Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: A SHORT HISTORY OF THE TAMILS UP TO BRITISH PERIOD- நாம் தமிழர் -பொ. சங்கரப்பிள்ளை


Guru

Status: Offline
Posts: 7409
Date:
A SHORT HISTORY OF THE TAMILS UP TO BRITISH PERIOD- நாம் தமிழர் -பொ. சங்கரப்பிள்ளை
Permalink  
 


நாம் தமிழர்

A SHORT HISTORY OF THE TAMILS
UP TO BRITISH PERIOD


பொ. சங்கரப்பிள்ளை
(B.A. (Lond). B. Com. (Hons). (Lond.), M. Sc. (Econ (Lond.)

வெளியீடு: எண்: 18
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
7, 57வது ஒழுங்கை, வெள்ளவத்தை,
கொழும்பு – 6

முதற் பதிப்பு: யூன் 79
(C)

இரண்டாம் பதிப்பு: பிப்ரவரி 1991.

ஆசிரியரின் பிற நூல்கள்
சைவ சித்தாந்தம்
மரணத்திற்குப் பின்…
கல்யாணப் பொருத்தங்கள்
பெறுமதிக்கொள்கை

தமிழ்ப் பேரறிஞர்
திரு. பொ. சங்கரப்பிள்ளை அவர்கள்
இறைவனடி அடைந்த
ஓராண்டு நிறைவு நினைவாக
இந்நூல்
வெளியிடப்பெற்றது.


பதிப்புரை
உலகிலே தொன்மையும் சிறப்பும் உள்ள தமிழர் வரலாற்றைப் பல நிலைகளிலும் துறைகளிலும் ஆராய்ந்து சிறந்த வரலாற்று நூல்களை அறிஞர் பலர் எழுதியுள்ளனர். ‘நாம் தமிழர்’ என்னும் இந்நூல் தமிழர் வரலாற்று நூல்களுட் சிறந்ததொரு நூல்@ சிறந்த சிந்தனைக் கருவூலமாக உள்ளது.

இந்நூலாசிரியர் பல துறைகளையும் கற்றுத் துறைபோகிய பேரறிஞர். சிறந்த சிந்தனையாளர், நுண்ணிய ஆய்வு உள்ளத்தினர். தமிழர் வரலாற்றைப்பண்டைக்காலம் முதல் அண்மைக் காலம் வரை பல துறைகளிலும் நன்கு ஆராய்ந்து திட்பநுட்பமாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளார். நிறைவான தமிழர் வரலாற்றுக் கருவூலமாக இந்நூல் உள்ளது.

இந்நூலின் பெரும்பயனை உணர்ந்து இந்நூலை மீள்பதிப்பாக வெளியிடக் கொழும்புத் தமிழ்ச்சங்கம் தீர்மானித்தது. இந்நூலை இச்சங்கம் மீள்பதிப்பாக வெளியிட நூலாசிரியரின் மனைவியாரும் பிள்ளைகளும் அநுமதி வழங்கினர். நிதியுதவியும் வழங்கியுள்ளனர்.

கொழும்புப் பல்கலைக்கழகக் கல்வித் துறைப் பேராசிரியர் திரு. சோ. சந்திரசேகரம் அவர்கள் இந்நூலுக்குச் சிறந்த அணிந்துரை வழங்கியுள்ளார். இந்நூலாசிரியரின் நீண்டநாள் நண்பரான கொழும்புக் குமரன் அதிபர் திரு. செ. கணேசலிங்கன் அவர்கள் இந்நூலைச் சிறப்பாக அச்சிட்டு உதவியுள்ளார். இவர்கள் அனைவர்க்கும் இச்சங்கம் பெரும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றது.

இந்நூல் உலகில் அனைவரும் படித்துப் பயன் பெறுதற்கு உரியது. இந்நூலும் இந்நூலாசிரியர் பெயரும் உலகில் என்றும் நிலவுக.

செ. குணரத்தினம் க.இ.க. கந்தசுவாமி
தலைவர் பொதுச்செயலாளர்

கொழும்புத் தமிழ்ச் சங்கம்

தமிழ்;ப் பேரறிஞர் – சங்கப் புரவலர்
திரு. பொ. சங்கரப்பிள்ளை அவர்களின் 
வாழ்க்கைக் குறிப்புகள்
இலங்கைத் திருநாடு மிக்க தொன்மையும் புராண - இதிகாசங்கள், சங்க இலக்கியங்கள், காவியங்கள் ஆகியவற்றோடு தொடர்பும் உள்ளது@ சிறந்த பேரறிஞர்கள் இந் நாட்டிலே தோன்றிப் புகழ் பரப்பியுள்ளனர். அவ்வகைச் சிறப்பு மிக்க இலங்கைத் தமிழ்ப் பேரறிஞர் வரிசையில் வந்தவரே இந் நூலாசிரியர் தமிழ்ப் பேரறிஞர் பொ. சங்கரப்பிள்ளை அவர்கள்.

தமிழ்ப் பேரறிஞர் சங்கரப்பிள்ளை அவர்கள் இலங்கையின் வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணத்து மாவிட்டபுரம் என்னும் ஊரில் குமாரர் பொன்னம்பலம் அவர்களுக்கு மூத்த மகனாக 1913 –ஆம் ஆண்டு திசெம்பர் 13 –ஆம் நாள் பிறந்தார். முதலிற் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் பின்பு சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்பு கொழும்புப் பல்கலைக் கழகத்திற் சேர்ந்து பொருளியற் பட்டதாரி ஆனார்.

1937 ஆம் ஆண்டில் எழுதி விளைஞராகக் கொழும்பு அட்டோர்னி யெனரல் அலுவகத்திற் சேர்ந்தார். 1938ஆம் ஆண்டு மங்கையர்குல மாமணயான மனோன்மணி அம்மையாரைத் திருமணம் செய்தார். பின்னர் பீ. எஸ். சி@ எம், எஸ். சி. என்னும் அறிவியற் பட்டங்களைப் பெற்றார். பொருளியற்பட்டத் தேர்வில் முதற் பிரிவில் சித்தி பெற்றார். பின்னர் மோட்டார்ப் போக்குவரவுத் திணைக்களத்தில் உதவி ஆணையாளராகப் பணி ஆற்றினார்.

ஓய்வு பெற்ற பின் 19 ஆண்டுகள் இலங்கைத் தேசிய வர்த்தக சம்மேளத்தில் நிருவாகச் செயலாளராகக் கடமையாற்றினார். கொழும்பு அக்குவைனாக உயர் கல்வி நிலையத்திலும், கொழும்பு வித்தியோதயப் பல்கலைக்கழகத்திலும் பொருளியற்துறைப் பகுதிநேர விரிவுரையாளராகக் கடமையாற்றினார். கல்வி அமைச்சுக் கலைச்சொல் ஆக்கக் குழுவிலும் பணிபுரிந்தார்.

இவருக்குச் சந்திரமோகன், அசோகன், நாகேந்திரன், மகேந்திரன் மனோகரன் என்னும் புதல்வர் ஐவரும். செயந்தி, மனோகரி என்னும் புதல்வியர் இருவரும் உள்ளனர். புதல்வர்கள் ஐவர்களும் மருத்துவ, கலாநிதிகள், புதல்வர்களும் புதல்வியர்களும் அ.ஐ. நாட்டிலும் அவுத்திரேலியாவிலும் உள்ளனர்.

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபராக இருந்த சைவப் பேரறிஞர் க. சிவபாதசுந்தரம் அவர்களின் தொடர்பினால் இவர் தமிழ்ப் பற்றும் ஆர்வமும் உள்ளவராய் மொழி, சமயம், வரலாறு தொடர்பான பல நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வு நோக்கோடு கற்றார். பொருளியல், அறிவியல் ஆகிய இருதுறைகளிலும் பட்டம் பெற்றமை இவரது ஆய்வுகள் சிறப்புப் பெறத் துணையாயின். வானியற்துறையிலும் வல்லுநர் ஆக விளங்கினார்.

இவர் “பொருளாதார பெறுமதிக் கொள்கை”. நாம் தமிழர், சைவ சித்தாந்தம், கல்யாணப் பொருத்தம், மரணத்திpன் பின் என்னும் ஐந்து சிறந்த நூல் எழுதி வெளியிட்டுள்ளார். பொருளாதாரப் பெறுமதிக்கொள்கை என்னும் நூல் இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்கள வெளியீடாக 1964 ஆம் ஆண்டு வெளிவந்தது. நாம் தமிழர் – கல்யாணப்பொருத்தம் என்னும் நூல்கள் இலங்கையிலும், சைவ சித்தாந்தம், மரணத்தின் பின் என்னும் நூல்கள் தமிழகத்திலும் குமரன் பதிப்பக நூல்களாக வெளிவந்தன. இந் நூல்கள் சிறந்த நான்கு துறைகளுக்கு உரிய சிறந்த நூல்கள். இந் நூல்கள் இவரது ஆய்வுத் திறனையும் நுண்ணிய அறிவுத் திறனையும் வெளிபடுத்துவன. மரணத்தின் பின் என்பது சிறந்த மெய்யியணற்துறை நூல், கிழக்கு – மேற்கு மெய்யியற் கோட்பாடுகளை ஆராய்ந்துள்ளது.

தமிழறிஞர் சங்கரப்பிள்ளை அவர்கள் உயர்ந்த சமுதாய நோக்கும் உணர்வும் உள்ளவர். அதனாற் கொழும்புத் தமிழ்ச் சங்க ஆயுள் உறுப்பினராக 1950ஆம் ஆண்டிற் சேர்ந்தார். 1977 – 79 ஆண்டுகளிற் துணைத் தலைவராகவும் 1980 – 83 ஆண்டுகளில் தலைவராகவும் இதன் பின் காப்பாளருள் ஒருவராகவும் விளங்கினார். உயிர் நீங்கும்வரை சங்கத்தோடு தொடர்பு கொண்டு ஊக்கம் தந்தார்.

இவர் தலைவராக இருந்தபோது சங்கத்தின் கணக்ணகு வைக்கும் முறையை நன்கு நெறிப்படுத்தினார். ஆண்டுதோறும் மாணவர்க்கும் வளர்ந்தவர்க்கும் வழங்கும் பல்துறைத் தேர்வுப் பரிசில்களுக்கு நிரந்தரத் தேர்வுப் பரிசில் மூல நிதியங்களை ஏற்படுத்தினார். இவர் வகுத்த முறையின்படி பலர் வழங்கிய மூலநிதிகள் வங்கியில் நிரந்த வைப்பில் இட்டு அவைகளில் இருந்து ஆண்டுதோறும் வட்டியாகக் கிடைக்கும் பணம் அவ்வத் துறைக்குப் பரிசிலாக வழங்கப் பெறுகிறது. இதனால் நாவன்மை. தமிழ்த்திறன், கவிதை, ஆய்வுக் கட்டுரை, நூலாக்கம் முதலிய பதினைந்து துறைகளுக்கு நிதிப்பரிசில்கள் வழங்கப் பெறுகின்றன.

இப் பேரறிஞர் 18-2-90 ஆம் நாள் அ.ஐ. நாட்டில் கலிபோனியாவில் உலகு நீத்தார். இவரது தகனக் கிரியைகள் முறைப்படி அங்கு நிகழ்ந்தன. இவரது அத்தி இந்தியாவில் உள்ள புனித தலங்களில் இடப்பெற்றன. இவரது மனைவியாரும் இளைய மகனும் இதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்தனர்.

இலங்கையிற் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இவருக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சி நிகழ்ந்தது. சட்டப் பேரறிஞர் எச். டபிள்யூ. தம்கையா கியூ சி. முதுபெரும் எழுத்தாளர் செ. கணேசலிங்கன், புலவர் த. கனகரத்தினம், இலங்கை வர்த்தக சம்மேளன நிருவாகத்தர், பெரும்பான்மை இனத்தவர் ஒருவர், இவரது நண்பர் ஒருவர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

தமிழின் பல துறைகளிலும் ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோராகிய இப்பேரறிஞரின் புகழும் பணிக்கும் இவர்தம் நூல்கள் உள்ளவரை நிலைத்து நிற்பன. தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் நாட்டிற்கும் கல்வித் துறைக்கும் இவர் செய்துள்ள பயனள்ள பணிகள் பல ஆகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7409
Date:
RE: A SHORT HISTORY OF THE TAMILS UP TO BRITISH PERIOD- நாம் தமிழர் -பொ. சங்கரப்பிள்ளை
Permalink  
 


அணிந்துரை
பொருளியல் துறையிலே உயர் பட்டங்கள் பெற்று அத்துறையிலே அறிஞராக விளங்கிய திரு. பொ.சங்கரப்பிள்ளை அவர்கள் தமிழ் மக்கள் பெருமையுறும் அளவுக்கு பல்வேறு துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவராக விளங்கியர். தமிழியல், தமிழர் வரலாறு, தமிழ் இலக்கியம், அரசியல், சமூகவியல், மெய்யியல் ஆகிய பல்வேறு நெறிகளிலும் துறைபோக கற்றவராகவும் விளங்கியவர். இத்துறைகளிலே மேலோட்டமான முறையிலன்றி அகலமாகவும், ஆழமாகவும் கற்க முற்பட்டவர்.

திரு. சங்கரப்பிள்ளை அவர்கள் 1979ஆம் ஆண்டு யூன் மாதம் வெளியிட்ட நாம் தமிழர் என்ற இந்த நூல் இவ்வாண்டு மீள் பதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்படவிருப்பது குறித்து பெருமகிழ்வடைகிறேன். இந்நூல் ஒரு வரலாற்று நூல் போன்று தென்பட்டபோதிலும் - ஆங்கில தலைப்பு அவ்வாறு சுட்டுகின்றது - இந்நூல் தமிழர்களின் அரசியல் வரலாற்றினை மட்டும் ஆய்வதுடன் நில்லாது அவர் தம் பணள்பாடு, கலைகள், இலக்கியங்கள், சமயம், கைத்தொழில், விவசாயம் போன்ற பொருளாதார முயற்சிகள் போன்றனவற்றை வரலாற்று ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் அணுகுகின்றது.

பழந்தமிழ் இலக்கியங்களில் மிகுந்த புலமையுடைய திரு. சங்கரப்பிள்ளை அவர்கள் பரந்த தமிழ் இலக்கிய பரப்பிலிருந்து ஏராளமான தகவல்களையும் கருத்துக்களையும் அகழ்ந்தெடுத்து தமது ஆய்வு நூலிலே விரிவாக பயன்படுத்தியுள்ளார். பழந்தமிழ் இலக்கியங்கள் வெறும் இலக்கியங்கள் மட்டுமன்றி ஒரு இனத்தின் வரலாற்று பண்பாட்டு, சமய பொருளாதார, சமூக ஆய்வுகளுக்கும் உதவுவன என்பதை திரு. சங்கரப்பிள்ளை அவர்கள் நன்கு நிரூபித்துள்ளார். அத்துடன் அவர் தமிழ் வரலாறு, இலக்கிய வரலாறு பற்றிய ஏராளமான நூல்களைக் கற்று அவற்றில் பொதிந்துள்ள ஆய்வு முடிவுகளை தமது நூலில் நன்கு பயன்படுத்தியுள்ளார்.

தமது நூலில் அவர் ஆராய்ந்துள்ள பன்னிரண்டு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மேலும் பரந்த ஆய்வுக்கான விடயங்களாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தமிழியல் ஆய்வாளர்கள் தமது ஆய்வுக்கான விடயங்களை தெரிவு செய்ய இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமையும்.

இன்று நாம் வேற்றுமையில் ஒற்றுமை காணுகின்ற காலப் பகுதியிலே வாழுகின்றோம். இன்றைய உலக நாடுகளில் பெரும்பாலானவை பல இன சமுதாயங்களை கொண்டனவாக விளங்குகின்றன. எமது நாடும் ஒரு பல இன மக்களைக் கொண்ட சமுதாயம் என்று இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவமும் பேணிப் பாதுகாக்கப் படுவதற்கு அவ்வினத்தின் பண்பாடு, மொழி, கலை இலக்கிய மரபுகள் போன்றன நன்கு இனங்காணப்பட்டு பேணப்படுவதோடு அவற்றை மென்மேலும் வளர்க்கவேண்டும் என்ற உணர்வும் உந்துதலும் வளர்முக நாடுகளில் மட்டுமல்லாது மேலை நாடுகளிலும்கூட இன்று காணப்படுகின்றது.

ஒரு காலத்தில் மேலை நாடுகளில் பெரும்பான்மை இன் மக்களோடு இணைந்து கலந்து விடுவதாக பல பொருளாதார நன்மைகள் உண்டென்று அந் நாடுகளில் சிறுபான்மை இனத்தவர்கள் கருதினர். ஆயினும் 1960இல் மேலைநபட்டு சிறுபான்மையினரும் தமது இனத் தத்துவத்தை பேணுவதில் மிகுந்த அக்கறை காட்டத் தொடங்கினர். இன்று எவரும் தான் தன் இனம் என்று சிந்திப்பதிலோ அவ்வினத்துக்குரிய மரபுகளை பேணுவதிலோ கூச்சமடைவதில்லை. இதற்கு மாறாக அவரவரது இன அடையாளங்களும் தனித்துவ அம்சங்களும் அவர்களுக்கு பெருமையூட்டுவனவாக இருக்கின்றன.

இப்பின்னணியில் பொ. சங்கரப்பிள்ளை அவர்களுடைய “நாம் தமிழர்” என்ற இந் நூல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறதென்பதை இந் நூலை படிப்போர் நன்கு உணர்வர். தமிழரின் வரலாற்றுத் தொன்மையும் பண்பாட்டு கலை இலக்கியப் பெருமைகளையும் தெளிவுற எடுத்துக்காட்டும் இந் நூலை எழுதிய திரு. பொ. சங்கரப்பிள்ளை அவர்கள் தமிழ்கூறும் நல்லுலகினால் என்றென்றும் நினைவு கூரப்படவேண்டியவா.
சோ. சந்திரசேரம்,
சமூக, விஞ்ஞான கல்வித்துறை தலைவர்
கல்வி போதனா பீடம்,
கொழும்பு பல்கலைக்கழகம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7409
Date:
Permalink  
 

 உள்ளடக்கம்

பக்கம்
முதலாம் அத்தியாயம்
நாம் தமிழர் 1

இரண்டாம் அத்தியாயம்
ஆரியரும் திராவிடரும் 13

மூன்றாம் அத்தியாயம்
மொழிகளும் சமயமும் 28

நான்காம் அத்தியாயம்
பண்டை இந்தியாவும் இலேமூரியாவும் 37

ஐந்தாம் அத்தியாயம்
சிந்துவெளி நாகரிகம் - நாம் தமிழர் 43

ஆறாம் அத்தியாயம்
சங்க காலத்தில் நாம் தமிழர் – 
தலைச்சங்கமும் இடைச்சங்கமும் 51

ஏழாம் அத்தியாயம்
தொல்காப்பியர் காலத்தில் - நாம் தமிழர் 64

எட்டாம் அத்தியாயம்
கடைச்சங்க காலம் - நாம் தமிழர் 73

ஒன்பதாம் அத்தியாயம்
கடைச்சங்க காலம் (தொடர்ச்சி) 90

பத்தாம் அத்தியாயம்
கடைச்சங்க காலத்துக்குப் பின் - நாம் தமிழர் 113

பதினோராம் அத்தியாயம்
ஈழத்தில் - நாம் தமிழர் 126

பன்னிரண்டாம் அத்தியாயம்
எமது மொழி தமிழ் 141

அட்டவணை 1
கால அட்டவணை 152

அட்டவணை 2
கடைச்சங்ககாலப் புலவர்களிற் சிலரும் நூல்களும் 154

அட்டவணை 3
யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் பட்டியல் 158

அட்டவணை 4, 5
ஆதார மேற்கோள் நூல்கள் 163



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard