Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பண்டைய இந்தியப் பொருளாதாரம் By ப. கனகசபாபதி

Guru

Status: Offline
Posts: 7329
Date:
பண்டைய இந்தியப் பொருளாதாரம் By ப. கனகசபாபதி
Permalink  
 
பண்டைய இந்தியப் பொருளாதாரம்

By ப. கனகசபாபதி  |   Published on : 17th June 2014 02:22 AM

நமது நாட்டுக்கு என பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம். கடந்த இருநூறு வருடங்களாக உலகப் பொருளாதார அரங்கில் ஐரோப்பாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் முன்னிலையில் இருந்து வருகின்றன. ஆகையால், அதை வைத்துக் கொண்டு வரலாற்றுக்காலம் முழுவதும் அப்படியே இருந்திருக்கலாம் என எண்ணிக் கொள்கிறோம். ஏனெனில், நாம் படிக்கும் வரலாறு ஐரோப்பாவின் தொழிற் புரட்சியில் தொடங்கியே உலகில் பொருளாதார  வளர்ச்சி ஆரம்பித்ததாகப் போதிக்கிறது.

மேலும், நாம் சுதந்திரம் பெறும்போது இந்தியா ஏழை நாடாகவே இருந்தது. எனவே, நமது மனக் கண்ணில் அந்த வறுமையான சித்திரமே நம் முன் காட்டப்படுகிறது. அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் நமது பொருளாதாரம் சிதைக்கப்பட்டு வீழ்ச்சியடைந்தது. ஆனால் அது பற்றி நமக்கு விரிவாகப் போதிக்கப்படுவதில்லை. 

இந்தியப் பொருளாதாரத்தின் முந்தைய நிலைகள் குறித்து பண்டைய காலம் தொடங்கி, தொடர்ந்து வெளிவந்த பல இலக்கியங்கள் பேசியுள்ளன. விவசாயம், தொழில்கள், வியாபாரம் பற்றிய பல விஷயங்களை அவை குறிப்பிடுகின்றன. உதாரணமாக "சிலப்பதிகாரம்' அப்போது தமிழ் நாட்டில் சர்வதேச வணிகம் எவ்வாறு சிறப்பாக நடைபெற்று வந்தது; எப்படி பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் வந்து சென்றார்கள் என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறது.

உலகத்தின் முதல் பொருளாதார மற்றும் அரசியல் புத்தகமாக "அர்த்த சாஸ்திரம்' கருதப்படுகிறது. அது சுமார் 2,300 வருடங்களுக்கு முன்னால் மெளரிய சாம்ராஜ்ய காலத்தில் எழுதப்பட்டது. விவசாயம், ஜவுளி, பிற தொழில்கள், வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி, வரிக் கொள்கை, ஊதியம், நுகர்வோர் நலன் எனப் பல விஷயங்களைப் பற்றியும், அவற்றை முறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவற்றுக்குத் தேவையான நிர்வாக முறைகள் ஆகியவை பற்றியும் அந்த நூல் விவரிக்கின்றது.

பொருளாதாரம் பற்றிய சரியான அறிவும் அனுபவமும் இல்லாமல் அப்படிப்பட்ட ஒரு  நூல் எழுதப்பட்டிருக்க முடியாது. மேற்குலகத்தில் முதல் பொருளாதார நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆயினும் அண்மைக்காலம் வரையிலும் உலக நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னணி குறித்து ஒரு சரியான வரலாற்றுப் பார்வை இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் 1980களில் தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கத்திய அறிஞர்கள் உலகப் பொருளாதாரம் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவை மேற்கு நாடுகளின் பொருளாதார வரலாற்றை மட்டுமின்றி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் வரலாறு குறித்தும் முக்கியமான விஷயங்களைச் சொல்கின்றன.

அவை உலகப் பொருளாதாரம் என்பது ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது என்பதை மறுக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடித்தளம் காலனியாதிக்க காலத்தில் அவை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுரண்டல்கள் மூலமே என்பது குறித்து பல விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேற்கண்ட ஆய்வுகள், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவும் சீனாவுமே முதன்மையான பங்கு வகித்து வந்துள்ளன என்பதை நிறுவுகின்றன.

முக்கியமாக, உலகிலுள்ள பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான "பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு' (O‌r‌ga‌n‌i‌s​a‌t‌i‌o‌n​ ‌f‌o‌r​ Ec‌o‌n‌o‌m‌ic​ C‌o‌o‌p‌e‌r​a‌t‌i‌o‌n​ a‌n‌d​ D‌e‌v‌e‌l‌o‌p‌m‌e‌n‌t)வெளியிட்டுள்ள ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவையாகும். அவை பிரபல பொருளாதார வரலாற்றாசிரியரான ஆங்கஸ் மாடிசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டவை.

உலகப் பொருளாதாரம் குறித்த கடந்த இரண்டாயிரம் வருட வரலாற்றை புள்ளி விவரங்களுடன் அவை முன்வைக்கின்றன. அது புத்தகமாக 2001ஆம் வருடம் வெளியிடப்பட்டது. இன்று வரை அந்த ஆய்வுகள் யாராலும் மறுக்கப்படவில்லை. அவற்றின் மூலம் உலகப் பொருளாதாரம் குறித்த ஒரு தெளிவான சிந்தனைக்கு வழி கோலப்பட்டுள்ளது.

அவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், உலகப் பொருளாதாரத்தின் முதன்மையான சக்தியாக இந்தியா விளங்கி வந்துள்ளதை எடுத்துச் சொல்கின்றன. அப்போது உலகின் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிடம் இருந்துள்ளது.

இரண்டாவது நிலையில் சீனா 26.2 விழுக்காடு பங்குடன் இருந்துள்ளது. இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் சுமார் அறுபது விழுக்காடு அளவு பொருளாதார பலத்தை வைத்திருந்துள்ளன. அதே சமயம் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக 15 விழுக்காட்டுக்கும் குறைவான அளவே பங்களித்துக் கொண்டிருந்தன. 

உலகப் பொருளாதாரத்திற்கு மூன்றில் ஒரு பங்கினை அப்போதே இந்தியா அளித்துக் கொண்டிருந்தது என்பது அசாத்தியமானது. அந்த அளவுக்கு பொருளாதார வரலாற்றில் உலகின் எந்த மேற்கத்திய நாடும் இன்று வரை பங்களித்ததில்லை. எந்த ஒரு நாடும் திடீரென உலகப் பொருளாதாரத்தின் முதல் நிலைக்கு செல்ல முடியாது.

அப்படியெனில், பொது யுகம் தொடங்குவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே முன்னேற்றத்துக்கான அடித்தளங்கள் இந்தியாவில் போடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வளர்ச்சிக்கு ஏதுவான வழிமுறைகளும் இருந்திருக்க வேண்டும்.

சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக காலத்தை ஆய்வு செய்த நிபுணர்கள்கூட அப்போதிருந்த திட்டமிட்ட நகரமைப்பு, வளர்ச்சிக்கான அடையாளங்கள் குறித்து மிகவும் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பொது யுக காலத்துக்கு முந்தைய பல நூற்றாண்டுகளில் நிலவிய சர்வதேச வணிகம், வியாபாரம், தொழில்கள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் உள்ளன. ஆனால் தொடர்ச்சியாக நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடிய அளவில் தற்போது கிடைத்துள்ளது போன்ற புள்ளி விவரங்கள் அப்போதைய காலங்களுக்கு இல்லை.

இந்தியப் பொருளாதாரத்தின் மற்றொரு தனிச் சிறப்பு அதன் நீடித்த தன்மையாகும். பொது யுகம் தொடங்கிய காலத்தில் இருந்து 1600ஆம் ஆண்டுவரை இந்தியாவே உலகப் பொருளாதாரத்தில் வல்லரசாக முதல் நிலையில் இருந்து வந்துள்ளது. சீனா தொடர்ந்து இரண்டாமிடத்தில் இருந்துள்ளது.

1600இல் சீனா முதலிடத்தை அடைய, பின்னர் 1700இல் மீண்டும் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கிறது. மறுபடியும் ஒரு முறை 1820இல் சீனா முதலிடத்தைப் பிடிக்க இந்தியா இரண்டாம் நிலையை அடைகிறது. எனவே, கடந்த இரண்டாயிரமாண்டு கால பொருளாதார வரலாற்றில் மிகப் பெரும்பான்மையான காலம் இந்தியாவே முதலிடத்தில் இருந்துள்ளது. இந்தியாவும் சீனாவுமே உலகப் பொருளாதாரத்தின் இரண்டு வலுவான சக்திகளாக இருந்து வந்துள்ளன.

பின்னர் அவை இரண்டும் வலுவிழந்ததற்கு முக்கியக் காரணமே காலனி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சிதைவுகளாகும். ஐரோப்பியர்களின் ஆட்சிக் காலத்தில் உலக வரலாறே கண்டிராத கொடுமைகளை இந்தியா எதிர் கொண்டது என அமெரிக்க வரலாற்றாசிரியர் வில் துரந்த் விவரித்துள்ளார்.

அப்போதுதான் முதல்தரமான பொருளாதாரமாக விளங்கி வந்த இந்தியா, வறுமையும் பிணிகளும் நிறைந்த ஏழை நாடாக மாறிப் போனது. ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்கள் பல லட்சக்கணக்கானோரின் உயிரைப் பறித்துக் கொண்டன. தொன்றுதொட்டு ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றிருந்த நாடு, இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத்  தள்ளப்பட்டது.

1750இல் உற்பத்தித் துறைக்கு உலக அளவில் கால் பகுதியைக் கொடுத்துக் கொண்டிருந்த இந்தியா, 1900ஆம் வருடத்தில் வெறும் 1.7 விழுக்காடு மட்டுமே கொடுக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 1800 முதல் 1850 வரைக்குமான ஐம்பது வருட காலத்தில் சென்னை பிரசிடென்சியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் அரசாங்கத்தின் கொடுமையான வரிகளால் தொழிலை விட்டுச் சென்று விட்டனர் என பொருளாதார நிபுணர் ரமேஷ் தத் தெரிவிக்கிறார். எனவே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் மிகவும் குறைவாகப் போனதாக தாதாபாய் நெüரோஜி குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார வரலாற்றின் முக்கியமான கால கட்டத்தில் நாம் இப்போது இருந்து வருகிறோம். மேற்கத்திய சித்தாந்தங்கள் பெருமளவு தோற்று வருகின்றன. அதே சமயம், நமது நாட்டுக்கென வலிமைகளும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த சமயத்தில் நமது பொருளாதார வரலாறு, அதன் அடிப்படைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த  சரியான உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதில் குறிப்பாக நமது நிபுணர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் பங்கு அதிகமாக உள்ளது.நமது நாட்டுக்கு என பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம். கடந்த இருநூறு வருடங்களாக உலகப் பொருளாதார அரங்கில் ஐரோப்பாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் முன்னிலையில் இருந்து வருகின்றன. ஆகையால், அதை வைத்துக் கொண்டு வரலாற்றுக்காலம் முழுவதும் அப்படியே இருந்திருக்கலாம் என எண்ணிக் கொள்கிறோம். ஏனெனில், நாம் படிக்கும் வரலாறு ஐரோப்பாவின் தொழிற் புரட்சியில் தொடங்கியே உலகில் பொருளாதார  வளர்ச்சி ஆரம்பித்ததாகப் போதிக்கிறது.

மேலும், நாம் சுதந்திரம் பெறும்போது இந்தியா ஏழை நாடாகவே இருந்தது. எனவே, நமது மனக் கண்ணில் அந்த வறுமையான சித்திரமே நம் முன் காட்டப்படுகிறது. அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் நமது பொருளாதாரம் சிதைக்கப்பட்டு வீழ்ச்சியடைந்தது. ஆனால் அது பற்றி நமக்கு விரிவாகப் போதிக்கப்படுவதில்லை. 

இந்தியப் பொருளாதாரத்தின் முந்தைய நிலைகள் குறித்து பண்டைய காலம் தொடங்கி, தொடர்ந்து வெளிவந்த பல இலக்கியங்கள் பேசியுள்ளன. விவசாயம், தொழில்கள், வியாபாரம் பற்றிய பல விஷயங்களை அவை குறிப்பிடுகின்றன. உதாரணமாக "சிலப்பதிகாரம்' அப்போது தமிழ் நாட்டில் சர்வதேச வணிகம் எவ்வாறு சிறப்பாக நடைபெற்று வந்தது; எப்படி பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் வந்து சென்றார்கள் என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறது.

உலகத்தின் முதல் பொருளாதார மற்றும் அரசியல் புத்தகமாக "அர்த்த சாஸ்திரம்' கருதப்படுகிறது. அது சுமார் 2,300 வருடங்களுக்கு முன்னால் மெளரிய சாம்ராஜ்ய காலத்தில் எழுதப்பட்டது. விவசாயம், ஜவுளி, பிற தொழில்கள், வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி, வரிக் கொள்கை, ஊதியம், நுகர்வோர் நலன் எனப் பல விஷயங்களைப் பற்றியும், அவற்றை முறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவற்றுக்குத் தேவையான நிர்வாக முறைகள் ஆகியவை பற்றியும் அந்த நூல் விவரிக்கின்றது.

பொருளாதாரம் பற்றிய சரியான அறிவும் அனுபவமும் இல்லாமல் அப்படிப்பட்ட ஒரு  நூல் எழுதப்பட்டிருக்க முடியாது. மேற்குலகத்தில் முதல் பொருளாதார நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆயினும் அண்மைக்காலம் வரையிலும் உலக நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னணி குறித்து ஒரு சரியான வரலாற்றுப் பார்வை இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் 1980களில் தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கத்திய அறிஞர்கள் உலகப் பொருளாதாரம் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவை மேற்கு நாடுகளின் பொருளாதார வரலாற்றை மட்டுமின்றி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் வரலாறு குறித்தும் முக்கியமான விஷயங்களைச் சொல்கின்றன.

அவை உலகப் பொருளாதாரம் என்பது ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது என்பதை மறுக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடித்தளம் காலனியாதிக்க காலத்தில் அவை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுரண்டல்கள் மூலமே என்பது குறித்து பல விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேற்கண்ட ஆய்வுகள், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவும் சீனாவுமே முதன்மையான பங்கு வகித்து வந்துள்ளன என்பதை நிறுவுகின்றன.

முக்கியமாக, உலகிலுள்ள பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான "பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு' (O‌r‌ga‌n‌i‌s​a‌t‌i‌o‌n​ ‌f‌o‌r​ Ec‌o‌n‌o‌m‌ic​ C‌o‌o‌p‌e‌r​a‌t‌i‌o‌n​ a‌n‌d​ D‌e‌v‌e‌l‌o‌p‌m‌e‌n‌t)வெளியிட்டுள்ள ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவையாகும். அவை பிரபல பொருளாதார வரலாற்றாசிரியரான ஆங்கஸ் மாடிசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டவை.

உலகப் பொருளாதாரம் குறித்த கடந்த இரண்டாயிரம் வருட வரலாற்றை புள்ளி விவரங்களுடன் அவை முன்வைக்கின்றன. அது புத்தகமாக 2001ஆம் வருடம் வெளியிடப்பட்டது. இன்று வரை அந்த ஆய்வுகள் யாராலும் மறுக்கப்படவில்லை. அவற்றின் மூலம் உலகப் பொருளாதாரம் குறித்த ஒரு தெளிவான சிந்தனைக்கு வழி கோலப்பட்டுள்ளது.

அவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், உலகப் பொருளாதாரத்தின் முதன்மையான சக்தியாக இந்தியா விளங்கி வந்துள்ளதை எடுத்துச் சொல்கின்றன. அப்போது உலகின் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிடம் இருந்துள்ளது.

இரண்டாவது நிலையில் சீனா 26.2 விழுக்காடு பங்குடன் இருந்துள்ளது. இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் சுமார் அறுபது விழுக்காடு அளவு பொருளாதார பலத்தை வைத்திருந்துள்ளன. அதே சமயம் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக 15 விழுக்காட்டுக்கும் குறைவான அளவே பங்களித்துக் கொண்டிருந்தன. 

உலகப் பொருளாதாரத்திற்கு மூன்றில் ஒரு பங்கினை அப்போதே இந்தியா அளித்துக் கொண்டிருந்தது என்பது அசாத்தியமானது. அந்த அளவுக்கு பொருளாதார வரலாற்றில் உலகின் எந்த மேற்கத்திய நாடும் இன்று வரை பங்களித்ததில்லை. எந்த ஒரு நாடும் திடீரென உலகப் பொருளாதாரத்தின் முதல் நிலைக்கு செல்ல முடியாது.

அப்படியெனில், பொது யுகம் தொடங்குவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே முன்னேற்றத்துக்கான அடித்தளங்கள் இந்தியாவில் போடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வளர்ச்சிக்கு ஏதுவான வழிமுறைகளும் இருந்திருக்க வேண்டும்.

சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக காலத்தை ஆய்வு செய்த நிபுணர்கள்கூட அப்போதிருந்த திட்டமிட்ட நகரமைப்பு, வளர்ச்சிக்கான அடையாளங்கள் குறித்து மிகவும் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பொது யுக காலத்துக்கு முந்தைய பல நூற்றாண்டுகளில் நிலவிய சர்வதேச வணிகம், வியாபாரம், தொழில்கள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் உள்ளன. ஆனால் தொடர்ச்சியாக நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடிய அளவில் தற்போது கிடைத்துள்ளது போன்ற புள்ளி விவரங்கள் அப்போதைய காலங்களுக்கு இல்லை.

இந்தியப் பொருளாதாரத்தின் மற்றொரு தனிச் சிறப்பு அதன் நீடித்த தன்மையாகும். பொது யுகம் தொடங்கிய காலத்தில் இருந்து 1600ஆம் ஆண்டுவரை இந்தியாவே உலகப் பொருளாதாரத்தில் வல்லரசாக முதல் நிலையில் இருந்து வந்துள்ளது. சீனா தொடர்ந்து இரண்டாமிடத்தில் இருந்துள்ளது.

1600இல் சீனா முதலிடத்தை அடைய, பின்னர் 1700இல் மீண்டும் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கிறது. மறுபடியும் ஒரு முறை 1820இல் சீனா முதலிடத்தைப் பிடிக்க இந்தியா இரண்டாம் நிலையை அடைகிறது. எனவே, கடந்த இரண்டாயிரமாண்டு கால பொருளாதார வரலாற்றில் மிகப் பெரும்பான்மையான காலம் இந்தியாவே முதலிடத்தில் இருந்துள்ளது. இந்தியாவும் சீனாவுமே உலகப் பொருளாதாரத்தின் இரண்டு வலுவான சக்திகளாக இருந்து வந்துள்ளன.

பின்னர் அவை இரண்டும் வலுவிழந்ததற்கு முக்கியக் காரணமே காலனி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சிதைவுகளாகும். ஐரோப்பியர்களின் ஆட்சிக் காலத்தில் உலக வரலாறே கண்டிராத கொடுமைகளை இந்தியா எதிர் கொண்டது என அமெரிக்க வரலாற்றாசிரியர் வில் துரந்த் விவரித்துள்ளார்.

அப்போதுதான் முதல்தரமான பொருளாதாரமாக விளங்கி வந்த இந்தியா, வறுமையும் பிணிகளும் நிறைந்த ஏழை நாடாக மாறிப் போனது. ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்கள் பல லட்சக்கணக்கானோரின் உயிரைப் பறித்துக் கொண்டன. தொன்றுதொட்டு ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றிருந்த நாடு, இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத்  தள்ளப்பட்டது.

1750இல் உற்பத்தித் துறைக்கு உலக அளவில் கால் பகுதியைக் கொடுத்துக் கொண்டிருந்த இந்தியா, 1900ஆம் வருடத்தில் வெறும் 1.7 விழுக்காடு மட்டுமே கொடுக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 1800 முதல் 1850 வரைக்குமான ஐம்பது வருட காலத்தில் சென்னை பிரசிடென்சியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் அரசாங்கத்தின் கொடுமையான வரிகளால் தொழிலை விட்டுச் சென்று விட்டனர் என பொருளாதார நிபுணர் ரமேஷ் தத் தெரிவிக்கிறார். எனவே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் மிகவும் குறைவாகப் போனதாக தாதாபாய் நெüரோஜி குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார வரலாற்றின் முக்கியமான கால கட்டத்தில் நாம் இப்போது இருந்து வருகிறோம். மேற்கத்திய சித்தாந்தங்கள் பெருமளவு தோற்று வருகின்றன. அதே சமயம், நமது நாட்டுக்கென வலிமைகளும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த சமயத்தில் நமது பொருளாதார வரலாறு, அதன் அடிப்படைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த  சரியான உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதில் குறிப்பாக நமது நிபுணர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் பங்கு அதிகமாக உள்ளது.

வரலாறு குறித்த தெளிவான பார்வையில்லாத சமூகத்தைக் கொண்ட எந்த நாடும் எதிர் காலத்துக்கான கொள்கைகளை உறுதியாக வகுக்க இயலாது.

கட்டுரையாளர் பேராசிரியர்.__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
இந்தியப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு

இந்திய தேசம் நீண்ட நெடிய பாரம்பரியமுள்ள தொன்மையான பண்பாடு. இன்றைக்கும் வாழ்ந்து வரும் பெருமையுடையது. பொருளாதாரப் பின்னணி இல்லாமல் எந்த ஒரு நாடோ அல்லது பண்பாடோ நீடித்து இருக்க முடியாது. அந்த வகையில் நம்முடைய பண்பாடு பல்லாயிரம் ஆண்டு காலமாகத் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றதென்றால், அதற்கெனத் தனித்துவம் வாய்ந்த பொருளாதார வரலாறு அடிப்படையாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டாயிர வருடத்துக்கான உலக நாடுகளின் பொருளாதார வரலாற்றை நவீன அளவு கோல்களின் அடிப்படையில் பொருளாதார வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசன் வெளியிட்டுள்ளார். அதன்படி பொது யுகம் தொடக்க காலத்தில், அதாவது இன்றைக்கு 2018 வருடங்களுக்கு முன்பே, இந்தியப் பொருளாதாரம் உலகின் முதல் நிலையில் இருந்து உலகப்  பொருளாதரத்துக்கு  முப்பத்து மூன்று விழுக்காடு பங்களித்துக் கொண்டிருந்தது.  மேலும் கடந்த இரண்டாயிர வருட காலத்தில் பெரும்பான்மையான காலம் நமது தேசம் தான் உலகின் பெரிய செல்வந்த நாடாக விளங்கி வந்தது.  ஆங்கிலேயர்களின் சுயநலமும் சூழ்ச்சிகளுமே நமது பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகியது.

அதனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் ஒரு ஏழை நாடாக, வளர்ச்சி இல்லாத நாடாக ஆக்கப்பட்டோம்.  எனவே சுதந்திரம் வாங்கிய போது சுமார் 45 விழுக்காடு பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வந்தனர். பாரம்பரியமான தொழில்கள் எல்லாம் நசுக்கப்பட்டு,  80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களை  நம்பி மட்டுமே உயிர் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். அதனால் நமது நாட்டுக்கு உலக அரங்கில் ஒரு மரியாதை இல்லாத சூழ்நிலை நிலவி வந்தது.

ஆனால் இப்போது எழுபது வருடம் கழித்து, நமது நாடுதான் உலக அளவில் முதல் நிலையில் வருவதற்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டதாக இருக்கிறதெனப் பன்னாட்டு அமைப்புகள் மற்றும் சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துமே ஒரு மனதாகக் கணிக்கின்றன.  மேலும் கடந்த சில வருடங்களாக உலகின் வேகமாக வளரக் கூடிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இன்றைக்கு உலகின் பல பகுதிகளிலும் நமது தொழில்களும், வியாபாரங்களும் பரவியுள்ளன. மேலும் சர்வதேச அளவில்  வெவ்வேறு துறைகளிலும் இந்தியர்கள் மிக முக்கிய நிலையில் இருந்து வருகின்றனர்.

அதனால் நமது நாட்டுக்கான செல்வாக்கு இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 1947 ல் இந்தியா ஒரு வறுமையான, வளர்ச்சி குறைந்த, பின் தங்கிய நாடு. ஆனால் இன்று உலகமே அதிக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் ஒரு பெரிய சக்தி. உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால்  எந்த ஒரு நாடும் ஒரு எழுபது வருட காலத்தில் தனது நிலைமையை இவ்வளவு தலைகீழாக மாற்றியதாக சரித்திரம் இல்லை. இத்தனைக்கும் சுதந்திரத்துக்குப் பின்னர் நம்மை ஆட்சி செய்தவர்கள் நமக்குப் பொருத்தமில்லாத மேற்கத்திய சித்தாந்தகளை ஒட்டியே பெரும்பான்மையான காலம் கொள்கைகளை வகுத்து வந்துள்ளனர். அப்படி இருந்தும் நமது நாடு சீக்கிரமாக மேலெழுந்து வர என்ன காரணம்?

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் கள ஆய்வுகள் நமது வளர்ச்சிக்கு அடிப்படையே தொன்மையான நமது கலாசாரமும் பாரம்பரிய விழுமியங்களும் தான் என அறுதியிட்டுக் கூறுகின்றன.   அண்மைக் காலமாக மேற்கத்திய நிபுணர்கள் கூட கலாசாரம் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என ஒத்துக் கொள்கின்றனர். இந்திய வாழ்க்கை முறையே கலாசாரத்தை மையமாகக் கொண்டது எனவும், வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை எனவும்  ‘ ஒருங்கிணைந்த மனித நேயம்’ தத்துவத்தை முன் வைத்த சிந்தனையாளர் தீனதயாள் உபாத்யாயா அவர்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்னரே எடுத்துச் சொன்னார்.

நமது கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் கட்டிக் காத்து வருவது குடும்பங்களும் அவற்றை ஒட்டிய  சமூகங்களும் ஆகும்.  அதனால் தான்  நமது நாட்டில் அதிகப்படியான சேமிப்புகள், தொழில் முனையும் தன்மை, அதிக அளவில் குறு/ சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், சமூக மூலதனம், சமூகங்களால் உந்தப்படும் வளர்ச்சி ஆகியன இருந்து வருகின்றன.  நமது பொருளாதாரத்தின் சிறப்பே அதன்  குடும்பம் சார்ந்த தன்மையாகும்.  அதுதான் நமக்கு முக்கியமான வலுவாகும். அதன் மூலம் பொருளாதாரம் பெருமளவு சுயசார்பு பெற்றதாகவும், அரசாங்கங்களைச் சார்ந்து நிற்காமலும் இருந்து வருகிறது.

நமது பொருளாதாரத்தில் தொடர்ந்து மூன்றில் ஒரு பங்கு அளவு அல்லது அதற்கு மேலாக சேமிப்புகளைக் கொடுத்துக் கொண்டு  வருவது குடும்பங்களும் அவை சார்ந்த அமைப்புகளும் தான். குடும்பம் சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தான் நாட்டின் வருமானத்துக்கு அறுபது விழுக்காட்டுக்கு மேல் பங்களித்து வருகின்றன. மேலும் நமது தேசத்தில் அதிகப் படியான பேருக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்ஹ்டு வருவதும்  குடும்பம் சார்ந்த தொழில்கள் தான்.  

குடும்பங்கள் நிலைத்திருப்பதால் தான் நமது பொருளாதாரமும் நிலைத்த தன்மையைக் கொண்டிருக்கிறது. அதனால் நாட்டுக்குப் பொருளாதார சிரமங்கள் வரும்போது  குடும்பங்கள் அதைப் போக்க உதவி வருகின்றன. மக்களின் சேமிப்புகள் அதிகமாக இருப்பதால் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மூலதனம் வெளியார் உதவி அதிகமின்றி  நம்மாலேயே மிகப் பெருமளவு திரட்டப்படுகிறது. அதனால் வெளி நாட்டு மூலதனத்தை நம்பி வாழாத நாடாக நாம் இருந்து வருகிறோம்.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் கூட தங்கள் குடும்பங்கள் மூலம் நாட்டுக்கு  முக்கியமான அந்நியச் செலவாணியைப் பிரச்னையைத் தீர்க்க பல சமயங்களில் உதவியுள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் வெவ்வேறு  நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களின் நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்குச் சென்று வருமானம் ஈட்டி வருகின்றனர். அவ்வாறு வருமானம் ஈட்டுபவர்கள் தாய் நாடுகளில் உள்ள தங்களின் குடும்பங்களுக்குப் பணம் அனுப்புவார்கள். அவ்வாறு அனுப்புவதில் கடந்த பல வருடங்களாகவே உலகிலேயே அதிகமான அளவு தொகையைத் தாய் நாட்டுக்கு  அனுப்புவர்கள் நமது இந்தியர்கள் தான்.  அப்படி அவர்கள் தங்களின் குடும்பங்களுக்கு அனுப்பிய வெளி நாட்டுத் தொகைகள் தான் நமது பொருளாதார பிரச்னையைத் தீர்க்க உதவியுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆதாரமாக விளங்குவது பெண்கள் தான். பாரதக் கலாசாரத்தில் பெண்மை என்றாலே தாய்மை;  தாய்மை என்றாலே தெய்வீகம். பெண்மை என்பது அன்பு, பாசம், அரவணைப்பு, தியாகம் ஆகிய நற்பண்புகள் அனைத்துக்கும் அடையாளமாக விளங்கி வருகிறது.  அந்த வகையில் பெண்கள் தமது குணங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்கினை வகித்து வருகின்றனர்.

உதாரணமாக நமது சேமிப்புகளில் பெண்களின் தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சேமித்த பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்வது என்பதில் அவர்களின் பங்கு மிகவும் அதிகம். கடந்த இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன்னர் வரை உலகத்தின் தங்க உற்பத்தியில் சுமார் இருபது விழுக்காடு அல்லது அதற்கு மேல் நமது நாட்டினரால் தான் வாங்கப்பட்டது. அவை மிகப் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சராசரியாக வருடம் சுமார் ஆயிரம் டன்கள் அல்லது மேலும் கூட வாங்கப்பட்டு வந்தன. அதனால் நமது நாட்டில் தங்க இருப்பு அதிகமாக உள்ளது. 

சில வருடங்களுக்கு முன்னால் நாட்டில் சுமார் 25000 டன் அளவு தங்கம் இருக்கலாம் எனத் தோரயமாக ஒரு மதிப்புப் போடப்பட்டது. உலக அளவில் மக்கள் அதிக அளவில் தங்கம் வைத்திருப்பது நமது நாட்டில் தான். அதற்குக் காரணம் பெண்கள். தங்கத்தை அவர்கள் வெறும் முதலீடாக மட்டும் பார்க்காமல், ஒரு எதிர்காலத்துக்கான காப்பீடாகவும், பாதுகாப்பாகவும் பார்க்கிறார்கள். அதனால் தங்களின் தங்கக் கையிருப்புகளை அடுத்த தலைமுறைகளுக்கு அப்படியே கொடுத்து விட்டுச் செல்கின்றனர்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய நமது பொருளாதர வளர்ச்ச்சிக்கு இன்னொரு முக்கிய காரணம் கடந்த எழுபது வருடங்களாக ஏற்படுத்தப்பட்டு வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள். அவையே பின்னர் பெரு நிறுவனங்களாக மாறுகின்றன. நமது நாட்டில் சுமார் எட்டரைக் கோடி பேர் ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்தி வருவதாகச் சில வருடங்களுக்கு முன்னால் லண்டன் மேலாண்மை நிறுவன ஆய்வு தெரிவித்தது.  அநேகமாக உலகிலேயே அதிகமான பேர் தொழில் முனைவோராக இருப்பது நமது நாட்டில் தானாக இருக்கும். சிறு தொழில்களில் மட்டும் ஆறு கோடி பேருக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருப்பதாக அரசு விபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தொழில் முனைவோர்களுக்குப் பெரும் ஊக்க சக்தியாக பெண்கள் இருந்து வருகின்றனர். அவர்களின் அன்பு, பாசம், அரவணைப்பு, தியாகம் ஆகிய குணங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தொழிலில் ஈடுபடுத்த பெரிதும் உதவி புரிந்து வருகின்றன. அந்த உதவி பெரும்பாலான  சமயங்களில் பெண்களுக்கே உரிய நற்குணங்கள் மூலமாக ஊக்கம், ஆதரவு என்கின்ற வகைகளிலும், சில சமயங்களில் நிதி உதவியாகவும் அமைகின்றன. அதனால் குழந்தைகளும், கணவன்மார்களும், சகோதரர்களும், பேரன்மார்களும்  தொழில் செய்ய உந்தப்படுகிறார்கள்.

நாட்டின் பல பகுதிகளிலும் தொழில் முனைவோர்களைப் பேட்டி கண்டபோது அவர்களின் வெற்றிக்கான முக்கிய காரணங்கள் என்னவென்று கேட்டோம்.  அப்போது அவர்களின் பதில்களில் அடிப்படையாகத் தெரிந்தது  குடும்பம் மற்றும்  பெண்கள் தான். பெண்கள் தாயாக மற்றும்  மனைவியாக என வெவ்வேறு நிலைகளிலும் குடும்ப உறுப்பினர்களின் தொழில்களுக்கு அச்சாரமாக இருந்து  பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவி வருகின்றனர்.  பாட்டிகளும், திருமணமான சகோதரிகளும் கூட தொழில் முனைவோர்களுக்குப் பெரிய அளவில் ஊக்கமாக இருந்ததை எங்களின் ஆய்வுகளின் போது நேரில் பார்த்தோம்.

தமிழகத்தில் அதிக அளவில் உணவு விடுதிகள் வைத்திருக்கும் தொழில் முனைவோர்களைச் சந்தித்து ஆய்வு செய்த போது, அவர்களில் 25 விழுக்காடு பேருக்கு தங்களின் சகோதரிகள் அவர்களின் திருமணத்துக்குப் பின்னால் கணவன்மார்களின் மூலம் சகோதரர்களின் ஆரம்ப கால முதலீட்டுக்கு நிதி உதவி அளித்தது தெரிய வந்தது. திருப்பூரில் இன்று ஒரு பெரிய தொழிலதிபர், ஆரம்ப காலங்களில் பல முறை தோல்விகளை மட்டுமே சந்தித்து,  அவரது பாட்டியின் அன்பாலும், பாசத்தாலுமே வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டதாகக் கண்ணீர் மல்கக் கூறினார்.

அண்மைக் காலம் வரை பெரும்பாலும் பெண்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் எனக் குறிப்பிட்ட சிலவற்றில் மட்டுமே நேரடியாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு தொழில்களில் நேரடியாகவும் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் புள்ளி விபரப்படி மொத்த சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் பத்து விழுக்காட்டுக்கு மேல் அவர்களே நடத்தி வருகிறார்கள்.  கடந்த 2015 ஆம் பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட முத்ரா கடன் திட்டத்தின் கீழ் இதுவரை பத்து கோடி பேருக்கு மேல் பலன் பெற்றுள்ளனர். அதில் நான்கில் மூன்று பங்கு பேர் பெண்களாக உள்ளனர்.

 மேற்கத்திய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும் போது, நமது பொருளாதாரம் மிகுந்த கவனம் கொண்டதாகவும், சேமிப்பு சார்ந்ததாகவும், ஒருவித  மென்மையானதாகவும் கூட இருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.  அவை பெரும்பாலும் பெண்மைக்கான குணங்கள். அதனால் இந்தியப் பொருளாதாரம் என்பதே பெண்மை சார்ந்தது எனச் சிந்தனையாளர் குருமூர்த்தி  குறிப்பிடுகின்றார். இந்தியப் பொருளாதாரத்தைப் பொருத்த வரையில்  பெண்கள் ஒரு முக்கியமான  பங்கினை வகித்து, அதன் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக இருந்து  வருகின்றனர்.

( ஒரே நாடு புத்தாண்டு சிறப்பு மலர், சென்னை, ஏப். 2018)

__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
நமது நாடு மிகத் தொன்மையானது. எப்பொழுது உருவானது என்று கணிக்கமுடியாத அளவு காலம் கடந்தது. அதனால் தான் பாரதியார்

தொன்று நிகழ்ந்தனைத்து முணர்ந்திடு

சூழ்கலை வாணர்களும் இவள்

என்று பிறந்தவள் என்றுணராத

இயல்பினளாம் எங்கள் தாய்.

என்று பாடினார்.

பழங்காலத்தில் நம் நாடு பாரதம் என்ற பெயருடன் இருந்தது. இந்தியா என்றபெயர் ஆரம்பத்தில் வெளிநாட்டவர்கள் நம்மை குறிக்க உபயோகப்படுத்தியபெயராகும். உலகில் தொன்மையாக நிலவி வந்த கலாச்சாரங்களில் இந்தியா, சீனாவைத் தவிர மற்றவையெல்லாம் ஏற்கனவே அழிந்து போய்விட்டன. இந்தியக் கலாச்சாரம் மட்டும் பல்வேறு சிதைவுகளுக்கும், சிரமங்களுக்கும்இடையிலும் இன்றுவரை தொடர்ந்து தனித்தன்மையுடன் விளங்கி வருவதாகவரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 4500 வருடங்களுக்கு முன்னரே இந்திய நாகரீகம் மேம்பட்ட முறைகளில்செயல்பட்டு வந்ததை சிந்து-சரஸ்வதி ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன. பரவலான விவசாயம், பலவகையான உற்பத்திகள், வெளிநாட்டு வர்த்தகம், கலாச்சார ஒருங்கிணைப்பு, மொஹஞ்சதாரோ, ஹரப்பா, காலிபங்கன், லோதல், தோலவிரா போன்ற பெருநகரங்கள் இருந்த முறை ஆகியவைமக்களின் அப்போதைய மேம்பட்ட வாழ்க்கை முறைகளை உணர்த்துகின்றன.

பண்டைய பொருளாதாரம்:-

பொதுயுகம் தொடங்கியது முதல் கடந்த 2000 வருடங்களுக்கு சற்று மேலாகஉலக நாடுகளின் பொருளாதார நிலைமைகள் எப்படி இருந்து வந்துள்ளனஎன்பது குறித்து பல முக்கியமான விபரங்களை "ஆங்கஸ் மாடிசன்" என்னும்ஐரோப்பிய பொருளாதார வரலாற்று நிபுணர் தொகுத்துக் கொடுத்துள்ளார்.

பொது யுகம் தொடக்க காலத்தில் பொருளாதார நிலையில் உலகில்முன்னணியில் இருந்த நாடு நமது பாரத தேசம் தான் என ஆய்வுகள்கூறுகின்றன. அப்பொழுது உலகின் மொத்தப் பொருளாதார உற்பத்தி 102.5 பில்லியன் டாலராக இருந்தது. அதில் நமது நாட்டின் உற்பத்தி 33.75 பில்லியன்டாலர். நமக்கு அடுத்தபடியாக சீனா 26.82 பில்லயன் டாலருடன் 2&ம் இடத்தில்இருந்தது. அப்பொழுது மொத்த ஐரோப்பாவின் பங்களிப்பு 13 பில்லியன் டாலர்மட்டும் தான்.

அதாவது இந்தியாவின் மொத்த பொருளாதார உற்பத்தி 32.9% ஆகவும் சீனாவின்பங்களிப்பு 26.2% ஆகவும் இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒருபங்கை நமது நாடு கொண்டிருந்தது. ஆசிய நாடுகள் அனைத்துமாக சேர்ந்து76.3% பங்களிப்பை கொண்டிருந்தன.

இந்தியா 2,000 வருடங்களுக்கு முன் உலகப் பொருளாதாரத்தில் 33% பங்களிப்பை கொண்டிருந்தது என்றால் அதற்கு முன் பல ஆண்டுகளாகவளர்ச்சியில் முன்னனியில் இருந்திருக்கும். அந்த உயர்தரமான பொருளாதாரவளர்ச்சிக்கு சாதகமாக நமது சமூக கட்டமைப்பும் உயர்தரமாக இருந்திருக்கும்என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக மூன்று துறைகள்உள்ளதாக நிபுணர்கள் வகுத்துள்ளனர். அவை விவசாயம், தொழில் மற்றும்சேவைத் துறைகள். சேவைத்துறை என்பதில் கடந்த சில ஆண்டுகளில்மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அதை விடுத்து, விவசாயம், தொழில்மற்றும் வியாபாரம் ஆகியவற்றை பற்றி மட்டுமே இங்கு பார்ப்போம். அடுத்துஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான கல்வி, அறிவியல்மற்றும் தொழில் நுட்பம் பற்றியும் சில விபரங்களை பார்க்கலாம்.

விவசாயம்:

பிரெஞ்சு தொல்லியல் நிபுணரான ஜியான்&ஃப்ரான்சுவா ஜாரிஜ் (Jean-Fransois Jarrge) இந்தியாவின் தொன்மையான குடியிருப்புகளில் ஒன்றான மெஹ்ர்கார்(Mehrgarh) பகுதியில் 8,000 வருடங்களுக்கு முன்பே விவசாயப் பொருளாதாரம்செயல்பட்டு வந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். 4,500 வருடங்களுக்கு முன்பேகோதுமை, பார்லி, பட்டாணி, பேரிச்சை போன்ற உணவுப்பொருட்கள்இந்தியாவில் பயிர் செய்யப்பட்டிருந்ததாக விவசாய அறிஞர்கள்கூறுகின்றனர். 5,000 வருடங்களுக்கு முந்தைய ஹரப்பா அழிவுகளிலிருந்துபருத்தித் துணியின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 4,300 வருடங்களுக்கு முன்பே அரிசி விளைவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள்கிடைத்துள்ளன. பொது யுகத்திற்கு முதல் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தகிரேக்க வரலாற்றாசிரியர் டியோடரஸ் சிகுலஸ் (Diodorous Siculus) இந்தியாவின்செழிப்பான மண்வளத்தையும், மண்ணுக்கு உயிர் கொடுக்கும் ஆறுகள்நிறைந்திருந்ததையும் பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கிந்திய கம்பெனியில் அதிகாரியாகப் பணிபுரிந்த மேஜர் ஜெனரல்அலெக்ஸாண்டர் வாக்கர் இந்திய விவசாயத்தை பற்றி 1820-ல் எழுதியுள்ளார். இந்தியர்கள் உபயோகப்படுத்திய கலப்பையை பற்றி கூறும் பொழுது அதுபன்னெடுங்காலமாக பயன்பட்டு வந்துள்ளது எனக் கூறுகிறார். ஆனால்ஐரோப்பாவில் 1662-ல் தான் முதன் முதலாக கலப்பை பயன்படுத்தப்பட்டது.  இங்கிலாந்தில் 1730-ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. 20-ம் நு-ற்றாண்டைசேர்ந்த முக்கிய மேற்கத்திய

விஞ்ஞானிகள் பலரும், இந்திய விவசாயிகள் இயற்கை உரத்தை பயன்படுத்திவிளைச்சல் குறையாமல் 2000 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்துவந்துள்ளனர் என ஆச்சரியப்பட்டு எழுதியுள்ளனர். ஆல்பர்ட் ஹாவர்ட் என்றவிஞ்ஞானி இந்திய விவசாயிகளை பேராசியர்கள் என்று தான் கருதுவதாகவும்அவர்களது செயல்களைக் கவனிப்பதை தவிர தான் ஆய்வு செய்வதற்கு வேறுஒன்றும் இல்லை என குறிப்பிடுகிறார்.

1760-களில்  சென்னையை அடுத்த செங்கல்பட்டு பகுதியில் 2,000 இடங்களில்விவசாயத்தை பற்றிய நிலை சேகரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில்சராசரியாக ஹெக்டேருக்கு 2.5 டன் உணவு தானியம் உற்பத்தி ஆகியுள்ளது. சில இடங்களில் 5 டன் வரை உற்பத்தி ஆகியுள்ளது. அது இன்றையஉற்பத்தியை விட ஐந்து மடங்குக்கு மேல் என கொள்கை படிப்பு மையம்தெரிவிக்கிறது.

தொழில்

கப்பல் கட்டும் தொழிலில் இந்தியா உலகிலேயே முன்னணி நாடாக இருந்ததுஎன்று தொல்லியல் நிபுணர் டி.சி. சோப்ரா குறிப்பிட்டுள்ளார். 2300 வருடங்களுக்கு முன்னால் இருந்த மௌரிய தேசத்தை பற்றிச் சொல்கிறபொழுது தொழில்கள் பல்வேறு முறைகளில் அமைப்பு ரீதியாக செயல்பட்டுவந்ததாக வரலாற்றாசிரியர் ஏ.எல்.பாஷம் குறிப்பிட்டுள்ளார். 2300 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம் பல்வேறு தொழில்துறைகளுக்கும் தலைமைப் பொறுப்புகளை வரையறுத்துள்ளது.

வாணிபம்

பண்டைய இந்தியாவில் விவசாயத்திற்கும் தொழில்துறைக்கும்அடுத்தபடியாக வாணிபம் மிக முக்கிய நடவடிக்கையாக கருதப்பட்டது. கடல்சார்ந்த வாணிபம் எகிப்து, மெசபடோமியா, ரோம் ஆகிய நாடுகளுடன்இருந்தது. பாபிலோன், அசீரியா, சுமேரியா, பாரசீகம் போன்ற பகுதிகளில்அகழ்வாராய்ச்சி செய்து தோண்டி எடுக்கப்பட்ட ஆதாரங்கள் ஐரோப்பியநாடுகளுடன் பொது யுகத்திற்கு முன்பாகவே வாணிபத் தொடர்பு இருந்ததைஉறுதி செய்கின்றன.  கிரேக்க மொழியில் எழுதப்பட்ட 'எர்த்ரியத்திவின்பெரிப்லிஸ்' தலெமியின் “நிலவியல்” ஆகிய இரு நூல்களும் பண்டைய காலவாணிபத் தொடர்பு சம்பந்தமாக பலமுக்கிய தகவல்களை தருகின்றன. சங்ககால தமிழ் இலக்கியங்கள், பண்டைய கால வாணிபம் குறித்த பலசெய்திகளை நமக்கு அளிக்கின்றன. பட்டினப்பாலையில் கடியனூர் உருத்திரங்கண்ணனூர், காவிரிப் பூம்பட்டினம் துறைமுகங்களில் இடைவிடாதுஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் நடைபெற்றதை உவமையுடன்வர்ணித்துள்ளார்கள்.

பிரிட்டிஷ் பிடியில் இந்தியப் பொருளாதாரம்

பிரிட்டிஷ் பேரரசு என்பதே வணிகத்துவ காலத்தில்தான் தோன்றியது. வணிகத்துவ கோட்பாடு என்பது உலகில் உள்ள செல்வத்தை பங்கு போடநாடுகளிடையே போட்டியை வலியுறுத்திய கோட்பாடு ஆகும். 16&ம்நூற்றாண்டு முதல் 19&ம் நூற்றாண்டு வரையான வாணிபக் கொள்கைகள்வணிகத்துவ கோட்பாட்டை ஒட்டியே அமைந்திருந்தன என்று 'மாடிசன்' சுட்டிக்காட்டுகிறார். இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் போட்டி என்பது அண்டைவீட்டுக்காரனை பிச்சைக்காரன் ஆக்கு என்ற கருத்தை ஒட்டியேஅமைந்திருந்தது எனவும் 'மாடிசன் கூறுகிறார். இந்தியாவின் செல்வச்செழிப்பை பல காலமாக அறிந்திருந்த ஐரோப்பியர்கள் இங்கு வருவதற்கு பலகாலமாகவே முயற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். 1498&ல் வாஸ்கோடகாமாஎன்னும் போர்ச்சுகல் மாலுமி கேரளக் கடற்கரையை வந்தடைந்தார். இந்தியாவிற்கு கடல்வழி தெரிந்த பின் வெவ்வேறு நாடுகளிலிருந்துஐரோப்பியர்கள் இங்கு வரத் தொடங்கினர்.

இஸ்லாமிய ஊடுருவல் காலத்தில் கூட இந்தியா பொருளாதார நிலைமையில்ஓரளவு தாக்குப் பிடித்திருந்தது. ஆனால் ஐரோப்பிய வருகைக்கு பின்னர்சூழ்நிலை அடியோடு மாறிவிட்டது. 1600&ம் வருடம் கிழக்கிந்திய கம்பெனிஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு ஏகபோக உரிமையை பெற்று இந்தியப்பொருளாதாரத்தின் அடிப்படையை தகர்த்தது.

பொதுயுகம் ஆரம்பத்திலிருந்து 1,700 வருடம் வரை உலகின் இந்தியப்பொருளாதாரம் 33 சதவிகிதத்திலிருந்து 24 சதவிகிதமாக மட்டுமேகுறைந்திருந்தது.  இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டபின்பும் தாக்குப் பிடித்தது-.

ஆனால் 1700-லிருந்து 1820 க்குள் 24 லிருந்து 16 சதவிகிதமாகவும் 1870-க்குள் 12 சதவிகிதமாகவும் 1905-ல் வெறும் 4.2. சதவிகிதமாகவும் சீரழிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் பிடித்த வேறு எந்த நாட்டையும் விட மிகப் பெரிய தொழில்நாடாகவும் காலனி ஆதிக்க காலங்களுக்கு முன்பு ஏற்றுமதியில் தனித்தன்மைபெற்ற நாடாகவும் இந்தியா விளங்கி வந்தது. ஆனால், அதன் பெரும் பகுதித்தொழில்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டன என்று மாடிசன்கூறுகிறார். அதிகாரத்தை தன் வசப்படுத்திய காலத்திலிருந்தே, இந்தியாவைதனது நாட்டின் உற்பத்தியாளர்களுக்கு மூலப் பொருட்கள் தரும் நாடாகமாற்றுவதே இங்கிலாந்தின் முடிவான கொள்கையாக இருந்தது என்றுசுரேந்திரநாத் பானர்ஜி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

தொழில்கள் அழிந்த பின் விவசாயத் துறை மட்டும் தான் நாட்டுக்கு வருமானம்தரும் முக்கியத் தொழிலாக இருக்கும் நிலை உருவானது. அதனால்விவசாயத்தை நம்பி வாழ்வோர் மக்கள் தொகையில் 80 சதவிகிதம்ஆகிவிட்டனர்.

விவசாயத் துறையில் இடர்பாடுகளை கொடுத்த பிரிட்டிஷ் அரசு, வருவாய்ஈட்டும் நோக்கத்தோடு புகுத்திய முறைகள் உணவுப் பற்றாக் குறையைஏற்படுத்தியது. ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல செங்கல்பட்டு பகுதியில் 2.5 டன் முதல் 5 டன் வரை ஹெக்டேருக்கு கிடைத்த மகசூல் 1798-ல் 0.63 டன்னாககுறைந்தது. இங்கிலாந்தில் நிலவரி 5 முதல் 20 சதவிகிதம் மட்டுமே இருந்தபோது 1793-க்கும் 1822-க்கும் இடையில்  வங்காளத்தில் 90 சதவிகிதம் வடஇந்தியாவில் 80% ஆகவும் நிலவரி இருந்தது.

முகலாய ஆட்சியாளர்கள் தன் நிர்வாகத்தின் இறுதியாக - வங்காளத்தில் 1764-ல் 8,17,833 பவுண்ட் தொகையை நில வருவாயாக ஈட்டினர். அடுத்த 30 வருடங்களுக்குள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 2,680,000 பவுண்ட் தொகையைகொள்ளையடித்தனர். அப்படியென்றால் இந்தியா முழுமைக்கும் எவ்வளவுதொகையை கொள்ளையடித்து அவர்கள் நாட்டிற்கு கொண்டு சென்றிருப்பர்என கற்பனை செய்து பாருங்கள்.

பிரிட்டனின் பொருள்களுக்கு சந்தையாகத் தான் இந்தியாவை ஆட்சிகொண்டோம். கத்தியால் பிடித்த ஆட்சியை கத்தியாலேயே தக்க வைத்துக்கொள்வோம்" என்று பிரிட்டிஷ் அரசின் உள்துறை அமைச்சர் சர் வில்லியம்ஜாய்சன் - ஹிக்ஸ் ஆங்கிலேயே ஆட்சியின் நோக்கத்தை தெளிவுபடுத்தினார். ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற நாடாக இருந்த இந்தியா, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தன்னுடைய பெருமையை இழந்தது.

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய பொருளாதாரம்

பல்லாயிரக்கணக்கான மக்கள் தம் உயிரையும் உடைமைகளையும் இழந்துநீண்ட போராட்டத்திற்கு பின் 1947-ல் சுதந்திரம் கிடைத்தது.  200 வருடங்களுக்குமேல் ஆங்கிலேயர்களின் தொடர்ந்த சுரண்டல்களினாலும் எதிர்மறையானஅணுகுமுறையாலும் தொழில்துறை அழிந்து போயிருந்தது.

1951-ன் புள்ளி விவரப்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் 45 சதவிகிதம் மக்கள்இருந்தனர். 1750-ம் ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் 24.4 சதவிகிதம்பங்களிப்பை கொண்டிருந்த இந்தியா  1950&ம் வருடம் வெறும் 4.2 சதவிகிதம்அளவே பங்களித்தது.

சுதந்திரம் கிடைத்த பின், நாம் எந்தவிதமான பொருளாதார முறையைகடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்த சிந்தனையில் தெளிவுஇருக்கவில்லை. அதனால் இந்திய நாட்டின் வாழ்க்கைக்கும், தன்மைக்கும்ஏற்ற பொருளாதார முறை கடைப்பிடிக்கப்படவில்லை. அன்றையஆட்சியாளர்களுக்கு பொருளாதார முறை என்றவுடனேயே மேற்கத்தியமுறைகள் தாம் அவர்கள் கண் முன்னே தோன்றியது. எனவே அப்பொழுதுவழக்கத்தில் இருந்த முதலாளித்துவ, சோசலிச மற்றும் கம்யூனிஸமுறைகளை மட்டுமே அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டனர். அவற்றில்சோசலிச முறை அவர்களுக்கு சரியான முறையாகத் தோன்றியது. அப்படித்தான் சுதந்திர இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் மேற்குநாடுகளின் சித்தாதந்தங்களை மட்டுமே மையமாக வைத்துதீர்மானிக்கப்பட்டன.

தொழில் துறை 'லைசன்ஸ் ராஜ் - பெர்மிட்ராஜ்' எனக் கூறப்படும் அதிகாரவர்க்கம் சார்ந்து இருந்தது. ஆகவே, தொழில் செய்பவர்கள் அவதிக்குஉள்ளாயினர். காங்கிரஸ் அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைவளர்ச்சியை மந்தப்படுத்தியது. அதையும் மீறி மக்கள் தங்களுக்கு கிடைத்தஅரசியல் சயசார்பை பயன்படுத்தி தங்களால் முடிந்த தொழில்களில் ஈடுபடத்தொடங்கினர்.

அரசு சார்ந்த சோசலிச வழிமுறைகள் இந்தியாவில் போதிய பலனைத்தரவில்லை என்பதும் சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் ஆகியும் மக்களின்அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதும் வெளிப்படையாகதெரிந்தது.

1991-ல் பதவியேற்ற அரசு மேற்கத்திய சந்தை பொருளாதாரத்திற்குமுக்கியத்துவம் கொடுத்தது. ஆகவே சுதந்திரம் பெற்ற பின்பு 2-ம் முறையாகமேற்கத்திய நாடுகளின் மற்றுமொரு பொருளாதாரச் சித்தாந்தங்கள் பரவலாகஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேற்கத்திய பொருளாதாரச்சித்தாங்கள் நம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரண்டுகாலகட்டங்களிலும் அவற்றை முன்னெடுத்து சென்றவர்கள் அரசியல் மற்றும்ஆளும் வர்க்கத்தில் செல்வாக்கு பெற்றவர்களும், மேற்கத்திய மெக்காலேகல்வியை கற்று தேர்ந்தவர்களும்தான்.

சோசலிசக் கொள்கைகளுக்கு மாற்றாக இந்தியா எதிர்பார்த்தது சந்தைபொருளாதார சிந்தாந்தத்தை அல்ல. மாறாக நாட்டின் அடிப்படைத்தன்மைகளை உணர்ந்து ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை எல்லாவகைகளிலும் உயர்த்த வழி செய்யும் சரியான பொருளாதாரஅணுகுமுறையையே மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மக்களுக்குகிடைத்ததோ மேற்கு நாடுகளின் சிந்தனைகளையும், வழிமுறைகளையும்ஒட்டி உருவாக்கப்பட்ட இன்னொரு பொருளாதார முறை.

இவ்வாறாக, கடந்த கால காங்கிரஸ் ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரகொள்கையினால் ஏற்பட்ட சீரழிவை செவ்வனே உணர்ந்த தற்போதையபா.ஜ.க. அரசு, சந்தைப் பொருளாதார சூழலை மாற்றி, உற்பத்தி சந்தையாக்கும்முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டு வருகிறது.

பொருளாதார சீர்திருத்தங்கள் மூலமாகவும் தனி நபர் திறனை வளர்ப்பதற்குபல திட்டங்களை தீட்டியும் உலகின் முன் நம் பண்டைய கால வளர்ச்சிவிகிதத்தை கொண்ட நாடாக்க முயற்சித்து வருகிறது. தற்போதையபொருளாதார வளர்ச்சி இன்னமும் மூன்றாண்டுகளின் உலக நாடுகளின்வளர்ச்சியை கருத்தில் கொள்ளும் போது மிக வேகத்தில் இருக்கும் எனஉலக வங்கி மதிப்பிட்டுள்ளது.                     

எழுத்தாளர் - இரா. ராமலிங்கம்__________________

Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 
46995944_10217714212673302_8766425406761 51hQY3C5k9L._SX336_BO1%252C204%252C203%2 51kk56g76WL._SX322_BO1%252C204%252C203%2 21430544_10214106687327423_2151465992923__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard