Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே


Guru

Status: Offline
Posts: 7474
Date:
சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே
Permalink  
 


01.jpg 18.jpg 19.jpg 19a.jpg

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

20.jpg  20a.jpg 21.jpg 21a.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

22.jpg 22a.jpg 23.jpg 23a.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

24.jpg 24a.jpg  25.jpg 

25a.jpg  26.jpg



-- Edited by admin on Friday 31st of July 2020 01:07:05 PM

__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

சங்கத் தமிழில் சனாதன தர்மம்

 

LORD INDIRA

தமிழன் என்பவன் தனி இனத்தவன், அவனுக்கும் பாரத சமுதாயத்தின் அடிநாதமாகிய வேத நாகரிகத்துக்கும் தொடர்பில்லை என்ற புனைச் சுருட்டு, திராவிட இயக்கங்களால் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், தமிழன் வேத நாகரிகத்திலிருந்து வேறுபட்ட தனி இனத்தான் அல்லன், மாறாக அதன் தனித்துவம் வாய்ந்த சமூகத்தினன்.

வேதம் என்பதற்கு வேர்ச் சொல்லான வித்தை (அறிவு), வித்து (விதை) என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து விளைந்தது. பிரபஞ்சத்தின் தோற்றத்துக்குப் பேரறிவுதான் வித்து (விதை). அதைப் பற்றி மொழிவதே வேதம். இதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், ஆராய்ந்து அறியத் தக்கவை. உலகின் அரிய பல விஷயங்கள், அதில் நுட்பமாகப் புதைந்துள்ளன. ஆகையால்தான் வேதத்துக்குத் தமிழில் மறை என்று சிறப்பான மறு பெயரும் உண்டு. ஏதேனும் ஒரு பொருளை அல்லது விஷயத்தை வேண்டி, கடவுளுக்கு வேண்டுதலோடு செய்வதுதான் யாகம்.

 

உதாரணத்துக்கு பிள்ளைப்பேறு வேண்டுகின்ற புத்திர காமேஷ்டி யாகம், அரசனின் வெற்றியை வேண்டும் ராஜசூய யாகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறு வேண்டி விழைந்து செய்யும் யாகத்தைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல்தான் வேள்வி.

இந்த யாகத்தீயில் பொருட்களை சமர்ப்பிப்பதற்குப் பெயர் ஆஹூதி. தமிழில் சொன்னால், ஆகுதி. இறைவா இது உனக்கு ஆகட்டும் என்று கூறி படைப்பதுதான் ஆகுதி என்பது. இந்த யாகத் தீயில் இடப்படும் பொருட்களுக்குப் பெயர் அவிஷ் அல்லது அவிர்பாகம். யாகத்துக்குப் பிறகு இந்த அவிர்பாகம் (அவிப்பொருள்) தான் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. தீயில் இடப்படும் பொருள் அவிந்துதானே போகும். அவ்வாறு அவிவதால்தான் அதற்கு அவி என்று பெயர்.

இவ்வளவு ஏன்? அக்னியே தூய தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானதுதான். அதனை அறிந்து கொள்ள, முதலில் இதனைப் பார்ப்போம். தமிழில் ஃ என்ற சொல்லை ஆயுத எழுத்து என்பர். ஆனால் உண்மையில் அதன் பெயர் ஆய்த எழுத்து. பழந்தமிழ் இலக்கணங்களில் ஆய்த எழுத்து என்றே குறிக்கப் பெறுகிறது.

SUN ONE

ஆய்தம் என்றால் மூன்று புள்ளிகள் கொண்ட ஓர் எழுத்து என்று பொருள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த கும்முட்டி அடுப்பைப் பார்த்தால் தெரியும். மேலே முக்கோணமாக மூன்று உருண்டைகள் ஃ போல் இருக்கும். அக் காலத்திலும் சரி, இப்போதும் சரி, யாகத்துக்கு இதுபோன்ற ஃ வடிவில் யாக குண்டம் அமைப்பதுதான் சிறப்பானது. பேச்சு வழக்கில் ஃ என்ற எழுத்தை அக் என்று கூறுகிறோம். இந்த அக் வடிவ குண்டத்துக்குளே  உருவாவது, இருப்பது என்ற பொருளில்தான் அக்+உள்ளி, அக்குணி என்றாகி, அதுவே அக்னி ஆனது. (அக் உள்ளி எப்படி அக்குணி ஆனது எனில், உள்ளது என்பது உண்டு என்று ஆனதைப் போல என அறிக.)

பகுத்தறிவு இல்லாதவர்களால் ஆரியக் கடவுள் என்று கூறப்படுகிற இந்திரன், உண்மையில் தமிழ்க் கடவுள்தான். இந்து என்றால் திங்கள் அதாவது சந்திரன் என்று பொருள். இதன் நிறம் வெண்மை. இதன் தன்மை குளிர்ச்சி. இதுபோல் குளிர்ந்த தன்மையோடு விளங்குகின்ற தண்ணீருக்கு நிறம் இல்லை என்று கூறப்படுகின்ற போதிலும், அது வெள்ளை நிறம் கொண்டதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் தண்ணீருக்கு வெள்ளை நிறம் கொண்டது என்னும் பொருள் கொண்ட வெள்ளம் (வெள்+அம்) என்ற மற்றொரு பெயரும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தைக் கொண்டு செய்வது வேளாண்மை (விவசாயம்).

பழந்தமிழர்களின் ஐந்திணைகளில் வேளாண்மை நடைபெறுகின்ற மருத நிலத்தின் தெய்வம் இந்திரன். ஏன்? வெள்ளத்துக்கு (தண்ணீருக்கு) காரணமான மழைக்கு அவன்தான் தலைவன். அவன் நிறமும் திங்களைப் போன்ற வெண்மை. அவன் போருக்கும், காதலுக்கும் பெயர் பெற்றவன். தமிழர்களின் நாகரிகமும் போரும் (புறம்), காதலும் (அகம்) தானே. ஆகையால்தான் வேந்தன் எனப்படும் இந்திரன், தமிழர்களில் பெருவாரியான வேளாண்மை செய்வோரின் தெய்வமாக மதிக்கப்பட்டான். இவனது கோவில் இந்திரக் கோட்டம் என்று அழைக்கப்பட்டதுடன், வசந்த காலத்தில் இந்திர விழாவும் அக்காலத்தில் அமர்க்களமாக நடத்தப்பட்டது. இதற்கான சான்றுகளை, சிலப்பதிகாரத்தில் இந்திரன் விழவு ஊரெடுத்த காதையைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.

இதேபோல் யாகங்களில் தீக்கு அடுத்தபடியாக போற்றப்படும் புனித நீருக்குரிய வருணனும் தமிழ்க் கடவுள்தான். இவன் நெய்தல் நிலத்தின் கடவுள். நெய்தல் என்பது கடல் நீர் சூழ்ந்த நிலப் பகுதி. மருத நிலமானது மழை நீரை நம்பியிருப்பதால், மழைப்பொழிவுக்குக் காரணமாகப் போற்றப்படும் இந்திரன் அதன் தெய்வம் ஆனான். இதேபோல் கடல் சூழ்ந்த நெய்தல் நிலத்துக்கு, கடல் நீரின் அதிபதியான வருணன் தெய்வம் ஆனான். வாரி என்ற தமிழ்ச் சொல்லுக்கு பரந்து கிடக்கும் நீர், பல துளிகள் சேர்ந்தது என்று பொருள். நீரை மொண்டு (முகந்து) எடுப்பதற்கு வாரி எடுத்தல் என்று பெயர். வாரி என்பது தமிழின் கிளை மொழியான தெலுங்கில் ஆறு, குளத்தைக் குறிக்கிறது. இந்த வாரி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானதுதான் வருணன் என்ற பெயர்.

இவ்வாறு பழந்தமிழோடு வேதம் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆராய்ந்து பார்த்தால் வேத கலாசாரத்துக்கு வேறாக அன்றி, வேராக இருப்பது தமிழ்தான். பழந்தமிழர்கள் தீயோம்பும் (வேள்வி நடத்தும்) வேத கலாசாரத்தைப் பின்பற்றியும் ஆதரித்தும் வந்துள்ளனர். இதற்குப் பழந்தமிழ் மன்னர்களான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிப் பாண்டியனும், ராஜசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளியுமே சான்று.

இவையெல்லாம் கற்பனைகள் என்றும், புளுகுகள் என்றும் பகுத்தறிந்து பார்க்காத பகல்வேஷத் தமிழர் அமைப்புகள் சில கூறக்கூடும். அவர்களுக்காகவும், தெய்வீகத் தமிழின் சிறப்பையும் தொன்மையையும் உண்மையிலேயே அறியாத பாமரத் தமிழர்களுக்காகவும் சங்க இலக்கியங்களில் காணப் பெறும் வேத நாகரிகச் சான்றுகளை இங்கே எடுத்துரைக்கிறேன்.

LORD MURUGAN

பத்துப்பாட்டில் முதல் பாட்டு, முருகப் பெருமான் மீது நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை. முருகனுக்குத் தமிழ்க் கடவுள் என்றே சிறப்புப் பெயர் உண்டு. அப்படிப்பட்ட முருகனைப் போற்றும் திருமுருகாற்றுப் படையில், ஆறுமுகப் பெருமானின் ஒரு முகம் என்ன செய்வதாக நக்கீரர் கூறுகிறார் தெரியுமா?

ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்குமே என்கிறார். அதாவது மந்திர விதிமுறைகளில் பிசகாது, மரபுப் படி அந்தணர் நடத்துகின்ற வேள்வியை சுப்ரமணியக் கடவுளின் ஒரு முகம் விரும்பி ஏற்கிறதாம்.

இந்திரனைப் பற்றி திருமுருகாற்றுப்படை எப்படிக் குறிப்பிடுகிறது தெரியுமா?

நூறுபல் வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து ஈரிரண்டு ஏந்திய மருப்பின், எழில்நடை தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் என்கிறது.

அதாவது பலநூறு வேள்விகளை நடத்தியவனும் போர்களில் எதிரிகளைக் கொன்று பல வெற்றிகளைப் பெற்றவனும், நான்கு கொம்புளையுடைய மகுடத்தைத் தரித்தவனும் எழிலான நடையும் நீண்ட கைகளும் உடையவனும், ஐராவதம் என்ற யானையில் வருகின்ற, செல்வம் நிரம்பிய  செல்வனுமாகிய இந்திரன் என்று கூறுகிறது.

சிறுபாணாற்றுப் படையில் புலவர் நல்லூர் நத்தத்தனார், ஒய்மான் நாட்டு மன்னன் நல்லியக்கோடனின் நகரம், அந்தணர் அருகா அருங்கடி வியல் நகர் என்று புகழ்ந்துரைக்கிறார். அதாவது அந்தணர்கள் எண்ணிக்கைக்கு குறைவே இல்லாத, அருமையான கட்டுக்காவல் நிறைந்த நகரம் என்று பொருள். மேலும் பொருநர்கள் (பாணர்கள்), புலவர்கள் மற்றும் அருமறை நாவின் அந்தணர்களுக்கு (அருமையான வேதத்தை ஓதுகின்ற நாவினை உடைய அந்தணர்களுக்கு) நல்லியக்கோடனின் அரண்மனைக் கதவு அடையா வாயில் கொண்டது (எப்போதுமே திறந்திருக்கும்) என்றும் கூறுகிறார்.

கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படையில், கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித் தூணத்துஎன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. கேள்வி என்றால் வேதம் என்று பொருள். அந்தக் காலத்திலே வேதம் எழுதப்படாமல் செவிகளால் கேட்டே மனப்பாடம் செய்யப்பட்டதால், இதற்கு சம்ஸ்கிருதத்தில் ஸ்ருதி என்று பெயர். தூய தமிழில், எழுதாக் கிளவி (எழுதப்படாமல் கேட்கப்படக்கூடிய வாக்கியங்கள்) என்றும் கேள்வி என்றும் வேதம் அழைக்கப்படுகிறது. அந்த வேதத்தில் சிறந்த அந்தணர்கள் தங்கள் அருமையான கடமையாகிய வேள்வியை நடத்தி, அதன் சிறப்பைப் பொறித்து வைத்துள்ள தூண் என்று இந்த வரிகளுக்குப் பொருள். இந்தத் தூணை, யூபத் தூண் என்றும் வேள்வித் தூண் என்றும் அழைப்பார்கள்.

மகா விஷ்ணுவின் உந்தியில் பிரும்மன் தோன்றினான் என்ற புராணச் சம்பவத்தை, பெரும்பாணாற்றுப் படை இவ்விதம் அழகாக எடுத்துரைக்கிறது.

LORD SIVA

நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக ஒருவற் பயந்த பல்இதழ்த் தாமரைப் பொகுட்டின்..

நீல நிறமும் நெடிய உருவமும் கொண்ட திருமாலின் கொப்பூழ் (தொப்புள்) நான்முகம் கொண்ட பிரம்மனைப் படைத்தளித்த பல இதழ்களைக் கொண்ட தாமரைப் பூவாகும் என்று இதற்குப் பொருள்.

மதுரைக் காஞ்சியில் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புகழ்ந்துபாடும் மாங்குடி மருதனார், நெடுஞ்செழியனின் முன்னோராகிய பெருவழுதி, பல யாகங்களை நடத்தியவன் என்பதை, பல் சாலை முது குடுமியின் நல் வேள்வித் துறை என்று குறிப்பிடுகிறார்.

மதுரையிலே அந்தணர்களின் வேள்விப் பள்ளிகள் நிறைந்து இருப்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.

சிறந்த வேதம் விளங்கப் பாடி விழுச் சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி, உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும் அற நெறி பிழையா அன்புடை நெஞ்சின், பெரியோர் மேஎய், இனிதின் உறையும் குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் என்கிறார்.

சிறப்புடைய வேதத்தைப் பொருள் விளங்குமாறு பாடுகின்றவர்களும், பெருமைக்குரிய சிறப்புகளைத் தருகின்ற வேள்வி செய்தல் உள்ளிட்ட ஒழுக்கங்களோடு பொருந்தி நிற்கின்றவர்களும், நிலங்களைக் கொண்டு அமைகின்ற உலகத்திலே ஒருமை உணர்வுடையே பிரம்மமே தாம் ஆகி, உயர்ந்த நிலையில் உள்ள தேவருலகத்தை இங்கேயே தமது ஒழுக்கச் சிறப்பாலும் வேள்விகளாலும் உருவாக்கக் கூடியவர்களும், அற நெறிகளில் இருந்து பிறழாத நடத்தையுடன் அன்பு நெஞ்சம் கொண்டவர்களும், பெரியோர்களுமாகத் திகழ்கின்ற அறவோர்களும், முனிவர்களுமாகிய அந்தணர்கள் இனிதாக உறைவதற்கேற்ப, அதாவது தவம், வேள்வி உள்ளிட்ட அறச் செயல்களைச் செய்வதற்ப, குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட அந்தணர் தவப்பள்ளி என்று இதற்குப் பொருள்.

சிவபெருமான் ஐந்துபூதங்களைப் படைத்த தலைவனாக, இயற்கைக் கடவுளாக விளங்குவதை, நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்பொடு ஐந்து உடன் இயற்றிய மழு வாள் நெடியோன் தலைவன் ஆக என்று குறிப்பிடுகிறார். நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை நினைத்த மாத்திரத்தில் உருவாக்கிய, மழு (கோடரி), வாள் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய, நெடிய உருவம் படைத்த சிவபெருமான் உலகின் தலைவனாக இருக்கிறார் என்று இதன் பொருள்.

பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானை எப்படிப் புகழ்கிறார் தெரியுமா?

கொலை கடிந்தும் களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் நல் ஆனொடு பகடு ஓம்பியும் நான் மறையோர் புகழ் பரப்பியும் வாழ்ந்தானாம் திருமாவளவன் எனப்படும் கரிகால் சோழன். அதாவது அவனது அரசாட்சியிலே கொலை, கொள்ளை போன்ற தீமைகள் அகற்றப்பட்டிருந்தன. அமரர்கள் எனப்படும் தேவர்களுக்கு உரிய யாகங்களைச் செய்து அவர்களுக்கு உரிய ஆவுதி(ஆகுதி)களை முறை தவறாமல் வழங்கியிருக்கிறான் மன்னன் கரிகாலன். அத்துடன் அதனைச் செய்வித்த அந்தணர்களுக்கு நல்ல ஆநிறைகளை (கால்நடைகளை) பரிசாக அளித்ததுடன், வேதத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய நான்கு மறைகளை அறிந்த அந்தணர்களின் புகழைப் பரப்பியும் வந்திருக்கிறான் அந்தத் தொல் திருமாவளவன்.

மலைபடுகடாம் எனப்படும் கூத்தர் ஆற்றுப்படையில் அதன் ஆசிரியர் புலவர் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார், சிவபெருமான் ஆலகால விஷம் அருந்திய புராணச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் அவரை காரி உண்டிக் கடவுள் என்று புகழ்கிறார்.

இனி எட்டுத்தொகை சங்க இலக்கிய நூல்களைக் காண்போம். எட்டுத்தொகையின் முதல் தொகை நூலாகிய பதிற்றுப்பத்து நூலில், மூன்றாம் பத்துப் பாடல்களை, சேரன் பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் புகழ்ந்து புலவர் பாலைக் கௌதமனார் பாடியுள்ளார். அந்தப் பாடலில்,

சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சமென்று ஐந்துடன் போற்றி அவைதுணை ஆக எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக் காலை அன்ன சீர்சால் வாய்மொழி உருகெழு மரபின் கடவுள் பேணியர் கொண்ட தீயின் சுடர்எழு தோறும் விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதி (பாடல் 21) என்று புலவர் குறிப்பிடுகிறார்.

சொல் (சொல் இலக்கணம்), பெயர் (பொருள் இலக்கணம்), நாட்டம் (சோதிடம்), கேள்வி (வேள்வி), நெஞ்சம் (நெஞ்சுக்குப் பொருந்திய ஆகமம்) ஆகிய ஐந்தையும் போற்றி, அவற்றின் துணை கொண்டு, எந்த உயிர்களுக்கும் தீங்கு சூழாது, விளக்கத்துடன் கூடிய கொள்கைகளைப் பின்பற்றி, கதிரவனைப் போன்ற வாக்குத் தவறாத நேர்மையைக் கடைப்பிடிக்கின்ற, முன்னோர் காட்டிய மரபுப்படி கடவுளைப் பேணுகின்ற முனிவர்களாகிய அந்தணர்கள் வளர்க்கின்ற வேள்வித் தீயின் சுடர் எழும்போதெல்லாம் அதிலே ஆவுதி (ஆகுதி) இடப்படுகின்றது. எப்படிப்பட்ட ஆவுதி தெரியுமா? அதனைச் செய்பவர்கள் விரும்புகின்றவற்றை மெய்யாக்குகின்ற (உண்மையாக்குகின்ற) பெரிய பலன்களைத் தரக்கூடிய ஆவுதியாம். இந்தப் பாடலுக்குப் பெயரே அடுநெய்யாவுதி என்பதுதான். வேள்விக்கு இதைவிட என்ன பெரிய விளக்கம் வேண்டியிருக்கிறது?

அத்துடன், அந்தணர்களின் ஆறு கடமைகள் என்று வேதம் கூறுவதையும் மிக அழகாகத் தமிழில் எடுத்துரைக்கிறார் பாலைக் கௌதமனார்.

ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறுபுரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர்  (பாடல் 24) என்கிறார். அதாவது தான் வேதம் ஓதுதல், வேள்வி செய்தல், அவை இரண்டையும் பிறருக்குச் செய்வித்தல்- அதாவது வேதத்தை ஓதச் செய்தல் (சொல்லிக் கொடுத்தல்), வேள்விகளை பிறருக்காக அல்லது பிறரைக் கொண்டு நடத்துதல் – தானங்களை வழங்குதல், அரசர்கள் மற்றும் செல்வந்தர்களிடமிருந்து அறச் செயல்களுக்காக தானங்களை தாம் ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய ஆறு கடமைகள் அறச் செயல்களைச் செய்கின்ற

(தர்மத்தைக் கடைப்பிடிக்கின்ற) அந்தணர்களுக்கு உண்டு என்கிறார். இதேபோல் ஆறாம்பத்துப் பாடலைப் பாடியுள்ள பெண்பாற் புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார், பாட்டுடைத் தலைவனாகிய சேரமன்னன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் புகழந்துரைக்கும்போது

பார்ப்பார்க்குக் கபிலையொடு குடநாட்டு ஓரூர் ஈத்து வான் வரம்பன் எனப் பேர்இனிது விளக்கி (பாடல் 60-க்குப் பிந்தைய பதிகம்) என்கிறார். மறையோதுகின்ற, அறச் செயல் புரிகின்ற பார்ப்பனர்களுக்கு கபிலை எனப்படும் பழுப்பு நிறமுடைய சிறந்த பசுக்களையும், குடநாட்டிலே ஓர் ஊரையும் தானமாகக் கொடுத்ததன் மூலம் வானில் வாழும் தேவர்களை திருப்தி செய்ததால், வான் வரம்பன் (வானத்தை எல்லையாகக் கொண்டவன்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளான் சேரலாதன் என்கிறார் புலவர். இந்த வான்வரம்பன் வழிவந்தவர்கள்தான் வானவராயர் எனப்படும் வானவரையர்கள்.

வேதம் ஓதுகின்ற, அறத்தோடு வாழ்கின்ற அந்தணர்களுக்கு அக்காலத் தமிழர்கள் எத்தகைய மதிப்பு அளித்தனர் என்பதை, வேளிர் மரபைச் சேர்ந்த மன்னன் செல்வக் கடுங்கோ வாழிஆதனைப் பாடிய ஏழாம் பத்தில் கபிலர் எடுத்துரைக்கிறார். வாழிஆதனைப் பார்த்து

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே (பாடல் 63) என்கிறார். அதாவது, யார்க்கும் அஞ்சாத, எவருக்குமே தலைவணங்காத மாவீரன் வாழிஆதன், பார்ப்பனர்களுக்கு மாத்திரமே பணிவோடு தலைவணங்குவான், வேறு யார்க்கும் வணங்க மாட்டான் என்கிறார் கபிலர். இதன்மூலம் எப்பேர்ப்பட்ட பெரும்புகழும், வீரமும் படைத்த மன்னர்களும் பண்பு நிறைந்த பார்ப்பனர்களுக்கு பணிவோடு மரியாதை செலுத்தினர் என்ற வரலாற்றுச் செய்தியைச் செதுக்கியுள்ளார் கபிலர்.

எட்டாம் பத்திலே சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையை, அரிசில் கிழார், கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது வேள்வி வேட்டனை (பாடல் 74) என்று பாராட்டுகிறார். அருமறை குறித்த விளக்கங்களை நன்கு கேட்டறிந்து, அதன் முறை தவறாது வேள்விகளைச் செய்தான் இரும்பொறை என்கிறார்.

எட்டுத்தொகையின் மற்றொரு நூலாகிய பரிபாடலில், காக்கும் கடவுளாகிய திருமால், நாவல் அந்தணர் அருமறைப் பொருள் (முதல் பாடல்) என்று புகழப்படுகிறார். நாவலந்தீவு எனப்படும் பாரதம் முழுவதும் வாழுகின்ற அந்தணருக்கு அருமறையின் உட்பொருளாக இருப்பவர் திருமால் என்று இதற்குப் பொருள். அந்தணர் என்றால் ஆரியர் என்றும் அவர்கள் வெளியே இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்றும் பரப்பப்படும் பசப்புரைக்குப் பதிலடி இந்த வரிகள்தாம்.

மேலும் பரிபாடலின் 3-ஆவது பாடலில், அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும் நீ, அமரர்க்கு முதல்வன் நீ, அவுணர்க்கும் முதல்வன் நீ என்று திருமால் போற்றப்படுகிறார். இதனைப் பாடியவர் புலவர் பெட்டனாகனார். அமரர் என்றால் ஆரியர் என்றும் அரக்கர் (அவுணர்) என்றால் திராவிடர் என்றும் இல்லாத இனவாதம் மொழியும் இழிபிறவிகளை இந்தப் பாடல் வரிகளால் கொட்டுகிறார் பெட்டனாகனார். இறைவன் அனைத்துமாகி நிற்பவன், அத்துடன் எதிரும் புதிருமான அமரர்களுக்கும் அவனே முதல்வன், அரக்கர்களுக்கும் அவனே முதல்வன். அவனே அனைத்தும். இந்தப் பரிபாடல் வரிகள், யஜூர் வேதத்தின் ஶ்ரீ ருத்ரத்தில் சிவபெருமானை, முரண்பாடாக நாம் கருதும் அனைத்துக்கும் அவரே தலைவர், அவரே அனைத்தும் என்று போற்றுவதற்கு ஒப்பாக இருக்கின்றன.

பரிபாடலில் 5-ஆவது பாடல் (பாடியவர் புலவர் கண்ணனாகனார்) செவ்வேள் எனப்படும் முருகனைப் புகழ்ந்து பாடப்பட்டிருப்பது. முருகனின் பிறப்பையும் இது எடுத்துரைக்கிறது. இந்தப் பாடலில், முருகனைத் தோற்றுவித்த அவன்தம் தந்தையாகிய சிவபெருமான், அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான் என்றும் விண்ணோர் வேள்வி முதல்வன் என்றும் போற்றப்படுகிறார். அதாவது, (திரிபுர தகனத்தைப் பாராட்டி) அமரர்கள் நடத்திய வேள்வியின் அவிர்பாகத்தை உண்ட பசுமையான கண்களை உடைய பார்ப்பனர் (சிவபெருமான் எப்போதும் யோகநெறியிலும், தவத்திலும் இருப்பதால் அவர் பார்ப்பனர்) என்றும், விண்ணோர்களாகிய தேவர்கள் நடத்துகின்ற வேள்விகளில் துதிக்கப்படும் முதல்வன் என்றும் சிவபெருமான் போற்றப்படுகிறார். மேலும் இதே பாடலில், முருகனின் சேவடியை மறுபிறவி இல்லை என்று கூறும் மடையர்கள் சேரமாட்டார்கள் (மறு பிறப்பு இல் எனும் மடவோரும் சேரார்)என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பரிபாடலின் 8-ஆவது, 9-ஆவது பாடல்களில் சிவபெருமான் மணிமிடற்று அண்ணல்(நீலகண்டன்) என்று புகழப்படுகிறார்.

14-ஆவது பாடல் (கேசவனார் பாடியது), செவ்வேளைப் புகழ்துரைக்கும்போது இருபிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே என்கிறது. துவிஜர்கள் அதாவது இயற்கையாய் பிறக்கும்போது ஒரு முறையும், பூணூல் அணிவித்து உபநயனம் செய்விக்கப்படும்போது மறு முறையும் என இரு பிறப்பு கொண்ட இருபிறப்பாளர்களான, கருணை நெஞ்சமுடைய அந்தணர்களின் அறச் செயல்களில் அமர்ந்து விளங்குபவன் முருகப்பெருமான் என்று இதற்குப் பொருள்.

பரிபாடலில் புறத்திரட்டாகத் தொகுக்கப்பட்ட பாடல்களில் எட்டாம் பாடல் மதுரை மாநகரின் சிறப்பை இவ்வாறு எடுத்துரைக்கிறது-

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரலெடுப்ப ஏமஇன் துயில் எழிதல் அல்லதை, வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாது, எம்பேர் ஊர் துயிலே.

தாமரைப் பூவில் பிறந்த பிரும்மனின் நாவில் இருந்து பிறந்த பெருமை உடையவை நான்கு வேதங்கள். அப்படிப்பட்ட வேதங்களைப் பாடுகின்ற சிறந்த குரல் ஒலி கேட்டுத் துயில் எழுகிறதாம் பாண்டியன் தலைநகராகிய மதுரை மாநகரம். அவ்வாறு இல்லாமல், சேரனின் வஞ்சி, சோழனின் கோழியூர் எனப்படும் உறையூரைப் போன்று கோழி (சேவல்) கூவி இங்கு பொழுது விடிவதில்லையாம்.

ஆக, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, அதற்கு இணையாக வேத நெறியையும் வளர்த்தெடுத்துள்ளது என்பதற்கு இதனைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? மதுரையில் மட்டுமல்ல, பண்டைத் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் வேத நெறி தழைத்திருந்ததை முன்னர் பல பாடல்களை எடுத்துக்கூறி நிறுவியுள்ளோம்.

தமிழர் நெறி வேறு, வேத நெறி வேறு என்பதைப் போன்ற தவறான கண்ணோட்டங்களை விடுத்து, உயர்ந்த திருக்காட்சியைக் கண்டு, நம் முன்னோர்களைப் போன்று தமிழும், வேதமும் தழைக்கச் செய்ய, சங்க இலக்கியங்களை ஊன்றிப் படிப்போம். அதன்வழி நடப்போம்.

-பத்மன்



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

சங்க இலக்கியத்தில் தமிழர் மெய்யியல் மரபின் வேர்களான வேதத்தை பல்வேறு பெயர்களால் அழைக்க காண்கிறோம்

எழுதாக் கற்பு -குறுந்தொகை 156

மறை   அகம் 70- 15

நான்மறை

அருமறை

வேதம்

நால்வேதம்

வாய்மொழி

  நற்பனுவல்

முட்துநூல்

முது மொழி

ஆறங்கம்

கேள்வி

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி போன்றவர்கள் யாகஞ் செய்ய முற்பட்டதில் வியப்பில்லை.

'நற்பனுவல் நால்வேதத்து

அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை

நெய்ம்மலி ஆவுதி பொங்கப்

பன்மாண் வியாச் சிறப்பின் வேள்வி முற்றி

  • - - * - 3 யூபம் நட்ட வியன்களம் பல கொல்' 5

என்பன போன்ற பாடல்கள் இவர்கள் வேள்விகள் பல செய்தனர்

பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயனும் அவன் மரபினரும்' சிவபெருமானை முன்னிருத்திச் செய்த வேள்வி போன்றதாகவும் இருக்கலாம்.  புறநானூற்றுப் பாடலால் (166) அறிகிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

166. யாமும் செல்வோம்!

 
பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்(38, 40, 166, 177, 178, 261, 301). இவர் ஆவூர் மூலம் என்னும் ஊரைச் சார்ந்தவர். இவர் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனையும், மல்லி கிழான் காரியாதியையும், பாண்டியன் கீரஞ்சாத்தனையும், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் பாடியவர்.
பாடப்பட்டோன்: சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன். இவன் சோழநாட்டில் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள பூஞ்சாற்றுர் என்ற ஊரில் வசித்தவன். இவன் கௌண்டின்னிய கோத்திரத்தைச் சார்ந்தவனாதலால் கௌணியன் என்று அழைக்கப் பட்டான். விண்ணன் என்பது இவன் தந்தையின் பெயர். இவன் இயற் பெயர் தாயன்.
பாடலின் பின்னணி: ஒரு சமயம், சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் ஒரு வேள்வி நடத்தினான். அவ்வேள்விக்கு ஆவூர் மூலங் கிழார் சென்றிருந்தார். அவ்வேள்வியின் சிறப்பையும் விண்ணந்தாயனின் வள்ளல் தன்மையையும் இப்பாடலில் ஆவூர் மூலங் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: பார்ப்பன வாகை. கல்வி கேள்விகளால் சிறந்த பார்ப்பானின் வேள்விச் சிறப்பையும் வெற்றியையும் புகழ்ந்து பாடுவது.

நன்றாய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒருமுதுநூல்
5 இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்அன்ன பொய்உணர்ந்து
பொய்ஓராது மெய்கொளீஇ
மூவேழ் துறையும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!
10 வினைக்குவேண்டி நீபூண்ட
புலப்புல்வாய்க் கலைப்பச்சை
சுவல்பூண்ஞாண் மிசைப்பொலிய;
மறம்கடிந்த அருங்கற்பின்
அறம்புகழ்ந்த வலைசூடிச்
15 சிறுநுதல்பேர் அகல்அல்குல்
சில சொல்லின் பலகூந்தல் நின்
நிலைக்குஒத்தநின் துணைத்துணைவியர்
தமக்குஅமைந்த தொழில்கேட்பக்;
காடுஎன்றா நாடுஎன்றுஆங்கு
20 ஈரேழின் இடம்முட்டாது
நீர்நாண நெய்வழங்கியும்
எண்நாணப் பலவேட்டும்
மண்நாணப் புகழ்பரப்பியும்
அருங்கடிப் பெருங்காலை
25 விருந்துற்றநின் திருந்துஏந்துநிலை
என்றும் காண்கதில் அம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்
30 உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்
செல்வல் அத்தை யானே; செல்லாது
மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம் போல
நிலீஇயர் அத்தைநீ நிலமிசை யானே.

அருஞ்சொற்பொருள்:
1.ஆய்தல் = நுணுகி அறிதல். 2.முது முதல்வன் = இறைவன் (சிவன்); நிமிர் = மேன்மை. 3. புரிதல் = செய்தல். 5. இகல் = மாறுபாடு; மிகல் = வெற்றி, செருக்கு; சாய்தல் = அழிதல்; ஆர்வு = விருப்பம். 7. ஓராது = ஆராயாது; கொளீஇ = கொண்டு. 8. துறை = காரியம் ( வேள்வி); முட்டு = குறைவு. 9. உரவோர் = அறிஞர், முனிவர்; மருகன் = வழித்தோன்றல். 11. புலம் = வயல், இடம்; புல்வாய் = கலைமான். 12. சுவல் = தோள்மேல்; ஞாண் = கயிறு; மிசை = மேல். 13. மறம் = மிகுதி; கடிந்த = நீக்கிய. 14. வலை = ஒரு வகை ஆடை. 20. முட்டாது = குறையாது. 24. கடி = வேள்வி; பெருகுதல் = நிறைதல். 26. தில், அம்ம - அசைச் சொல். 27. வரை = மலை; சிலைத்தல் = முழங்குதல்; புயல் = மேகம்; ஏறு = இடி. 28. புரக்கும் = க்காக்கும். 29. படப்பை = தோட்டம், புழைக்கடை. 31. அத்தை - அசைச் சொல். 32. அண்ணாத்தல் = தலை நிமிர்தல், தலையெடுத்தல். 33. கழை = மூங்கில்.

கொண்டு கூட்டு: உரவோர் மருக, உன் ஏந்து நிலை என்றும் காண்போமாக; யாமும் பரிசில் கொண்டு கொண்டாடுவோமாகச் செல்வேன்; நீ இமயம் போல நிலைபெறுக.

உரை: மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி அறிந்த, முழுமுதற் கடவுளாகிய சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு உறுப்புகளும் உடைய பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபாடுகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி, அவரது மெய் போன்ற பொய்யை உணர்ந்து, அப்பொய்யை மெய்யென்று கருதாமல், மெய்யைக் கொண்டு இருபத்தொரு வேள்வித் துறைகளையும் குறையின்றிச் செய்து முடித்த, சொல்லுதற்கரிய சிறப்புடைய முனிவர்களின் (அறிஞர்களின்) வழித்தோன்றலே!

வேள்விக்காக, நீ காட்டு மானின் தோலை உன் பூணுலுக்கு மேல் அணிந்திருக்கிறாய். குற்றமற்ற, அரிய கற்பும், அற நூல்களில் புகழப்பட்ட வலை என்னும் ஆடையையும், சிறிய நெற்றியையும், அகன்ற இடையையும், அதிகமாகப் பேசாத இயல்பையும், மிகுதியான கூந்தலையும் உடைய, உன் தகுதிக்கேற்ற துணைவியராகிய உன் மனைவியர் அவர்களுக்கு இடப்பட்ட பணிகளைச் செய்கின்றனர். காட்டிலும் நாட்டிலும் வாழ்ந்த பதினான்கு பசுக்களின் நெய்யை, நீரைவிட அதிகமாக வழங்கி, எண்ணற்ற பல வேள்விகளைச் செய்து உலகெங்கும் புகழ் பரப்பிய, அரிய வேள்வி நிறைவு பெறும் வேளையில் விருந்தினரோடு கூடியிருக்கும் உன் மேன்மையான நிலையை இன்றுபோல் நாங்கள் என்றும் காண்போமாக; மேற்கில், பொன் மிகுதியாக உள்ள உயர்ந்த மலையில் மேகம் இடியோடு முழங்கியதால் மலர்ந்த பூக்களைச் சுமந்து வரும் காவிரியில் புது வெள்ளம் பெருகி வருவதால் குளிர்ந்த நீருடைய தோட்டங்களுடைய எங்கள் ஊரில், நாங்கள் உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடியும் மகிழ்வோம்; யான் செல்கிறேன். மேகங்கள் அகலாது மழை பொழியும் உயர்ந்த மலைகளையுடைய, மூங்கில் வளரும் இமயம் போல் நீ இவ்வுலகில் வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு: இரிக்கு, யஜுர், சாம, அதர்வணம் என்பவை வேதத்தின் நான்கு பிரிவுகளாகும். சிட்சை, நிருத்தம், சந்தசு, சோதிடம், கற்பம், வியாகர்ணம் என்ற ஆறு நூல்களும் வேதத்தின் ஆறு அங்கங்களாகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

பரிபாடல் -3

மா அயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மா அயோயே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10
மாயா வாய்மொழி உரைதர வலந்து:



ஶ்ருஷ்டியில் எல்லாப் பொருள்களும் திருமாலிடமிருந்து தோன்றியவை.

மாயோனே! நீலமணீ போன்ற திருமேனி யுடைய மாயோனே!
உன் திருவடி அடியவர்களின் பிறவிப் பிணியை நீக்கும்!
தீ, காற்று, வானம்,நிலம், நீர் என்னும் ஐந்து பூதங்களும்,சூர்ய சந்திரர்களும், தர்மமும் (அதற்கு ஆதாரமான வேள்விகளும்) ஐந்து கோள்களும் (செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி), திதியின் மைந்தர்களாகிய அஸுரர்களும், விதியின் மக்களாகிய  பன்னிரண்டு ஆதித்யர்களும்,  குற்றமற்ற அஷ்ட வஸுக்களும், ஏகாதஸ ருத்ரர்களும். இரு அஸ்வினி  தேவர்களும்.யமனும் அவனுடய படராகிய கூற்றுவனும், மூவேழாகிய இருபத்தியொரு உலகங்களும், அவற்றில் வாழும் உயிர்களும் ஆகிய இவை எல்லாம் உன்னிடத்திலிருந்தே வெளிப்பட்டு நிலைத்தன என்று வேதம் மொழிகிறது. அதுபற்றி நாங்களும் உரைத்தோம்!
வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ‘ என பொழியுமால், அந்தணர் அரு மறை.
தாமரை மலரில் தோன்றிய ப்ரம்மதேவனும் அவனுக்குத் தந்தையும் நீயே என்று அந்தணர்களின் அருமறை மொழிகின்றது. அதனால் நாங்களும் அவ்வாறே கூறுகின்றோம்.
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை,
இரு கை மாஅல் ! 35
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! 45
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
முன்னை மரபின் முதுமொழி முதல்வ!


நீயே  குதிரை வடிவில் வந்த கேசி  என்னும் அஸுரனை அழித்தாய்.உன் புகழைப்போலவே உன் கைகளும் எண்ணிலடங்காதவை. அமிர்தத்தைக் கடைந்து எடுத்த அக்காலத்தில், அஸுரர்களை விலக்கி, தேவர்களுக்கே நீ அமிர்தத்தைக் கொடுத்ததால், ஒரு கை நடுவு நிலையிலிருந்து திரிந்தது. இரு கை, மூன்று கை, நூறு, ஆயிரம், பதினாயிரம்,நூறாயிரம்  என்றிவ்வாறு எண்ணற்ற கைகளையும், யாக்கைகளையும்  உடையவனாக இருக்கிறாய். வேதங்களின் முதல்வனே! பரம் பொருளே! நீ எங்கள்  பொறி புலன்களுக்கு எட்டாதவனாக இருக்கிறாய்.உன் பெருமையை உன்னைத்தவிர வேறு யாரால் உணர இயலும்?


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

புறநானூறு பாடல் 2 - சேரமான் பெருஞ்சோற் றுதியஞ்சேரலாதன்

இப்பாடல் முரஞ்சியூர் முடிநாகனார் என்ற புலவரால் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்ற சேரமன்னனை வாழ்த்திப் பாடியது. இம்மன்னனை உதியனென்றும், உதியஞ்சேரலென்றும், உதியஞ்சேரலனென்றும் மாமூலனாரும், கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானும் பாடுவர்.

பாண்டவரும், துரியோதனாதியரும் போர் புரிந்த காலத்தில் நடுநிலையாய் இருந்து இருபக்கத்துப் படைகளுக்கும் பெருஞ்சோறிட்டதால் இம்மன்னன் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என அழைக்கப்பட்டான்.

இப்பாட்டைப் பாடிய முடிநாகனாரது ஊர் முரஞ்சியூர் என்பதாகும். இவர் தலைச் சங்கப் புலவருள் ஒருவர் எனப்படுகிறது. நாகனார் என்ற இவரது பெயர் பிற்காலத்து ஆசிரியர்களால் நாகராயர் என தவறுதலாக எழுதப்பட்டது.

இமயப் பொற்கோட்டையும், பொதியத்தையும் பாடலில் இணைத்துச் சொல்வதால், இமயத்து அடிப்பகுதியில் நடந்த பாரதப்போர் நிகழ்ச்சியில் சேரமான் நடுநிலையாய் உணவளித்து உதவியதை இவர் நேரில் கண்டறிந்தவரென சொல்லப்படலாம் எனத் தெரிகிறது.

இனி பாடலைப் பார்ப்போம்.

மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரு மென்றாங்(கு) 5

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சிய தகலமும்
வலியுந் தெறலும் அளியும் உடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
வெண்டலைப் புணரிக் குடகடற்குளிக்கும் 10

யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் 15

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல்புளிப்பினும் பகலிருளினும்
நாஅல்வேத நெறிதிரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ வத்தை யடுக்கத்து 20

சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்து இமயமும் பொதியமும் போன்றே. 24

பொருளுரை:

செழுமை மிகுந்த நிலப்பரப்பும், நிலப்பரப்பின் மேலேயுள்ள வானளாவிய ஆகாயமும், ஆகாயத்தைத் தழுவி வரும் காற்றும், அக்காற் றினால் உந்தப்பட்டு பரவும் நெருப்பும், அந்த நெருப்புக்கு மாறுபட்டு அதை அணைக்கவல்ல நீரும் எனப்படும் ஐந்து வகையான பெரும் பூதங்களின் தன்மை போல, தன்னைப் போற்றாமல் பிழை செய்யும் பகைவரின் பிழையைப் பொறுத்தலும், அப்பிழை பொறுக்குமளவில்லாது பகைவர் சூழ்ச்சி செய்யுமிடத்து அவர்களை அழித்து அகற்றவும், அப்பகைவரை அழிப்பதற்கேற்ற மனவலிமையும், தவறு செய்தவரை அழித்தலும், அவர் தவறை உணர்ந்து வழிபட்டால் அவரை மன்னித்து அருளும் தன்மையும் உடையவனே!

உனது நாட்டின் கடற்பரப்பின் மேல் தோன்றிய சூரியன் உனது வெண்மையான தலைக்கு நிகரான வெண்மையான நுரையுடன் கூடிய அலைகள் மோதும் கடலின் மேற்கே மறையும் புதுவருவாயும், செல்வமும் தரும் ஊர்களையுடைய நல்ல நாட்டின் அரசே! வானளாவிய அதிகாரமும் உடையவன் நீதானே பெருமானே!

அசைகின்ற பிடரி மயிறு கொண்ட குதிரையையுடைய பாண்டவர் ஐவருடன் சினந்து நிலத்தைத் தம்மிடம் சூதாடி அபகரித்துக் கொண்டதால், தும்பையை மாலையாக அணிந்த துரியோதனன் முதலாகிய நூறு பேர்களும் போர் புரிந்த நாட்களில் எல்லாம் படைப்பிரிவினர் அனைவர்க்கும் நிறைவான உணவு அளவில்லாது கொடுத்தவனே!

’பால் தன் சுவை குறைந்து புளித்தாலும், சூரியன் தன் ஒளியைக் குறைத்து பகல் பொழுது இருண்டாலும், நான்கு வேதத்தில் சொல்லப்பட்ட ஒழுக்கம் மாறினாலும் மாறுபாடில்லாத உனைச் சுற்றியுள்ள மந்திரிகளுடனும், உறவினரோடும் முற்றிலும் நெடுங்காலம் வாழ்ந்து, மலைச்சாரலில் சிறிய தலைக் குட்டிகளையுடைய பெரிய கண்களையுடைய பெண் மான் தங்கள் இறுதிக் காலத்தில் அந்தணர் செய்தற்கரிய கடமையாகிய ஆகுதியாகப் பண்ணும் முத்தீ வெளிச்சத்தில் துயிலும் பொற்சிகரங்களையுடைய இமயமலையும், பொதியமலையும் போல எவ்வித மனச்சோர்வின்றி உறுதியாக நிற்பாயாக’ என்று சேரமான் பெருஞ்சோற் றுதியஞ் சேரலாதனை புலவர் முரஞ்சியூர் முடிநாகனார் வாழ்த்துகிறார்.

திணை: இப்பாடல் பாடாண்திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்பு களைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண்திணை ஆகும்.

’ஐம்பெரும் பூதத் தியற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் வலியுந் தெறலு மளியு முடையோய்’ என்று சேரமான் பெருஞ்சோற் றுதியஞ் சேரலாதனின் புகழ், வலிமையும், ’ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்’ என்று அவன் கொடைத் திறமும் சொல்லப்படுவதால் இப்பாடல் பாடாண்திணை ஆகும்.

துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்துவது செவியறிவுறூஉ துறை யாகும்.

’கறந்த பால் புளித்தாலும், பகல் இருட்டாக மாறினாலும், நால்வேத நெறி உலகில் நிகழாமல் போனாலும், நீயும் நின் சுற்றமும், நூற்றுவர் இறந்த பாரதப் போரில் இருபால் வீரர்களுக்கும் பெருஞ் சோறு வழங்கிய கொடை உள்ளம் மாறாமல் இருப்பீர்களாக’ என்று கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அறிவுறுத்துவதனால் இப்பாடல் செவியறிவுறூஉ துறையாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

புறநானூறு - 15. எதனிற் சிறந்தாய்?

பாடியவர் :கபிலர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

“விரிநூல் அந்தணர் விழவு தொடங்க, புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப”- தை நீராடல் நடைபெற்றது என்று குறிக்கின்றது பரிபாடல். (பரிபாடல்.11) விழாக்கள் சங்க காலத்தில் அந்தணர் கொண்டு தொடங்கப்பெற்றுள்ளது

 “ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பகர்ந்தவன்” சிவபெருமான் (கலித்தொகை.1)என்ற குறிப்பு கலித்தொகையின் வழி கிடைக்கின்றது. இத்தொடரின் வழியாக வேதங்களின் ஆறு அங்கங்களை ஓதி உணர்ந்தவர்கள் அந்தணர்கள் என்பது தெரியவருகிறது. அந்தணர் தீ வளர்த்தலை கலித்தொகையும் குறிப்பிடுகின்றது. “கேள்வி அந்தணர் கடவும் வேள்வி ஆவியின் உயிர்க்கும்” என்ற (கலித்தொகை.36) அடியின் வழியாக அந்தணர் வேள்வித்தீ வளர்ப்பர் என்தும், வேள்வித்தீ வளரக்கும் போது எழும் புகைபோல என் உயிர் அலைவுறும் என்று தலைவி பேசுவதும் இவ்வடிகளின் பொருளாகும். அந்திக் காலத்தில் அந்தணர் வேள்வி செய்வர் என்ற குறிப்பும் “அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து செந்தீச் செவ்வழல் தொடங்க” (கலித்தொகை 119) என்ற பாடலடியின் வழி தெரியவருகின்றது.

 சிறுபாணாற்றுப்படையில் நல்லியக்கோடனின் அரண்மனை பொருநர், புலவர், அந்தணர் ஆகியோருக்கு அடையா வாயிலாக விளங்கும் என்ற குறிப்பு கிடைக்கின்றது. (சிறுபாணாற்றுப்படை, 204) இதன் வழி அந்தணர்க்கு ஈவது அரசர் கடனாக இருந்துள்ளது என்பது வெளிப்படை. “கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வி” என்ற பெரும்;பாணாற்றுப்படை (பெரும்பாணாற்றுப்படை 315) அடிகள் அந்தணர் வேள்வி செய்தமையைக் குறிக்கின்றது. மதுரைக்காஞ்சியில் “ஓதல் அந்தணர் வேதம் பாட” என்ற (மதுரைக்காஞ்சி 656) குறிப்பு இடம்பெறுகின்றது. “அந்தி அந்தணர் அயர” என்று குறிஞ்சிப்பாட்டிலும் (225) ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது. “ஓதல், வேட்டல், அவை பிறர் செய்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறுபுரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி”  என்று அந்தணர்க்குரிய அறுதொழில்களைக் குறிக்கிறது பதிற்றுப்பத்து. (பதிற்றுப்பத்து, 24) “உரைசால் வேள்வி முடித்த கேள்வி, அந்தணர் அருங்கலம் ஏற்ப” (64) என்று மற்ற இலக்கியங்கள் காட்டிய அந்தண நெறியையே பதிற்றுப்பத்தும் காட்டுகின்றது.

 அந்தணர்ப் பள்ளியின் சிறப்பை மதுரைக்காஞ்சி பின்வருமாறு பாடுகின்றது.

  “சிறந்த வேதம் விளங்கப்பாடி
   விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
   நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி
   உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்
   அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
   பெரியோ மேஎய் இனிதின்  உறையும்
   குன்றுகுளின்றன்ன அந்தணர் பள்ளியும்”(
மதுரைக்கா ஞ்சி. 468-474)

என்ற பகுதியில் அந்தணர் பள்ளியின் சிறப்பு காட்டப்படுகின்றது சிறந்த வேதங்கள் விளங்கப் பாடும் அந்தணர்கள் இருக்குமிடம் அந்தணப்பள்ளி ஆகும். இங்குள்ள அந்தணர்கள் வேள்விகள் செய்து, பிர்மம் என்ற பொருளாகத் தாமே ஆகி உயர்ந்த தேவர் உலகத்தை அடையும் சிறப்பினை உடையவர்கள், அறநெறி தவறாதவர்கள், பல பெரியோர்கள் உடன் தங்கியிருக்கும் பேற்றினைப் பெற்றவர்கள் அந்தணர்கள் என்று அக்காலத்தில் அந்தணப் பள்ளி இருந்து நிலையை இவ்விலக்கியம் காட்டுகின்றது. “ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பகர்ந்தவன்” சிவபெருமான் (கலித்தொகை.1)என்ற குறிப்பு கலித்தொகையின் வழி கிடைக்கின்றது. இத்தொடரின் வழியாக வேதங்களின் ஆறு அங்கங்களை ஓதி உணர்ந்தவர்கள் அந்தணர்கள் என்பது தெரியவருகிறது. அந்தணர் தீ வளர்த்தலை கலித்தொகையும் குறிப்பிடுகின்றது. “கேள்வி அந்தணர் கடவும் வேள்வி ஆவியின் உயிர்க்கும்” என்ற (கலித்தொகை.36) அடியின் வழியாக அந்தணர் வேள்வித்தீ வளர்ப்பர் என்தும், வேள்வித்தீ வளரக்கும் போது எழும் புகைபோல என் உயிர் அலைவுறும் என்று தலைவி பேசுவதும் இவ்வடிகளின் பொருளாகும். அந்திக் காலத்தில் அந்தணர் வேள்வி செய்வர் என்ற குறிப்பும் “அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து செந்தீச் செவ்வழல் தொடங்க” (கலித்தொகை 119) என்ற பாடலடியின் வழி தெரியவருகின்றது.

 சிறுபாணாற்றுப்படையில் நல்லியக்கோடனின் அரண்மனை பொருநர், புலவர், அந்தணர் ஆகியோருக்கு அடையா வாயிலாக விளங்கும் என்ற குறிப்பு கிடைக்கின்றது. (சிறுபாணாற்றுப்படை, 204) இதன் வழி அந்தணர்க்கு ஈவது அரசர் கடனாக இருந்துள்ளது என்பது வெளிப்படை. “கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வி” என்ற பெரும்;பாணாற்றுப்படை (பெரும்பாணாற்றுப்படை 315) அடிகள் அந்தணர் வேள்வி செய்தமையைக் குறிக்கின்றது. மதுரைக்காஞ்சியில் “ஓதல் அந்தணர் வேதம் பாட” என்ற (மதுரைக்காஞ்சி 656) குறிப்பு இடம்பெறுகின்றது. “அந்தி அந்தணர் அயர” என்று குறிஞ்சிப்பாட்டிலும் (225) ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது. “ஓதல், வேட்டல், அவை பிறர் செய்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறுபுரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி”  என்று அந்தணர்க்குரிய அறுதொழில்களைக் குறிக்கிறது பதிற்றுப்பத்து. (பதிற்றுப்பத்து, 24) “உரைசால் வேள்வி முடித்த கேள்வி, அந்தணர் அருங்கலம் ஏற்ப” (64) என்று மற்ற இலக்கியங்கள் காட்டிய அந்தண நெறியையே பதிற்றுப்பத்தும் காட்டுகின்றது.

 அந்தணர்ப் பள்ளியின் சிறப்பை மதுரைக்காஞ்சி பின்வருமாறு பாடுகின்றது.

  “சிறந்த வேதம் விளங்கப்பாடி
   விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
   நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி
   உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்
   அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
   பெரியோ மேஎய் இனிதின்  உறையும்
   குன்றுகுளின்றன்ன அந்தணர் பள்ளியும்”(
மதுரைக்கா ஞ்சி. 468-474)

என்ற பகுதியில் அந்தணர் பள்ளியின் சிறப்பு காட்டப்படுகின்றது சிறந்த வேதங்கள் விளங்கப் பாடும் அந்தணர்கள் இருக்குமிடம் அந்தணப்பள்ளி ஆகும். இங்குள்ள அந்தணர்கள் வேள்விகள் செய்து, பிர்மம் என்ற பொருளாகத் தாமே ஆகி உயர்ந்த தேவர் உலகத்தை அடையும் சிறப்பினை உடையவர்கள், அறநெறி தவறாதவர்கள், பல பெரியோர்கள் உடன் தங்கியிருக்கும் பேற்றினைப் பெற்றவர்கள் அந்தணர்கள் என்று அக்காலத்தில் அந்தணப் பள்ளி இருந்து நிலையை இவ்விலக்கியம் காட்டுகின்றது.

அந்தணர் மரபுகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பார்ப்பார், ஐயர் என்ற பிரிவினரும் அந்தணர் என்ற மரபினரோடு இணைத்து எண்ணத்தக்கவர்கள் ஆவர். பார்ப்பார் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறன. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கம்  என்றுத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் போர்க்காலத்தில் பேணப்படுதலைப் புறநானூறு காட்டுகின்றது. புறநானூற்றில் பார்ப்பன வாகை என்ற துறையில் இருபாடல்கள் அமைகின்றன. அதில் 166 ஆம் எண்ணுடைய பாடல் ஆவூர் மூலங்கிழார் பாடிய பாடல் ஆகும். இப்பாடல் சோழநாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனைப் பாடியதாகும்.

   “வினைக்கு வேண்டி நீப+ண்ட
    புலப்புல்வாய்க் கலைப்பச்சை
     கவல்ப+ண் ஞாண்மிசைப் பொலிய
    மறம் கடிந்த அருங்கற்பின்
    அறம் புகழ்ந்த வலைசூடி
    சிறுநுதல் பேர் அகல் அல்குல் 
    சில சொல்லின் ;;;;;;;;;;;;;;பல கூந்தல்
    நிலைக்கு ஒத்தநின் துணைத்துணைவியர்
    தமக்கு அமைந்த தொழில்கேட்பக்
    காடு என்றா நாடு என்று ஆங்கு
    ஈர்ஏழின் இடம் முட்டாது
   நீர் நாண நெய்வழங்கியும்
   எண்நர்ணப் பல வேட்டும்
   கண் நாணப் புகழ்பரப்பியும்
   அருங்கடி பெருங்காலை
   விருந்துற்ற நின் திருந்து ஏந்துநிலை
   என்றும் காண்கதில் அம்ம”
 (புறநானூறு, 166)

என்ற இப்பாடலில் பார்ப்பன வெற்றி பாடப்பெற்றுள்ளது. இப்பாடலுக்குரிய பாட்டுடைத்தலைவனான அந்தணன் தோளில் நூலணிந்து அதன்மேல் கலைமானின் தோலை அணிந்தவன். இவனின் சில சொற்களையும் மாறாமல் அவனின் துணைவியர் கேட்கின்றனர். நீரைவிட நெய்யை அதிகமாக வழங்கி எண்ணில் அறிய இயலாத பல வேள்விகளைச் செய்து, வேள்விகளின் நிறைவில் நல்ல விருந்தினை அனைவருக்கும் அளித்துப் புகழ் கொண்ட இன்றைய நிலையை நாங்கள் என்றைக்கும் காணவேண்டும் என்று இப்பாடல் பார்ப்பன வாகை பாடுகின்றது. 305 ஆம் பாடலும் பார்ப்பான் :தூது சென்றதால் நாடுகளுக்குள் அமைதி நிலவியது என்ற குறிப்பினைத்தருகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

   பார்ப்பன குறுமகன் குடுமி வைத்திருந்ததை ஐங்குநுறூற்றின் இருநூற்றியிரண்டாம் பாடல் எடுத்துக்காட்டுகின்றது. கலித்தொகையில் பார்ப்பானை முன்வைத்து ஒரு அழகான அகக்காட்சி புனையப்பெற்றுள்ளது.

  “அம்துகிற் போர்வை அணிபெறத் தைஇ நம்
  இன்சாயல் மார்பன் குறிநின்றேன் யானாகத்
  தீரத் தறைந்த தலையும் தன் கம்பலும்
  காரக்குறைந்து கறைப்பட்டு வந்து நம்
  சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானைத்
  தோழிநீ போற்றுநி என்றிஅ வன் ஆங்கே
  பாராக் குறழாப் பணியாப் “பொழுதன்றி
  யார் இவன் நின்றீர் எனக் கூறிப் பையென
  வைகாண் முதுபகட்டின் பக்கத்திற் போகாது
  தையால் தம்பலம் தின்றியோ என்று தன்
  பக்கு அழித்துக் கொண்டீ எனத்தரலும் யாதொன்றும்
  வாய்வாளேன் நிற்கக் கடிது அகன்று கைமாறிக் 
  கைப்படுக்கப்பட்டாய்ச்சிறுமிநீ மற்றுயான்
  ஏனைப் பிசாசு அருள் என்னை நலிதரின்
   இவ்வ+ர் பலிநீ பெறாமல் கொள்வேன் எனப்
  பலவும் தாங்காது வாய்பாடி நிற்ப
  முதுபார்ப்பான் அஞ்சினனாதல் அறிந்து யான்
  எஞ்சாது ஒருகை மணற்கொண்டு மேல்தூவக்
  கண்டே கடிது அரற்றிப் பூசல்தொடங்கினன் ஆங்கே”(
கலித்தொகை,65)

என்ற இந்தப் பாடல் தலைவி தலைவனைச் சந்திக்க விடாமல் ஆடிய கூத்தாகச் சுட்டப்பெறுகின்றது.

 மொட்டைத்தலையும் முக்காடும் n;காண்டு இந்த ஊரில் சுற்றித்திரியும் கிழட்டுக் கூனல் விழுந்த பார்ப்பான் ஒருவன்  அன்றைக்கு என்னை வழி மறித்தான். நான் தலைவனைக்காண போர்வை ஒன்றைப் போர்த்தியபடி இரவு நேரத்தில் நின்றிருக்க அவன் என்னைக் குனிந்துப் பார்த்து நேரங் கெட்ட நேரத்தில் இங்கு நிற்கும் நீங்கள் யார்? என வினவினான். அதன் பின் வெற்றிலை தின்கிறாயா என்று என்னைக் கேட்டான்;. நான் பதில் பேசாது நிற்கவே என்னிடம் அவன் மேலும் பேச்சினை வளர்த்தான். நீ பெண் பிசாசு. யான் ஆண் பிசாசு. என் காதலுக்கு நீ இரங்கு என்று ஏதோ ஏதோ அவன் பேசினான். அந்நேரத்தில் அவன்மீது மணலை அள்ளி வீசிவிட்டு நான் அவனிடமிருந்துத் தப்பி வந்தேன். அவன் இந்நிகழ்ச்சியை ஊர் முழுவதும் n;;சால்லிக்n;காண்டு அலைகிறான். நான் தலைவனைக் காணமுடியாமல் ஆயிற்று. என்னைப் பற்றி ஊரார் பேசும்படியும் ஆயிற்று என்றுப் பார்ப்பானை முன்வைத்து இக்கலித்தொகைப் பாடல் பின்னப்பெற்றுள்ளது.

 ஒரு பார்ப்பான் கொலை செய்யப்பட்ட செய்தியை அகநானூறு எடுத்துரைக்கின்றது.

  “தூதுஒய் பார்ப்பான் மடிவெள் ஓலைப்
   படையுடைக் கையர் வருதிறம் நோக்கி
   உண்ணா மருங்குல் இன்னோன் கையது
   பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே
   தடிந்துஉடன் வீழ்ந்த கடுங்கண் மழவர்
   திறன்இல் சிதாஅர் வறுமை நோக்கிச்
   செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்
   காடுவிடு குருதி தூங்குகுடர் கறீஇ”(
 அகனாநூறு, 397)

என்ற பாடலில் இக்குறிப்பு இடம்பெறுகின்றது. தூதாக வந்த ஒரு பார்ப்பானை அவன் மடியில் பொன் வைத்திருக்கலாம் என்று எண்ணி எயினர் கொன்றுவிடுகின்றனர் கொன்றபின்பு அப்பார்ப்பான் மடியைப் பார்த்த அவர்கள் அவனிடம் ஏதும் இல்லாமை கண்டும் அவனின் வறுமை சார்ந்த ஆடையைக் கண்டும் அவனைக் கொன்றது தேவையற்றது என உணர்ந்து அப்படியே அவனை விட்டுவிட்டுச்சென்றுவிட்டனர். அவனது உடலில் இருந்து குடல் தொங்கிய வண்ணம் இருக்க அதனை ஒரு  நரி உண்ணக் கொடுமையான வழியில் தலைவன் பயணிக்கவேண்டும் என்று இப்பாடல் குறிப்பிடுகின்றது, பார்ப்பார் தூது செல்கின்றபோது ஏற்படும் இன்னலை இப்பாடல் எடுத்துரைக்கின்றது.

 மொத்தத்தில் பார்ப்பார் ;அந்தணர் ஆகிய சொற்கள் குறுந்; தொகை நற்றிணை போன்ற பனுவல்களில் இடம்பெறாமல இருப்பது அவ்விலக்கியங்கள் காலத்தால் முந்தியதாக  அல்லது ஆரியவர் வருகை இடையீடுபடாத காலத்தில் வரையப்பெற்றிருக்க வாய்ப்புண்டு என்னறு கொள்ளச் செய்கின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

இவ்விவாதத்தில் கலந்து கொண்ட பெரியவர்,

தாம் 28 ஆகமங்களையும் முழுமையாக படித்துள்ளதாக கூறுகின்றார்.

28 #ஆகமங்கள் என்பது, காமிகம், யோகஜம், சிந்தியம், அஜிதம், தீப்தம், சூஷ்மம், சஹஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்புவம், அநிலம், வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம், ப்ரோத்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், ஸர்வோக்தம், பாரமேஸ்வரம், கிரணம், வாதுளம் என்ற இவைகளே.

இந்த #ஆகமங்கள் ஒவ்வொன்ரும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்களைக் கொண்டது.இந்த நான்கு பாதங்களை கொண்டதே முழுமையான ஒரு ஆகமம்.

15ம் நூற்றாண்டு சைவஅருளாளர் ஸ்ரீ #மறைஞானசம்பந்தரின்
#சைவசமயநெறி நூலின் படி,

1)காமிகம் -பரார்த்தம்.
2)யோகம் -லட்சம்,
3)சிந்தியம் -லட்சம்,
4)காரணாகமம் -கோடி,
5)அஜிதாகமம் -நியுதம்
6)தீப்தம் -நியுதம்
7)சூக்ஷமம் -பதுமம்,
8)சஹஸ்ராகமம் -சங்கம்,
9)அம்சுமான் -ஐந்து லட்சம்,
10)சுப்ரபேதம் -மூன்று கோடி,
11)விஐயம் -மூன்று கோடி,
12)நிர்வாஸத்துக்கு -ஒரு கோடி,
13)சுவாயம்புவம் -ஒன்றரைக் கோடி,
14)அநிலம் -முப்படினாயிரம்,
15)வீரத்துக்கு -நியுதம்,
16)ரௌரவம் எட்டர்புதம்
18)மகுடம் -லட்சம்,
19)விமலம் -மூன்று லட்சம்
20)சந்திரஞானம் -மூன்று கோடி,
21)முகபிம்பம் -லட்சம்,
22)ப்ரோத்கீதம் -மூன்றுலட்சம்,
23)லளிதம் -எண்ணாயிரம்,
24)சித்தம் -ஒன்றரைக் கோடி,
25)சந்தானம் -ஆறாயிரம்,
25)சர்வோக்தம் -இரண்டு லட்சம்,
26)பாரமேஸ்வரம் -பன்னிரண்டு லட்சம்,
27)கிரணம் -ஐந்து கோடி,
28)வாதுளம் -லட்சம்.

என்று ஒவ்வொரு ஆகமமும் லட்சம், கோடி ,கோடிக்கு மேல் க்ரந்தங்களை (பாடல்களை) கொண்டுள்ளது.

இதில் ஆகமம் முதன்முதலாக உபதேசிக்கப்பட்ட காலத்தில் கூட, சிவபேதம், ருத்ரபேதம் என்று ஒரு ஒரு ஆகமமே ஒருவருக்கு வழி வழியாக உபதேசிக்கப்பட்டுள்ளது.

#திருமூலர் கூட ஒன்பது ஆகமங்களைதான் உபதேசம் பெற்றுள்ளார்.

சைவசித்தாந்த ஆசிரியர்கள் உள்பட, அவர்கள் பின் வந்த அருளாசிரியர்கள் கூட தாங்கள் செய்த அவையடக்கம் நூல் பகுதியில், தெரிந்தவரை இறைவன் அருளாள் ஆகமத்தை புகன்றுள்ளதாகவே கூறுகின்றார்கள்.

ஸ்ரீ அகோரசிவாச்சாரியார், ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார்களே 28 ஆகமங்களையும் முழுமையாக படித்ததாக கூறவில்லை.

#ஞானாமிர்தம் என்ற சைவசித்தாந்த நூலை 12 ம் நூற்றாண்டில் பாடிய ஸ்ரீ வாகிச முனிவர், ஆகமம் என்ற பெருங்கடலில் ஞானம் என்ற மத்தைக் கொண்டு கடைந்து இயன்றவரை பாடியுள்ளேன் என்றே கூறியுள்ளார்.

ஒரு மனிதன் தன் வாழ்வில் 28 ஆகமங்களையும் முழுமையாக படிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.

மேலும் நம்மிடம் 28 ஆகமங்களும் முழுமையாக இல்லை.பல ஆகமங்கள் கிடைக்கவே இல்லை.கிடைத்த சில ஆகமங்களும் பகுதி பகுதியாகவே உள்ளன.

நம்மிடம் தற்பொழுது இருக்கும் ஆகமங்கள்,

1)காமிகாமம் பூர்வ, உத்திர பாகம்,
2)காரணாகமம் பூர்வ உத்திர பாகம்,
3)சகஸ்ராகமம் -சிலபகுதிகள் மட்டும்,
4)ம்ருகேந்திர ஆகமம் -வித்யா, யோக பாதம்
5)பௌஷ்கர ஆகமம்,
6)அஜிதாகமம் -கிரியா பாதம் மட்டும்.
7)சுப்ரபேதாகமம்,
8)ரௌரவ ஆகமம் -வித்யா பாதம் .மட்டும்,
9)மாதங்க பரமேஸ்வர ஆகமம் -வித்யா பாதம் மட்டும்,
10)மகுடாகமம் -கிரியாபாதம் மட்டும்,
11)கிரணாகமம்,
12)வாதுளாகமம் -சிலப்பகுதி.
13)சூக்ஷாமாகமம் -சிலப்பகுதி.
14)தீப்தாகமம் -சிலப்பகுதி.

இவையன்றி ஆகம பத்ததி நூல்கள் பல என உள்ளன.மேலும் ஆகமங்க சுவடிகள் கிடைக்கலாம்.

கிடைத்தவரை உள்ள ஆகமங்களையே, ஒரு மனிதன் முழுமையாக படிக்கவே ஒரு ஆயுள் போதாது. இதில் கிடைக்காத ஆகமமும் சேர்ந்த்து 28 ஆகமங்களையும் முழுமையாக படித்துள்ளேன் என்பது எங்கனம் சாத்தியம்? சிவபெருமானுக்கே வெளிச்சம்.

மேலும், இவ்விவாதத்தில் பாடல்பெற்ற தலங்களாகிய 274 கோயில்கள் மட்டுமே ஆகம கோயில் என்கிறார் பெரியவர்.

அவ்வாறாயின், பாடல் பெற்ற தலங்களில் வராத,
வழுவூர் சிவாலயம்,
திருபுவனம் சிவாலயம்,
சங்கரன் கோயில் சிவாலயம்,
வயலூர் சிவாலயம்,
தென் காசி சிவாலயம்,

மற்றும் #வைப்புத்தலங்கள், கிராமத்தில் உள்ள சிவாலயங்கள் .இவையெல்லாம் ஆகம கோயில் இல்லையா?

மன்னர்கள் எழுப்பிய கோயில்கள் அனைத்துமே #ஆகமவிதிப்படி எழுப்பப்பட்ட கோயில்களே,

கடந்த ஐம்பது ஆண்டு திராவிட ஆட்சியில், அறமற்ற துறை சில கோயில்களை இடித்தும் பெயர்த்தும் செய்ததனால் அவை ஆகம கோயில்கள் அல்ல என்பதாகிவிடுமா?

ஓங்கி பேசினால் உண்மை என்று நம்புகிறான் உணர்ச்சியவயப்படும் தமிழன்.
#சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேயசிவம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

वेदोखिलो धर्ममूलं!!

நாலாரணப் பசுவை நாடிக் கறந்தளித்த
பாலாகுமென்று பாராட்டுமே - நூலாய்ந்த
வள்ளுவன் தந்த மறுவில் திருக்குறளை
உள்ளுவந்து ஓதும் உலகு.
-'கவிமணி' தேசிக விநாயகம்பிள்ளை

Jataayu B'luru

வேதம் பசு; அதன் பால் மெய்யாகமம்; நால்வர்
ஓதும் தமிழ் அதனின் உள்ளுறு நெய் - போதமிகு
நெய்யின் உறுசுவையா நீள் வெண்ணெய் மெய்கண்டான்
செய்த தமிழ் நூலின் திறம்.

- மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் நூலுக்கான பாயிரத்தில் உள்ள வெண்பா

[போதமிகு - ஞானம் நிறைந்த; நீள்வெண்ணெய் - திருவெண்ணெய்நல்லூரைக் குறித்தது]

சைவநெறி வேதமார்க்கம் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கும் இந்த அழகிய வெண்பாவைப் பார்த்த உடனே பகவத்கீதைக்கான பாரம்பரிய தியான சுலோகம் தான் நினைவில் வருகிறது (வைஷ்ணவீய தந்த்ரஸாரம் என்ற நூலில் உள்ளது).

ஸர்வோபனிஷதோ³ கா³வோ
தோ³க்³தா⁴ கோ³பாலநந்த³ன꞉।
பார்தோ² வத்ஸ꞉ ஸுதீ⁴ர்போ⁴க்தா
து³க்³த⁴ம்ʼ கீ³தாம்ருʼதம்ʼ மஹத் ॥

உபநிஷதங்கள் அனைத்தும் பசுக்கள்
கறப்பவனோ ஆயர்குலச் செல்வன் கோபாலன்.
கன்றுக்குட்டி பார்த்தன்.
கறந்த பால் – புவியில் நல்லறிவுடையோர் அனைவரும் அருந்தும் கீதையெனும் பேரமுதம்.

வேதப்பசு என்ற இதே உருவகத்தை கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை திருக்குறளுக்கும் கூறுகிறார்.

நாலாரணப் பசுவை நாடிக் கறந்தளித்த
பாலாகுமென்று பாராட்டுமே - நூலாய்ந்த
வள்ளுவன் தந்த மறுவில் திருக்குறளை
உள்ளுவந்து ஓதும் உலகு.

[நாலாரணம் - நால் +ஆரணம், நான்கு வேதங்கள்; மறுவில் - குற்றமில்லாத]

மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த மூன்று பாடல்கள். ஒரேவிதமாக, வேதங்களையே ஞானத்தின், அறிவுப்பாரம்பரியத்தின் ஊற்றாகக் கூறுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

நாவினில் வேதமுடையள் - கையில்
நலந்திகழ் வாளுடையாள்

என்று பாரத அன்னையையும்,

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு

என்று தமிழ்நாட்டையும் பாரதியார் ஒரே விதமாகப் புகழ்ந்து பாடுகிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

புறநானூறு - 305. சொல்லோ சிலவே!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard