  • நேரிய னருமொழி நித்தவி னோதன்

 

  • காரிய மல்லதோர் காரிய நினையா

 

  • தாராண் டலமைக் கற்பக சதுசன - - - - - - - - 235

 

  • பேராண் டலைமைக் புணர்புயத் துரவோன்

 

  • கூத்தொழில் கேளா தேத்தொழில் முனைந்த

 

  • கண்டகர் கரிசறத் துரிசறக் கலிசெக

 

  • மண்டல சுத்தியில் வயப்புலி வளர்த்தோன்

 

  • வான்பால் மதியும் வலம்புரி யிடம்புரி - - - - -240

 

  • யான்பால் வதியும் விரிசடைக் கடவுள்

 

  • நெற்றிக் கண்ணும் நிலத்தவர் நினைந்த

 

  • தெற்றிக் கண்ணுஞ் சிந்தா மணியும்

 

  • போலப் பிறந்த புகழோன் கோலக்

 

  • கருங்களிற் றுழவன் கம்பத் தடிகள் - - - - - - -245

 

  • மாதி விடங்கு வருபரி வல்ல

 

  • வீதி விடங்கன் மென்கருப் பாலைத்

 

  • தலந்தருத் தண்டலைத் தடநீர்

 

  • நலந்தரு பொன்னி நாடுகிழவோனே. - - - - - 249

 

  • ..........

 

  • ..........

 

  • ..........

 

  • ..........

 

  • ..........

 

  • ..........

 

  • ..........

 

  • ..........

 

  • சென்னிதிறல் ஸரீஇராசராச தேவர்க்கு யாண்டு


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

  •  
முதலாம் இராசேந்திரன் (கி. பி 1012 - 1044)

2.2.1 (26)

    • ஸ்வஸ்திஸரீ

 

    • திருமன்னி வளர இருநில மடந்தையும்

 

    • போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்

 

    • தன்பெருந் தேவியர் ஆகி இன்புற

 

    • நெடிதியல் ஊழியுள் இடதுறை நாடும்

 

    • துடர்வன வேலிப் படர்வன வாசியும் - - - - - - - - 5

 

    • சுள்ளிச் சூழ்மதில் கொள்ளிப் பாக்கையும்

 

    • நண்ணற்கு அருமரண் மண்ணைக் கடக்கமும்

 

    • பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்

 

    • ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்

 

    • முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த - - - - - - - -10

 

    • சுிந்தர முடியும் இந்திரன் ஆரமும்

 

    • தெண்திரை ஈழ மண்டலம் முழுவதும்

 

    • எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடும்

 

    • குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்

 

    • செங்கதிர் மாலையுங் சங்கதிர் வேலைத் - - - - -15

 

    • தொல் பெருங்காவல் பல்பழந் தீவும்

 

    • செருவில் சினவி இருபத்து ஒருகால்

 

    • அரைசு களைகட்ட பரசு ராமன்

 

    • மேவரும் சாந்திமத் தீவரண் கருதி

 

    • இருத்திய செம்பொன் திருத்தகு முடியும் - - - 20

 

    • பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டு

 

    • ஒளித்தசய சிங்கன் அளப்பரும் புகழொடும்

 

    • பீடியல் இரட்ட பாடி ஏழரை

 

    • இலக்கமும் நவநிதிகுலப்பெரு மலைகளும்

 

    • விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும் - - - - - - - 25

 

    • முதிர்பட வல்லை மதுர மண்டலமும்

 

    • காமிடை வளைய நாமணைக் கோணமும்

 

    • வெஞ்சிலை வீரர் பஞ்சப் பள்ளியும்

 

    • பாசுடைப் பழன மாசுணித் தேசமும்

 

    • அயர்வில்வண் கீர்த்தி யாதிநக ரவையில் - - - -30

 

    • சந்திரன் தொல்குலத் திந்திர ரதனை

 

    • விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்

 

    • பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்

 

    • கிட்டருஞ் செறிமிளை யொட்ட விக்ஷயமும்

 

    • பூசுரர் சேர்நல் கோசல நாடும் - - - - - - - - - -- 35

 

    • தன்ம பாலனை வெம்முனை யழித்து

 

    • வண்டமர் சோலை தண்ட புத்தியும்

 

    • இரண சூரனை முறணுறத் தாக்கித்

 

    • திக்கணைக் கீர்த்தி தக்கண லாடமும்

 

    • கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் - - - - - - 40

 

    • தங்காத சாரல் வங்காள தேசமும்

 

    • தொடுகடல் சங்கு கொட்டன்மகி பாலனை

 

    • வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித் தருளி

 

    • ஒன்திறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்

 

    • நித்தில நெடுங்கடல் உத்தர லாடமும் - - - - - 45

 

    • வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்

 

    • அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்திச்

 

    • சங்கிராம விசையோத் துங்க வன்மன்

 

    • ஆகிய கடாரத்து அரசனை வாகயம்

 

    • பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து 50

 

    • உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்

 

    • ஆர்த்தவன் அகநகர்ப் போர்த் தொழில் வாசலில்

 

    • விச்சா தரதோ ரணமும் முத்தொளிர்

 

    • புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்

 

    • நிறைசீர் விசயமும் துறைநீர்ப் பண்ணையும் - - 55

 

    • நன்மலை யூரெயில் தொன்மலை யூரும்

 

    • ஆழ்கடல் அகழ்சூழ் மாயிரு டிங்கமும்

 

    • கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்

 

    • காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்

 

    • காவல் புரிசை மேவிலிம் பங்கமும் - - - - - - - -60

 

    • விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்

 

    • கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்

 

    • கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்

 

    • தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்

 

    • தேனக் கலர்பொழில் மாநக்க வாரமும் - - - - -65

 

    • தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும்

 

    • மாப்பொரு தண்டாற் கொண்ட

 

    • கோப் பரகேசரி பன்மரான

 

    • உடயார் ஸரீஇராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு

 

  • ...........வது- - - - - - - - - - - - - - - - - - 70


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

முதலாம் இராசாதிராசன் (கி. பி 1018 - 1054) -1

2.3.1 (27)

    • ஸ்வஸ்திஸரீ

 

    • திங்களேர் பெறவளர் அங்கதிர் கடவுள்

 

    • தொல்குலம் விளங்கத் தோன்றி மல்கிய

 

    • வடதிசை கங்கையும் தென்திசை இலங்கையும்

 

    • குடதிசை மகோதையும் குணதிசைக் கடாரமும்

 

    • தண்டினில் கொண்ட தாதைதன் மண்டல - - - - - - - 5

 

    • வெண்குடை நிழலெனத் தண்குடை நிழற்றித்

 

    • திசைதொறும் செங்கோல் ஓச்சி இசைகெழு

 

    • தென்னவன் மானா பரணன் பொன்முடிப்

 

    • பருமணிப் பசுந்தலை பொருகளத் தரிந்து

 

    • வேணாட் டரசரைச் சோணாட் டொதிக்கிக் - - - - - - 10

 

    • கூவகத் தரசரைச் சேவகந் தொலைத்து

 

    • வேலைகொள் காந்தளூர்ச் சாலைகல மறுத்தற்பின்

 

    • தன்குலத் தவனிபர் நன்குதரு தகைமையில்

 

    • அரசிய லுரிமை முறைமையி லேத்தி

 

    • வில்லவர் மீனவர் வேள்குலச்ச ளுக்கியர் - - - - - - - 15

 

    • வல்லவர் முதலாய் வணங்கி வீற்றிருந்து

 

    • தராதலம் படைத்த திக்கேழும் துதிகெழு

 

    • செயங்கொண்ட சோழ னென்னும் மதிகெழு

 

    • கோவிராச கேசரிபன்மரான உடையார் ஸரீஇராசாதிராச

 

  • தேவர்க்கு யாண்டு .................................. - - - - - -20


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

முதலாம் இராசாதிராசன் (கி. பி 1018 - 1054) -2

2.3.2 (28)

    • ஸ்வஸ்திஸரீ

 

    • திங்களேர் தருதன் தொங்கல்வெண் குடைக்கீழ்

 

    • நிலமகள் நிலவ மலர்மகள் புணர்ந்து

 

    • செங்கொல் லோச்சி கருங்கலி கடிந்துதன்

 

    • சிறியா தாதையும் திருத்தமை யானையும்

 

    • குறிக்கொள்தன் இளங்கோக் களையும் நெறிபுணர் - 5

 

    • தன்திருப் புதல்வர் தம்மையும் துன்றெழில்

 

    • வானவன் வில்லவன் மீனவன் கங்கன்

 

    • இலங்கையர்க் கிறைவன் பொலங்கழற் பல்லவன்

 

    • கன்ன குச்சியர்க் காவலன்எனப் பொன்னணிச்

 

    • சுடர்மணி மகுடம் சூட்டிப் படர்புகழ் - - - - - - - - - 10

 

    • ஆங்கவர்கு அவர்நாடு அருளிப் பாங்குறு

 

    • மாதா தைமுன் வந்த போதலர்

 

    • தெரியல் விக்கிரம நாரணன்தன் சக்கரன்

 

    • அடிபடுத் தருளி கந்தவன் அவதரித்து

 

    • ஒருபதாம் நாளால் திருமணி மொளலி - - - - - - - -15

 

    • வாழியா பன்எதிர் சோழனெனப் புனைந்து

 

    • மன்னுபல் ஊழியுள் தென்னவர் முவருள்

 

    • மானா பரணன் பொன்முடி ஆனாப்

 

    • பருமணிப் பசுந்தலை பொருகளத் தரிந்து

 

    • வார்அள வியகழல் வீரகே ரளனை - - - - - - - - - -20

 

    • முனைவயிற் பிடித்துதன் ஆனை கிடுவித்து

 

    • அத்திவாரணக் கயிற்றால் உதைப்பித் தருளி

 

    • அந்தமில் பெரும்புகழ் சுந்தர பாண்டியன்

 

    • கொற்றவெண் குடையும் கற்றைவெண் கவரியும்

 

    • சிங்கா தனமும் வெங்களத்து இழிந்துதன் - - - - - -25

 

    • முடிவிழத் தலைவிரித்து அடிதளர்ந்தோட

 

    • தோல்லை முல்லையூர் துரத்தி ஒல்கலில்

 

    • வேணாட் டரசரை ச் சோணாட்டு ஒதிக்கி

 

    • மேவுபுகழ் இராமகுட முவர்கெட முனிந்து

 

    • மிடல்கெழு வில்லவன் குடர்மடிக் கொண்டுதன் - - 30

 

    • நாடுவட்டு ஓடிக் காடுபுக்கு ஒளிப்ப

 

    • வஞ்சியம் புதுமலர் மலைந்தாங்கு எஞ்சலில்

 

    • வேலைகெழு காந்தளூர்ச் சாலைகலம் அறுப்பித்து

 

    • ஆகவ மல்லனும் அஞ்சக் கேவுதன்

 

    • தாங்கரும் படையால் ஆங்கவன் சேனையுள் - - - - 35

 

    • கண்டப் பய்யனும் கங்கா தரனும்

 

    • வண்டமர் களிற்றொடு மடியத் திண்திறல்

 

    • விருதர் வக்கியும் விசையா தித்தனும்

 

    • தருமுரட் சாங்க மய்யனும் முதலினர்

 

    • சமர பீருவொத் துடைய நிமிசுடர் - - - - - - - - - - 40

 

    • பொன்னொடு அய்ங்கரிப் புரவியொடும் பிடித்துத்

 

    • தன்னாடை யிற்சயங் கொண்டு துன்னார்

 

    • கொள்ளிப் பாக்கை உள்ளொளி மடுப்பித்து

 

    • ஓருதனித் தண்டால் பொருகடல் இலங்கையர்க்

 

    • கோமான் விக்ரம பாகுவின் மகுடமும் - - - - - - - - 45

 

    • முன்றனக்கு உடைந்த தென்றமிழ் மண்டலம்

 

    • முழுவதும் இழந்து ஏழ்கடல் ஈழம்

 

    • புக்க இலங்கேச னாகிய விக்ரம

 

    • பாண்டியன் பருமணி மகுடமும் காண்டங்கு

 

    • தன்னது ஆகிய கன்னக்குச் சியினும் - - - - - - - - - 50

 

    • ஆர்கலி ஈழம் சீரிதென் றெண்ணி

 

    • உளங்கொள் நாடுதன் னுறவோடும் புகுந்து

 

    • விளங்குமுடி கவித்த வீரசலா மேகன்

 

    • பொருகளத் தஞ்சிதன் கார்களி றிழந்து

 

    • கவ்வையுற் றோடிக் காதலி யொடுந்தன் - - - - - - - 55

 

    • றவ்வையை பிடித்துத் தாயை மூக்கரிய

 

    • ஆங்கவ மானம் நீங்குதற் காக

 

    • மீண்டும் வந்து வாட்டொழில் புரிந்து

 

    • வெங்களத்து உலந்தஅச் சிங்களத் தரைசன்

 

    • பொன்னணி முடியும் கன்னரன் வழிவந்து - - - - - - -60

 

    • உறைகொள் ஈழத் தரைசனா கியசீர்

 

    • வல்லவன் மதன ராசன் எல்லொளித்

 

    • தடமணி முடியும் கொண்டு வடபுலத்து

 

    • இருகா லாவதும் பொருபடை நடாத்தி

 

    • கண்டரன் தினகரன் நாரணன் கணவதி - - - - - - - -65

 

    • வண்டலர் தெரியல் மதுசூ தனனென்று

 

    • எனைப்பல வரையரை முனைவயிற் றுரத்தி

 

    • வம்பலர் தருபொழில் கம்பிலி நகருள்

 

    • சளுக்கியர் மாளிகைத் தகர்ப்பித்து இளக்கமில்

 

    • வில்லவர் மீனவர் வேள்குலச் சளுக்கியர் - - - - - - 70

 

    • வல்லவர் கௌசலர் வங்கணர் கொங்கணர்

 

    • சிந்துணர் ஐயணர் சிங்களர் பங்களர்

 

    • அந்திரர் முதலிய அரைசரிடு திரைகளும்

 

    • ஆறிலொன்று அவனியுள் கூறுகொள் பொருள்களும்

 

    • உகந்துநான் மறையவர் முகந்துகொளக் கொடுத்து75

 

    • விசுவலோகத்து விளங்க மனுநெறி நின்று

 

    • அஸ்வமேத யாகஞ்செய் தரசுவீற் றிருந்த

 

    • சயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ்

 

    • கோவிராச கேசரி பன்ம ரான

 

    • உடையார் ஸரீஇராசராசதேவர்க்கு - - - - - - - - - - - 80

 

  • யாண்டு ................

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 முதலாம் இராசாதிராசன் (கி. பி 1018 - 1054) -3

2.3.3 (29)

    • ஸ்வஸ்தி ஸரீ

 

    • திங்களேர் தருதன் தொங்கல்வெண் குடைக்கீழ்

 

    • நிலமகள் நிலவ மலர்மகள் புணர்ந்து

 

    • செங்கோ லோச்சிக் கருங்கலி கடிந்து

 

    • தந்தையர் தமயர் தம்பியர் தன்திரு

 

    • மைந்தரென் றிவரை மணிமுடி சுட்டிக் - - - - - - - - - - 5

 

    • கன்னி காவலர் தென்னவர் மூவருள்

 

    • வானகம் இருவருக் கருளிக் கானகம்

 

    • ஒருவனுக் களித்துப் பொருசிலைச் சேரலன்

 

    • வேலைகெழு காந்தளூர்ச் சாலைகல மறுத்து

 

    • இலங்கையர்க் கரசரையும் அலங்கல்வல் லபனையும் -10

 

    • கன்ன குச்சியர்க் காவலனையும் பொன்னணி

 

    • முடித்தலை தடிந்துதன் கொடிப்படை ஏவிக்

 

    • கன்னா டகர்விடு கடகரி புரளத்

 

    • தன்னா டையிற்றமிழ்ப் பரணிகொண் டொன்னார்

 

    • வச்சிர நெடுவாள் விச்சயன் வெருநௌித்து - - - - - - 15

 

    • அஞ்சி ஓடத்தன் வஞ்சியம் படையால்

 

    • ஆங்கவன் பிதாவை மாதாவோடு சதர்மலி

 

    • வீங்கு நீர்ப் பூண்டூர் வெஞ்சமத் தகப்படுத்து

 

    • அயப்படை ஆகவ மல்லன் பயத்தொடும்

 

    • வரவிடும் ஒற்றரை வொருவரப் பிடித்து - - - - - - - - -20

 

    • ஆங்கவர் மார்பில் ஆகவ மல்லன்

 

    • யாங்ஙணம் அஞ்சினன் என்ன நன்கெழுதிச்

 

    • செலுத்திய பின்னைத்தன் புலிக்கொடிப் படைஞர்

 

    • ஒட்டவரி வாரண வரசைக் கடல்புரைச்

 

    • சிறுதுறைப் பெருந்துறைத் தெய்வவீம ரசியென்று - -25

 

    • உறுதுறை மூன்றிலும் ஒளிர்புன லாட்டுவித்து

 

    • ஆங்கவர் ஏத்த கிரியினில் ஓங்கிகல்

 

    • உழுலையெறெழுதி உயர்ஜயஸ் தம்பம்

 

    • எழில்பெற நிறுத்திதன்கழல்பணிந் தொழுகும்

 

    • அரசர்க ளோடுசென் றாடிப் பொருபுலி - - - - - - - - -30

 

    • வீதரன கொடியொடு தியாகக்கொடி யெடுத்து

 

    • ஒன்னலர் கவர்ந்த தொன்னிதிப் பிறக்கம்

 

    • இரவலர் ஆனோர்க்கு ஈந்தவன் தண்டத்துக்கு

 

    • அவர் வெல்புரவி நுளம்பனும் காளி

 

    • தாசனும் விளம்பரும் தார்ச்சா முண்டனும் - - - - - - 35

 

    • போர்க்கொம் மய்யனும் வில்லவர் அரசனும்

 

    • வெஞ்சமத் திரியஅவர் பெருநிதி கவர்ந்து

 

    • கூர்ச்சரை சாரணை உப்பளர் கொய்மலர்

 

    • பசுந்தலை தராதயி லப்பன் தடிந்துமுன்

 

    • தகைவன தப்பைமுன் அப்பகை செகுத்து- - - - - - - 40

 

    • உப்பளன் வழியிற் தப்பிய வரசர்

 

    • ஆங்கது மீட்க மாட்டாது தனது

 

    • பூங்கழல் சரணெனப் கூ,க்கவர்க் கருளித்

 

    • தடமுடி மீட்டுக் கொடுத்து அவரரண்

 

    • அவருக் களித்த தடங்கவன தப்பையைப் - - - - - - -45

 

    • பறித்துடன் கொண்டு போது றைப்புனல்

 

    • இரட்ட பாடியெரி மடுத்தவ் விரட்டம்

 

    • ஏழரை இலக்கமும் மதிமுன் ஆண்டு

 

    • அறத்துறைத் தஞ்சியும் அஞ்சா கரத்து

 

    • வெஞ்சமங் கருதி விடவந்த பெற்கடை - - - - - - - - 50

 

    • முன்பெரி தவர்க்குக் குறைவரந் தொன்னலர்

 

    • அறைகழல் தன்புகழ் ...மா பாட்டரில்

 

    • ஒருவனை பெண்ணுடை உடுத்தி ஒருவனை

 

    • அஞ்சு சிகைபடச் சிறப்பித்து நொந்தழி

 

    • ஆகவ மல்லியும் ஆகவ மல்லனும் - - - - - - - - - - - -55

 

    • என்றுபெயர் எடுத்து அன்றவன் விடுத்த

 

    • பெற்கடை தன்னுடன் போக்கி வற்குடன்

 

    • விட்டினி விடாதுசென் றொட்டி முதுகிடப்

 

    • பொருதுதன் கதப்புலி தண்டின் முன்னோர்

 

    • கைமலை தடவி கல்யாண புரம்என்னுந் - - - - - - - - 60

 

    • தொல்நகர் துகளெழத் தகைப்பித் தன்னகர்

 

    • அரசுறை கருமா ளிகைப்பொடி யாக்கி

 

    • ஆங்கது காத்து நின்ற பங்கழல்

 

    • அடலா கத்தன் முதலினர் கடகளிற்று

 

    • அரசர் முப்பத்து ஐங்கரி யோடும் - - - - - - - - - - - 65

 

    • பரியோடும் பட்டுகப் பொருதஅப் பொருநகர்

 

    • விசைய ராசேந் திரன்என் றாங்கிக

 

    • வீராபி ஷேகம் செய்து சீர்கெழு

 

    • விசுவலோ கத்து விளங்குமனு நெறிநின்று

 

    • அசுவமே தஞ்செய் தரசுவீற் றிருந்த - - - - - - - - - 70

 

    • ஜயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ்

 

    • கோவிராசகேசரி வன்மரான உடையார் ஸரீராசாதிராச

 

  • தேவர்க்கு யாண்டு .......... ...........


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

http://library.senthamil.org/265.htm



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard