Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் சிவன்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
சங்க இலக்கியத்தில் சிவன்
Permalink  
 


சங்க இலக்கியத்தில் சிவன்

01.jpg  93.jpg 94.jpg 95.jpg 

 -- Edited by admin on Wednesday 4th of September 2019 02:18:42 PM

__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

96.jpg 97.jpg 98.jpg 99.jpg__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

100.jpg 100.jpg

102.jpg 103.jpg__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Ks%2B66.jpg 104.jpg 

105.jpg 106.jpg 107.jpg__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு

Tamil Sangam Literature (BC) hailing Lord Shivan


எட்டுத்தொகை

மாநிலம் சேவடி யாகத் தூநீர்

வளைநரல் பௌவம் உடுக்கை யாக

விசும்புமெய் யாகத் திசைகை யாக

படர்கதிர் மதியமொடு சுடர்கண் ணக

இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய

வேத முதல்வன் என்ப

தீதற விளங்கிய திகிரி யோனே                  நற்றிணை க வா

 

5. நீலமேனி வாலிழை பாகத்து 

ஒருவன் இருதாள் நிழற்கீழ்

மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.                ஐங் க.வா. 1

 

எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க்

கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார்

எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள்

காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப்

புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து

வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல்

சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா

ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும்

இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி

மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய

சூலம் பிடித்த சுடர்ப் படைக்

காலக் கடவுட்கு உயர்கமா, வலனே!             பதிற்றுப்பத்து க வா

 

ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ

   வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து

   நாக நாணா மலைவில் லாக

25 மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய

   மாதிரம் அழலவெய் தமரர் வேள்விப்

   பாக முண்ட பைங்கண் பார்ப்பான்

   உமையொடு புணர்ந்த காம வதுவையுள்

   அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி

30 இமையா நாட்டத் தொருவரங் கொண்டு

   விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன்

   விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்த

   தரிதென மாற்றான் வாய்மைய னாதலின்

   எரிகனன் றானாக் குடாரிகொண் டவனுருவு

35 திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக்

   கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசேய் யாக்கை

   நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து

   வசித்ததைக் கண்ட மாக மாதவர்

   மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற்

40 சாலார் தானே தரிக்கென அவரவி

   யுடன்பெய் தோரே யழல்வேட் டவ்வழித்

   தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில்

   வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்

   கடவுள் ஒருமீன் சாலினி யொழிய

45 அறுவர் மற்றையோரு மந்நிலை அயின்றனர்

   மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்

   நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே

   நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப்

   பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்

50 பெரும் பெயர் முருக !                              பரி 5; 21-50

 

(பொருள்:  ஆதி அந்தணனாகிய பிரமன் அறிந்து தேர்க்குதிரைகளை ஓட்ட,

வேதமானவை குதிரைகளாகவும், வையகமே தேராகவும்,

வாசுகி நாகம் நாணாகவும், மேரு மலை வில்லாகவும்,

பொன்-வெள்ளி-இரும்பு ஆகிய மூவகைப் புரங்களை

ஒரு தீக்கணையாலே வேகும்படியும், அத்திசையே தீயாக எய்தவனும்;

அமரர் மூலமாக (அவர்களை அதிஷ்டித்து) வேத யாகங்களின்

அவியுணவை எற்பவனும் ஆகிய இளமை பொருந்திய கண்களையுடைய

பார்ப்பானாகிய சிவபெருமான், உமையம்மையைத் திருக்கரம் பற்றிய

அழகு (காமர் - அழகு) பொருந்திய திருமணத்தில், விண்ணோர்களிலெல்லாம்

வேள்வி முதல்வனாக இருக்கின்ற விரிகதிர் போன்ற மணிகளைப் பூண்ட

இந்திரனுக்குத் நெற்றியில் இமையாத கண்ணுடைய தான் அளித்த வரமாகிய,

"தனக்குக் காமப் புணர்ச்சி இல்லையாயினும் ஒரு விலக்கமாக

(புத்திரனைப் பெற்று) அமைய வேண்டும்" என்பது தான் உண்மைப் பொருளாக

விளங்குவதால் "செய்வதற்கில்லை" என்று கூறி ஒதுக்காது,

அழிவில்லாத மழுவுடைய அவன், எரி போலக் கனன்று உருவினைக் கொண்டான்

ஏழு உலகங்களும் அச்சமுறுமாறு. அந்த நெருப்புருவத்தின் கருவினைப்

பெற்றுக்கொண்ட உடல் பழுத்துத் தவம் பெருக்கி மெலிந்த சப்தரிஷிகளும்

அதன் பெருமை உணர்ந்து அதனைப் பிரித்தெடுத்துத் தாம் வசீகரணம்

செய்துகொண்டு மாதவர்களாகிய அவர்கள் தம் மனைவியர் வயிற்றில்

அமையச் செய்தால் அது தகாதென (அதாவது சிவபெருமான் திருவருட்

பிரசாதத்தைத் தாம் உண்டு அதனை அற்பமான புணர்ச்சி மூலம் தம் மனைவியர்

வயிற்றில் அமைத்தல் பெருமானுடைய திருவருளாகிய அக்கருவின் பெருமைக்குத்

தாகாது என), அவர்களே பெற்றுக் கொள்ளட்டும் என்று வேள்வித்தீ வளர்த்து

அந்த முத்தீயில் அவியுடன் இட்டனர். அவ்வாறு அவ்வேள்வித் தீயில் திகழ்ந்ததான

பிரசாதத்தை வடதிசையில் திகழும் விண்மீன்களான ஏழு மகளிருள்

அருந்ததி தவிர மற்ற அறுவரும் உண்டனர். மாசு மறு ஏதும் இல்லாத

கற்புடைய மாதவர் மனைவியராகிய அவர்கள் தவறாமல் உன்னைக் (முருகப்பெருமானை)

கருக்கொண்டனர்

 

குறிப்பு: இப்பாடல் முருகப் பெருமானின் திருவவதாரத்தைக் குறிப்பது.

சிவபெருமான் உண்மை பொருளாவதும், எல்லோரும் புணர்ச்சியின் மூலமே

மகவு பெறும்பொழுது அரிதினும் அரிய பரமசிவம், மற்ற உயிகள் போலன்றி

அரிய செயலாகப் புணர்ச்சி இன்றியே முருகப் பெருமானைப் பெற்றனர்

என்பதும் இப்பரி பாடல் கூறும் சிவபெருமான் திறம் ஆகும்.)

 

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் 

பூவொடு புரையும் சீரூர் பூவின்

இதழகத் தனைய தெருவம் இதழகத்

தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்             பரி 7, 1-4

 

 புங்கவம் ஊர்வோனும்                         பரி 8,2

ஆதிரை முதல்வனின் கிளந்த    நாதர் பன்னொருவரும்   பரி 8, 6

 மறு மிடற்று அண்ணல்                        பரி 8, 127

 

 இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி

அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்

உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட

எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி

விரிசடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப

தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி

மணி மிடற்று அண்ணற்கு                              பரி 9, 1-7

 

 

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,

        தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,

        கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி

        மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி:

5       படு பறை பல இயம்ப, பல் உருவம் பெயர்த்து நீ,

        கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,

        கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?

        மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,

        பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,

10      வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ?

        கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத் தார் சுவல் புரள,

        தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,

        முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?

        என ஆங்கு

15      பாணியும், தூக்கும், சீரும், என்று இவை

        மாண் இழை அரிவை காப்ப,

        ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி          கலி க வா

 

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,

        அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,

        மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்

        கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்

5       உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்,

        சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்

        ஏறு பெற்று உதிர்வன போல்                            கலி 2, 1-7

 

ஆன் ஏற்றுக் கொடியோன்                              கலி 26, 5

 இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக

ஐ இரு தலையின் அரக்கர் கோமான்

தொடிப் பொலி தடக்கையின் கீழ்ப்புகுத்து அம்மலை

எடுக்கை செல்லாது உழப்பவன் போல                   கலி 38; 1-5

 

சீறு அருமுன்பினோன் கணிச்சிபோல் கோடு சீஇ          கலி 101, 8

படரணி யந்திப் பசுங்கட் கடவுள்

இடரிய வேற்றெருமை நெஞ்சிடந் திட்டுக்

குடர்கூளிக் கார்த்துவான்                                கலி 101, 21 - 26

கொலைவன் சூடிய குழவித் திங்கள்                     கலி 103, 15

எரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறை                    கலி 103, 25

மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்

        முக்கண்ணான் உருவே போல்                   கலி 104, 11-12

பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல கலி 105, 13

 

கோடுவாய் கூடாப்பிறையை பிறிது ஒன்று

நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே

ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய

காணான் திரிதரும் கொல்லோ - மணிமிடற்று

மாண்மலர்க் கொன்றையான்                            கலி 142, 24-28

 

அயம் திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான்

        இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ்வாயும்,

        கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ

        மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல்

5       மயங்கு அதர் மறுகலின், மலை தலைக் கொண்டென,

        விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு அரு, வெஞ் சுரம்

        இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்,

        அறம் துறந்து ஆயிழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்

        பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம்

10      பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ?

        கரி காய்ந்த கவலைத்தாய், கல் காய்ந்த காட்டகம்,

        'வெரு வந்த ஆறு' என்னார், விழுப் பொருட்கு அகன்றவர்,

        உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின்

        உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ?

15      கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக் கொண்ட கோடையால்,

        'ஒதுக்கு அரிய நெறி' என்னார், ஒண் பொருட்கு அகன்றவர்,

        புதுத் திங்கட் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின்

        கதுப்பு உலறும் கவினையாய், காண்டலும் காண்பவோ?

        ஆங்கு

20      அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த

        பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்

        பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்

        மை ஈர் ஓதி மட மொழியோயே!        கலி 150 __________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்

தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;

மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;

நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,

கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்

வேலும் உண்டு, அத் தோலாதோற்கே;

ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே

செவ் வான் அன்ன மேனி, அவ் வான்

இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,

எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,

முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,

மூவா அமரரும் முனிவரும் பிறரும்

யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,

வரி கிளர் வயமான் உரிவை தைஇய,

யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்

தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.            அகம் க வா

 

.... மதி நிறைந்து

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவு                                        அகம் 141, 5-11

(கார்த்திகை விளக்கீடு -  திருநாளைக் குறிப்பது)

 

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்

வண்ன மார்பின் தாருங் கொன்றை;

ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த 

சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;

கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;

பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை

பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,

நீரறவு அறியாக் கரகத்துத்

தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.              புறம் க.வா.

 

பணியிய ரத்தைநின் குடையே முனிவர்

முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே                    புறம் 6. 17-18

 

ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ

ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்

பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த

கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்

பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல                  புறம் 55,5

 

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை மாற்று

அருங் கணிச்சி மணி மிடற்றோனும்                     புறம் 56, 1-2

 

12. பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி

நீலமணி மிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயே                                  புறம் 91, 5-7

 

நன்றாய்ந்த நீணிமிர்சடை

முதுமுதல்வன் வாய்போகா

தொன்றுபுரிந்த வீரிரண்டின்

ஆறுணர்ந்த வொருமுதுநூல்

இகல்கண்டோர் மிகல்சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளீஇ

மூவேழ் துறையு முட்டின்று போகிய

உரைசால் சிறப்பி னுரவோர் மருக                              புறம் 166, 1-9

 

 பத்துப்பாட்டு

 

வெள் ஏறு     

வலம்வயின் உயரிய, பலர் புகழ் திணி தோள்,  

உமை அமர்ந்து விளங்கும், இமையா முக் கண்,

மூஎயில் முருக்கிய, முரண் மிகு செல்வனும்            திருமுருகு 151-154

 

திருமுருகாற்றுப்படை முழுமையும்

 

நீல நாகம் நல்கிய கலிங்கம் 

ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த

சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்

ஆர்வ நன்மொழி ஆயும்                        சிறுபா 96 - 99

 

 

நீரும் நிலனும் தீயும் வளியும்  

மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய

மழு வாள் நெடியோன் தலைவன் ஆக,   455

மாசு அற விளங்கிய யாக்கையர், சூழ் சுடர்      

வாடாப் பூவின், இமையா நாட்டத்து,   

நாற்ற உணவின், உரு கெழு பெரியோர்க்கு,     

மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்,      

அந்தி விழவில் தூரியம் கறங்க                         மதுரைக் 453-460

 

2. தென்னவற் பெயரிய துன்னரும் துப்பின்

தொன்முது கடவுள்                                    மதுரைக்

 

 

20. நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்

பேரிசை நவிர மேஎ யுறையும்

காரியுண்டிக் கடவுள தியற்கையும்                       மலை

 

 பதினெண் கீழ்க்கணக்கு

 

 

முக்கட் பகவன் அடி தொழாதார்க்கின்னா

பொற்பனை வெள்ளையை உள்ளாதொழுகின்னா

சக்கரத்தானை மறப்பின்னா வாங்கின்னா

சத்தியான் தாள் தொழாதார்க்கு                  இன்னா நாற்பது க.வா.

 

கண் மூன்றுடையான் தால் சேர்தல் கடிதினிதே    இனியவை நாற்பது க.வா.

 

முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்

பழுதின்றி ஆற்றப் பணிந்து முழுதேத்தி           சிறுபஞ்சமூலம் க.வா.

 

அறுநால்வ ராய்ப்புகழ்ச் சேவடி யாற்றப்

பெறுநால்வர் பேணி வணங்கிப் - பெறுநால்

மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்கு

இறைபுரிந்து வாழுதல் இயல்பு.                  ஏலாதி க.வா.

 

வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்

வாலிழை பாகத் தமரிய கொழுவேல்

கூற்றங் கதழ்ந் தெறி கொன்றையன்

கூட்டா உலகங் கெழீஇய மெலிந்தே.             கைன்னிலை க.வா.

 

 பிற நூல்கள்

 

 

மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை

முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும்

ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால்

ஊர்திரைநீர் வேலி உலகு                       முத்தொள் க.வா.

 

செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்றியபூ

பைங்கண்வெள் ளேற்றான் பால் கண்டற்றால் - எங்கும்

முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்

அடிமிசையே காணப் படும்                              முத்தொள் 91

 

 

அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்

கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில்

வெள்ளியம்பலத்து                                     சிலம்பு - பதிகம், 39-41

 

குழவித் திங்கள் இமையோர் ஏத்த

அழகொடு முடித்த அருமைத்தாயினும்                   சிலம்பு 2 38 - 39

 

பெரியோன் தருக திருநுதல் ஆக என                    சிலம்பு 2 41

 

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்                 சிலம்பு 5:69

 

திரிபுரமெரியத் தேவர் வேண்ட  

எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப

உமையவ ளொருதிற னாக வோங்கிய

இமையவ னாடிய கொடுகொட்டி யாடலும்                சிலம்பு 6 40 - 43

 

தேர்முன் நின்ற திசைமுகன் காணப்

பாரதி யாடிய வியன் பாண் டரங்கமும்                   சிலம்பு 6 44 - 45

 

பிறைமுடிக்கண்ணிப் பெரியோன் ஏந்திய                 சிலம்பு 11 72

 

அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்

வருமுறை எழுத்தின் மந்திரமிரண்டும்                   சிலம்பு 11 128 - 129

 

கண்ணுதல் பாகம்                                      சிலம்பு 12 2

 

ஆனைத்தோல் போர்த்து                        சிலம்பு 12 8

 

புலியின் உரி உடுத்து                           சிலம்பு 12 8

 

கண்ணுதலோன்                                சிலம்பு 12 10

 

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து               சிலம்பு 12 55

 

நஞ்சுண்டு கறுத்த கண்டி                        சிலம்பு 12 57

 

நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்             சிலம்பு

 

செஞ்சடை வானவன் அருளினில் விளங்கி

வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்                     சிலம்பு

 

தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள்

வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்                 சிலம்பு

 

இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்

சிமையச் சென்னித் தெய்வம் பரசி                       சிலம்பு

 

சென்னியன் இளம்பிறை சூடிய இறையவன்              சிலம்பு 22 86 - 87

 

ஆலமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோய்           சிலம்பு 23 91

 

ஆலமர் செல்வன் மகன்                        சிலம்பு 24 15

 

நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி

உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி

மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து

இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு

மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை

நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்

கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன்                  சிலம்பு 26 54 - 60

 

குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கென

ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்

சேடங் கொண்டு சிலர் நின்று ஏத்தத்

தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் க்டவுள்

வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்

ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்

தாங்கினன் ஆகித் தகைமையில் செல்வுழி        சிலம்பு 26 

 

சடையினர் விடையினர் சாம்பற் பூச்சினர்        சிலம்பு கால்கோட் காதை

 

விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்

உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்            சிலம்பு - வேட்டுவவரி

 

திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்

பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ்

செங்கணாயிரந் திருக்குறிப்பருளவுஞ்

செஞ்சடை சென்று திசைமுகமலம்பவும்

பாடகம் பதையாது சூடகந் துளங்காது

மேகலை யொலியாது மென்முலை யசையாது

வார்குழை யாடாது மணிக்குழ லவிழா

துமையவ ளொருதிற நாக வோங்கிய

விமைய னாடிய கொட்டிச் சேதம்                சிலம்பு 28 67 - 75

 

இமையச் சிமையத் திருங்குயிலாலுவத்து 

உமையொரு பாகத்து ஒருவனை                 சிலம்பு 28 102-103

 

See Also:
1. thirukkuRaL kaDavuL vAzhththu
2. Shaivam a Perspective
3. Hinduism A Perspective 
4. திருக்குறள் போற்றும் சிவபிரான் 
5. ஔவையார் போற்றும் சிவபிரான் __________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard