1993 முதல் 1997 வரையிலான காலகட்டத்தில் டாக்டர் சாஜன்பால், செல்வகுமார், பி.ஜே. செரியன் ஆகியோர் தொடர்ந்து அகழாய்வு மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களின் ஆய்வுகள் பட்டினம் - முசிறியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியிருக்கிறது என்றார்.
2011 நவம்பர் 12 ஆம் தேதி புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்
பட்டணம் தளம் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் பருருக்கு அருகில் அமைந்துள்ளது. பெரியார் நதிப் படுகையில்
கேரள வரலாற்றாய்வுக் கழகம், இயக்குனர் பி.ஜெ.செரியன் என்ற தன்னாட்சி அமைப்பு எர்ணாகுளத்திலிருந்து 26 கீமீ தூரத்தில் உள்ள பட்டணம் எனும் இடத்தில் நடத்தி பல பொருட்கள் கிடைத்தாம். சங்க கால முசுறி தான் பெரியாறு ஓரமுள்ள பட்டணம் எனும் இடத்தில் கிடைத்துள்ள சில பொருட்கள் கொண்டு கேரள வரலாற்று நிறுவனம் கதை பரப்பி வருகிறது. இதை பல வரலாறு, தொல்பொருள் அகழ்வாய்வு அறிஞர்கள் ஆதாரமின்றி கூறுவது எனக் கண்டித்து வருகின்றனர்.
கேரளா வரலாற்று ஆசிரியர்கள் பேராசிரியர் M.G.S.நாராயணன், இந்திய வரலாற்று குழுமத்தின் முந்நாள் தலைவர், இந்தியத் தொல்பொருள் துறை முந்நாள் இயக்குனர் திரு. நாகசாமி, போன்றோர் பட்டண அகழ்வாய்வு இடம் சென்று காண, அங்கு ஒரு பெரும் ஊர் போன்றவை ஏதும் கிடைக்கவில்லை, ஆறு குழிகள் மட்டுமே காட்டுகின்றனர், அதில் கிடைத்ததாக பானை ஓடு, முற்காலச்சேர அரசர் செப்பு நாணயம், மணிகள் Beads) இரும்புப்பொருள்கள் (Iron objects) தங்கத்தினால் ஆன அணிகலன்கள், கார்னேலியன், படிகம் மற்றும் பெரைல் (பச்சைநிறக்கல்), ஆம்போரா என்பது மதுவைச் சேமித்து வைக்க சாடி, எடுத்துச் செல்லவும் பயன்படும் ஒரு சுடுமண் சாடி, ரோமானியப் பானை - டெர்ரா சிகிலாட்டா, ரோமானியர்களின் கண்ணாடி வகைக் கிண்ணங்களின் துண்டுகள் எனக் காட்டிட, இதே பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளதே - எப்படி இவ்வுரை முசிறி என்பீர் என்பதற்கு முறையான பதில் இல்லை.