Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்கப்பாடல்களில் இறைவனும் தெய்வங்களும்:


Guru

Status: Offline
Posts: 7329
Date:
சங்கப்பாடல்களில் இறைவனும் தெய்வங்களும்:
Permalink  
 


சங்கப்பாடல்களில் இறைவனும் தெய்வங்களும்:

புறநானூறு

பாடல் எண். 55

ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,

ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,

பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த

கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்

5

பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல,

வேந்து மேம்பட்ட பூந் தார் மாற!

கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும்,

நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என

நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட

10

அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்;

அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது,

'பிறர்' எனக் குணம் கொல்லாது,

ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,

திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,

15

வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,

உடையை ஆகி, இல்லோர் கையற,

நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்

வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்

நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,

20

கடு வளி தொகுப்ப ஈண்டிய

வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!

திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.

                                        பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.

(பி - ம்.) 1 ‘நாண்’ 7 ‘பரிமா’ 8 ‘எனும்’ 13 ‘வெந்தெற’ 16 ‘உடையாயாதலினில்லோர்’, ‘உடையையாதலினி’ 17 ‘நீடுவையொழிய’

திணை - பாடாண்டிணை; துறை - செவியறிவுறூஉ.

பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிளநாகனார் பாடியது.

உயர்ந்தமலையாகிய பெரியவில்லைப் பாம்பாகிய நாணைக் கொளுத்தி ஒப்பில்லாததோர் அம்பைவாங்கி மூன்றுமதிலையும் எய்து பெரிய வலியையுடைய தேவர்கட்கு வெற்றியைக்கொடுத்த கரியநிறஞ் சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவனது அழகிய திருமுடிப்பக்கத்து அணிந்த பிறைசேர்ந்த திருநெற்றிக்கண்ணே விளங்கும் ஒரு திரு நயனம்போல மூவேந்தருள்ளும் மேம்பட்ட பூந்தாரையுடைய மாற! கடிய சினத்தை யுடையவாகிய கொல்களிறும் விரைந்த செலவையுடையவாகிய மனஞ்செருக்கிய குதிரையும் நெடிய கொடியையுடையவாகிய உயர்ந்த தேரும் நெஞ்சுவலியையுடைய போரைவிரும்பும் மறவருமென நான்கு படையுங்கூட மாட்சிமைப்பட்டதாயினும் மாட்சிமைப்பட்ட அறநெறியை முதலாக வுடைத்து வேந்தரது வெற்றி; அதனால், அவர் நம்முடையரென அவர் செய்த கொடுந் தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது, இவர் நமக்கு அயலாரென்று அவர் நற்குணங்களைக் கெடாது,ஞாயிற்றைப் போன்ற வெய்யதிறலையுடைய வீரமும், திங்களைப் போன்ற குளிர்ந்த பெரிய மென்மையும், மழையைப் போன்ற வண்மையுமென்ற மூன்றையுமுடையையாகி இல்லாதோர் இல்லையாக நீ நெடுங்காலம் வாழ்வாயாக, நெடுந்தகாய்! தாழ்ந்த நீரையுடைய கடலின்கண் வெளிய தலையையுடைய திரை அலைக்கும் செந்திலிடத்து நெடிய முருகவேள் நிலைபெற்ற அழகிய அகன்ற துறைக்கண் பெருங் காற்றுத்திரட்டுதலால் குவிந்த வடு அழுந்திய எக்கர் மணலினும் பலகாலம் - எ - று.

‘குணம்கொல்லாது’ என்பதற்கு முறைமையழிய நீ வேண்டியவாறு செய்யாதெனினுமாம்.

பூந்தார்மாற! நெடுந்தகாய்! நான்குடன்மாண்டதாயினும், அரசின் கொற்றம் அறநெறிமுதற்று;அதனால் கோல்கோடாது, குணங்கொல்லாது, ஆண்மையும் சாயலும் வண்மையும் உடையையாகி இல்லோர் கையற நீ மணலினும் பலகாலம் நீடுவாழியவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

 

 

யமன், சிவன், திருமால், முருகன், பலதேவன்

56

        ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை

மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்

கடல்வளர் புரிவளை புரையு மேனி

அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்

5       மண்ணுறு திருமணி புரையு மேனி

விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்

மணிமயி லுயரிய மாறா வென்றிப்

பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென

ஞாலங் காக்குங் கால முன்பிற்

10      றோலா நல்லிசை நால்வ ருள்ளும்

கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்

வலியொத் தீயே வாலி யோனைப்

புகழொத் தீயே முன்னியது முடித்தலின்

15      ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும்

அரியவு முளவோ நினக்கே யதனால்

இரவலர்க் கருங்கல மருகா தீயா

யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல்

பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்

20      ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்

தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற

அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும்

வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத்

தண்கதிர் மதியம் போலவும்

25      நின்று நிலைஇய ருலகமோ டுடனே.

 

 (பி - ம்.) 5 ‘மண்ணிய’

திணை - அது; துறை - பூவைநிலை.

அவனை மதுரைக்கணக்காயனார்மகனார் நக்கீரனார் (பி - ம். அவர்) பாடியது.

(இ - ள்.) ஆனேற்றை வெற்றியாக உயர்த்த அழல்போலும் விளங்கிய சடையினையும் விலக்குதற்கரிய மழுப்படையையுமுடைய நீலமணி போலுந் திருமிடற்றையுடையோனும்,கடற்கண்ணே வளரும் புரிந்த சங்கையொக்கும் திருநிறத்தையுடைய கொலையைவிரும்பும் கலப்பையையும் பனைக்கொடி யையுமுடையோனும், கழுவப்பட்ட அழகிய நீலமணி போலும் திருமேனி யையும் வானுற ஓங்கிய கருடக்கொடியையுமுடைய வென்றியை விரும்பு வோனும்,நீலமணிபோலும் நிறத்தையுடைய 1மயிற்கொடியை எடுத்த மாறாத வெற்றியையுடைய2அம்மயிலாகிய ஊர்தியையுடைய ஒள்ளிய செய்யோனுமென்று சொல்லப்பட்ட உலகங்காக்கும் முடிவுகாலத்தைச் செய்யும் வலியினையும் தோல்வியில்லாத நல்ல புகழினையுமுடைய நால்வருள்ளும், விலக்குதற்கரிய வெகுட்சியாற் கூற்றத்தை ஒப்பை;வலியால் வாலியோனை ஒப்பை; புகழாற் பகைவரைக் கொல்லும் மாயோனை ஒப்பை; கருதியது

முடித்தலான் முருகனை ஒப்பை; அப்படி அப்படி அவரை அவரை ஒத்தலான் எவ்விடத்தும் அரியனவுமுளவோ நினக்கு? ஆதலால், இரப்போர்க்குப் பெறுதற்கரிய அணிகலங்களைப் பெரிதும் வழங்கி, யவனர் நல்ல குப்பியிற் கொடுவரப்பட்ட குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய தேறலைப் பொன்னாற் செய்யப்பட்ட புனைந்த கலத்தின் கண்ணே ஏந்தி நாடோறும் ஒள்ளிய வளையையுடைய மகளிர் ஊட்ட மகிழ்ச்சி மிக்கு இனிதாக நடப்பாயாக; வென்றியானுயர்ந்த வாளையுடைய மாற! அழகிய இடத்தையுடைய வானத்தின்கண்ணே நிறைந்த இருளைப்போக்கும் வெய்ய கதிரையுடைய ஞாயிற்றையொப்பவும் மேலைத்திக்கிற்றோன்றும் குளிர்ந்த கதிரையுடைய பிறையைப்போலவும் இவ்வுலகத்தோடுகூட நின்று நிலை பெறுவாயாக-எ-று.

3பிணிமுகம்-பிள்ளையாரேறும் யானையென்றும் சொல்லுப.

காலமுன்பென்றது, தம்மை யெதிர்ந்தோர்க்குத் தாம் நினைந்தபொழுதே முடிவுகாலத்தைச் செய்யும் வலியை (புறநா. 41 : 1-3)

4மணிமிடற்றோனைக் கூற்றமென்றது, அழித்தற்றொழிலையுடைமையான்.

வாலியோனென்றது, நம்பிமூத்தபிரானை (பலதேவரை, ; கலித். 26 : 1, ந.)

இகழுநரடுநனென்றது மாயோனை.

ஆரிருளகற்றும் வெங்கதிர்ச்செல்வனென்றது எழுகின்றஞாயிற்றை.

5மதி-இளம்பிறை.

இது, தேவரோடு உவமித்தமையாற் பூவைநிலைஆயிற்று.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சிவன் பற்றிய குறிப்பு

91

        வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார்

களம்படக் கடந்த கழறொடித் தடக்கை

ஆர்கலி நறவி னதியர் கோமான்

போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி

5       பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி

நீல மணிமிடற் றொருவன் போல

மன்னுக பெரும நீயே தொன்னிலைப்

பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா

10      தாத னின்னகத் தடக்கிச்

சாத னீங்க வெமக்கீத் தனையே.

 

(பி - ம்.) 1 ‘வளம்’ 3 ‘முழவினதிகர்கோமான்’, ‘நறவினுதியர் கோமான்’ 9 - 10‘தீங்கனிகுறையாதுகாதனின்’ 11 ‘வெனக்கீத்தோயே’ ‘வெமக்கீத்தோயே

திணை - பாடாண்டிணைதுறை -வாழ்த்தியல்.

அவனை அவர் நெல்லிப்பழம்பெற்றுப் பாடியது

(இ - ள்.) வென்றியுண்டான தப்பாதவாளையெடுத்துப் பகைவர் களத்தின்கட்பட வென்றகழல இடப்பட்ட வீரவளை பொருந்திய பெரிய கையினையுடைமிக்க ஆரவாரத்தைச் செய்யும் மதுவினையுடைய அதியர்கோமான்! மாற்றாரைப் போரின்கட்கொல்லும்வீரச்செல்வத்தினையும் பொன்னாற் செய்யப்பட்டமாலையையுமுடைய அஞ்சி! நீபால்போலும் பிறை நுதல்போலப்பொலிந்த திருமுடியினையும் நீலமணிபோலும் கரியதிருமிடற்றினையுமுடைய ஒருவனைப்போல நிலைபெறுவாயாக;பெரும! நீபழைய நிலைமையையுடைய பெரியமலையிடத்துவிடரின்கண் அரிய உச்சிக்கட்கொள்ளப்பட்டசிறிய இலையினையுடைய நெல்லின் இனிய பழத்தைப்பெறுதற்கரிதென்று கருதாது அதனாற் பெறும் பெரும்பேற்றினைஎமக்குக்கூறாது நின்னுள்ளே அடக்கிச் சாதல் ஒழியஎமக்கு அளித்தாயாதலால்-எ - று.

நீல மணிமிடற் றொருவன் போலஎன்ற கருத்து, 1 சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும்நிலைபெற்றிருந்தாற்போல நீயும் சாவாதிருத்தல்வேண்டுமென்பதாம்.

அதியர்கோமான்! அஞ்சி! நெல்லித்தீங்கனிஎமக்கு ஈத்தாயாதலால்பெரும! நீ நீலமணிமிடற்றொருவன்போலமன்னுகவெனக் கூட்டி வினை முடிவுசெய்க.

பிறைநுதற் பொலிந்த சென்னிஎன்பதற்குப் பிறைதான் நுதலிடத்தே பொலிந்த சென்னியெனினும்அமையும்.

கலித்தொகை 2:1-8;

சிவன் முப்புரம் எரித்தது.

 

2.தோழி கூற்று

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,

அடங்காதார் மிடல் சாயஅமரர் வந்து இரத்தலின்,

மடங்கல் போல்சினைஇமாயம் செய் அவுணரைக்

கடந்து அடு முன்பொடுமுக்கண்ணான் மூஎயிலும்

5       உடன்றக்கால்முகம் போல ஒண் கதிர் தெறுதலின்,

சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்

ஏறு பெற்று உதிர்வன போல்வரை பிளந்துஇயங்குநர்

ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை

மறப்பு அருங் காதல் இவள் ஈண்டு ஒழிய,

10      இறப்பத் துணிந்தனிர்கேண்மின் மற்று ஐஇய!

 

கலித்தொகை 38:1-5

 சிவன் இராவணன் தலையில் பெருவிரல் ஊன்றியது:

  தோழி கூற்று

 இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்

உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,

ஐ இரு தலையின் அரக்கர் கோமான்

தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்துஅம் மலை

5       எடுக்கல்செல்லாது உழப்பவன் போல

உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்

கறுவு கொண்டுஅதன் முதல் குத்திய மத யானை

நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்தன்

கோடு புய்க்கல்லாதுஉழக்கும் நாட! கேள்:

 கலித்தொகை 105:13

சிவனை கணிச்சியோன்’ எனவும் மணி மிடற்று அணி’ கொண்டவன் எனவும் கூறல்.

ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறுதல்

 10      தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றிக் காரியும்,

ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிகப்

பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும்,

பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல

இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்,

  

கலித்தொகை 142:24-28

 20      செய்தான் இவன்என, 'உற்றது இதுஎன,

எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்,

பைதல ஆகிப் பசக்குவமன்னோ என்

நெய்தல் மலர் அன்ன கண்?

கோடு வாய் கூடாப் பிறையைபிறிது ஒன்று

25      நாடுவேன்கண்டனென்சிற்றிலுள் கண்டுஆங்கே,

ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்சூடிய,

காணான் திரிதரும்கொல்லோ மணி மிடற்று

மாண் மலர்க் கொன்றையவன்?

'தெள்ளியேம்என்று உரைத்துதேராதுஒரு நிலையே,

30      'வள்ளியை ஆக!என நெஞ்சை வலியுறீஇ,

உள்ளி வருகுவர்கொல்லோவளைந்து யான்

எள்ளி இருக்குவேன் மற்கொலோநள்ளிருள்

 கலித்தொகை 150.

சிவன்

தோழி கூற்று

 10      பசந்துநீ இனையையாய்நீத்தலும் நீப்பவோ?

கரி காய்ந்த கவலைத்தாய்கல் காய்ந்த காட்டகம்,

'வெரு வந்த ஆறுஎன்னார்விழுப் பொருட்கு அகன்றவர்,

உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்னநின்

உரு இழந்து இனையையாய்உள்ளலும் உள்ளுபவோ?



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருமால் பற்றிய குறிப்பு

57

        வல்லா ராயினும் வல்லுந ராயினும்

புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன

உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற

நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்

5       நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்

டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க

நனந்தலைப் பேரூ ரெரியு நைக்க

மின்னுநிமர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்

ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்

10      கடிமரந் தடித லோம்புநின்

நெடுநல் யானைக் கந்தாற் றாவே.

 

(பி - ம்.) 11 ‘யானைக்குக் கந்

திணை-வஞ்சி; துறை-துணைவஞ்சி.

அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

(இ - ள்.) யாதொருகல்வியை மாட்டாராயினும் அதனை வல்லாராயி னும் புகழ்தலைப் பொருந்தியவர்கட்கு மாயோனையொத்த சொல்லுதலமைந்த தலைமையையுடைய புகழ் அமைந்த மாற! நினது ஒரு காரியஞ் சொல்லுதலுடையேன் ; அது யாதெனின், நின்பகைவர் நாட்டைக் கொள்ளுங்காலத்து அவர் நாட்டின்கண் வளைந்த கதிரையுடைய வயலை நின்னுடைய வீரரும் கொள்ளைகொள்க; அகலிய இடத்தையுடைய பெரிய ஊரைத் தீயுஞ் சுடுக; மின்நிமிர்ந்தாற்போன்ற நினது 1பாடஞ் செய்கின்ற விளங்கிய நெடிய வேல் பகைவரை அழிக்கினும் அழிக்க; யாவதும் காவன்மரத்தை வெட்டுதலைப் பாதுகாப்பாயாக, நின்னுடைய நெடிய நல்ல யானைகட்கு முன்பு நட்டுநிற்கின்ற தறிகள் ஆற்றமாட்டாவாதலான்-எ-று.

2அவை இளமரமாதலால், நின் நெடுநல்யானைக்குத் தறியாதற்குப் பொறையாற்றாவென்று உரைப்பாருமுளர்.

3வல்லவர்க்கும் மாட்டார்க்கும் ஒப்பப்புகழ்ந்து முடியவொண்ணா மையான்,மாயோனன்னவென்றார்; அன்றி அவ்விருவர்க்கும் ஒப்ப அருள் பண்ணுதலின், அவ்வாறு கூறிற்றெனினும் அமையும்.

மாற! நின்யானைக்குக் கந்து ஆற்றாவாதலால், கடிமரந்தடிதலோம் பெனக் கூட்டுக.

நின்யானைக்குக் கந்து ஆற்றாவாதலாற் கடிமரந்தடிதலோம்பெனக் கூறுவான்போற் சந்துசெய்விக்கும் நினைவாற் கூறினமையின், இது துணைவஞ்சிஆயிற்று.

 

பலராமன் திருமால் பற்றிய குறிப்பு

58

        நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே

முழுமுத றொலைந்த கோளி யாலத்துக்

கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்

தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது

5       நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ

இளைய தாயினுங் கிளையரா வெறியும்

அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச்

செருமாண் பஞ்சவ ரேறே நீயே

அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே

10      நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென

வரைய சாந்தமுந் திரைய முத்தமும்

இமிழ்குரன் முரச மூன்றுட னாளும்

தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே

பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்

15      நீனிற வுருவி னேமி யோனுமென்

றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்

குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி

இன்னீ ராகலி னினியவு முளவோ

இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே

20      ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவீரும்

உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப்

பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்

கையகப் படுவது பொய்யா காதே

அதனால், நல்ல போலவு நயவ போலவும்

25      தொல்லோர் சென்ற நெறிய போலவும்

காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும்

ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா

தின்றே போல்கநும் புணர்ச்சி வென்றுவென்

றடுகளத் துயர்கநும் வேலே கொடுவரிக்

30      கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி

நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த

குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே.

(பி - ம்.) 10. ‘மெளியவரைய

திணை-பாடாண்டிணை; துறை-உடனிலை.

சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

(இ - ள்.) நீ, குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவன், பரிய அடி மாய்ந்த கோளியாகிய ஆலத்துக் கொழுவிய நிழலையுடைய நெடிய கொம்பை அதன்வீழ் தாங்கினாற்போலத் தனக்கு முன்னுள்ளோர் இறந்தாராகத் தான் தளராது நல்லபுகழையுடைய பழைய குடியைத் தடுமாற்றமற அணைத்துத் தான் சிறிதேயாயினும் கிளையுடனே பாம்பை எறியும் பொறுத்தற்கரிய வெள்ளிய உருமேறுபோல இளமைக் காலத்தும் பகைவரைக் காணப்பொறாத போரின்கண் மாட்சிமைப்பட்ட பாண்டியர் குடியுள் ஏறுபோல்வான்; நீ, அறந்தாங்கும் உறையூரின்கண் அரசன்; இவன், நெல்லும் நீரும் யாவர்க்கும் எளியவெனக் கருதி அவைபோலாது யாவர்க்கும் பெறுதற்கரிய 1பொதியின் மலையிடத்துச் சந்தனமும் கடலிடத்து முத்துமென இவற்றை ஒலிக்கும் குரலையுடைய 2முரசம் மூன்றுடனே ஆளும் தமிழ் பொருந்திய மதுரைக்கட் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன்; நீர்,பால்போலும் நிறத்தையுடைய பனைக்கொடியையுடையோனும் நீலநிறம்போலும் திருமேனியையுடைய ஆழியையுடையோனுமென்று சொல்லப்படும் இரண்டு பெரிய தெய்வமும் ஒருங்கு நின்றாற்போல உட்குப்பொருந்திய காட்சியோடு அச்சம்வர விளங்கி இத்தன்மையீராகுதலின், இதனினும் இனிய பொருள் உளவோ? இன்னமும் கேளீர்; நும்முடைய புகழ் நெடுங்காலம் செல்வதாக; நும்முள் ஒருவீர்க்கு உதவுவீராக, நீங்களிருவீரும் கூடி நிற்கின்ற இந்நிலையின் வேறுபடீராயின் ஒலிக்கும் திரையையுடைய கடல்சூழ்ந்த இப்பயன் பொருந்திய உலகங்கள் கையகத்தே அகப்படுதல் பொய்யாகாது; ஆதலால் நல்லனபோலே யிருக்கவும் நியாயத்தையுடை யனபோலே யிருக்கவும் பழையோரொழுகிய ஒழுக்கமுடையனபோலே யிருக்கவும் அன்புபொருந்திய நெஞ்சையுடைய நும் இடையே புகுந்து நும்மைப் பிரித்தற்கு அலமரும் அயலோருடைய 3சிறப்பில்லாத மொழியைக் கேளாது இன்று போல்க, நுமது கூட்டம்;வென்றுவென்று கொலைக்களத்தின்கண் மேம்படுக, நும்முடைய வேல்; வளைந்த வரியை நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென முற்றாக உரைப்பாரும் உளர்.

5தொடுபொறி : பெயர்மாத்திரையாய் நின்றது.

ஒருவீர் ஒருவீர்க்கு உதவியாய் வலியையுடையீராய் நீங்கள் இருவீரு மென்பாரும் உளர்.

இருவரரசர் ஒருங்கிருந்தாரைப் பாடினமையின், இஃது உடனிலை ஆயிற்று.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இந்திரன் கோயில் பற்றிய குறிப்பு

241
        திண்டே ரிரவலர்க் கீத்த தண்டார்
அண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட்
போர்ப் புறு முரசங் கறங்க
5       ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே.
 
திணையும் துறையும் அவை.
1 அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்பாடியது.
(இ - ள்.) திண்ணிய தேரைஇரவலர்க்கு ஈத்த குளிர்ந்தமாலையை யுடைய ஆய்வருகிறானென்று ஒள்ளிய தொடியினையும் வச்சிராயுதத்தையுமுடைய விசாலமாகிய கையையுடைய இந்திரனதுகோயிலுள்ளே போர்த் தலுற்ற முரசம் முழங்க வானத்தின்கண்ஓசை தோன்றிற்று- எ - று.
இப்பெற்றிப்பட்ட வள்ளியோனைவானோர் எதிர்கோடல் தப்பா தென்றவாறு.
இது தற்குறிப்பேற்றமென்பதோர்அணிப்பொருட்டாய் நின்றது.
________________________________________
(கு - ரை.) 3 - 4. ‘’வச்சிரக்கோட்டத்து மணங்கெழு முரசம்” (மணி. 1 :27)
 
முருகன் பற்றிய குறிப்பு
299
        பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்தத ருண்ட வோய்நடைப் புரவி
கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ
நெய்ம்மிதி யருந்திய கொய்சுவ லெருத்திற்
றண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடா மகளிரி னிகழ்ந்துநின் றவ்வே.
 
(பி - ம்.) 2 ‘உழுத்தருண்ட’, ‘உழுத்ததழுண்ட4 ‘யருத்தகொய’, ‘யருந்தக்கொய்’, 5 ‘கோணடை’,‘தண்டை மன்னர் தாருடைக் கலிமான்’ 7 ‘கலங்கொடா...நின்றனவே
திணை - நொச்சிதுறை - குதிரைமறம்.
பொன்முடியார்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இராமன்சீதைஇராவணன்அனுமன் குறிப்பு
378
        தென்பரதவர் மிடல்சாய
வடவடுகர் வாளோட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
5       நற்றார்க் கள்ளின் சோழன் கோயிற்
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத் தன்ன நீணகர் நின்றென்
அரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
10      எமக்கென வகுத்த வல்ல மிகப்பல
மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே யதுகண்
டிலம்பா டுழந்தவென் னிரும்பே ரொக்கல்
விரற்செறி மரபின செவித்தொடக் குநரும்
15      செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின வரைக்கியாக் குநரும்
கடுந்தெற லிராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
20      நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங்
கறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை யெய்தி
அரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே.
 
(பி - ம்.) 3 ‘தொடையமைக்கண்ணி’ 4 ‘குடைஇய’, ‘வடிம்பின றறைக்கிளளிசொழர்’ 10 ‘வகுதகுவல்ல11 ‘னழுங்கல வெறுக்கை’ 15 ‘விரறசெறிகுநருஞ’ 16 ‘மனக்கமைமரபினமிடறு’ 18 ‘கடுந்தேர்’ 19 - 20ஞான்றுநிலஞ்’ 21 ‘மிழைப்பொலிந்’ 22 ‘வருநதை’ 23 ‘கிணைத்தலைமை
திணை - அதுதுறை - இயன்மொழி.
சோழன் செருப்பாழி யெறிந்த இளங்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் (பி - ம். மொழி......திபசுங்குடையநர்)
________________________________________
(கு - ரை.) 1. மிடல் - வலி.
2. வடுகர் - வடுகவீரர்இவர் வடநாட்டினருள் ஒருவகையார்; "கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர்" (நற். 212 : 5),
"குல்லைக் கண்ணி வடுகர்" (குறுந். 11 : 5), "கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்", "வானிணப் புகவின் வடுகர்", "முரண்மிகு வடுகர்", "தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்", "வம்ப வடுகர் பைந்தலை சவட்டி", " கதநாய் வடுகர்" (அகநா. 107 : 11213 : 8281 : 8295 : 15375 : 14381 : 7). ஓட்டிய - ஓட்ட.
1 - 2. "பரதவர் - தென்றிசைக்கட் குறுநில மன்னர்அது, ‘தென்பரதவர்...................வாளோட்டியஎன்னும் புறப்பாட்டானும் உணர்க" (மதுரைக். 144ந.)
3. தொடை அமை கண்ணி - கட்டுதலமைந்த தலைமாலை. வேலுக்கு மாலைசூட்டல் மரபுபுறநா. 332 : 1 - 5.
4. கடைஇய - செலுத்திய. வடிம்பு - இங்கே காலின் விளிம்பு; "மாவுடற்றிய வடிம்பு" (பதிற். 70 : 2)
5. கோயில் - அரண்மனை.
6. சுதை - சுண்ணச்சாந்து; "வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து" (மணி. 6 : 43); "திங்களுங் கரிதென வெண்மை தீட்டியசங்கவெண் சுதையுடைத் தவள மாளிகை" (கம்ப.நகரப். 133); "வெண்சுதை தீற்றிய மாடம்" (நைடதம்நகர. 5)
7. பனிக்கயம் - குளிர்ந்த நீரையுடைய குளம் நகருக்குக் குளம் உவமை ; "கயங்கண் டன்ன வயங்குடை நகரத்து" (மதுரைக். 484) ; "நிழற்கயத் தன்ன நீணகர்" (அகநா. 105 : 7)
8. அரிக்கூடுமாக்கிணை - அரித்தெழும் ஓசையையுடைய பெரிய தடாரிப்பறை ; "அரிக்கூ டின்னியம்" (மதுரைக். 612)
9. வஞ்சி - பகைமேற் செலவு புறநா. 15 : 2433 : 10
11. அருங்கல வெறுக்கை - பெறுதற்கரிய ஆபரணமும் செல்வமும் ;புறநா. 146 : 1.
13. இலம்பாடு - இல்லாமை உண்டாதல்ஒக்கல் - சுற்றம் ; "இலம்படு காலை யாயினும்புலம்பல் போயின்று பூத்தவென் கடும்பே", "இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகற்ற", "இரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும்" (புறநா. 380 : 15 - 6390 : 19394 : 16)
14 - 5. விரலிற் செறித்தற்குரிய மோதிரமுதலியவற்றைக் காதிலும்காதிற் செறித்தற்குரிய குழை முதலியவற்றை விரலிலும் செறித்துக்கொண்டாரென்றபடி.
16. அரை - இடை. யாக்குநர் - கட்டுகின்றவர். மிடறு - கழுத்து.
18. வடசொற் சிதைந்து பொருத்தமுடையனவாகச் சான்றோர் செய்யுளில் வந்ததற்கு இவ்வடி மேற்கோள்தொல் எச்ச. சூ. 6ந. இ. வி. சூ. 175உரை.
19. அரக்கன் - இராவணன். ஞான்றை - சமயம் ஐ : சாரியை.
20. மதரணி - கதிர்த்த ஆபரணங்கள்.
20 - 21. குரங்கின் செம்முகப் பெருங்கிளை - செவ்விய முகத்தையுடைய பெரிய குரங்கின் குழு ;சுக்கிரீவனைச் சேர்ந்த குரங்குகள் ; "செம்முக மந்தி" (நற்.151 : 8) ; "துய்த்தலைச்செம்முக மந்தியாடும்" (அகநா.241 : 14 - 5). இழை - ஆபரணம் இழைக்கப்படுதலான் வந்த பெயர். 22. அறாஅ - நீங்காத. பெற்றிகும் - பெற்றோம்.
24. அரும்படரெவ்வம் - நினைவாலுண்டாகும் நோயின் வருத்தம் புறநா. 145 : 10.
மு. பாடாண்டிணைத் துறைகளுள், ‘பெற்ற பின்னரும் பெருவளனேத்திநடைவயிற் றோன்றிய விருவகை விடை’ (தொல்.புறத்திணை. சூ. 30இளம்.சூ. 36ந.) என்பதற்கு இது மேற்கோள்.
 
 
பாண்டவர் அரக்கு மாளிகைக்குத் தீ
 
25.தோழி கூற்று
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு,
 
 
துரியோதனனை வீமன் கொன்றது
 
52.தோழி கூற்று
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல்கூர் நுதி மடுத்துஅதன்
 
 
பாண்டவர் குறிப்பு
 
104.தோழி கூற்றும் தலைவி கூற்றும்
வரி புனை வல்வில் ஐவர் அட்ட
 
திருமால் உலகு அளந்தது
 
124.தோழி கூற்று
ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்
 
பரிபாடல்
 
இந்திரன் சாபம் பெற்ற நிகழ்ச்சி
19. செவ்வேள்
உரை
 
'இந்திரன்பூசை: இவள் அகலிகைஇவன்
சென்ற கவுதமன்சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இதுஎன்று உரைசெய்வோரும்:


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சிவபெருமான் குறித்த பாட்டும் தொகையும்
 
கலி.38:1-5அக. 181:16-19-அருந்தவத்தோன் புற. 1:12-13-ஆதிரையான் கலி.150:20-ஆயுதம் அகம். க. வா.1:5-6புற. 56:1-2-உமையுடன் இருத்தல் முரு. 153புற. 1:7-8-உமைபங்கன். ஐங். க.வா.பதி. ப. க.வா. 7-8அக. க வா. 1:7- ஊர்தி பரி. 8:2கலி. 150:13அக. க.வா. 1:7புற. 1:3-4; -கங்கை கொண்டமை பரி. 9:5-7கலி. க.வா.1:2- கறைக் கண்டன் பதி. க.வா. 9-10-கறை மிடற்றன் பரி. 8:125-127கலி. க.வா.1:3-4105:13142:24-28 புற. 1:5-6551-5561-2- காட்டில் ஆடுதல் பதி. க. வா. 3-4-காபாலம் ஆடுதல் கலி.க.வா. 1:11-13-கொடி முரு. 151-152கலி.26:5புற. 1:3-456:1-2-கொடு கொட்டி ஆடுதல் கலி. க.வா.1:5-7; -சடையன் பதி. க.வா.5அக. க.வா. 1:9-10- சூலப்படை உடையான் பதி. க.வா.11-12அக. க.வா.1:5-6:-நெற்றிக்கண் அக. க.வா.1:4புற. 55:1-5-பாண்டரங்கம் ஆடுதல் கலி. க.வா.1:8-10-பிறைசூடி பதி. க.வா. 9கலி.103:15142:24-28150:17அக. க.வா.1:11புற. 1:8-955:1-5 - புலித் தோல் ஆடையன் அக. க.வா.1:14-15-மழுப்படை கொண்டிருத்தல் மது. 453-455முக்கண் கொண்டமை முரு. 153கலி. 104:11-12 முப்புரம் அழித்தல் முரு. 154பதி. க.வா.3பரி. தி. 1:76-78பரி. 5:22-27கலி. க.வா. 1:22:1-8;புற. 55:1-5
 
திருமால் குறித்த பாட்டும் தொகையும்
 
பரி. 3:12-1481-824:4767-69பரி. தி.1:3-5புற. 58:14-16198:9-அமரர்க்கு அமுதம் அளித்தமை பரி. 3:33-34 அரவணைக் கிடத்தல் பெரு. 371-373 -அரவின் பிடியிலிருந்து மதியை விடுவித்தல் கலி. 104:37-38-அவுணரை அழித்தல் மது. 590-591-அன்னமாய் வந்தமை பரி. 3:25-26-இராமாவதாரம் அக. 70:13-16;புற. 378:18-21-இருவர் தாதை பரி. 1:31-உந்தித் தாமரை பரி. 3:91-944:60-61-ஊர்தி பரி. 3:16; -எல்லா நிலங்களையும் காட்டினமை மது. 763-கடல் கடைதல் பரி. தி. 1:64-71 கன்று கொண்டு விளவு எறிந்தமை முல். தனி 1:3; -கிருஷ்ணவதாரம் அக. 59:3-6; -குன்றம் எடுத்தமை முல். தனி 1:4; -கேசியைக் கொன்றமை பரி. 3:31-32-கொடி முரு. 150-151பரி. 1:11602:603:17-184:36-408:213:43839,41புற. 56:5- 6-சக்கரபாணி நற். க.வா. 7பரி. 1:61-சங்கு கலி.105:9 -சூரியனைத் தந்தது புற. 174:1-5 -திருவிக்கிரமாவதாரம் முல். 1-3பரி. 3:54-56கலி.124:1-3- திருமகள் கேள்வன் பரி. 3:90- திருமுறு மார்பன் பெரு. 29-30பரி. 1:7-838-392:30-314:59கலி. 104:9-10108:55-56145:64-திருவோணத் திரு விழா மது. 590-591-நரசிங்காவதாரம் பரி. 4:12-21 -நான்முகனைப் பயந்தமை பெரு. 402-404- பரசுராமாவதாரம் அக. 220:3-9-பலராமனுக்கு இளையான் பரி. 2:20-23-பலராமாவதாரம் பரி. 1:1-52:20-2313:33கலி. 26:136:1104:7-8105:11புற. 56:3-4-பாற்கடலில் அரவணைத் துயில்தல் பரி. 13:26-29கலி. 105:71-72123:3-4-மணிகள் பரி. 1:8-9-மல்லரைச் சாய்த்தல் கலி. 52:5134:1-3-மாலை பரி. 4:58அக. 175:14-15-வராகாவதாரம் பரி. 2:16-173:23-244:22-2413:34-36
 
முருகன்  குறித்த பாட்டும் தொகையும்
முரு. 107-108116-117206-211264தனி. 1-3மது. 181கலி. 105:17அக. 120:1266:20-21-அசுரரை அழித்தல் குறு. 1:1-3-ஆடு பெற்றமை பரி. 5:61-62; -ஆறெழுத்து மறை முரு. 186-187- ஊர்தி புற. 56:7-8-கிரவுஞ்சமலையைப் பிளந்தமை முரு. 266-267தனி 1:1-2குறு. க.வா.3-5பரி. 5:9-1019:101-10321:8-9-குன்றம் அக. 14914-16கொடி முரு. 38-39122குறு. க.வா.3-5பரி. 17:48-49அக. 149:14-16புற. 56:7-8-கொற்றவை சிறுவன் முரு. 258-259பெரு. 457-459-கோழிக் கொடி பெற்றமை பரி. 5:55-58-சிவகுமாரன் முரு. 256-259தனி. 3கலி. 83:13-15-சூரனை வென்றமை முரு. 45-46275தனி.1.2:பெரு.457-459பதி. 11:3-6பரி. 5:1-79:70-7114:1818:3-419:101-10321:8-928-29கலி.27:15-1693:25-26104:13அக. 59:10-12-செந்தில் நகர் புற. 55:18-19; -தெய்வயானை கணவன் முரு. 4-6175-176பரி. 9:8-11 தேவசேனாபதி. முரு. 260-தேவர் துயர்தீர்த்தல் முரு. தனி 1-2-பகைவரை அழித்தல் முரு. 98-100பதி. 26:12பரி. 21:66-67-பிறப்பு முரு. 253-255பரி. 5:1227-548:12-13125-1279:5-7மயில் ஊர்தி பரி. 17:48-4921:2-மயில் பெற்றமை பரி. 5:58-60- மாமரத்தை அழித்தது முரு. 59-61பரி. 5:1-79:70-7118:3-419:101-10321:8-928-29கலி.27:15-16;104:13-மாலை முரு. 10-1143-44பெரு. 75பரி. 21:10-11; -யானை முரு. 81-82247: குறு. 1:1-3பரி. 17:48-49-வள்ளி திருமணம் முரு. 100-102பரி. 9:8-11:14:21-2219:5-795பரி. தி. 8:7-8
 
கொற்றவை குறித்த பாட்டும் தொகையும்
முரு. 258-259பெரு. 457-459குறு. 218:1-2
 
பலராமன்     
 
பரி. 1:1-52:20-2313:33கலி.26:136:1104:7-8105:11புற. 56:3-4


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பாரதக் கதைகள் -
 
அரக்கு இல்லில் தீ     கலி. 25:1-4-அருச்சுனன் சிறு. 238-241-கன்னன் சூரியனது புதல்வன் கலி. 108:13துச்சாதனன் துரௌபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்தல் கலி. 101:18-20-பாண்டவர் பெரு. 415-417-பாரதப் போர்க்களம் கலி. 104:57-59புற. 2:13-16-பீமன் சிறு. 238-241-பீமன் அரக்கு இல்லி லிருந்து ஐவரைக் காத்தல் கலி. 25:7-8-பீமன் துச்சாதனன் நெஞ்சத்தைப்பிளந்து வஞ்சினம் முடித்தமை கலி.101:18-20-பீமன் துரியோதனனின் துடையை முறித்தது கலி. 52:2-3
 
பிரமன் பரி. 3:12 - 148:3பரி. தி. 8:7-8-தாமரையில் தோன்றியவன் முரு. 164-165
பிரகலாதன்    பரி. 4:12-21
அகத்தியன்    மது. 40-42பரி. 11-11
அகலிகை      பரி. 19:50-52
ஆதிசேடன்    பரி. தி. 1:58-59-உலகைத் தாங்குதல் பரி. ப. 1:74-75-கடல் கடைய நாண் ஆனமை பரி. தி. 1:64-71; -சிவன் வில்லுக்கு நாண் ஆனமை பரி. தி. 1:76-78
இந்திரன்       பரி. 5:58-609:2-419:50-52பரி. தி.2:96-97கலி. 105:15-யானை முரு. 157-159-வேள்வி பல செய்தமை முரு. 155-156
இயமன்                பரி. 5:61-62
இரதி-காமன்   பரி. 19:48-49
இராம காதை - தனுஷ்கோடியில் இராமன் தன் கை கவித்துபறவைகளின் ஒலியை அடக்கியது
அக. 70:13-16-சீதையின் ஆபரணங்களைக் குரங்குகள் அணிந்தமை புற. 378:18-21-சீதையை இராவணன் கவர்ந்து சென்றது புற. 378:18-21
இராவணன் கயிலை மலை எடுத்தமை       கலி. 38:1-5
இரு பெருந் தெய்வம்  அக. 360:6-9
ஒளவையார்   புற. 8788899091939599 அ.கு.100 அ.கு.140. அ.கு206 அ.கு.235
கடவுளுக்குப் பலி கொடுத்தல்        நற். 358:6
கடவுளை வாழ்த்துதல்        பெரு. 391
ஞாயிறு போற்றுதல்  முரு. 1-2நற். 283:6-7
தாழியில் இட்டுப் பிணங்களைப் புதைத்தல்  நற். 271:11-12பதி. 44:22-23புற. 228:12-15238:1-5,36411-13
தெய்வ உருவிற்குக் கல் கொள்ளுதல்        பதி. ப. 5:4
தெய்வக் காணிக்கை  சிறு. 96-99
தெய்வங்கள் துாணில் இடம்பெற்றிருத்       புற. 52:12-13
தெய்வங்களுக்கு அந்திக் காலத்துப் பலி கொடுத்தல்        மது. 458-460
தெய்வத்தால் தெளிவித்தல்   கலி. 98:32
தெய்வத்தினிடம் வேண்டும் பொருள்கள்     பரி. 5:78-80
தெய்வத்திற்கு உயிர்ப் பலி கொடுத்தல்       அக. 166:6-7
தெய்வத்திற்குக் கையுறை கொடுத்தல்       அக. 156:13-16
தெய்வத்திற்கு நிலம் தானம் செய்தல்        பதி. ப. 7:8-9
தெய்வத்திற்கு பலி கொடுத்தல்       நற். 343:3-5பதி. 30:33-37
தெய்வத்திற்குப் பலியிட்டு வணங்குதல்      ஐங். 259:3-4
தெய்வத்திற்குப் பூப்பலி செய்தல்     கலி. 93:24
தெய்வத்திற்கு மஞ்சளும் பூவும் அணிதல்    அக. 269:7-13
தெய்வத்தைச் சுட்டிச் சபதம் செய்தல் அக. 266:20-21
தெய்வத்தைத் தொட்டுச் சபதம் கூறல்       கலி. 108:55-56
தெய்வத்தைத் தொழுதல்     புற. 260:5
தெய்வத்தைத் தொழும் வகை        பரி. 8:97-102
தெய்வத்தைப் பரவுதல்        குறு. 263:4-6பரி. 1:65-672:75-7621:16-17
தெய்வத்தைப் போற்றும் இடங்கள்   பரி. 4:67-69
தெய்வத்தை வணங்கி வஞ்சினம் உரைத்தல் குறு. 208-210
தெய்வத்தை வழிபடுதல்      பரி. 14:30-31புற. 99:1
தெய்வத்தை வேண்டிக் குழந்தை பெற்றமை ஐங். 257:1-2
தெய்வத்தை வேண்டுதல்     பரி. 18:54-56 தி. 1:81-82
தெய்வம் எல்லாப் பூவையும் ஏற்றுக் கொள்ளுதல்   புற. 106:1-3
தெய்வம் பலி பெறுதல்       நற். 251:8
தெய்வம் பேணித் தொழுதல்  பதி. ப. 9:10பரி. 15:46-48 கலி. 10112-14
தெய்வ வழிபாட்டு முறை     நெடு. 42-44குறி. 5-7
நடு இரவில் பேய்கள் வழங்கும் எனல்       நற். 171:9. 319:6
நடுகல் இருக்கும் நிலம்       புற. 314:2-3
நடுகல் நாட்டுதல்     அக. 67:8-10131: 8-11புற. 221:11-13
நடுகல்லில் அம்பைத் தீட்டுதல்       அக. 297:6-7
நடுகல்லில் செய்தி பொறித்தல்      ஐங். 352:2
நடுகல்லிற்குக் காலை வழிபாடு ஆற்றுதல்  புற. 3291-5
நடுகல் வழிபாடு      புற. 232:3-6260: 25-28,263:8264:1-4265:1-5306:3-4
 
பார்ப்பனச்சிறுவர் குடுமி வைத்திருத்தல்     ஐங். 202:2-3
பார்ப்பார்க்குத் தானம் கொடுத்தல்    புற. 367:4-5
பார்ப்பார்க்குப் பசுவும் நிலவும் ஈதல் பதி. ப. 6:4-5
பார்ப்பார் நோவனவற்றை அரசர் செய்யாமை        புற. 43:12-14
பார்ப்பான் தூது செல்லுதல்   அக. 337:7-8புற. 305:1-4


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பெரும்பாணாற்றுப்படையில் தெய்வங்களும்இதிகாசப் பாத்திரங்களும்
 
கௌரவர் நூறுபேர் : அடி 415
 
ஈர் ஐம்பதின்மரும்பொருதுகளத்து அவிய,
 
 
சூரபத்மனை முருகன் கொன்ற நிகழ்ச்சி : அடி 457-458
 
வெண் திரைப் பரப்பின் கடுஞ் சூர் கொன்ற      உரை
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு,    
 
 
திருமால் உந்தியில் நான்முகன் தோன்றியது : அடி 402-403
 
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
உரை
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்  
 
 
பாண்டவர் ஐவர் : அடி 417
ஆராச் செருவின் ஐவர் போல
 
 
தொல்காப்பியத்தில் சிவன் பற்றி வெளிப்படையாக எந்தச் செய்தியும் இல்லை.
 
தொல்காப்பியக் குறிப்பு
'மண வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களைப் பெற்று இன்பவாழ்வு வாழ்ந்ததும்தலைவனும் தலைவியும் கடவுளைப் பற்றி எண்ண முற்பட வேண்டும். அதுவே வாழ்க்கையின் குறிக்கோளாகும்’ என்று தொல்காப்பிய நூற்பா கூறுகின்றது.
 
காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
 
(பொருள். கற்பியல்: 190)


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

முல்லைகுறிஞ்சிமருதம்நெய்தல் என்ற நானிலத்திற்கும் உரிய தெய்வங்கள் இவையெனக் கீழ்வரும் நூற்பா கூறுகின்றது.
 
மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
 
(பொருள். அகத்திணையியல் - 5)
 
(மாயோன் = திருமால்மேய = விரும்பியகாடுறை = முல்லை நிலம் (காடும் காட்டைச் சார்ந்த இடமும்)சேயோன் = முருகன்மைவரை = குறிஞ்சி நிலம் (மலையும் மலையைச் சார்ந்த இடமும்)வேந்தன் = இந்திரன்தீம்புனல் = மருதநிலம் (வயலும் வயலைச் சார்ந்த நிலமும்),பெருமணல் = நெய்தல் (கடலும் கடலைச் சார்ந்த இடமும்)
 
இவற்றிலிருந்து பழந்தமிழர்கள் கடவுட்கொள்கை உடையவர்கள் என்பதும்,எல்லாவற்றையும் கடந்து நின்ற முழுமுதற் கடவுள் ஒருவனைப் பற்றிய கோட்பாட்டினை உடையவர்கள் என்பதும் பெறப்படும்.
 
''வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்'' என்பது மற்றொரு நூற்பா. வினையின் நீங்கிய முனைவன்’ என்பதாலேயேஅவன் என்றுமே வினையினால் கட்டப்படாதவன் என்பது பெறப்படுகிறது. பழந்தமிழர்கள் முழுமுதற் கடவுளையே தம் கருத்தில் கொண்டிருந்தனர் என்பர். இன்றும் பேச்சு வழக்கில் தெய்வத்தைக் குறிப்பதாக உள்ள கடவுள் என்னும் சொல் எல்லாவற்றையும் ''கடந்து நிற்பது'' என்னும் பொருளைக் காட்டி நிற்கிறது. தொல்காப்பியர் இச்சொல்லை ஆள்கிறார்.
 
காமப்பகுதி கடவுளும்வரையார்,
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்
(பொருள்புறத்திணையியல்: 81)
 
இங்கே 'கடவுள்என்பது தத்துவப் பொருளாக அமைந்த கடவுளராவர். மாயோன்சேயோன்,வருணன்இந்திரன் முதலியோர் திணைநிலைக் கடவுளர்.
 
திருவள்ளுவர் ஆண்ட 'இறை' (388) என்னும் சொல்இருத்தலையும் எல்லா இடத்திலும் நிறைந்திருத்தலையும் குறிக்கும். இக்கருத்தைத் திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலிருந்து பெறுகிறோம். (இறைவன் 5,10) இறைவன் என்ற சொல்லால் எங்கும் நிறைந்தும் எல்லாவற்றையும் கடந்தும் உள்ள கடவுளைப் பற்றிய கோட்பாடு தமிழர்களிடையே நிலவி வந்தது எனலாம். தொல்காப்பியத்தில் வரும் கந்தழி என்னும் சொல்லும் தெய்வத்தையே குறிக்கும்.
 
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
(பொருள்புறத்திணையியல் : 85)
 
''இறைவன்'' முழுமுதற் கடவுள்சுதந்திரமுடையவன்கடந்து நிற்பவன் என்னும் பொருள்களை இச்சொல் குறிக்கும் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

எட்டுத்தொகை
 
அகநானூறுபுறநானூறுகலித்தொகைபதிற்றுப்பத்துப் போன்ற எட்டு நூல்களையும் எட்டுத்தொகை எனக் குறிப்பிடுவார்கள். இந்த நூல்கள் அகம்புறம் என்னும் இருவகை வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் சிவன் பற்றிய குறிப்புகளை இந்தப் பகுதியில் காணலாம்.
 
காவிரிப்பூம்பட்டினம்மதுரைவஞ்சி முதலிய பெருநகரங்களில் இக்கடவுளர்க்குரிய கோயில்கள் இருந்தன. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறுபுறநானூறுஐங்குறுநூறுபதிற்றுப்பத்து,கலித்தொகை ஆகிய ஐந்து நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவனைப் பற்றியே அமைந்துள்ளன. ஆயின் இப்பாடல்கள் பிற்காலத்தைச் சார்ந்தவை.
 
சங்க நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகள் விரிவாக வந்துள்ளன. ஆனால் சிவன் என்ற பெயர் அங்கே வழங்கப்படவில்லை. சிவனை அடையாளங் காட்டும் வகையில் தொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
• கலித்தொகை
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........
 
(கலித்தொகை38)
 
(ஈர்ஞ்சடை = ஈரத்தை உடைய சடையினை உடையஅந்தணன் = இங்குச் சிவன்அரக்கர் கோமான் = இராவணன்தொடி = ஓர் அணிகலன்பொலி = விளங்குகின்றஉழப்பவன் = வருந்துபவன்)
 
இமயமலையிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்தவனும் ஆகிய ஈரத்தை உடைத்தாகிய சடையினை உடையவனும் ஆகிய இறைவன் இறைவியோடு பொருந்திஉயர்ந்த கயிலைமலையில் இருந்தனன். அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையை உடைய இராவணன் மலையை எடுப்பதற்குக் கையைக் கீழே செருகித் தொடிப்பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்க இயலாது வருந்திய நிலைபோல.....
 
இங்குச் சிவனைப் பற்றிய குறிப்பும் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற் போனதும் இடம்பெற்றுள்ளன. (குறிஞ்சிக்கலி - 38)
 
கலித்தொகையில் வேறொரு பாடலிலும் சிவனைக் குறிக்கும் முக்கண்ணான் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அச்சொல் இடம்பெறும் பாடல்:
 
தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்
 
(கலித்தொகை2)
 
(தொடங்கற்கண் = உலகங்களைப் படைக்கக் கருதியபோதுமுதியவன் = அயன்பிரம்மா;அடங்காதார் = அரக்கர்மிடல்சாய = வலிமை கெடமடங்கல் = சிங்கம்சினை = கோபித்து,மூவெயில் = திரிபுரங்கள்மூன்று கோட்டைகள்)
 
இதில் முக்கண்ணான் என்ற தொடர் இடம் பெறுகிறது. தேவர்களுக்காக அவுணர்களை அடக்க மூன்று புரங்களை எரித்த சிவனின் செயல்பாடு விரிவாகக் குறிக்கப்படுகிறது.
 
புறநானூறு
 
உண்டவரை நீண்ட நாள் வாழ்விக்கும் அரிய நெல்லிக்கனியை அதியமானிடமிருந்து பெற்ற ஒளவை அவனை வாழ்த்தும்போது,
 
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே.....
(புறம் :91) (மிடறு - கழுத்து)
என்கிறார்.
 
பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல) நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.
இங்குசிவன் அணிந்திருக்கும் பிறையும் அவனுடைய நீலமணிமிடறும் குறிப்பிடப்படுகின்றன.
 
மற்றொரு புறப்பாட்டில் முழுமுதற் கடவுள் என்று பொருள்படும் முதுமுதல்வன் என்ற தொடர் கீழ்வரும் அடிகளில் இடம்பெறுகிறது.
நன்றாய்ந்த நீணிமிர்சடை
முது முதல்வன்
(புறம் :166)
 
புறநானூறு கடவுள் வாழ்த்துப்பாடலில் கொன்றைப்பூ அணிந்த திருமார்பும்ஆனேறு (நந்தி) ஏறப்படும் வாகனமாகவும்கொடியாகவும் குறிக்கப்படுகின்றன. நஞ்சினது கறுப்புதிருமிடற்றை அழகு செய்தது... ஒரு பக்கம் பெண்வடிவு ஆயிற்று என்று சிவனின் அடையாளங்களை விரிவாகப் பேசுகிறது. (புறம்: கடவுள் வாழ்த்து)
 
ஏற்றுவலன் உரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும்
என்று மற்றொரு புறநானூற்றுப்பாடல் (56) குறிக்கிறது.
 
(எரிமரு = அழல்போலும்கணிச்சி = மழுப்படைமணி = இங்கு நீலமணிமிடறு = கழுத்து)
 
அதாவது ஆனேற்றை வெற்றியாக உயர்த்த அழல்போலும் விளங்கிய சடையினையும் விலக்குதற்கு அரிய நீலமணிபோலும் திருமிடற்றை உடையோனும் என்று பொருள்படுகிறது.
 
சிவனுடைய சடையும்அவன் கையில் தாங்கியிருக்கும் மழுப்படையும் நீலமணிமிடறும் இங்கு விளக்கம் பெறுகின்றன. கலித்தொகை (103) வாள் ஏந்தியவன் என்னும் பொருள்தரும் கணிச்சியோன் என்று குறிப்பிடுகிறது.
 
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடலில் நீலமணி வாலிழை பாகத்து ஒருவன்’ என்று சிவனைக் குறிப்பிடுகிறது.
 
இந்தக் கூற்றுகள் குறிப்பிடத்தக்கவை. காத்தல் கடவுளாகிய சிவபெருமானே எல்லாவற்றையும் அழிக்கிறான் (எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய - புறநானூறுகடவுள் வாழ்த்து) அழித்தபிறகு கொடு கொட்டி என்னும் கூத்தினை ஆடுகிறான் (கொடுகொட்டி ஆடுங்கால் ..... நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ- கலித்தொகைகடவுள் வாழ்த்து) (நுசுப்பினாள் = இடையை உடையவள்சீர் = தாளவகை) என்ற இந்தக் குறிப்புகள் - குறிப்பாககாத்தலும் அழித்தலும் சிவபெருமானாலேயே நடைபெறுகின்றன என்னும் கருத்து - சிவபெருமான் படைத்தல்காத்தல்அழித்தல்மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்கிறான் என்ற சைவசித்தாந்தக் கருத்தைக் குறிப்பால் உணர்த்தும்.a


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பத்துப்பாட்டு
 
சங்க இலக்கியத்தின் மற்றொரு தொகுதி பத்துப்பாட்டு ஆகும். ஆற்றுப்படை நூல்கள் ஐந்தும் இதில் அடங்கும். காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பிக்கும் பட்டினப்பாலையும் தமிழகத்துப் பூக்களைப் பற்றிக் கூறும் குறிஞ்சிப்பாட்டும்நிலையாமையைக் கூறும் மதுரைக்காஞ்சியும் பத்துப்பாட்டில் இடம் பெறுகின்றன. அகப்பொருள் நூலோ என்று கருதும் அளவுக்குச் சிறப்பாக உள்ள நெடுநல்வாடையும்தலைவி தலைவன் வருகைக்காகக் காத்திருக்கும் செய்தியைக் கூறும் முல்லைப்பாட்டும் இத்தொகுதியைச் சேர்ந்தவை. மக்கள் வாழ்க்கையை விரிவாகக் கூறும் இந்த நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன.
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ....ஆய்
(சிறுபாணாற்றுப்படை96-97)
(கலிங்கம் = ஆடைஆலமர் செல்வன் = சிவன்ஆய் = கடையெழு வள்ளல்களுள் ஒருவன்)
 
இதுபாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தை உடைய உடையினைஆலின் கீழிருந்த அமரர் இறைவனுக்கு நெஞ்சு பொருந்தி (மனம் விரும்பி) கொடுத்த ஆய் எனப் பொருள்படும்.
 
மதுரைக் காஞ்சியில் சிவனின் பல சிறப்புகள் கூறப்படுகின்றன. ஆனால் சிவன் என்ற பெயர் காணப்படவில்லை.
நீரு நிலனுந் தீயும் வளியு
மாக விசும்போ டைந்துடனியற்றிய
மழுவாள் நெடியோன் தலைவனாக
(453-455)
(வளி = காற்றுவிசும்பு = ஆகாயம்) என்ற குறிப்பு வருகிறது. இதன் பொருள்: திக்குகளை உடைய ஆகாயத்துடனே நீரும் நிலனுமாகிய ஐந்தினையும் சேரப்படைத்த மழுவாகிய வாளை உடைய பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு .... என்று கொள்ளலாம்.
 
இவ்வாறெல்லாம் பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய அடையாளங்களுக்கான குறிப்புகள் காணப்படுகின்றன.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard