Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடைச் சங்க காலம் - நாம் தமிழர்.


Guru

Status: Offline
Posts: 7474
Date:
கடைச் சங்க காலம் - நாம் தமிழர்.
Permalink  
 


கடைச் சங்க காலம் - நாம் தமிழர்.
இப்போது நாம் வரலாற்றுக்குட்பட்ட காலத்துக்கு வருகிறோம். கடைச் சங்க நூல்கள் பல எமக்குக் கிடைத்திருக்கின்றன. அக்காலத் தமிழரின் வாழ்க்கையையும் நாகரிகத்தையும் பற்றி இந் நூல்களிலிருந்து அறிகிறோம். மேலும் பிளினி, டாலமி, பெரிபுளஸ் முதலியயவனாசிரியர்களின் குறிப்புக்களிலிருந்தும் கடைச்சங்க காலத் தமிழகத்தின் நிலைமையை அறிகிறோம்.

கடைச் சங்க காலப் புலவர்களும் நூல்களும் இரண்டாவது அட்டவணையிற் கொடுக்கப்படுகின்றன. இப்புலவாகள் கி.பி. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களாவர். கி.மு. 18ம் நூற்றாண்டு தொடக்கம் கிறித்து சகாப்தம் வரையும் வாழ்ந்த கடைச்சங்கப் புலவர்களின் பெயர்களும் நூல்களும் எமக்குக் கிடைத்தில. இப்புலவர்களின் தனிப்பாடல்கள் தொகை நூல்களிற் சேர்க்கப்பட்டிருக்கலாம். மேலும், இப்போது எமக்குக் கிடைத்திருக்கும் நூல்களும் 19ம் 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சாமிநாத ஐயர், தாமோதரம் பிள்ளை போன்ற சில தமிழ்ப் பெரியோரின் அருமுயற்சியினால் தேடி எடுக்கப்பட்டு அச்சிடப்பட்டவையாகும். இந்நூல்கள் கிடைத்திருக்காவிடின், கடைச்சங்க காலமும் தமிழரின் தொன்மையும் கற்பனைகளெனத்தானுஞ் சிலர் வாதித்திருப்பர். பல்லாயிரம் பழந்தமிழ் நூல்களை இழந்துவிட்டோம். இவற்றுட் சில இரண்டாம் அட்டவணையிற் கொடுக்கப்படுகின்றன.

கடைச் சங்க காலத்திலே தமிழர் கல்வியிற் சிறந்து விளங்கினர். சங்கத்திற் பல பெண் புலவர்களும் இருந்தனர். எட்டுத் தொகைப் புலவர்களில் 30 பேர் பெண் புலவர்களாவர். காக்கைபாடினியர், நச்சென்னையார், பொன்முடியார், பூதபாண்டியன் தேவி, பெருங்கோப்பெண்டு, ஆதிமந்திரியார், வெண்ணிக்குயத்தியார், பாரி மகளிர், ஒளவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், ஒக்கூர் மாசாத்தியார், காவுற்பெண்டு, குறமகள் இளவெயினி, குறமகள் குயியெயினி, பேய்மகள் இளவெயினி முதலியோர் இப்பெண் புலவரிற் சிலராவர். நாகர் இனத்தைச் சேர்ந்த பல புலவர் இருந்தனர். பல அறிவுத்துறை நூல்களும் பல தொழினுட்ப நூல்களும் இருந்தன: அளவை நூல்கள் வைத்திய நூல்கள், ஆரூட நூல்கள், இரத்தினப் பரீட்சை நூல்கள், எண் கணித நூல்கள், ஓவிய நூல்கள், கரவட நூல்கள், கனா நூல்கள், பரி நூல்கள், சித்தாரூட நூல்கள், சிற்ப நூல்கள், சோதிட நூல்கள், நிமித்த நூல்கள், துடி நூல்கள், இரேகா சாத்திர நூல்கள், பாசண்ட நூல்கள், மந்திரவாத நூல்கள், ஆயுது நூல்கள், ஆடை நூல்கள், அணி நூல்கள், அருங்கல நூல்கள் என்பன இவற்றுட் சிலவாகும். கல்வி தமிழராகிய எமது பரம்பரைத் தொழிலாயிற்றே!

கி.மு. 1715 தொடக்கம் கி.பி.235 வரையிலுமான பரந்துபட்ட 1950 வருடங்கள் கடைச்சங்க காலமாகும். கடைச்சங்க காலத்தில் தமிழ் நாட்டு எல்லைகள் மிகவுஞ் சுருங்கிவிட்டன. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் இவ்வெல்லைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கிற் தண்டமிழ் வரைப்பில்”

தலைச்சங்க காலத்தில் தமிழ்நாடு இமயம் தொடக்கம் பெருவள நாடுவரையுங் கிடந்தது. தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் தொடக்கம் குமரிமலை வரையுமிருந்தது. தலைச் சங்கத்துக்கும் இடைச்சங்கத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்த திராவிட மக்கள் இந்தியாவிற்குட் புகுந்த சீன, சித்திய, காக்கேசியக் குழுக்களுடன் கலந்தபடியினால், அவர்களுடைய மொழி, பண்பாடுகள் வேற்றுமையடைந்தன. இக்கலப்பிலிருந்து பல மொழிகள் தோன்றின. கடைச்சங்க காலத்துக்கு முற்பட்டே. கன்னடம், தெலுங்கு முதலிய இனமொழிகள் பிரிந்துவிட்டன. கடைச்சங்க காலத்தில் மலையாளம் தோன்றவில்லை. கடைச்சங்க காலத்தைத் தமிழரின் பொற்காலம் என்பர். ஆனால் உண்மையிற் சங்க காலம் முழுவதையும் இவ்வாறு கூறவேண்டும்.

சங்க நூல்கள் மக்களின் அக வாழ்க்கையையும் புற வாழ்க்கையையும் ஐந்திணைகளிலும் வைத்துக் கூறுகின்றன. இவ்விலக்கியத்திற்கு அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். முழுவதும் புலவர் கற்பனையன்று. தொல்காப்பியத்திலும் கடைச்சங்க நூல்களிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஒவ்வொரு நிலத்தினதும் வாழ்க்கை முறைகளும், ஒழுக்கங்களும், தெய்வங்களுங் குறிப்பிடப்படுகின்றன. நிலத்தின் இயல்பிற்கேற்ப மக்கள் தமது வாழ்க்கை முறைகளை அமைத்தனர். குறிஞ்சி நில மக்கள் குறவர், குன்றவர், கானவர், வேட்டுவர் எனப்பட்டனர். தேன் அழித்தலும், கிழங்கு அகழ்தலும், தினை விதைத்தலும், வேட்டையாடலும் இவர்களுடைய முக்கிய தொழில்களாகும். தேனும் தினை மாவும் இறைச்சியும் குறுஞ்சிநில மக்களின் முக்கிய உணவுப் பொருட்கள், முருகன் குறிஞ்சி நிலத் தெய்வம்.

முல்லைநில மக்கள் ஆயர், இடையர், கோவலர், பொதுவர் எனப்பட்டனர். ஆடு, மாடு மேய்த்தலும் வரகு விதைத்தலும் இவர்களுடைய தொழில்களாகும். வரகரிசிச் சோறும் பாலும் தயிரும் இவர்களுடைய முக்கிய உணவுப் பொருட்கள். மருதநில மக்கள் வேளீர், உழவர் கனமர், கடையர் எனப்பட்டனர். வேளாண்மையே இவர்களுடைய முக்கிய தொழில், பெரும்பாலான மக்கள் மருத நிலங்களில் வாழ்ந்தனர். நெல், வாழை, கரும்பு முதலிய பயிர்கள் செய்தனர். வேளாண்மைச் செய்முறைகள் சங்க நூல்களிற் கூறப்படுகின்றன. நெய்தல் நில மக்கள் பரதவர், பறவர், பாணியர், திமிலர், திரையர், நுழையர் எனப்பட்டனர். மீன் பிடித்தலும், உப்பு விளைத்தலும், வாணிகமும் இவர்களுடைய முக்கிய தொழில்களாகும். தமிழ் நாட்டிற் பாலைவனங்கள் இல்லை. வானம் பொய்த்து வறண்டுபோன நிலங்களைப் பாலை என்றனர். பாலைநில மக்கள் எயினர், மறவர் எனப்பட்டனர். இவர்கள் சிறந்த போர்வீரர். ஏனைய நில மக்களைக் கொள்ளையடித்து வாழ்ந்தனர்.

தொழில்களுக்கேற்பவும் மக்கள் வௌ;வேறு பெயர்கள் பெற்றனர். அந்தணர், ஐயர், பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளர், அடியோர், வினைவலர், கொல்லர், பொற்கொல்லர், தச்சர், குயவர், புலைத்தியர், பறையர், துடியர், பாணர், கடம்பர், கூத்தர், பொருநர், சங்ககாலத்துக்கு முற்பட்டே தமிழ் நாட்டிற் பல சாதிகள் தோன்றிவிட்டன. குடிகள் நான்கெனச் சங்க நூல்கள் கூறுகின்றன.

“துடியன், பாணன், பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியுமில்லை.”

எனினும், இச்சாதிகளிடையில் உயர்வு தாழ்வு தோன்றவில்லை. சங்ககாலத் தமிழரிடையில் நிலத்திற்கேற்பப் பண்பாட்டிலும், சமயத்திலும் பழக்க வழக்கங்களிலும், உணவிலும் சில வேற்றுமைகள் காணப்படுகின்றன. பொதுவாக நாம் வேளிர் நாகரிகத்தையே தமிழர் நாகரிகமாக எடுத்துக்கொள்ளுகிறோம்.

தமிழ் நாட்டிலே பல்லாயிரஞ் சிற்றூர்களும் பேரூர்களும் பல நகரங்களும் பட்டினங்களும் துறைமுகங்களும் இருந்தன. துறைமுகங்களில் விசேடமாகக் குறிப்பிடத்தக்கவை@ காவிரிப்பூம் பட்டினம், கொற்கை, முசுறி, மாந்தை முதலியனவாகும். நகர வாழ்க்கையையும் சிற்றூர் வாழ்க்கையையுஞ் சங்க நூல்கள் விரிந்துரைக்கின்றன.

சிற்றூர்க் காட்சிகள் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

(1) எங்கும் புல் மூடிக்கிடக்கிறது. ஊரைச் சுற்றி முள்வேலி அடைக்கப்பட்டிருக்கிறது. முள்வேலிக்கு இடையே அங்கும் இங்கும் சிறு குடிசைகள் காணப்படுகின்றன. மனையின் புறத்திற் பருத்திச் செடியும் பீர்க்கு முதலாங் கொடிகளும் பரந்து கிடக்கின்றன. மனையை அடுத்து ஒரு குப்பைமேடு. இங்கு கோழிகள் குப்பையைக் கிளறுகின்றன. பறவைகளும் பன்றிகளும் வளர்க்கப்படுகின்றன. ஊரில் நடுவே கிணறும் பொதுவிடமும் இருக்கின்றன. ஊர் மக்கள் ஆட்டுக்கிடாய் கோழிச் சண்டை பார்த்துப் பொழுது போக்குகின்றனர்.

(2) வரகுக் கற்றையால் வேய்ந்து சிறு குடிசைகள்@ உள்ளே ஆட்டுத்தோல் விரிக்கப்பட்டிருக்கிறது. ஆடுகள் மனையைச் சுற்றக் கட்டப்பட்டிருக்கின்றன.

(3) நிரை மரங்களாலான வேலி சூழ்ந்த மனை. அதற்கருகில் ஒரு பந்தல். மேலும் ஒரு கொட்டில். இங்கு கலப்பைகளும் வண்டிகளுங் கிடக்கின்றன. வரகு வைக்கோலால் மனை வேயப்பட்டிருக்கிறது.

(4) தென்னங் கீற்றுக்களால் வேய்ந்த மனை. மரச் செடிகள் வளவில் வளர்ந்து இருக்கின்றன.

(5)கடற்கரையில் பரதவர் குடிசைகள் காணப்படுகின்றன. மீன் பிடிக்கும் பறிகள் குடிசையின் முன்னே கிடக்கின்றன. சுரை முதலாங் கொடிகள் காய்த்துத் தொங்குகின்றன.

(6) பரவர் குடிசைகள்:- மூங்கிலைப் பரப்பி அதன் மேற்கிளைகளை வைத்துத் தாழை நாணாற் கட்டப்பட்டு மேலே தருப்பைப் புல்லால் வேயப்பட்டிருக்கின்றன. தாழ்ந்த குடிசைகள். அவற்றின் முற்றங்களிற் பறிகள்.

(7) நன்னன் நாட்டுக் குறவர் மூங்கிற் குழாய்களில் தேனாற் செய்த கள்ளையும் நெல்லாற் சமைத்த கள்ளையும் குடிக்கின்றனர். மாவையும் புளியையும் கலந்து உண்ணுகின்றனர். அரிசியினாலாக்கிய வெள்ளிச் சோறும் உண்ணுகின்றனர்.

(8) அந்தணர் வாழும் ஊர் மிகவும் சுத்தமாக இருக்கிறது. வீடுகள் பசுஞ் சாணியினால் மெழுகப்பட்டிருக்கின்றன. பந்தல்களிற் பசுக் கன்றுகள் கட்டப்பட்டிருக்கின்றன. வீடுகளில் நாய் கோழிகள் இல்லை.

சங்க காலத் தமிழகத்தில் வறுமை இருக்கவில்லையெனக் கூறமுடியாது. சிற்றூர்களிலும் பேரூர்களிலும் வறியோர் சிலரும் வாழ்ந்தனர். வறுமையின் கொடுமையைச் சில புலவர் பாடினர். கிழிந்த கற்றை அணிந்த மக்களும் இருந்தனர். குப்பையிலே பயிரான கீரையை நகத்தினாற் கிள்ளி எடுத்து உப்பில்லாமல் வேகவைத்து வாயிற் கதவைத் தாளிட்டுச் சுற்றமுடன் உட்கார்ந்து ஒருத்தி உண்டாளெனக் கூறப்படுகிறது. புல்லரிசியை உப்புடன் கலந்து வேடர் உண்டனர். ஆனால், வறுமையிலும் பண்பாடுடைய வாழ்க்கை நடத்தினர். இப் பண்பாட்டை விளக்குவதே இவ்வதிகாரத்தின் நோக்கமாகும்.

சிற்றூர் காட்சிகள் ஒருபக்கம், பேரூர் காட்சிகள் மறுபக்கம். நகரங்களில் அரசரும், அமைச்சர்களும், சேனைத் தலைவர்களும், வணிகரும், செல்வர்களும் பல்வேறு வகைப்பட்ட தொழிலாளர்களும் வாழ்ந்தனர். பிறநாட்டு வாணிபரும் தொழிலாளரும் இருந்தனர்.

“கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள்
கலந்திருந்நுறை மிலங்கு நீர் வரைப்பும்”

சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப் படை, மதுரை காஞ்சி, நெடுநேல் வாடை முதலிய நூல்கள் இந் நகர வாழ்க்கையைச் சிறப்பாகக் கூறுகின்றன. அரசரேயன்றிச் செல்வர்களும் மாடமாளிகைகளில் வாழ்ந்தனர். பல தட்டுக்களுடைய வீடுகளில் இடைத் தட்டுக்களில் மக்கள் வாழ்ந்தனர். கால நிலைக்கு ஏற்ற பள்ளியறைகள் வீடுகளில் இருந்தன. வேனிற் பள்ளி, உதிரிப்பள்ளி என்பன.

“மலை தோய் உயர் மாடம்”
“முகில் தோய் மாடம்”
“நெடுநிலை மாடத்து இடைநிலையில்”
“வகைபெற எழுந்து வானம் மூழ்கிச்
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்”

பூம்புகார் நகர்ச் செல்வப் பெண்களின் வாழ்க்கைக் காட்சி ஒன்று:-

“பூம்புகார் நகரத்தில் வண்ணமும், சுண்ணமும், தண்ணறுஞ், சாந்தமும், பூவும், புகையும் விரையும் வீதிகளில் விற்கப்பட்டன. பத்து வகைப்பட்ட விரகாலும் ஐந்து வகைப்பட்ட விரையாலும் முப்பத்து வகைப்பட்ட வாசனைப் பொருட்களினாலும் ஊறிக் காய்ந்த நண்ணீரிற பெண்கள் நமது கூந்தலைத் தோய்த்து நனைத்தனர். ஈரத்தை வாசனைப் புகையில் உலர்த்திக் கூந்தலுக்குச் சவ்வாது முதலிய நறுமணங்கள் பூசினர். பொன்னாலும் நவமணிகளினாலும் செய்யப்பட்ட பல்லாபரணங்கள் அணிந்தனர்.

தொல்காப்பியத்திற் குறிப்பிட்ட தனிப்பட்ட திணை வாழ்க்கை கடைச்சங்க காலத்துக்கு முற்பட்டே ஓரளவுக்கு மறைந்து விட்டது. எனினும், மரபு முறைப்பற்றிக் கடைச்சங்க நூல்களும் இவ்வாழ்க்கையைக் குறிப்பிடுகின்றன. கடைச்சங்க காலத்தில் நானில மக்களிடையிலும் பொருளாதாரத் தொடர்புகளும் உறவுகளும் ஏற்பட்டு விட்ன. தமிழ்நாட்டு மூவேந்தர்களும் நாடெங்கும் வீதிகளும் வழிகளும் அமைத்தும், இடையூறு மிகுந்த இடங்களிற் பாசறைகளிற் படைகளை நிறுவியும் பிரயாணிகளுக்கும் வணிகருக்கும் பாதுகாப்பு அளித்தனர். திரையன் ஆண்ட தொண்ட நாட்டில் வழிகளில் வில் வீரர் நின்று வணிகரைக் காத்தனர் எனப் பெரும் பாணாற்றுப்படை கூறுகிறது.

“கழுதைச் சாந்தோடு வழங்கும்
உலகுடைப் பெருவழிக் கவ லை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன் காட்டு இட்டு”

ஆய்ச்சியர் தயிர் கடைந்து வெண்ணெய் மோரை மருதநில மக்களுக்கு விற்று அந்நிலப் பொருட்களை மாற்றாகப் பெறுகின்றனர். நெய்தல் நில மக்களும் மருதநில மக்களும் தமது பண்டங்களை மாற்றிக் கொள்ளுகின்றனர். குறிஞ்சி நிலப் பொருட்களாகிய தேனுங் கிழங்குகளும் ஏனைய நிலங்களில் விற்கப்படுகின்றன. இத்திணை மயக்கத்தைச் சங்கப்பாடல் ஒன்று அழகாகக் கூறுகிறது.

“தேன் நெய்யோடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யோடு நறுவு மறுகவும்
தீங் கரும்போடு அவல் வகுத்தோர்
மான் குறையோடு மது மறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்
நறும் பூங் கன்னிக் குறவர் ஆடக்
கானவர் மருதம் பாட, அகவர்,
நீணிற முல்லைப் பஃறிணை நுலலக்
கானக் கோழி கதிர் குத்த
மனைக் கோழி தினை கவர
வரை மந்தி கழி மூழ்கக்
கழி நாரை வரை இறுப்பத்
தண் வைப்பின் நாடு குழீஇ”

துங்க பத்திரை யாறு வரையிற் சேர, சோழ, பாண்டிய, குறும்ப, எருமை நாடுகள் இருந்தன. தமிழ் நாட்டிற்கு வடக்கே கொங்கணர், கலிங்கர், இராட்டிரகூடர் முதலிய நாகரிகங்குறைந்த மக்கள் வாழ்ந்தனர். மேலும் வடக்கே வங்காளம், பிகார் சிந்து நாடு, கசமார் நாடு (முயளாஅசை) பூதர் நாடு (டீhரவயn) முதலியன இருந்தன. இப் பகுதிகளில் வாழ்ந்த திராவிட மக்கள் சித்திய, காக்கேசிய சீனக் குழுக்களுடன் சேர்ந்து மொழி, பண்பாடு வேற்றுமையடைந்து விட்டனர்.

2. கடைச் சங்ககால விவசாயம்
கடைச்சங்க காலத்திலும் விவசாயமே அடிப்படைத் தொழிலாகும். நீர்வளமும் நிலவளமுமுடைய தமிழ் நாட்டில் அக் காலத்தில் உணவுக்குப் பஞ்சமில்லை. பாரதப் போரின் போது, ஒரு பாண்டியனெ இரு சேனைகளுக்கும் உணவளித்தான். மூவேந்தருஞ் சிற்றரசர்களும் கிணறுகள் குளங்கள் வெட்டியும் ஆறுகளுக்கு அணைகள் கட்டியும் நீர்வளத்தைப் பெருக்கினர். இடைச் சங்க காலத்திற் காந்தமன் எனுஞ் சோழன் காவேரியை வெட்டிச் சோழ நாட்டிற்குத் திருப்பினான். தமிழர் மறையாகிய திருக்குறளில் வள்ளுவர் உழவின் சிறப்பைப் பத்துக் குறள்களில் விளக்குகிறார். “சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கு முரித்தாய உழுதற்றொழில்@ செய்விக்குங்கால் ஏனையோருக்கு முரித்து@ இது, மேற் குடியுயர்தற்கேது வென்ற ஆள் வினைவகையாகலின், குடிசெயல் வகையின் பின் வைக்கப்பட்டது.” என்பது பரிமேலழகர். உரைக்குறிப்பாகும்.

“வேளாண் மாந்தர்க் குழுதூ னல்ல
தில்லென மொழிப”

“ஏரினு நன்றா வெரு விடுதல் கட்டபி
னீரினு நன்றதன் காப்பு”

“சுழன்று மேர்ப்பின்ன துலக மதனா
லுழந்து முழவே தலை”

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந்
தொழுதுண்டு பின் செல் பவர்”

“இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி
னில மென்னு நல்லா னறும்.”

“வரம்புயர நீருயரும்@ நீருயர நெல்லுயரும்@
நெல்லுயரக் குடியுயரும்@ குடியுயரக் கோலுயரும்@
கோலுயரக் கோன் உயரும்.”

கடைச் சங்க கால விவசாயமுறை நிலப்பண்ணை முறை என்பதற்குப் பல சான்றுகளுண்டு. எல்லா நிலங்களும் விளைபொருளில் ஆறிலொரு பங்கும் அரசனுக்குரியவை. அரசர் சேனைத் தலைவர்களுக்கும் புலவருக்கும் நிலங்களை வழங்கினர் எனச் சங்க நூல்கள் கூறுகின்றன. இவர்கள் பல சலுகைகள் பெற்றனர். பல கடமைகள் செய்யவேண்டியும் இருந்தனர். இவர்கள் இடைக்கால ஐரோப்பிய நிலப்பிரபுக்களைப் போன்றவராவர். யூதர் கி.பி. முதலாம் நூற்றாண்டில் தமிழ் நாடு வந்தனர். அவர்களுடைய தலைவர்களில் ஒருவனாகிய யோசப் இரப்பயனுக்குத் தமிழ் நாட்டரசன் ஒருவன் அஞ்சுவள நாட்டை வழங்கிய செப்புப் பட்டயம் பின் வருமாறு கூறுகிறது. “யாம் யோசப் இரப்பயனுக்கு அஞ்சு வளநாடு, பணமாகவும் பொருளாகவும் திறை பெறும் உரிமை, அஞ்சு வளத்தின் வருமானம், பகல் விளக்கு தெரு விரிப்பு, பல்லக்கு, குடை, வடுக முரசு, எக்கானம், கால் மிதியடி, அணித் தோரண வளைவுகள், மேற்கட்டிகள் முதலிய பெருமகனுக்குரிய 72 சிறப்புரிமைகளையும் கொடுத்துள்ளோம்.

நிலவரியும் நீர் வரியும் கொடுங்குள் கடமையிலிருந்து அவருக்கு விலக்குரிமை கொடுத்திருக்கிறோம். அரண்மனை வகைக்கு மற்றை நாட்டு வாசிகள் வரி செலுத்துஞ் சமயம் அவர் வரி செலுத்தவேண்டியதில்லை யென்றும் அவர்கள் பரிசுகள் பெறுஞ் சமயம் அவரும் பெறுவாரென்றும் இந்தச் செப்புப் பட்டயம் மூலம் நாம் கட்டளை செய்கிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

3. கைத்தொழில்கள்
சங்க காலத்திலே நகரங்களிலும் பட்டினங்களிலும் பேரூர்களிலுஞ் சிற்றூர்களிலும் பல்வேறு கைத்தொழில்கள் செழிப்படைந்திருந்தன. புகார் நகரின் தொழிற் சிறப்பை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திற் பின்வருமாறு விவரிக்கிறார்.

வண்ணமுஞ் கண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினுங்
கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும்
தூசுந் துகிரும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோ டளந்துகடை யறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலங் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பன்னிண வினைஞரோ 
டோசுநர் செறிந்த ஊன்மலி யிருக்கையும்
கஞ்ச சாரருஞ் செம்புசெய் குநரும்
மரங் கொல் தச்சருங் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னருங்
கிழியினுங் கிடையினுந் தொழில் பல பெருக்கிப்
பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களுங் 
குழலினும் யாழினுங் குரன்முத லேழும்
வழுவின் றிசைத்து வழித் திறங் காட்டும்
அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும்
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாள ரொடு
மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்
கோவியன் வீதியுங் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோ ரிருக்கையும்
வீழ்குடி உழவரோடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதருங் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை யிருக்கையும்
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோ 
டணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவற் கணிகையர் ஆடற் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர்
பயில்தொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரோடு வகைதெரி யிருக்கையும்
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்த ரூருநர் கடுங்கண் மறவர்.
இருந்துபுறஞ் சுற்றிய பெரும்பா யிருக்கையும்
பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பிற் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கமும்”
கச்சி மாநகரின் தொழிற் சிறப்பை மணிமேகலையிற் காணலாம்.
“பன் மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர்
கண்ணொடை யாட்டியர் காழியர் கூவியர்
மைந்திண விலைஞர் பாசவர் வாசவர்
என்னுநர் மறுகு மிருங்கோ வேட்களும்
செம்பு செய்ஞ்ஞரும் சஞ்ச காரரும்
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லரும்
மரங்கொற் றச்சரும் மண்ணீட்டாளரும்
வரந்தர வெழுதிய வோவிய மாக்களும்
தோலின் துன்னருந் துன்ன வினைஞரும்
மாலைக் காரரும் காலக் கணிதரும்
நலந்தரு பண்ணுந் திறனும் வாய்ப்ப
நிலக்கலங் கண்ட நிகழக் காட்டும்
பாண ரென்றிவர் பல்வகை மறுகும்
வேத்தியல் பொதுவிய லென்றிவ் விரண்டின்
கூத்தியல் யறிந்த கூத்தியர் மறுகும்
பால்வே றாக வெண்வகைப் பட்ட
கூலங் குவைஇய கூல மறுகும்
மாகதர் சூதர்வே தாளிகர் மறுகும்
போகம் புரக்கும் பொதுவர் பொலிமறுகும்
கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை
வண்ண வறுவையர் வளந்திகழ் மறுகும்
பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும்
பன்மணி பகர்வோர் மன்னிய மறுகும்
மறையோ ரருந்தொழில் குறையா மறுகும்
அரசியன் மறுகு மமைச்சியன் மறுகும்
ஏனைப்பெருந் தொழில்செ யேயோர் மறுகும்”

பாண்டி நாட்டு மதுரையின் தொழிற் சிறப்பையும் இளங்கோவடிகள் கூறுகிறார். மதுரைக் காஞ்சியிலும் இச்சிறப்பினைக் காணலாம்.

நெசவு: கடைச்சங்க காலத்தில் தமிழ்நாடு நெய்தல் தொழிலிற் புகழ்பெற்றிருந்தது. உறையூர் ஆடைகள் உரோமாபுரிச் செல்வர்களினாற் பெரிதும் விரும்பப்பட்டனவெனவும் இதனால் தமிழ்நாடு உரோமப் பேரரசிலிருந்து பெருந் தொகை பொன்னைப் பெற்றதெனவும் ரோம வரலாறு கூறுகிறது. நெசவுத் தொழிலையும் நெய்யப் பட்ட ஆடை வகைகளையும் பற்றிய குறிப்புக்களைப் பல சங்க நூல்களிற் காணலாம்.

“நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுகத்து

நறுமடி செறிந்த அறுவை வீதியும்” (சிலப்பதிகாரம்)

“பாம்புரி யன்ன வடிவின காம்பின்
கழையடு சொலியி னிழையணி வாரா” (புறநானூறு)

“நோக்கு நுழைகல்லா நுண்வய பூக்கனித்து
அரவுரி யன்ன வறுவை”
“இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்”
(மலைபடூகடாம்)

“ஆவி யன்ன அவிர் நூற் கலிங்கம்” (பெரும்பாண்)

“போதுவிரி பகன்றைப் புது மலரன்ன
அகன்று மடி சலிங்கம் முடீஇ”
(புறநானூறு)

“பாம்புரித் த்ன வான்பூங் கலிங்கம்”
“அரவுரியன்ன அறுவை”

“இழை மருங்கறியா நுழைநூல் கலிங்கம்”

“கொட்டைக் கரைய பட்டுடை நல்கி
கொட்டைக் கரைபோட்ட பட்டாடை கொடுத்து”

“பனி மயிர் குளிர்ப்பன பஞ்சின மெல்லிய
கனி மயிர் குளிர்ப்பன கண் கொளாதன
எலி மயிர்ப் போர்வை”
(சீவகசிந்தாமணி)

நெய்யப்பட்ட ஆடை வகைகளாவன:- கோசிசம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், கண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கொங்கலர், கோபம், சித்திரக் கம்பி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக் காசு, வேதங்கம், புங்கர்க் காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறைஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, மணிப்பொத்தி என்பன வாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அணிகலன்கள்:- ஒரு நாட்டின் செல்வத்தை அந்நாட்டு மக்கள் ஆடவரும், பெணீடீருங் குழந்தைகளும் - அணியும் ஆடைகளிலிருந்தும் ஆபரணங்களிலிருந்தும் வீட்டிற் புழங்கும் தட்டு முட்டுப் பொருட்களிலிருந்தும் அறியலாம். கடைச் சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்திலே பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்களைப் புதைபொருள் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. சங்க காலத்தில் எமது பிள்ளைகள் தேரோடி விளையாடினர். கடலாடு காதையில் இளங்கோவடிகள் மாதவி அணிந்த அணிகலன்களைக் குறிப்பிடுகிறார். இவை அக்காலத் தமிழ் மாதரின் அணிகலன்களுக்கு உதாரணமாகும். மதுரையிலிருந்த ஆபரணக் கடைகளும் அங்கு விற்கப்பட்ட பொன் நவரத்தினங்களும் சிலப்பதிகாரத்திற் குறிப்பிடப்படுகின்றன:- நால்வகை வருணத்து வைரங்கள்@ மரகதங்கள்@ பதுமம், நீலம், விந்தம் படிதம் எனப்படும் நால்வகை மாணிக்கங்கள்@ புருடராகம்@ வயிடூரியங்கள்@ பல்வேறு வகை மணிகள்@ முத்து வருக்கங்கள், சிவந்த கொடிப்பவள வர்க்கங்கள்@ சாகரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூத்தம் எனும் நால்வகைப் பொன்: மதுரையில் விற்கப்பட்ட ஏனைய அலங்காரப் பொருட்களாவன:-

(அ) அகில்:- அருமணவன், தக்கோலி, கிடாரவன் காரகில் முதலிய வகைகள்

(ஆ) ஆரம்:- மலையாரம், தீமுரன், பச்சை, கிழான் பச்சை, பச்சை வெட்டை, அரிச் சந்தனம், வேர்ச்சுக் கொடி முதலிய வகைகள்

(இ) வாசம்:- அம்பர், எச்சம், கத்தூரி, சவாது, சாந்து, குங்குமம், பனிநீர், புனுகு, தக்கோலம், நாகப்பூ, இலவங்கம், சாதிக்காய், வசுவாகி, திரியாசம், தைலம் முதலிய வகைகள்.

(ஈ) கருப்பூரம்:- மலைச்சரக்கு, கலை அடைவ சரக்கு, மார்பு இளமார்பு ஆரூர்க்கால், கையொட்டுக்கால், மார்ப்பற்று, வராசான், குமடெறிவான், உருக்குருக்கு, வாரோசு, சூடன், சீனச் சூடன் முதலிய வகைகள்:

சிற்பக் கட்டடக் கலைகள்
பண்டு தொட்டுத் தமிழர் சிற்பக் கட்டடக் கலைகளிற் சிறந்து விளங்கினர். திராவிடச் சிற்பக்கலை எல்லா நாடுகளிலும் பரவியிருப்பதைக் காணலாம். சிந்துவெளியிலும்p வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் அரண்மனைகளையும், நகரங்களையும், கோட்டை கொத்தளங்களையும், அரண்களையும், மதில்கலையுங் கட்டினவர் திராவிட மக்களே. அரண்களின் அமைப்புங் காவலும் பல சங்க நூல்களிற் கூறப்படுகின்றன. வள்ளுவர் அரணின் சிறப்புக்களைப் பத்துக் குறள்களில் விளக்குகிறார். சங்க காலத்துக்குப் பின்பு தென்னாட்டிற் பெருங் கோயில்களையுங் கோபுரங்களையுங் கட்டியவரும் திராவிட மக்களே. உருவங்களைச் சமைத்தவரும் இவர்களே. சங்க நூல்கள் “மழைதோய்” “முகில் தோய்” மாடங்களைக் குறிப்பிடுகின்றன.

“வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கட் காலதர் மாளிகை யிடங்களும்
கயவாய் மருங்கிற் காண் போர்த் தடுக்கும்
பயனற வறியா யவன ரிருக்கையும்”
(சிலப்பதிகாரம்)

திவாகரம் சிற்பத் தொழிலின் உறுப்புக்களைக் கூறுகிறது.

“கல்லு முலோகமும் செங்கலு மரமும்
மண்ணுஞ் கதையும் தந்தமும் வண்ணமும்
கண்டசர்க் கரையு மெழுகு மென்றிவை
பத்தே சிற்பத் தொழிறள் குறுப் பாவன”

பிற நாட்டுத் தொழிலாளரும் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். தொழில்கள் நடத்தினர்.

“மகத வினைஞரும் மாரட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடித்
தொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினை”
(மணிமேகலை)

பண்டைத் தமிழர் நாகரிகம் கடலக நாகரிகமாகும். வேளாண்மைக்கும் தொழிலுக்கும் உள்நாட்டு வாணிபத்துக்குங் கொடுத்த அதே முக்கியத்துவத்தைப் பண்டைக்காலத் தமிழர் கடல் வாழ்வுக்குங் கடல் வாணிபத்துக்குங் கொடுத்தனர். பிற்காலத்தில் ஆங்கிலேயரைப் போல இவ்வாணிபத்தின் பொருட்டுக் கடலாட்சி செய்தனர். கடற்படைகள் வைத்திருந்தனர். மீன் பிடித்தல், உப்பு விளைத்தல், முத்தெடுத்தல், சங்கெடுத்தல், முத்துக்கோர்த்தல், சங்கறுத்து வளையல்கள் செய்தல் முதலிய கடற்றொழில்கள் பல தமிழ் நாட்டில் நடைபெற்றன. கரையோரப் பயணத்துக்குரிய சிறு கலன்களையும் ஆழ்கடலைக் கடத்தற்குரிய நெடுநாவாய்களையும் தமிழர் கட்டினர்.

பல தொழினுட்ப நூல்கள் சங்ககாலத்திலே தமிழில் இருந்தன என அறிகிறோம். “மந்திரவாத நூல்கள், மருத்துவ நூல்கள், சாமுத்திரிக்க நூல்கள், நிலைத்து நூல்கள், சிற்ப நூல்கள், ஆயுத நூல்கள், மத்துவிச்சை நூல்கள், ஆடை நூல்கள், அணி நூல்கள், அருங்கல நூல்கள், இசை நூல்கள், கூத்து நூல்கள்” மேனாட்டுக் “கில்டு” முறையே சங்ககாலத் தமிழ் நாட்டுத் தொழின் முறையும் போலத் தோன்றுகிறது.

4. வெளிநாட்டு வாணிபம்
“திரை கடலோடியுந் திரவியந்தேடு” என்பது எமது பழமொழிகளில் ஒன்றாகும். பண்டு தொட்டுத் திராவிட மக்கள் கடலோடிகளாகவும் உலக வாணிபராகவும் இருந்தனர். கடலாட்சி செய்த திராவிட வினங்கள் வரலாற்றிற் பலவுள – வட ஐரோப்பாவிலிருந்த ஐபீரியர், ஸ்பெயின் நாட்டு பாஸ்குகள், இத்தாலி நாட்டு ஏட்றஸ் கானர், தென் ஐரோப்பிய, வட ஆபிரிக்க கிழக்காசிய நாடுகளிற் பரவிய கார்த்தேசியர், பினீசியர், கிறீசிலும் கிறீட்டிலும் வாழ்ந்த ஈஜியர், செங்கடலுக்கு அப்பெயர் அளித்த எரிதிரையர், சுமேரியர், ஏலமியர், இந்தியாவில் வாழ்ந்த திரயர், பரவர், சிந்துவெளி மக்கள். இவர்கள் யாவரும் திராவிடவின மக்களாவர். வாணிபத்துக்காகச் சென்ற திராவிட மக்கள் மேற்கே அத்திலாந்திசு வரையும் கிழக்கே மசுபிக் சமுத்திரம் வரையுங் குடியேறினர்.

கி.மு. 1000 அளவிற் சொலமன் ஆட்சிக்காலத்தில் கீபுறு நாட்டிற்குந் தென்னிந்தியாவிற்கும் இடையில் வியாபாரம் நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கீபுறுக் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்து பொருட்களை ஏற்றிச் சென்றன. தமிழ் நாட்டிரசர் ரோமுக்குத் தூதனிப்பினர். ரோமருடனும், கிரேக்கருடனும் வியாபாரஞ் செய்தனர். யவனர் பலர் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். ரோமப் பொன் நாணயங்கள் தமிழ் நாட்டில் வழங்கின.

“யவனர் தந்த வினைமா ணன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங் கெழு முரிசி” (அகநானூறு)

“கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவன ரிருக்கையும்
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையு மிலங்குநீர் வரைப்பும்”
(சிலப்பதிகாலரம்)

“மொழி பலபெருகிய பழிதீர் தேஎத்தும்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்” (பட்டினப்பாலை)

எகிப்து முதலிய நாடுகள் செங்கடல் வழியாகத் தென்னிந்தியாவுடன் வாணிகத் தொடர்புகள் கொண்டன. கிரேக்கரும், யவனரும், கோசியரும், பினீசியரும் இவ்வியாபாரத்தை நடத்தியர். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சால்டிய வேந்தன் நபோனி தாசு காலத்திலேயே இவ்விந்திய வாணிபஞ் சிறந்து விளங்கிற்று, கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளினி “செங்கடற் செலவைப்” பற்றிய நூலிற் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“எகிப்து நாட்டு ஒசிசிஸ் துறையினின்று புறப்படுங்கலம், தென் மேற்குப் பருவக் காற்றைத் துணைக்கொண்டு நாற்பது நாட்களில் முசிறித்துறையை அடையும். அத்துறையிற் கடற்கொள்ளைக் கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் நித்திரியான் என்ற இடத்தில் உறைபவர். முசிறித்துறைக்கும் கலம் நிற்கும் இடத்திற்கும் நெடுந்தூரம் இருந்தமையினாற், பொருட்களைச் சிறு சிறு படகுகளிற் கொணர வேண்டும். முசிறியிலும் பார்க்க நியாசிண்டி நாட்டிலுள்ள பாரேஸ் துறைமுகஞ் சிறந்து விளங்குகிறது. இந்நாட்டு வேந்தனாகிய பாண்டியோன் உள்நாட்டில் மதுரை எனும் நகரில் இருக்கிறான். பாரேஸ் துறைக்குக் கோட்டநாராவிலிருந்து மிளகுப் பொதிகள் வருகின்றன.”

முசிறித்துறை செல்வத்தாற் சிறப்புடைய மானகர் எனவும் வடக்கிலிருந்தும் எகிப்திலிருந்தும் கலங்கள் எப்பொழும் இத்துறைக்கு வந்து போயின எனவும் இவ் வியாபாரத்துக்குத் தமிழ் மக்கள் பயன்படுத்திய சிறு கலங்கள் பெருங்கலங்கள் பெருநாவாய்கள் பற்றியும் பெரிபுளுஸ் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

கடைச்சங்க காலத்திலே தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி, கருவப்பட்டை, மிளகு, வெற்றிலை, துணிவகைகள், முத்து, பவளம், சக்கிமுக்கிகள், வெள்ளி, தந்தம், மைக்கல், மாணிக்கம், வைரம், ஆமையோடுகள், தேக்கு, கருமருது, சந்தனம், குரங்குகள், மயில்கள், குரங்குக்கும் மயிலுக்கும் விவிலிய வேதச் சொற்களாகிய கபிம், துகிம் என்பவை தமிழ்ச் சொற்களாகும். இறக்குமதி செய்த பொருட்களாவன:-

தங்கம், பொற்காசுகள், உயர்வகை மதுக்கள், குதிரைகள், கண்ணாடி, பித்தளை, ஈயம், தகரம், சாடி, திராட்சை ரசம்.

பர்மா, மலாயா, யாவா, சுமாத்திரா, சீனா முதலிய கீழைத் தேசங்களுடனுஞ் சங்க காலத் தமிழர் வியாபாரஞ் செய்தனர். அக் காலத்திற் கீழைத் தேசங்களுக்கும் மேலைத் தேசங்களுக்கும் இடையில் வியாபாரம் தமிழ் நாட்டின் ஊடாகவே நடைபெற்றது. சுமாத்திரா, யாவா, பார்லி, பர்மா, சீயம், இந்துச் சீனா முதலிய நாடுகளில் தமிழ் வியாபாரிகள் குடியேறினர். சில காலங்களில் இந் நாடுகளிற் சிலவற்றைக் கைப்பற்றியும் ஆண்டனர். சாவகத் தீவிலுள்ள நாகபுரத்திலிருந்து அரசாண்ட தமிழ் அரசர் இருவரைப் பற்றி மணிமேகலை குறிப்பிடுகிறது. சீனக்கப்பல்கள் ‘சங்’ எனப் பட்டன. ஏனைய நாட்டுக் கப்பல்களைக் காட்டினும் இவை பெரியவையாக இருந்தன. இக் கப்பல்கள் இந்தியாவிற்குக் கொண்டுவந்த பொருட்கள் சீனக் கோப்பைகள், பட்டாடைகள், ஈயம், செம்பு, ஆமையோடுகள், பவளம், அகில், கரிக்கோடு, மரப்பிசின்கள் முதலியவையாகும். இந்தியாவிலிருந்து கொண்டுசென்ற பொருட்கள்:- முத்து, மிளகு, விரைபொருட்கள், நீலம், பூந்துகில்கள், கண்ணாடிச் சாமான்கள், பாக்கு முதலியவையாகும்.

கிழக்கிலும் மேற்கிலும் பல துறைமுகங்கள் இருந்தன. டிண் டிஸ், முசிறி, நெல்கின்றா, முமரி முதலியவை மேற்குத் துறைமுகங்களாகும். காவிரிப்பூம்பட்டினம் நாகபட்டினம், கொற்கை, புதுச்சேரி, மரக்காமை, தசார்க்கு முதலியவை கிழக்குத் துறைமுகங்களாகும். அக்காலத்திற் காவிரிப்பூம் பட்டினம் முசிறி கொற்கை முதலியவை புகழ்பெற்ற முறைமுகங்களாக இருந்தன. இங்கு நடைபெற்ற வியாபாரத்தைப் பற்றியும் குழுமி நின்ற கப்பல்களைப் பற்றியும் சங்க நூல்கள் கூறுகின்றன:-

“நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலின் வந்த கருங் கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும், அகிலும்
தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெளிய வீண்டி” (பட்டினப் பாலை)

தமிழர் அன்று ஈழத்தில் இருந்திராவிடின் ஈழத்துணவை யார் அனுப்பினர்? ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விவசாயம் முன்னேற்றம் அடைய முன், தமிழர் இந்நாட்டில் நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்ந்திருக்கவேண்டுமல்லவா?

“கடலருகே இருக்கும் பரதவருடைய அகன்ற தெருவிடத்தே அரிய காவலையுடைய பண்டசாலையுண்டு. கடலில் ஏற்றுவதற்குக் கொண்டுவந்த பண்டங்களும், கடலிலிருந்து இறக்கிய பண்டங்களும், சுங்கங் கொள்வதற்கு முத்திரை பொறித்துப் புறம்பே அடுக்கப் பட்ட பண்டங்களும் பண்டசாலையில் மலைபோற் குவிந்து கிடந்தன. சுங்கங் கொள்வோர் எப்பொழுதும் ஓய்வின்றிச் சுங்கங் கொள்வர்.”
(பட்டினப்பாலை)

கடைச் சங்க காலத்தில் வெளிநாட்டு வியாபாரமேயன்றி உள்நாட்டு வியாபாரமும் அபிவிருத்தியடைந்திருந்தது. தமிழ்நாடு முழுவதும் பொருளாதாரத் தொடர்பிருந்தது. குறிஞ்சி, முல்லை நில மக்கள் தமது பொருட்களை மருத நிலத்தில் விற்று நெல்லைப் பெற்றனர். நெய்தல் நிலத்துப் பரதவர் எல்லா நிலங்களிலும் உப்பு விற்றனர். உப்பை எழுது வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். நகரங்களிலும் பேரூர்களிலும் நானிலப் பொருட்களும் பிறநாட்டுப் பொருட்களும் விற்கப்பட்டன. நாணயங்கள் வழங்கின. உடன்படலும் கொடுத்தலும் அக் காலத்தில் வழக்கமாகும்.

நகரங்களிற் பெருங்குடி வாணிகர் இருந்தனர். செல்வ நிலைக்கேற்ப வாணிகர், இரப்பர், கலிப்பர் பெருங்குடியரெனப்பட்டனர். செல்வமும், புகழும் பெற்ற வணிகரை அரசர் “எட்டிப்” பட்டங் கொடுத்துக் கௌரவித்தனர். பிறநாட்டு வியாபாரம் பெரும்பாலும் வர்த்தகக் குழுக்களினால் நடத்தப்பட்டது. தாம் தேடிய செல்வத்தில் ஒரு பங்கை இக் குழுக்கள் சமூகத் தொண்டிலும் சமயத் தொண்டிலுஞ் செலவிட்டன. கோயில்கள் கட்டின. தமிழர் நாகரிகத்தையுஞ் சமயத்தையும் பிறநாடுகளிற் பரப்பிய இக்குழுக்களுக்கு அரசர் ஆதரவளித்தனர். நகரங்களில் வாழ்ந்த வாணிகரின் சிறப்பையுஞ் செல்வத்தையுஞ் சிலப்பதிகாரங் கூறுகிறது.

“உரைசால் சிறப்பின் அரசுவிழை திருவிற்
பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
முழுங்கு கடல் ஞால முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்த தாகி
அரும்பொருள் தரூஉம் விருந்திற் றோம்
ஒருங்கு நொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
கலந்தினுங் காலினுந் தருவன ரீட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்”

வாணிகரின் பண்பைச் சங்க நூல்கள் கூறுகின்றன.

“நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நன்னெஞ்சி னோர்
வடுவஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள் வதூஉ மிகைப் படாது
கொமுப்ப தூஉங் குறை படாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் தொண்டி துவன்றிருக்கை”
(பட்டினப்பாலை)

பிற்காலத் திவாரகம் வாணிகர் பண்புகளைப் பின்வருமாறு கூறுகிறது:-

“தனிமை யாதல் முனிவில னாதல்
இடனறிந் தொழுகல் பொழுதொரு புணர்தல்
உறுவது தெரிதல் இறுவ தஞ்சாமை
ஈட்டல் பகுத்தல் - என்றிவை யெட்டும்
வாட்டமிலா வணிகர தியற் குணமே”



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard