Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யூதா ததேயு


Guru

Status: Offline
Posts: 7387
Date:
யூதா ததேயு
Permalink  
 


யூதா ததேயு (திருத்தூதர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search
புனித யூதா ததேயு (திருத்தூதர்) 
Saint Jude (Apostle)
புனித யூதா ததேயு
திருத்தூதர், இரத்த சாட்சி
பிறப்புகிபி 1 (முற்பகுதி)
கலிலேயா, பாலஸ்தீனம்
இறப்புகிபி 67
ஈரான், கோடரியால் வெட்டி கொல்லப்பட்டார்
ஏற்கும் சபை/சமயம்எல்லா கிறித்தவப்பிரிவுகளும்
முக்கிய திருத்தலங்கள்புனித பேதுரு பேராலயம்வத்திக்கான் நகர்
திருவிழாஅக்டோபர் 28
சித்தரிக்கப்படும் வகைபடகு, துடுப்பு, கோடரி, தண்டாயுதம், பதக்க உருவப்படம்
பாதுகாவல்ஆர்மீனியா, அவசர தேவை, தொலைந்த பொருட்கள், மருத்துவமனை,


புனித யூதா ததேயு (Saint Jude (Apostle)முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்), இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். கிரேக்க சொல் ஆனா Ιούδας -ஐ யூதா எனவும் அல்லது யுதாசு எனவும் மொழிபெயர்க்கலாம். எனவே இயேசுவை காட்டிக்கொடுத்த யுதாசுவிடமிருந்து வேறுபடுத்த இவரை ததேயு என்றோ லேபெசியுஸ் என்றோ யாக்கோபின் மகன் யூதா[1] என்றோ அழைப்பர். யோவான் நற்செய்தியாளர் இவரை "யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல" என்று குறிப்பிடுகிறார்[2].

இவருக்கு கிரேக்கமும் அரமேயமும் தெரியும். இவர் உழவு தொழில் செய்துவந்தார்.

தூய ஆவியின் வருகைக்குப் பிறகு இவர் யூதேயா, சமாரியா, சிரியா, மெசபடோமியா மற்றும் லிபியாவில் மறைபணி புரிந்தார். இவரும் பர்த்தலமேயுவுமே ஆர்மீனியா நாட்டிற்கு கிறித்தவத்தை கொண்டுவந்தனர் என்பர்.

சுமார் கிபி 67-ஆம் ஆண்டு, லெபனானில் (ஈரான்) இவர் கோடரியால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாய் மரித்தார். இவரது மீபோருட்கள் பின்நாளில் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன.

இவரது விழா நாள் அக்டோபர் 28.

"இவருடைய சகோதரர் யாக்கோபு, யோசேப்பு, சீமோன் யூதா அல்லவா?" [3] என்னும் வாசனத்தின் அடிப்படையில் யூதா திருமுக ஆசிரியர் இவராக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். எனினும் அவ்வாரிருக்க மிகுதியான வாய்ப்பு இல்லை. ஏனெனில் அத்திருமுகத்தில் திருத்தூதர்கள் கடந்த காலத்தவராகக் குறிப்பிடப்படுகின்றனர் [4] மேலும் அத்திருமுகம் நம்பிக்கை (விசுவாசம்) உண்மைகளின் தொகுப்பாகக் காட்டப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டோடு தொடர்புடைய ஞான உணர்வுக் கொள்கைகள் கண்டிக்கப்படுகின்றன; ஆகவே அது முதலாம் நுற்றாண்டில் எழுதப்பட்டதாக ஏற்றுக் கொள்வது கடினம்.

வெளி இணைப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1.  லூக்கா 6:16; பணிகள் 1:13
  2.  யோவான் 14:22
  3.  மத்தேயு 13:15
  4.  யூதா 17-18


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard