Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அட்டவணை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
அட்டவணை
Permalink  
 


அட்டவணை – 1

கால அட்டவணை
கி.மு: 3,000 இற்கு முன் – சேரன் இமயவரம்பன் என்ற வானவரம்பன், சூரியச் சோழன், 
மதியன் என்ற சுந்திரபாண்டியன்.

கி.மு. 30,000 – கி.மு. 29,920 – நெடியோன், மாகிர்த்தி எனப்பட்ட முதலாம் நிலந்தரு 
திருவிற்பாண்டியன்.

கி.மு. 30,000 – கி.மு. 16,500 – பஃறுளியாற்றுத் தமிழ்ச் சங்கம்

கி.மு. 16,000 – பொதியமலை அகத்தியரும் பொதியமலைத் தமிழ்ச் சங்கமும்.

கி.மு. 16,000 – கி.மு. 14,550 – மகேந்திர மலைத் தமிழ்ச் சங்கம்.

கி.மு. 14,550 – கி.மு. 14,470 – மணிமலைத் தமிழ்ச் சங்கம்.

கி.மு. 14,550 – முத்தூர் அகத்தியர்.

கி.மு. 14,490 - இந்தியாவிற்குள் மங்கோலியர் வருகை.

கி.மு. 14,100 – கி.மு. 14,030 – முசுகுந்தச் சோழன்.

கி.மு. 14,058 – தமிழ் நாட்டில் முதற் கடற்கோள், வாதாபி அகத்தியர்.

கி.மு. 14,038 – கி.மு. 14,004 – குன்ற மெறிந்த குமரவேள் தமிழ்ச் சங்கம்.

கி.மு. 14,004 – கி.மு. 9594 – தலைச் சங்கம்.

கி.மு. 14,004 – காய்ச்சின வழுதி என்ற இரண்டாம் நிலந்தரு திருவிற் பாண்டியன்.

கி.மு. 9,564 – தமிழ் நாட்டில் இரண்டாங் கடற்கோள்.

கி.மு 9000 – இந்தியாவிற்குட் சிதியர் காக்கேசியக் குழுக்களின் வருகை.
கி.மு. 7500 – கி.மு. 6700 – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்துத் தமிழ்ச் சங்கம்.

கி.மு. 6805 – கி.மு. 3105 – இடைச்சங்கம்.

கி.மு. 6805 – கி.மு. 6730 – வெண்டோர்ச் செழியன் என்ற நேர்மாறன் பாண்டியன்.

கி.மு. 6000 – கி.மு. 5,925 – மூன்றாம் நிலந்தருதிருவிற் பாண்டியன்.

கி.மு. 3145 – கி.மு. 3105 – பெரு சோற்று உதியன் சேரலாதன்.

கி.மு. 3105 – கடங்கோள்

கி.மு. 3102 – கலியுகந் தொடக்கம்

கி.மு. 2450 – கடற் கோள் (நுழெiடியைள)

கி.மு. 2387 – கடற்கோள் (இலங்கை வரலாறு – வுநnநெவெ)

கி.மு. 2341 – கடற் கோள் (ரசழாரச)

கி.மு. 2344 – கடற் கோள் (பழைய விவிலிய வேதம்)

கி.மு. 2300 – கடற் கோள் (ஆரியசப்த பிராமணம்)

கி.மு. 2150 – கடற் கோள் (கீபுறு வரலாறு)

கி.மு. 2000 – கடற்கோள் (பாபிலோனிய வரலாறு)

கி.மு. 1730 – கி.மு. 1695 - மூன்றாம் முடத்திருமாறன் என்ற பாண்டியன்.

கி.மு. 1715 – கடற்கோள்

கி.மு. 1715 – கி.பி. 235 கடைச் சங்கம்

கி.மு. 120 – கி.மு. 90 – முதலாங் கரிகாலன்

கி.மு. 50 – கி.பி. 37 - இரண்டாங் கரிகாலன்

கி.மு. 31 – வள்ளுவர் ஆண்டு தொடக்கம்

கி.பி. 85 – கி.பி. 160 - இளங்கோவடிகள்

கி.பி. 235 – பாண்டி நாட்டிற் களப்பிரர் ஆட்சித் தொடக்கம் கடைச் சங்க முடிவு.ஸ



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கடைச் சங்க காலப் புலவர்களிற் சிலரும் நூல்களும்
1. காழாந்தலை

2. உருத்திரக் கண்ணனார் இயற்றிய நூல்கள்:- பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை.

3. கபிலர் - இயற்றிய நூல்கள்:- பார்ப்பனர்நூல், பெருங்குறிஞ்சி, இன்னா நாற்பது, ஐங்குறு நூறில் நூறு பாடல்கள், பதிற்றுப் பத்திற் சேரன் ஆதனைப் பற்றிப் பாடிய பத்துப்பாடல்கள்.

4. நக்கீரர் இயற்றிய நூல்கள்:- திருமுருகாற்றுப்படை, நெருநல் வாடை, இவருடைய தனிப்பாடல்கள் பல புறநானூறு, அகநானூறு, குநற்தொகை, நற்றிணை முதலிய தொகை நூல்களிற் காணப்படுகின்றன.

5. கல்லாடனார் – தொல்காப்பியத்திற்கு இவர் ஓருரை இயற்றியதாகக் கூறப்படுகிறது. இவ்வுரை எமக்குக் கிடைக்கவில்லை.

6. மாமூலனார் - இவருடைய பாடல்கள் அக நானூறிலும் குறுந்தொகையிலும் நற்றிணையிலுங் காணப்படுகின்றன.

7. மாங்குடி மருதனார் - இயற்றிய நூல் மதுரைக் காஞ்சி இவருடை சில பாடல்கள் புறநானூறிற் காணப்படுகின்றன.

8. திருவள்ளுவர் - இயற்றிய நூல் திருக்குறள்.

9. கோவூர் கிழார் - இவருடைய பாடல்கள் புற நானூறிற் காணப்படுகின்றன.

10. இறையனார் - இயற்றிய நூல் அகப்பொருள்

11. பரணர் – தனிப்பாடல்கள்

12. முடத்தாமக் கண்ணனார் - இயற்றிய நூல் பெருநராற்றுப் படை

13. பெருங் கௌசிகனார் - இயற்றிய நூல் மலைபடுஉகடாம்.

14. ஒளவையார் - இயற்றிய தனிப்பாடல்கள் புற நானூறிலும் அக நானூறிலுங் காணப்படுகின்றன.

15. இடைக் காடனார் - இயற்றிய நூல் ஊசிமுறி.

16. இளங்கோவடிகள் - இயற்றிய நூல் சிலப்பதிகாரம்.

17. சீத்தலைச் சாத்தனார் - இயற்றிய நூல் மணிமேகலை

18. அரசியல் கிழார் - இவருடைய பாடல்கள் தகடூர் யாத்திரையிற் காணப்படுகின்றன.

19. பொன்முடியார் - இவருடைய பாடல்கள் பதிற்றுப் பத்திற் காணப்படுகின்றன.

வேறு பல புலவரும் கடைச்சங்கத்தில் இருந்தனர். இவர்களுடைய பெயர்ப் பட்டியலைப் பண்டிதர் க.பொ. இரத்தினம் எழுதிய “நூற்றாண்டுகளில் தமிழ்” எனும் நூலிற் காணலாம்.

கடைச்சங்க நூல்கள்: எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை.

எட்டுத் தொகை நூல்களாவன:- நற்றிணை, குநற்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு. இவை புறப் பொருளையும் அகப்பொருளையும் பற்றிப் பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகை நூல்களாகும்.

பத்துப்பாட்டு நூல்களாவன:-
(1) திருமுருகாற்றுப் படை – நக்கீரர்

(2) பெருநராற்றுப் படை – முடத்தாமக்கண்ணியார்.

(3) சிறு பாணாற்றுப்படை – இடைகழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.

(4) பெரும்பாணாற்றுப் படை – கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

(5) முல்லைப்பாட்டு – பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்

(6) மதுரைக் காஞ்சி – மாங்குடி மருதனார்

(7) நெடு நெல் வாடை – நக்கீரர்

(8) குறிஞ்சிப்பாட்டு – கபிலர்

(9) பட்டினப் பாலை – கடியலூர், உருத்திரக் கண்ணனார்

(10) மலைபடுஉகடாம் – இரணயமுட்டற்றுப் பெகுங் குன்றூர்ப் பெருங் கௌசிகனார்.

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களாவன:-
(1) திருக்குறள் – திருவள்ளுவர்

(2) நாலடியார் – சமண முனிவர்கள்

(3) நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்

(4) இனியவை நாற்பது – பூதஞ் சேந்தனார்

(5) இன்னா நாற்பது – கபிலர்

(6) கார் நாற்பது – மதுரைக் கண்ணங் கூற்றனார்

(7) களவழி நாற்பது – பொய்கையார்

(8) ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்

(9) ஐந்திணை எழுபது - மூவாதியார்

(10) திணைமொழி ஐம்பது – சாத்தத்தையார் மகனார் கண்ணஞ் சேந்தனார்

(11) திணைமொழி நூற்றைம்பது – கணிமேதையார்

(12) திரிகடுகம் – நல்லாதனார்

(13) ஆசாரக் கோவை – பெருவாயின் முள்ளியார்

(14) பழமொழி மூன்றுறையரையார்

(15) சிறு பஞ்சமூலம் – காரியாசான்

(16) கைந்நிலை – புல்லங்காடனார்

(17) முதுமொழிக்காஞ்சி – மதுரைக் கூடலூர் கிழார்

(18) ஏலாதி – கணிமேதையார்.

இவற்றுட் சில கடைச்சங்க காலத்துக்குப் பிற்பட்டவையாகும்.

எமக்குக் கிடைத்த கடைச்சங்க நூல்களும் அடிகளும்:-

நூல் அடிகள்
திருக்குறள் 2660
மணிமேகலை 4857
சிலப்பதிகாரம் 4957
கலித்தொகை 4304
இன்னா நாற்பது 160
பெருங்குறிஞ்சி 261
குறிஞ்சி (ஐங்குறு நூற்றிற் கபிலர் பாடியது) 101
திருமுரு காற்றுப்படை 317
நெடுநல் வாடை 188
பெருநராற்றுப்படை 248
பெரும்பாணாற்றுப்படை 248
பட்டினப்பாலை 201
மதுரைக் காஞ்சி 701
மலைபடு உகடாம் 583
பதிற்றுப் பத்து 600
புறநானூறு அகநானூறு,
குநற்தொகை நற்றிணை
முதலிய தனிப்பாடல்கள் 4000

24,386

பழைய தமிழ் நூல்களிற் பல எமக்குக் கிடையாது. அழிந்தொழிந்து விட்டன. இவற்றுட் சிலவாவன:- மாபுராணம், இசை நுணுக்கம், பூத புராணம், கலி, குரு, வெண்டாளி, வியாழ மாலை அகவுள் அடிநூல், அணியியல் அவிநயம், ஆசிரிய மாலை, ஆனந்தவியல், இந்திர காளியம், இளந்திரையம், ஐந்திரம், ஓவிய நூல், கடகண்டு, கணக்கியல், கலியாண காதை, கவிமயக்கறை, கவிக்கேட்டுத்தண்டு, களரியாவிரை, கனவு நூல், காக்கைபாடினியம், காலகேசி, குணநூல், குண்டலகேசி, கூத்து, கோணூல், சங்கயாப்பு, சயந்தம், சச்சபுடவெண்பா, சாதவாகனம், சிந்தம், சிறு காக்கை பாடினியம், சிறு குரீஇ, உரை, சிற்ப நூல், சிற்றெட்டகம், சிற்றிசை, செயன்முறை, செயிற்றியம், நகடூர் யாத்திரை, தந்திரவாக்கியம், தான சமுத்திரம், தாளவகையோத்து. தும்பிப்பாட்டு, தேசிகமாலை, நாககுமார் காவியம், நீலகேசி, பஞ்சபாரதீயம், பரதம், பரி நூல், பலகாயம். பல காப்பியம், பன்னிருபடலம், பாட்டு மடை, பாவைப் பாட்டு, புணர்ப் பாவை, புதையனூல், புராணசாகரம், பூதபுராணம், பெரியபம்பம், பெருவல்லம், பேரிசை, போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகம், தமிழ் நூல், மந்திரநூல், மயேச்சுரர் யாப்பு, மாபுராணம், மார்க்கண்டேயர் காஞ்சி முதுகுருகு, முதுநாரை, முத்தொள்ளாயிரம், முறுவல், மூவடி முப்பது, மோதிரப்பாட்டு, யசோதர காவியம், வச்சத் தொள்ளாயிரம், வஞ்சிப் பாட்டு, வரி வளையாபதி, வாய்ப்பியம், விளக்கத்தார் கூத்து, அகத்தியம், அகத்தியர் பாட்டியல் அசதிக்கோவை, உலகாயதம், செங்கோன் தரை செலவு.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் பட்டியல்

(ஆதார நூல்கள்:-
யாழ்ப்பாண சரித்திரம் - இராசநாயக முதலியார்
யாழ்ப்பாண வைபவமாலை – மயில்வாகனப் புலவர்)

(1) யாழ்ப்பாணத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி கி.பி. 785 இல் உக்கிரசிங்கனுடன் தொடங்குகிறது. இவனுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நாகச் சிற்றரசர் ஆண்டனர். இவன் இராசதானியைக் கதிரை மலையிலிருந்து சிங்கை நகருக்கு மாற்றினானர். இவனுடைய காலத்திலேதான் மாவிட்டபுரக் கந்தசுவாமி கோவில் கட்டப்பட்டது. விசயன் கதைபோல இவனைப் பற்றியும் புராணக் கதையுண்டு.

(2) உக்கிரசிங்கன் இறந்தபின் அவனுடைய மகனாகிய ஜெயதுங்க பரராசசேகரன் அரசனானான். இவனுடைய ஆட்சிக்காலத்திலே தான் யாழ்ப்பாடி எனும் பாணன் பரிசில் பெற்றான். இவன் காலத்தில் வரகுணன் எனும் பாண்டியன் இலங்கைக்குப் படையெடுத்து வந்து இவனையும் பொலனறுவாவில் ஆண்ட சிங்கள அரசனையும் வென்றான். ஜெயதுங்க பரராசசேகரனைக் கொன்றான்.

(3) கி.பி 9ம் நூற்றாண்டு மத்தி தொடக்கம் 12ம் நூற்றாண்டு வரையும் ஜெயதுங்கனின் சந்ததிகள் பாண்டிய சோழருக்குச் சிற்றரசர்களாக யாழ்ப்பாணத்திலாண்டனர். இக்காலத்தில் அடிக்கடி ஏற்பட்ட சோழ, பாண்டிய பல்லவர் படையெடுப்புக்களையும் வெற்றிகளையும் தென்னிந்தியச் சாசனங்களும் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. இக்காலத்திற் சிங்கை அரசரும் சிங்கள அரசரும் மணத்தொடர்பும் நெருங்கிய உறவும் உடையவராக இருந்தனர். கி.பி. 941 – 49 இல் சோழன் பராந்தகன் சிங்கை அரசனை வென்றான். சிங்களவரசனைப் புறங்கண்டான். கி.பி. 995இல் முதலாம் இராசேந்திரன் இலங்கை மேற் படையெடுத்து சிங்கள அரசன் மகிந்தனைப் பொலனறுவாவிலிருந்து துரத்தினான். கி.பி. 1014இல் இராசேந்திர தேவன் மகிந்தனைச் சிறைசெய்து இலங்கை முழுவதையுஞ் சோழ மண்டலத்திற் சேர்த்தான். வட இலங்கை கி.பி. 944 தொடக்கம் கி.பி. 1070 வரையும் 126 வருடங்கள் சோழப் பிரதானியாக விருந்தது. சிங்கை அரசர் சோழருக்குக் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். இக்காலத்தில் சிங்கை அரசர் சிலர் கலகம் விளைவித்ததினால் சோழரினாற் கொலை செய்யப்பட்டனர். மானாபாணன், வீரசலாமேகன், கிறீவல்லப மதனராசன் என்போர். இரண்டாங் குமாரகுலோத்துங்கன் காலத்திலே (கி.பி. 1118 – 1146) புகழேந்திப் புலவர் கதிர்காம யாத்திரையின் பொருட்டு இலங்கை வந்தபோது சிங்கை அரசனைப் பாடிப் பரிசில் பெற்றார். மேலும் கி.பி. 1154 இற்குச் சற்று முன்பு இலங்கையிற் பஞ்சம் ஏற்பட்டபோது சடையப்ப வள்ளல் வட இலங்கை அரசனுக்கு நெல்லனுப்பியதாக இலக்கிய வரலாறுண்டு.

(4) முதலாம் பராக்கிரமவாகு: குலோத்துங்கன் காலத்துக்குப் பின்பு சோழப் பேரரசு பலங்குன்றிற்று. சிங்கை அரசரும் சிங்கள அரசரும் தமது நாடுகளைத் திரும்பவும் பெற்றனர். இராச இராஜனாற் கி.பி. 1038 இற் கொல்லப்பட்ட மானாபாணன் எனும் சிங்கை அரசனின் மகள் திலக சுந்தரியை சிங்கள அரசனாகிய முதலாம் விஜயபாகுவும், விஜயபாகுவின் சகோதரி மிற்றாயை மானாபாணனின் மகனும் மணஞ் செய்தனர். இம் மானாபாணனின் பிள்ளைகள் மூவராவர். மானாபாணன், கீர்த்திசிறீமோகன், சிறீவல்லபன். மானாபாணன் இரத்தினவல்லியை மணஞ்செய்தான். இவர்களுடைய புத்திரனே முதலாம் பராக்கிரமவாகு. பராக்கிரமவாகு இளமையில் யாழ்ப்பாணத்தில் வளர்ந்து ஆரியச் சக்கரவர்த்திகளின் மரபு முறைப்படி உபநயனம் பெற்றவன். வன்னியை வென்று பனங்காமத்திற் சிற்றரசனாக விருந்தான். பின்பு பொலனறுவாவிலாண்ட தனது மைத்துனன் இரண்டாம் கயவாகுவை வென்று இலங்கை முழுவதையும் ஆண்டான். பராக்கிரமவாகுவின் பின்பு, வட இலங்கையும் தென்னிலங்கையும் வௌ;வேறு இராச்சியங்களாகின.

(5) கலிங்கமாகன் செகராசசேகரன்: (கி.பி. 1215 – 1240) இவன் பொலனறுவாவை வென்று அங்கிருந்து கி.பி. 1236 வரையும் ஆட்சிசெய்தான். சக்கரவர்த்திப் பட்டமும் பெற்றான். இவனுக்குப்பின் வட இலங்கை அரசர் ஆரியச் சக்கரவர்த்திகள் எனப்பட்டனர்.

“தென்னன் நிகரான செகராசன் தென்னிலங்கை
மன்னவனாகுஞ் சிங்கையாரியமால்”

எனப் போற்றப்பட்டான். பொலனறுவை, புளச்சேரி, கந்தளாய், கந்துப்புலு, குருந்து, பதவியா, மாட்டுக்கொணா, ஊராத்தொட்டை, கொழுது, மீபாதொட்டை, மண்டலி, மன்னார் முதலிய இடங்களிற் கோட்டைகள் கட்டினான்.

(6) குலசேகரச் சிங்கையாரியச் சக்கரவர்த்தி – பரராசசேகரன்: (கி.பி. 1240 – 1270) அந்தக் கவியின் வருகையும் ஆரூருலா பாடப்பட்டதும் இவன் காலத்திலாகும்.; கி.பி. 1253 இற் சோழப்படை வெற்றி. கி.பி. 1256 இற் சந்திரபானுவின் படையெடுப்பு.

(7) குலோத்துங்க சிங்கையாரியன் - செகராசசேகரன் - கி.பி. 1270 – 1292 இக்காலந்தொட்டு சிங்கள அரசர் ஆரியச் சக்கரவர்த்திகளுக்குத் திறைகட்டி ஆண்டனர். மன்னார்க் கடலில் முத்துக்குளிக்கும் உரிமைக்கு இக்காலத்திற் செகராசசேகரனுடன் சிங்கள அரசன் புவனேகபாகு போர் செய்தான். கி.பி. 1284 இல் மார்க்கோ போலே என்ற புகழ்பெற்ற பிரயாணி யாழ்ப்பாணத் துறைமுகமொன்றில் இறங்கினான். யாழ்ப்பாணத்தைப் பற்றியும், ஆரியச் சக்கரவர்த்தி ஆட்சிமுறைகள் பற்றியும் தனது நூலில் விபரமாகக் குறிப்பிடுகிறான்.

(8) விக்கிரமசிங்கையாரியன் - பரராசசேகரன்:- கி.பி. 1292 – கி.பி. 1302. இவனுடைய காலத்தில் யோவான் எனுங் கிறிஸ்தவ குரு யாழ்ப்பாணம் வந்தார். இவரும் யாழ்ப்பாணத்தைப் பற்றியுஞ் சிங்கை அரசைப்பற்றியுங் குறிப்பிடுகிறார். கி.பி.1296 இல் யாப்பாகுவில் தோல்வியுற்ற புவனேகவாகுவின் குமாரனுக்கு அவனுடைய அரசைப்பெற உதவிசெய்தான். ஆரியச் சக்கரவர்த்திகளுக்குத் திறைகட்டப் புவனேகவாகுவின் மகன் உடன்பட்டான். பின்பு யாழ்ப்பாண அரசருக்குப் பயந்தோ அல்லது திறைகட்ட மறுத்தோ சிங்கள அரசர் தமது இராசதானியைக் குருநாக்கலுக்கும், தம்பதெனியாவுக்கும் கம்பளைக்கும் மாற்றினர். வன்னி அதிகாரிகள் பலர் சிற்றரசர்களாக ஆளந் தொடங்கினர். இஃது அக்கால நிலப் பிரபுத்துவ முறையுடன் இணக்கமுடையதாக இருந்தது.

(9) வரோதய சிங்கை ஆரியன் - செகராசசேகரன் - கி.பி. 1302 – 1325

கி.பி. 1303 இற் குருநாக்கலில் அரசு செய்த நாலாம் பராக்கிரமவாகு சிங்கை அரசருக்குத் திறை கட்ட மறுத்துத் தனது இராசதானியை தம்பதெனிக்கு மாற்றினான். இப்பராக்கிரமபாகுவின் சபையிலேதான் போஜராஜ பண்டிதர் என்பவர் சரசோதிமாலை எனுந் தமிழ்ச் சோதிட நூலை அரங்கேற்றினார். அக்காலத்திற் சிங்கள மேன் மக்களிடையில் தமிழே கற்றவர் மொழியாக இருந்தது. சுந்தரபாண்டியன் தான் இழந்த இராச்சியத்தைப் பெற வரோதய சிங்க ஆரியனின் உதவியை நாடினான். இக்காலத்திலே தென்னிந்தியாவில் மகமதியர் செய்த கொடுமைகளினால் பல பெருங்குடி மக்கள் வட இலங்கைக்கு வந்து குடியேறினர். இக்காலத்தில் இலங்கைக்கு வந்த பிரையர் ஓடொறிக் எனும் கத்தோலிக்கப் பாதிரியார் இவ்வரசனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவன் காலத்தில் யாழ்ப்பாணத்திலே தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவினான்.

(10) மார்த்தாண்டசிங்கை ஆரியன் - பரராசசேகரன் - கி.பி. 1325 – 1347

இவனுடைய காலத்தில் இபின் பட்டூட்டா எனும் மகமதியப் பிரயாணி இலங்கை வந்தான். ஆரியச் சக்கரவர்த்தியைப் பற்றிய அவருடைய குறிப்புக்களை முன்பு இந்நூலிற் கூறினோம்.

(11) குணபூஷணன் - செகராசசேகரன் - கி.பி. 1347.

கி.பி. 1348 இல் போப் சீனாவிற்கு அனுப்பிய தானாதிபதியத் தலைவன் யாழ்ப்பாணம் வந்தான். யாழ்ப்பாணத்தைப் பற்றிப் பல விபரங்கள் எழுதியிருக்கிறான்.

(12) விரோதயசிங்கை ஆரியன் - பரராசசேகரன்.

இவனுடைய காலத்தில் வன்னி நாட்டிற் பல கலகங்கள் நடந்தன. அவற்றையெல்லாம் அடக்கித் தனதாட்சியைப் பலப்படுத்தினான். கி.பி. 1380 இல் இறந்தான்.

(13) ஜெயவீரசிங்கை ஆரியன் - செயராசசேகரன் - கி.பி. 1380 – 1410.
ஆரியச் சக்கரவர்த்திகளில் இவனே மிகப் புகழ்பெற்றவன். விடையும் பிறையும் பொறித்த நாணயங்களை அடித்தான்.

கி.பி. 1340இற் கோட்டையில் அளகக் கோனார் ஆட்சி தொடங்கிற்று. இவன் வஞ்சி நகரத்து மலைய குலத்தைச் சேர்ந்தவன். கம்பளையில் மூன்றாம் விக்கிரமவாகுவின் மந்திரியும் படைத்தலைவனுமாகவிருந்தவன். சிங்கள அரசில் ஒரு பகுதியைக் கவர்ந்து கோட்டையில் தன்னரசை நிறுவினான். சிங்கள அரசர் ஆரியச் சக்கரவர்த்திகளுக்குக் கட்டிவந்த திறையைக் கட்ட மறுத்தான். திறை கேட்க வந்த ஏவலாளரைக் கொன்றான். அளகக்கோனுக்கும் ஜெயவீர சிங்கை ஆரியனுக்கு மிடையிற் போர் மூண்டது. அழகக்கோன் வென்றான் எனச் சிங்கள இதிகாசங்கள் கூறுகின்றன. சிங்கை ஆரியன் வென்றானெனச் சில காலத்துக்கு முன்பு கேகாலைப் பகுதியிற் கண்டெடுக்கப்பட்ட சாசனங் கூறுகிறது. செகராசசேகரம் எனும் வைத்திய நூல், செகராச சேகரமாலை எனுஞ் சோதிட நூல், காரிவையாவின் கணக்கதிகாரம் எனும் கணித நூல், தக்ஷிண கைலாச புராணம் இவன் காலத்தவையாகும்.

(14) குணவீரசிங்கை ஆரியன் - பரராசசேகரன் - கி.பி. 1410 – 1440

இவனே இராமேச்சுரக் கர்ப்பகிரகம் கட்டுவித்தவன். பரராச சேகரம் எனும் வைத்திய நூல் இவன் காலத்தில் எழுதப்பட்டது.

(15) கனகசூரிய ஆரியன் - செகராசசேகரன் - கி.பி. 1440 – 1478

இவனுடைய காலத்தில் பராக்கிரமவாகு சபையிலிருந்த மலையாளப் பணிக்கன் ஒருவனின் மகனாகிய யுத்தவீரன் செண்பகப்பெருமாள் சிங்களப் படையுடன் யாழ்ப்பாணத்தை வென்று கனகசூரியனைத் துரத்தினான். இவன் யாழ்ப்பாணத்திற் 17 வருடங்கள் ஆட்சி செய்தான். இவனே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டுவித்தான். கி.பி. 1467இல் பராக்கிரமவாகு இறந்தபின் கோட்டை யரசனாகினான். கனகசூரியன் யாழ்ப்பாணத்துக்குப் படைகளுடன் திரும்பிவந்து அரசைக் கைப்பற்றினான்.

(16) சிங்கைப் பரராசசேகரன் - கி.பி. 1478
இரண்டாவது தமிழ்ச் சங்கத்தை நிறுவினான். இச் சங்கத்தில் இவனுடைய மைத்துனன் அரசகேசரி “இரகுவமிசம்” எனும் நூலை அரங்கேற்றினான். பரராசசேகரன் உலாவும் இக்காலத்ததாகும். இவனுடைய காலந்தொட்டுச் சிங்கை ஆரியர் ஆட்சி ஆட்டங்காணத் தொடங்கிற்று. வன்னியர்கள் திறை கொடுக்க மறுத்துத் தம்மாட்சி நடத்தினர். இலங்கையின் வியாபாரம் முழுவதையும் மகமதியர் கைப்பற்றினர். போர்த்துக்கீசர் நாட்டிற் புகுந்தனர். பரராசசேகரனுக்கு நான்கு புத்திரர். சிங்கவாகு, பண்டாரம், பரநிரூபசிங்கம், சங்கிலி, சங்கிலி அண்ணன்மாரைச் சூழ்ச்சியினாற் கொன்று அரசைக் கைப்பற்றினான். சிங்கை அரசர் போர்த்துக்கீசரின் பொம்மைகளாகினர்.

சங்கிலியின் ஆட்சிக் காலத்திற் சங்கிலிக்கும் போர்த்துக்கீசர்களுக்குமிடையில் இடையறாப் போர்கள் நடந்தன. போர்த்துக்கீசர் பரநிரூபசிங்கனைக் கிறித்தவனாக்கி அவனை அரசனாக்க எத்தனித்தனர். கி.பி. 1565இற் சங்கிலி இறந்தான்.

காசி நயினார் அல்லது குஞ்சி நயினார் – பரராசசேகரன். போர்த்துக்கீசர் இவனைச் சிறைப்படுத்தி வேறோர் அரச குமாரனை நியமித்தனர். ஆனாற் போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்தை விட்டு விலகியவுடன் காசி நயினார் புதிய அரசனைக் கொன்று மறுபடியும் அரசனாகினான்.

போர்த்துக்கீசர் காசி நயினாரை நஞ்சூட்டிக் கொன்று பெரிய பிள்ளை எனும் அரசகுமரனை செகராசசேகரன் எனும் பட்டத்துடன் கி.பி.1570இல் அரசனாக்கினர். கி.பி. 1582இற் பெரியபிள்ளைக்குப்பின் புவிராஜ பண்டாரம் பரராசசேகரன் என்னும் நாமத்துடன் அரசனானான். புவிராஜ பண்டாரம் பலமுறை போர்த்துக்கீசருடன் போர் செய்து தோற்றான். ஈற்றிற் போர்த்துக்கீசரனினாற் கொல்லப்பட்டான். போர்த்துக்கீசர் அவனுடைய மகன் எதிர்மன்னசிங்கனைத் தங்கீழ் அரசனாக்கினர். இவன் பரராசசேகரன் எனும் பெயர் பெற்றான். இவன் கி.பி. 1591 தொடக்கம் கி.பி.1616 வரையும் ஆட்சி செய்தான். இவன் இறந்தபோது சங்கிலி எனும் அரசகுமாரன் பட்டத்தைக் கைப்பற்றினான். இச் சங்கிலி ஈற்றிற் போர்த்துக்கீசரினாற் கொலை செய்யப்பட்டான். கி.பி. 1620இற் போர்த்துக்கீசரின் நேராட்சி தொடங்கிற்று.


 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அட்டவணை 4, 5

ஆதார மேற்கோள் நூல்கள்
1. வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பழந்தமிழர் – திரு ந.சி. கந்தையாபிள்ளை

2. தமிழர் சரித்திரம் - திரு ந. சி. கந்தையாபிள்ளை

3. தமிழகம் - திரு. ந.சி. கந்தையாபிள்ளை

4. தமிழ் இந்தியா – திரு. ந.சி. கந்தையாபிள்ளை

5. திராவிட இந்தியா – திரு. ந.சி. கந்தையாபிள்ளை

6. திராவிட நாகரிகம் - திரு. ந.சி. கந்தையாபிள்ளை

7. குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு – பன்மொழிப் புலவர் திரு.கா. அப்பாத்துரை

8. தென்னகப் பண்பு – பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரை

9. தென்னாட்டுப் போர்க்களங்கள் - பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரை

10. தமிழ்ச் சங்கங்களின் வரலாறு – திருமந்திரமணி துடிசைகிழார் அ. சிதம்பரனார்

11. அகத்தியர் வரலாறு – திருமந்திரமணி துடிசைகிழார் அ. சிதம்பரனார்

12. திராவிடமக்கள் வரலர்று திரு. நு.டு. தம்பிமுத்து

13. தமிழர் நாகரிகமும் பண்பாடும் - டாக்டர் ம. இராசமாணிக்கனார்

14. தொல்காப்பிய ஆராய்ச்சி – பேராசிரியர் சி. இலக்குவனார்

15. சிந்துவெளி நாகரிகம் - வித்துவான் மா. இராசமாணிக்கம்பிள்ளை

16. தமிழக வரலாறு – பேராசிரியர் அறுவர் சொற்பொழிவுகள்

17. தமிழக வரலாறு – திரு. அ.மு. பரமசிவானந்தம்

18. தமிழர் வாணிகம் - புலவர் கா. கோவிந்தன்

19. ஆயிரத்துத் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் - திரு. வி. கனகசபை

20. 1800 ஆண்டுகளுக்குமுன் தமிழர் – பேராசிரியர் ஆ.ளு. பூரணலிங்கம்

21 மறைந்துபோன தமிழ் நூல்கள் - மயிலை சீனி வெங்கடசாமி

22. பல்லவர் வரலாறு – வித்துவான் மா. இராசமாணிக்கம்பிள்ளை

23. சோழப் பேரரசு – வித்துவான் மா. இராசமாணிக்கம்பிள்ளை

24. தமிழர் மதம் - மறைமலையடிகள்

25. தமிழ்நாட்டு வரலாறு – டாக்டர் மு. ஆரோக்கியசாமி

26 வுயஅடை ஐனெயை – டில Pசழக. Pரசயெடiபெயஅ Pடைடயi

27. வுhந யுnஉநைவெ வுயஅடைள – டில ளு.மு. Pடைடயi

28. வுயஅடை ர்ளைவழசல – டில சு. சுயபாயஎய யுலையபெயச 

29. நூற்றாண்டுகளில் இன்பத் தமிழ் - பண்டிதர் கா. பொ. இரத்தினம்

30. தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள் - திரு. து.சு. சின்னத்தம்பி

31. வன்னியர் – கலாநிதி சி. பத்மநாதன்

32. யாழ்ப்பாண வைபவமாலை – மயில்வாகனப் புலவர்

33. யாழ்ப்பாணச் சரித்திரம் - முதலியார் செ. இராசநாயகம்

34. வுயஅடைள யனெ ஊரடவரசயட Pடரசயடளைஅ in யnஉநைவெ ளுசi டுயமெய டில சுநஎ. னு.து. முயயெபயசயவயெஅ Ph. னு.

35. யுவடயவெiஉ – நுனபயச ஊயலநந.

தமிழர் வரலாற்று நூல்
பொருளியல் துறையிலே உயர் பட்டங்கள் பெற்று அத்துறையிலே அறிஞராக விளங்கிய திரு. பொ. சங்கரப்பிள்ளை அவர்கள் தமிழ் மக்கள் பெருமையுறும் அளவுக்கு தமிழியல், தமிழர் வரலாறு, தமிழ் இலக்கியம், அரசியல், சமூகவியல், மெய்யியல் ஆகிய பல்வேறு நெறிகளிலும் துறைபோக கற்றவர். இத்துறைகளிலே அகலமாகவும், ஆழமாகவும் ஆராயமுற்பட்டவர்.

இந்நூல் தமிழர்களின் அரசியல் வரலாற்றினை மட்டும் ஆய்வதுடன் நில்லாது அவர் தம் பண்பாடு, கலைகள், இலக்கியங்கள், சமயம், கைத்தொழில், விவசாயம் போன்ற பொருளாதார முயற்சிகள் போன்றனவற்றையும் வரலாற்று ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் அணுகுகின்றது.

பழந் தமிழ் இலக்கியங்களில் மிகுந்த புலமையுடைய ஆசிரியர் பரந்த தமிழ் இலக்கியப் பரப்பிலிருந்து ஏராளமான தகவல்களையும் கருத்துக்களையும் அகழ்ந்தெடுத்து இந்த ஆய்வு நூலிலே விரிவாகப் பயன்படுத்தியுள்ளார். பழந்தமிழ் இலக்கியங்கள் வெறும் இலக்கியங்கள் மட்டுமன்றி ஒரு இனத்தின் வரலாற்றுப் பண்பாட்டு, சமய, பொருளாதார, சமூக ஆய்வுகளுக்கும் உதவுவன என்பதை நன்கு நிரூபித்துள்ளார். அத்துடன் அவர் தமிழர் வரலாறு, இலக்கிய வரலாறு பற்றிய ஏராளமான நூல்களைக் கற்று அவற்றில் பொதிந்துள்ள ஆய்வு முடிவுகளையும் இந் நூலில் நன்கு பயன்படுத்தியுள்ளார்.

தமிழரின் வரலாற்றுத் தொன்மையும் பண்பாட்டுக் கலை இலக்கியப் பெருமைகளையும் தெளிவுற எடுத்துக்காட்டும் இந் நூலாசிரியர் தமிழ்கூறும் நல்லுலகினால் என்றென்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்.
சோ. கந்திரசேகரம்
சமூக விஞ்ஞான கல்வித்துறைத் தலைவர்,
கொழும்புப் பல்கலைக்கழகம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard