Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மொழிகளும் சமயமும்

Guru

Status: Offline
Posts: 7474
Date:
மொழிகளும் சமயமும்
Permalink  
 
மொழிகளும் சமயமும்

சமஸ்கிருதத்தை வட மொழியாகவும் தமிழைத் தென்மொழியாகவும் எடுத்துக் கொள்ளுகிறோம். வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் வேறு பல மொழிகள் இருப்பதை நாம் உணருவதில்லை. வடமொழியா தென்மொழியா சிறந்தது? எது காலத்தால் முற்பட்டது? குறித்த சொல் வடசொல்லா? தமிழ்ச் சொல்லா? இப்படிப்பட்ட வீண் வாதங்களில் ஈடுபடுகிறோம். ஒருசொல் வடமொழியிலும் தமிழிலும் இருப்பின் அதை வடசொல்லெனச் சிலர் முடிவு கட்டி விடுகின்றனர். தமிழிலிருந்து அச்சொல் ஏன் வட மொழிக்குப் போயிருக்க முடியாது?

முன்னொரு காலத்திலே இந்தியா முழுவதிலும் (வடக்கிலும் மெற்கிலும் ஈழமும் உட்பட) ஓரின மக்கள் வாழ்ந்தனர். ஒரே திராவிட மொழியையோ கிளை மொழிகளையோ பேசினர். வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் இன்று வழங்கும் மொழிகள் யாவற்றுக்கும் ஏதொவொரு பண்டைத் திராவிட மொழியே மூலமென அறிஞர் கூறுகின்றனர். ஒரு மொழியே பதினெட்டாகியதென மேருமந்திர புராணங் கூறுகிறது. இம் மொழியே எகிப்து, மேற்கு ஆசியா, கிழக்காசிரியா, கிழக்கிந்திய தீவுகள் முதலிய நாடுகளிற் பண்டைக் காலத்தில் வழங்கிய மொழிகள் எல்லாவற்றுக்கும் மூலமொழியாகும் என்கின்றனர். இம்மூல மொழி பண்டைத் தமிழாக இருக்கலாம். அல்ல பண்டைத் தமிழ் தானும் இம்மூல மொழியினின்று தோன்றியிருக்கலாம்.

காலத்துக்குக் காலம் இந்தியாவிற்குட் பல நாடுகளிலிருந்து பலவின மக்கள் புகுந்தனர். அரசுகளைக் கைப்பற்றி ஆண்டனர். இவர்களுடைய குழுப் பேச்சு மொழிகள் கலந்து மாற்றமடைந்தன. வடஇந்தியாவிற்குள்ளே தான் பிறநாட்டுக் குழுக்கள் பெருந்தொகையாகப் புகுந்த படியினால், வட இந்திய மொழிகளே பெருமாற்றமடைந்தன. ஒரு மொழியின் மூலத்தை அதன் சொற்றொகுதியிலிருந்து மட்டுங் காணமுடியாது. அதன் இலக்கண வரம்புகளிலிருந்தும் வசன அமைப்பிலிருந்துங் காண வேண்டும். இவ்வாறு ஆராய்ந்த மொழியியல் வல்லுநர் வட இந்திய மொழிகளுக்கும் திராவிடமே மூலமொழி எனக் கூறுகின்றனர்.

கி.மு. 2000 அளவிலும் அதற்குப் பின்னரும் மத்திய ஆசியாவிலிருந்தும் ஈரானிலிருந்தும் பல நாடோடிக் குழுக்கள் இந்தியாவிற்குட் புகுந்தன. இவை ஏதோவொரு குழுப் பேச்சு மொழியுடன் வந்தன. இது திருந்தாத கரடு முரடாண பேச்சு மொழி எழுத்தும், இலக்கண வரம்புகளும் இல்லாத மொழி, இக்குழுக்கள் இந்தியாவிற்கு வந்தபின் இவர்களுடைய குழுப் பேச்சு மொழி இலக்கணமும் எழுத்துமுடைய திராவிட மொழிகளுடன் கலந்தது. இலக்கணத்தையும் எழுத்துக்களையும் பல்லாயிரஞ் சொற்களையுங் கடன்பட்டது. மேலும், வட இந்தியாவில் வழங்கிய திராவிட மொழிகள் இக்குழுப் பேச்சு மொழியுடன் கலந் பெருமாற்றமடைந்தன. இன்று வழங்கும் வட இந்திய மொழிகள் பெரும்பாலும் இக்கலப்பிலிருந்து தோன்றியவையாகும்.

சமஸ்கிருதம் பிற்காலத்திலே தோன்றிய மொழி. செயற்கை மொழி, செம்மையாக்கப்பட்டது என்பது இச்சொல்லின் கருத்தாகும். ஆரிய – திராவிடர் பிற்காலத்தில் உருவாக்கிய மொழி. பண்டிதர்களினதும் படித்தவர்களினதும் மொழி. அரசகருமமொழி, சங்ககாலத்துக்குப் பின்பு பல்லவர், களப்பிரியர், சாளுக்கியர் கங்கர் இராட்டிரகூடர் ஆட்சிக் காலத்திற் சமஸ்கிருதம் 500 ஆண்டுகள் தமிழ் நாட்டிலும் ஆட்சி மொழியாக இருந்தது. இக்காலத்திலே தான் தமிழில் அதிக வடமொழிக் கலப்பு உண்டாகியது. இவ்விடைக் காலத்திற் சமஸ்கிருதம் இந்தியா முழுவதிலும் மட்டுமன்றிப் பிறநாடுகளிலும் பெருஞ் செல்வாக்கடைந்தது. இந்து சமய ஞானங்கள் எல்லாம் பொதிந்த மொழி சமஸ்கிருதமாகும். ஆதலால், இந்துக்களாகிய நாம் மத அடிப்படையில் இம் மொழியைத் தெய்வ மொழியாகக் கருதுகின்றோம். இம்மொழியும் இந்திய மொழியே. சில தமிழர்களிடையில் வடமொழித் துவேஷத்தைக் காண்கிறோம். இதற்கு அறிவின்மையே காரணமாகும். ஆரியமும் தமிழும் ஒரு சாதியார் வழங்கிய இரு வேறு பாஷைகள், மூலம் ஒன்றே.

“மாரியம் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்முட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.”

தமிழ்பெருவள நாட்டிலே தோன்றிக் குமரி நாட்டிலே வளர்ந்து இந்திய முழுவதும் பரவிய மொழியாகும். இஃது எக்காலத்திலே தோன்றியதென வரையறை செய்ய முடியாத அளவுக்குப் பழமையுடையது.

“தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்த்திடு
சூழ்கலை வாணரும் -இவள்
என்று பிறந்தவள் என்று ணராத
இயல்பின ளாம் எங்கள் தாய்.” (பாரதி)

பழமையில் தமிழுக்கு ஒப்பாக வேத மொழி ஒன்றை மட்டுமே குறிப்பிடலாம். வேத மொழியா தமிழா முந்தியது எனுங் கேள்விக்கு விடை ஆரியரைப் பற்றிய எமது கொள்கையைப் பொறுத்ததாகும்.

வேத மொழி அடிப்படையிற் கி.மு. 2000 அளவில் மத்திய ஆசியாவிலிருந்தும் ஈரானிலிருந்தும் இந்தியாவிற்குட் புகுந்த குழுக்களின் பேச்சு மொழி, இந்திய திராவிட மொழிகளுடன் கலந்து வேற்றுமையடைந்தது. இக்கருத்தை மேனாட்டவர் பத்தொன்பதாம் நூற்றாண்டிற் பரப்பினர். இக்கொள்கை உண்மையாயின், வேத மொழி தமிழ் மொழிக்கு மிகமிகப் பிந்தியதாகும்.

(2) இக் கருத்தை இந்துக்களாகிய நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மிகப்பழைய காலத்திலே இந்தியாவில் வேதங்கள் தோன்றின. முனிவர்களும் மெய்ஞானிகளும் சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தனர். வேதமொழியும் பண்டை இந்திய மொழிகளில் ஒன்று. ஆனாற் பிற்காலத்திற் புகுந்த குழுக்களின் பேச்சு மொழியுடன் கலந்து வேற்றுமையடைந்தது. இக்கொள்கை உண்மையாயின், வேத மொழியும் தமிழைப் போன்று எக்காலத்திலே தோன்றியதென வரையறைசெய்ய முடியாத அளவுக்குப் பழமையுடையது.

“வடமொழியைப் பாணினிக்கு
வகுத்தருளி அதற்கிணை யாத்
தொடர்புடைய தென் மொழியை
உலகெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார்
கொல் லேற்றுப் பாகர்.” (காஞ்சி புராணம்)

இம் மொழிகளின் பழமையை நோக்கியே இவை இறைவனால் அருளப்பட்ட மொழிகள் எனப்படுகின்றன. அறிவும் அன்பும்போல சக்தியுஞ் சிவனும்போல அத்துவிதமான மொழிகள்.

இப்போது மொழியியல் ஆராய்;ச்சியாளர் சிலரின் கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

(1) வடமொழி இந்தியாவில் நுழைந்த காலந் தொட்டுத் திராவிடச் சொற்களைக் கடன்பட்டது. அக்காலத்தில் திராவிடர் பலுச்சிஸ்தானிலிருந்து வங்காளம் வரை பரவியிருந்தனர். அவர்களுடைய கலைகளையும் சமயத்தையும் மொழியையும் ஆரியம் மீது தெளித்தனர் – கலாநிதி ளு.மு. சட்டச்சி.

(2) எ.ஒ. என்பன பாளி மொழியிற் காணப்பட்டாலும், பல்லிடத்துப்பிறக்கும் எழுத்துக்களை நாவிற் பிறப்பனவாக உச்சரித்தமை, ஆரியருக்கு முற்பட்ட மொழியைக் காட்டுகிறது. திராவிடரின் முன்னோரே இந்தியாவிற் பாளி மொழி பேசினவராதல் வேண்டும். வங்க மொழியுந் திராவிட மொழிக்குப் பெரிதுங் கடமைப்பட்டது. தமிழில் உள்ள ‘கள்’ விருதியே வங்க மொழியிற் குலீ, குவா என வழங்கப்படுகிறது – கலாநிதி சு.பு. பண்டக்கார்.

(3) வடமொழி இந்து – ஐரொப்பிய மொழி இனத்தைச் சேர்ந்தது. ஆனால், மற்ற இந்து – ஐரொப்பிய மொழிகளில் இல்லாத மிகப் பல வினைப் பகுதிகளும் சொற்களும் வடமொழியிற் காணப்பட்டவையாகும். வட இந்திய மக்கள் தூய ஆரியரல்லர். ஆரியருந் திராவிடருங் கலந்தவர் - இந்திய மொழியியல் வரலாறு – கியேர்சன்.

(4) சிந்துவெளி மக்களின் மொழி ஆரியருக்கு முற்பட்டது. இதற்குரிய மூன்று காரணங்களாவன:-

(அ) ஆரியர் வருவதற்கு முன் வட இந்தியாவிற் சிறந்த நாகரிகத்தோடு வாழ்ந்தவர் தி ராவிடரேயாவார்.

(ஆ) சிந்துவெளிக்கு அண்மையிலே இன்றளவும் திராவிடமொழிகள் காணப்படலாற், சிந்துவெளியில் ஆரியருக்கு முன் பரவியிருந்த மொழி திராவிடமாயிருக்கவேண்டும்.

(இ) திராவிட மொழிகள் ஒட்டுமொழிகளாதலின் அவற்றுக்கும் சுமேரியருடைய ஒட்டு மொழிகளுக்கும் உள்ள தொடர்பை நன்கு சோதித்து உணரவேண்டும் - சேர் யோன் மாசல் மொகஞ்சதாரோவும் சிந்துவெளி நாகரிகமும்.

(5) வடமொழி, பிராகிருதம், திராவிடம் இம்மூன்றையுஞ் சோதித்துப் பார்ப்பின், பண்டைக்காலத்தில் வடஇந்தியா முழுவதிலும் திராவிடம் இருந்ததென்பது தெளிவு. பாளி முதலிய பிராகிருத மொழிகள் உருபுகளைச் சொற்களின் முற்கூட்டும் வடமொழிமுறையை அறவே கைவிட்டுத் திராவிட முறைப்படி சொற்களின் பின்னரே உருபுகளைக் கூட்டினமையாலென்க – திராவிட ஆராய்ச்சிகள்.

(6) புதிய கற்கால மக்கள் இந்தியா முழுவதுந் திராவிடமொழிகளையே பேசினர். விந்திய மலைப்பகுதிகளைச் சேர்ந்த சில இடங்களிலே தான் அவுத்திரலொயிட் (முண்டா) மொழிகள் பேசப்பட்டன. இன்று வட இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளும் ஆரியர் வரகவ்கு முன் திராவிட மொழிகளாக இருந்தவையாகும். அவை வடமொழியின் கலப்பால் தமது உண்மை இயல்பை இழந்துவிட்டன. அவை வடமொழியையோ பிராகிருதத்தையோ சேர்ந்தவைகளல்ல. இவ்விரண்டின் கூட்டுறவினால் உருவங்கெட்டவை. பஞ்சாப்பிலிருந்து ஒரிசாவரை பேசப்படுகின்ற பல்வேறு வட இந்திய மொழிகளும் இலக்கணவமைப்பில் தென்னிந்திய மொழிகளை ஒத்தனவாகும். பால், எண், வேற்றுமை உருபுகள், பெயர்களோடு பொருந்துதல், எச்சங்கள், வினைச்சொல்லின் பலவகைக் கூறுபாடுகள், வாக்கியவமைப்பு, சொல், அலங்காரம் முதலிய அம்சங்களில் வட இந்திய மொழிகள் திராவிட மொழிகளையே ஒத்தன.

இன்றுள்ள வட இந்திய மொழிகள் ஆரியர் வரகவ்கு முன் திராவிட மொழிகளாக இருந்தன. இன்று ஆரியமொழிக் கலப்பினால், அடிப்படையில் திராவிடமாகவும் மற்றவற்றில் ஆரியமாகவும் இருக்கின்றன@ வடமொழி ஒருபோதும் பேசப்பட்ட மொழியன்று. எனவே அது வட இந்திய மொழிகளின் பிறப்புக்குரிய பேச்சு மொழியாக இருந்திருக்கமுடியாது. வட இந்திய (திராவிட) மொழிகள் வடமொழியோடு பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்புகொண்டிருந்தமையினால் அவை தமது பண்டை உருவை இழந்து தமிழ் முதலிய மொழிகளிலிருந்து வேறுபட்டனபோல மேற்போக்கிற் காணப்படுகின்றன. இம்மேற்போக்கான நிலையை மட்டுமே கவனித்து “வட இந்திய மொழிகள் வேறு, தென்னிந்திய மொழிகள் வேறு” என ஆழ்ந்த அறிவற்ற சிலர் நினைத்தனர். இன்று பேச்சு வழக்கிலுள்ள இந்திய மொழிகள் அனைத்தும் திராவிடக் கிளைமொழிகளே” இந்தியாவிற் கற்காலம் - P.வு.னு. ஐயங்கார்.

(7) இன்றைய தமிழ் மொழியும் தமிழ் நாடு வேதகால நாகரிகத்துக்கு நெடுந் தொலைவில் இருக்கின்றன. எனினும் தமிழின் பழைய மொழியான திராவிடம் வேதகால ஆரியத்துக்கு அண்மையில் இருந்தது. வேதகால மொழியிலேயே பெரு மாற்றத்தை உண்டாக்கிப் பிற்காலப் பிராகிருத மொழியையும் இன்றைய வடஇந்திய மொழிகளையும் உண்டாக்கி விட்டதென்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் - கீழத்திசை மொழிகளின் ஆராய்ச்சிகள் - சிறீ வெங்கடேஸ்வரி.

(8) காக்கேசிய சித்திய குழுக்கள் இந்தியாவிற்கு வரமுன் திராவிட மொழிகளே வடமேற்கு இந்தியாவிற் பேசப்பட்டவை என்பதில் ஐயமில்லை – பேராசிரியர் றாப்சன்.

(9) சிந்துவெளி மக்கள் திராவிடராவர். ஒரு திராவிடமொழி பேசினர். இம்மொழிக்கும் தமிழுக்கு தொடர்புண்டு. மொழிகள் எல்லாவற்றிலும் தமிழ் மொழியே மிகப் பழையது என்ற கருத்தை இது வலியுறுத்துகிறது – வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரியார்.

(10) பண்டை மொழிகளில் தமிழ் மொழியே மிகச் சிறந்தது. இலக்கண இலக்கியமுடையது – மாக்ஸ் முல்லர்.

(11) பண்டை மொழிகளாகிய சமஸ்கிருதத்திலும் கீபுறூ மொழியிலும், கிரேக்க மொழியிலும் பல தமிழ்ச் சொற்கள் உள – றையிஸ் டேவிஸ்.

(12) சுருங்கச் சொல்லி விளங்கவைப்பதில் தமிழுக்கு நிகரான வேறெம் மொழியையும் காணமுடியாது. இறையுணர்ச்சிக்குத் தமிழ் மொழியே சிறந்த கருவியாகும் - வணக்கத்துக்குரிய பேசிர்சிவெல்.

(13) கிரேக்க மொழியைப் பார்க்கினும் தமிழ் செம்மையுந்திட்பமும் உடையது. இலத்தின் மொழியைப் பார்க்கினும் சொல்வளம் உடையது. நிறைவிலும் ஆற்றலிலும் தமிழ் தற்கால ஆங்கிலத்தையும் சர்மன் மொழியையும் ஒத்ததாகும் - கலாநிதி வின்சிலோ.

(14) இந்திய நாகரிகத்தின் அடிப்படை திராவிடர் நாகரிகமும் மொழியுஞ் சமயமுமாகும் - கலாநிதி கில்பேட்சிலேட்டர்.

எல்லாத் திராவிட மொழிகளுக்கும் தமிழ் மொழியே மூலமும் முதலுமானதெனத் தமிழராகிய நாம் கூறுகின்றோம். ஆனால் தமிழும் உட்பட எல்லாத் திராவிட மொழிகளும் ஏதோவொரு மூலத்திராவிட மொழியிலிருந்து தோன்றியிருக்கலாம். இன்றுள்ள தமிழே பண்டைக்காலத்திலும் இருந்ததெனக் கூறமுடியாது. எல்லா மொழிகளுக்கும் மாற்றமும் வளர்ச்சியும் இயல்பாகும். மொழியியல் வல்லுநர் ஒருவர் அளித்த திராவிடக் கிளைமொழி அட்டவணை பின்வருவதாகும்.

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 
திராவிட முதல்மொழி

துளு 
கூ பழஞ் கோகாடி உராசுன்
பிரளகி சிங்களம் 
சங்கத் மால்டோ 
தமிழ்

பழங்
- சிங்களம் கன்னடம் 
செந்தமிழ் 

தமிழ் மலையாளம்
தெலுங்கு கன்னடம் குடகு 

இவற்றுள் திருத்தமுற்ற மொழிகள் ஆறாகும்:- தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு. திருத்தமுறாத மொழிகள் ஆறாகும்:- தூதம், கோதம், கொண்டு, கூ, ஒரியன், இராசமகால். மேலும் இத்திராவிட முதல் மொழியிலிருந்தே சிந்துவெளி மொழியும் ஏனைய வட இந்திய மொழிகளும் தோன்றின.

இந்து மதம்
இந்தியாவையும் இந்து மதத்தையும் பிரிக்க முடியாது. இந்திய நாகரிகம் பண்பாடென்றாலும், இந்து நாகரிகம் பண்பாடென்றாலும் ஒன்றுதான். தத்துவ ஆன்மீகஞானங்களுக்கும் சமயங்களுக்கும் பண்டுதொட்டு இந்தியாவே இருப்பிடமாகும். இந்துமதத்துக்குரிய சிறப்பான அடிப்படைத் தத்துவங்களுண்டு. இவை இறைவன், உயிர், உடம்பு எனும் முப்பொருள் விளக்கம், மறுபிறப்பு, ஊழ்வினை, ஆலைய வழிபாடு, உருவ வழிபாடு, கொல்லாமை, எல்லா உயிர்களிலும் அன்பு என்பவையாகும்.

“அன்பும் சிவமும் இரண்டென் பரறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமிர்ந்திருந்தாரே.”

இந்துமதக் கொள்கைகளெல்லாம் வேதத்தில் உளவென்பது பிற்காலத் திராவிடப் பிராமணரின் பிரசாரமாகும். இந்து மதத்தின் மேலே குறிப்பிட்ட சிறப்பம்சங்களை வேதத்திற் காணவியலாது. இன்று சிலர் இவற்றை வேதப்பாடல்களுக்குள் வலிந்து புகுத்துகின்றனர். ஆரியரின் வேதத்தில் முப்பொருள் விளக்கமில்லை. மறுபிறப்பு, ஊழ்வினை முதலியவையில்லை. ஆலய வழிபாட்டையும் உருவ வழிபாட்டையும் வேதகால ஆரியர் வெறுத்தனர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரையும் வேதாந்திகள் இவற்றை முரண்கோட்பாடுகளாகக் கருதினர்.

இறிக் வேதத்திற் பத்தாம் மண்டிலம் தவிர்ந்த – ஏனையவை நாடோடி மக்களின் பாடல்களாகும். பத்தாம் மண்டிலம் பிற்காலத்தில் திராவிடருடன் கலந்து நாகரிகமடைந்த பின்பு எழுதப்பட்டதாகும். இந் நாடோடி மக்கள் மத்திய ஆசியாவில் அலைந்து திரிந்தபோது இயற்கைத் தோற்றப்பாடுகளினாற் பெரிதும் வருந்தினர். இத் தோற்றப்பாடுகளை உருவகித்து அவற்றைச் சாந்தி செய்யப் பாட்டுகள் பாடினர். இவை இந்திரன் (இடிமுழக்கம்) வருணன் (மழை), வாயு (புயற் காற்று) அக்கினி முதலியவையாகும். இந் நாடோடி மக்கள் அறத்தை அறியாதவர். மறவாழ்க்கை நடத்தினர். கொலை செய்தனர். கொள்ளையடித்தனர், மது அருந்தினர், புலால் உண்டனர், அநாகரிக மூர்க்கம் பெண்களை அடிமையாக்கினர். பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டனர். உபநிடதங்களும் ஆகமங்களும் பண்டத் திராவிடர் வேதங்களாகும். இவை பிற்காலத்திலே வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டன.

“இந்து மதத்திலுள்ள கர்மம், மறுபிறப்பு, யோகம், சிவன், சக்தி, விட்டிணு முதலிய மதக் கொள்கைகளும், ஆசாரங்களும், கோவில்களில் நடைபெறும் பூசை முறைகளும் திராவிடருடையவையாகும். புராணங்களும் இதிகாசங்களும் கூறுங் கதைகளும் திராவிடருடைய வையாகும். கலைகள், கைத்தொழில்கள் பயிர் செய்கை முறைகள் திராவிடருடையவை.” – எஸ்.கே. சட்டச்சி.

பண்டைத் தமிழ் வேதங்கள் இருந்தன. இவை, மறை எனப்பட்டன. வேதம், மறை எனுஞ் சொற்களின் கருத்துக்கள் ஒன்றே. மறை எனுந் தமிழ்ச் சொல்லை மொழி பெயர்த்துத் தமது நாடோடிப் பாடல்களுக்கு நாமஞ் சூட்டினர். தமிழ் மறைகள் பற்றிய குறிப்புக்களை தமிழ் இலக்கியத்திற் காணலாம். இம்மறைகள் குமரி நாட்டின் மலைகளில் ஒன்றாகிய மகேந்திரத்தில் தோன்றியவை என மணிவாசகப் பெருமான் கூறுகிறார்.

“மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்”
“கேவேட்டாகிய வாகமம் வாங்கியு
மற்றவை தம்மை மாந்திரத் திருந்து
உற்றவைம் முகங்களாற் பணித்த ருளியும்.”

தமிழ் மறைகள் முப்பொருள் உண்மை. வினைப்பயன், மறு பிறப்பு, கொல்லாமை முதலிய தத்துவ ஞானங்களைக் கூறும் நூல்களாகும். இந் நூல்கள் எமக்குக் கிடைத்தில. பிற்காலத்தில் எழுந்த திருக்குறளும் திருமந்திரமும் பண்டைத் தமிழ் மறைகளின் பொருள்களைக் கூறுகின்றன. திராவிட மறைகளைப் பிற்காலத்திற் பிராமணர் உபநிடதங்களாகவும் ஆகமங்களாகவும் வடமொழியில் எழுதினர்.

ஆலயவமைப்பு, கிரியை முறைகள், வழிபாட்டு முறைகள் முதலியனவற்றை ஆகமங்கள் கூறுகின்றன. ஆலய வழிபாடோ உருவ வழிபாடோ இல்லாத ஆரியர் இந் நூல்களை எவ்வாறு எழுதியிருக்கலாம்? வட மொழியில் இன்றுள்ள ஆகமங்கள் யாவும் திராவிட மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவையாகும். புராணங்களும் இதிகாசங்களும் பெரும்பாலும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட வரலாறுகளைக் கூறுகின்றன. இவை திராவிட மொழிகளில் இருந்திருக்கவேண்டும். பிராமணர் வடமொழியில் மொழி பெயர்த்தபோது, இவற்றைத் திரித்தும் பெருக்கியும் கட்டுக்கதைகளைச் சேர்த்து தமது கொள்கைகளைப் புகுத்தியும் எழுதினர்.

சைவமே தமிழர் சமயமாகும். இச் சமயம் அனாதியானது. சைவ சமயக் கொள்கைகளை ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தொல்காப்பியத்திற் காணலாம்.

“தென்னா டுடைய சிவனே போற்றி
எந் நாட்ட வருக்கும் இறiவா போற்றி.”

சிவநெறியும் இலிங்க வழிபாடும் பண்டைக் காலத்தில் நடுநிலக்கடலக நாடுகள் எல்லாவற்றிலும் பரவியிருந்தன. ஆனாற் சைவமே எல்லாத் திராவிட மக்களினதுஞ் சமயம் எனக் கூறமுடியாது. இது தமிழ் வேளீர் சமயமாகும். திராவிடக் குலங்களிடையில் வழிபாடுகள் வித்தியாசப்பட்டனவாக இருந்தன.

சங்க காலத்திற்குப் பின்பு தென்னாட்டிற் சமணமும் பௌத்தமும் ஐந்து நூற்றாண்டுகள் பெருஞ் செல்வாக்கடைந்திருந்தன. இவை வடநாட்டிலே தோன்றியபோதிலும் பௌராணிக மதத்திற்கு எதிரான புரட்சிகளாகும். வேத சமயம் திராவிடர் சமயத்துடன் சேர்ந்து பௌராணிக மதமாயிற்று. சங்க காலத்துக்குப் பின்பு பௌராணிக மதமும் சைவமுங் கலந்தன. சமயத்துறையில் இந்திய மக்கள் “எம்மதமுஞ் சம்மதம்” என்ற சமரச மனப்பான்மையுடையவர். இந்து மதத்திற் பல சமயங்களுங் கொள்கைகளுங் கலந்தன. ஆனால், அடிப்படையில் இந்து மதம் திராவிடர் சமயமாகும். இது நடுநிலை நின்று ஆராய்ந்த அறிஞர் பலரின் கருத்தாகும்.

“இந்து சமயம் பண்டைத் திராவிட சமயமாகும். ஆரியர் வருகையினாற் சில அற்ப மாற்றங்கள் அடைந்தது.”
-சேர் சாள்ஸ் எலியொற்.

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
பண்டை இந்தியாவும் இலேமூரியாவும்
Permalink  
 
பண்டை இந்தியாவும் இலேமூரியாவும்

முன்னொரு காலத்திலே விந்திய மலைக்கு வடக்கே ஒரு மாபெருங் கடல் இருந்தது. அக்காலத்திற் கங்கைச் சமவெளியோ இமயமலைத் தொடரோ இருக்கவில்லை. இவை ஆழ்கடலுக்குள்ளிருந்தன. இக்கடல் இந்தியாவிலிருந்து நடுநிலக்கடல் வரையும் - மேலும் மத்திய ஐரோப்பா வரையும் - பரந்து கிடந்தது. இன்றுள்ள பல நாடுகள் - கங்கைச் சமவெளி, காஸ்மீர், பாகிஸ்தானிற் பெரும்பகுதி, பலுச்சிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாரசிகம் முதலியவை – அன்று பெருங்கடலாக இருந்தன. அக்காலத்தில் ஆசியாவின் மத்திய பகுதியிலும் மிகப் பெரிய கடல் ஒன்றிருந்ததெனவும் அது பிற்காலத்தில் அழிந்துள்ளதாகவும் லெனின் கிறாட் பல்கலைக்கழகச் சமுத்திர ஆராய்ச்சிக் குழு ஒன்று சமீபகாலத்திற் கண்டுபிடித்துள்ளது. இக்கடலை எதிர்நோக்கி விந்திய மலைத்தொடர் இருந்தது. விந்திய மலைத் தொடரிலிருந்து ஆறுகள் இக் கடலுக்குட் பாய்ந்தன. விந்திய மலைத் தொடருக்குத் தெற்கே இலேமூரியா எனும் மாபெருங் கண்டம் ஒன்றிருந்தது.

பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு உலகின் பல பாகங்களிற் பற்பல காலங்களில் பெரும் பெயர்ச்சிகள் உண்டாகின. இக்காலங்களை வரையறை செய்யவியலாது. இவற்றினால் நிலத்தின் புறத்தோட்டில் மடிப்புப் பெயர்ச்சிகள் தோன்றின. கடலுக்குள்ளிருந்த வண்டற் படிவுகளும் கடற்பாறைகளும் படிப்படியாக வளர்ந்து உயர்ந்து தற்போதைய இமய மலைத்தொடர் தோன்றிற்று. கடல் மேற்கு நோக்கிப் பின் வாங்கக் கங்கைச் சமவெளியும் மேலே குறிப்பிட்ட நாடுகளுந் தோன்றின. இம்மாற்றங்கள் உண்டாவதற்குப் பல மில்லியன் வருடங்கள் சென்றிருக்க வேண்டும்.

தென் காற்றுக்கள் திபெத்துக்குட் புகுவதை இமயமலைத் தொடர் தடுத்தபடியினால், இமயமலைப் பகுதிகளில் மழை வீழ்ச்சி அதிகமாயிற்று. ஆறுகள் இமயமலைத் தொடரிலிருந்து கங்கைச் சமவெளிக்குட் பாய்ந்து கடலை அடைந்தன. ஆரம்பத்திற் பல அருவிகள் ஒருங்கு சேர்ந்து ஒரு பேராறாக்கிக் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தன எனவும் இந்த ஆறு அசாமிலுள்ள பிரமபுத்தரத்தில் உற்பத்தியாகி யமுனைவரையும் மேற்கு நோக்கிப் பாய்ந்து அங்கிருந்து தென் மேற்கு முகமாகத் திரும்பிச் சிந்துப் பிரதேசத்தின் ஊடாகச் சென்று அரேபியன் கடலை அடைந்தது எனவும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்பு இமயமலை மேலும் உயர்ந்து பல மாற்றங்கள் உண்டாகின. மேலே குறிப்பிட்ட ஆறு பிரிந்து பல ஆறுகளாயிற்று. இவற்றுட் சில கிழக்கு நோக்கிப் பாய்ந்தன.

கங்கைச் சமவெளி தோன்றி நெடுங்காலத்துக்குப் பின்பு தென்னிந்தியாவிலிருந்தும் இலேமூரியாக் கண்டத்திலிருந்தும் மக்கள் படிப்படியாக வடக்கே பெயர்ந்து கங்கைச் சமவெளியில் இமயம் வரையுங் குடியேறினர். கி.மு. 2000 வரையும் பிறநாடுகளிலிருந்து இந்தியாவிற்குட் புகுந்த குழுக்களை இரண்டாம் அதிகாரத்திற் குறிப்பிட்டோம். ஆனாற், கி.மு. 2000 இற்குப் பின்னரும் காலத்துக்குக் காலம் பல குழுக்கள் இந்தியாவிற்குட் புகுந்தன. எக்காரணம் பற்றியோ இந்தியா பிறநாட்டு மக்களைக் காந்தம் போல என்றுங் கவர்ந்தது. பல அநாகரிக நாடோடிக் குழுக்களுக்கு வேட்டைக் களமாயிற்று, பிற்காலத்திற் புகுந்த குழுக்களாவன:-

(1) அலெக்சாண்டர் படைகள்:- கிரேக்கர், ரோமர், மசிடோனியர், துருக்கியர், அரேபியர், ஈரானியர் முதலிய பல நாட்டு மக்கள் இக் கூலிப்படையில் இருந்தனர். இவர்கள் யமுனை ஆறுவரையும் வென்று குடியேறினர்.

(2) குஷான், கன்ஸ் (ர்ரளெ) முதலிய மங்கோலிய மக்கள் வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவிற்குட் புகுந்தனர்.

(3) யவனர், எகிப்தியர், அரேபியர், தென்னிந்திய நகரங்களிலும் துறைமுகங்களிலும் குடியேறினர்.

(4) யூதர்களும், பாசிகளும், இந்தியாவிற்கு வந்து குடியேறினர்.

(5) மகமதியர் படையெடுப்பு - இவர்கள் அரேபியர், ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் முதலிய பல நாடுகளிலிருந்து வந்தனர். பிற்கால அக்பார் முதலிய மகமதியர் மங்கோலியராவர்.

(6) ஐரோப்பியர் – போர்த்துக்கீசர், டச்சுக்காரர், பிறெஞ்சுக்காரர், ஆங்கிலேயர்.

பெருங்கடலுக்குட் பல ஆறுகள் பாய்வர் போலப் பலவின மக்கள் இந்தியாவிற்குட் புகுந்த போதிலும், இந்திய மக்கள், இன அடிப்படையில் திராவிடராவர். நாகரிகத்திலும் பண்பாட்டிலும் இந்துக்களாவர்.

2. இலேமூரியா
இமயமுங் கங்கைச் சமவெளியுந் தோன்றாக் காலத்தே விந்திய மலைக்குத் தெற்கே ஒரு மாபெருங் கண்டம் இருந்தது. தெற்கே தென்துருவம் வரையும், தென்கிழக்கே அவுஸ்திரேலியா வரையும் கிழக்கே கிழக்கிந்திய தீவுகள் வரையும் மேற்கே ஆபிரிக்கா வரையும் இக்கண்டம் பரந்து கிடந்தது. அக்காலத்தில் அவுத்திரேலியா, தென்னாபிரிக்கா இந்தியா முதலிய நாடுகள் தரையால் இணைக்கப் பட்டிருந்தன எனக் கலாநிதி பேசுடோ கூறுகிறார். யாவா சுமாத்திரா முதலியவையும் இக் கண்டத்தின் பகுதிகளாக இருந்தன.

இக் கண்டம் இலேமூரியா அல்லது கொந்வானா எனப்பட்டது. மிகமிகப் பழைய காலத்திலே காலத்துக்குக் காலம் ஏற்பட்ட கடற்கோள்களினால் இக்கண்டத்தின் பெரும் பகுதியும் அழிந்தது. இப்பரந்த நிலப்பரப்பில் இந்து மகாசமுத்திரம் தோன்றிற்று. கடலின் அடியிலுள்ள கருங்கற் பாறைகள் வெடித்தமையால் அவுத்திரேலியா, தென்னாபிரிக்கா, இந்தியா முதலிய கண்டங்கள் விடுபட்டு அகன்று சென்றன எனவும், ஐந்தாம் ஊழியில் இம்மாற்றங்கள் நிகழ்ந்தன எனவும் பேராசிரியர் வெசினர் கூறுகிறார். இம்மாற்றங்கள் படிப்படியாக ஏற்படப் பலவிலட்ச வருடங்கள் சென்றிருக்க வேண்டும். மண்ணியலாளர் பின்வருங் கடற் கோள்களைக் குறிப்பிடுகின்றனர்.

(அ) முதலாவது கடற்கோள் பத்துலட்சம் வருடங்களுக்கு முற்பட்டதாகும். (கி.மு 1,000.000). இப்பெரிய கடற்கோளினால் இக்கண்டம் அவுத்திரேலியாவிலிருந்தும் ஆபிரிக்காவிலிருந்தும் பிரிந்து மிகவுஞ் சுருங்கிற்று. இந்து மகா சமுத்திரந் தோன்றிற்று.

(ஆ) இரண்டாவது கடற்கோள் எட்டிலட்சம் வருடங்களுக்கு முற்பட்டதாகும் (கி.மு. 800,000). இக்காலத்தில் நிலப் பரப்பு மேலுஞ் சுருங்கிக் கடற்பரப்பு விரிந்தது.

(இ) மூன்றாவது கடற்கோள் மூன்றிலட்சம் வருடங்களுக்கு முற்பட்டதாகும் (கி.மு. 300,000).

(ஈ) நான்காவது கடற்கோள் எண்பதினாயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாகும். (கி.மு 80,000).

இப்பழைய இலேமூரியாக் கண்டத்தைப் பற்றி எமது இலக்கியங்களிலும் புராணங்களிலும் எவ்வித குறிப்புக்களுமில்லை. ஆனால் மண்ணியலாளரும் மறைஞானிகளும் இக்கண்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர்.

“இலேமூரியா தென்கோளத்தில் இந்து சமுத்திரம் முழுவதிலும் பரந்து கிடந்தது. கிழக்கே அவுத்திரேலியா வரையும் மேற்கே ஆபிரிக்கா வரையும் தெற்கே தென்துருவம் வரையும் இருந்தது. மூன்றாவது ஊழியிலுண்டான கடற் கோள்களினால் அழிந்தது. (கெலியா விளவத்ஸ்கி அம்மையார்). உறுடொல்வ் ஸ்ரீனா எனுங் சர்மன் மறைஞானி இம்மறைந்த கண்டத்தைப் பற்றிப் பல விபரங்கள் கொடுத்தனர். ஸ்கொற் எலியற் என்பவர் இக்கண்டத்தையும் அத்திலாந்திசையும் வரைபடங்கள் மூலம் விளக்கினர். இக்கண்டம் அழிந்த போது தப்பிப் பிழைத்த மக்ள் இந்தியாவிலுங் கிழக்கிந்திய தீவுகளிலும் ஆபிரிக்காவிலுங் குடியேறினரென எலியற் கூறுகிறார்.

இந்த அழிவுகளுக்குப் பின்னரும் இமயம் தொடக்கம் தென்துருவம் வரையும் ஒரு நாடிருந்தது. இந்நாட்டைப் பற்றியே எமது இலக்கியங்களிலும் புராணங்களிலும் பல குறிப்புகள் உள. இதை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.

(1) வட இந்தியா - இஃது இமயந் தொடக்கம் விந்திய மலைவரையுள்ள நிலப் பரப்பாகும்.

(2) தென்னிந்தியா:- இது விந்திய மலை தொடங்கும் குமரிமரை வரையுள்ள நிலப்பரப்பாகும். இம்மலை மத்திய இரேகையில் இருந்தது. தற்போதுள்ள இலங்கை இப்பகுதியைச் சேர்ந்ததாகும்.

(3) குமரிநாடு – குமரியாறுக்கும் 700 காவதம் தெற்கேயிருந்த பஃறுளியாறுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்புக் குமரிநாடாகும். குமரி நாடே பண்டைத் தமிழ் நாடு@ தமிழ் தோன்றி வளர்ந்த நாடு. தலைச்சங்க மிருந்த நாடு. இதற்கு எல்லம் என்பது வேறொரு பெயராகும். ஏழ், எலு, ஈழம், சிலோன் என்பவை எல்லம் என்பதிலிருந்து பிறந்த சொற்களாகும். மேருமலை குமரியாறுக்குத் தெற்கே பூ மத்திய இரேகைக்கு அண்மையில் இருந்தது. பாஸ்கராச் சாரியார் எழுதிய வான நூலிற் பூமத்திய ரேகை பழைய இலங்கைக்கு ஊடாகச் சென்றதெனக் கூறுகிறார்.

“இடையிற் கலையிம் வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாஞ் சுமுனை”

தற்கால இலங்கையின் தென்முனையும் வடக்காகும்.

மிருகேந்திர ஆகமம் குமரி நாட்டைப் பற்றிய பின்வருமாறு கூறுகிறது. “ஏழு பெருந்தீவுகளின் நடுத்தீவானது நூறாயிரம் யோசனை பரப்புடைத்தாய் வட்டமாய் நிலமகட்கு உந்தித்தானமாயுள்ள நாவலந்தீவு - இந்நாவலந் தீவின் நடுவே மேருமலை – மேரு மலையைச் சூழ்ந்த நிலம் இளாவிருதம்…. பாரத கண்டம் ஒன்பது கண்டங்கள் அல்லது தீவுகள் அடங்கியது:- இந்திரத் தீவு, கசேருத்தீவு தாமிர பரணித்தீவு, சுமதித்தீவு, மாகதீவு, சாந்திரமத்தீவு, காந்தருவத் தீவு, வாகுணத் தீவு, குமரித்தீவு - இவற்றுட் குமரி கண்டம் ஒன்றே சிறந்தது. ஏனைய எட்டுக்கண்டங்களும் மிலேச்சர் வாழுமிடங்களாகும்.”

சிலப்பதிகாரத்துக்கு விரிவுரை யெழுதிய அடியார்க்கு நல்லார் இந்நாட்டைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-

“அக்காலத்து அவர் நாட்டுத் தென் பாலி முகத்திற்கு, வடவெல்லையாகிய பஃறுளி என்னுமாறிற்கும் குமரி என்னுமாறிற்கு மிடையே எழுநூற்றுக் காவதமாகும். இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ் தெங்க நாடும் ஏழ் மதுரை நாடும், ஏழ் முன் பாலை நாடும், ஏழ் பின் பாலை நாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குண காரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பனிமலை நாடும், காடும், நதியும் பதியும், தடநீர்க்குமரி, வடபெருங் கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலால்.”

குமரி கண்டத்தைப் பண்டை மக்கள் நாவலந்தீவு எனவுங் குறிப்பிட்டனர். இந்நாட்டிற் பல ஆறுகளும் மலைகளம் இருந்தன. மலைகள் மேரு, மகேந்திரம் முதலியவைகளாகும். மகேந்திர மலையில் ஆகமங்களை இறைவன் உபதேசித்தருளினர் என்பது மணிவாசகப் பெருமானின் அருள் வாக்காகும். “மன்னுமாமலை மகேந்திர மதனில் சொன்ன வாகமந் தோற்றுவித்தருளியும்.” ஆறுகள் குமரி, பஃறுளி முதலியவைகளாகும். பஃறுளி ஆற்றங் கரையிலிருந்த பழைய மதுரை தலைச் சங்கமிருந்த குமரி நாட்டின் தலைநகராகும்.

“எங்கோ வாழிய குடுமீ தங் கோச்
செந்நீர்ப் பசும் பொன் வயிரியர்க் கீந்த
முந்நீர் வழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலிலும் பலவே”

எனக் குமரி நாட்டைக் கடல் கொள்ளாமுன் ஆண்ட முதுகுடுமிப் பெருவழிதியெனும் பாண்டியனை நெட்டிமையார் எனும் புலவர் பாடினர்.

(4) பெருவளநாடு – பஃறுளியாறு தொடக்கம் தென் அயனவரை (வுசழிiஉ ழக ஊயிசiஉழசn) அளவிலுமான நிலப்பரப்பு பெருவள நாடாகும். இந்நாட்டு மலைகளில் மணிமலை ஒன்றாகும்.

(5) ஒளிநாடு – தென் அயன வரை தொடக்கம் தென்துருவம் வரையுமான நிலப்பரப்பு ஒளி நாடாகும்.

பாண்டி நாட்டையும், குமரி நாட்டையும், பெருவள நாட்டையும், முதலாம் நிலந்தருதிருவிற் பாண்டியனும் அவன் குடிவழி வந்தவரும் கி.மு. 30,000 தொடக்கம் கி.மு. 16,500 வரையுமாண்டனர். இது மத்திய கற்காலமாகும். காலத்துக்குக் காலம் நிருதர் படைகள் பொதியம் வரையும் வென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. வட இந்தியாவில் அரசாண்ட திராவிட மன்னர் பாண்டியருக்கு உதவி செய்தனர். கி.மு. 14,000 அளவில் ஒளி நாடும் பெருவள நாடும் அழிந்தன. தமிழ்மொழி பெருவள நாட்டிலே தோன்றிக் குமரி நாட்டிலே வளர்ந்து இந்தியா முழுவதிலும் நடுநிலக் கடலக நாடுகளிலும் பரவிற்று: என்னே, அதன் தொன்மையுஞ் சீருஞ் சிறப்பும் பரப்பும், இதனாலன்றோ தமிழைத் தன்னேரிலாத் தனிமொழி எனவும், உலக முதன் மொழியெனவும், உயர் தனிச் செம்மொழியெனவும் அறிஞர் கூறுகின்றனர்.முன்னொரு காலத்திலே விந்திய மலைக்கு வடக்கே ஒரு மாபெருங் கடல் இருந்தது. அக்காலத்திற் கங்கைச் சமவெளியோ இமயமலைத் தொடரோ இருக்கவில்லை. இவை ஆழ்கடலுக்குள்ளிருந்தன. இக்கடல் இந்தியாவிலிருந்து நடுநிலக்கடல் வரையும் - மேலும் மத்திய ஐரோப்பா வரையும் - பரந்து கிடந்தது. இன்றுள்ள பல நாடுகள் - கங்கைச் சமவெளி, காஸ்மீர், பாகிஸ்தானிற் பெரும்பகுதி, பலுச்சிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாரசிகம் முதலியவை – அன்று பெருங்கடலாக இருந்தன. அக்காலத்தில் ஆசியாவின் மத்திய பகுதியிலும் மிகப் பெரிய கடல் ஒன்றிருந்ததெனவும் அது பிற்காலத்தில் அழிந்துள்ளதாகவும் லெனின் கிறாட் பல்கலைக்கழகச் சமுத்திர ஆராய்ச்சிக் குழு ஒன்று சமீபகாலத்திற் கண்டுபிடித்துள்ளது. இக்கடலை எதிர்நோக்கி விந்திய மலைத்தொடர் இருந்தது. விந்திய மலைத் தொடரிலிருந்து ஆறுகள் இக் கடலுக்குட் பாய்ந்தன. விந்திய மலைத் தொடருக்குத் தெற்கே இலேமூரியா எனும் மாபெருங் கண்டம் ஒன்றிருந்தது.

பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு உலகின் பல பாகங்களிற் பற்பல காலங்களில் பெரும் பெயர்ச்சிகள் உண்டாகின. இக்காலங்களை வரையறை செய்யவியலாது. இவற்றினால் நிலத்தின் புறத்தோட்டில் மடிப்புப் பெயர்ச்சிகள் தோன்றின. கடலுக்குள்ளிருந்த வண்டற் படிவுகளும் கடற்பாறைகளும் படிப்படியாக வளர்ந்து உயர்ந்து தற்போதைய இமய மலைத்தொடர் தோன்றிற்று. கடல் மேற்கு நோக்கிப் பின் வாங்கக் கங்கைச் சமவெளியும் மேலே குறிப்பிட்ட நாடுகளுந் தோன்றின. இம்மாற்றங்கள் உண்டாவதற்குப் பல மில்லியன் வருடங்கள் சென்றிருக்க வேண்டும்.

தென் காற்றுக்கள் திபெத்துக்குட் புகுவதை இமயமலைத் தொடர் தடுத்தபடியினால், இமயமலைப் பகுதிகளில் மழை வீழ்ச்சி அதிகமாயிற்று. ஆறுகள் இமயமலைத் தொடரிலிருந்து கங்கைச் சமவெளிக்குட் பாய்ந்து கடலை அடைந்தன. ஆரம்பத்திற் பல அருவிகள் ஒருங்கு சேர்ந்து ஒரு பேராறாக்கிக் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தன எனவும் இந்த ஆறு அசாமிலுள்ள பிரமபுத்தரத்தில் உற்பத்தியாகி யமுனைவரையும் மேற்கு நோக்கிப் பாய்ந்து அங்கிருந்து தென் மேற்கு முகமாகத் திரும்பிச் சிந்துப் பிரதேசத்தின் ஊடாகச் சென்று அரேபியன் கடலை அடைந்தது எனவும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்பு இமயமலை மேலும் உயர்ந்து பல மாற்றங்கள் உண்டாகின. மேலே குறிப்பிட்ட ஆறு பிரிந்து பல ஆறுகளாயிற்று. இவற்றுட் சில கிழக்கு நோக்கிப் பாய்ந்தன.

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: மொழிகளும் சமயமும்
Permalink  
 
கங்கைச் சமவெளி தோன்றி நெடுங்காலத்துக்குப் பின்பு தென்னிந்தியாவிலிருந்தும் இலேமூரியாக் கண்டத்திலிருந்தும் மக்கள் படிப்படியாக வடக்கே பெயர்ந்து கங்கைச் சமவெளியில் இமயம் வரையுங் குடியேறினர். கி.மு. 2000 வரையும் பிறநாடுகளிலிருந்து இந்தியாவிற்குட் புகுந்த குழுக்களை இரண்டாம் அதிகாரத்திற் குறிப்பிட்டோம். ஆனாற், கி.மு. 2000 இற்குப் பின்னரும் காலத்துக்குக் காலம் பல குழுக்கள் இந்தியாவிற்குட் புகுந்தன. எக்காரணம் பற்றியோ இந்தியா பிறநாட்டு மக்களைக் காந்தம் போல என்றுங் கவர்ந்தது. பல அநாகரிக நாடோடிக் குழுக்களுக்கு வேட்டைக் களமாயிற்று, பிற்காலத்திற் புகுந்த குழுக்களாவன:-

(1) அலெக்சாண்டர் படைகள்:- கிரேக்கர், ரோமர், மசிடோனியர், துருக்கியர், அரேபியர், ஈரானியர் முதலிய பல நாட்டு மக்கள் இக் கூலிப்படையில் இருந்தனர். இவர்கள் யமுனை ஆறுவரையும் வென்று குடியேறினர்.

(2) குஷான், கன்ஸ் (ர்ரளெ) முதலிய மங்கோலிய மக்கள் வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவிற்குட் புகுந்தனர்.

(3) யவனர், எகிப்தியர், அரேபியர், தென்னிந்திய நகரங்களிலும் துறைமுகங்களிலும் குடியேறினர்.

(4) யூதர்களும், பாசிகளும், இந்தியாவிற்கு வந்து குடியேறினர்.

(5) மகமதியர் படையெடுப்பு - இவர்கள் அரேபியர், ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் முதலிய பல நாடுகளிலிருந்து வந்தனர். பிற்கால அக்பார் முதலிய மகமதியர் மங்கோலியராவர்.

(6) ஐரோப்பியர் – போர்த்துக்கீசர், டச்சுக்காரர், பிறெஞ்சுக்காரர், ஆங்கிலேயர்.

பெருங்கடலுக்குட் பல ஆறுகள் பாய்வர் போலப் பலவின மக்கள் இந்தியாவிற்குட் புகுந்த போதிலும், இந்திய மக்கள், இன அடிப்படையில் திராவிடராவர். நாகரிகத்திலும் பண்பாட்டிலும் இந்துக்களாவர்.

2. இலேமூரியா
இமயமுங் கங்கைச் சமவெளியுந் தோன்றாக் காலத்தே விந்திய மலைக்குத் தெற்கே ஒரு மாபெருங் கண்டம் இருந்தது. தெற்கே தென்துருவம் வரையும், தென்கிழக்கே அவுஸ்திரேலியா வரையும் கிழக்கே கிழக்கிந்திய தீவுகள் வரையும் மேற்கே ஆபிரிக்கா வரையும் இக்கண்டம் பரந்து கிடந்தது. அக்காலத்தில் அவுத்திரேலியா, தென்னாபிரிக்கா இந்தியா முதலிய நாடுகள் தரையால் இணைக்கப் பட்டிருந்தன எனக் கலாநிதி பேசுடோ கூறுகிறார். யாவா சுமாத்திரா முதலியவையும் இக் கண்டத்தின் பகுதிகளாக இருந்தன.

இக் கண்டம் இலேமூரியா அல்லது கொந்வானா எனப்பட்டது. மிகமிகப் பழைய காலத்திலே காலத்துக்குக் காலம் ஏற்பட்ட கடற்கோள்களினால் இக்கண்டத்தின் பெரும் பகுதியும் அழிந்தது. இப்பரந்த நிலப்பரப்பில் இந்து மகாசமுத்திரம் தோன்றிற்று. கடலின் அடியிலுள்ள கருங்கற் பாறைகள் வெடித்தமையால் அவுத்திரேலியா, தென்னாபிரிக்கா, இந்தியா முதலிய கண்டங்கள் விடுபட்டு அகன்று சென்றன எனவும், ஐந்தாம் ஊழியில் இம்மாற்றங்கள் நிகழ்ந்தன எனவும் பேராசிரியர் வெசினர் கூறுகிறார். இம்மாற்றங்கள் படிப்படியாக ஏற்படப் பலவிலட்ச வருடங்கள் சென்றிருக்க வேண்டும். மண்ணியலாளர் பின்வருங் கடற் கோள்களைக் குறிப்பிடுகின்றனர்.

(அ) முதலாவது கடற்கோள் பத்துலட்சம் வருடங்களுக்கு முற்பட்டதாகும். (கி.மு 1,000.000). இப்பெரிய கடற்கோளினால் இக்கண்டம் அவுத்திரேலியாவிலிருந்தும் ஆபிரிக்காவிலிருந்தும் பிரிந்து மிகவுஞ் சுருங்கிற்று. இந்து மகா சமுத்திரந் தோன்றிற்று.

(ஆ) இரண்டாவது கடற்கோள் எட்டிலட்சம் வருடங்களுக்கு முற்பட்டதாகும் (கி.மு. 800,000). இக்காலத்தில் நிலப் பரப்பு மேலுஞ் சுருங்கிக் கடற்பரப்பு விரிந்தது.

(இ) மூன்றாவது கடற்கோள் மூன்றிலட்சம் வருடங்களுக்கு முற்பட்டதாகும் (கி.மு. 300,000).

(ஈ) நான்காவது கடற்கோள் எண்பதினாயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாகும். (கி.மு 80,000).

இப்பழைய இலேமூரியாக் கண்டத்தைப் பற்றி எமது இலக்கியங்களிலும் புராணங்களிலும் எவ்வித குறிப்புக்களுமில்லை. ஆனால் மண்ணியலாளரும் மறைஞானிகளும் இக்கண்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர்.

“இலேமூரியா தென்கோளத்தில் இந்து சமுத்திரம் முழுவதிலும் பரந்து கிடந்தது. கிழக்கே அவுத்திரேலியா வரையும் மேற்கே ஆபிரிக்கா வரையும் தெற்கே தென்துருவம் வரையும் இருந்தது. மூன்றாவது ஊழியிலுண்டான கடற் கோள்களினால் அழிந்தது. (கெலியா விளவத்ஸ்கி அம்மையார்). உறுடொல்வ் ஸ்ரீனா எனுங் சர்மன் மறைஞானி இம்மறைந்த கண்டத்தைப் பற்றிப் பல விபரங்கள் கொடுத்தனர். ஸ்கொற் எலியற் என்பவர் இக்கண்டத்தையும் அத்திலாந்திசையும் வரைபடங்கள் மூலம் விளக்கினர். இக்கண்டம் அழிந்த போது தப்பிப் பிழைத்த மக்ள் இந்தியாவிலுங் கிழக்கிந்திய தீவுகளிலும் ஆபிரிக்காவிலுங் குடியேறினரென எலியற் கூறுகிறார்.

இந்த அழிவுகளுக்குப் பின்னரும் இமயம் தொடக்கம் தென்துருவம் வரையும் ஒரு நாடிருந்தது. இந்நாட்டைப் பற்றியே எமது இலக்கியங்களிலும் புராணங்களிலும் பல குறிப்புகள் உள. இதை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.

(1) வட இந்தியா - இஃது இமயந் தொடக்கம் விந்திய மலைவரையுள்ள நிலப் பரப்பாகும்.

(2) தென்னிந்தியா:- இது விந்திய மலை தொடங்கும் குமரிமரை வரையுள்ள நிலப்பரப்பாகும். இம்மலை மத்திய இரேகையில் இருந்தது. தற்போதுள்ள இலங்கை இப்பகுதியைச் சேர்ந்ததாகும்.

(3) குமரிநாடு – குமரியாறுக்கும் 700 காவதம் தெற்கேயிருந்த பஃறுளியாறுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்புக் குமரிநாடாகும். குமரி நாடே பண்டைத் தமிழ் நாடு@ தமிழ் தோன்றி வளர்ந்த நாடு. தலைச்சங்க மிருந்த நாடு. இதற்கு எல்லம் என்பது வேறொரு பெயராகும். ஏழ், எலு, ஈழம், சிலோன் என்பவை எல்லம் என்பதிலிருந்து பிறந்த சொற்களாகும். மேருமலை குமரியாறுக்குத் தெற்கே பூ மத்திய இரேகைக்கு அண்மையில் இருந்தது. பாஸ்கராச் சாரியார் எழுதிய வான நூலிற் பூமத்திய ரேகை பழைய இலங்கைக்கு ஊடாகச் சென்றதெனக் கூறுகிறார்.

“இடையிற் கலையிம் வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாஞ் சுமுனை”

தற்கால இலங்கையின் தென்முனையும் வடக்காகும்.

மிருகேந்திர ஆகமம் குமரி நாட்டைப் பற்றிய பின்வருமாறு கூறுகிறது. “ஏழு பெருந்தீவுகளின் நடுத்தீவானது நூறாயிரம் யோசனை பரப்புடைத்தாய் வட்டமாய் நிலமகட்கு உந்தித்தானமாயுள்ள நாவலந்தீவு - இந்நாவலந் தீவின் நடுவே மேருமலை – மேரு மலையைச் சூழ்ந்த நிலம் இளாவிருதம்…. பாரத கண்டம் ஒன்பது கண்டங்கள் அல்லது தீவுகள் அடங்கியது:- இந்திரத் தீவு, கசேருத்தீவு தாமிர பரணித்தீவு, சுமதித்தீவு, மாகதீவு, சாந்திரமத்தீவு, காந்தருவத் தீவு, வாகுணத் தீவு, குமரித்தீவு - இவற்றுட் குமரி கண்டம் ஒன்றே சிறந்தது. ஏனைய எட்டுக்கண்டங்களும் மிலேச்சர் வாழுமிடங்களாகும்.”

சிலப்பதிகாரத்துக்கு விரிவுரை யெழுதிய அடியார்க்கு நல்லார் இந்நாட்டைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-

“அக்காலத்து அவர் நாட்டுத் தென் பாலி முகத்திற்கு, வடவெல்லையாகிய பஃறுளி என்னுமாறிற்கும் குமரி என்னுமாறிற்கு மிடையே எழுநூற்றுக் காவதமாகும். இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ் தெங்க நாடும் ஏழ் மதுரை நாடும், ஏழ் முன் பாலை நாடும், ஏழ் பின் பாலை நாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குண காரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பனிமலை நாடும், காடும், நதியும் பதியும், தடநீர்க்குமரி, வடபெருங் கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலால்.”

குமரி கண்டத்தைப் பண்டை மக்கள் நாவலந்தீவு எனவுங் குறிப்பிட்டனர். இந்நாட்டிற் பல ஆறுகளும் மலைகளம் இருந்தன. மலைகள் மேரு, மகேந்திரம் முதலியவைகளாகும். மகேந்திர மலையில் ஆகமங்களை இறைவன் உபதேசித்தருளினர் என்பது மணிவாசகப் பெருமானின் அருள் வாக்காகும். “மன்னுமாமலை மகேந்திர மதனில் சொன்ன வாகமந் தோற்றுவித்தருளியும்.” ஆறுகள் குமரி, பஃறுளி முதலியவைகளாகும். பஃறுளி ஆற்றங் கரையிலிருந்த பழைய மதுரை தலைச் சங்கமிருந்த குமரி நாட்டின் தலைநகராகும்.

“எங்கோ வாழிய குடுமீ தங் கோச்
செந்நீர்ப் பசும் பொன் வயிரியர்க் கீந்த
முந்நீர் வழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலிலும் பலவே”

எனக் குமரி நாட்டைக் கடல் கொள்ளாமுன் ஆண்ட முதுகுடுமிப் பெருவழிதியெனும் பாண்டியனை நெட்டிமையார் எனும் புலவர் பாடினர்.

(4) பெருவளநாடு – பஃறுளியாறு தொடக்கம் தென் அயனவரை (வுசழிiஉ ழக ஊயிசiஉழசn) அளவிலுமான நிலப்பரப்பு பெருவள நாடாகும். இந்நாட்டு மலைகளில் மணிமலை ஒன்றாகும்.

(5) ஒளிநாடு – தென் அயன வரை தொடக்கம் தென்துருவம் வரையுமான நிலப்பரப்பு ஒளி நாடாகும்.

பாண்டி நாட்டையும், குமரி நாட்டையும், பெருவள நாட்டையும், முதலாம் நிலந்தருதிருவிற் பாண்டியனும் அவன் குடிவழி வந்தவரும் கி.மு. 30,000 தொடக்கம் கி.மு. 16,500 வரையுமாண்டனர். இது மத்திய கற்காலமாகும். காலத்துக்குக் காலம் நிருதர் படைகள் பொதியம் வரையும் வென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. வட இந்தியாவில் அரசாண்ட திராவிட மன்னர் பாண்டியருக்கு உதவி செய்தனர். கி.மு. 14,000 அளவில் ஒளி நாடும் பெருவள நாடும் அழிந்தன. தமிழ்மொழி பெருவள நாட்டிலே தோன்றிக் குமரி நாட்டிலே வளர்ந்து இந்தியா முழுவதிலும் நடுநிலக் கடலக நாடுகளிலும் பரவிற்று: என்னே, அதன் தொன்மையுஞ் சீருஞ் சிறப்பும் பரப்பும், இதனாலன்றோ தமிழைத் தன்னேரிலாத் தனிமொழி எனவும், உலக முதன் மொழியெனவும், உயர் தனிச் செம்மொழியெனவும் அறிஞர் கூறுகின்றனர்.

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 
தமிழர் வரலாறு குமரி நாட்டில் தொடங்குகிறது. தலை சங்க இடைச்சங்க காலங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களாகும். இடைச் சங்க காலத் தமிழக எல்லைகளைப் பின்வரும் பாடல்கள் கூறுகின்றன:-

“தென்குமரி வட பெருங்கள்
குணகுட கடலா எல்லை.”

“வடாஅது பனி படு நெடுவரை வடக்கும்
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பவ்வத்தின் குடக்கும்.”

இருபாக்களிலும் இமயமலை வட வெல்லையாகக் குறிப்பிடப்படுகிறது. இங்கு குமரி எனப்பட்டது. தற்காலக் குமரி முனையன்று. மத்திய இரேகைக்குத் தெற்கிலிருந்த குமரிமலை அல்லது குமரி ஆறாகும். பிற்காலத்திற் கிரேக்க எகிப்தியரான பிளினியும் டாலமியும் தமிழகத்தை இலி முரிகே (அல்லது திமுரிகே) எனக் குறிப்பிட்டனர். இது பண்டை இலேமூரியாவை நினைவுறுத்துகிறது. பிளினியும் பாரதமும் மூன்று மதுரைகளைக் குறிப்பிடுகின்றன. இடைச் சங்க காலம் கலியுகத்துக்கும் பாரதப் போருக்கும் முற்பட்டதாகும்.

ஐந்தாம் அத்தியாயம்
சிந்துவெளி நாகரிகம் - நாம் தமிழர்
இருபதாம் நூற்றாண்டிற் புதைபொருள் ஆராய்ச்சியாளர் சிந்துவெளியிற் பல விடங்களில்p அகழ்ந்து புதையுண்டு கிடந்த நகரங்களைக் கண்டனர். இவ்விடங்கள் மொகஞ்சதரோ, கரப்பா, சான்கூதரோ, லொகூஞ்சோதரோ, சகபூர்யாணிசியால், அவிமுராத், பாண்டிவாகி அமரிகோட்லா, நிகாங்கான், அரங்பூர் முதலியனவாகும். இவை மத்திய ஆசியாவிலிருந்து குழுக்கள் இந்தியாவிற்குட் புகமுன் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த பண்டை மக்களின் நாகரிகத்தையும் வாழ்க்கை முறைகளையும் எமக்குக் காட்டுகின்றன.

இந் நாகரிகத்தைப் பற்றிப் புதைபொருள் ஆராய்ச்சியாளர் கூறும் விபரங்கள் சிலவற்றை முதலிற் சுருக்கமாகப் பார்ப்போம்.

(1) நகரமைப்பும் வீடுகளும்
மொகெஞ்சதரோ ஆற்றோரத்தில் இருந்த நகரமாகும். தெருக்கள் கிழக்கு மேற்காகவும், தெற்கு – வடக்காகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பெரிய தெருக்களை சிறிய தெருக்கள் ஒரே நேராக வெட்டிச் செல்லுகின்றன. பெரிய தெருக்களின் அகலம் ஏறக்குறைய 33 அடியாக இருக்கிறது. 12 அடி தொடக்கம் 18 அடி வரை அகலமுள்ள சிறிய தெருக்களும் காணப்படுகின்றன. எல்லாத் தெருக்களுக்கும் இணைப்புகள் இருக்கின்றன. வீதிகள் ஒழுங்கான முறையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை போன்று தோன்றுகின்றன.

மொகொஞ்சதரோவிற் கால்வாய்கள் இல்லாத பெரிய தெருவோ சிறிய தெருவோ இலை. இவை செங்கற்களினாற் கட்டப்பட்டிருக்கின்றன. இல்லங்களில் அமைக்கப்பட்டிருக்குஞ் சிறிய கழிநீர்க் கான்களுஞ் சிறந்த முறையிற் கட்டப்பட்டிருக்கின்றன. சுவர்களுக்குட் கழிநீர்க் குழைகள் அமைக்கப்பட்டிக்கின்றன. தெருக்களில் ஓடுங் கால்வாய்கள் செங்கற்களினால் மூடப்பட்டிருக்கின்றன. குப்பை கூழிகள் தங்குவதற்குக் கால்வாய்களில் தாழிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. நீண்ட கால்வாய்களுக்கு இடையிடையே தொட்டிகள் காணப்படுகின்றன. இச் சிறந்த வடிகால் துறை வேறெந்தப் பண்டை நகரத்திலும் இருந்ததாகக் கண்டதுமில்லைக் கேட்டதுமில்லையெனச் சேர். யோன் மாசல் வியப்புறுகிறார்.

நகரங்களிற் பலவகைப்பட்ட கட்டடங்கள் காணப்படுகின்றன. வறியவர் இல்லங்களும் செல்வர் மாடமாளிகைகளும் அரசர் அரண்மனைகளும் இருக்கின்றன. வீடுகள் சுட்ட செங்கற்களினாலும் உலந்த செங்கற்களினாலுங் கட்டப்பட்டிருக்கின்றன. சுவர்கள், தரை, கூரை முதலியவை களிமண் சாந்தினால் மேற் பூசப்பட்டிருக்கின்றன. மர உத்திரங்களைப் போட்டு, அவற்றின்மீது நாணற்பாய்களைப் பரப்பி, அப்பாய்களின்மீது களிமண் சாந்தைக் கனமாகப் பூசிக் கூரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வீடுகளில் யன்னல்களையும் கதவுகளையுங் காணலாம். கதவுகள் உயரமானவையல்ல. இங்கு வாழ்ந்த மக்கள் பிற்காலத்தில் இந்தியாவிற்குட் புகுந்த காக்கேசியக் குழு மக்களைப் போன்று உயரமானவர்களல்லர் என்பதற்கு இது சான்றாகும். பெரும்பாலான இல்லங்களில் மலங்கழிப்பதற்குரிய ஒதுக்கிடங்களும் சமையல் அறைகளும், நீராடும் அறைகளும், தையல் அறைகளுங் காணப்படுகின்றன. இல்லங்களுக்கு அண்மையில் ஊற்றுக் கிணறுகள் இருக்கின்றன.

வீடுகளிற் பலவகைப்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டன. அழகான மட்பாண்டங்கள் (ஓவியந் தீட்டப்பட்ட வையுந் தீட்டப்படாதவையும்), மெருகிடப்பட்ட பாண்டங்கள், கைப்பிடி கொண்ட கலன்கள், மைக்கூடுகள், புரிமனைகள், எலிப் பொறிகள், பீங்கான்கள், அம்மிகள், உரல்கள், மமா அரைக்குங்கல், எந்திரங்கள், பலவகை விளக்குகள், பொன், வெள்ளி, ஈயம், செம்பு முதலிய உலோகங்களினாற் செய்யப்பட்ட பட்டயங்களும் கருவிகளும், செம்பினாற் செய்யப்பட்ட ஆபரணங்கள், பானை சட்டிகள், நீலநிறக் கண்ணாடியினாற் செய்யப்பட்ட வளையல்கள், பிள்ளைகளின் பலவகைப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் முதலியவையாகும். விளையாட்டுப் பொருட்கள் மண், சங்கு, தந்தம், கிளிஞ்சல், ஓடுகள், எலும்புகள் முதலியவற்றினாற் செய்யப்பட்டவையாகும். அங்கு சுண்டெடுக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களிற் சில பின்வருவனவாகும்:- விலங்குகள், பறவைகள், ஆண் பெண் பதுமைகள்ண, சிறு செப்புக்கள், ஊது குழல்கள், தலை அசைக்கும் எருதுகள், கைகளை அசைக்கும் பதுமைகள், வனப்புடைய களிமண் வண்டிகள், சொக்கட்டான் கருவிகள்.

(2) தொழில்களும் வாணிபமும்:-
மொகெஞ்சதரோ ஆற்றோரத்தில் நீர்நில வளமுடைய மருதநிலத்தில் அமைக்கப்பட்ட நகரமாகும். நெல், கோதுமை, வாற்கோதுமை, பார்ளி, எள், பருத்தி முதலியன அங்கு பயிர் செய்யப்பட்டன. எக்காலத்திலும் பண்டை இந்திய நாகரிகத்தி விவசாயமே அடிப்படையாக இருந்தது. பழைய கற்காலந் தொட்டு இந்தியாவில் நெற் பயிர்ச் செய்கை நடைபெற்று வருகிறது. சிந்துவெளி நாகரிகத்திலும் உழவுத் தொழில் சிறப்புற்றிருந்தது. தெற்கே தொல்காப்பியர் காலமும் வடக்கே சிந்துவெளி நாகரிகக் காலமும் ஒன்றாகும். தென்னாட்டில் தொல்காப்பியர் காலத்தில் விவசாயம் அடைந்திருந்த நிலையைப் பின்பு கூறுவோம். பயிர்ச் செய்கைக்கு வேண்டிய நீரை மக்கள் சிந்து ஆற்றிலிருந்து பெற்றிருக்க வேண்டும். மக்கள் பருத்தி ஆடைகளையுங் குளிர் காலத்திற் கம்பளி உடைகளையும் அணிந்தனர். வீடுகள் பலவற்றிற் “கதிர்கள்” கண்டெடுக்கப்பட்டன. நெசவுத் தொழிலின் சிறப்புக்கு இவை சான்றாகும். மக்கள் புலால் உண்டனர். ஆற்று மீன் பிடித்தனர். முக்கிய உணவுப் பொருள்கள் அரிசி கோதுமை, பார்ளி, பேரிச்சை, மீன், இறைச்சி, முட்டை முதலியனவாகும். மொகொஞ்சதரோவில் நடைபெற்ற கைத்தொழில்களைப் பல சான்றுகளிலிருந்து அறியலாம். அவைகளாவன:- கொத்துவேலை, மண்பாண்டத் தொழில், கல் தச்சுத்தொழில், மரத்தச்சுத்தொழில், கன்னார் வேலை, பொற்கொல்லர் வேலை, இரத்தினக் கற்றொழில் செதுக்கு வேலை, சங்குத்தொழில், வண்டி ஓட்டுதல், மீன் பிடித்தல், நாவிதத் தொழில், தோட்டத் தொழில், கப்பல் கட்டுந் தொழில். கப்பலோட்டித்தொழில், தையல் பின்னற்றொழிகள், தந்தவேலைகள், மணிகள் கோர்க்குந் தொழில், பாய்கள் பின்னுதல், சிற்ப ஓவியக் கலைத்தொழில்கள்.

பிற்காலத் தென்னாட்டு நகரங்களைப்பற்றிச் சங்க நூல்கள் கூறுகின்றன. இந்நகரங்களும் மொகெஞ்சதரோவும் பல வகைகளில் ஒத்திருப்பதைக் காணலாம். சிந்துவெளி நாகரிகம் புதுக் கற்கால உலோக கால நாகரிகமாகும். அணிகளும் கருவிகளும் பொருட்களும் பலவகைப்பட்ட உலோகங்களினாற் செய்யப்பட்டிருக்கின்றன. பயன் படுத்தப்பட்ட உலோகங்களாவன:- பொன், வெள்ளி, செம்பு, செம்பில் ஈயக்கலவை, செம்பில் நிக்கற் கலவை, செம்புகலந்த மண், வெண்கலம், வெள்ளீயம், காரீயம், எவ்விரும்புப் பொருட்களாவது கண்டெடுக்கப்படவில்லை. சிந்துவெளியிற் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளிலிருந்து அக்காலத்தில் அங்கு வாழ்ந்த மிருகங்களையும் பறவைகளையும் அறியலாம். இவை யானைகள், நாய்கள், பூனைகள், பன்றிகள், ஆடுகள், கழுதைகள், மான்கள், எருமைகள், திமில் பருத்த எருதுகள், ஓட்டகங்கள், முயல்கள், ஆமைகள் முதலியனவாகும்.

மொகெஞ்சதரோவின் செல்வத்திற்கு விவசாயம் மட்டுமே அத்திவாரமாக இருந்திருக்க முடியாது. இந்நகரம் ஒரு வாணிபமையம் போலத் தோன்றுகிறது. இங்கு வாழ்ந்த மக்கள் இந்தியா முழுவதிலும் வெளிநாடுகளிலும் வியாபாரஞ் செய்தனர் என்பதை இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்டுகின்றன:- உதாரணமாகச் செம்பு முதலிய கனிப்பொருட்கள் இராசபுத்தான் மத்திய மாகாணம் முதலிய இடங்களிலிருந்தும் மான் கொம்புகள் காசுமீரிலிருந்தும் வைரமும், வெள்ளி கலந்த ஈயமும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் உயர்தரப் பச்சைக் கற்கள் பர்மாவிலிருந்தும், பச்சைக் கற்கள் மைசூரிலிருந்தும், அமெசான் கற்கள் நீலகிரியிலிருந்தும் பொன் கோலார் அனந்தபுரி எனுஞ் சென்னை மாகாணத்திலுள்ள இடங்களிலிருந்தும் சங்கு, முத்து முதலியவை பாண்டி நாட்டிலிருந்தும் கிடைக்கப்பட்டவையாகும். தென்னிந்தியா, கத்திவார், வடமேற்கு மண்டிலம், சிந்து – பஞ்சாப் மண்டிலங்கள் கங்கை சமவெளியின் வடபகுதி இராசபுத்தான் முதலிய இந்தியப்பகுதிகளே அக்காலத்தில் வாணிபமுஞ் செல்வமும் மிகுந்த நாகரிகமடைந்த பகுதிகளாக இருந்தனவெனத் தீட்சிதர் எனும் வரலாற்றாசிரியர் கூறுகிறார்.

சிந்துவெளி மக்கள் வெளிநாட்டு வியாபாரத்திற் சிறந்து விளங்கினர் என்பதை அங்கு கிடைத்த எழுத்துக்குறிகளும், முத்திரைகளும், ஓவியங்களும், கருவிகளும் ஏனைய பொருட்களுங் காட்டுகின்றன. இவர்கள் வாணிபஞ் செய்த நாடுகளில் ஏலம், சுமேரியா, மொசொப்பொட்டாமியா, இறாக்கி, எகிப்து முதலியவை சிலவாகும். சிந்துவெளி நாகரிகம் சுமேரிய நாகரிகம் என்ற அபிப்பிராயத்துக்கு இவ்வாணிபத் தொடர்பே காரணமாகும். வியாபாரத்திற்காக இந்திய மக்கள் மேற்காசிய நாடுகளிற் குடியேறினர். மேற்காசிய மக்களும் சிந்துவெளியில் வியாபாரத்திற்காகக் குடியேறியிருக்கலாம். பண்டைக் காலத்தில் திராவிட மக்களே கடற்றொழிலிலும் வெளிநாட்டு வாணிபத்திலுஞ் சிறந்த விளங்கினர். சங்ககாலத் தமிழர் வாணிபத்தைப்பற்றிச் சங்க நூல்கள் கூறுகின்றன. இரண்டு கால வாணிபங்களுக்குமிடையிற் பல ஒற்றுமைகளைக் காணலாம். இருகாலங்களிலும் திரையர், பானியர் முதலிய திராவிட மக்களே கடலோடிகளாகவும் வெளிநாட்டு வாணிகராகவும் இருந்தனர். சுமேரியாவிற்கும் சிந்துவெளிகளும் தென்னிந்தியாவிற்கும் இடையில் இம்மிகப் பழைய காலத்திலேயே வியாபாரம் நடைபெற்றதென ர்.சு. கோல் கூறுகிறார். பின்பு இவ் வியாபாரம் பபிலோனியா, எகிப்து, ஆபிரிக்கா வரையும் பரவிற்று.

-- Edited by admin on Wednesday 4th of September 2019 04:33:39 PM

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 
 உடைகளும் அணிகலன்களும்:-

ஓவியங்கள், பதுமைகள், முத்திரைகள் முதலியவற்றிலிருந்து சிந்துவெளி மக்களின் உடைகளைப்பற்றி ஓரளவு அறியலாம். சிந்துவெளியிற் பருத்தி பயிரிடப்பட்டதினாலும், நெசவுக் கருவிகள் காணப்படுவதினாலும் மக்கள் நூல் நூற்றுப் பருத்தி ஆடைகள் நெய்து அணிந்தனர் என்பதில் ஐயமில்லை. குளிர் காலத்திற் கம்பளி உடைகள் அணிந்தனர். செல்வர் பூவேலைப்பாடுடைய பருத்தி ஆடைகள் உடுத்தினர். வறியவர் கித்தான் போன்ற முரட்டு ஆடைகளையும், நாராற் செய்யப்பட்ட ஆடைகளையும் உடுத்தினர். மேலும், மக்கள் சட்டைகளையும் கழுத்துப் பட்டைகளையும் அணிந்தனர்.

பாவடைகள் மணிகள் கோர்த்துச் செய்யப்பட்டிருக்கின்றன. கண்டெடுக்கப்பட்ட அணிகலன்களாவன:- வளையல்கள், காப்புக்கள், பலவகைப்பட்ட முத்துமாலைகள், கொண்ட ஊசிகள், காதணிகள், இடுப்பில் அணியும் ஒட்டியாணங்கள், சரங்கொண்டை, கையணிகள், நெற்றிச் சுட்டிகள், மூக்கணிகள், மோதிரங்கள், பொத்தான்கள், தலைநாடாக்கள், கூந்தல் ஒப்பனைகள். இவற்றை நோக்கும்போது, தற்காலத் தமிழ் மகளீரும் சிந்துவெளிக் கால மகளீரும் ஏறக்குறைய ஒரே வகையான நகைகளை அணிந்தனர் போலத் தோன்றுகிறது. மேலும் பெண்கள் கண்ணுக்கு மையும் முகத்திற்குப் பொடியும் பூசினர்.

எழுத்துங் கலைகளும்:- இந்தியாவிற்குட் புகுந்த நாடோடி மக்கள் எழுத்தறிவில்லாதவர். பண்டை இந்திய மக்களிடமிருந்து எழுத்துக்களைக் கடன்பட்டனர். தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்களைப் பற்றிப் பின்பு கூறுவோம். சிந்துவெளியிற் கண்டெடுக்கப்பட்ட பொருட்களி;லும் முத்திரைகளிலும் ஓவிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இவை பண்டைத் திராவிட எழுத்துக்கள் எனவும் சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் எனவும் வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரியார் நிரூபிக்கிறார். சிந்துவெளிச் சித்திர எழுத்துக்களிலிருந்து பிராமி எழுத்துக்களும் ஏனைய தென்னிந்திய எழுத்துக்களும் தோன்றினவென அறிஞர் கூறுகின்றனர். சிந்துவெளி மக்களிடையிற் சிற்பம், ஓவியம், இசை, நடனம், கணிதம், மருத்துவம், வானநூல், உடற்பயிற்சி, யோகம் முதலிய பல கலைகள் வளர்ச்சியடைந்திருந்தன.

சமயம்:- மக்களின் சமயமே அவர்களுடைய ஒழுக்கத்துக்கும், பண்பாட்டிற்கும் நாகரிகத்துக்குஞ் சான்றாகும். ஒழுக்கம் உயர்குலம் என்பர். சிந்துவெளி மக்கள் சைவ சமயத்தவர் என்பதும், சைவ சமயம் சிந்துவெளி நாகரிகத்துக்கும் முற்பட்ட பழமையுடையதென்பதும் வெளிப்படையெனச் சேர் யோன் மாசல் கூறுகிறார். “சைவ சித்தாந்தமாவது தென்னிந்தியாவிற்கே சிறப்பாக உரிய தமிழர் சமயமாகும். தென்னிந்தியாவிலே வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட இச் சமயம் தமிழ் மக்கள் நெஞ்சத்தில் நிறை விளங்குகிறது.

சைவத்தைப் போலவே யோகமும் ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே தோன்றியதாகும். சிவன் தலையாகிய யோகி மட்டுமன்றி விலங்குகளுக்கெல்லாம் தலைவருமாவர். இப் பண்பினைச் சிவனைச் சுற்றி நான்கு மிருகங்கள் நிற்பது காட்டுகிறது. இவற்றையெல்லாம் நோக்கும்போது, பிற்காலத்திற் சிவனுக்குக் குறிக்கப்பட்ட அம்சங்கள் சிந்துவெளி முத்திரைகளில் தோற்ற நிலையிலே காணப்படுகின்றன.” – சேர் யோன் மாசல்.

சிந்துவெளியில் பெண் தெய்வ வழிபாடும் இருந்தது. இது பண்டைத் திராவிடர் வழிபாடாகும். இவ்வழிபாடு பிற்காலத்திற் சக்தி வழிபாடாகவும், கொற்றவை வழிபாடாகவும், வேறு பெண் தெய்வ வழிபாடுகளாகவும் மாற்றமடைந்தது. பண்டைக் காலத்தில் திராவிடர் சமயமாகிய சிவ வழிபாடும், இலிங்க வழிபாடும், ஞாயிறு வழிபாடும் நடுநிலக் கடலக நாடுகளில் பரவியிருந்தன.

“தென்னாடுடைய சிவனே போற்றி
எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி.”

சிந்துவெளி மக்கள் நதியையுஞ் சிவனையும் வழிபட்டதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. இலிங்க வழிபாடு இருந்ததை அங்கு கண்டெடுக்கப்பட்ட இலிங்கங்கள் காட்டுகின்றன. இடது காலைத் தூக்கி ஆடும் நடராசர் உருவங்கள் கிடைத்துள. ஆசனமிட்டு யோகத்தில் அமர்ந்திருக்கும் முனிவர் உருவங்களுங் கிடைத்துள. கண்ணன் வழிபாடும் சிந்துவெளி மக்களிடையில் இருந்தது. புதிய கற்காலத்திலிருந்தே கண்ணன் வழிபாடு இந்திய மக்களிடையில் இருந்துவருகிறது. வேதகாலத்திற் கிருட்டினன் ஆரியரை எதிர்த்த தாசுக்களின் அரசனாக இறிக் வேதங் கூறுகிறது. எருதுவாகனக் கடவுள் வணக்கமும் ஞாயிறு வழிபாடும் சிந்துவெளி மக்களிடையில் இருந்தன. பாம்பு வணக்கம், மரத் தேவதைகள் வணக்கம், கருடன் வணக்கம், பெண் தெய்வங்கள் வணக்கம் முதலியன இருந்தமைக்குஞ் சான்றுகள் காணப்படுகின்றன. இதுவே பண்டைக்காலத்தில் ‘நாம் தமிழரின்’ சிந்துவெளி வாழ்க்கையாகும்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிப் பல நூல்கள் உள. இம்மிக உன்னத நாகரிகத்தைக் கண்டு ஆராய்ச்சியாளரும் மேனாட்டறிஞரும் வியப்புறுகின்றனர். இந்நாகரிகத்தையுடைய மக்கள் யாரோ? இந்நாகரிகம் பண்டைத் திராவிட மக்களின் நாகரிகம் என்பதில் எள்ளளவேனும் ஐயமில்லை.

(1) இது மத்திய ஆசியாவிலிருந்தும் ஈரானிலிருந்தும் இந்தியாவிற்குட் புகுந்த நிலையான வாழ்க்கையில்லா நாடோடிக் குழுக்களின் நாகரிகமன்று. இக்குழுக்களின் வேதப் பாடல்களே இதைத் தம்மை எதிர்த்த தாசுக்களின் நாகரிகமெனக் குறிப்பிடுகின்றன. “தாசுக்கள் தட்டை மூக்கினர். கரு நிறத்தவர். மாறுபட்ட வழிபாடுடையவர். விநோத மொழியினர். செல்வப் பெருக்குடன் நகரங்களிலும் கோட்டைகளிலும் வாழ்ந்தவர். போரிற் பேரோசைபோடுபவர். வேள்விகள் செய்யாதவர். பணக்காரர். கால்நடைகளை வளர்ப்பவர்.” இப்பாடல் குறிப்பிடும் தாசுக்களே சிந்துவெளி மக்களாவர். கி.மு. 2000 அளவிற் காக்கேசியாவிலிருந்தும் ஈரானிலிருந்தும் இந்தியாவிற்குட் புகுந்த குழு மக்கள் எப்படிப்பட்டவர் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். இவர்கள் உயரமானவர், வெண்ணிறத்தவர், நீண்ட மூக்குடையவர், போரில் வீரர், அநாகரிக மூர்க்கர், நிலையான வாழ்க்கையில்லா நாடோடிகள், குதிரை ஏற்றத்தில் வல்லவர், இரும்பைப் பயன்படுத்தியவர், தீ வளர்த்து வேள்விகள் செய்தவர். அக்கினி முதலிய இயற்கை வழிபாடுடையவர். உருவ வழிபாட்டை வெறுத்தவர். உண்மையில் இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை அழித்தவர்களாவர்.

(2) சிந்துவெளி நாகரிகத்தை சுமேரிய நாகரிகம் என்பாருமுளர். இரு நாகரிகங்களிடையிலும் சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இதன் காரணத்தை முன்பு கூறினோம்.

(3) காக்கேசியக் குழு மக்கள் எழுத்தறிவில்லாதவர். சிந்துவெளி மக்களின் ஓவிய எழுத்துக்கள் பண்டைத் திராவிட மக்களின் எழுத்துக்களெனக் கெறஸ் பாதிரியார் கூறுகிறார்,

(4) சிந்துவெளிச் சாசனங்களிலே வேல், வேலாளன் ஊர் எனப் பொருள் தரும் வகையிற் குறிப்புக்கள் அமைந்திருக்கின்றன. மேலும் நாய், வேலூர் முதலிய சொற்களுக்கும் குறிப்புக்களை இச்சாசனங்களிற் காண்கிறோம்.

(5) சிந்துவெளியில் எடுக்கப்பட்ட இலச்சினை ஒன்றில் மூன்று முகங்களுடன் நான்கு மிருகங்கள் சூழத் தியானத்தில் அமர்ந்திருக்கும் உருவம் ஒன்று பொறிக்கப்பட்டிருக்கிறது. இது திராவிடரின் பசுபதியை அல்லது நடராசரை ஒத்ததாகும்.

(6) சிந்து வெளியிற் பல இலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை சில வழிபாட்டையும் இலிங்க வழிபாட்டையுங் காட்டுகின்றன.

(7) பல மீன் இலச்சினைகள் கிடைக்கப்பட்டுள. மீன் பாண்டியரின் சின்னமாகும்.

(8) கண்டெடுக்கப்பட்ட அணிகலன்கள் தமிழ் மாதர் இன்றும் அணியும் அணிகலன்களை ஒத்தனவாகும்.

எனவே சிந்துவெளி நாகரிகம் பண்டைத் திராவிட நாகரிகமாகும். தமிழராகிய எமது நாகரிகம். நாம் ஒரு காலத்தில் இந்தியா முழுவதிலும் வாழ்ந்ததையும் ஆண்டதையும் நினைவுறுத்துகிறது. எமக்குக் கிடைத்த மிகப் பழைய நூல்கள் கடைச்சங்க நூல்களாகும். இவற்றின் காலம் இற்றைக்கு 2000 ஆண்டுகளாகும். இக் காலத்தைப் போன்ற மும்மடங்கு காலத்தில் (கி.மு. 4000 அளவில்) வட இந்தியாவில் வாழ்ந்த மக்கள் திராவிடர் அல்லது தமிழர் என்பதில் ஐயமில்லை. பெருவள நாட்டிலே பிறந்த குமரி நாட்டிலே வளர்ந்த தமிழ் கி.மு. 4000 அளவிற் சிந்துவெளியிலும் பரவியிருந்தது. தமிழ்மொழி தலைச்சங்க காலத்திலே ஆரம்பமாகி, இடைச்சங்க காலத்திலே அரும்பிக் கடைச்சங்க காலத்திலே அலர்ந்த மலர். நாம் தமிழர். எமது மொழி தமிழ். இதைக் கேட்டு அளவிலா இன்பமடைகிறோம். இறும்பூதெய்துகிறோம்.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard