Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெண்பாப் பாட்டியல் - வச்சணந்தி மாலை


Guru

Status: Offline
Posts: 7478
Date:
வெண்பாப் பாட்டியல் - வச்சணந்தி மாலை
Permalink  
 


https://ta.wikipedia.org/s/o5c

வெண்பாப் பாட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search

வெண்பாப் பாட்டியல் என்பது ஒரு பாட்டியல் நூல். இதற்கு வச்சணந்திமாலை என்னும் இன்னொரு பெயரும் வழங்கிவருகின்றது. இதை இயற்றியவர் குணவீர பண்டிதர் எனப்படும் புலவர் ஆவார். இவரே நேமிநாதம் என்னும் இலக்கண நூலையும் இயற்றியவர். குணவீர பண்டிதரின் ஆசிரியரான வச்சணந்தி (வஜ்ர நந்தி) என்பாரின் பெயரைத் தழுவியே இந்நூலுக்கு வச்சணந்திமாலை என்னும் பெயர் ஏற்பட்டது எனத் தெரிகிறது. இன்று முழுமையாகக் கிடைக்காத இந்திரகாளியம் என்னும் இலக்கண நூலை முதல் நூலாக வைத்தே குணவீர பண்டிதர் இதனை இயற்றியுள்ளார்[1].

காலம்[தொகு]

இந்த நூல் தோன்றிய காலம் 13 ஆம் நூற்றாண்டு. [2] [3]

அமைப்பு[தொகு]

மொத்தம் 100 வெண்பாக்களைக் கொண்டு அந்தாதி முறையில் அமைந்த இந்த நூல் மூன்று இயல்களைக் கொண்டது. அவை, முதன் மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என்பன. முதன் மொழியியலில் 22 பாடல்களும், செய்யுளியலில் 40 பாடல்களும், பொதுவியலில் 38 பாடல்களும் உள்ளன.

முதன்மொழியியல்

சொல், எழுத்து, தானம், பால், உணா, வருணம், நட்சத்திரம், கதி, கணம், முதலான பொருத்தங்கள் 22 வெண்பாக்களில் கூறப்பட்டுள்ளன.

செய்யுளியல்

ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி, பிள்ளைக்கவி, பல்சந்தமாலை, அந்தாதி, கலம்பகம், ஒலியந்தாதி, மும்மணிக்கோவை, ஊர்நேரிசை, ஊர்இன்னிசை, கோவை, கைக்கிளை, மும்மணிமாலை, நான்மணிமாலை, இருபா இருபது, இரட்டைமணி மாலை (இரண்டு வகை), இணைமணி மாலை, தசாங்கம், சின்னப்பூ, தசாங்கப்பத்து, விருத்தவகை நூல்கள், ஊர்வெண்பா, அலங்கார பஞ்சகம், ஊசல், நாழிகை வெண்பா, அட்டமங்கலம், நவமணிமாலை, தசப்பிராதுற்பவம், நயனப்பத்து, பயோதரப்பத்து, பெண்கள் பருவம், உலா, குழமகன், வளமடல், அங்கமாலை, பாதாதிகேசம், கேசாதிபாதம், ஆற்றுப்படை, தானைமாலை, வஞ்சிமாலை, வாகைமாலை, தாரகமாலை, மங்கலவள்ளை, யானைவஞ்சி, மெய்க்கீர்த்தி, கையறமோதரப்பா, புகழ்ச்சிமாலை, நாம மாலை, வருக்கமாலை, செருக்கள வஞ்சி, வரலாற்று வஞ்சி, பரணி முதலான சிற்றிலக்கியங்களுக்கும், பெருங்காப்பியத்துக்கும் இப்பகுதியில் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. மேலும் அகலக்கவி, கமகன், வாதி, வாக்கி, புன்கவிஞன் ஆகிய கவிஞர்களுக்கும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. இதில் 48 வெண்பாக்கள் உள்ளன.

பொதுவியல்

இதில் நால்வகைப் பாக்களுக்கும் சாதி, நிறம், இடம், நாள், இராசி, தேவதை போன்றவை கூறப்பட்டுள்ளன. மேலும் அந்தணர், மன்னர், பூவைசியர், தனவைசியர், சூத்திரர் முதலானோர் இயல்புகளும் கூறப்பட்டுள்ளன. அதிலு 30 வெண்பாக்கள் உள்ளன.

குறிப்புகள்[தொகு]

  1.  இளங்குமரன், இரா., 2009. பக். 274.
  2.  சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, முதல் பதிப்பு 1936, மூன்றாம் பதிப்பு 1951, கொ. இராமலிங்கத் தம்பிரான் விளக்க உரையுடன்.
  3.  இதன் உரையில் வரும் கந்தபுராணம்கூர்ம புராணம் போன்ற மேற்கோள் நூல்களைக் கொண்டு இது 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது எனக் கொள்பவர் கருத்து பொருந்தாது.

உசாத்துணைகள்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
  • இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.


__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
Permalink  
 

வச்சணந்தி மாலை (வெண்பா பாட்டியல்) கூறும் வர்ணாசிரமம்  

உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும், வல்லெழுத்துக்கள் ஆறும் பார்ப்பன வருணம் என்றும்; த, ந, ய, ர, ப, ம இவ்வாறு மெய்யும் அரச வருணம் என்றும்;  ல, வ, ற, ன இந்நான்கும் வணிக வருணம் என்றும்; தமிழுக்கே சிறப்பெழுத்துக்கள் எனப்பெருமையாகக் கூறப்படும் ழ, ள இவ்விரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நான் முன்பு திருவிளையாடற் புராணத்தில் பார்ப்பான் நிறம் வெண்மை, அரசன் - செம்மை, வணிகன் - பச்சை, சூத்திரன் -கறுப்பு என்று கூறியிருப்பதாகக் கூறினோம். அதுபோலவே இந்நூலிலும் பாக்களுக்கு கூட நிறம் கூறப்பட்டுள்ளது.

வெண்பா - வெண்மை,  ஆசிரியப்பா - செம்மை,  கலிப்பா- பொன்மை, வஞ்சிப்பா - கருமை  

என்று கூறுகின்றது. மேலும் வெண்பா - பிராமண குலமென்றும், ஆசிரியப்பா - சத்திரிய குலமென்றும், கலிப்பா - வைசிய குலமென்றும், வஞ்சிப்பா - சூத்திர குலமென்றும் குலப் பொருத்தங்கள் கூறுகின்றது. அத்துடன் விட்டதா? இல்லை. வெண்பாவால் அந்தணனைப் பாடவேண்டுமாம். ஆசிரியப் பாவால் அரசனைப் பாடவேண்டுமாம். கலிப்பாவால் வைசியனைப் பாடவேண்டுமாம். வஞ்சிப்பாவால் சூத்திரனைப் பாடவேண்டுமாம்.

கலம்பகம் பாடவும் நிபந்தனை:

ஒருவன் கலம்பகம் என்ற நூல் செய்ய விரும்பினால் தேவருக்கு நூறு பாட்டும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்து  பாட்டும்,  அரசர்களுக்குத் தொண்ணூறு பாட்டும், அமைச்சருக்கு எழுபது பாட்டும், வணிகருக்கு ஐம்பதும், சூத்திரனுக்கு முப்பதுமாக பாட வேண்டுமாம். என்னே இக்கால வர்ணா சிரமத்தின் கொடுமை !          



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
Permalink  
 

வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்தப் பாட்டியலும்

 

முதன் மொழியியல்

0. வெண்பா
தொகுத்துரைத்த மங்கலஞ் சொல்லெழுத்துத் தானம்
வகுத்தபா லுண்டி வருணம் - பகுத்தநாள்
தப்பாக் கதிகணமென் றீரைந்தின் தன்மையினைச்
செப்புவதா மும்மொழியின் சீர்.

1. மங்கலப் பொருத்தம்
சீரெழுத்துப் பொன்பூ திருமணிநீர் திங்கள்சொற்
கார்பரிதி யானை கடலுலகம் - தேர்மலைமா
கங்கை நிலம்பிறவுங் காண்டகைய முன்மொழிக்கு
மங்கலமாஞ் சொல்லின் வகை.

2. சொற் பொருத்தம்
வகையுளி சேர்தல் வனப்பின்றாய் நிற்றல்
தொகையார் பொருள்பலவாத் தோன்றல் - தகையில்
பொருளின்மை யீறு திரிதலே போல்வ
தருமுதற்சீர்ச் சொற்காகுந் தப்பு.

3. எழுத்துப் பொருத்தம்
தப்பாத மூன்றைந்தே ழொன்பான் தவறிலவென்
றொப்பா முதற்சீர்க் குரைசெய்வர் - செப்புங்கால்
தண்டாத நான்காறெட் டாகா தவிர்கென்று
கொண்டா ரெழுத்தின் குறி.

4. தானப் பொருத்தம்
குறிலைந்துந் தந்நெடில் கொண்டிஉஐ ஒளசேர்ந்
தறிபால னாதியா வைந்து - மிறைவன்பேர்
முன்னெழுத்துப் பாலனில்வைத் தெண்ணிமூப் பேமரணம்
என்னுமிவை தீதென்றே யெண்.

5. பாற் பொருத்தம்
எண்ணுங் குறிலா ணியைந்த நெடிலெல்லாம்
பெண்ணாகு மொற்றாய்தம் பேடாகும் - பெண்ணினோ
டாண் புணர்ச்சிக் கவ்வவ் வெழுத்தே மயங்கினுமா 
மாண்பில்பே டென்றார் மதித்து.

6. உணாப் பொருத்தம்
மதித்த கசதநப மவ்வோடு வவ்வும்
உதித்தமைந்த நாற்குற் றுயிரும் - துதித்தமுதென்
றாதி மொழிக்குந் தசாங்கத் தயலுக்குந்
தீதிலவே யென்றார் தெரிந்து.

7.
தெரிந்த யரலமேற் சேர்ந்தவா வோவும்
புரிந்தவற் றொற்றாய்தப் புள்ளி - விரிந்த
அளவொடுகான் மாத்திரையு மாமென் றறிந்தோர்
உளவென்றார் நஞ்சென் றொழி.

8. வருணப் பொருத்தம்
ஒழியா வுயிரனைத்து மொற்றுமுத லாறும்
அழியா மறையோர்கா மென்பர் - மொழியும்
அடைவேயோ ராறு மரசர்க்கா மென்பர்
படையாத சாதிகளின் பண்பு.

9.
பண்பார் வணிகர்க்காம் பாங்கி லவறனக்கள்
மண்பாவுஞ் சூத்திரர்க்கா மற்றையவை - நண்பால்
அரனரிசேய் மால்கதிர்கூற் றாய்மழைபொன் மெய்க்கும்
பிரமன் படைப்புயிர்க்குப் பேசு.

10. நாட்பொருத்தம்
பேசு முயிரடைவே நான்காரல் பின்னைந்து
மாசிலாப் பூராட மற்றொருமூன் - றாசிலாப்
பேருத்தி ராடமா மென்று பெரிதுணர்ந்தோர்
பாரித்தார் நாளின் பரிசு.

11.
பரிசுடைய கவ்வரியி னான்கிரண்டு மூன்றுந்
தெரிவுடைய மூன்றடைவே செப்பிற் - பிரிவுடைய
ஓணமே யாதிரையே யொண்புநர்பூ சம்பூசம்
பேணி யுரைத்தார் பிரித்து.

12.
பிறிந்த சகரத்து நான்கைந்து பின்மூன்
றறிந்த கலமுதன்மூன் றாகுஞ் - செறிந்த
ஞகரத் தொருமூன்று நன்குணர்ந்தோ ராய்ந்த
புகர்தீ ரவிட்டமாம் போற்று.

13.
போற்றுந் தகரமிரண் டேழ்மூன்றும் பொய்தீர்ந்தோர்
சாற்றுவர் சோதி முறஞ்சதயம் - வேற்றனுடங்
கேட்டைபூ ரட்டாதி கேணகரத் தோராறும்
வாட்டமிலா மும்மூன்றும் வந்து.

14. 
வந்த பகரத்து நான்கிரண்டா றுத்திரந்தொட்
டந்தமிலா மூன்றாகு மவ்வடைவே - வந்ததற்பி
னாறுமக மூன்றுடன்மூன் றாயிலியம் பூரமா
மாறின் மகரத்தின் மாட்டு.

15.
மாட்டும் யகரத்துள் யாவுத் திரட்டாதி
ஈட்டியயூ காரயோ காரங்கள் - காட்டிய 
மூலம் வகரத் தொருநான்கு ரோகணிமான்
தோலாத நான்கெனவே சொல்.

16. 
சொல்லியநாண் மூவொன்ப தாகத் துணிந்தொன்று
புல்லியமூன் றைந்தேழ் பொருந்தாவா - மல்லனவற்
றட்டம ராசி வயினா சியமிவையும்
விட்டொழித்தல் நன்றெனவே வேண்டு.

17.கதிப் பொருத்தம்
வேண்டுங் குறில்வன்மை யீறொழிந்தால் விண்ணோர்க்காம்
ஆண்ட நெடின்முதனான் கந்தமொழித் - தீண்டிய
மென்மையா மக்கட் கிவையிரண்டு மெய்க்கதிக்கு
நன்மையா முன்மொழிக்கு நாட்டு.

18.
நாட்டிய ஒஓ யரலழ நல்வன்மைக்
கீட்டிய வந்த மிவைவிலங்காங் - காட்டா
தொழித்த நரகர்க்கென் றோதினா ரின்ன
வெழுத்தாகா வாதி யிடை.

19. கணப் பொருத்தம்
ஆதி யிடையிறுதி முற்றுநே ராநிரையென் 
றோதுவர்நீர் தீமாக மொண்சுவர்க்கந் - தீதிலோர்
சொற்றார் மதிபரிதி கானிலமா நீர்மதியு
முற்றாகி யாமுன் மொழிக்கு.

20.
முன்மொழி யாகலான் மூவசைச்சீ ரல்லன
நன்மைசால் தெய்வ நவிலாமை - முன்மொழிக்
கீட்டிய தொன்மை யிலக்கணங்க ளிவ்வகையே
காட்டு மகலக் கவிக்கு.

21. வெண்பா
திருமங்கை நின்றகலாள் தெவ்வுநோய் நீங்கும்
தருமங்கள் நீங்கலாச் சார்வார் - இருநிலத்து
மன்னருள்ளார் தாழுந்தாள் வச்சணந்தி மாமுனிவன்
இன்னருளால் நோக்கு மிடம்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard