Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முகப்பு தேடுதல்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
முகப்பு தேடுதல்
Permalink  
 


 

தமிழர் மதம்
முன்னுரை

1.

2.

3.

4.

5.

 

  நூல்
I. குமரி நிலையியல் 

1.

2.

 

 
 
II. இடைநிலையியல்

1.

2.

 

3.

4.

 

III. நிகழ்நிலையியல்

1.

2.

3.

 

4.

 

 

5.

6.

 

7.

 

 

IV. வருநிலையியல்

1.

2.

3.

4.

5.

 

6.

7.

 

 

V. முடிபுரையியல்

1.

2.

3.

4.

 

5.

6.

7.

 

8.

9.

10.

பின்னிணைப்பு 

1.

 

2.

3.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

தமிழர் மதம்3

    தெய்வம் உண்மையின்மை, தெய்வத்தின் தன்மை, தெய்வத் தால் ஏற்படும் நன்மை, தெய்வத்திற்கும் மாந்தனுக்கும் உள்ள உறவு, மறுமை யுண்மை யின்மை, மறுமையில் இருக்கும் வாழ்வு நிலை ஆகியவற்றைப் பற்றி இன்னவாறிருக்கு மென்று ஒருவர் மதித்துக் கொள்வதே, பொதுவாக மதமென்று சொல்லப்படுவதாகும்.

    தெய்வமும் மறுமையும் புறக்கண்ணாற் காணப்படாத பொருள்களாதலாலும், மக்களின் மனப்பான்மை வெவ்வேறு வகைப்பட்டிருப்பதனாலும், மதமானது, ஒவ்வொருவரும் தத்தம் அறிவிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மதித்துக் கொள்வதாகவே யுள்ளது.

    தெய்வம் உண்டென்று கொள்வது போன்றே, இல்லை யென்று கொள்வதும் மதமாகும். ஆகவே, நம்பு மதம், நம்பா மதம் என மதம் இருவகைப்படும். அவற்றுள் ஒவ்வொன்றும் பல திறப்பட்டுள்ளது. ஆயின், நம்பு மதப் பிரிவுகளே மிகப் பற்பல திறத்தினவாயுள்ளன.

2. சமயம் என்னும் சொல் வரலாறு

    மதம், சமயம் என்னும் இரு சொல்லும் ஒரு பொருளனவாயி னும், தம்முள் நுண்பொருள் வேறுபாடுடையன. ஒரு தெய்வத்தை அல்லது இறைவனை மதித்து வழிபடுவது மதம்; இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது சமயம். ஆகவே, மதத் தினும் சமயத்திற்கு ஒழுக்கமும் நோன்பும் மிக வேண்டுவனவாம்.

    உத்தல் = பொருந்துதல். உத்தி (உ + தி) = பொருத்தம், நூற்குப் பொருந்தும் முறை, விளையாட்டிற் கன்னை (கட்சி) பிரிக்க இருவர் இணைதல்.

    உத்தம் = பொருத்தம். உத்தம் - வ. யுக்த. உத்தி - வ. யுக்தி.

    உ - ஒ. ஒத்தல் = பொருந்துதல், போலுதல்.

    உ - உம். உம்முதல் = பொருந்துதல், கூடுதல்.

    எண்ணும்மை யிடைச்சொல்லானது இதுவே.

    உம் - அம் = பொருந்தும் நீர்.  நீரொடு நீரும் நிலத்தொடு நீரும் ஆகப் பொருந்துதல் இருவகைத்து.

    அம் - அமர். அமர்தல் = பொருந்துதல், அன்பால் உள்ளம் ஒன்றுதல்.

    அம் - அமை. அமைதல் = பொருந்துதல், அடங்கியிருத்தல், கூடுதல், நெருங்குதல், நுகர்ச்சிக் கேற்றதாதல், தக்கதாக வாய்த்தல்

    அமை - அவை = கூட்டம்.

    அமை - அமையம் = பொருந்தும் நேரம், ஏற்ற வேளை, தக்க செவ்வி, வினை நிகழும் சிறுபோது.

    அமை - சமை. சமைதல் = ஆக்கப்படும் அரிசி போலும் பூப்படையும் கன்னி போலும் நுகர்ச்சிக் கேற்றதாதல், பதனடைதல், இனிதாகச் செய்பொருள் வினை முடிதல், அணியமாதல்.

    சமையல் = சோறு குழம்பாக்கும் வினை.

    "சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால் தெரியும்."      (பழமொழி)

    சமை - சமையம் = பதனடைந்த அல்லது நுகர்ச்சிக் கேற்ற நிலை, வினைக்குத் தக்க வேளை.

    சமையம் - சமயம் = ஆதன் (ஆன்மா) தான் இறைவனை அடைதற்கு அல்லது பேரின்பத்தை நுகர்தற்குத் தன்னைத் தகுதிப் படுத்தும் முக்கரணவொழுக்கம்.

    பொருளை வேறுபடுத்தற்கு, சொல்லிடை மகர ஐகான் அகர மாயிற்றென அறிக.

    வடமொழியாளர், சமயம் என்னும் தென்சொல்லை 'ஸமய' என்று திரித்தும், ஸம் + அய என்று பிரித்தும், உடன் வருதல் (to come together) அல்லது ஒன்றுசேர்தல் என்று பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர். அங்ஙனங் காட்டிய பின்பும்,

   "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
    சூழினுந் தான்முந் துறும்"

(குறள். 380)

    என்னுந் திருவள்ளுவர் திருவாய்மொழிக் கேற்ப, அவ் வடசொல் தென் சொற் றிரிபேயாதல் காண்க.
    
    ஸம் = உடன், கூட. அய = செல்கை, வருகை.
    
    'அய' என்னும் சொற்கு, 'அய்' என்பதை அடியாகவும் 'இ' என்பதை வேராகவும் காட்டுவர். இ - அய் - அயன =  செலவு.

    தமிழில், கூடுதலைக் குறிக்கும் அடிச்சொற்களுள் கும் என்பது ஒன்று. கும்முதல் = கூடுதல், குவிதல்.

    கும் - கும்மல். கும் - கும்பு-கும்பல்.

    கும் - குமி - குமியல். குமி -குவி - குவியல்.

    கும்மல் - L. cumulus=heap; cumulare=to heap up, E. cumulate, accumulate.

 கும் - கும்ம (நிகழ்கால வினையெச்சம் - Infinitive Mood) = கூட. கூடுதல் = ஒன்றுசேர்தல், மிகுதல்.

    கூட (to gather) என்னும் (நி.கா.) வினையெச்சம், உடன் (together, with)  என்று பொருள்படும்போது, மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சி யுருபாகவும், முன்னொட்டாகவும் (prefix) ஆளப்படும்.

      எ- டு :தந்தைகூட வந்தான்= தந்தையுடன் வந்தான்.
 கூடப் பிறந்தான்= உடன்பிறந்தான்.

    கூடுதலைக் குறிக்கும் கும் என்னும் வினைச்சொல்,  உ - அ  திரிபு முறைப்படி கம் என்று திரியவுஞ் செய்யும்.

      "கமம் நிறைந் தியலும்"

(தொல்.சொல்.355)

     நிரைதல் = நிரம்புதல், மிகுதல், கூடுதல்.

    Cum என்னும் இலத்தீன அடிச்சொல்லும், முன்னொட்டாகும் போது com  என்று திரிந்து, வருஞ்சொன் முதலெழுத்திற் கேற்ப con, col cor என்று ஈறுமாறும். சில எழுத்துகட்கு முன் co என்று ஈறு கெடவுஞ் செய்யும். இங்ஙனமே ஆங்கிலத்திலும்.

    இங்ஙனம் இலத்தீனத்தில் கும் - கொம் என்றும், ஆங்கிலத்திற் கம் என்றும் திரியும் முன்னொட்டு, கிரேக்கத்தில் ஸு ம்(sum) என்றும் ஸிம் (sym) என்றும், சமற்கிருதத்தில் ஸம் (sam) என்றும் திரியும். கிரேக்க முன்னொட்டும், இலத்தீன முன்னொட்டுப்போற் பின்வரும் எழுத்திற் கேற்ப, சின் (syn), சில் (syl) என்றும் திரியும். சமற் கிருத முன்னொட்டு ஈறுகெட்டு ஸ (sa) என்றும் நிற்கும்.

    இவற்றிற் கெல்லாம், கூட (உடன்) என்பதே பொருள்.

    கூட என்பதற்கு நேரான கும்ம என்னும் தென்சொல்லே, முன்னொட்டாகிக் கும் என்று குறுகியும், கும் - கொம் - கம், கும் - ஸு ம், ஸு ம் - ஸம் என்று திரிந்தும், ஆரிய மொழிகளில் வழங்கும் என அறிக. அதன் முதன்மெய், ஐரோப்பாவின் வடமேற்குப் பகுதியிலும் மேற்குப்பகுதியிலும் இயல்பாகவும், அதன் தென் கிழக்குப் பகுதியிலும் இந்தியாவிலும் ஸகரமாகத் திரிந்தும், வழங்குவதை ஊன்றி நோக்கி வரலாற்றுண்மை தெளிக.

    இனி, இந்திய ஆரியத்தில் (வேதமொழியிலும் சமற்கிருதத் திலும்) செல்லுதலைக் குறிக்கும் 'இ' என்னும் வேரும் 'அய்' என்னும் அடியுமாகிய வினைச்சொற்களும், உய் என்னும் தென்சொல் லினின்று திரிந்தவையே.

 

    ஊ அல்லது உ, இதழ் குவிந்தொலித்து முன்னிடத்தை அல்லது முன்னிற்பதைச் சுட்டும் முன்மைச்சுட்டு

ஊ - ஊன்= நீ (முன்னிலை யொருமைப் பெயர்).
    ஊ - உ - உந்து. உந்துதல்= முன் தள்ளுதல்.
    உ - உய். உய்தல்= முன்செல்லுதல், செல்லுதல்.
    உய்த்தல்= முன்செலுத்துதல், செலுத்துதல்.
    உய் - இய் - இயவு= 1. செலவு.
 
 
     "இடைநெறிக் கிடந்த இயவுக்கொண் மருங்கில்"

(சிலப். 11:168)

  2. வழி.

    இயவு - இயவுள்= எல்லாவுயிர்களையும் வழிநடத்தும் இறைவன்.
    இய் - இயல்= செலவு.
  
    "புள்ளியற் கலிமா"

(தொல். பொருள். 194).

  
    இயலுதல்= செல்லுதல், நடத்தல். 
  
    "அரிவையொடு மென்மெல வியலி"

(ஐங். 175).

    இய - இயங்கு -இயக்கு - இயக்கம். இயங்குதல் = செல்லுதல், நடத்தல், அசைதல்.

    இய் - . அய். இனி, உய் என்பதும் அய் என்று திரிந்திருக்கலாம்.

 

    தமிழ் ஆரியத்திற்கு முந்தியது என்னும் வரலாற்றுண்மையை யும், மேற்காட்டிய சொல் வரலாறுகளையும், நடுநிலையாக நோக்கு வார்க்கு, மதம் சமயம் என்னும் இருசொல்லும் தென்சொல்லே யென்பது, தெற்றெனத் தெரியாமற் போகாது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 3. மதம் தோன்றிய வகை

(1) அச்சம்

    காய்கனி கிழங்கு முதலிய இயற்கை விளைபொருளையும் வேட்டையாடிய விலங்கு பறவை யிறைச்சியையும் உண்டு வாழ்ந்து, அநாகரிக நிலையிலிருந்த முந்தியல் மாந்தர்; தீயும் இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்புபோலும் நச்சுயிரிக்கும், இறந்தோ ராவிகட்கும் அவற்றுள் ஒரு சாரனவான பேய்கட்கும், அஞ்சிய அச்சமே; தெய்வ வணக்கத்தை அல்லது சிறுதெய்வ மதத்தை முதற்கண் தோற்றுவித்தது. அதனால், கொல்லுந் தன்மையுள்ள எல்லாவற்றையும் தெய்வமாகக் கொண்டு, அவை தம்மைக் கொல் லாவாறு இயற்கையும் செயற்கையுமாகிய உணவுப் பொருள்களைப் படைத்தும், இருதிணை யுயிரிகளையும் காவு கொடுத்தும், வந்தனர்.

  நாகரிகம் முதிர்ந்துள்ள இக்காலத்தும், இம்மையிலும் மறுமையிலும் நேரக்கூடிய துன்பங்கட்கு அஞ்சுவதே, பல்வேறு மதவொழுக்கங்கட்கும் பெரும்பாலும் அடிப்படைக் கரணியமா யிருக்கின்றது.

    அச்சத்தினாற் படைப்பதெல்லாம் தீமை விலக்கலைக் குறிக் கோளாகக் கொண்டது.

(2) முற்காப்பு

    மாந்தன் வாழ்க்கை பல்வகைத் துன்பம் நிறைந்ததனால், அவற்றினின்று தப்புவதற்குத் தொன்றுதொட்டுப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டியதாயிற்று. உடமைகளையும் உயிரையும் காப்பதற்கு முன்பு காவற்காரனும் பின்பு அரசனும் ஏற்பட்டனர். ஆயின், மக்களால், தடுக்க முடியாத கொள்ளைநோய், பஞ்சம், கடுங்காற்று, பெருவெள்ளம் முதலிய துன்பங்களைத் தடுத்தற்கும் நீக்கற்கும், மாந்தரினத்திற்கும் மேற்பட்ட சில மறைவான தெய்வங் களே ஆற்றலுள்ளவை யென்றுகருதி, அனைவரும் அவற்றை வணங்கவும் வழிபடவும் தலைப்பட்டனர். அத் துன்பங்கள் அத் தெய்வங்களின் சீற்றத்தால் நேர்வன வென்றும் நம்பி, அவற்றிற்கு அஞ்சினர். ஆதலால், முற்காப்பு அச்சத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

    தீயும் பாம்பும் பேயும் என்று முள்ளன. கொள்ளைநோய், பஞ்சம் முதலியன ஒரோவொரு காலத்து நிகழ்வன.

(3) நன்றியறிவு

    பல்வேறு தீங்குகட்கும் அச்சங்கட்கும் பெரிதும் இடந்தரும் காரிருளைப் போக்கி, உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு  தேடவும் இனத்தாருடன் உறவாடவும், பேரளவாக உதவும் கதிரவனையும் சிற்றளவாக உதவும் திங்களையும்; உண்ணக் காய்கனியும் தங்கத் தண்ணிழலும் குடியிருக்க உறையுளும் உதவும் பல்வகைப் பழுமரங்களையும்; இளமை முதல் முதுமைவரை எல்லார்க்கும் இன்னுயிர்த் தீம்பால் உதவும் ஆவையும், இன்னோ ரன்ன பிறவற்றையும், தெய்வமாகப் போற்றியதும் வணங்கியதும் நன்றியறிவு பற்றியதாகும். அவ்வகை வணக்கத்தைக் குறித்த காலந் தொறும் தொடர்ந்து செய்வது, மேன்மேலும் நன்மை பெறலைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். வணக்க மெல்லாம் படைப்பொடு கூடியதே.

(4) பாராட்டு

 

    இனத்தைக் காக்கப் பகைவருடன் புலிபோற் பொருதுபட்ட, உயிரீகி (பிராணத்தியாகி)யாகிய தறுகண் மறவனுக்கும்; மழை

வருவித்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும், தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரை யெரித்தும், உடன்கட்டை யேறியும், கடுங்கற்பைக் காத்த பத்தினிப் பெண்டிற்கும்; கல் நட்டி விழா வெடுத்தது பாராட்டுப் பற்றியதாகும்.

     "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் 
      பெய்யெனப் பெய்யும் மழை"

(குறள். 55)

    என்னுங் கூற்று, ஒருசில நிகழ்ச்சிகளையேனும் சான்றாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

    பட்டவன் கல்லும் பத்தினிக் கல்லும் இனத்தார் அல்லது பயன் பெற்றவர் நட்டுச் சிறப்புச் செய்வது, நன்றியறிவையும் ஒருமருங்கு தழுவியதே.

    தீயானது, கொல்லுந்தன்மையால், அச்சத்திற்கும், இருள் போக்கியும் உணவுசமைக்க வுதவியும் கொடுவிலங்குகளை வெருட் டியும் குளிரகற்றியும் நன்மை செய்வதால் நன்றியறிவிற்கும் உரிய தாயிற்று.

(5) அன்பு

    இருதிணைப் பகையையும் அழித்தும், உணவிற்கு வழிவகுத் தும், நடுநிலையாக ஆட்சி செய்தும், குடிகளை அரவணைத்துக் காத்த அரசன் இறந்தபின், அவனுக்குப் படிமையமைத்துப் படைத்து வணங்கியது அன்புபற்றியதாகும். இதினின்றே, விண் ணுலக வேந்தன் (இந்திரன்) வணக்கம் தோன்றிற்று.

(6) கருதுகோள்

    முதற்காலத்திற் குறிஞ்சிநிலத்திலேயே வாழ்ந்த மாந்தர், பின்னர் ஏனை நிலங்களிலும் பரவியபின், அவ்வந் நிலத்திற்கேற்ப ஒவ்வொரு தெய்வந் தோன்றிற்று. அதன்பின், ஒவ்வொரு பெரு நிலத்திற்கும் பேராற்றிற்கும் பெருந்தொழிலுக்கும் பெருநன்மைப் பேற்றிற்கும், காதற்பண்பிற்கும், சாதல் தீங்கிற்கும் ஒவ்வொரு தெய்வம் இருப்பதாகக் கருதப்பட்டது.

    கண்ணாற் காணும் இயற்கைக் கூறுகளும் நிகழ்ச்சிகளும் தோற்றங்களும் ஆவிகளும் வினைகளுமன்றி, மனத்தாலேயே படைத்துக் கொள்ளும் தெய்வங்களெல்லாம் கருதுகோளின் விளைவேயாகும்.

 

    நீரூட்டியும் நீராடுவித்தும் உணவு விளைத்தும் பல்வகை யுதவும் ஆற்றை நன்றியறிவுபற்றி வணங்குவது வேறு;

(7) அறிவு வளர்ச்சி

    மாந்தன் நாகரிகமடைந்து அறிவுவளர்ந்து பண்பாடுற்றபின், மறுமையும் கடவுளுண்மையுங் கண்டு, பல்வேறு மதங்களையும் சமயங்களையும் வகுத்தது   அறிவு வளர்ச்சியாகும்.

    மக்கள் மனப்பாங்கும் அறிவுநிலையும் பல்வேறு வகைப்பட் டிருப்பதால், மத சமயங்களும் பல்வேறாயின.

    அறிவுவளர்ச்சி யென்னும் பெயருக்கு முரணாக, பல்வேறு மூடப்பழக்கங்களும் கொள்கைகளும் மதங்களிற் கலந்திருப்பதுண் மையே. அவை பெரும்பாலும் பழங்காலத் தன்மையாலும் தன்னலக் காரரின்  சூழ்ச்சியாலும் ஏற்பட்டவை. இக்கால அறிவு நிலைக் கேற்ப, அவற்றை இயன்றவரை நீக்கிக் கொள்ளல் வேண்டும்.

    மதமும் சமயமும் பெரும்பாலும் நம்பிக்கையைப் பொறுத்தன.

4. மூவகை மதம்

    மக்களின் அறிவுநிலைக் கேற்ப, மதம், (1) சிறுதெய்வ வணக்கம் (2) பெருந்தேவ மதம், (3) கடவுள் சமயம் என மூவகைப்படும்.

    இம்மை நலத்தை மட்டும் நோக்கி, இன்பக்காலத்திலும் துன்பக் காலத்திலும். ஐம்பூதமும் ஆவிகளும் போன்ற சிறுதெய்வங் கட்கு உணவு படைத்துக் காவு கொடுப்பது, சிறுதெய்வ வணக்கம்; சிவன் அல்லது திருமால் என்னும் பெயரால் இறைவனை நாள் தோறும் வழிபட்டு, உயிர்க்கொலை நீக்கிக் காய்கனிமட்டும் படைத்து, அவ்வவ் மத அடையாளந் தாங்கி, இருதிணை யுயிருக்கும் தீங்கு செய்யாது இயன்றவரை நன்மையே செய்தொழுகுவது, பெருந்தேவ மதம்; எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உருவ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படைத்து, முக்கரணமுந் தூய்மையாகி, இல்லறத்தி லேனும் துறவறத்திலேனும் நின்று, இயன்றவரை எல்லாவுயிர் கட்கும் நன்மையே செய்து, இம்மையிலேனும் மறுமையிலேனும் வீடுபெற வொழுகுவது, கடவுள் சமயமாம்.

    சிறுதெய்வ வணக்கத்திற்கு உருவம் இன்றியமையாதது; பெருந்தேவ வழிபாட்டிற்கு, அது வழிபடுவாரின் அகக்கரண வளர்ச்சிக் கேற்றவாறு, இருந்தும் இல்லாமலும் இருக்கலாம்.

5. குமரிநாட்டு மதநிலை

 

    மேற்கூறிய மூவகை மதநிலையும், கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்பே குமரிநாட்டுத் தமிழ்மக்கள் கொண்டிருந்தனர். ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலம் தோரா. கி.மு. 1500. அவர் மதம் கொலைவேள்விச் சிறுதெய்வ வணக்கம். தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே, சிவ மதத்தையும் திருமால் மதத்தையும் தழு வினர். ஆதலால், அவரின் வேதாகம இதிகாச புராணக் கதைகளை யும் புரட்டுகளையும் நம்பி, அவையே சிவநெறிக்கும் திருமால் நெறிக்கும் அவற்றின் கொண்முடிபுகட்கும்(சித்தாந்தங்கட்கும்) மூலமெனக் கூறுவது, இவ் விருபதாம் நூற்றாண்டிற்கு  எட்டுணை யும் ஏற்காது. இதன் விளக்கத்தை இந் நூல் நெடுகலுங் கண்டு தெளிக.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard