Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஈழத்தில் – நாம் தமிழர்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
ஈழத்தில் – நாம் தமிழர்
Permalink  
 


 ஈழத்தில் – நாம் தமிழர்

“புத்த மத்தின் மூலம் வட நாட்டுப் பண்பாடு புகுந்து சிங்களமொழி வேறுபடுவதற்கு முன், இலங்கை தமிழகமாக இருந்தது. சிங்களம் வேறுபட்ட பின்பும், வட இலங்கை தமிழ் நாட்டைவிடத்தொன்மை மிக்க தமிழகமாகவே இருந்து வந்தது. ஈழ நாட்டவரான வட இலங்கைத் தமிழர் இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய வரல்லர். அவர்கள் சிங்களவரிலும் பழமையான இலங்கை நாட்டு மக்களாவர்” – பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை. “அதிசயம் மிக்க இந்து வெளி நாகரிகத்தை உண்டாக்கிய திராவிட இனம் பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்தது. ஹதரபாட்டில் எடுக்கப்பட்ட பிரேதங்கள் புதைக்கும் தாளிகளும், தின்னவேலி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மட்பாத்திரங்களும் கேகாலையினுள்ள குகையொன்றிற் காணப்பட்ட கல்வெட்டுப் பொறிப்புகளும் இதற்குச் சான்று பகர்கின்றன” வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரியார். “இலங்கையில் முதன் முதலிற் குடியேறியவர் தென்னிந்திய மக்கள் என்பதையும் விஜயன் வருகைக்கு முன்னர் திராவிடமும் திராவிட நாகரிகமும் இலங்கை முழுவதும் பரவியிருந்தன என்பதையும், வட மாகாணத் தொல் பொருள் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இலங்கையின் வடக்கிலேதான் நாகரிகம் முதன் முதலில் தோன்றிப் பின்பு ஏனைய பகுதிகளுக்குப் பரவிற்று.” புலவர் ஊ.ளு. நவரத்தினம்.

“சிங்களம் உண்மையில் ஒரு திராவிட மொழியாகும். தமிழ் அடிப்படையில் வளர்ந்தது. பாளியிலிருந்தும் சமஸ்கிருதத்திலிருந்தும் பெருந்தொகையான சொற்களைக் கடன்பட்ட போதிலும் அஃது அமைப்பிலும் அறிகுறிகளிலும் தமிழின் குழவியாகும். சொற்றொடரியல் மரபு வழக்கியல் விதிகள் பெரும்பாலும் தமிழ் விதிகளை ஒத்தனவாக இருக்கின்றன.” – முதலியார் குணவர்தன.

சிலர் பாண்டி நாட்டைச் செந்தமிழ் நாடென்பர். வேறு சிலர் சோழநாட்டைச் செந்தமிழ் நாடென்பர். ஆனால், வட இலங்கையே செந்தமிழ் நாட்டிற் செந்தமிழ் நாடென்பதை இவ்வதிகாரத்திற் காண்போம். பண்டு தொட்டுத் தமிழுக்கும் சைவத்துக்கும் ஈழம் இருப்பிடமாக விளங்கியது. ஈழத்தை நினைக்கும் போது.

‘எந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந் நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே’ என்பதை நினைவு கூர்வோமாக.

இன்று இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலமாகும். விஞ்ஞான உலகம், முன்னோர்க்குப் பேசுகிறோம். எனினும், இலங்கை வரலாறாக ஒரு புராணங் கற்பிக்கப்படுகிறது. மகாவம்சம் அநுராதபுரத்திலாண்ட சிற்றரசர் வம்சத்தின் புராணம் அல்லது மான்மியமாகும். இச்சிற்றரசர் புத்த மதத்தையும் சங்கத்தையும் ஆதரித்தபடியினால், அவர்கள் புகழைப் புத்த குருமார் பாடினர். சங்கத்தின் செல்வாக்கையும், அதிகாரத்தையும் நிலை நாட்டுவது இந்நூலின் நோக்கமாகும். புராண முறைப்படி எழுதப்பட்டது. புராணங்கள் எழுதுவதிற் புத்தகுருமார் எமது பிராமணரிலும் பார்க்க குறைந்தவர்களல்லர்.

பண்டைக்காலத்தில் இந்தியாவிற் பல்லாயிரஞ் சிற்றரசுகள் இருந்தன. ஒவ்வொரு குலமுங்குடியும் தன்னைத்தானே ஆட்சி செய்தது. காலத்துக் காலம் பேரரசுகள் தோன்றின. தென்னாட்டிலே சேர, சோழ, பாண்டியர் பேரரசுகள் நெடுங்காலம் நீடித்திருந்தன. எனினும், இவர்களும் சிற்றரசர்களாக இருந்த காலங்களுமுண்டு. சிற்றரசர் பேரரசருக்கு திறை கட்டினர். பேரரசர் பலங்குன்றிய காலத்திலே திறை கட்ட மறுத்தனர். அடிக்கடி போர்கள் மூண்டன இலங்கையிலும் பல சிற்றரசுகள் இருந்தன. அநுராதபுரச் சிற்றரசு இவற்றில் ஒன்றாகும். அநுராதபுர அரசர் இலங்கையிற் பேரரசாக இருந்தனரா? அவ்வாறாயின் எவ்வௌ; காலங்களில்? அநுராதபுரச் சிற்றரசின் புராணம் இலங்கையின் வரலாறாகாது. இந்தியாவிற் சிற்றரசர் புராணங்கள் பல்லாயிரம் உள. இலங்கையிலும் இவைபோன்ற புராணங்கள் உள. சிங்களத்தில் மகாவம்சம், சூளவம்சம் முதலியன தமிழில் யாழ்ப்பாண வைபவமாலை, வன்னியர் புராணம், கோணேஸ்வர புராணம், மட்டக்களப்பு மகாத்மிகம் முதலியன.

சிங்களவர் தம்மை ஆரியர் என ஒரு கட்டுக் கதை எழுதி வைத்திருக்கின்றனர். ஆரியர் எனுஞ் சொல்லின் பல கருத்துகளையும் இரண்டாம் அதிகாரத்திற் படித்தோம். எக்கருத்தில் இவர்கள் தம்மை ஆரியர் என்கின்றனர். இன அடிப்படையில் ஆரியரா? அதாவது இந்தியாவிற்குட் புகுந்த காக்கேசிய ஈரானியக் குழுக்களின் சந்ததிகளா? அல்லது திசை அடிப்படையில் ஆரியரா? அதாவது வட இந்தியாவிலிருந்து வந்தவரா? விஜயன் இலங்கைக்கு வரமுன் இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் நாகரும், இயக்கமும் முண்டரும் என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர்.

இவர்கள் அழிந்து விடவில்லை. இலங்கையில் வாழும் மக்களிற் பெரும்பான்மையானோர் தமிழராயினும் சரி சிங்களவராயினும் சரி இவர்களின் சந்ததிகளாவர். நாகர் இலங்கையின் மேற்குப் பகுதியில் வாழ்ந்தனர். ஆதலால் தமிழர் பெரும்பாலும் நாகராவர். இயக்கரும் முண்டரும் கிழக்குப் பகுதிகளிலும் மத்திய பகுதிகளிலும் வாழ்ந்தனர். ஆதலாற் சிங்களவர் பெரும்பாலும் இயக்கரும் முண்டருமாவர். இவை யாவுந் திராவிட இனங்களென முன்பு கூறினோம். எவராவது சந்தேகப்பட்டால் தம்மைத்தாமே கண்ணாடியிற் பார்த்துத் தெளிவு பெறலாம்.

அக்காலத்திற் குடிவரவுக் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆதலாற் பண்டுதொட்டுத் தென்னிந்தியாவிலிருந்து பல குழு மக்கள் பற் பல காலங்களில் இலங்கைக்கு வந்து குடியேறினர். இங்கு வாழ்ந்த நாகர் இயக்கர். முண்டர்களுடன் கலந்து ஒன்றாகினர். வட இலங்கையிற் குடியேறியவர் பெரும்பாலும் பாண்டி நாட்டிலிருந்தும் சோழ நாட்டிலிருந்தும் வந்த தமிழராவர். சிங்களவர் தங்களைவ விஜயனின் சந்ததிகள் எனக் கூறிக்கொள்ளுகின்றனது. விஜயனின் அரச பரம்பரை, ஐந்தாம் தலைமுறையுடன் அழிந்தது எனவும் அதற்குப்பின் நாகர் வமிசத்தவரும் தமிழரும் கலப்பு மிசிர குலத்தவரும் அநுராதபுரத்தில் ஆண்டனர் எனவும் மகாவம்சமே கூறுகிறது. சிங்களவரிற் சிலர் விஜயனின் சந்ததிகள் என எடுத்துக்கொண்டாலும், எல்லாச் சிங்களவரும் விஜயனின் சந்ததிகளாக இருக்க முடியாது. விஜயனும் திராவிடன் என்பதை அறிந்தால் அவனையே தூற்றுவர். இக்காலச் சிங்களவர் போல் இருக்கிறது. விஜயன் கலிங்க தேசத்திலிருந்து காவாலித் தோழர்களுடன் நாடு கடத்தப்பட்டவன். கலிங்கம் பழைய காலத்தில் ஆந்திராவின் ஒரு பகுதியாக இருந்தது. தக்கணத்தில் இருக்கிறது. அன்றும் இன்றும் இந்நாட்டில் வாழும் மக்கள் திராவிடராவர். விஜயன் திராவிடன். இந்து மதத்தவன். இவன் எவருக்காவது சந்தேகமிருந்தால் ஒருமுறை கலிங்கத்துக்குப் போய் அங்கு இன்றும் வாழும் மக்களைப் பார்த்துத் தெளிவு பெறலாம்.

இதை உணர்ந்த பிற்காலச் சிங்களவர் சிலர் தாம் இன அடிப்படையில் ஆரியர் என்பதை நிலைநாட்டுவதற்கு விசயனின் தாயகம் வங்காளம் என வாதித்தனர். வங்காளம் போனாலும் அங்கு வாழும் மக்கள் மங்கோலிய திரவிடர் என்பதை இவர்கள் உணரவில்லைப் போலும். ஒருவர் கலிங்க நாடு மலேசியாவில் இருந்ததெனவும். அங்கிருந்தே விசயன் வந்தான் எனவும் எழுதினர். இதன் உண்மை எவ்வாறாயினும், மலேசியாவிற்குப் போனாலும் அங்கு வாழும்மக்கள் மங்கோலிய – நாகர் திராவிட இனத்தவர் என்பதை இவர் உணரவில்லை. இப்போது ஒரு புதுக்கதை தோன்றியிருக்கிறது. சிங்களவர் அலெக்சாண்டருடன் இந்தியாவிற்குட் புகுந்த படைகளின் சந்ததிகளாம். ஒரு வேளை தாயகத்தை வட துருவத்துக்குக் கொண்டு சென்றாலும் செல்லலாம். அங்கு வாழும் எஸ்கிமோக்களும் திராவிடர் என்பதை அறிந்தால் இவ்வாறு செய்யமாட்டார். ஒரு கட்டுக்கதைக்கு ஆதாரம் தேடி எத்தனை கட்டுக் கதைகள்? புராணங்கள்? அண்டப் புழுகுகள்? இலங்கை வாழ் சிங்களவரும் தமிழரும் பெரும்பாலும் விசயன் வருகைக்கு முன் இலங்கையில் வாழ்ந்த நாகர், யக்கர், முண்டர், லம்பகர்ணர், கபோயியர், மிசிரர், மோரியர், புலையர், முரிதிசர், வேளீர், தமிழர், வணிகர், பிராமணர் குலங்குடிகளாவர்.

சிங்களவர் பெரும்பாலும் நாகரும், இயக்கரும், முண்டரும், கலிங்கரும் கலந்த இனத்தவர். பிற்காலத்தில் வேறு பல குலங்களும் இங்கு வந்து குடியேறிக் கலந்தன.

(அ) பாண்டிய சோழப் படை வீரர் – பெரும்பாலும் மறவர்படைகள் - சிங்களப் பிரதேசங்களிற் குடியேறிச் சிங்களவருடன் கலந்து இன்று சிங்களவராகி விட்டனர்.

(ஆ) வன்னியர் – சோழப்படைகளுடன் வன்னியர் இந்நாடு வந்து குடியேறினர். வன்னியர் வரலாறு பற்றிப் பல நூல்கள் உள. வன்னியர் விசேடமாகத் தொண்டை நாட்டவர்: காடவர் மரபினர். காடுகள் அடர்ந்த முல்லை நிலங்களில் வாழ்ந்தனர். படைக்கலப் பயிற்சியிற் சிறந்து விளங்கினர். போரில் வீரர், மறவருக்குச் சமமானவர், தென்னாட்டு வேந்தருக்குப் படைத்தலைவர்களாகப் பலர் இருந்தனர். சோழர் படையில் வன்னியர் பெருந்தொகையாக இருந்தனர். இலங்கைக்கு வந்த வன்னியரிற் பெரும்பாலானோர் இன்று சிங்களவராகி விட்டனர். வன்னியருடன் இங்கு வந்த வேறு பல குலத்தவரும் - வில்லி துரையர். வாகையர், ஒட்டர், மலையாளிகள் - இலங்கையிற் குடியேறினர். இவர்கள் வடமத்திய மாகாணத்திலும் வடமேற்கு மாகாணத்திலும் இன்று பெருந்தொகையினராக வாழுகின்றனர். சிங்கள மொழி பேசுவதனால் இன்று சிங்களவராவர் – பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்பு தென்னிந்தியாவில் இருந்து மூன்று குலத்தவர் – கரவர், சலாராகமா, துவர் - இங்கு வந்து குடியேறினர். இவர்கள் இந்தியாவின் மேற்குக் கரைப் பகுதிகளிலிருந்து வந்தனர். இவர்களுடைய தாயகங்களைப் பம்பாய்க்கும், மலையாளத்துக்கும் இடைப்பட்ட பகுதிகளாகக் கருதலாம். இவர்களும் தம்மைப் பற்றி புராணங்கள் எழுதி வைத்திருக்கலாம். எனவே சிங்களவர் எக்குலத்தவராயினும் திராவிடர். அவர்கள் மொழியுந் திராவிட மொழிகளில் ஒன்றாகும். பண்டை இலங்கை மக்களின் மொழி ஈழு அல்லது எலு எனப்படும். புத்த சமயத்தின் பின்பாளி சமஸ்கிருதக் கலப்பினாற் சிங்களமாயிற்று. கிறிஸ்து சகாப்தத்தின் பின் சிங்களம் இலக்கியமும் இலக்கணமும் பெற்றது – வட இலங்கையில் ஈழு மொழி தமிழுடன் கலந்து தமிழாயிற்று.

இந் நாட்டில் வாழும் தமிழரும் சிங்களவரும் ஓரினத்தவர் – திராவிடர். மொழியாலும் மதத்தாலும் வேறுபட்டவர். இன்று மொழிகளின் அடிப்படையில் இனங்கள் வகுக்கப்படுகின்றபடியினால் ஈரினத்தவர் எனக் கூறலாம். பண்டுதொட்டு இந்நாடு சிங்களவருக்கும் தமிழருக்கும் சொந்தமானது. பல நாடுகளில் இரண்டு மூன்று இன மக்கள் ஒற்றுமையாகவும் நாகரீக மனிதராகவும், வாழ்வதைக் காண்கிறோம். இரண்டு மூன்று மொழிகள் பேசப்படுகின்றன. இலங்கையில் ஏன் ஆக்கிரமிப்பும் அநீதிகளும் அட்டூழியங்களும் நடைடிபறுகின்றன? ஈரின மக்கள் சரிசமனாகவும் ஒற்றுமையுடனும் பொதுவுடமைச் சமுதாயத்தில் மட்டுமே வாழலாம் எனப் பொதுவுடமை வாதிகள் கூறுகினற்ன. இஃது உண்மையா? இக்கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிப்பது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்யலாம்? பொதுவுடமை வாதிகள் கூறுவது உண்மையானால், யாவரும் பொது உடமைவாதிகளாவது நன்று!

இப்போது ஈழத்தில் தமிழராகிய எமது வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். வரலாற்றுக்கு முற்பட்ட பண்டைக்காலத்திலே எமது நாடு தமிழகமாகிய குமரி நாட்டிற்கு வடக்கேயும் தாமிர பரணியாற்றுக்குத் தெற்கேயும் இலேமூரியாக் கண்டத்திலிருந்த பகுதியாகும். இப்பகுதி இராமாயணக் காலம் வரையும் இந்தியாவுடன் தொடர்பாக இருந்தது. மாலைதீவுகள் வரையும் பரவிக் கிடந்தது. அக்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் திராவிட இனத்தவரான முண்டரும் இயக்கரும் நாகருமாவர். மிருகேந்திர புராணம் இவர்களை மிலேச்சர் எனக்குறிப்பிடுகிறது. தலைச்சங்கமிருந்த முரஞ்சியூர் முடிநாகராயர் ஈழ நாட்டு நாகர் குலத்தவராகக் கருதப்படுகின்றனர். தொல்காப்பியர் ஈழநாட்டுக் “காப்பியர்” குலத்தவரென இராச நாயக முதலியார் கூறுகிறார். கடைச்சங்கப் புலவர்களுள் ஈழத்துப் பூதந்தேவனாரும் ஒருவராவர். இவருடைய ஏழுபாடல்கள் சங்க நூல்களிற் காணப்படுகின்றன. இவை எவ்வாறாயினும், இம் மிகப் பழைய காலத்திலே ஈழநாடு தமிழ்நாடாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

இராமாயண காலத்தில் இயக்கர் கோனாகிய இராவணன் இலங்கையிற் பேரரசனாக இருந்தான். இக்காலத்துக்கு முன்னரே சிற்சில கடற்கோள்களினால் இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்து விட்டது. இராவணன் தென்னிந்தியாவிலுஞ் சில பகுதிகளை வென்று ஆண்டான். இவன் மறத்தமிழன். சிவ பக்தன்.

“தென்றிசையைப் பார்க்கின்றேன்
என் சொல்வன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம்
பூரிக்குதடடா
அன்றிருந்த இலங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும்
தன்புகழை வைத்தோன்” (பாரதிதாசன்)

இராவணன் காலத்துக்குப் பின்பு இயக்க அரசர்கள் வலிகுன்றி அவர்களுடைய சீருஞ்சிறப்பும் செல்வமும் புகழும் மறைந்தன. அன்று இயக்கர் குலத்தை இனத்துரோகி ஒருவன் வேதம் பேசி அழித்தான். இன்று எம்மைப் பலர் பணஞானம் பேசி அழிக்கின்றனர். நாகர் அரசுகள் தோன்றின. ஒருவேளை இயக்கர் சிற்றரசர்களாகச் சிலவிடங்களில் இருந்திருக்கலாம். இராவணனின் மனைவி மண்டோதரி. இவள் மாதோட்டையில் வாழ்ந்த நாகர் அரச குலத்தவள். இக் கம்மிய நாகரைப் பற்றி இராசநாயக முதலியார் அநேக வரலாற்று விபரங்கள் கொடுக்கிறார். இப்பண்டைக் காலத்திலே யாழ்ப்பாணத்தின் நிலைமையைப் பற்றியும் அவர் கூறுகிறார். மகாவம்சம், சூளம்சம், யாழ்ப்பாண வைபவமாலை முதலியவை போன்று இவருடைய நூல் புராணமன்று, இது வரலாற்று ஆராய்ச்சி நூலாகும்.

“இப்போது குடாநாடாகவிருக்கும் யாழ்ப்பாணம் முன்னொரு காலத்தில் - அதாவது கிறித்துவுக:கு அநேகவாயிரம் ஆண்டுகட்கு முன்னர் - இரண்டு தீவுகளாகவிருந்தது. மேற்கே நாகதீவம், மணி நாகதீவம், பணபுரம், மணிபல்லவம் எனும் நாமங்களால் வழங்கப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமை முல்லைத்தீவு, எருமைத்தீவு என்று பெயர்பெற்ற சிறு தீவும் ஆக இரு பிரிவாக இருந்தது. காலந்தோறும் பூகம்பங்களினாலும், பிரளயங்களினாலும் அழிக்கப்பட்டு, மேற்கே ஒன்றாயிருந்த தீவகம் பல தீவுகளாகப் பிரிந்தது. காரைத்தீவு, வேலணை, மண்டைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினா தீவு, நெடுந்தீவு முதலிய தீவகங்களும் வலிகாமமும் இப்பெருந்தீவகத்தின் பகுதிகளேயாம். அவ்வாறே, கிழக்கே ஒன்றாயிருந்த சிறு தீவகம் களப்புக் கடலால் வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப் பள்ளியெனும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

பண்டைக்கடல், பூநகரிக்கடல், யானையிறவுக்கடல், எனுங்களப்புக் கடல்கள், முன்னே வங்காளக் குடாக் கடலுடன் சேர்ந்து ஆழமும் அகலமும் உள்ளனவாயிருந்தன. அன்றியும் மேலைத்தேசங்களிலும் சீனம் முதலிய கீழைத்தேசங்களிலுமிருந்து போக்குவரவு செய்யுங் கப்பல்களுக்குப் பெரு வழியாகவும், சோளகம், வாடைக்காற்றுக்கள் தொடங்கும் காலங்களில் உண்டாகும் புயல்களுக்கு அக்கப்பல்களின் ஒதுக்கிடமும் உறைவிடமுமாகவும் இருந்தன……………………………………………………………
…………………………………………………………………………………………………………...

ஓவியரல்லாத மறுநாகர் வகுப்பைச் சேர்ந்த அரசர்கள் கந்தரோடையிலும், எருமை முல்லைத் தீவிலும், குதிரை மலையிலுமிருந்து அரசாண்டு வந்தார்கள். அல்லியரசாணியும், எழுனியும், பிட்டங்கொற்றனும் குமணனும் குதிரை மலையிலும், ஆந்தை, ஆதனழிசி, நல்லியக் கோடன், வில்லியாதன் என்பார் மாந்தையிலும், எருமையூரன் எருமை முல்லைத்தீவிலும் இருந்து அரசாண்டமை பண்டைத் தமிழ் இலக்கியங்களால் அறியலாம்…………………………………………………………………………….
……………………………………………………………………………………………………………

பன்னெடு காலமாகப் பீனீசியர் என்னும் அரேபிய தேசவாசிகள் இந்தியா இலங்கையுடன் கப்பல் மார்க்கமாக வாணிபம் நடத்தி வந்தார்கள். விவிலியண நூலில் “ஓவிர் தேசத்திலிருந்து பொன்னும் வெள்ளியும், தந்தமுங், குரங்குத் தோகையுங் கொண்டுவரப்படும்’ என்று சொல்லப்பட்ட ஓவிர் தேசம் ஓவியராகிய நாகர் வாழ்ந்த மாந்தையே”

வட இலங்கையிலுள்ள பெரிய குளங்கள்
வவனிக் குளம், பாவற்குளம் முதலியவை விசயன் இலங்கைக:கு வரமுன் கட்டப்பட்டவையாகும். கி.பி. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளிற் கட்டப்பட்ட பெரிய குளம், மாமடு, ஒலுமடு, கனகராயன் குளம், பண்டாரகுளம் முதலியவையுந் தமிழராற் கட்டப்பட்டவையாகும். திருகோணமலைப் பகுதியிலுள்ள கந்தளாய்க் குளமும் விசயன் காலத்துக்கு முற்பட்டதாகும். நாகதீவு, நாகர்கோயில், மாதோட்டம் முதலியவை பற்றிய குறிப்புக்கள் குநற்தொகையிற் காணப்படுகின்றன.

புத்தமதம் இலங்கைக்கு வரமுன் ஈழ மக்கள் இந்துக்களாக இருந்தனர். மத மாற்றத்தினால் இன மாற்றம் ஏற்படுவதில்லை.

“விசயன் இலங்கைக்கு வருவதற்கு ஆதிகாலத்துக்கு முன்னரேயே இலங்கையிற் பெயர் பெற்ற ஐந்து சிவாலயங்கள் இருந்தன – திருக்கேதீசுவரன், முனீசுவரன், தண்டேசுவரம், திருக்கோணேசுவரம், நகுலேசுவரம்.” – பீரிஸ். இந்த ஐந்து கோயில்களையே இன்று சில சிங்களவர்கள் பறிக்க எத்தனிக்கின்றனர்.

திருகோணமலையிலுள்ள கோணேசுவரர் கோயில் பற்றிப் பல நூல்கள் உள@ தட்சண கைலாச புராணம், கோணேசர் கல்வெட்டு, திருக்கோணாசல வைபவம். இக்கோயிலின் தொடக்கத்தைக் கோணேசர் கல்வெட்டுக் கூறுகிறது.

“திருந்துகலி பிறந்தைஞ்…ற் றொருபதுட
னிரண்டாண்டு சென்ற பின்னர்
புரிந்திடப மாதமதி லீரைந்தாந்
தேதி திங்கள் புணர்ந்த நாளில்”

அதாவது கி.மு. 2590இல் என்க.

குளக்கோட்டன் சோழ மகராசா என்ற புராணக் கதையை நாம் நம்பவேண்டியதில்லை. புராணத்திற் சாதாரண மனிதனும் மகாராசாவாகிறான். நாடு கடத்தப்பட்ட விசயன் மகாவம்ச புராணத்திற் சிங்கத்திலிருந்து உதித்த கலிங்கத்து இளவரசனாக வில்லையா?__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருகோணமலை எக்காலத்திலும் சைவத்திருத்தலமாகிய தமிழ் நாடாக இருந்தது. சோழப் பேரரசுக் காலத்தில் திருகோணமலையைச் சோழப் பிரதிநிதிகள் நேராக ஆண்டனர். திருகோணமலையிலாண்ட சிற்றரசர் சில காலம் தனியாட்சி செய்தனர். சில காலம் சிங்கள அரசருக்குத் திறைகட்டி ஆண்டனர். ஆனாற் பெரும்பாலும் யாழ்ப்பாணப் பேரரசின்கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். திருகோணாமலை தேவாரப் பாடல்கள் பெற்ற திருப்பதியாகும்.

“மந்திரத்து மறைப் பொருளுமாயினான் காண்
மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே”
- திருநாவுக்கரசு நாயனார்.

“மாதரொடு மாடவர்கள் வந்தடி
யிறைஞ்சி நிறை மாமலர் கடூய்க்
கோதைவரி வண்டிசை கொள் கீத முரல்
கின்றவளர் கோகரணமே”
- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

நம்பொத்த என்ற சிங்கள நூல் வட இலங்கையைத் தமிழ்ப் பட்டணம் எனவும் இப்பட்டணத்துளடங்கிய இடங்களுள் திருகோணமலை ஒன்றாகும் எனவுங் குறிப்பிடுகிறது. போர்த்துக்கீசப் பாதிரியார் குவைறோஸ் என்பவர் கோணேசுவரர் கோயிலைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-

“இக்கோயில் கீழைத் தேசத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத மக்களின் உரோம புரியாகும்: இத்திருத்தலத்துக்கு யாத்திரிகர் கூட்டங்கள் இடையறாது வந்து சென்றன. இந்தியாவிலுள்ள புண்ணிய தலங்கள் பலவற்றைக் காட்டிலும் - இராமேஸ்புரம், காஞ்சிபுரம், திருப்பதி, திருமலை, ஜகத்நாத், விஜந்தி முதலியவற்றைக் காட்டிலும் - திருகோணாமலை சிறந்த புண்ணிய தலமாகக் கருதப்பட்டது.”

கி.மு. 1000இற்கு முற்பட்டிருந்தே தென்னிந்தியாவிலிருந்து தமிழ் மக்கள் வந்து வட இலங்கையிற் குடியேறி அங்கு வாழ்ந்த மக்களுடன் கலந்தனர். விசயன் வருகைக்கு முன்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இராமேஸ்வரத்தை ஆண்ட சூளோதரன் நாக தீவிலாண்ட மாகாதரனின் மருகன் என மகாவம்சங் கூறுகிறது. தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்குமுள்ள நெருங்கிய தொடர்பை இது காட்டுகிறது.

கி.மு. ஆறாம் நூற்றாண்டு தொடக்கம் தென்னிந்தியத் தமிழருக்கும் இலங்கைக்கும் இடையில் அரசியல் சமுதாய மணத்தொடர்புகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலும் முதலாம் நூற்றாண்டின் முதற் பகுதியிரும் தமிழர் மரபினர் இலங்கையிலாண்டனர். கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கும் இடையில் பாண்டிய நாட்டவரும் இலங்கை நாட்டவரும் ஒரே தமிழ்க் குடிமக்களாக வேற்றுமையின்றி நேசத் தொடர்பு கொண்டிருந்தனர். இத் தொடர்புகள் வட இலங்கைத் தொடர்புகள் என்பதில் ஐயமில்லை.

கி.மு. 543இல் விசயன் இலங்கையில் இறங்கியதாக மகாவம்சங் கூறுகிறது. இப்புராணக் கதை எவ்வளவுக்கு உண்மையானது என்பதை அறியோம். விசயன் கலிங்க தேச இளவரசன். அவ்வாறாயின், திராவிட இனத் தெலுங்கன். சைவமதத்தவன். விசயன் மரபினருக்கும் வட இலங்கை அரசருக்கும் இடையிலிருந்த நெருங்கிய தொடர்புகளை வைபவ மாலை கூறுகிறது. இயக்கர் குலத்து மாது குவேனியைத் துரத்திய பின்பு, பாண்டிய பேரரசன் மகளை விசயன் மணந்தானென மகாவம்சங் கூறுகிறது. இது பெரும் புளுகுக் கதையாகும். விசயன் யாழ்ப்பாணத்திலாண்ட நாக அரச குலத்தில் மணஞ் செய்தான். மேலும் தேவநம்பியத்தீசனின் அன்னையும் மூத்த சிவனின் மனைவியுமாகிய பெண் யாழ்ப்பாண நாகர் குலத்தவள்.

மகாவம்சத்தில் தமிழர் வெற்றிகளெல்லாம் இந்தியாவிலிருந்து வந்த படைவீரர் வெற்றிகளாகக் குறிப்பிடப்படுகின்றன. பிற்காலத்திலே சோழ, பாண்டிய பல்லவப் பேரரசர் இலங்கையிற் படையெடுத்து வென்றது உண்மையே. ஆனால், அநுராசபுர அரசின் ஆரம்ப காலத்தில் அதை வென்று ஆண்ட தமிழர் வட இலங்கையிலாண்ட தமிழராவர். கப்பன் எனும் காவற்காரன், சேனன் எனும் குதிரை வாணிகன், ஏலேல சிங்கன் அநுராதபுரத்திலாண்ட மறவர் தலைவர் ஐவர், பாண்டு வமிசத்தவர் - இவர்கள் யாவரும் வட இலங்கைத் தமிழராவர். இவ்வுண்மையை ர்.று. கோடிறிங்கன் எனும் வரலாற்றாசிரியர் வற்புறுத்துகிறார்.

“போதிய பலமுடைய நிலையான தமிழ்க்குடிகள் அருகில் இருந்திருக்காவிட்டால், ஏலேலசிங்கன் அன்னிய மக்களான அனுராதபுரத்துச் சிங்களவரை 43 ஆண்டுகள் ஆண்டிருக்க முடியாது. தென்னிந்தியாவிலிருந்து இடையறாத குடிவரவினால். அக்காலத்தில் வட இலங்கை தமிழ் நாடாக இருந்தது. மன்னார் மாவட்டத்திற் குறிப்பிடத்தக்கதாகும்.” மன்னாரைப் போர்த்துக்கீசர் அழித்தனர்.

கரிகாலன் காலத்திலிருந்து தென்னிந்தியாவில் ஆட்சி செய்த பாண்டிய, சோழப், பல்லவ, அரசர் இலங்கைமேற் படையெடுத்து வெற்றி கண்டனர். இந்திய வரலாற்றிலும் சாசனங்களிலும் பல இலங்கைப் படையெடுப்புக்களும் வெற்றிகளும் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுட் பல மகாவம்சத்திற் குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால், இக்குறிப்பிடப்படாத படையெடுப்புக்கள் வட இலங்கை அரசின் மேலாக இருந்திருக்கலாம். சிங்கள அரசர் பாதிக்கப்படாவிடின், மகாவம்சங் குறிப்பிடக் காரணமில்லை. இலங்கையிலாண்ட அரச வம்சங்கள் யாவும் தென்னிந்திய அரச வம்சங்கள் என்பதை உணர வேண்டும். இவை கலிங்கர், பாண்டியர், கலிங்கரும் நாகருஞ் சேர்ந்த மிசிரர் முதலிய குலங்களாகும். பிற்காலத்திற் கண்டி அரசர் மலையாள வம்சத்தவர். கோட்டையிலாண்ட அளகக்கோனார் குடும்பமும் மலையாளத்தவராக இருக்கலாம். நடுக்கால ஐரோப்பிய அரச குடும்பங்களிடையிற் போல இவர்களிடையிலும் நெருங்கிய உறவும் மணத் தொடர்புகளும் இருந்தன.

வட இலங்கையில் தனிப்பட்ட அரசு இருக்கவில்லையென இக்காலத்திற் சில சிங்களவர் முழுப் பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கின்றனர். விசயன் வருகைக்கு முன்பு வட இலங்கையிலிருந்த நாகவரசுகளைக் குறிப்பிட்டோம். விசயன் வருகைக்குப் பின்னும் இவ் வரசுகள் தொடர்ச்சியாக இருந்தன. அக்காலத்தில் அநுராதபுரச் சிற்றரசர்களுக்கும் வட இலங்கை சிற்றரசர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவும் தொடர்புமிருந்தன. அக்காலத்திலே தான் சில தமிழ் அரசரும் சேனை வீரரும் அநுராதபுரத்தைப் கைப்பற்றிச் சில காலங்களில் ஆட்சி செய்தனர். சிங்கள அரசருக்குத் தமிழ்ப் பிரதானிகள் இருந்தனர்.

வட இலங்கையிற் சிங்கை ஆரியர் ஆட்சி கி.பி. 785இல் உக்கிரசிங்கனுடன் தொடங்கி கி.பி. 1620இற் சங்கிலியுடன் முடிவடைகிறது. எட்டு நூற்றாண்டுகள் காலம் இவர்கள் தொடர்ச்சியாக ஒருவர் பின் ஒருவராகப் பரராசசேகரன், செகராசசேகரன் எனச் சிங்காசனப் பெயர்கள் பூண்டு அரசு செலுத்தினர். முதலாம் பராக் கிரமபாகு சிங்கை ஆரியர் வம்சத்தவன். கி.பி. 1215இற் கலிங்க மாகன் சிங்கை ஆரியர் அரசைப் பேரரசாக்கினான். பொலனறுவாவை வென்று இலங்கை முழுவதுக்கும் பேரரசனானான். சக்கரவர்த்தி எனப் பெயர் பூண்டான்.

“தென்னன் நிகரான செகராசன் தென்னிலங்கை மன்னவனாஞ் சிங்கை யாரிய மால்” போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்த போது சிங்கை அரசர் கடற்படையோடு தரைப்படையுங் கொண்டு வலிமை மிக்க அரசர்களாக விளங்கினர். இவ்வரசின் பரப்பையும் தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளையும் ஜே. ஆர். சின்னத்தம்பி என்பவர் “தமிழ் ஈழம் - நாட்டு எல்லைகள்” எனும் நூலில் தெளிவாக விளக்குகிறார். மேற்கே கரையோரமாக மாஓயாவரையும் - சிலாபம் முனீஸ்வரம், குசலை, உடைப்பு, ஆனைமடு, புத்தளம், கற்பிட்டி, வண்ணாத்தி வில்லு, குதிரைமலை, வில்பற்று, நானாட்டான் முதலிய பகுதிகள் - ஆரியச் சக்கரவர்த்திகள் ஆட்சியில் இருந்தன. கிழக்குக் கரையோரமாகக் குறுப்பன் ஆறு வரையுமிருந்த நிலப்பரப்பும் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இவ்விராச்சியம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவுப்பற்று, பச்சிலைப்பள்ளி, கரைச்சிக்குடியிருப்பு என்பவை அரசரின் நேராட்சியில் இருந்தன. ஏனைய பகுதிகள் வன்னிமைகளினால் ஆளப்பட்டன. வன்னிமைகள் ஆரியச் சக்கரவர்த்திகளின் மேலாணை ஏற்றனர். திறை கட்டினர். இவ்வாறு வன்னிமைகளினால் ஆளப்பட்ட பகுதிகள் முள்ளியவளை வன்னிமை, கொட்டியாற்றுப்பற்று வன்னிமை, பழுகாம வன்னிமை, பாணமை வன்னிமை, பனங்காம வன்னிமை, கரைத்துறை வன்னிமை, கரைவாகுப்பற்று வன்னிமை, கற்பிட்டி வன்னிமை என்பவைகளாகும்.

குமணை, உகந்தை, பொத்துவில், அம்பாறை முதலிய பகுதிகள் பானமை வன்னிமையின் ஆட்சியில் இருந்தன. மகாவலிகங்கையை மேற்கெல்லையாகவும் வெருகல் ஆற்றை வடக்கெல்லையாகவும் கொண்டதும் மட்டக்களப்பு, உகணை, ஓமுனை முதலிய ஊர்களை உள்ளடக்கியதும் பழுகாம வன்னிமையாகும். வெருகல் ஆற்றுக்கு வடக்கேயும் பறங்கி ஆற்றுக்குத் தெற்கேயும் உள்ளதும், செருவிலை, மூதூர், தம்பலகாமம், திருகோணமலை, கந்தளாய், பதவியாக்குளம், பன்குளம், திறப்பனை, குச்சவெளி, நிலாவெளி முதலிய ஊர்களை உள்ளடக்கியதும் கொட்டியாற்றுப்பற்று வன்னிமையாகும். முல்லைத்தீவு வவுனியாப்பகுதிகள் முள்ளியவளை வன்னிமையில் இருந்தன. மன்னார்ப் பகுதிகள் பனங்காம வன்னிமையில் இருந்தன. மாஓயா தொடக்கம் முசலிவரையும் கரைத்துறைப்பற்று கற்பிட்டி வன்னிமைகள் இருந்தன.

போர்த்துக்கீசர் சங்கிலியை வென்றபோது ஆரியச் சக்கரவர்த்திகளின் இராச்சியத்திலிருந்த எல்லாப் பகுதிகளையும் வெல்லமுடியவில்லை. குடாநாட்டிற்குத் தென்கிழக்கிலிருந்த வன்னிப் பகுதிகளும் முள்ளியவளை வன்னிமையும் போர்த்துக்கீசரின் மேலாண்மையை ஏற்கமறுத்தன. எனினும் கண்டி அரசரின் பாதுகாப்பை நாடவில்லை. தன்னாட்சி செய்தன. கொட்டியாற்றுப்பற்று, பழுகாமம், பாணமை வன்னிமைகள் கண்டி அரசரின் பாதுகாப்பை நாடி அவர்களுடைய மேலாண்மையை ஏற்றன. எனினம் இப் பகுதிகள் தன்னாட்சித் தமிழ்ப் பிரிவுகளாக இருந்தன. ஆனால் இக் காலந்தொட்டுச் சிங்களவர் இப்பகுதிகளில் குடியேறத் தொடங்கினர்.

சிங்கள அரசர் ஆரியச் சக்கரவர்த்திகளுக்குப் பயந்தோ திறைகொடுக்க மறுத்தோ தமது இராசதானியை அநுராதபுரத்திலிருந்து பொலநறுவாவிற்கும் பின்பு குருநாகலைக்கும் தம்பதெனியாவிற்கும் கம்பளைக்கும் மாற்றினர். கி.பி. 1344 இல் இலங்கைக்கு வந்த இஸ்லாமியப் பிரயாணியாகிய இபுன் பற்றூற்றா என்பவர் அக்காலத்திலாண்ட ஆரியச் சக்கரவர்த்தியைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:-

“இவ்வரசனின் பெயர் ஆரியச் சக்கரவர்த்தியாகும். கடற்படை வலிகொண்டவன். மலையாளத்திலே நான் தங்கியிருந்தபோது, இவன் நாவாய்கள் சிறியவையும் பெரியவையுமாக நூறு கப்பல்கள் நங்கூர மிட்டுக் கெம்பீரமாக அங்கு நின்றன. இவன் அதிதிகளை உபசரிக்கும் அன்புசார்ந்த நெஞ்சினன். பாரசீகமொழியில் வல்லுநன். அம்மொழியில் என்னுடன் உரையாடினான். எனக்கு நல்ல பரிசில்களை வாரி வாரியிறைத்தான். தனது இராச்சியத்திற் கிடைக்கும் திறமான முத்துக்களையும் பரிசாக ஈந்தான். நான் விரும்பியவண்ணம் ஆதாம் மலைக்கு யாத்திரை செய்ய உதவியுஞ் செய்தான்.”

சிலாபத்தில் முத்துக்குளிக்கும் உரிமை சிங்கை ஆரிய அரசருக்கே இருந்தது. கி.பி. 1278இல் யாப்பகுவாவில் ஆரியச் சக்கரவர்த்தியின் வெற்றிக்குப் பின்பு வடமத்திய மாகாணத்தின் பெரும்பகுதியும் யாழ்ப்பாண அரசின் கீழிருந்தது. உக்கிரசிங்கன் தொடக்கம் சங்கிலி வரையுமான சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளின் பெயர்களும் காலங்களும் ஐஐஐவது அட்டவணையிற் கொடுக்கப்படுகின்றன.

போர்த்துக்கீசரும் ஆரியச் சக்கரவர்த்திகளும் கி.பி. 1519 தொடக்கம் கி.பி. 1620வரை ஒரு நூற்றாண்டு காலம் போராடினர். ஈற்றில் கி.பி. 1620இற் போர்த்துக்கீசரின் நேராட்சி தொடங்கிற்று. சங்கிலி சிரச்சேதம்செய்யப்பட்டான். சிங்கை ஆரியர் அரச பரம்பரை அழிந்தது. ஈழத் தமிழ் மக்கள் அடிமைகளாகினர். பல விடுதலைப் போராட்டங்கள் தோல்வியடைந்தன. போர்த்துக்கீசர் பத்தொன்பது வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்தபோதிலும், இவர்களுடைய கொலை, களவு, கொடுமைகள் 140 வருடங்கள் நடைபெற்றன.

கி.பி. 1638 தொடக்கம் கி.பி. 1796 வரையுமான 157 வருடங்கள் ஒல்லாந்தர் இந்நாட்டை ஆண்டனர். கண்டி இராச்சியத்தையும் கயிலாய வன்னியன் ஆண்ட வன்னிப் பகுதிகளையும் இவர்களினாற் கைப்பற்ற முடியவில்லை. அக்காலத்து மேனாட்டவர் பலர் ஈழத்திலே தமிழர் வாழ்ந்த பகுதிகளைத் தெளிவாகக் காட்டுகின்றனர்.

கண்டி அரசனின் படைகளினால் திருகோணமலையிற் சிறைபிடிக்கப்பட்ட றொபேட் நொக்ஸ் என்னும் ஆங்கிலேயர் கி.பி. 1679இல் தப்பி அநுராதபுரத்தின் வழியாகச் சென்றர். அக்காலத்தில் அநுராதபுரத்திற் சிங்களமொழி தெரிந்தவர் எவருமில்லையெனவும் தமிழ்மொழி தெரிந்தவர்களே அங்கு வாழ்ந்தனர் எனவும் கூறுகிறார். கைலாயவன்னியனின் தனியாட்சியையுங் குறிப்பிடுகிறார். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கைக்கு வந்த ரேலண்ட் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“இந்தத் தீவின் பெரும்பகுதி தமிழர்களின் வாழ்விடமாக உள்ளது. இந்தப் பகுதி (வன்னி) கைலாயவன்னியனால் ஆட்சி செய்யப்படுவதுடன் அவனின் நாடு எனவும் அழைக்கப்படுகிறது. இவர்கள் சிங்களவர் ஆட்சிக்குட்பட்ட குடிமக்கள் அல்லர். எங்கள் (ஒல்லாந்தர்) ஆட்சிக்குட்பட்டவருமல்லவர். கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களுட் பெரும்பான்மையினோர் தமிழ்மொழி பேசுகின்றனர். நீர்கொழும்பில் இருந்து தெற்கே தேவேந்திரமுனைவரை உள்ளகரையோரப் பகுதிகளிற் சிங்கள மொழி பேசப்படுகிறது.”

கி.பி. 1700 இல் இலங்கைக்கு வந்த சுவைட்சர் என்பவர் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்.

“இத் தீவின்மற்றக் குடிகளான தமிழர் காலி, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், அரிப்பு, கற்பிட்டியிலிருந்து நீர்கொழும்பு வரையும் வாழ்கிறார்கள். வன்னி நாட்டிலுள்ள தமிழரைத் தவிர ஏனைய தமிழர் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் உள்ளார்கள். வன்னி நாட்டிலுள்ள தமிழர் தமக்கென ஓர் அரசைக் கொண்டுள்ளார்கள்.

ஒல்லாந்தர் தமிழ்ப் பகுதிகளையும் சிங்களப் பகுதிகளையும் தனித்தனியாகப் பிரித்து ஆட்சி செய்தனர். ஒல்லாந்தர் தாம் ஆண்ட பகுதிகளை ஆறு ஆட்சிப் பிரிவுகளாகவும் மூன்று நீதிப் பிரிவுகளாகவும் வகுத்தனர். கொழும்பு ஆட்சி மாவட்டம், புத்தளம் - கற்பிட்டி ஆட்சி மாவட்டம் யாழ்ப்பாண ஆட்சி மாவட்டம், திருகோணமலை ஆட்சி மாவட்டம், மட்டக்களப்பு ஆட்சி மாவட்டம், காலி ஆட்சி மாவட்டம். நீதிப் பிரிவுகள்: யாழ்ப்பாணம், கொழும்பு, காலி.

ஆங்கிலேயர் ஆட்சி கி.பி. 1795 தொடக்கம் கி.பி. 1948 வரையிலுமான 153 வருடங்களாகும். கி.பி. 1815 இற் கண்டி அரசையும் ஆங்கிலேயர் கைப்பற்றினர். தமிழ் மொழியே கண்டி அரசின் ஆட்சிமொழி. இலங்கை முழுவதையும் ஒருகுடைக்குக் கிழ்கொண்டு வந்தனர். எனினும், கி.பி. 1829 கோல்புறூக் திட்டம் வரையும் தமிழ்ப் பகுதிகளையும் சிங்களைப்பகுதிகளையும் தனித்தனியாக ஆட்சி செய்தனர். ஆங்கிலேய ஆட்சியாளர் சிலரின் குறிப்புகளையும் பார்க்கலாம்.

கி.பி. 1799இற் கிளெர்க்கோர்ன் குறிப்புகள் பின்வருவன:-

“இலங்கைத் தீவானது மிகப்பழங்காலந் தொட்டே இரு வௌ;வேறு நாட்டினங்களால் வௌ;வேறு பகுதிகளாக உடமை கொண்டாடப்பட்டது. இத் தீவின் நடுப்பகுதியும் தெற்குப் பகுதியும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் வரையுமுள்ள மேற்குப் பகுதியும் சிங்கள நாட்டினத்தால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும். இத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகள் தமிழர்களினால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும்.” இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன் சிங்களவரும் தமிழரும் நாட்டினங்களாக கருதப்பட்டனர். இன்று ஏகாதிபத்தியச் சொற்களான பெரும்பான்மை சிறுபான்மை என்பவை பேசப்படுகின்றன. என்னே எமது அரசியல் அறிவு வளர்ச்சி. கி.பி. 1805 இல் அலெக்சாண்டர் யோன்சனின் குறிப்புப் பின்வருவதாகும்.

“நான் சேகரித்த உள்நாட்டு வழக்கத்திலுள்ள சில சட்டங்கள் புத்தளம், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நான்கு மாகாணங்களிலும் வழமையில் உள.” மேலும் அக் குறிப்பில்:

“வட மேற்கிலுள்ள புத்தளத்தில் இருந்து தென்கிழக்கே உள்ள நிலப்பகுதி தமிழர்களின் குடியிருப்பாகும். மேற்கே சிலாபம் ஆற்றிலிருந்து தென் கிழக்கேயுள்ள குமணை ஆறு வரையுள்ள நிலப்பகுதி சிங்களவரின் குடியிருப்பாகும்.” ஆங்கிலேயரும் சுரண்டலுக்காக இங்குவந்த போதினும், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் நாடு முன்னேறியது. எங்கணும் அமைதி நிலவிற்று. காடரையும் கொள்ளைக் காரரையும் அடக்கினர். சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டனர். மக்கள் பயமின்றி வாழ்ந்தனர். பொலிஸ் இராணுவ அட்டூழியங்கள் இல்லை. தமிழராகிய நாம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறினோம்.”

வட இலங்கையே செந்தமிழ் நாட்டிற் செந்தமிழ் நாடாகும். தமிழுக்கு இருப்பிடம் பண்டைத் தமிழ்நாடு. அன்னியர் ஆட்சிக் காலங்களிலும் தமிழர் பண்பாடும் மரபு முறைகளும் அழிந்து விடவில்லை.

“நல்லைநக ராறுமுக நாவலர் பிறந்திலரேற்
சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே – யெல்லவரு
மேத்து புராணாகமங்களெங்கே பிரசங்கமெங்கே
யாத்த னறிவெங்கே யறை”

நாவலர் பரம்பரை மிக நீண்டதாகும். அவர் அக்காலத்துக்கு ஒரு சந்ததி முன் இருபாலைச் சேனாதிராயரும் நல்லைச் சரவண முத்துப் புலவரும் இவர்களுக்கு ஒரு சந்ததி முன் நெல்லைநாத முதலியாரும் மயில்வாகனப் புலவரும் இவர்களின் குரு கூழங்கைத் தம்பிரான். இவ்வாறு அரசகேசரி வரையும் செல்லலாம். சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் இரு தமிழ்ச் சங்கங்களை நிறுவினர். இரகு வம்சம் முதற் பல புகழ்பெற்ற தமிழ் நூல்கள் ஈழத்தில் தோன்றின. செந்தமிழுக்கு இன்பத் தமிழுக்கு இனிய தமிழுக்கு, தூய தமிழுக்கு வட இலங்கை என்பர்.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard