Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவரும், திருச்சபை வள்ளுவரும்!


Guru

Status: Offline
Posts: 7467
Date:
திருவள்ளுவரும், திருச்சபை வள்ளுவரும்!
Permalink  
 


திருவள்ளுவரும், திருச்சபை வள்ளுவரும்!

திருவள்ளுவரும், திருச்சபை வள்ளுவரும்!

 

இக்கட்டுரையின் நோக்கம் யாரையும் சிறுமைப்படுத்துவதோ, யாருடைய மத அல்லது இறை நம்பிக்கைகளைப் புண்படுத்துவதோ அல்ல. இது பலதரப்பட்ட தரவுத் தொகுப்புகளின் அலசலும், அதன் பயனாக சிந்தையிற் தெளிவைக் காணுவதுமே ஆகும்.

கிறிஸ்துவம் எங்கு சென்றாலும் கிறிஸ்துவர்களையும், வாசனைத் திரவியங்களையும் கண்டுபிடிக்கின்றது எனும் சொல் வழக்கிற்கு ஏற்ப, இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவரான புனித தோமாதிருவள்ளுவரைத் தமிழகத்தில் சந்தித்ததாகவும் – திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் முதலான சில சங்க இலக்கிய நூல்கள் புனித தோமாவின் கிறித்துவ சமயப் பரப்புரைகளின் தாக்கத்தினால் உருவானவையே எனுமொரு நல்ல கதை (சுவிசேஷம் or good spell) சில காலங்களாகவே திட்டமிட்டு பரப்பப்பட்டு, திருக்குறள் முதலான சைவ சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் கிருஸ்துவ நூல்களே என நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உண்மையில் இந்த கதை 1970 களிலேயே ஜான் கணேஷ் அல்லது ஜான் தாமஸ் அல்லது ஆச்சார்யா பால் என அறியப்படும் கணேஷ் ஐயர் என்பாரிலிருந்து தொடங்குகிறது [ Source : Article originally published under the title “Hoax!” in The Illustrated Weekly of India, April 26 – May 2, 1987, Bombay ]. இவர், தனது மறுபிரவேச பிரச்சார பயணத்தில், பாதிரியார் மைக்கேல் என்பாரினை பனாரஸ் பல்கலைக்கழகத்தின் தத்துவம் மற்றும் சமயங்களின் ஒப்பீட்டுத் துறைப் பேராசிரியர் எனும் அறிமுகத்தோடு திருச்சியில் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறார். அவரது கிறிஸ்துவ சமய ஆராச்சிகளை மெச்சிய பாதிரியார் மைக்கேல், ஜான் கணேஷிற்கு திருவில்லிபுத்தூர் பாதிரியார் மரியதாஸ் என்பாரினை அறிமுகம் செய்து வைக்கிறார். இவர் ஜான் கணேஷின் ஓலைச் சுவடி மற்றும் செப்பேடு ஆய்வுகளுக்கு ரூபாய் இருபத்தி இரண்டாயிரம் நிதி உதவி அளிக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் அந்த ஆராய்ச்சி நிதி தீர்ந்துவிட, பாதிரியார் மரியதாஸ் ஜான் கணேஷினை அப்போதைய சென்னை கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் பேராயர் ஆர். அருளப்பாஅவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். பேராயர் அருளப்பா தமிழ் மற்றும் சமஸ்கிருதப் புலமை பெற்றவர். திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் தோற்றம் குறித்த ஆராச்சிகளைச் செய்தவராக அறியப்பட்டவர். திருக்குறளினை கிறிஸ்துவ சமய நூலாக நிரூபிக்க முனையும் ஆராய்ச்சிப் புனைவுகளில் ஈடுபட்டிருந்தவர். இவருடனான ஜான் கணேஷின் அறிமுகமே திருவள்ளுவரை கிறிஸ்துவராக நிரூபிக்க முயலும் திட்டமிடப்பட்ட, உள்நோக்கமுடைய ஆராச்சிக்கு பெரிதும் உதவியது.

Thoma_The_language_controversyChristmas services in many Catholic Churches in Karnataka held under police protection.   Source: IndiaToday 

இதனிடையே, திருவள்ளுவரின் காலம் பற்றியத் தெளிவைப் பெறுதல் அவசியமாகிறது. திருவள்ளுவரின் காலம் 03 ஆம் B.C.E க்கும் 08 ஆம் B.C.E க்கும் இடைப்பட்ட காலமாயிருக்கலாம் என்று அவருடைய குறட் பாக்கள் மூலமும், அவரை மேற்கோள்கள் காட்டும் சங்கத்தமிழ்ப் பாடல்கள் மூலமும் கருத்தப்பட்டுவந்த நிலையில், அணுகுமுறை இலகு கருதி, 1921ஆம் ஆண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் கா. நமச்சிவாயர் அவர்கள் தொடங்கிவைக்க, தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையிலும், தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாண சுந்தரனார்தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணிய பிள்ளைசைவப் பெரியவர் சச்சிதானந்தம் பிள்ளைநாவலர் ந. மு. வேங்கடசாமிநாவலர் சோமசுந்தரப் பாரதியார்முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் உள்ளிட்ட தமிழறிஞர்கள் கலந்து கொண்ட தமிழ் மாநாட்டில், கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் பிறந்தார் எனவும், அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும், அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவுகள் எதனடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு, முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் “மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்” என்று விளக்கம் தந்தார்.

1921 ஆம் ஆண்டில் நடந்த இம்மாநாட்டில் எடுத்த முடிவையே, 1935 ஆம் ஆண்டு, சனவரி 18 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய விழாவின் முதல் நாளில் மறைமலை அடிகள் ஆற்றிய “திருவள்ளுவரும் திருக்குறளும்” எனும் உரையின் மூலம் மீண்டும் உறுதி செய்து அறிவித்தார். அவரது உரையின் சுருக்கத்தினை காண திருவள்ளுவர் ஆண்டு குறித்த மறைமலை அடிகளாரின் உரைச் சுருக்கம்.

மேலும், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களின் திருவள்ளுவரின் காலம் பற்றிய கட்டுரை, இதனைப் பற்றி ஆழ்ந்த தெளிவு பெற நமக்குதவும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

பேராயர் அருளப்பாவின் நிதி உதவியில், ஜான் கணேஷின் 1975 – 76 களில் இந்த திட்டமிடப்பட்ட இந்த புனைவு ஆராச்சியானது நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் மூலம் திட்டமிடப்பட்ட சதி என நிரூபிக்கப்பட்டு, ஜான் கணேஷுயே பேராயர் அருளப்பாவின் தூண்டுதலின் பேரிலேயே இத்தகைய ஆய்வில் ஈடுபட்டதை அவரே ஒப்புக்கொண்டதும், பேராயர் அருளப்பா பின்னர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டதும் வரலாறு.

Thoma_Arulappa_HighCourtCaseMythical Thomas, devious Deivanayagam, and conniving Church – B.R. Haran Source: https://apostlethomasindia.wordpress.com

இந்த முதல் முயற்சி தோல்வியில் முடிந்த பிறகு, முனைவர் தெய்வநாயகம், “விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் (ஒப்பாய்வு )” எனும் ஆராச்சிக்கட்டுரை மூலம் திருவள்ளுவரை கிறிஸ்துவராகவும் திருக்குறளை கிறிஸ்துவ நூலாகவும் நிறுவ முயலும் உள்நோக்கம் கொண்ட, பேராயர் ஆர். அருளப்பாவின் விடயத்தில் கல்லறையில் அடைக்கப்பட்டுவிட்ட, அந்த ஆராய்ச்சிக்கு புத்துயிர் கொடுத்து, மீண்டும் உயிர்த்தெழுப்பும் முயற்சியை ஆரம்பிக்கிறார். அந்த நூலில் தான் திருக்குறள் கிறிஸ்துவ நூல் என நிறுவும் ஆதாரங்களைக் கூறியிருக்கிறார்.

அவரின் இந்த ஆராய்ச்சி நூலினை, “இது ஒரு ஆராய்ச்சி நூலே இல்லை” எனும் ஒரு சுற்றறிக்கை மூலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுப்புத் தெரிவித்ததும், சென்னை கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறையிலிருந்து முனைவர் தெய்வநாயகம் வெளியேற்றப்பட்டதும் வரலாறு. இந்நிலையில் தருமபுரம் “International Shaiva Siddhanta Research Centre” சார்பில் வித்துவான் அருணை வடிவேல் முதலியாரும் இவரது ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்து, 1991 இல் மறுப்பாய்வு நூலும்வெளியிடப்பட்டது.

Thoma_RefutationThis book by Tamil and Shaiva scholar Vidwan Arunai Vadivel Mudaliar is the refutation of Deivanayakam’s spurious doctoral thesis Viviliyam, Tirukkural, Shaiva Siddhantam Oppu Ayvu.

இந்த நூலின் வெளியீட்டு விழாவில், மதிப்பிற்குரிய நீதிபதி  



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

உயர்திரு. கிருஷ்ணசாமி அவர்களின் கருத்து பின்வருமாறு:

Justice Krishnaswami Reddiar strongly criticised the modern tendency of publishing trash in the name of research. He said research must have an aim, a purpose, to get at the truth. Research was not meant to find evidence to denigrate an ancient faith. Research should not start with preconclusions or prejudices. Here the author’s motive was to show the superiority of Christianity. Religion was based not only on facts but also on faith and beliefs. The book had hurt Hindu beliefs.

Justice Krishnaswami Reddiar quoted from the works of Sita Ram Goel and Ishwar Sharan and asserted that the visit of St. Thomas to India was a myth. He wondered how could such a book be published by [the International Institute of Tamil Studies, Adyar, Madras,] set up by the Government. It was a crime that such a book had been written and published and awarded a doctorate degree [by the University of Madras,] he said.

இதனைப் பற்றிய மேலதிக விடயங்களுக்கு, Tamil scholars condemn Christian author for misrepresenting Tiruvalluvar as St. Thomas’s disciple – R.S. Narayanaswami

மேலும், “திருக்குறளில் கிறித்தவம்” எனும் ஆராச்சி நூலின் நூலாசிரியரும் (Presented at Venkateshwara University – Thirupathi), S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவரும், இயேசு சபையாளருமான மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம் அவர்கள்,

நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார்.

மேலும்,

1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா?
2. ஐந்தவித்தான் யார்?
3. வான்
4. நீத்தார் யார்?
5. சான்றோர் யார்?
6. எழு பிறப்பு
7. மூவர் யார்?
8. அருட்செல்வம் யாது?

என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar” என்று குறிப்பிடுகிறார்.

மேலும், முன்னாள் திருச்சி பிஷப். ஹீபர் கல்லூரி துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவருமான பேராசிரியர் ப.ச.ஏசுதாசன் அவர்கள் அவரின் “திருக்குறளும் திரு விவிலியமும்” பக்கம் – 5, 6 இல்,

திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.” என்று குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் குரல் பீடத்தின் இணைந்து பணியாற்றிய விரிவுரையாளர் செல்வி. காமாட்சி சீனிவாசன்அவர்களின் மறைவுக்கு பிந்தைய தொகுக்கப்பட்டு வந்த நூலான “குறளும் சமூகமும்” நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார் “மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போது அவர் திருக்குறளைச் சரியாக புரிந்து கொண்டாரா என்பதனுடன் கிறிஸ்தவ சமய வரலாற்றையும் எவ்வளவு கற்றறிந்தார் என்ற ஐயமே ஏற்படுகிறது

இது, முழுக்க முழுக்க, நூறு விழுக்காடு சாந்தோம் சர்ச்சின் நிதி உதவியுடன், சென்னைப் பல்கலைக்கழத்தின் கிறித்துவத் தமிழ்த் துறையின் “ARCHDIOCESAN CHRISTIAN STUDIES” இருக்கையின் ஆராய்ச்சிக் கட்டுரை என்பதனையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2008 இல் “தமிழர் சமயம் : முதல் உலக மாநாடு” எனும் பெயரில் சென்னையில் நடந்த மாநாடு, இந்த ஆராய்ச்சிகளின் உள்நோக்கத்தினை தெள்ளத் தெளிவாக்கிவிட்டிருக்கிறது. இதனைப் பற்றிய மேலதிக விடயங்களுக்கு, தமிழ் ஹிந்து தினசரி நாழேட்டில் வந்த சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும் எனும் கட்டுரை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

திருவள்ளுவரையும், புனித தோமாவையும் இணைக்க இயேசு கிறிஸ்துவின் இறந்த வருடத்தினையும் (29 ஆம் C.E எனவும்), திருவள்ளுவரின் பிறந்த வருடத்தினையுமே (2 ஆம் B.C.E க்கும் 6 ஆம் B.C.E க்கும் இடைப்பட்ட காலம் எனவும்) மாற்றும் வேலையினைச் செவ்வனே செய்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பிற்கே வரலாற்று ரீதியான உறுதியான சான்றுகள் இல்லாத நிலையில் (பண்டைய ரோமானியப் பேரரசில், மரண தண்டனைக்கு உள்ளானவர்களை முறையாகக் கல்லறையில் அடைக்கும் வழக்கம் இல்லை. ஆனால், இயேசு கிறிஸ்து கல்லறைக்குள் அடைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது), புனித தோமாவின் இந்தியப் பயணமும் புதிரானதாகவே உள்ளது. இதனையே போப் பெனடிக்ட் XVI யும் வழிமொழிகிறார்.

Thoma_PopePope denies St. Thomas evangelised South India – Ishwar Sharan                 Source: https://apostlethomasindia.wordpress.com/

மேலும், Kerela United Theological Seminary at Trivandumபிரின்சிபலாக இருந்தவரும், உகாண்டாவின் பிஷப்பாகஇருந்தவரும் ஆகிய L. W. Brown அவர்களும், இதற்கு வலு சேர்க்கும் விதமாக “புனித தோமாவின் வட இந்திய வருகையை, தவறுதலாக தென் இந்திய வருகை எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும் எனவும், 200 ஆம் C.E யின் பிற்பகுதி வரை வரலாற்றாசிரியர்கள் அரேபியா மற்றும் எதியோபியாவின் பகுதிகளையெல்லாம் இந்தியா என்றே குறிப்பிட்டுவந்தனர் என்றும் குறிப்பிடுகிறார். மேலும், ஐரோப்பியர்களைப் பொறுத்தவரையில், ஐரோப்பாவினைத் தாண்டிய எந்தப் பகுதியினையும் இந்தியா என்றே கருதிவந்தனர் எனவும் தெரிவிக்கிறார். பண்டைய இந்தியா என்பது இன்றைய இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் மற்றும் இலங்கை என்பதனை நாமே அறிந்திருப்போம்.

Thoma_BrownSource: The Origins of Christian Society in Ancient India by Crista Nalani Anderson from University of Connecticut for a honors scholar theses

பொதுவாக கிறிஸ்துவக் குழுக்களை / பிரிவுகளை கீழ்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்:

1. செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள் (The Christians of St. Thomas),
2. நெஸ்தோரிய கிருத்துவர்கள் (Nestoria Christians),
3. சிரியன் கிருத்துவர்கள் (Syrian Christians),
4. ஜெகோபைட்டுகள் (Jacobites),
5. நஸாரின் கிருத்துவர்கள் (Nazarene Christians),
6. கத்தோலிக்கக் கிருத்துவர்கள்

அவர்களின் வாதப்படி, சிரியன் கிருஸ்தவர்கள் 345 C.E க்கும் 825 C.E க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாரசீகப் பகுதியிலிருந்து தங்களின் இரண்டாம் கோவில் இடிப்பிற்குப் பிறகு, புலம் பெயர்ந்தவர்கள். இவர்களின் இருப்பினை, 1259 C.E வாக்கில் இந்தியா வந்த தேசாந்திரி மார்க்கோ போலோவின் குறிப்புகளும் உறுதிப்படுத்துகிறது. இவர்கள் ரோமன் சர்ச்சுக்கு கட்டுப்பட்டவர்கள் கிடையாது. இவர்கள் ஜுடேய்ஸ்ம் (Judaism) த்தினைப் பின்பற்றியவர்களேயன்றி, கிறிஸ்துவத்தினை அல்ல.

அதே வேளையில், கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்டதற்கு எந்தவித ஆதாரங்களும் வரலாற்றுக் குறிப்புகளில் காணக் கிடைக்கவில்லை. இவர்கள் அனைவரும் அன்றைய அரசியல் காரணங்களால் (பாரசீகப் படையெடுப்பு ) அகதிகளாக வந்தவர்களே. மதத்தினைப் பரப்பும் நோக்கத்துடன் வந்தவர்களாக இருக்கவே முடியாது.

இதனையே Stephen Andrew Missick உம் தனது “Socotra: The Mysterious Island of the Assyrian Church of the East” கட்டுரையில் கீழ்கண்டவாறு உறுதிப்படுத்துகிறார்:

Source: “Socotra: The Mysterious Island of the Assyrian Church of the East” by Stephen Andrew Missick

இந்தியாவில் கிருஸ்தவர்களின் வருகை ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இருந்தாலும், கிருஸ்தவ மிஷனரிகளின் இருப்பும், அதன் மூலம் கிருஸ்தவ மதம் பரப்பும் மதப் பிரச்சாரங்களும் வாஸ்கொ-ட-காமா வின் வருகைக்குப் பின்னரே நடந்தேறியிருக்கிறது. அதற்க்கு முன்னர் நடந்ததற்கான எந்தவொரு குறிப்புகளும் அல்லது தரவுகளும் காணக்கிடைக்கவில்லை. வாஸ்கொ-ட-காமா வின் வருகைக்குப் பின்னர் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் கீழ்கண்டவாறு பிரிந்தனர்:

Source: Saint Thomas Christians

52 C.E இல், தோமாவின் தென் இந்திய வருகை என்பது ஒரு புதிர் தான் என ஒரு சிலர் ஒப்புக்கொண்டாலும், அவர்கள் வைக்கும் மற்றொரு வாதம், வராத தோமா வந்ததாகக் கருதப்படும் காலத்திற்கு முன்னரே, சிரியக் கிருஸ்துவர்கள் வந்ததாகவும் அவர்கள் கிறிஸ்துவக் கருத்துக்களைப் பரப்பினர் என்பதுதான்.

சிரியக் கிறிஸ்தவர்கள் ஜுடேய்ஸ்ம் (Judaism) த்தினைப் பின்பற்றியவர்களேயன்றி, கிறிஸ்துவத்தினை அல்ல என்பதும், கிறிஸ்தவக் கொள்கைகளே கிறிஸ்துவின் சிலுவை அறைதலுக்குப் பிறகே பரப்பப்பட்டன என்பதனையும் அவர்கள் வசதியாக மறந்துவிடுகின்றனரோ என்றே தோன்றுகிறது. இவர்கள், சிரியாக் (Syriac) மொழி பேசுபவர்கள். இயேசுவும், அவருடைய சீடர்களும் பேசிய அராமைக் (Aramaic) மொழி அறியாதவர்கள்.

கிறிஸ்தவர்கள் எனும் வார்த்தைப் பிரயோகமே 46 – 48 C.E யில் பாலின் (Paul) ஆன்டியோச் (Antioch) வருகைக்குப் பிறகே உபயோகிக்கப்படுகிறது. மேலும், உலகின் பழமையான Church, Joardan இல் 33 – 70 C.E இல் கண்டுபிடிக்கப்பட்டதாக சில அகழ்வாராச்சி முடிவுகள் கூட தெரிவிக்கின்றன. இந்நிலையில், தோமாவுக்கு முந்தைய சிரியக் கிறிஸ்தவர்களோ அல்லது 52 C.Eஇல் தோமாவோ கிறிஸ்தவ Church கட்டியதாகவோ அல்லது கிறிஸ்தவ வழிபாடு நடத்தியதாகவோ நாம் நம்ப இயலாது.

இந்தியாவில் கிருஸ்தவம் என்பது, 1500 C.E களுக்குப் பிறகே, குறிப்பாக போர்ச்சுகீசியர்கள் வருகைக்குப் பிறகே. அதற்கு முன் இந்தியாவில் கிறிஸ்தவம் என்பது அவர்களின் திட்டமிட்ட கட்டுக் கதையே. போர்ச்சுகீசியர்கள் சென்ற இடங்களில் எல்லாம், கிறிஸ்தவர்கள் இவ்வாறு ஏன் பிரியவில்லை ? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஒரு வேளை, புனித தோமாவின் தென் இந்திய வருகை St. Thomas Syro-Malabar Church, Palayoor குறிப்பிடும்படி, தோமா 62 C.E இல் மயிலாப்பூருக்கு வந்திருக்கவேண்டும். எனில், அப்பொழுது திருவள்ளுவரின் வயது, திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கின் படியே, 93 ஆக இருந்திருக்கும். மேலும், 01 C.E மற்றும் அதற்குப் பிந்தைய கால கட்டங்களில் கிறிஸ்தவம் பரவியிருப்பின், பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் தனது “Discovery of India” (பக். 118) வில் குறிப்பிடுவது போல், புனித தோமா சென்ற இடங்களின் பெண்களின் வாழ்க்கைத் தரம் பண்டைய இந்தியாவிலுள்ளதை (இன்றைய இந்தியாவை விட கீழாக இருந்தாலும்) விடக் கீழாக இருந்ததேன்? என்பதும் மில்லியன் டாலர் கேள்வியே!

மேலும், புனித தோமா இந்தியாவிற்கு வந்ததாகக் கருதப்படுவதற்கு முன்னர், அவர் சென்ற இடங்களான சிரியா, ஈரான் (Parthians, Medes, Persians & Hyrcanians) மற்றும் ஆப்கானிஸ்தான் (Bactrians) நாடுகளில் இருந்து தமிழ்ச் சங்க இலக்கியங்கள் போன்றதொரு படைப்புகள் ஏன் வரவில்லை?என்பதும் மில்லியன் டாலர் கேள்வியே!

மேலும் முத்தாய்ப்பாக, 02 ஆம் C.E யின் பின்பகுதியில், மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்ட, ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான “மணிமேகலை“யில், காப்பிய நாயகி மணிமேகலை பத்து விதமான சமய வாதங்களை (அளவை வாதம், சைவ வாதம், பிரம வாதம், வைணவ வாதம், வேத வாதம், ஆசீவக வாதம், நிகண்ட வாதம், சாங்கிய வாதம், வைசேடிக வாதம் மற்றும் பூத வாதம்) உள்ளடக்கிய ஆறு வகை சமயக் கணக்கர்களுடன் (பௌத்தம், ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம், வேத மதம், பூத வாதம்) வாதம் செய்கிறாள். இவைகளுள் எவற்றிலும் கிறிஸ்தவ மதம் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கவில்லை.

இவைகளுள் சிறப்பு என்னவெனில், மணிமேகலை செய்யும் வாதமும், சமயக் கணக்கர்களிடம் திறம் கேட்டறிதலும், புகார் மற்றும் வஞ்சி மாநகர்களில் நடைபெறுகிறது. இதில் வஞ்சி மாநகரம் சிரியக் கிறிஸ்தவர்களும், தோமாவும் வந்திறங்கிய பகுதியாகக் கருதப்படும், அன்றைய சேர நாட்டின் தலைநகரம் ஆகும்.

இன்னும் சிலர், மணிமேகலையின் காலத்தினை சற்றே பின்தள்ளி 7 C.E என்றும் குறிப்பிடுவர். அப்படியே கொண்டாலும், 7 C.Eகாலகட்டங்களில் கூட கிறிஸ்தவம் பரவவில்லை என்பது தெளிவாகிறது.

மற்றொரு ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான, 10 C.Eகாலகட்டத்திய பௌத்த நூலான “குண்டலகேசி“யில் காப்பியத் தலைவி நடத்தும் சமய வாதங்களிலும், கிறிஸ்துவம் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. ஏறக்குறைய இதே காலகட்டத்தில் இதனை மறுத்து இயற்றப்பட்ட சமண நூலும், ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றுமான “நீலகேசி“யிலும் கிறிஸ்தவம் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கவில்லை.

மேற்கண்ட குறிப்புகள், திருவள்ளுவர் காலத்திலோயோ, திருக்குறள் இயற்றப்பட்ட காலத்திலோயோ கிறிஸ்தவம் என்கிற மதமே அல்லது தத்துவமோ பண்டைய தமிழகத்தில் பரவியதற்கான எந்தவொரு சான்றும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

இத்தகைய ஆய்வுகளையும், ஆராய்ச்சிக்கட்டுரைகளையும், நூல்களையும் எதிர்த்து எதிர்வாதம் செய்த தமிழறிஞர்களும், சான்றோர்களும் கூட தமிழ் சார்ந்தல்லாமல், சைவத்திற்கும் கிறிஸ்தவத்திற்குமான இடையேயான போட்டியாகவே பாவித்து வாதிட்டதாகவே தோன்றுகிறது. தமிழினையும், தமிழரின் அறம், நீதி, அகம், புறம், உயிர் கொல்லாமை, தத்துவம் சார்ந்த பொருள் பொதிந்த வாழ்வியல் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் தத்தம் மதத்திற்கே உரியது என்று நிறுவும் முனைப்புமே அதில் ஓங்கி நின்றது சற்று ஏமாற்றம் தான்.

இறுதியாக, இக்கட்டுரையினை ஆசான் ஜெயமோகன் அவர்களின் தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்கட்டுரையின் முடிவுரையை மேற்கோள் காட்டி முடிப்பது சாலப் பொருந்தும் என்பது என் எண்ணம்…

கிறித்தவ மரபில் தாமஸ் முக்கியமானவர் அல்ல. ஏனென்றால் அவர் கிறிஸ்துவை ஐயப்பட்டவர். இருந்தும் ஏன் அவரை திடீரென மீட்டெடுக்கிறார்கள்?

இந்திய பாரம்பரியம் கிறித்தவம் வருவதற்கு முன்பு சிந்தனையற்ற இருண்டகாலம் கொண்டிருந்தது என்று சொல்வதற்கு தடையாக உள்ளவை இங்குள்ள பேரிலக்கியங்கள். அவற்ரை மறைப்பது கடினம்.ஆகவே அவற்றின் காலத்தை பின்னுக்குத்தள்ளி கிறித்தவத்தின் வருகையை முன்னுக்குக் கொண்டுசெல்கிறார்கள். அதற்கு தாமஸ் தேவையாகிறார்.

தாமஸின் சுவிசேஷம் என்று ஒன்று எகிப்தில் நாக் ஹமாதியில் கிடைத்துள்ளது. [விவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம் ]பாப்பிரஸ் சுவடிகளில் எழுதப்பட்ட அந்தச்சுவடி கார்பன் டேட்டிங் முறைப்படி கிபி இரண்டாம்நூற்றாண்டுக்கு முந்தியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தாமஸ் எகிப்தில் வாழ்ந்தார் என்ற வரலாற்றுடனும் காப்டிக் சர்ச்சை நிறுவினார் என்ற வரலாற்றுடனும் அந்த விஷயம் பெருமளவு ஒத்துப்போகிறது. ஆய்வாளர் நடுவே அச்சுவடி ஒரு வரலாற்று ஆவணமாகவே கருதப்படுகிறது

அந்த சுவிசேஷத்தில் [மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம் ] தாமஸ் ஏசுவை ஒரு தேவனாக, கடவுளின் மகனாக முன்வைக்கவில்லை. மாறாக ஒரு ஞானகுருவாக முன்வைக்கிறார். கிறிஸ்து வானத்தில் உள்ள சொற்கத்தைப்பற்றி பேசுபவராக வரவில்லை, மண்ணில் உள்ள சொற்கத்தைப்பற்றி பேசுபவராக வருகிறார். பைபிளின் அதிகாரபூர்வ வரிகளில் இருப்பதைவிட ஆழமும் கவித்துவமும் கொண்டவையாக அவ்வரிகள் உள்ளன. நாக் ஹமாதியிலும் செங்கடல் பகுதிகளிலும் கிடைத்த பல பைபிள் வடிவங்களை வலுவான தொல்பொருள் சான்று இருந்த போதிலும்கூட கத்தோலிக்கத் திருச்சபை நிராகரித்துவிட்டது. ஆனால் எந்த உறுதியான ஆதாரமும் இல்லாமல் இந்தியப் பண்பாடே தாமஸ் என்ற தனிநபரால் உருவாக்கப்பட்டது என்று நிறுவ முயல்கிறது.

மதநம்பிக்கையை பேண எவருக்கும் உரிமை உள்ளது. தன் மதநம்பிக்கையை பரப்புவது ஒருவரது பிறப்புரிமை.. அதிலும் இஸ்லாமிய கிறித்தவ மதங்களில் அது புனித கடமையும்கூட. மதச்சார்பின்மை இந்தியமண்ணில் அதன் வீச்சை ஒருபோதும் இழக்கலாகாது என்று விரும்புகிறேன்..ஆகவே மதமாற்றமும் ஒரு இந்தியனின் பிறப்புரிமையே. முன்பு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மதமாற்றத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்து நடந்த கூட்டத்தில் நான் விரிவாகவே இதைப்பேசியிருக்கிறேன். மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்

ஆனால் வரலாற்றுத்திரிபுகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் மூலம் அதைச்செய்ய நினைப்பது மிக ஆபத்தான போக்கு. கிறிஸ்து மனிதனாக வந்த இறைகுமாரன் என்ற உறுதியான நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அந்த ஒரேவரியை சொல்லியே இவர்கள் தங்கள் மதத்தை பரப்பலாமே?

அதற்கும் அப்பால்சென்று கிறிஸ்துவின் சொற்களில் வெளிப்படும் மானுடநீதிக்கும் எளியவர்மீதான கருணைக்குமான குரலை இவர்கள் கேட்டிருந்தார்கள் என்றால் கிறிஸ்துவை முன்வைப்பதற்கு இத்தனை பொய்களைச் சொல்ல கூச மாட்டார்களா? தியாகத்தின் சிலுவையுடன் கிறிஸ்து வரட்டும், கள்ளநோட்டு எந்திரத்துடன் வரவேண்டாம்.

வழி தவறிய ஆடுகள் நல்ல மேய்ப்பரைச் சென்றடையட்டும்!

 

Bibliography :

  1. India Has a Long History of Native Christianity – https://www.nytimes.com/1986/02/22/opinion/l-india-has-a-long-history-of-native-christianity-736486.html
  2. ஏற்றுமதி/இறக்குமதி அல்லது அடிமைக்கிறிஸ்தவம் – http://www.tamilhindu.com/2008/10/slavish-tamil-christianit/
  3. திருக்குறள் கடவுள் வாழ்த்து – இயேசு கிறிஸ்து – https://tamilsamayam.wordpress.com/2014/02/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4/
  4. இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும் – http://www.tamilhindu.com/2009/08/christianity-in-india-book-intro/
  5. கேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை – http://newindian.activeboard.com/t63739503/topic-63739503/
  6. தாமஸ் கட்டுக்கதை – https://thomasmyth.wordpress.com/
  7. Women held for bank fraud – http://www.thehindu.com/news/cities/chennai/Woman-held-for-bank-fraud/article14995672.ece
  8. The silk road – https://festival.si.edu/2002/the-silk-road/the-silk-road-crossroads-and-encounters-of-faith/smithsonian
  9. Christianity and mongols – http://factsanddetails.com/asian/cat65/sub423/entry-5241.html
  10. Christianity’s lost history – http://www.pbs.org/wnet/religionandethics/2009/05/01/april-29-2009-christianitys-lost-history/2834/
  11. Syncretism – https://www.khanacademy.org/humanities/world-history/ancient-medieval/syncretism/a/syncretism-article
  12. 2 – Mythical Thomas, devious Deivanayagam, and conniving Church – B.R. Haran – https://bharatabharati.wordpress.com/2010/05/14/2-mythical-thomas-devious-deivanayagam-and-conniving-church-b-r-haran/
  13. திருக்குறளும் இயேசு கிறிஸ்து சர்ச்சும் – https://saintthomasfables.wordpress.com/2010/05/24/church-and-thirukural/
  14. Background of the christian thirukural theory – http://ponniyinselvan.in/forum/discussion/5651/background-of-the-christian-thirukural-theory/p1
  15. Viviliyum, thirukkural, saivasithantham – http://www.tamilbiblestudy.com/thewayofsalvation/thewayofsalvation/Christian%20Tamil%20Ebooks/Viviliam%2C%20Thirukkural%20Saiva%20Siddhantam%20Oppaivu-Dr.M.Deivanayagam.pdf
  16. The Debate In Dharumai Adheenam Mutt and Our Victory Part -1 (Tamil) – https://www.youtube.com/watch?v=LIYEtLadt40
  17. The Difference Between Syriac and Aramaic – https://nazarani.org/wk/index.php/The_Difference_Between_Syriac_and_Aramaic
  18. World’s ‘oldest Christian church’ discovered in Jordan – https://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/jordan/2106752/Worlds-oldest-Christian-church-discovered-in-Jordan.html
  19. How did followers of Jesus come to be called Christians? – http://www.victorious.org/cbook/chur60-called-christians
  20. OVERVIEW OF RELIGIOUS HISTORY OF SYRIA – https://www.ewtn.com/library/chistory/syriahis.htm
  21. மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும் – http://www.muthukamalam.com/essay/seminar/s1/p8.html
  22. மணிமேகலை நூலின் காலம் – https://sites.google.com/site/budhhasangham/Home/mylaiseeni/mylaiap5
  23. மணிமேகலை நூலின் காலம் – http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=16
  24. WHAT WERE THEY BEFORE THEY WERE “CHRISTIANS”? – http://www.brentcunningham.org/?p=842
  25. The Mar Thoma Syrian Church of Malabar – http://www.mtcfb.org/marthoma-church-history


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard