முசிறி பட்டினம் மோசடி தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சிகள்
கொச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் கொடுங்கல்லூருக்கு அடுத்து உள்ளது பட்டினம். பெயர்தான் பட்டினமே தவிர ஊர் சாதாரண கிராமமாகவே உள்ளது.
தற்போது அங்கே அகழாய்வு மேற்கொண்டிருப்பவர் முனைவர் பி.ஜே.செரியன் அவர்கள். இதற்கு முன்னரே 2007-ஆம் ஆண்டிலும், 2008-ஆம் ஆண்டிலும் அகழாய்வுகள் நடந்துள்ளன. 2007-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வு குறித்து அதில் கலந்துகொண்ட (?) வீ.செல்வகுமார், ஆவணம்,2008 இதழில் ஒரு கட்டுரை அளித்துள்ளார். அதில் காணப்படும் செய்திகளின் முக்கியக்கூறுகள் வருமாறு:
சங்க இலக்கியம், மற்றும் கிரேக்க,ரோமானிய இலக்கிய்ங்களில் குறிப்பிடப்படும் முசிறி என்னும் சங்ககாலத்துறைமுகம் இந்தப்பட்டணம் ஊரே.
அகழாய்வில் ஐந்து காலகட்டப் பண்பாட்டு நிலைகள் காணப்பட்டன.
கி.மு. 500 – கி.மு. 2 நூ.ஆ. : முதல் கட்டம் (இரும்புக்காலம்)
கி.மு. 2 - கி.பி. 4 நூ.ஆ. : 2-ஆம் கட்டம் (வரலாற்று. கா)
கி.பி. 5 - கி.பி 10 நூ.ஆ. : 3-ஆம் கட்டம் (இடைக்காலம்)
கி.பி. 10 - கி.பி. 15 நூ.ஆ. : 4 ( தடயங்கள் இல்லை )
கி.பி. 15 - கி.பி. 19 நூ.ஆ. : 5-ஆம் கட்டம் (நவீன காலம்)
படகுத்துறையும், படகு கட்டப்பயன்படும் மரத்தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒற்றை மரத்தில் குடைந்து உருவாக்கப்பட்ட படகின் அடிப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.