Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களின் பாலியல் தொல்லை - பலான பாதிரியார்


Guru

Status: Offline
Posts: 7478
Date:
கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களின் பாலியல் தொல்லை - பலான பாதிரியார்
Permalink  
 


நெல்லை வண்ணார்பேட்டை புனித சேவியர் பள்ளி முதல்வர் மாணவன் அஜய் கிரேட்டஸ் வீட்டின் மாடியில் தற்கொலை

 
 
 
 
 
 
 
 
Rate This

 


Nellai.jpg

பள்ளிக்கூடங்களா, பலி பீடங்களா? இந்தக் கேள்வியை மீண்டும் கேட்க வைத்திருக்கிறது நெல்லையில் நடந்த வேதனைச் சம்பம். நெல்லையின் புகழ்பெற்ற ஸ்காட் குழுமத்தினரால் வண்ணார்பேட்டை பகுதியில் புனித சேவியர் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளி நடத்தப்படுகிறது. 10-வது வகுப்பிற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லாததால் பள்ளியின் முதல்வர் மெனன்டஸின் வீட்டின் மாடியில் மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அப்படிப் படித்துவந்த ப்ளஸ் ஒன் மாணவன் அஜய் கிரேட்டஸ், கடந்த ஜனவரி 22ம் தேதி தனது அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

சக மாணவர்கள் மூலம் பள்ளிக்கு விடுப்பு சொல்லிவிட்ட அஜய்… தூக்கில் தொங்கியதை அன்று மதியம் அந்த அறையைச் சுத்தப்படுத்திய வேலைக்காரப் பெண்தான் பார்த்துப் பதறி பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.

புத்திர சோகத்தில் இருந்த அஜய் கிரேட்டஸின் தந்தை அருள் ஜோசப்ராஜிடம் பேசினோம்.

‘‘கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி இரவுகூட அவனிடம் பேசினோம். அவன் வளர்க்கும், ‘லவ் பேர்ட்ஸ்’ பற்றியெல்லாம் விசாரித்தான். சம்பவம் நடந்த அன்று நான் நெல்லையில்தான் இருந்தேன். மதியம் 2.20 மணிக்கு பையனை அந்தப் பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்த பங்குத் தந்தை ஜெர்ரி என்னிடம் பேசினார். ‘பையனுக்கு உடம்பு சரியில்லை. பள்ளிக்குச் சென்று பாருங்கள்’ என்று கூறினார். மாலையில்தான் போகப் போகிறோமே என்று இருந்தேன். மறுபடி மாலை 4 மணிக்குப் பள்ளியிலிருந்து போன் வந்தது. பதறியடித்துக்கொண்டு சென்றபோது எங்கள் பையன் தங்கியிருந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் பள்ளி முதல்வர், தாளாளர் அவரது மனைவி ஆகியோர் நின்றுகொண்டிருந்தனர். அஜயைப் பார்த்து நான் அழுது துடித்தபோது அங்கிருந்த ஒருவர், ‘சத்தமாக அழாதீர்கள். எல்லோரும் கூடிவிடுவார்கள்’ என்றார். அந்த அறை கழுவி விடப்பட்டிருந்தது. என்னோட அஜய் திடீரென்று தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவன் மரணத்தில் மர்மம் உள்ளது’’ என தழுதழுத்தார் ஜோசப்ராஜ்.
Nellai%202.jpg
அஜய்யின் நெருங்கிய உறவினர்களோ, ‘‘பையன் மதியமே இறந்தபோதும், பெற்றோருக்கு நான்கு மணிக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஹாஸ்டல் ஃபீஸ், மெஸ் ஃபீஸ் என்று மாதம் 2 ஆயிரத்து 150 ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால், ஹாஸ்டலே கிடையாது. இதனால் மாணவர்களும் பெற்றோரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர், ‘சேலத்தில் இருந்து சார் பேசினார். பார்த்து முடிக்கச் சொன்னார்’ என்று பக்கத்தில் சொல்லிக்கொண்டிருந்தார். அப்படியானால் பள்ளி நிர்வாகம் காவல்துறை அதிகாரிகள் மூலம் பிரச்னையை முடிக்க முயற்சிக்கிறதா?’’ என்று கேட்கிறார்கள்.

பள்ளியின் இயக்குனர் பார்த்திபனிடம் இதுபற்றிப் பேசினோம். ‘‘மாணவர் அஜய் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தற்கொலைக்கு முயற்சித்தபோது, அங்கிருந்த வாளியில் உள்ள தண்ணீர் கொட்டிவிட்டது. அதனால்தான் அறை, ஈரமாக இருந்தது. காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நன்கு படிக்கிற மாணவனின் இழப்பு பள்ளிக்கும் பெரிய இழப்புதான்’’ என்றார். மாநகர போலீஸ் கமிஷனர் குணசீலன் நம்மிடம், ‘‘முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

எப்படியோ ஓர் இளம் உயிர் போய்விட்டது. பள்ளி மாணவர்களுக்கான மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எப்போது அமல்படுத்தப் போகிறார்களோ?

படங்கள்: ஏ.எஸ்.அருண்



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
RE: கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களின் பாலியல் தொல்லை - பலான பாதிரியார்
Permalink  
 


பாதிரகுடி ஆர்.சி பாதிரியார்-ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில்20 மாணவர்களை ஹோமோ செக்ஸ் ஓரினச் சேர்கை கொடுமை

ஜூ வி கட்டுரை

டிரஸ்ஸைக் கழட்டு… மயக்கம் வந்தா ஒரு க்ளாஸ் குடி…”
—————————-
 கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டிய, தூய வெள்ளையுடை அணிந்த ஒருபாதிரியார், தன்னிடம் படிக்கும் மாணவர்களை ஹோமோ செக்ஸுக்கு கொடூரமாகத் துன்புறுத்தியதாக… அவரை தேடிக் கொண்டிருக் கிறது போலீஸ்!

  தஞ்சை மாவட்டம் மீமிசல் அருகே பாதிரகுடி கிராமத்தில், புனித சந்தியாகப்பர் தேவாலயம், ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி, ஆர்.சி. தொடக்கப்பள்ளி, புனித மரியன்னை மருத்துவமனை மற்றும் புனித அடைக்கல அன்னை கன்னியர் இல்லம் ஆகியவை உள்ளன. பேருந்து வசதியே இல்லாத இந்த கிராமத்திலிருக்கும் ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில், புதுக்கோட்டை மாவட்ட சுற்று வட்டார கிராம மாணவர்கள் 600 பேர் படிக்கின்றனர். சில வருடங்களாக 100 சதவிகிதத் தேர்ச்சியைக் கொடுத்து வரும் இந்தப் பள்ளியில், இரவிலும்கூட தங்கிப் படிப்பார்களாம் மாணவர்கள். அவர்களிடம்தான் தலைமையாசிரியரான பாதிரியார்

Pc0071300.jpg 

ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா வற்புறுத்தி ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார் என்று கொதிப்பு கிளம்பி, சுற்றுவட்டார கிராமத்தினர் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டனர்.

பாதிரியார்மீது ‘செக்ஸ் டார்ச்சர்’ புகார் தந்திருக்கும் 10-ம் வகுப்பு மாணவன் மைதீனை சந்தித்தோம். ஒருவிதப்பதற்றத்துடன் பேச ஆரம்பித்தான். ‘பத்தாவது படிக்கறவங்க இரவுப் பள்ளிக் கூடத்திலேயே தங்கிப் படிக்கணும். ஒருநாள் நைட்டு தூங்கிக்கிட்டு இருந்த என்னை எழுப்பி, ‘நீ ஒழுங்கா பரீட்சை எழுதி பாஸ் பண்ணணும்னா என் ரூமுக்கு வாடா’ன்னு அழைத்துச் சென்றார். உள்ளே போனதும் கதவை சாத்திக்கிட்டு, டி.வி-யில செக்ஸ் படம் போட்டார். அப்புறம் அவர் உடம்புல சென்ட் அடிச்சுகிட்டு, என்னை மோந்து பார்க்கச் சொன்னார். எனக்கு தலைசுத்துச்சு. உடனே ‘இதை குடி சரியாயிடும்’னு ஒரு கிளாஸ்ல ஏதோ ஊத்தி, வற்புறுத்திக் குடிக்க வெச்சார். நான் அரை மயக்க மானதும், என் உடம்புல இருந்த டிரஸ்ஸையெல்லாம் உருவி… (தயக்கமும் அருவருப்புமாக சொல்லி முடித்து…) மயக்கம் தெளிஞ்சு பார்த்தப்ப, என் உடம்புல அங்கங்கே பயங்கரமா வலிச்சுது. ‘யார்கிட்டயாவது சொன்னா ஃபெயிலாக்கிடுவேன்!’னு மிரட்டியே, அப்புறம் வேறு சில நாட்களிலும் ஐந்து முறை இப்படி பண்ணினார். கடைசி முறை பண்ணினப்ப என்னால வலி தாங்க முடியல. ‘இனி பள்ளிக்கூடத்துக்குப் போக மாட்டேன்’னு வீட்ல அழுது, விஷயத்தைச் சொன்னேன்!’ என்றான்.

மைதீனின் உறவுக்காரர் சாதிக் பாட்ஷா, ‘பாதிரியாருக்கு சொந்த ஊர், தஞ்சாவூர் பக்கத்துல புனல்வாசல் கிராமம். இவனெல்லாம் எப்படி புனிதமான பாதிரியார் தகுதியை அடைஞ்சான்? பல பெண் குழந்தைகளுக்கும் தொல்லை கொடுத்திருக்கிறான். அவமானத்துக்குபயந்து வெளியே சொல்லலை. இவனோட இந்த ஹோமோசெக்ஸ் அராஜகம் அங்கு வேலை பார்க்கும் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு. ஆனால், வெளியே பரவினால் மதத்துக்கு அவமானம்னு நினைச்சு, அதை மறைத்து வந்துள்ளனர். ஸ்டீபனுக்கு தினமும் பையன்கள் வேண்டுமாம். இவன் அறையில் சரக்கு உட்பட எல்லாமே இருந்திருக்கிறது. ராஜ்யசபா எம்.பி-யான திருநாவுக் கரசர் ஒருகாலத்தில் படித்த இந்த பள்ளியின் பேர் இன்னிக்கு இப்படி நாறிக் கெடக்கு!’ என்றார்.

மனித உரிமைக் கழக மாவட்டத் தலைவர் சண்முகம் மற்றும் தவ்ஹீத் ஜமா-அத்-தின் மாவட்ட துணைத் தலைவர் அப்துல் மஜீது ஆகியோர், ‘ஒரு பாதிரியாரான ஸ்டீபன் ராஜா செய்தவை மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம். போன வருடமே இங்கு ஹெட்மாஸ்டராக வந்துவிட்டான். அவனுடைய மிரட்டலுக்கும் அவமானத்துக்கும் பயந்து புள்ளைங்க வெளியே சொல்லலை. சில மாதங்களுக்கு முன்பு ஒன்பதாவது படிக்கும் ஒரு மாணவி, அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கலைன்னு இடுப்புல உதைச்சிருக்கான். அதே போன்று பாதிரக்குடியிலேயே ஒரு பெண்ணை இவன் நாடியபோது, அந்த ஊர் இளைஞர்கள் பாதிரி யாருக்கு எதிராகக் கிளம்ப… அப்போது பாதிரக்குடி கிறிஸ்தவ தேவாலயத்துக்கு உட்பட்ட 51 கிராமத்தினர், ‘சாமியாரை தப்பா சொல்லக்கூடாது’ன்னு அந்த காமக் கொடூரனுக்கு தண்டனை தராமல், புகார் சொன்ன இளைஞர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டனர். அன்றைக்கே அவனைத் தண்டித்திருந்தால், இன்று இப்படி நடந் திருக்காது!

மைதீன் மட்டுமல்லாமல், 10-ம் வகுப்பு படிக்கும் 20 மாணவர்களை இவன் ஹோமோ செக்ஸில் ஈடுபடுத்திய விஷயமும் தெரியவந்துள்ளது. இது முழு உண்மை என்று தெரிந்ததும்தான், அனைத்து ஊர் மக்களும் ஒன்றுகூடி அந்தப் பள்ளியை முற்றுகையிட்டோம். ஸ்டீபன் ராஜா தப்பி ஓடிட் டான். தாளாளர் அருளானந்து ரூமுக்குள்ளேயே அடைந்துவிட்டார். சற்று நேரத்தில் போலீஸார் வந்து பாதிரியார் அறையை உடைக்க… உள்ளே ‘டிரிப்பிள் எக்ஸ்’ ரக சி.டி-க்கள், போதை மாத்திரைகள், மயக்கம் வரவழைக்கும் ஸ்பிரே, கத்தை கத்தையாக செக்ஸ் புத்தகங்கள் எல்லாவற்றையும் கைப்பற்றியுள்ளனர். காவல் துறையி னர் ஸ்டீபனையும், அவனுக்கு உதவியவர்களையும் உடனே கைது செய்யவேண்டும். இல்லையென்றால், பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்!’ என்றனர் கோபக் கொந்தளிப்புடன்.

பாதிரக்குடி கிராமவாசியான அந்தோணி, ‘பாதிரியார் ஸ்டீபன் பண்ணின பாவம், உண்மை. இவர்மேல் ஏற்கெனவே ‘பாலியல்’ தொடர்பான குற்றச்சாட்டு வந்தபோது, இதே ஊர்க்காரங்கதான் ‘பாதிரியாரை அவமானப்படுத்தக் கூடாது’ன்னு மூடி மறைச்சுட்டாங்க. இரவு மாணவிகளும் பள்ளியிலேயே தங்கியிருப்பாங்க. ஆனா, தூங்குறதுக்கு தாளாளர் அருளானந்து மேற்பார்வையிலுள்ள ஹாஸ்டலுக்கு வந்துடறதால, நல்ல வேளையா தப்பிச்சிருக்காங்க..!” என்றார்.

திருப்புனவாசல் இன்ஸ்பெக்டர் விடுப்பில் இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்கும் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சுப்பையனிடம் பேசினோம். ‘பாதிரியார் ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா மீது புகார் வந்ததும், உடனே பள்ளியில் ரெய்டு நடத்தி னோம். தலைமையாசிரியர் அப்படி நடந்துகொண்டது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. பாதிரியாரின் டிரைவர் பிரித்லினும் இதற்கு உதவியுள்ளான் என்பது தெரிந்தது. அவனையும் மேலும்சிலரையும் கைது செய்துள்ளோம். தலைமறைவாகியுள்ள பாதிரியாரை தேடிவருகிறோம்!’ என்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
Permalink  
 

இளம் மாணவிகளிடம் சில்மிஷம்:
மனித வடிவில் ஒரு மிருகம்!

Kodaikkanal.jpg

 

 

இயற்கை அன்னை அனைவரையும் குளிர்கரங்களால் அரவணைக்கும் கொடைக்-கானலில்... தன்னை நம்பி வந்த பச்சிளம் குழந்தைகளை காமுகக் கரங்களால் சீரழித்திருக்கிறது ஒரு வயோதிக மிருகம். அதுவும் 73 வயதான மிருகம். கொடைக்கானல் மலைப் பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளோடு 200----- க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் ‘கோடை பப்ளிக் ஸ்கூல்’ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தாளாளர் பிரைட் மீது பூடான் நாட்டை சேர்ந்த அனு என்ற குழந்தையின் பாதுகாவலரும் ஏற்காடு சி.எஸ்.ஐ. சர்ச்சின் ஃபாதருமான சார்லஸ் சாம்ராஜ் கொடைக்கானல் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். 

Kodaikkanal%201.jpgநாம் சார்லஸ் சாம்ராஜிடம் பேசினோம். ‘‘என்னுடைய மனைவி லத்திகா பூடான் நாட்டைச் சேர்ந்தவர். அவர் இந்திய - பூடான் எல்லையின் கடைகோடியில் இருக்கும் ஜெய்கோன் என்ற பகுதிக்கு சென்றபோது அங்கு வசதியில்லாமல், தங்களது ஐந்து குழந்தைகளை வளர்க்கக்கூட முடியாமல் தவித்த ஒரு குடும்பத்தைப் பற்றி என்னிடம் சொன்னார்.

இங்கு சில குழந்தைகளை படிக்க வைப்பதைப்போல, அந்த குடும்பத்திலிருந்து ஒரு குழந்தையையும் படிக்க வைக்கலாம் என்று, அந்த ஏழைக் குடும்பத்தில் ஒரு குழந்தையை அழைத்து வந்தோம். அவள்தான் அனு. அப்போது நான் கோவையில் பணியாற்றினேன். நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலின் பிரிவான, காரமடை பப்ளிக் ஸ்கூலில் எட்டாம் வகுப்பில் அனுவை சேர்த்தோம். சில மாதங்களில், ‘காரமடையில் இருக்கும் ஸ்கூலை மூடப்போகிறோம். இங்குள்ள மாணவர்களை கொடைக்கானல் பகுதியில் உள்ள பப்ளிக் ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் செய்கிறோம்’ என்று தாளாளர் பிரைட் என்னிடம் கூறினார். அப்போது நான் ஏற்காடு பகுதிக்கு மாற்றப்பட்டதால் நாங்களும் சம்மதித்து, அனுவை கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலில் சேர்த்தோம்.

அப்போதே போக மறுத்தாள் அனு. அதன்பின் நாங்கள் கொடைக்கானல் சென்று ஆறுதல்படுத்தி அங்கே சேர்த்தோம். இந்த நிலையில் திடீரென ஜூன் முதல் தேதி எங்களுக்கு போன் செய்து, ‘எனக்கு உடம்பு சரியில்லை. வந்து கூட்டிட்டுப் போங்க’ என வற்புறுத்தினாள் அனு. நான் அவளை சமாதானப்படுத்துவதற்காக என் மனைவியிடம் போனை கொடுக்க அதன் பின்பு அனு சொன்ன தகவல்தான் எங்களை தூக்கிவாரிப் போட்டது’’ என்ற சார்லஸ் சாம்ராஜ் தன் முகத்தைப் பிசைந்தபடி தொடர்ந்தார்.

‘‘தாளாளர் பிரைட் தன் பங்ளாவில் தங்க வைத்திருக்கும் மாணவர்கள் 17 பேருமே பெண் குழந்தைகள். அதுவும் பெற்றோர் மற்றும் யாரும் இல்லாத ஆதரவற்ற குழந்தைகள். ஆங்கிலம் கற்றுத்தருகிறேன் என்று அவர்களை இரவு நேரத்தில் தனது அறைக்கு வரச்சொல்லி ஆங்கிலச் சேனல்களை போட்டுக் காண்பித்து வெளியே சொல்ல முடியாத அளவிற்கு தொந்தரவுகளை கொடுத்திருக்கிறார் பிரைட். அவரது அறைக்கு செல்லும்போது நைட்டி மட்டும்தான் அணிந்து செல்ல வேண்டுமாம். அப்படி போகவில்லை என்றால், உணவு கிடையாதாம். மேலும் சூடு வைப்பது, ஆபாசமாகத் திட்டுவது என டார்ச்சர் கொடுத்திருக்கிறான். அந்த குழந்தைகளுக்கு யாரும் இல்லாததால் வெளியே சொல்லவே பயந்திருக்கிறார்கள்.

அவர்களைப் போலவே அனுவையும் 1-ம் தேதி அழைக்க, என்னிடம் நைட் டிரஸ் இல்லை என சொல்லியிருக்கிறாள் இவள். மறுநாள் பிரைட்டே புதிய நைட் டிரஸை எடுத்துக் கொடுத்து அணிந்துவரச் சொல்லியிருக்கிறார். மறுநாள் தனக்கு காய்ச்சல் அடிப்பது போல உணர்ந்ததால் அனு தன் அறையிலே படுத்திருக்க... பகலிலே அறைக்குச் சென்று எல்லை மீறியிருக்கிறான் பிரைட். 

பயந்து போன அனு வெளியே ஓடிவந்து சத்தம் போட்டு தப்பித்திருக்கிறார். பின்னர் அங்கிருந்த சமையல்கார பெண்மணியின் செல்போன் மூலம்தான் எங்களுக்கு இந்தத் தகவல்களை எல்லாம் சொன்னாள். உடனே நாங்கள் கொடைக்கானல் சென்று விசாரித்துவிட்டு அனுவின் டி.சி.யை கேட்டோம். அதற்கு நாற்பதாயிரம் ரூபாய் கேட்டார்கள் பிரைட்டும், அவரது மனைவியும். 

நான் தர மறுக்கவே, என் முன்பாகவே... அந்த குழந்தையை எங்கே தொட்டேன், எப்படி தொட்டேன் என்றெல்லாம் ஆபாசமாகப் பேசினார் பிரைட். நாங்கள் போலீஸில் புகார் கொடுக்கப் போவதாகச் சொன்னதை அடுத்தே டி.சி.யை கொடுத்தார். தட்டிக் கேட்க யாரும் வரமாட்டார்கள் என நினைத்து பெண் குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட அந்த பிரைட்டை மன்னிக்க முடியவில்லை. அதனால்தான் போலீஸில் புகார் கொடுத்துவிட்டேன்’’ என்றார் வேதனையாக. 

Kodaikkanal%202.jpgகோடை பப்ளிக் ஸ்கூல் ஆசிரியர்கள் சிலரிடமும் பேசினோம். 

‘‘எங்க தாளாளர் பிரைட்டோட உண்மையான பெயர் வெள்ளைச்சாமி. அவருக்கு ஆங்கிலத்தில் ‘கே’ என்று எழுத்து ராசி என்பதால் கன்னியாகுமரி, கூடலூர், குன்னூர், கூக்கால், காரமடை போன்ற இடங்களில் ஸ்கூல் நடத்துகிறார். பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு டீச்சரிடம் தன் அறையிலே தவறாக நடக்க முயற்சித்தார். அதை தெரிந்து கொண்ட ஆசிரியர்கள் ஆறு பேர் உடனே வெளியேறிவிட்டனர். 

கன்னியாகுமரியில் இருக்கும்போதும் திருமணமான ஆசிரியையிடம் அத்துமீற அங்குள்ள பொதுமக்களே இவரைத் துவைத்து எடுத்துவிட்டனர். காரமடையிலும் ஒரு மாணவியிடம் எல்லை மீறியதை ஒரு ஆசிரியர் பார்த்து பெற்றோர் சிலருக்கு தெரிவிக்க, அங்கு பிரச்னை பெரியதாகி பள்ளியையே மூடிவிட்டார். இங்கு கொடைக்கானலில் இந்த ஒரு வருடத்தில் மூன்று முதல்வர்கள் மாறிவிட்டனர். அப்படியென்றால் எவ்வளவு டார்ச்சர் கொடுத்திருப்பார் என்பதை யூகித்துக் கொள்ளலாம். இப்பள்ளிக்கு முதல்வராக யாரும் வராத காரணத்தால் அவரது மனைவியே இருந்து நடத்துகிறார். பிரைட்டின் செய்கைகள் சைகோவை விட மோசமானவை. இங்கிலீஷ் கிளாஸ் என்று இரவு நேரத்தில் மாணவிகளுக்கு போட்டு காண்பித்த சி.டி.க்கள் எல்லாம் அவருடைய அறையிலே இருக்கிறது. இந்த ஸ்கூலில் உள்ள மாணவிகளுக்கு பாதுகாப்புக்கும், படிப்புக்கும் வழி ஏற்படுத்துவதாக உறுதி கொடுத்தாலே அனைத்து உண்மைகளையும் அவர்கள் சொல்வார்கள்’’ என்று போட்டுடைத்தார்கள். 

இதுபற்றி பள்ளியின் தாளாளர் பிரைட்டின் கருத்துக்களை கேட்க அவருடைய செல்போனில் பல முறை தொடர்பு கொள்ள முற்சித்தோம். ‘இந்த எண் பார்வர்டு செய்யப்பட்டுள்ளது’ என்றே வந்தது. 

இந்த விவகாரம் பற்றி கொடைக்கானல் டி.எஸ்.பி பாஸ்கரனிடம் பேசினோம். ‘‘பிரைட் மீது வந்த புகாரில் உண்மை இருக்கிறது. மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட அவரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் பிரைட் முன்ஜாமீன் கேட்டிருக்கிறார். அவர் அதைப் பெறுவதற்குள் பிடித்துவிடுவோம்’’ என்றார் உறுதியாக. 

அறியாத பிள்ளைகளை சீரழித்த பிரைட்டின் லீலைகளால் கொடைக்கானலே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard