Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பேராசிரியர். ராஜவேலு அணுகுமுறை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
பேராசிரியர். ராஜவேலு அணுகுமுறை
Permalink  
 


இப்பதிவை கவனமாகப் படியுங்கள். இது 'தினத்தந்தி' புகழ் திரு ராஜவேலுவைப் பற்றிய பதிவு. அறிவியல் அணுகுமுறையை நம்புகிறவர்கள் நான் சொல்வது சரி என்று பட்டால் பரவலாகப் பகிருங்கள். குறிப்பாக, திராவிட, மார்க்சிஸ்டு வட்டங்களில் பகிருங்கள். பாசிச அணுகுமுறைக்கும் அறிவியல் அணுகுமுறைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மார்க்சியர்களுக்கே சொல்லிக் கொடுக்க வேண்டிய பரிதாபம் தமிழகத்தில் மட்டுமே நிகழும். திரு ராஜவேலுவைத் தூக்கிப் பிடிப்பவர்கள் மத்தியிலும் நிச்சயம் பகிருங்கள்.

திரு கலைக்கோவன் தமிழகக் குடைவரைக் கோவில்களைப் பற்றி அகலமாகவும் ஆழமாகவும் எழுதியவர். அவர் எழுதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிடுகிறார்.

ஆனையூர் குடைவரை என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதே இடத்தைப் பற்றி கே வி சௌந்தரராஜன் வாடிக்கோட்டை என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரை எழுதியுள்ளார். ஆனையூர் என்பது குடைவரை இருக்கும் இடத்தின் பெயர். வாடிக்கோட்டை என்பது அருகில் இருக்கும் ஊரின் பெயர் - அழகர்மலை, மதுரை என்று அழைப்பதில்லையா அதே போல. இந்த இரண்டு கட்டுரைகளையும் படித்த திரு ராஜவேலுவும் அவர் நண்பரும் இரண்டும் வெவ்வேறு குடைவரைகளைப் பற்றிப் பேசுவதாக நினைத்துக் கொண்டு அவர்கள் எழுதிய 'தமிழ்நாட்டுக் குடைவரைக் கோவில்கள்' என்ற புத்தகத்தில் ஆனையூர் குடைவரை என்று ஒரு தலைப்பிலும் வாடிக்கோட்டை என்ற இன்னொரு தலைப்பிலும் எழுதியுள்ளனர். ஒரே புத்தகத்தில் ஒரே இடத்தைப் பற்றி இரண்டு தலைப்புகளில் இரண்டு கட்டுரைகள் - வெவ்வேறு இடங்களாக நினைத்துக் கொண்டு! இடங்களுக்குப் போகாமலே எழுதியிருக்கிறார்கள் என்பது வெளிப்படை.

71656855_3611041648921993_35421179233865

திரு ராஜவேலு இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். தன் புத்தகம் நுண்ணிய ஆய்விற்கு உட்படுத்தாத மேலோட்டமான ஓர் அறிமுக நூல் என்றும் அதை வழிகாட்டி நூலாகவே பயன்படுத்த முடியும் என்று சொல்லியிருக்கிறார். குறுகிய காலத்தில் எழுதப் பட்டதென்றும் கூறியிருக்கிறார். வழிகாட்டி நூல் தவறாக வழிகாட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது என்றாலும், இதை தவிர்க்கக்கூடிய தவறு என்றே எடுத்துக் கொள்வோம்.

71643121_3611042892255202_39566445874260

நான் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான். ஒரு சிறிய வழிகாட்டி நூலை அவசரப்பட்டு எழுதும் போதே திரு ராஜவேலு போன்றவர்கள் தவறு செய்ய முடியும் என்றால், 'கீழடி நாகரிகம் இந்திய வரலாற்றையே புரட்டிப் போடும்' என்ற பெருங்கருத்தை அவசரப்பட்டு அறிவித்தால் அது மிகப் பெரிய தவறாக முடிய வாய்ப்பிருக்காதா?

71643121_3611042892255202_39566445874260

இவர் சிறிய புத்தம் எழுதும் போது செய்த அதே வழிமுறைதான் இப்போதும் கையாளப்பட்டிருக்கிறது. கீழடியில் கிடைத்த தகவல்கள் 1. நுண்ணிய ஆய்விற்கு உட்படுத்தவில்லை. 2. குறுகியகாலத்தில் எந்தப் பெரிய வல்லுனர்களையும் கலந்தாலோசிக்காமல் வெளியிடப்பட்டிருக்கின்றன. 3. முழுமையாக அகழ்வாய்வாளர்கள் அறிக்கை தருவதற்கு முன்பே வெளியிடப்பட்டிருக்கின்றன.

சில கேள்விகள்:

1 இதில் தவறுகள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா இல்லையா என்று கேட்கக் கூடாதா?

2. அதைப் பிறப்பால் பிராமணனாகப் பிறந்த ஒருவன் கேட்டால் அவனை பார்ப்பான், சமஸ்கிருதத்திற்கு வால் பிடிக்கிறவன் என்று சொல்வது சரியாகுமா?
3. அது பாசிச அடக்குமுறையில்லையா?

பரவலாகப் பகிருங்கள்!__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நியூஸ் 18 கீழடி விவாதம் -தமிழ்நாட்டு அறிஞர்களின் அறிவு வறட்சி

நேற்று நடந்த விவாதத்தில் நான் திரு வெங்கடேசனைக் குறை சொல்ல மாட்டேன். அவர் அரசியல்வாதி. கீழடி அரசியல் அவருக்குப் பிழைப்பு. ஆனால் ராஜவேலு அவர்கள் தொல்லியல் துறையில் பேராசிரியராக இருந்திருக்கிறார். அவர் பேச்சுத்தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. கரிமப்பகுப்பாய்வு பற்றிய இப்படி ஒரு புரிதலை வைத்துக் கொண்டு இவர் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்திருப்பார்?

நான் என்னுடைய வாதத்தை மறுபடியும் தெளிவாக வைக்கிறேன்.

1. கீழடியில் பகுப்பாய்வு செய்யப்பட்டது கரித்துண்டு. கரித்துண்டின் வயது என்ன என்பதுதான் கண்டறியப்பட்டது. அதன் வயதை சுற்றியிருக்கும் பொருட்கள் மீது ஏற்ற முடியாது.
2. ஏன் அவ்வாறு சொல்கிறேன்? நான் சொல்லவில்லை. அகழ்வாராய்வு பாடப்புத்தகம் சொல்கிறது? We can never date archaeological sites by simple equivalences. The radiocarbon lab, for instance, takes a chunk of charcoal and tells you how long ago that tree died. By itself, this date says nothing important about your site. However, if we can show that the charcoal came from a tree used as a roof beam in a pueblo, then we have a date that matters – page 90, Archaeology, Kelly and Thomas. எனவே கரித்துண்டின் வயது பொருட்கள் கிடைத்திருக்கும் தளம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருக்க முடியாது என்ற தகவலை மட்டும் அளிக்கிறது. அது நிச்சயமாக தளத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாவற்றிற்கும் கரித்துண்டின் வயதுதான் என்று சொல்லவில்லை.
3. இன்னொன்று. அகழ்வாராய்ச்சியின் அடிப்படை விதிகள் இவை:
Archaeological stratigraphy is based on a series of axiomatic principles or “laws”. They are derived from the principles of stratigraphy in geology but have been adapted to reflect the different nature of archaeological deposits. Harris notes two principles that were widely recognised by archaeologists by the 1970s:
The principle of superposition establishes that within a series of layers and interfacial features, as originally created, the upper units of stratification are younger and the lower are older, for each must have been deposited on, or created by the removal of, a pre-existing mass of archaeological stratification.
The principle that layers can be no older than the age of the most recent artefact discovered within them. This is the basis for the relative dating of layers using artefact typologies.

அதாவது, ஒரு கலைக்கப்படாத அடுக்கில் (கலைக்கப்படாத என்பது முக்கியமானது) மேல் தளங்கள் வயதில் இளையவை கீழ்த்தளங்கள் வயதில் மூத்தவை என்பது முதல் விதி. இரண்டாவது விதி ஓர் அடுக்கின் வயது அதில் ஆக இளையதான பொருளின் வயதாகத்தான் இருக்க முடியும். இந்த விதி தெளிவாக ஓர் அடுக்கில் இருக்கும் எல்லாப் பொருட்களும் ஒரே வயதாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்கிறது.

4. இந்த விதிகளை வைத்துக் கொண்டு கீழடியைப் பார்ப்போம். நான்காம் கட்டத்தில் அகழ்வாய்வு செய்த பகுதி கலைக்கப்படாததா? இது அரசு அகழ்வாராய்ச்சி அறிக்கை சொல்வது:
In fact, the top portion was completely filled and packed with cart load of ceramic tiles and to everyone’s surprise an almost full shape like Black and red ware vessel was found embedded. The clear cut marks vertically on the western end was suggestive of the dig at a later period and dumped with such huge amount of discarded potsherds. Rest of that level running correspondingly on the northwest, south and east was of high compact yellowish gritty clay sterile deposit with few sherds and brickbats. The large pieces found over the lower rings in full shapes indicate the crumbled nature of the upper rings of the well probably crushed due to heavy loading and dumping of the unwanted materials thrown in to the well due to its non-utility.
எனவே நான்காம் கட்ட அகழ்வாய்வு செய்யப்பட்ட பகுதி கலைக்கப்பட்ட பகுதி என்பது தெளிவு. எனவே மேலே சொன்ன முதல் விதி இங்கு பொருந்துமா என்பதே கேள்விக்குறி. சரி பொருந்தும் என்றே வைத்துக் கொள்வோம். அடுத்த விதிக்கு வருவோம்.
5. பிராமி எழுத்துகள் கொண்ட பானைத்துண்டுகள் எந்த தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன என்பது தெரியவில்லை. கடைசித் தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டது என்றே வைத்துக் கொள்வோம். இத்தளத்தின் காலம் என்ன? அறிக்கை சொல்கிறது:
So the chronology of this site keeladi with three periods could be scientifically fixed between 6th century BCE and 11, 12th century CE. In this context, period-I represented the cultural settings of the site from 6 century BCE to 3rd century BCE. Period-II existed between 3rd century BCE and 4, 5th century CE, while the last phase, period-III consituted the finds belonging to date from 4, 5th century CE t0 11, 12th century CE. Hence period-I is the earliest phase found at the lower level of the deposit and consequently the other two over it.

இரண்டாம் விதிப்படி அடித்தளத்தின் வயது கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்று அரசு அறிக்கையே சொல்கிறது. எனவே கரித்துண்டின் வயது அதைச் சுற்றியிருக்கும் பொருட்களுக்கு ஏற்ற முடியாது. அவற்றின் காலகட்டத்தை வேறு விதமாகத்தான் கண்டுபிடிக்க வேண்டும். அரசு அறிக்கை கொடுத்த கால அளவு சரி என்று வைத்துக் கொண்டாலும் பானைத்துண்டுகளின் வயது மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை என்றுதான் சொல்ல முடியும்.

6. பானைத்துண்டுகளின் வயதும் ஆறாம் நூற்றாண்டுதான் என்று சொல்வதற்கு நாம் எத்தனை தர்க்கரீதியான தாண்டல்களை நிகழ்த்த வேண்டும் என்பதைப் பாருங்கள்.
1. முதலில் தளம் கலைக்கப்பட்டதல்ல என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பிராமி எழுதப்பட்ட கீறல்கள் அடித்தளத்தில் கிடைத்தன என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. அவை கரித்துண்டிற்கு மிக அருகாமையில் கிடைத்ததென்று வைத்துக் கொள்ள வேண்டும்.
4. கரித்துண்டின் வயதை பானைக்கீறல்களுக்கு ஏற்ற வேண்டும்
5. தளத்தில் கிடைத்த எல்லாப் பொருட்களுக்கும் வயது கி மு ஆறாம் நூற்றான்டு என்று சொல்ல வேண்டும்.
6. தளத்தின் வயது கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்று அரசு அறிக்கை சொல்வது கரித்துண்டு கிடைத்த இடத்திற்கு பொருந்தாது என்று கொள்ள வேண்டும்.

இத்தாண்டல்களைக் கேள்வி கேட்பவர்கள் மட்டுமே அறிவியல் சார்பாகப் பேசுகிறவர்கள்.

ஆனால் நேற்று விவாதத்திற்கு வந்திருந்த பேராசிரியர்களுக்கு அறிவியல் பூர்வமான வாதம் என்றால் என்ன என்பதே தெரியவில்லை. திரு ராஜவேலு உலகம் முழுவதும் அகழ்வாராய்ச்சியாள்ர்கள் கரித்துண்டின் வயதைத்தான் சுற்றுபுறத்திற்கும் அளிக்கிறார்கள் என்று கூசாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். இது பொது அறிவிற்கு புறம்பானது, அறிவியலையே இழிவு செய்வது என்ற புரிதல் கூட அவருக்கு இல்லை. திரு ராஜேந்திரன் ‘ராஜவேலுவிற்குத் தெரியுமா? உனக்குத் தெரியுமா/’ என்று கேட்டார். இவர் பேராசிரியர் என்று சொல்லிக் கொள்வதே அப்பதவிக்கு இழுக்கு. பேராசிரியர்கள் சட்டாம்பிள்ளைகள் அல்ல. கேள்வி கேட்காதே என்று சொல்லி அடக்குவதற்கு. பதில் தெரியவில்லையென்றால் தெரியவில்லை என்று சொல்ல தைரியம் வேண்டும்.

இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் போதா என்றுதான் நான் சொல்கிறேன். அறிவியலின் அடிப்படை தெரிந்த எல்லோரும் அவ்வாறுதான் சொல்வார்கள்.

தமிழ்நாட்டின் கம்யூனிஸ்டுகள் மார்க்சை மறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. திராவிட இயக்கத்தினருக்கும் அறிவியல் அணுகுமுறைக்கும் இடையே இருக்கும் இடைவெளி பெரியாருக்கும் பிராமணர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை விட அதிகம். ஆனால் தமிழ்நாட்டில் இவ்விருதரப்பினரையும் தவிர அறிவியல் அணுகுமுறையை ஆதரிக்கும் சிலராவது இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கக்கூடாது – தமிழகத்திற்கு என்று தனி அறிவியல் விதி முறைகள், அணுகுமுறைகள் இருக்கிறது என்று நினைத்தால் ஒழிய. அப்படி வாயை மூடிக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் மொழி வெறி பிடித்தாட்டுகிறது என்றுதான் பொருள்.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வைகை நதியைப் பற்றி நான் சொன்னதை எந்தப் புரிதலும் இல்லாதவர்கள்விமரிசனம் செய்கிறார்கள். இன்றைய நதியைப் போல அன்றும் இருந்திருக்கும் என்று நான் சொல்லவில்லை. அன்று இன்றை விட நீரோட்டம் நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் நதியின் நீரை பயன்படுத்த அன்று தொழில் நுட்பமும் கிடையாது. மக்கள் தொகையும் கிடையாது. நதி நாகரிகம் என்பது பெருநதிகளில் கரைகளிலேயே ஏன் உருவானது? நாகரிகங்களுக்கு உபரி வருமானம் நிச்சயம் அவசியம். அது பெரும் மக்கள் தொகை வாழ உபரி வருமானம் அளித்தால்தான் நாகரிகம் உருவாக முடியும். வைகை மிகச் சிறிய நதி. அன்றுள்ள உபரி வருமானத்தை வைத்துக் கொண்டு பெரும் தனி நாகரிகத்தைக் கட்டமைக்க வாய்ப்புகள் குறைவு. தமிழன் அப்படிச் செய்திருந்தான் என்றால் அது நமக்கு நிச்சயம் பெருமிதத்தை தரும். ஆனால் அப்படிச் செய்தான் என்பதற்கு இதுவரை கிடைத்திருக்கும் சான்றுகள் போதா.

 

தினத்தந்தி, தினமலர் படிக்காமல் ஆராய்ச்சி நூல்களைப் படிக்க எனக்கு பேராசிரியர் ராஜவேலு அறிவுரை தந்திருக்கிறாராம். இதை சில பெரியாரிய நாசித் தற்குறிகள் பகிர்ந்து கொண்டு எனக்கும் அனுப்பியிருக்கின்றன.

 

இது தினத்தந்தியல்ல. ஐராவதம் மகாதேவனின் புகழ்பெற்ற புத்தகம் - Early Indian Epigraphy. ஹார்வர்ட் பல்கலைக் கழகம் வெளியிட்டது. இதை மறுக்க வேண்டுமானால் பல ஆதாரங்களோடு இன்னொரு புத்தகம் எழுத வேண்டும். இதைத்தான் நான் சொல்கிறேன். இது புரியவில்லை என்றால் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

எதையும் படிக்காமல் எழுதுவதைத்தான் திராவிட அறிஞர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். புத்தருக்கு முன்னால் வேதங்கள் எழுதப்பட்டன என்பதற்கு எந்த ஆதாரங்களும் கிடையாது என்று ஒருவர் எழுதியிருக்கிறார். பௌத்த நூல்களில் பிராமணர்களைப் பற்றியும் வர்ணங்களைப் பற்றியும் பல குறிப்புகள் இருக்கின்றன. அசோகரின் கல்வெட்டுகள் பிராமணர்களைப் பற்றிப் பேசுகிறது.

இது மஜ்ஜிம நிகயம்: Now on that occasion the brahmin Brahmayu was living at Mithila. He was old, aged, burdened with years, advanced in life, and come to the last stage; he was in his hundred and twentieth year. He was a master of the Three Vedas with their vocabularies, liturgy, phonology, and etymology, and the histories as a fifth; skilled in philology and grammar, he was fully versed in natural philosophy and in the marks of a Great Man. இவர் புத்தரிடம் வாதம் செய்து மாறுகிறார்.
எனவே புத்தருக்கு முன்னால் வேதங்கள் இல்லை என்று சொல்வது சரியாகாது.

புத்தரை விட்டு விடுவோம். வேதங்களைப் பின்னுக்குத் தள்ளினால் சங்க இலக்கியத்தையும் தமிழின் மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியத்தையும் பின்னுக்குத் தள்ள வேண்டும். ஏராளமான சூத்திரங்கள் பிராமணனை, வேதங்களைப் பற்றிப் பேசுகின்றன.
இது பாயிரம்:

"அறங்கரை நாமுன் நான்மறை முற்றிய

அதங்கோட் டாசாற் கரிதபத் தெரிந்து"

இது தொல்காப்பியச் சூத்திரங்கள்.

"அறுவகைப்பட்ட பார்ப்பனப் பாக்கமும்"

"மறையோர் தேயத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே"

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப."
"அந்தணர் திறத்தும் சான்றோர் தேயத்தும்
அந்தமில் சிறப்பில் பிறர் பிறர் திறத்தினும்
ஒழுக்கங் காட்டிய குறிப்பினும்..."
"நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங்காலை அந்தணர்க்கு உரிய."
"அந்தணாளர்க்கு அரசு வரைவின்றே"

சங்க இலக்கியத்தின் பெரும் புலவர்களில் பலர் பிராமணர்கள். எனவே வேதங்களைப் பின்னுக்குத் தள்ளினால் சங்க இலக்கியத்தையும் பின்னுக்குத் தள்ள வேண்டும்.

நான் என்னுடைய கட்டுரைகளில் ஐராவதம் மகாதேவன், சுப்பராயுலு, ஹாரி ஃபால்க், ராஜன் குருக்கள், திலீப் சக்ரவர்த்தி போன்ற புகழ் பெற்ற ஆசிரியர்களை மேற்கோள் காட்டியிருக்கிறேன். இவர்களில் யாரும் தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதியதாக நினைவில்லை - மகாதேவனைத் தவிர. அவர் தினமணிக்கு ஆசிரியராகவே இருந்தவர். இவர்களை விட ராஜவேலு பெரிய வல்லுனர் அல்ல.

நான் தினத்தந்தி தினமலர் பத்திரிகைகளுக்கு எழுதியதில்லை. இவர் எழுதியிருக்கலாம்.
நான் தமிழில் காலச்சுவடு பத்திரிகைக்கு எழுதியிருக்கிறேன். உயிர்மை, தீராநதிக்கு எழுதியிருக்கிறேன். தமிழ் இந்துவில் தொடர்ந்து எழுதியிருக்கிறேன்.
ஆங்கிலத்தில் என் நாவல்கள் புகழ்பெற்ற பதிப்பகங்களினால் வெளியிடப் பட்டிருக்கின்றன. நான் Outlook, India Today, The Wire, The Federal, The Indian Express, The Hindu, The Times of India, The Pioneer போன்ற பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன். எழுதிக் கொண்டும் வருகிறேன்.

தமிழில் என் புத்தகங்கள் காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப் பட்டிருக்கின்றன. தமிழ் இந்து வெளியிட்டிருக்கிறது. என் 'மேற்கத்திய ஓவியங்கள்' பதிப்பகச் சாதனை என்று அறியப்படுகிறது.
ராஜவேலுவிற்கு அகழ்வாய்வைத் தவிர மற்றவற்றைப் பற்றித் தெரியாதிருந்தால் தவறு என்னதல்ல.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

முன்னாள் கல்வெட்டுகளைப் பொறுத்த அளவில் நமக்கு முதலில் கிடைத்திருப்பது (மகாதேவன் புத்தகத்தின் படி) பொ.ஆ மு. இரண்டாம் நூற்றாண்டு. அவர் புத்தத்தில் கொடுத்திருக்கும் கடைசி கல்வெட்டு பொ.ஆ ஆறாம் நூற்றாண்டு.

முதல் கல்வெட்டில் முதல் வரி இது:
கணிய் நந்தஅஸிரிய்இ..
குவ்வஅன்கே தம்மம்
இத்தாஅ நெடுஞ்சழியன்
பணஅன் கடலன் வழுத்திப்
கொட்டுப்பித்தஅ பளிஇய்

ஆறாம் நூற்றாண்டின் கடைசிக் கல்வெட்டு இது:
ஏழூர்
மோநல
சாத்தன்
இரண்டிற்கு இடையே எண்ணூறு ஆண்டுகள்!
முதல் கல்வெட்டில் இருக்கும் 'ஸி' அசோகன் பிராமி 'ஸி'.

இரண்டு கல்வெட்டுகளுக்கும் இடையே இருக்கும் கல்வெட்டுகள் என்ன சொல்கின்றன என்பதை நான் என் கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன். காத்திருங்கள்.

பிராமி எழுத்து எப்படி உருவானது அது எப்படி இந்தியா முழுவதும் பரவியது என்பதைப் பற்றி பேரறிஞர் தானி (பெஷாவர் பல்கலைக் கழகம்) எழுதிய புத்தகம் 1963ல் வந்தது மிகவும் புகழ்பெற்றது. தெற்கிலிருந்து பிராமி வடக்கிற்கு சென்றது என்று நிறுவ வேண்டுமானால் தானி எழுதியது போலவே அறிவார்ந்த புத்தகங்க__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ண்டிய உடனே அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கக் கூடாது.
0. அகழ்வாய்வில் மிகுந்த நிதானம் தேவை. எடுத்த பணியை முடித்து கிடைத்தவற்றின் காலம், தன்மை போன்றவற்றைக் கணித்த பிறகுதான் அறிக்கையை எழுத வேண்டும்.
0. கீழடி போன்ற முக்கியமான அகழ்வாய்வுகளை அனுபவம் மிக்கவர்கள் நடத்த வேண்டும்.
 
Manonmani Pudhuezuthu கீழடி ஒரு தொழிற்கூடப்பகுதி இல்லை. கச்சாப்பொருட்கள் கிடைக்கவில்லை. நகரம் கிடையாது நகர நாகரீகம் உடையது. - இதையெல்லாம் சொல்லி பேட்டியும் தருபவர் ஆசைத்தம்பி, கீழடி அகழாய்வுப் பகுதியில் இருக்கும் தொல்லியல்துறைப் பணியாளர்.
Arvind Swaminathan அமர்நாத் ராமகிருஷ்ணாவும் ஆய்வில் நிதானம் தேவை, அவசரப்பட்டு முடிவு கூறுதல் சரியில்லை, நீண்டகால ஆய்வுகள் தேவை என்றே சொல்கிறார்.
Kambaraman Shanmukham காவிரிப்பூம்பட்டணம் அகல்வாராய்சியில் 1960-70 என்று ஞாபகம் ஐயா மற்றும் திருவாளர்கள் நாகசாமி இராமன் போன்றோர் மிகவும் ரகசியமாகவே அவர்களின் கருத்துக்களை கூறி உரையாடுவார்கள்

ஒரு முடிவை எட்டிய பிறகே உரக்க பேசுவார்கள்
Shahjahan R /ஒரு கரிமப் பகுப்பாய்வை வைத்துக் கொண்டு எந்த முடிவிற்கும் வரமுடியாது/
ஏதாவது ஒரு எலும்புக்கூடு எழுந்து வந்து சொன்னாக்கூட நம்ப மாட்டீங்க 
Ananthakrishnan Pakshirajan இது முழு முட்டாள்தனமான ஒரு தற்குறியைக் கூட வெட்கப்படச் செய்யக்கூடிய பதிவு. அரைகுறை மார்க்சியராக, அறிவியலோடும தொடர்பு இல்லாமல் பெரியாரிய நாசி போல எழுதுவதை உங்கள் இடத்தில் செய்து கொள்ளுங்கள்..


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இதைப் பாருங்கள்! (See the comments section) இவர் ஒரு தேர்ந்த அகழ்வாராய்ச்சியாளராகப் பேசுகிறாரா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
முதலில் நாகசாமி கார்பன் டேடிங் நம்ப முடியாது என்று சொல்லவில்லை. அவர் கார்பன் டேடிங் செய்யப்படுவதில் கலப்படம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்றுதான் சொன்னார். அவர் கொற்கை உதாரணத்தையும் கொடுத்தார்.

நான் ஒருபோதும் கார்பன் டேடிங்கை நம்ப முடியாது என்று சொல்லவில்லை. நான் சொல்வது எல்லாம் கரித்துண்டு காட்டுவது அது தோண்டப்பட்ட இடத்தில் மனிதன் அத்தனை காலம் இருந்திருக்கிறான் என்பதை மட்டுமே. கீழடியில் மனிதன் ஆறாம் நூற்றாண்டில் இருந்திருக்கிறான் என்பதைத்தான் அது காட்டுகிறது. அதன் வயதைப் பானைத்துண்டுகள் மீது ஏற்றி அதே வயதுதான் பானைத்துண்டுகளுக்கும் என்று சொல்லக்கூடாது என்பதுதான் என் வாதம்.
இரண்டாவது நான் அந்த இடத்தில் மனிதனின் எலும்புக்கூடுகள் கிடைக்கவில்லை என்று சொல்லவில்லை. நான் எழுதியது இது:
The present excavations have found remains of animals but no human remains. The human burial sites may have been kept away from dwelling units, but the site doesn’t have any evidence of a significant number of people living there. No regular dwelling units or streets have been excavated. What has been excavated could be a site for activities and there is no evidence that they were thriving as far back as the 6th century BC.

"மிருகங்களில் எலும்புகள் கிடைத்திருக்கின்றன. மனிதன் தொடர்ந்து வாழ்ந்திருக்கும் தடயங்கள் கிடைக்கவில்லை. வீடுகள் இல்லை. தெருக்கள் இல்லை. இடம் பானை வனையும் இடமாக இருந்திருக்கலாம். ஆனால் அது ஆறாம் நூறாண்டு BCEல் இயங்கி கொண்டிருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் நகர, நதி நாகரிகத்தைச் சேர்ந்தது கீழடி என்று சொல்ல இன்னும் ஆதாரங்கள் தேவை."

நான் சொல்லாதவற்றைச் சொல்லியதாக நினைத்துக் கொண்டு பேசினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

ரிக் வேதம் என்பது அகழ்வாராய்ச்சித்தளமா?

ரிக் வேதத்தின் காலம் 1500 BC என்று மாக்ஸ்முல்லர் சொல்லியிருக்கிறார் என்று அவரை வசை பாடுகிறார். மாக்ஸ்முல்லர் மட்டும் சொல்லவில்லை. வேதகாலத்தைப் பற்றி கோசாம்பி, ரொமிலா தபார், ஷர்மா, இர்ஃபான் ஹபிப், உபிந்தர் சிங் போன்ற வரலாற்று ஆசிரியர்களும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் காலமும் இதுதான். ரிக் வேதம் கி பி பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று
இவர் ஆதாரங்களுடன் நிறுவினால் அதை நான் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன்.

இதைப் பரவலாகப் பகிருங்கள்!__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Aravindan Kannaiyan I don’t think that man watched the discussion you were part of. Instead he’s happily responding like a partisan hack to an audience member’s question. That audience member misrepresented what you and Nagaswamy spoke. I watched this one as another person gleefully posted this. That person, in turn, was only interested in taking pot shots at you and Nagaswamy.

Prasanna Venkatesh P N He says "unga rig vedam" . Looks like they are all agenda driven to equate the findings to the answers they have in mind rather bringing out the facts and culture of people who lived there.

Arul Varman அப்போ பானை கிடைத்தால் அது பானை செய்கிற இடமா? கத்தி கிடைத்தால் கொல்லன் பட்டறை போலும்

Ananthakrishnan Pakshirajan அரசு அறிக்கையே அங்கு பானை செய்யும் தொழிற்கூடம் இருந்தது என்று சொல்கிறது!

 __________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Badri Seshadri Very disappointed with the way Amarnath Ramakrishna spoke. He is right in criticising Tamil Nadu archaeology department for not doing proper archaeological work, but the blame for it cannot rest with Nagaswamy, who retired many decades ago. His term also included a period when he was suspended before being reinstated - I will not go into the details. Even to this day TN govt allocates minuscule budget. The current Keezhadi excavation by TN Dept has been made possible only because of central funding as acknowledged by the concerned minister Mafoi Pandiarajan. The TN Dept of archaelogy was created and built from the scratch by Nagaswamy, who was only a Sanskrit scholar to begin with. He learnt epigraphy from Sivaramamurthy and excavation from the ASI stalwarts, built their department in TN, hired people, and trained them in all these aspects under severe fund constraints. Over the years since Nagaswamy’s time, the govt did not employ an archaeologist or epigraphist as the director and instead switched to a career IAS officer for that post. Hiring stopped. Most of the old staff retired. On the other hand, ASI, also under find constraint never indulged in this kind of choking of the Dept. Amarnath Ramakrishna learnt his job as a student trainee and has since been posted all over India giving him a great exposure. The TN Dept archaelogy employees don’t get that sort of exposure.

Now onto the crux of Amarnath’s arguments, ignoring PA Krishnan because he is not an archaeologist would mean you have to ignore Sabaparhy Mohan, Su Venkatesan and Ravikumar as well. Learned people won’t do that.

Ananthakrishnan Pakshirajan I have a few questions to ask. Why is Amarnath speaking with a set of persons who are not archaeologists? Why is he not speaking or debating with a set of his colleagues? If he is doing that he should make it public. Now, if Tamil Nadu doesn't have competent archaeologists, how do you accept the excavation done by them as completely professional?__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நீ கோசாம்பியைப் படிக்க வேண்டும் என்று திராவிடத் தற்குறிகள் பரிந்துரைக்கிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது.
இது கோசாம்பி: The theory was that these primitive people were pushed into odd corners of the jungle by Dravidians, whom the Aryans in turn drove southwards. The Aryan invasion is historic and well attested. The rest is extremely dubious conjecture.
இதுவும் கோசாம்பி: Yet it was the Indus alone that could develop a great urban civilization when the rest of the country supported a thin savage population that eked out a precarious livelihood by food-gathering.
இதுவும் கோசாம்பி: Though the first decipherable Indian alphabets found in epigraphs seem to be quite simple and perhaps of Semitic origin, like the Kharosthl, it is notable that under brahmin influence Indian writing became syllabic.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ருத்ரதாமனின் கிர்னார் கல்வெட்டு

குஜராத்தின் ஜுனாகட்டில் கிர்னாரில் மூன்று கல்வெட்டுகள் ஒரே பாறையில் காணப்படுகின்றன. இவை அசோகர், ருத்ரதாமன் மற்றும் ஸமுத்ரகுப்தனின் காலத்தைச் சேர்ந்தவை. இவற்றுள் சகர்களின் மன்னனான ருத்ரதாமனின் கல்வெட்டு மிகச் சிறப்பு வாய்ந்தது. 72 என்று ஆண்டு குறிப்பிடப்பட்டது. இதுவே சகவர்ஷத்தின் முதல் குறிப்பாகக் கொண்டு இதன் ஆண்டை பொயு 150 என்று கணித்திருக்கிறார்கள். மிகத் தூய ஸம்ஸ்க்ருதத்தில் மிகநீளமாக அமைந்த முதல் கல்வெட்டும் இதுதான். இதற்கு முந்தைய ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் சிறியவை. ருத்ரதாமன் சாதவாஹனர்களை இருமுறை வென்கண்டதும் ஆனர்த்த ஸிந்துஸௌவீர மாளவம் முதலிய நாடுகளை வென்றதையும் அழகிய வடமொழி உரைநடையில் குறிப்பிடும் இந்தக் கல்வெட்டு ருத்ரதாமன் சப்த-அர்த்த-காந்தர்வ-ந்யாய வித்யைகளில் கைதேர்ந்தவர் என்கிறது. அதாவது வடமொழி இலக்கணம் மீமாம்ஸை ஸங்கீதம் தர்க்கம் ஆகியவற்றில் வல்லவன்.

இதற்கடுத்த கல்வெட்டின் நோக்கமே சிறப்பானது. சந்த்ரகுப்த மௌர்யனின் காலத்தில் அதாவது பொயுமு நான்கில் புஷ்யகுப்தன் என்னும் வணிகனால் உருவாக்கப்பட்டு அசோகனின் காலத்தில் யவன அரசனால் வாய்க்கால்கள் வெட்டப்பட்ட ஸுதர்சனம் என்னும் தடாகம் புயலால் சிதைந்து துர்தர்சனமாக அதாவது பார்க்கமுடியாது நிலையில் இருந்தது. அதனைச் சீர் செய்து மீண்டும் ஸுதர்சனமாக்கினான் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதனைச் செயல்படுத்தியவன் ஸுவிசாகன் என்னும் பஹ்லவன். இவனைப் பல்லவர் குலத்தோற்றத்தோடு முடிச்சிட்ட அறிஞர்களும் உண்டு. ஆக மொழி, நடை, வரலாறு, பண்டைய குறிப்பு என்று எல்லா வகையிலும் மிக முக்கியமான கல்வெட்டு இது.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அமர்நாத் ராமகிருஷ்ணன் பெரியார் அடியார்கள் மத்தியில் ராகிகடி எலும்புக் கூட்டின் மரபணுக்கூறுகள் அதை தொல் தென்னிந்தியன் என்று காட்டுகின்றன என்று சொல்லுகிறார். ஆனால் ஆராய்ந்தவர்கள் சொன்னது என்ன?
We report an ancient genome from the Indus Valley Civilization (IVC). The individual we sequenced fits as a mixture of people related to ancient Iranians (the largest component) and Southeast Asian hunter-gatherers..

அதாவது தொல் இரானியர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வேட்டையாடி உணவு சேர்ப்பவர்கள்.

இதைக் கூட இவரால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் இவரால் என்ன ஆராய்ச்சி செய்ய முடியும்?__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கீழடி புத்தகத்தில் அகழ்வாய்வாளர்களின் அறிக்கை பிற்சேர்க்கையாக உள்ளது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் இடையே பல வித்தியாசங்கள் இருக்கின்றன. தமிழ் புத்தகத்தில் பதிவு செய்ய்பட்ட குழிகள் A1/1, A3/2, YP7/2, YP8/1, YP8/3, YP10/4 மற்றும் ZB5/2. ஆங்கிலப் புத்தகத்தில்A1 north quadrant 1, A1 north east quadrant 2, A3/2, A3/2, A3/2, (மூன்று பகுதிகள் YP8/3 and YP7/2, YP7/2, YP7/2 (மூன்று பகுதிகள்) and YP8/2, YP8/1, YP8/3, YP10/4, ZB5/2.

பொதுவாக இருக்கும் குழிகளில் கூட ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் பதிவு செய்ததில் வித்தியாசம் இருக்கிறது.

உதாரணமாக YP8/3 குழியைப் பற்றி ஆங்கிலத்தில்:
The excavation work at this trench was carried throughout. In order to probe the continuity of the cultural structure, this trench was opened of tracing the extension of brick structure found at YP7/2.

தமிழில் இதன் மொழிபெயர்ப்பு இருக்கிறது. கூடுதலாக இருப்பது: YP8/2 குழியில் மட்டும் 1.8.மீ ஆழத்தில் இரு அடுக்குகள் கொண்ட செங்கற் கட்டடப் பகுதி காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக YP8/3லும் இக்குழிகள் இடையே நிலவியிருந்த நடைப்பகுதியை அகற்றியும் எந்தவிதமான கட்டட நீட்சியும் தென்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த அறிக்கையை எப்படி நம்புவது?

(என்னிடம் இருப்பவை பிடிஃப் புத்தங்கள். அச்சுப் புத்தகங்கள் இன்னும் வெளிவரவில்லை என்கிறார்கள்)__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Sathianarayanan Ramasamy உங்க கூட முதல் விவாதத்தில் மாலன்‌ கருத்துக்கு எதிராக, குழிகள் வெர்ஜின்‌ சாயில் வரும் வரை தோண்டப்பட்டது. பிறகே அடுத்த குழி என்று கூறினார்..சு.வெ. ஆனால் இதை க் குறிப்பிட்டு ஒருவர் மணியம்மையார் பேரவையில் கேட்டபோது ," அப்படி இல்லை " இன்னும் பல குழிகள் குழப்பமாக வெர்ஜின்‌சாயில் என‌ நினைத்ததையும் தாண்டி மீண்டும் பானைஓடுகள் வருவதாக அமர்நாத் தெரிவிக்கிறார்.

Sathianarayanan Ramasamy நாகசாமி ஏன் அழகன் குளத்தை முழுதும் ஆயவில்லை. சில குழிகள்‌மட்டும் எடுத்து வீணடித்தார் எனக்கேட்கிறார்? நாகசாமி அந்தக்காலத்தில் 200, 300 ரூபாய்கள் தான் ஒதுக்கீடாகக் கிடைத்தது என்கிறார். இது அமர்நாத் அறியமாட்டாரா?

Santhanam Loganathan Sir, in your opinion, whether anything significant has been found in Keezhadi, so far? How important those findings will be w.r.t. the cultural history of Tamils? I am personally very keen to know.

Ananthakrishnan Pakshirajan So far nothing significant has been found in Keeladi, except that there is a good chance that we may end up finding an old urban centre, though not as old as these guys claim. If that happens it will be an important find.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

என்னை அறிஞன் என்று நான் ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை. என்னுடைய போதாமைகள் எனக்கு நன்றாகத் தெரியும். என்னை அறிஞன் என்று சிலர் நினைப்பதே நம் சூழலில் இருக்கும் அறிவு வறட்சியைத்தான் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை விட எனக்கு சற்று அதிகம் தெரிந்திருக்குமோ என்ற நினைப்பு அடிக்கடி வந்து தொலைத்து எனக்குச் சோகத்தைத் தருகிறது.

Ramachandran துறை சார்ந்த நிபுணத்துவம் என்பது கூட, தொழில்முறை நிபுணர்களைவிட அமெச்சூர் எனக் கருதப்படுகிறவர்களிடம் கூடுதலாக இருப்பதுண்டு- ஐராவதம் மகாதேவன் ஓர் எடுத்துக்காட்டு. ஆனால் இங்கு பிரச்சினை வேறு- உள்நோக்கம் கற்பிப்பது, வசைபாடுவது இவையே விவாதம் என்ற பெயரில் நடைபெறுகின்றன. ஐராவதம் மகாதேவன் அவர்களே புறக்கணிப்புக்கும் வசைகளுக்கும் ஆளாக வேண்டியதிருக்குமோ என்ற அச்சத்தில் சில சரணாகதிகளையும் சமாதானங்களை யும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று

Sathianarayanan Ramasamy கரோஷ்டி, பிராமி எல்லாம் அராபிய மூலத்திலிருந்து வந்திருக்கலாம் என்கிறார்களே...அப்போதே அராபிக் முழுமை பெற்றிருந்த வரிவடிவமா?

Ramachandran Sathianarayanan Ramasamy அராபிய மூலம் அன்று; அரமைக்- வட அரமைக் மொழியில் தான் ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என்ற Alphabetical எழுத்து முறை அறிமுகமாயிற்று. (அதுவும் கூடச் சித்திர வடிவக் கருத்து எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தித்தான் உருவாயிற்று. எடுத்துக்காட்டாக a என்ற ஒலிக்குரிய alpha-aleph என்பது ஆதிவிலங்கு எனக்கருதப்பட்ட மாட்டின் குறியீடே)__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தமிழில் ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் உண்மையிலேயே மொழி, இனவெறியர்கள் என்பதற்குச் சான்று கீழடி அகழ்வாராய்ச்சியையும் ரிக் வேதத்தையும் தொடர்பு படுத்துவது. பெரியாரிய, தனித்தமிழ் தற்குறிகள் இதைச் செய்தால் மன்னிக்கலாம். ஆனால் அறிஞர்கள் செய்வது முழுக் கயமை. அறிவின் மீது அக்கறை ஏது இல்லாத வெறுப்பையே அடிப்படையாகக் கொண்ட பேர்வழிகள்தாம் இதைச் செய்வார்கள்.

இந்தியாவில் எந்த இலக்கியத்திற்கும் புறச் சான்றுகள் கிடைப்பது அரிது. சங்க இலக்கியத்திற்குப் புறச்சான்றுகள் கிடைப்பது கிபி ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னர்தாம். அதை வைத்துக் கொண்டு சங்க இலக்கியம் மிகப் பின்னால் எழுதப் பட்டது என்று சொல்பவர்களுமிருக்கிறார்கள். ஆனால் அதை பல் அறிஞர்கள் ஆதரிக்காததன் காரணம் சங்க இலக்கியத்தில் உள்ள அகச் சான்றுகள்தாம். இதே போன்று வேதத்தினுடைய அகச்சான்றுகளை வைத்துக் கொண்டு அதன் காலத்தை கணிக்கிறார்கள். ஒரு நூறு அறிஞர்களையாவது நான் மேற்கோள் காட்ட முடியும். அவர்களில் பலர் மார்க்சிய அறிஞர்கள்.

இதைத் தவிர அசோகக் கல்வெட்டுகளில் பிராமணர்களைப் பற்றி பல குறிப்புகள் இருக்கின்றன. தொடர்ந்து வேதச் சடங்குகளைப் பற்றியும் கடவுள்களைப் பற்றியும் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் வேதத்தைப் பற்றி பல குறிப்புகள் இருக்கின்றன. எனவே வேதங்களை எவ்வளவு பின் தள்ளினாலும் சங்க இலக்கியத்திற்கு முன்பாகவும் பௌத்த ஜைனமதங்களுக்கு முன்பாகவும்தாம் அவை இருக்கும்

Ananthakrishnan Pakshirajan நான் எங்கு அப்படிச் சொல்லியிருக்கிறேன்? சிந்துச் சமவெளி நாகரிகம் வேதகாலத்திற்கு முற்பட்டது என்பது பெரியாரிய நாசி இனவெறித் தற்குறிகளுக்குக் கூடப் புரியும் என்று நினைக்கிறேன்.

 

 

What is true for science should also be true for archaeology. It is necessary to be always on the quest, willing to unlearn and get corrected when the truth emerges. I will be the first person to say that I was wrong if the truth that emerges from Keeladi is contrary to what I think it is.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Arunkumar Pankaj

ரவிக்குமார்: நாகசாமி அவர்கள் இயக்குனராக பணியாற்றிய காலம் தான் தமிழக தொல்லியல் துறையின் பொற்காலம் என்பார்கள்...

அமர்நாத் ராமகிருஷ்ணா: நாகசாமி அவர்கள் தமிழக தொல்லியல் துறையின் இயக்குனராக இருந்தாரே தவிர அவர் எந்த ஒரு விரிவான கள ஆய்வும் செய்யவில்லை..

சு.வெங்கடேசன் : தமிழக அரசு தொல்லியல் துறைக்கு வருடத்திற்கு அதிகபட்சம் 3 லட்சத்துக்கு மேல் ஒதுக்கியதே இல்லை..

நாகசாமி: எனக்கு 200 ரூபாய் தான் குடுத்தாங்க..

Ramachandran

இரா. நாகசாமி அவர்கள் தொல்லியல்துறை இயக்குநராக இருந்த போது புரிந்த பணி போற்றத் தக்கது. (பொற்காலம், வைரக்காலம் என்ற புகழ்மொழிகள் அகவயச் சார்புடையவை)

அமர்நாத் ராமகிருஷ்ணா அழகன்குளம் அகழாய்வு குறித்துக் குற்றம் சாட்டுவது பொய் மட்டுமன்று; அற்பத்தனமானது.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அமர்நாத் சொன்னது!
அவசரத்தில் தவறாகச் சொல்லியிருக்கலாம் என்றாலும் கரியின் 'லைஃப்' என்று சொன்னது இடிக்கிறது. 'லைப்' வேறு, ஹாஃப்-லைப்' வேறு. கரி முழுவதும் என்றும் அழிவதில்லை. அதன் ஒரு ஐசடோப்தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து கதிர் வீசுகிறது.

திரு ஒத்திசைவு சொல்லியிருப்பது இது:" கார்பன்14 மீதான கால அளவியலுக்கான குட்டி, அறிவியல் விளக்கம்: இதனை, ‘கதிரியக்கக் கார்பன் வழி கால நிர்ணயமுறை’ எனவும் குறிப்பிடலாம். கார்பனின் ஐஸோடோப்புகளில் கார்பன்14 என்பதும் கார்பன்12 என்பதும் முக்கியமானவை. இதில் கார்பன்14 கதிரியக்கம் காரணமாகக், கொஞ்சம் கொஞ்சமாக தன் பருப்பொருளை கழித்துக்கட்டிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு 5,730 (+/- 40) வருடங்களுக்கும், அது ஆரம்பித்த அளவில் பாதியாகியிருக்கும். இதற்கு பாதிவாழ்க்கை அல்லது அரைவாழ்வுகாலம் அல்லது ஹாஃப்டைம் எனச் சொல்லலாம், கார்பன்14 அணுக்களுக்கு, இது ஆகவே, 5,730 (+/- 40) வருடங்கள்."
"அதாவது கார்பன்14 முழுவதும் அழியவே முடியாது… அதற்குக் கிட்டே போவதற்குள் இந்தப் ப்ரபஞ்சமே முடிந்துவிடும்! மாறாக – அப்படி கார்பன்14, 5560 வருடங்களில் அழிந்து தீர்ந்துவிட்டால், அத்தனை வருடங்களுக்கு முன்னால் நடந்த எந்தவொரு ஃபாஸ்ஸில் விஷயத்தையும் இம்முறையில் அனுமானிக்கவே முடியாது! என்ன சொல்கிறார் இந்த அகழ்வாராய்ச்சியாளர்? அடிப்படைகள் தெரியாமல் உளறிக்கொட்டி…. தேவையா? 

…இத்தனைக்கும் ஒரு சோட்டா அகழ்வாராய்ச்சியாளனுக்கும், ஏன் ஒரு மாணவனுக்கும் கூட இந்த விஷயம் தெரிந்திருக்கவே வேண்டும், இதைப் பற்றி உளறிக்கொட்டுவதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது! ஏனெனில்,. பத்தாங்க்ளாஸ் பாடம்தான் இது!"

அமர்நாத் மீது பெரிய குற்றமில்லை. ஆனால் அவர் ஏதோ பெரிய அறிவியல் கருத்தைச் சொல்லி விட்டார் என்று பெரியாரியத் தற்குறிகள் அவர் சொன்னதை பகிர்ந்து கொண்டிருப்பதுதான் வேடிக்கை!

அமர்நாத் சொன்னதைப் பகிர்ந்து கொண்டவர்கள் இதையும் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

மற்றவர்கள் நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திராவிட மொழிகள் எத்தனை? நீங்கள் நினைப்பதை விட அதிகம். தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு - இந்த நான்கு மொழிகளும் நம்மில் எல்லோருக்கும் தெரியும்.

இதைத் தவிர எத்தனை மொழிகள் இருக்கின்றன?

1. துளு 2. ப்ராஹூய் 3. இருளா 4. பாலு குரும்பா 5. பெட்ட குரும்பா 6.கோடா 7.தோடா 8. குடகு 9. துளு 10. பெலரி 11. கொரகா 12. கொலமி 13. நயிகி 14. பர்ஜி 15. கட்பா 16. கோண்டி 17. கோண்டா 18. பெங்கோ 19. மண்டா 20. குயி 21. குவி 22. குருக் - ஓரான் 23. மால்டோ 24. ஆலு குரும்பா

இம்மொழிகளின் சொற்களை ஆராய்ந்து அவற்றின் பொருளை விளக்கும் அகராதி இருக்கிறது. இதில் இந்தோ-ஆரியச் (வடமொழி உட்பட) சொற்கள் இடம் பெறவில்லை. பரோ -எமனோ என்ற இருவராலும் 1968ல் கொண்டு வரப்பட்ட Dravidian Etymological Dictionary மொழியியல் உலகின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று.

உதாரணமாக தமிழில் அகல் என்ற சொல்லை எடுத்துக் கொண்டு அதன் பல்வேறு பரிணாமங்களைச் சொல்லி மற்றைய மொழிகளில் அச்சொல் எவ்வாறு வழக்கில் இருக்கிறது என்பதை விளக்குகிறார். தமிழின் அகல், மலையாளத்தில் அகலுக, கோடாவில் அகல்ம், கன்னடத்தில் அகல் துளுவில் அகபுனி, தெலுங்கில் அகலு, மால்டோவில் அகரே! எல்லா மொழிகளிலும் இதன் பொருள் விரிவாக்குவது என்பதின் வரையறையில்தான் வருகிறது.

பரோ (1909-1986 ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவர். எமனோ (1904-2005) பெர்க்கிலி பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறையை நிறுவியவர். இவரும் சமஸ்கிருதத்தில் வல்லுனர்.

பரோ சமஸ்கிருதத்தில் இருக்கும் திராவிடச் சொற்களை அடையாளம் கண்டு Some Dravidian Words in Sanskrit என்ற கட்டுரையை 1945ம் ஆண்டிலேயே எழுதியவர்.

இவர்களைப் போன்ற அறிஞர்களை நாம் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் வடமொழியும் திராவிட மொழிகளில் ஒன்றையாவதும் அறியாத யாரும் தங்களை மொழியியல் வல்லுனர் என்று சொல்லிக் கொள்ள முடியாது.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Ramachandran ஆதிச்சநல்லூரில் கண்டறியப்பட்ட மனித மண்டையோடுகளில் மங்கோலாய்டு கூறு 30 விழுக்காடு உள்ளது என்று உடற்கூறு மானிடவியலாளர் இராகவன் பத்மநாதன் கண்டறிந்துள்ளார். தியாக. சத்தியமூர்த்தி அவர்களுடன் இணைந்து தாம் கண்டறிந்த முடிபுகளை வெளியிட்டுள்ளார். மங்கோலாய்டு கூறு தமிழரில் பிரிக்க முடியாத அளவு கலந்து விட்டது என்பதே இதன் பொருள். மங்கோலாய்டு என்பதே யக்ஷர் -யக்ஷியர்(இசக்கி) இனத்தன்மை எனக் கருதுகிறேன்.

Badri Seshadri என் கேள்வி நேரடியானது. மல்லையிலிருந்து கடல்வழியாக வணிகர்கள் 2000 ஆண்டுகள்முன் சீனா சென்றனர் என்பதற்கு ஆதாரம் உள்ளதா என்பதுதான். தமிழ் வணிகர்களின் பெயர் பொறித்த பானையோடுகள் எகிப்தில் கிடைத்திருப்பதுபோல் சீனத்தில் தமிழ்ப்பெயர்களுடன் கிடைத்தால், மெட்டீரியல் எவிடென்ஸ் கிடைத்ததாகக் கொள்ளலாம். அப்போதும்கூட அவர்கள் மல்லையிலிருந்து போனார்களா, புகாரிலிருந்து போனார்களா என்பதைச் சொல்ல முடியாது. சீனக் காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளதாகக் காட்டப்படும் விக்கிப்பீடியா தகவல்கள் குறித்து நான் JSTOR-இல் தேடிப்பார்த்தேன். ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையும் என் கண்ணுக்குப் புலப்படவில்லை.

அடுத்து போதிதருமன் கதை. அதைப்பற்றிப் பேசிப் பயன் இல்லை.

மேலைக்கடலில் கப்பல் ஓட்டி எகிப்து செல்வதைவிட கீழைக்கடலில் ஓட்டி சீனம் செல்வது கடினமானது. அதிலும் கடாரத்தைத் தாண்டி சீனாவுக்கு நேரடியாகத் தமிழ் வணிகர்கள் செல்வதை ஶ்ரீவிஜயம் விரும்பவில்லை. அவர்கள் இடைத்தரகர்களாக இருந்து லாபம் காண்பதையே விரும்பினர். இதன் விளைவாகத்தானே இராசேந்திரன் கப்பற்படையை அனுப்பவேண்டிவந்தது? அதன் பின்னர்தானே தமிழர்கள் நேரடியாக சீனாவுக்குச் செல்ல முடிந்தது? அதன்பின்னர்தானே சீனாவில் சிவன் கோவிலும், தமிழும் சீனமும் கலந்த காசுகளும் கிடைத்தன?

 

திராவிட இனவெறி நாசிகள் பாப்பான் மட்டும்தான் ஆதாரம் கேட்கலாமா என்று கொதிக்கிறார்கள். வரலாறு அம்புலிமாமா கதை என்று கருதுபவர்களுக்குத்தான் ஆதாரம் தேவையில்லை. இது இந்துத்துவக் கூட்டத்திற்கும் பொருந்தும்.

சீனத்தோடு தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வணிகத் தொடர்பு இருந்ததற்கு நேரடியான ஆதாரம் இல்லை. ஆனால் இன்றைய கம்போடியா, வியட்நாம் நாடுகளோடு தமிழ்நாடு வணிகத் தொடர்பில் இருந்தது. கம்போடிய அரசு வைடூரியம், சந்தனம் போன்ற பொருள்களை சீன அரசிற்கு பரிசளித்ததாக கி.பி மூன்றாம் நூற்றாண்டுப் பதிவுகள் கூறுகின்றன. வைடூரியம், சந்தனம் இரண்டும் தமிழ்நாட்டு (தென்னிந்திய) ஏற்றுமதி பொருட்கள். இதை நீலகண்ட சாஸ்திரி தன் Foreign Notices of South India என்ற புத்தகத்தில் சொல்கிறார். எனவே தமிழகத்தோடு சீனா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தொடர்பு வைத்திருக்கும் சாத்தியங்கள் நிச்சயம் இருக்கின்றன.

பாஹியனும் - ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தவர். தக்ஷிணம் என்ற நாட்டைப் பற்றிப் பேசுகிறார். பல்லவர் காலத்திற்குப் பிறகுதான் தமிழகச் சீன உறவிற்கு வலுவான ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டையோடுகளில் சீன மண்டையோடுகளும் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. எனவே இந்தியாவிற்கும் சீனாவிற்கு 3000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்பு இருக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கும் இன்னும் வலுவான சான்றுகள் தேவை. பெரியார் திடலிலிருந்து அல்ல. வரலாற்று ஆசிரியர்கள் நம்பக் கூடிய சான்றுகள்.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

போதி தர்மரைப் பற்றி சீனக் குறிப்புகளில் கிடைப்பது என்ன?
இது Tracking Bodhidharma: A Journey to the Heart of Chinese Culture - Andy Ferguson புத்தகத்தில் கொடுக்கப்பட்டது:
Who was he? We know little of certainty about his origins beyond that he was a Buddhist monk who was born a Brahman, India’s highest caste. He reached China after years at sea had thinned his cheeks, but his eyes, says his legend, matched the ocean’s blue waves. ... The Chinese nicknamed Bodhidharma the “Blue-Eyed Barbarian.”

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த டாவோசுவான் என்ற சீன வரலாற்றாசிரியர் அவரைத் தென்னிந்தியப் பிராமணர் என்கிறார்.

அவரைத் தமிழர் என்று சொன்னால், பிராமணர் என்றும் சொல்ல வேண்டிய சங்கடம் ஏற்படும். தமிழர்தான் ஆனால் பிராமணர் இல்லை என்ற ஆதாரம் கிடைக்கும் வரை வேறு வழியில்லை.

A Personal History of South India
Book by Charles Allen  In the same page Allen says, quoting another Chinese account he was the third son of a King who was a Brahmin.

Even Dumoulin says "He is said to have stemmed from South
Indian Brahmans, or even to have been of royal descent." 

Ananthakrishnan Pakshirajan This is from The zen teaching of Buddhism: Bodhidharma was born around the year 440 in Kanchi, the capital of the Southern Indian kingdom of Pallava. He was a Brahman by birth and the third son of King Simhavarman. Thus almost all accounts say he was a brahmin. These are legends and like all legends, they should be taken with a pinch of salt. The problem with us is that we pick and choose.

Ananthakrishnan Pakshirajan No. Almost all stories that have emanated from China says that he was a Brahmin. I am of the view this is a legend which has to be taken with a pinch of salt. In any case, the Dravidians berate Pallava kings and consider them outsiders. If they were Bodhidharma was also an outsider, even if he was a prince and not a Brahmin prince.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

😍😍😍😍😍

 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர்
Sundaram Muthiah Rajasubramanian தனது அட்டைப் படத்தை புதுப்பித்துள்ளார்.

When encountering Mahadevan's Post Asokan Dispersal Tamili Script theory.
தமிழ்நாடு தொல்லியல் பயிலரங்கம்: ஆகத்து 15, 16.

சென்ற 2 நாட்களும் கோவையில் நடந்த தமிழ்நாடு தொல்லியல் பயிலரங்கம் சென்றிருந்தேன். கொங்குநாட்டு அகழாய்வுகளை நடத்தியவரான பூங்குன்றன் அழைப்பை ஏற்று பல தொல்லியல் துறை நபர்கள் தங்கள் அகழாய்வில் கிடைத்ததை காட்சிப்படங்களாகக் காட்டினார்கள். எனக்கு ஒரு விடயத்தில் புதிய பரிணாமம் கிடைத்தது.

சனியன்று முதலில் பூங்குன்றன் தன் அகழாய்வுகளை பற்றி சொல்லி முடித்து கேள்விகள் உண்டா எனக்கேட்டது தான் பாக்கி. அதுக்காகவே காத்திருந்தவன் தான் உடனே போய் ஐராவதம் மகாதேவன் தன் இத்துப்போன (Outdated) அகரமேறிய மெய்முறைமையை வைத்துக்கொண்டு ஒரு உருப்படியான காரணமும் இல்லாமல் தமிழி எழுத்துக்களை அசோகனுக்கு பிற்பட்டது என கூறி வருகிறார். ஆனால் நடனகாசிநாதன் அதே அகரமேறிய மெய்முறைமையை கொஞ்சம் மீட்டுருவாக்கி தமிழி எழுத்தை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு வரை கொண்டு சென்று விட்டார்.(மேற்கோள் 1) அதற்கு காசிநாதன் வைக்கும் கோட்பாடு அதியமான்-அசோகன் கல்வெட்டில் வரும் சதியபுதோ என்னும் சொல் ஒப்புமை அதியமான் கல்வெட்டை கி.மு. மூன்றாம் நூற்றாண்டென காட்டுகிறது எனவும் அதற்கு முந்தைய தமிழி வளர்ச்சி நிலைகள் இன்னும் 2 நூற்றாண்டு பழமையாகும் என்றும் அவரது கூற்று (Synchronism).

ஆனால் மகாதேவ் இதுபோல் எந்த ஒரு இயைதல் முறையையும் காட்டாமல் அசோகன் பிராமிக்கு தமிழி மிகப்பிந்தையது என காலம் கணித்தார். (without synchronism) நம்ம மகாதேவ் கட்டுரை உடனுக்குடன் உலகுமுழுதும் சகவல்லுநரால் சரிபார்க்கப்பட்டு பரவலான ஏற்பை பெறுகிறது (Peer Review and widely accepted). ஆனால் காசிநாதன் காரணத்துடன் தமிழி அசோகப்பிராமிக்கும் முந்தையதுன்னு சொல்லியும் அது ஏன் இன்னும் சகவல்லுநரால் சரிபார்க்கப்பட்டு பரவலான ஏற்பை பெறவில்லை?" என கேள்வி எழுப்பினேன்.

அப்போது பதில் சொன்ன பூங்குன்றன் "இருவருமே தொல்லியல் துறையில் பங்குபற்றியவர்கள் என்பதால் அவர்களின் கருத்துக்களை பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அகரமேறிய மெய்முறைமையை விட தற்போது மண்ணடுக்காய்வையே ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனச் சொல்லி அமர்ந்துவிட்டார். அடுத்து இன்னொருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது மகாதேவ் பல ஆண்டுகளாக கட்டுரை வெளியிடுகிறார். ஆனால் காசிநாதன் இப்போது தான் எழுதத்தொடங்கியுள்ளார் எனச் சொன்னார். அந்த பதில் எனக்கென்னவோ மழுப்பலாகப்பட்டது.

காரணம் மகாதேவ் எழுதியது 2003ஆம் ஆண்டு வந்தது. காசிநாதன் எழுதியது 2004ஆம் ஆண்டு வந்தது.

உணவு இடைவேளையில் அருணன் (பயிலரங்கம் நடத்திய அமைப்புகளில் பாவாணர் தொடர்பான அமைப்பைச் சேர்ந்தவர்) அவர்களிடம் மண்ணடுக்காய்வை காட்டியும் உங்களால் தமிழை கி.மு.ஐந்தாம் நூற்றாண்டுக்கு கொண்டு சொல்ல முடியாது. காரணம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு கீழிருந்த அதாவது அதைவிட பழமையுடைய தமிழி எழுத்துக்களில் தமிழிக்கே ஊரிய எழுத்துக்களான ழ,ள,ற,ன போன்றவை இல்லை. அதனால் அது பாகதம் எனச் சொல்லி ஹிந்திய ஆய்வாளர்கள் எளிதாகத் தப்பித்துவிடுவார்கள். ஏற்கனவே அரிக்கமேடு, கொடுமணல் அகழாய்வு அதுபோல் மறுக்கப்பட்டுவிட்டது. அதனால் அகரமேறிய மெய் முறைமை மண்ணடுக்காய்வு இரண்டையும் சேர்த்தே கட்டுரைகள் எழுதி சகவல்லுநரால் சரிபார்க்கப்பட்டு பரவலான ஏற்பை பெறவைக்கனும் என்றேன். அதற்கு நடனகாசிநாதன் கட்டுரையையும் காட்டினால் ஒழிய நிரூபிக்க இயலாது என்றேன்.

இதை அருணன் பூங்குன்றனிடம் சொன்னாரா இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால் ஞாயிற்று கிழமை இறுதி உரையை தொடங்கிய பூங்குன்றன் மகாதேவ் தற்போது எழுதியுள்ள ஆய்வுகளில் "ஆரியர் திராவிடர் சேர்ந்து சிந்துவேளி நாகரிகம் கண்டதாகவும் திராவிடர்கள் தமிழர்களுக்கு நாகரிகம் கற்றுத்தந்தனர்" (மேற்கோள் 2) என்ற அளவுக்கு குழந்தைகளும் முட்டாள்களும் எழுதுவது போல் எழுதியுள்ளார் என நொந்துகொண்டார்.

மகாதேவ் ஏன் திராவிடர்கள் தமிழர்களுக்கு நாகரிகம் கற்றுக்கொடுத்தனர் எனச் சொன்னார் என நான் அறியாதவனல்ல. காரணம் திராவிடர்கள் என்பவர்கள் பிராமணரில் ஒரு பிரிவினரே. ஆரம்பகாலத்தில் பிராமணர்கள் ஒரே குழுவாக இருந்தனர் என்றும் பிற்காலத்தில் பத்து பிரிவுகளாக பிரிந்து அதில் ஐந்து பிரிவினர் விந்திய மலைக்கு தெற்கே வந்து திராவிடர் எனப் பெயர் பெற்றனர் என்றும் விந்தியத்துக்கு வடக்கில் இருந்தோர் கௌடர்கள் எனப் பெயர் பெற்றனர் என்றும் ஏற்கனவே பதிவுகள் இப்பக்கத்தில் உள்ளது. (மேற்கோள் 3) அதனால் பெத்தவாடு திராவிட என்னும் பிராமண பிரிவே தமிழருக்கு நாகரிகம் கற்றுத்தந்தனர் என வெளிவரப்போகும் நாளைய ஆய்வுகளுக்காகவே அடித்தளம் இடுகிறார் என்பது நான் 2 ஆண்டுகளுக்கு முன்னரே பெற்ற தெளிவு.

ஞாயிறன்று பேசிய அருணன் "பிராமணர்கள்/திராவிட அரசியல்வாதிகள் சொல்லியது போல் ஆய்வாளர் மகாதேவ் கிராமம் கிராமமாக அழைந்து சென்று கல்வெட்டுகளை கண்டறிந்தார் எனச் சொல்லப்படுவது எல்லாம் பொய் என்றும் ஏற்கனவே தமிழர்கள் கண்டறிந்த கல்வெட்டுகளை படியெடுத்து ஆவணம் மட்டுமே மகாதேவ் செய்து தமிழின் எழுத்துக்கள் தொன்மையை பின்னுக்கு தள்ளினார்" என்ற உண்மையை எடுத்துச்சொன்னார்.

எப்படியோ மகாதேவ் செய்த கோல்மால்களை எனக்கு வெளிப்படுத்த வாய்ப்புக்கிடைத்ததையும் அருணன் மகாதேவ் பற்றிய உண்மையை வெளிக்கொண்டுவந்ததையும் எண்ணி மகிழ்வோடு வீடு திரும்பினேன்.

இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன மகாதேவ் அரசியலை முறியடிக்க. பெத்தவாடு என்றாலே தமிழின விரோதிகள் தான் போலும்.
________________
1. அகரமேறிய மெய் முறைமை - https://ta.wikipedia.org/s/2pp9

2. the Earliest Old Tamil, which has retained the Dravidian roots of the Indus phrase still, is firmly interlinked, but with modified meanings. - Pethavatu
http://www.thehindu.com/…/indus-script-e…/article6600394.ece

3. பிராமணர்களின் பிரிவே திராவிடர் - https://www.facebook.com/…/pb.1834545351662…/336040653240940__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தமிழை வைத்து இந்தியவிரோத செயல்களைச் செய்யலாம் என்பதை மறுபடியும், சில நிறுவனங்கள், குழுக்கள், தனிநபர்கள் முயன்றுள்ளன[1]

மோடி-ஜின்பிங் சந்திப்பின் போது, சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் பகுதிகளில் பிரச்சினை செய்ய திட்டமிட்டனர், ஆனால், முடியவில்லை [2]

கீழடியை வைத்து ஊதி பெரிதாக்கலாம், வட-இந்தியர்களை தாக்கி பிரச்சினை உண்டாக்கலாம் போன்ற திட்டங்களும் இவற்றில் அடங்கும் [3].

“திபத்திய மாணவர் எதிர்ப்பு” ஒரு நாடகமே, இருதரப்புகளிலும் அரங்கேறியது, ஆனால், புஸ்ஸாகியது! அவர்கள், சீனாவுக்கு ஒரு பொருட்டே இல்லை [4]

“கோ பேக் மோடி” அவர்களின் மூலங்கள் மற்றும் ஸ்பாசன்ஸர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது. இந்துத்துவ வாதிகள் தான் அமைதியாக இருந்தனர்! [5]

வெளிநாட்டவர் இந்தியாவிற்கு மாநாடு, கருத்தரங்க என்ற போர்வையில் வருகிறார்கள் என்றாலே, அவர்கள் விவரங்கள் திரட்டத்தான் என்று புரிந்து கொள்ளலாம் [6]

இங்குள்ளவர்கள் அங்கே செல்கிறார்கள் என்றால், அவர்களை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். “ஸ்பான்சர்” காட்டிக் கொடுக்கும்! [7]

இலங்கை, பாரிஸ், கனடா, அமெரிக்கா போன்ற இடங்களில் செயல்படும் நிறுவனங்கள், குழுக்கள், தனிநபர்கள் பரஸ்பர முறைகளில் செய்து வருகின்றனர்! [8]

இந்தியவிரோத, இந்துவிரோத, இக்கூட்டங்கள் [கிருத்துவர், துலுக்கர் உட்பட] பெரும்பாலோர் ஶ்ரீலங்கா சென்றது கவனிக்கத் தக்கது [9].

இந்துத்துவவாதிகள் பின்னணியை அறியாமல், எதையோ காட்டி திசைத் திருப்பி, அவர்களுக்கே உதவிக் கொண்டிருந்தனர்! [10]

வேதபிரகாஷ்

13-10-2019__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தேசவிரோத அல்லது தேசிய சித்தாந்தங்கள் தெளிவாக இருந்து, அவற்றைக் கடைப் பிடிப்பவர்கள் முறையாக அடையாளம் காணப்பட்டால், அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இருக்காது [1].

போலிகளாக, இரட்டை வேடங்கள், ஸ்திரம் இல்லாத இரண்டு கொள்கைகள், மாற்றிக் கொள்ளும் வாத-விவாதப் போக்குகள், இவையெல்லாம் பலன் தராது [2].

கோடானுகோடி விலங்குகள் தினமும் கொல்லப் பட்டு, உண்ணப் படுகின்றன. ஏற்றுமதியும் ஆகிறது. அந்நிலையில் அஹிம்சை பேச முடியாது [3].

அதேபோல மது குடிப்பவர், சிகரெட் புகைப்பவர், மற்றவரும் கோடானுகோடி மக்களே, அதனால், அவற்றின் உற்பத்தி, நுகர்வோர் இருந்து கொண்டே இருப்பர் [4].

மற்றவற்றைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தால் அசிங்கமாகி விடும். தீயதை நியாயப் படுத்தவில்லை, அதனால், ஒழுக்கம் வலியுறுத்தப்படுகிறது [5]

ஆகவே, இவற்றையெல்லாம் மீறி, ஒரு மனிதன் இருந்தான், இருக்கிறான், இருப்பான் என்பது தான் தூய்மையான சித்தாந்தம் [6].

ஒரு குருடன் / கபோதி பாடினால், அஷ்ட வக்கிரன் ஆடினால், ரசிக்கிறோம் எதிர்மறை பலவீனங்கள், குறைகளைக் காட்டித் திட்டுவதில்லை [7]

உபதேசம் செய்வது ஆனால் தனிப்பட்ட விசயத்தில் / முறையில் தானே அயோக்கியனாக-அரக்கனாக இருப்பது யோக்கியத்தனம் அல்ல [8].

ஆத்மாவில் நம்பிக்கைக் கொண்டுள்ளவன், துராத்மாவாக இருந்து கொண்டு, இன்னொரு ஆத்மாவைத் திட்ட முடியுமா? ஆத்மா சித்தாந்தம்? [9]

இந்துத்துவ வாதி, இவ்விசயங்களில் தெளிவாக இல்லையென்றால், ஆன்மா மரணம் எய்தும் / இல்லை, மேனியைக் கொல்ல முடியாது/ நிரந்தரமாக இருக்கும், என்றாகும்! [10]

வேதபிரகாஷ்

05-10-2019__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஒரு மொழியை ஆதரிப்பதால் அல்லது எதிர்ப்பதால் தேர்தலில் ஜெயிக்கவோ / தோற்கவோ முடியாது! தேசத்தையும் ஆள முடியாது! [1]

இன்று ராமர், கிருஷ்ணர், பரதன், மகாவீரர், புத்தர், அசோகன், சந்திரகுப்தன், விக்கிரமாதித்யன், முதலியோரை ஞாபகம் வைத்துக் கொள்வது மொழியால் அல்ல! [2]

ராமரின் ராஜ்யம் அந்த அளவிற்கு இருந்ததால் தான், ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று கூறுகிறான், ஏனெனில் யார் ஆண்டால் என்னாகும் என்று அவனுக்கும் தெரியும் [3]

ஶ்ரீகிருஷ்ணர் சொன்னது படி நட என்பதால் தான், துலுக்கன் காலம் முதல் வெள்ளக்காரன் காலம் வரை அதன் மீது சத்தியம் செய்ய வலியுறுத்தப்பட்டது! [4]

பரதன் ஆண்ட தேசத்தை பாரதம் என்று சொல்லக் கூடிய அளவில் இருக்கிறது என்றால், அவன் எல்லாவற்றையும் கடந்தவன் ஆகிறான்! [5]

அசோகனால் எழுதப் பட்டதால் “பிரம்மி” எழுத்தாகவில்லை, ஆரம்ப எழுத்தே வரிவடிவமே பிரம்மி தான் என்பதைக் குறிக்கத் தான் அப்பெயர்! [6]

இந்துக்கள் அந்த அளவிற்கு ஒழுக்கத்தினால், அன்பினால், பண்பினால் ஓங்கியிருந்ததால் தான் சுற்றியுள்ள சமுத்திரம் இந்து ஆயிற்று! [7]

ஹிந்துக்களிடம் பெறப்பட்டதை ஹிந்த்ஸா என்றான், ஹிந்துக்களைக் கொன்று ரத்தம் தோய்ந்த பூமியை ஹிந்துகுஷ் [குஷ்=ரத்தம்] என்றான் [8]

ஆகவே பாரதத்தின் தொன்மையான வாழும் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், முதலியவை காக்கப்பட வேண்டும் [9]

சங்ககாலத்திலேயே “பல்மொழிதேயத்தோர்” இருந்ததும், இத்தேசத்தின் பெயர் “பாரதம்” என்பதும், தமிழ்மொழி புலவர்களுக்குத் தெரிந்திருந்தது! [10]

வேதபிரகாஷ்

01-10-2019__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கீழடி அகழ்வாய்வு, இன்னும் முடியவில்லை, கிடைத்துள்ளவை பிரிக்கப் பட்டு, அடையாளம் காணப் படவேண்டியுள்ளது [1]

சுடுமண் உருவங்கள் / சிற்பங்களின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளன. அவற்றின் நிலைப் பற்றி ஆராய வேண்டியுள்ளது [2]

வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் எவையும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, என்று அறிவித்தது பொறுபற்றச் செயல் [3]

சேரன், சிவானந்தம் மற்றும் ராஜன் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அகழ்வாய்வு நிபுணர்கள், தங்களது கருத்தை முடிவாகத் திணிக்கக் கூடாது [4]

தமிழ் நாடு அரசு, தொல்லியல் துறை மூலமாக அந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளதால், அத்தகைய தனிப்பட்ட நபர்களின் திணிப்பு இருக்கக் கூடாது! [5]

இந்த சுடுமண் உருவங்கள் / சிற்பங்களின் உடைந்த பாகங்கள் எவ்வறாக காட்டுகின்றன என்று சொல்ல வேண்டும், இல்லை சும்மா இருக்க வேண்டும்! [6]

சோதனைக்கு அனுப்பப் பட்ட மாதிரிகளில், 3.53 மீ / 11.58136 அடிகள் கீழ் கிடைத்த ஒரு கனிமத்தை வைத்துக் கொண்டு 580 BCE தேதி நிர்ணயிக்கப் பட்டுள்ளது [7].

அதாவது இதன் மூலமாக மற்றவைகளுக்கு தோராயமாக சார்பு தேதி [relative dating] நிர்ணயிக்கப் பட்டுள்ளது, ஆகவே, உறுதியாக சொல்வது தவறு! [8]

ஒருவர், இதை தாய் கடவுள் என்று ஆகஸ்ட் 30 2019 அன்று மீனாக்ஷி கல்லுரியில் கட்டுரை வாசித்தார்! சிவானந்தம் கேட்டுக் கொண்டிருந்தார், எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை! [9]

சரித்திரம், சரித்திரவரைவியல், அகழ்வாய்வு, அனைத்தின் விளக்கங்கள், மக்களை இணைப்பதாக இருக்க வேண்டும், பிரிப்பதாக இருக்கக் கூடாது! [10]

வேதபிரகாஷ்

23-09-2010__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திராவிடப் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம் பெரியார் பிள்ளைகள் வெற்றிகரமாக ஊர்வலம் நடத்தியுள்ளதால், நவராத்திரிக்கும் தயாராகலாம்!

நவராத்திரி-கொலு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7 வரை கொண்டாடப் படவுள்ளது, ஆகவே திராவிடத்துவர்களும் கொண்டாடலாம்!

ஈவேரா, முதல் மனைவி, குழந்தை, இரண்டாம் மனைவி என்று பொம்மைகளை செய்து, பெரியார் திடலில், வீரமணி கொலு வைத்து ஆரம்பிக்கலாம்!

காசிக்குச் சென்றது, போலி பூணூல் போட்டுக் கொண்டது, எச்சை சோறு சாப்பிட்டது இதற்கெல்லாம் பொம்மைகள் செய்து படிகளில் வைக்கலாம்!

மனைவியை நண்பர்களை வைத்தே, “புது கிராக்கி” என்று சதாய்த்த லீலைகளைப் பற்றி, பொம்மை செட் வைத்தால், பிள்ளைகள் தெரிந்து கொள்வார்கள்!

ஈவேராவின் மைனர் விளையாட்டுகள், பவானி ஆற்றங்கரையில் கொட்டம் அடித்தது பற்றி, செட்-செட்டாக பொம்மைகள் வைக்கலாம்!

நிர்வாண கிளப்புக்கு போனது, தங்கியது, போட்டோக்கள் எடுத்துக் கொண்டது பற்றி விசேஷமாக பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஈரோட்டில் புகைப்படக் கண்காட்சி வைத்தது போல, நிரந்தர கொலுவும் வைக்கலாம், குறளகத்தில் விசேஷ கவுன்டர் வைக்கலாம்!

சுண்டலுக்கு பதிலாக கிண்டலாக, சுயமரியாதைப் பிரச்சார புத்தகங்களைக் கொடுக்கலாம். “பெரியார் பிஞ்சுகளை” தயாரில் வைக்கலாம்!

“பெரியார்-ஒன்பது இரவுகள்” என்று மானாட, மயிலாட, மார்பாட ரீதியில், பாட்டு-கூத்து-பறை-மேளம் என்று ஜமாய்க்கலாம்!

© வேதபிரகாஷ்

10-09-2019

ரவீன் ராஜாசிங், சாமுவேல் டெனிஸன், சென்னை கிருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர்கள், செக்ஸ் குற்றத்தில் மாட்டிக் கொண்டுள்ளனர்!

தங்களிடம் படிக்கும் மாணவிகளுடன், ஜனவரி 2019ல் பெங்களூரு, மைசூரு, கூர்க் என்று, "கல்வி சுற்றுலா" சென்றுள்ளனர்! அங்குதான் விளையாடி மாட்டிக் கொண்டனர்.

வழக்கம் போல செக்ஸுவல் ஹராஸ்மன்ட் கமிட்டி என்று போட்டு விசாரித்துள்ளனர்! எக்கசக்கமாக இருந்ததால், ஆப்பு வைக்கப் பட்டது!

மே 24, 2019 அன்று, கமிட்டியில் விசாரிக்கும் சாமுவேல் டென்னிஸனுக்கே நோட்டீஸ் கொடுக்கப் பட்டது! அவர் தான் கோர்ட்டுக்கு சென்றார்!

ஒரு பேராசிரியரின் பாலியல் தொந்தரவு செயலுக்கு உதவியாக இருந்ததாக, மனுதாரருக்கு எதிராக குற்றச்சாட்டு. கூட்டு திட்டம் போட்டு செக்ஸ்!

இருபாலரும் படிக்கும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில், குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாற்றதாக இருப்பதாக, பெற்றோர் மத்தியில் பொதுவான உணர்வு உள்ளது.

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நல்ல கல்வியை வழங்கினாலும், அறநெறியை போதிப்பது என்பது, 'மில்லியன் டாலர்' கேள்வியாக உள்ளது.

சர்ச், மசூதி, கோவில் விட்டு, மதம் தெருக்களில் கடைபிடிக்கும் போது, இத்தகைய குற்றங்கள் நிகழத்தான் கூடும், அதிகமாகும்- நீதிபதி

ஜனவரி 9, 2019 முதல் 14 வரை என்ற சுற்றுலாவில் 46 மாணவிகள் சென்றுள்ளனர், அதில் 34 பேரிடமிருந்து புகார் அளிக்கப் பட்டுள்ளன!

அந்த ரவீன் ஒரு மாணவியின் அறையுள் நுழைந்து, அவள் படுக்கையில் படுத்தாரா/னாம்! இந்த லட்சணத்தில் இருக்கிறது படிப்பு/ புரொபசரு!

வேதபிரகாஷ்

17-08-2019

ஆடி அமாவாசை, நம்மிடம் இல்லாத மூதாதையர், பெற்றோர், மற்றோர், உற்றோர், நண்பர்கள் எல்லோருக்கும் நினைவு கூர வேண்டிய நாள் [1]

அவர்கள் எல்லோருமே நமக்காக பலவழிகளில் உதவி செய்துள்ளனர் – பெற்றனர், வளர்த்தனர், போற்றினர், ……………….மறைந்து விட்டனர் [2]

பஞ்சபூதங்களிலிருந்து தோன்றியதை, பஞ்சபூதங்களுக்கே திரும்பி கொடுத்த நாள், ………………..அண்ட-பேரண்டங்களுக்கு நன்றி சொல்வோம்! [3]

ஆன்மா, மனது, உயிர், மூச்சு, நினைவுகள் …….முதலியவற்றிற்கு உருவமில்லை, ஆனால், அவையில்லாமல், மனித உடல் இல்லை1 [4]

இருக்கும் போது அவர்களை, நாம் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும், இறந்த பிறகு, நினைத்துதான் பார்க்க முடியும், அமாவாசை அன்று [5]

அம்மா-அப்பா, அம்மம்மா-அம்மப்பா, அப்பம்மா-அப்பப்பா, இப்படி நினைத்துப் பார்க்க வேண்டும், பெயர்களை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்! [6]

இந்த 12 பெயர்களை ஞாபகத்தில் வைத்திருக்கவில்லை என்றால், நீயே இருக்க லாயக்கில்லை! இதுதான் குலம், கோத்திரம் என்பது [7]

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை என்பதில் எல்லாமே அடங்கிக் கிடக்கிறது. பஞ்சையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும் [8]

அந்த 12 பேரைத் தவிர, நீ பிறந்த இடம், நதிக்கரை, தேசம், அதன் இருப்பிடம் [பாரதத்தில்], காலம் முதலியவற்றைச் சொல்வது சரித்திரம் [9]

இவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு ஒழுங்காக சொன்னால், அமாவாசை தர்ப்பணம் முடிந்து விட்டது, நிம்மதியாக இருக்கலாம் [10]

வேதபிரகாஷ்

31-07-2019__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சூத்ர [शूद्र] என்பது தமிழில், சூத்ரா என்று குறிப்பிட்டு, பிறகு அது சூத்திரர் ஆகியது. இது மிகத்தவறானதாகும். ஆனால், தொடர்கிறது [1]

தமிழில் “த” எழுத்திற்கு, மற்ற மொழிகளைப் போன்று நான்கு வர்க்கங்கள் இல்லை. அதனால், त, थ, द, ध என்றவற்றை “த” என்றே குறிப்பிடப் படுகிறது [2]

சூத்ர [शूद्र] = சூத்ரா =“சூத்திரர்” என்றாகி, அது இழிசொல்லாக கருதப் பட்டது. போதா குறைக்கு அந்த பிழையானதற்கு திரிபு வுளக்கம் கொடுக்கப்பட்டது [3]

சூத்ர [शूद्र] ஒருமை என்றால், பன்மை சூத்ரர் [शूद्राः / शूद्रों] என்றுதான் வரவேண்டும். ஆனால், அதை “சூத்திரர்” என்று குறிப்பிட்டதும் மிகத் தவறாகும் [4]

பிறகு ரிக்வேதத்தில் [10:90] வருகின்ற புருஷஸுக்தம் [पुरुषसूक्तम्] என்ற சுலோகத்தில் வரும் கீழ் கண்ட வரியை வைத்துக் கொண்டு, திரிபுவாதம் தொடங்கியது:[5]

राजन्य: कृत: ब्राह्मणोऽस्य मुखामासीद्वाहू। ऊरू तदस्य यद्वैश्यः पद्भ्यां शूद्रो अजायत॥१३॥ [6]

இதே வரி, சுக்ல யஜுர்வேத சம்ஹிதை 30.1-16; அதர்வ வேத சம்ஹித 19.6 முதலியவற்றிலும் காணலாம் [7]

அவரது முகம் பிராம்மணன் ஆயிற்று .

கைகள் சத்ரியன் ஆயிற்று .

தொடைகள் வைசியன் ஆயிற்று .

அவரது பாதங்களில் இருந்து சூத்திரன் தோன்றினான் [8]

13வது வரி, இப்படி இருக்கிறது என்றால், 15வது வரியில், “……பாதங்களில் இருந்து பூமியும், காதில் இருந்து திசைகளும் தோன்றின அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன….” என்றுள்ளது [9]

ஆகவே சூத்ர [शूद्र] என்றது கெட்ட வார்த்தை இல்லை, சமஸ்கிருதம் தெரியாமல், தமிழும் அறியாமல், உளறிய பொய்மை-திரிபு விளக்கம் இது [10]

வேதபிரகாஷ்

15-06-2019

இடைக்காலத்தில் ஐரோப்பிய, அரேபிய/துலுக்க, சீன கூட்டங்கள் ராஜேந்திரனின் கடல்கடந்து செல்லும் வீரத்தைக் கட்டுப் படுத்தத் துடித்தன [1]


ராஜேந்திரன் கங்கைக் கரை கஹதவல, பால மன்னர்களின் கூட்டுடன், துலுக்கரைக் கட்டுப்படுத்த முயன்றான் [2]

திராவிடத்துவ துரோகி போல, கடாரத்து ஶ்ரீவிஜய மன்னன், சோழருக்கு எதிராக, சீனருடன் வேலை செய்து கொண்டிருந்தான் [3]

உண்மையில் ராஜேந்திரன் படைகள் குஜராத் வரையில் சென்றன, அதனால் தான், கஜினி மொஹம்மது தயங்கினான்! [4]

கேரளக்காரனும், இலங்கை மன்னனும் துலுக்கருடன், சீனருடன் தொடர்பு வைத்துக் கொண்டு சதி செய்ததால் தான் அவர்களை ஒடுக்கினான் ராஜேந்திரன் [5]

கங்கை, சைவம், மந்திர--தந்திர யந்திர முறைகள் வங்காளம் மற்றும் தென்னிந்தியாவை இணைத்தன. கர்நாடகத்தவர் வங்காளம் வழியாக தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றனர். [6]

கிழக்குப் பகுதி கடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் தான் அது, சோழர் கடல், சோழர் ஏரி, கடற்கரை சோழமண்டலம் ஆயின! [7]

பல்லவர்களும், சோழர்களும் ஒன்றே, அதனால், பல்லவர்களை ஐரோப்பியர் மறைக்கப் பார்த்தனர்; சோழர் கடல் பெயரை மாற்றினர் [8]

மலபார்-சோழ மண்டலத்தைக் குழப்பின; தமது படங்களில், கிரேக்கர்களைப் போன்று, இரண்டு இந்தியாக்களை தனித்தனியாகக் காட்டின [9]

சோழர்கள் மட்டும் திடீரென்று மறையாமல் இருந்திருந்தால், துலுக்கர் தென்னிந்தியாவிற்கு வந்திருக்க முடியாது [10]

வேதபிரகாஷ்

13-06-2019

இந்து-இந்தியா-இந்துத்துவ ஒற்றுமைக்கு:

1. நான் ஒழுங்கான இந்துவாக இருக்கிறேன், இந்துக்கள் இந்துக்களாக இருக்க பாடுபடுகிறேன், என்று ஏன் சொல்வதில்லை?

2. நான் இந்தியன், இந்தியாவிற்கு எதிராக, யார் பிரச்சாரம் செய்தாலும் எதிர்ப்பேன் என்று நினைப்பதில்லையே? கூட்டாட்சி குத்துகிறதோ?

3. கத்தோலிக்கம், புரொடெஸ்டென்ட், அட்வென்டிஸ்ட், அனாபேப்டிஸ்ட், ஜேஹோவா விட்னஸ்….என்றிருந்தாலும் ஒன்றாக எதிர்க்கிறானே, இந்துவே உனக்கு அதில்லையே?

4. சுன்னி, ஷியா, லெப்பை, பதான், அஹமதியா, போரா, காதியான்….என்றெல்லாம் இருந்தாலும் துலுக்கன் ஜிஹாதில் ஒன்றாகிறானே, முட்டாள் இந்துவே புரியவில்லையா?

5. காசு, பதவி, வசதி கிடைக்கிறது என்பதால், மற்ற இந்துக்களுக்கு குழி பறிக்கிறாயே, தோல்வியடைகிறாயே, நீ உண்மையான இந்துவா?

6. நெகட்டிவாக ஒன்றை எதிர்த்தால், அதற்கு விளம்பரம் கிடைக்கிறது; பாஸிடிவாக சொன்னால் மனதில் பதிகிறது, நீ என்ன செய்ய வேண்டும்?

7. மோடியை எதிர்ப்பவன், ஒரு சின்னத்தை உருவாக்கி குறி வைத்துள்ளான், இந்துத்துவவாதிகளுக்கு குறியில்லாமல், தனக்குத் தானே குழிபறிக்கிறான்!

8. திக-திமுக-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் சித்தாந்திகள் உறுதியாக இருக்கிறார்கள், ஆனால், இந்துத்துவ வாதிகளுக்கு அத்தகைய உறுதி இல்லையே?

9. அமாவாசையில் அவன்–அவன் எல்லாம் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தான்; நீயோ கட்டுமரம் சின்னம் போட்டு ரசிக்கிறாய்!

10. இந்து என்று உணராமல் இருப்பவனுக்கு, இந்து பற்றி சொல்லவேண்டும். தெரிந்தவர்களுக்கு ஏசி ரூமில் வேதம் சொல்வதில் என்ன பிரயோஜனம்?

வேதபிரகாஷ்
04-06-2019

 __________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வேதம் வேதபிரகாஷ் Narayanan Kannan

As a researcher, as has been telling, I have to be balanced after verifying the sources!


Have not read this para?

சரித்திரம் எழுதப் படும் முறை: சரித்திரம் [history] என்பது உண்மையில் இப்படித்தான் நடந்தது என்று பாரபட்சமின்றி ஆதாரங்களுடன் எழுதுவது. அது எழுதப் பட்டது, எழுதப் படுவது என்பது இல்லை, ஆனால், உண்மையிலே நடந்தது ஆகும். இகு ஆதாரங்கள் – முதன்மை [primary sources] மற்றும் இரண்டாம் தர [secondary sources] என்று இரண்டாகப் பிரிக்கப் படுகிறது. முதன்மை, பிராதான மூலங்கள் நடந்த சம்பவ காலத்தைச் சேர்ந்தவை அல்லது பிறகு குறுகிய ஆண்டுகளில் பதிவு செய்யப் பட்டவை. இரண்டாம் தர ஆதாரங்கள் என்பது, மற்றவர் சொன்னதை, எழுதியை வைத்து எழுதுவது. இங்குதான், பாரபட்சம் போன்றவை நுழைகின்றன. இட்டுக்கதை, கட்டுக் கதை, மாயை [myth] முதலியவற்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய நிலையும் உண்டு, இந்தியா, சைனா போன்ற மிகபுராதனமான நாடுகளின் சரித்திரம், தொடர்ந்து வருபவை. அதனால், அவற்றின் தொன்மை சரித்திரத்தை தினம்-தினம் நடந்தது போல எழுத முடியாது. அதனால் எல்லாமே கட்டுக் கதை ஆகிவிடாது, ஏனெனில், அங்கு மாயையே சரித்திரமாக [mythistory] உள்ளது. அதனால், அம்மாயையை நீக்கினால் [demythologization] சரித்திரம் வெளிப்படும். அம்முறை சரித்திரம் எழுதும் முறை [historiography] எனப்படும். அதற்காக, விஞ்ஞான முறையில், மற்ற வர் ஏற்கும்படி, கடைப்பிடிக்கப் படும் முறை, [Historiography methodology] எனப்படும், அதுவும் எந்தவிதமான சித்தாந்தம் [ideology] மூலம் கரைப் படிய / பாதிக்கப் படக் கூடாது.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வேதம் வேதபிரகாஷ் 1. கேள்வி கேட்டு, உடனே, “உறுதியாக இடமுண்டு,” என்று பதில் சொல்லிக் கொள்வது, ஏற்கெனவே தீர்மானித்து எழுதுவதைக் காட்டுகிறது!

2. முழுவதும் விவயத்தைச் சொல்லி விளக்கி, அவற்றிலுஇருந்து பெறப்பட்டது என்ற, அறியப்படுவது என்ன, முடிவு என்ன என்று விவாதித்தத பிறகு என
்னை பொறுத்த வரையில் “உறுதியாக இடமுண்டு,” என்று முடிப்பது ஆராய்ச்சி.

3. சுட்ட பானையில் கிறுக்க வேண்டிய “படித்தவனின்” அவசியம் என்ன?

4. சுடுவதற்கு முன்னமே, மெத்தப் படித்தவன், தனக்குத் தெரிந்த மொழியில், வரிவடிவத்தில் எழுதி / பொறித்து இருக்கலாமே?

5. கீழடி அறிக்கையில், ஐந்து சிந்துவரிவம் போட்டு, ஒப்பீடு செய்யப் பட்டுள்ளது. அதே போல 5000 மும் படிக்கப் பட வேண்டும்.

6. எழுதும் ஊடகம் கெட்டியானதா, மென்மையானதா என்பதைப் பொறுத்து தான் எழுதப் படும்.

7. வெறும், இரண்டு-மூன்று-நான்கு கீறல்கள் அல்லது எழுத்துகள் அம்மொழி அறிந்தவன் ஆகாது.

8. ஆங்கிலம் தெரியாதவன் “I love you” அல்லது பணக்காரன் செக்கில் ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவதற்கு ஒப்பாகும்.

9. பாலியா, தமிழா என்ற பிரசினை தீர்க்கப் பட வேண்டும். ஏனெனில், ராஜன் போன்றோர் மாற்று கருத்து பதிவு செய்துள்ளனர். அமர்நாத் சொல்லியுள்ளது:
"கடந்த செப்டம்பர் மாதம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பழங்குடிகள் என்றும், கீழடியின் வயது கி.மு 600 என்றும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தன. கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை. இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும். அவை இன்னும் பின்னோக்கிச் செல்லும். அதற்குக் கீழடியில் முழுமையான அகழாய்வு செய்யப்பட வேண்டும்.

10. கீழடி அறிக்கையிலேயே, “இனி வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வின் போது சேகரிக்கப்படும் மகரந்தம் மற்றும் பைட்டோலித் போன்ற தாவரவியல் மாதிரிகளை முறையாக பகுப்பாய்வு செய்வதன் மூலம் கூடுதல் தெளிவு பெற முடியும்,” என்றும் , கட்டட தொழிற்நுட்பம் என்றதன் கீழ், “தற்போது அகழாய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. செங்கல் கட்டுமானங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட பின்னர், இக்கட்டுமானத்தின் பயன்பாடு குறித்து முழுமையாகத் தெரியவரும்,” என்றெல்லாம் குறிப்பிடும் போது, இப்படி முடிவாக சொல்லலாமா?

© வேதபிரகாஷ்
19-10-2019__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard