Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த ஆஷ் துரையும் பக்கீர் முஹம்மது ராவுத்தரும்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த ஆஷ் துரையும் பக்கீர் முஹம்மது ராவுத்தரும்
Permalink  
 


சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த ஆஷ் துரையும் பக்கீர் முஹம்மது ராவுத்தரும்

 
 
கப்பல் நிறுவனம் சுதேசிய நாவாய் சங்கம்-1906
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.
21272364_344042519387907_407603539238977

வ.உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. ஆசியர்கள் அனைவரும் இதில் பங்குதாரர்கள் ஆகலாம். 4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங்கினார். ஜனாப் ஹாஜி முஹம்மது பக்கீர் சேட் 8000 பங்குகளுக்காக ரூ. 2,00,000 கொடுத்தார். ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை. "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி"யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி" யை அச்சுறுத்தியது. அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.


ashes.jpg
இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர். ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார்.
ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்", என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். "எஸ்.எஸ். காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும். திரு. எஸ் வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ். எஸ். லாவோ" என்ற கப்பலை வாங்கி வந்தார். நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கினர்.
இந்திய செய்தித் தாள்கள் அனைத்தும் இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி. அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால் இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர். உடனே வ.உ.சி.க்கு கையூட்டு கொடுக்க முயற்சி செய்தனர். சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ரூ.1,00,000 கொடுப்பதாகக் கூறினர். வ.உ.சி. மறுத்துவிட்டார்.
ஆங்கில அரசு பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு பலவிதங்களிலும் உதவி செய்தது. அது ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு அதிகாரிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பியது. சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பல விதமான தொல்லைகள் ஏற்படுத்தினர். இந்திய கப்பல் ஆங்கிலேயர்களின் கப்பலுடன் மோத வந்தது என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வ.உ.சி. அது பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபித்து இந்திய கப்பல் செல்ல அனுமதி பெற்றார். ஆனால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயலவில்லை.
 

21369470_344042539387905_807864449403328

21370830_245498755972760_715532892359121

 

5.jpg
வெள்ளைகாரனுக்கு கைகூலியாக இருந்தவனான பக்கிரி முகமது என்ற தேசதுரோகி வ.உ.சி.சிதம்பரம் பிள்ளை ஐயாவிற்க்கு கப்பல் வாங்க பணம் கொடுத்ததாக பொய்யையும், புரட்டையும் அள்ளித்தெளித்து அடுத்தவன் வராற்றை திருடி தம்மை சார்ந்த சமூகத்தை உயர்த்தி காட்டுவதையே வேலையாக கொண்டிருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்து வருகிறது.
வெள்ளைகார கைகூலி பக்கீர் முகமது எவ்வளவு பெரிய திருடன் என்பதை நிருபிக்க பல தகவல்களை திரட்டி உண்மையை வெளிகொண்டு வந்துள்ளார் திரு. கா.குற்றாலநாதன் திருநெல்வேலி என்ற சகோதரர் அவர்கள்.
இதோ அவரது தகவல் இதுதான்...
பார்த்தான் கணக்கை, பயந்தான் பக்கிரி! என்னங்க இது புது பாட்டா இருக்கேன்னு பாக்குறீங்களா ?
வ.உ.சி. கப்பல் விட ஒரு கோடி பணம் கொடுத்தார்னு தவ்ஹித் ஜமாத் பொய்யுரை பரப்பி வருகிறதே!
அதே பக்கிரி ராவுத்தரை பற்றி வ.உ.சிதம்பரனார் தானே எழுதிய தன் " சுயசரிதை " யில் கூறிய வார்த்தை இதோ!
"பார்த்தான் கணக்கை பயந்தான் பக்கிரி,
ஆர்த்தான் இடித்தேன் அழுதான் படுத்தான்"
இந்த பக்கிரி தான் வ.உ.சி க்கு கப்பல் வாங்கி கொடுத்தார்னு கதை விடுறாங்க!
தவ்ஹித் ஐமாத் பொய் பரப்பரைக்கு பதிலடி கொடுக்க நெல்லையில் உள்ள வ.உ.சி மணிமண்டபத்திற்கு சென்று சில தகவல் சேகரித்த போதுதான் உண்மை தெரிந்தது.
உண்மையில்... கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஐயா துவக்கிய சுதேசி கப்பல் கம்பெனி யின் மொத்த முதலீடு பத்து லட்சம்! 16.10.1906 ல் சுதேசி கப்பல் கம்பெனி துவக்கப்பட்டது. பத்து லட்சம் முதலீடு 40,000 பங்குகளாக (Shares) பிரிக்கப்பட்டது! ஒரு பங்கு விலை 25 ரூபாய் என நிர்ணியக்கப்பட்டது. அதிக பங்குகளை விலைக்கு வாங்கியவர் பழவநத்தம் ஜமீன்தாரரும் நான்காம் தமிழ் சங்கம் நிறுவியவருமான வள்ளல் பாண்டித்துரை அவர்கள்! (இப்படிப்பட்ட வள்ளல் பாண்டித்துரை கூட இப்படி ஒரு பிரச்சாரம் செய்ததில்லை.)
அதனால் தான் 15 இயக்குனர்களை கொண்ட சுதேசி கப்பல் கம்பெனி தலைவராக வள்ளல் பாண்டித்துரை இருந்தார்.கப்பல் விடுவதற்காக சொத்தையே விற்று அலைந்து திரிந்து கடுமையாக உழைத்த வ.உ.சிதம்பரனார் துணை செயலாளராக பொறுப்பேற்றது பெருந்தன்மை!
சரி... அப்போது இந்த அயல்நாட்டு கைகூலி பக்கிரி முகமது என்பவன் யார்? இவர் கொழும்புக்கு சரக்குகளை கப்பலில் வணிகம் செய்யும் வியாபாரி!
இவர் வணிக நோக்கில் தனது பொருள்களை வ.உ.சி யின் சுதேசி கப்பலில் அனுப்ப சில ஆயிரம் பணம் கொடுத்து சில பங்குகளை வாங்ங்கியுள்ளார்!
பங்குகளை வாங்கிய சில நாட்களிலேயே ஆங்கிலேயனின் ராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக பங்கு பணத்தை திருப்பி தர கோரி வ.உ.சி க்கு இந்த பக்கிரி முகமது மூலம் கடுமையான நெருக்கடி கொடுத்துள்ளனர்.
மேலும் இந்த பக்கிரி முகமது வெள்ளைக்காரன் தூண்டுதலில் பெயரில் பணத்தை திரும்ப கேட்டு வ.உ.சிதம்பரனாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளான். இதை கண்ட நேர்மைக்கும், தேசபக்திக்கும் பெயர்போன வ.உ.சிதம்பரனார் நெஞ்சில் ஈட்டி போல் குத்தியது போல் இருந்திருக்கிறது.
14021710_933870066741706_699224337267021

இப்படிப்பட்ட இந்த பக்கிரி முகமது என்பவன் சுதந்திர போராட்ட தியாகியாமாம்! என்னடா இது... சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வந்த. சோதனை!
அது சரி... எங்கிருந்தோ வந்து இந்தியாவின் சில பகுதிகளை பிடித்து பல மக்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்றி இந்துகளை கொன்று குவித்த திப்பு சூல்த்தானையே சுதந்திர போராட்ட தியாகின்னு சொன்னவனுங்கதானே இவனுங்க.
பதிவு:
கா.குற்றாலநாதன் MABL
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard